புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
32 Posts - 51%
heezulia
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
74 Posts - 57%
heezulia
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_m10மாறுகிறாரா ஜெயலலிதா...? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறுகிறாரா ஜெயலலிதா...?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 6:26 am

மாறுகிறாரா ஜெயலலிதா...?


ஜெயலலிதாவை வெறுப்பவர்கள் மட்டும் அல்ல நேசிப்பவர்கள் கூட அடிக்கடி அவர் மேல் நப்பாசை கொள்வது இவர் மாறவே மாட்டாரா என்றுதான். ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சமே அவர் பேச்சுக்கும் முகத்துக்கும் மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எம்ஜிஆர்க்கு அடுத்து அது அதிகளவு இருப்பது ஜெயலலிதாவிடம் தான், வருடக்கணக்கில் கொடாநாட்டில் ஓய்வெடுத்துவிட்டு வந்து ஒரு நாள் கூட்டம் போட்டாலும் அதுக்கு வரும் மக்கள் தொகையையும் ஆதரவையும் குறைந்தது ஒரு வருடத்துக்கு குறையாமல் பேச வைத்து விடுவார். ஜெயலலிதா இப்படி இருக்கும் போதே இவ்வளவு செல்வாக்கு என்றால் அவர் மட்டும் மக்களுக்கு புடித்தமாதிரி தன்னை மாற்றிக்கொண்டால்...!! அவர் நிலை எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்பதுதான் அவரை நேசிக்கும் என்னைப்போன்றவர்களின் அங்கலாய்ப்பு. கூட்டணிக்கட்சிகளை மதிக்காமை, பத்திரிகைகளை விரோதிகளாய் பார்ப்பது, தன் கட்சி தொண்டர்களைகளைக்கூட சந்திக்காதது, இப்புடி அவர் ஆணவ போக்கு ஏராளம், இந்த ஆணவ போக்கால் அவர் சேர்த்ததை விட இழந்ததுதான் அதிகம்.

மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றம் இல்லாதது என்று சொல்வார்கள், இதற்கமைய ஜெயலலிதாவிடமும் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது, ஜெயலலிதாவை உண்ணிப்பாக அவதானித்துகொண்டிருப்பவர்கள் இதை மறுக்க முடியாது. சிறுத்தைக்கு பிறக்கும் போதே உடம்பில் இருக்கும் கோடுகள் கடைசிவரை அதை விட்டு போகாது அது போலதான் ஜெயலலிதாவும் அவரிடம் இருக்கும் ஆணவ போக்கும் என்று ஆருடம் சொன்னவர்கள் கூட இப்போது வாயடைத்துப்போய் அவரை ஆச்சரியமாய் நோக்கிறார்கள். அவர் மாற்றம் புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு வேளை கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகாவின் தோல்வி கிண்ணஸ் புத்தகதில் பதியும் அளவுக்கு மிக பெரிய தோல்வியாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விட்டார் அது போலவே தேர்தல் முடிவுகளும் அமைந்தது, அதிமுகா யாரும் எதிர்பார்க்காதவகையில் மிக பெரிய வெற்றி பெற்றது, இந்த தேர்தல் முடிவுகள்தான் அவரை மாற்றிவிட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஜெயலலிதா மாறிவிட்டதுக்கு சாட்சியாக அமைந்த அவருடைய சமீபத்திய செய்கைகள் சில..

-:தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில மணி நேரத்தில் ஜெயா டீவியில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி.
உலக தமிழர்களுக்கு ஜெயலலிதா வெற்றிச்செய்தியை விட அதிக சந்தோஷத்தை கொடுத்தது இந்த பேட்டிதான், வழமைக்கு மாறான ஜெயலலிதாவின் நிதானமான திடமான ஆணவம் அற்ற பேச்சு ஆச்சரியத்தையும் அவர் மேல் நம்பிக்கையையும் கொடுத்தது, பேட்டியின் போது " இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்றது அவர் மாறிவிட்டார் என்பதையே காட்டியது. இக்கருத்தை ஜெயலலிதா தேர்தலுக்கு முதல் சொல்லி இருந்தால் ஒட்டுவாங்க சொல்லுகிறார் என்ற எண்ணம் வந்து இருக்கும் ஆனால் தேர்தலில் அதிமுகா மாபெரும் வெற்றி என்ற செய்தி வந்த சில நிமிடங்களில் அவர் அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறார், ஆகவே இது ஜெயலலிதாவின் மாற்றமடைந்த மனசைத்தான் காட்டுகிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

-: பதவியேற்பு விழா- வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா கடைசி நேரத்தில் வைகோவை வெளியேற்றியது வருத்தமான செய்கைதான் ஆனால் வைகோவின் "அதிகசீட்" ஆசையால்தான் இந்த சம்பவம் நடந்தது, வைகோவின் கட்சிக்கு தமிழ்நாட்டில் இப்போது உள்ள செல்வாக்கு என்ன என்பது எல்லோரும் அறிந்ததே, இதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஜெயலலிதா அவருக்கு எப்படி அதிக சீட் கொடுப்பார் என்பது எல்லோரும் யோசிக்க வேண்டிய விடயம். வைகோ வெளியேற்ற பட்டபின் " ஜெயலலிதா இன்னும் திருந்த வில்லை என" ஆணந்த விகடனில் வைகோ சீறி பேட்டி கொடுக்க, வைகோவின் சகாக்கள் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் " இலை கருகி சூரியன் உதிக்கட்டும்" என்று உளறிக்கொட்ட இதையெல்லாம் கண்டும் கானாதது போல இருந்தார் ஜெயலலிதா. ஆனால் இன்று ஜெயலலிதா வெற்றிடைந்த பின் வைகோவை சாடி அறிக்கை விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்க தன் பதவி ஏற்பு விழாவுக்கு வைகோவுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பியது மட்டும் இன்றி முதல் வரிசையில் நார்காலி ஒதுக்கி வைகோவுக்கு மரியாதை கொடுத்து பதவி ஏற்கும் முன்னமே நான் மாறிவிட்டேன் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறாரோ ஜெயலலிதா.

-:புதிய சட்டசபையை புறக்கணித்தது ஏன்? விளக்கமளித்த ஜெயலலிதா.
பொதுவாகவே ஜெயலலிதா எதாவது செய்யும் போது இதைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவே மாட்டார், அதை பற்றி பத்திரிகைகள் விமர்சித்தாலோ கேள்வி கேட்டாலோ அதற்க்கு பதில் சொல்வதைக்கூட அவமானமாக நினைப்பார். ஆனால் இப்போது, புதிய சட்டசபையை புறக்கணிப்பது கருணாநிதிமேல் உள்ள வெறுப்பால்தான் என்று ஒரு பேச்சு அடிபட "ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்டசபை கட்டிடத்தில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, ‌செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வி‌த அரசியல் உள்‌நோக்கமும் கிடையாது’’ என்று பத்திரிகைகளுக்கு விளக்கம் கொடுத்து நான் மாறிவிட்டேன் என்று உணர்த்துகிறாரா ஜெயலலிதா.

-:வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திப்பேன்- ஜெயலலிதா அறிவிப்பு.
பத்திரிகைகளை எப்போதுமே விரோதிகளாய் பார்ப்பவர் ஜெயலலிதா. அவர்களை சந்திப்பதையே அறவே தவிர்ப்பார், ஆனால் இப்போது பத்திரிகைகளை அரவனைத்து போவது மட்டுமின்றி இனி வாரவாரம் ஒரு நாள் பத்திரிகைகளை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அழிக்க போவதாக அறிவித்து இருப்பது நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறாரா ஜெயலலிதா.

-:மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ரஜினி விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஜெயலலிதா.
பொதுவாகவே தன்னைச்சுற்றி எது நடந்தாலும் கண்டும் காணதது போல் இருப்பவர் ஜெயலலிதா. இதன் காரணமாகவே பல அதிமுகா விஜபி தொண்டர்கள் திமுகா பக்கம் சென்றுவிட்டனர், தன்னைச்சுற்றி ஒரு இரும்பு வலையத்தை உருவாக்கி கொண்டு அதுக்குள்ளேயே இருந்து விடுவார். ஆனால் இப்போது அதில் நிறைய மாற்றங்கள், அமைச்சர் மரியம் பிச்சை ஒரு சாலை விபத்தில் இறந்த போது எவ்வளவோ முக்கிய வேலைகள் இருந்த போதும் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு திருச்சிக்கு ஓடோடிச்சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர் குடுப்பத்துக்கு ஆறுதல் சொன்னது மரியம் பச்சை குடும்பத்தை மட்டும் அல்ல ஒட்டுமொத்த அதிமுகா தொண்டர்களையே நெகிழச்செய்து விட்டது. கூடவே உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் ரஜனிகாந் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டது அடடா ஜெயலலிதாவா இது என்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்து நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் காட்டுகிறாரா ஜெயலலிதா.

-:நான் போகும் போது மக்கள் போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்,
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடம்பர செய்கைகளை அதிமுகா தொண்டர்கள் நிறுத்த வேண்டும் ஜெயலலிதா அறிவிப்பு.
ஆடம்பரத்துக்கு பெயர் பெற்றது கடந்த கால ஜெயலலிதா ஆட்சி, அதுக்கு இன்றுவரை மறைக்க முடியாத நல்ல உதாரணம் அவரின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம். தன் கட்சி அலுவலகத்துக்கு வரும் ஒரு சாதாரண நிகழ்வைக்கூட தன் தொண்டர்கள் மூலம் ஆடம்பரமாக கொண்டாட வைப்பவர், தான் எது செய்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவே தன்னை திரும்பி பாக்க வேண்டும் என்ற பந்தா பிரியையும் கூட அப்படிப்பட்ட ஜெயலலிதாவா இப்புடி எல்லாம் அறிவித்தது என்று ஒட்டு மொத்த தமிழினமே ஆச்சரியமாய் பாக்கின்றது அதிமுகா அரசை,
அதைவிட அவர் அமைச்சரவையில் இடம் புடித்த புதியவர்களினதும் எழிமையானவர்களினதும் பெயர் பட்டியல் இன்னும் ப்ளஸ்சான ஆச்சரியம். இதையெல்லாம் செய்வதன் மூலம் நான் மாறிவிட்டேன் என்பதைத்தான் ஆணித்தரமாக நிரூபிக்கிறாரா ஜெயலலிதா.

-:மேலும்.. தன் கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது, அடுத்தடுத்து பல முறை செய்தியாளர்களை சந்தித்தது, அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துதல், செல்லுதல் கூடாது என்றது, அதிமுக்கியமாக, "பதவியேற்பு விழாவில் எந்த அமைச்சரும், தன் காலில் விழக் கூடாது' என கண்டிப்புடன் உத்தரவிட்டது போன்றவை ஜெயலலிதா மாறிவிட்டார் என்பதைத்தான் உணர்த்துகிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

எது எப்படியோ இந்த மாற்றம் நிஜம்தான் என்றால் ஜெயலலிதாவை வருங்காலத்திலும் முதல்வர் பதவியில் இருந்து அசைக்க முடியாது. எம்ஜிஆர் இருந்த காலங்களில் எப்படி கருணாநிதிக்கு முதல்வர் பதவி எட்டாக்கனியாக இருந்ததோ அந்த நிலைமை வருங்காலத்திலும் கருணாநிதியின் கட்சிக்கு ஏற்பட்டுவிடும், இப்போது பாதாளத்தில் விழுந்து கிடக்கும் திமுகா எழுவதும் எழாமல் போவதும் ஜெயலலிதாவின் மாற்றத்தில்தான் இருக்கிறது.




துஷ்யந்தன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக