புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
69 Posts - 58%
heezulia
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
111 Posts - 59%
heezulia
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_m10தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 5:13 am

திமுகவின் இளம் தலைவர் என ஆங்கில, வட இந்திய ஊடகங்கள் சன் டிவியின் இரண்டாவது உரிமையாளர் தயாநிதிமாறனை வர்ணித்தது. திமுகவை புதிய பாதையில் கொண்டு செல்கிறார் என தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த தயாநிதிமாறன் ஆந்திராவில் உடன் இருந்தே கூ+ழ்ச்சி செய்து மாமனாரிடமிருந்த முதல்வர் பதவியை பறித்து தனதாக்கி கொண்டது போல……… தாத்தாவிடம் உள்ள முதல்வர் பதவியை பறித்து தான் அந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டார். கருத்து கணிப்புகளை வெளியிட்டார். அழகிரியை டம்மியாக்கினார். அதை சகித்துக்கொள்ள முடியாத அழகிரி அன் கோ. மதுரை தினகரன் அலுவலத்தை நொறுக்கி 3 பேரை உயிரோடு எரித்தார். உடனே இதற்க்கு பழி வாங்க தான் சார்ந்த கட்சியின் ஆட்சியவே கலைக்க முற்பட்டார் தயாநிதிமாறன். அரசியல் களத்தில் கத்து குட்டி தயாநிதியைப்போல் 100 தயாநிதிமாறனை கண்டவர் கருணாநிதி.

எரிவதை புடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதை உணர்ந்து மாறனிடமிருந்த மத்திய அமைச்சர் பதவியை பறித்தார். செத்தப்பாம்பாகி சீண்டுவார்யில்லாமல் கிடந்தார். சன் க்கு போட்டியாக கலைஞர் மீடியா உதயமானது. மோதல் தீவிரமானது. திமுகவை மறைமுகமாக பழிவாங்க முடிவு செய்தார்கள் மாறன் பிரதர்ஸ். காங்கிரஸ் கொம்பு சீவி விட்டது. 2ஜி ஊழல் விவகாரத்தில் மாற்று கட்சி முகாம்களுக்கே போய் டாக்மெண்டுகளை தந்தார்கள். தங்களது ஊடக நண்பர்கள், பாட்னர்கள் மூலம் விவகாரத்தை ஊதினார்கள். விவகாரம் பெரிதாகி, சிக்கலானது.

திடீர் திருப்பமாக இதயம் கனிந்தது, கண்கள் பனிந்தன. குடும்பங்கள் ஒன்றாகின. ஆனால் நீரில் ஒட்டாத எண்ணெய்யானார்கள் மாறன் சகோதரர்கள். போட்டியாகவுள்ள கலைஞர் தொலைக்காட்சி கூடாரத்தை காலி செய்ய முடிவு செய்தார்கள் மாறன் அன் கோ. அதற்கான காய் நகர்த்தல் வடநாட்டில் நடந்தது. அவர்கள் நினைத்ததை போலவே, ரெய்டு, ராஜினாமா, ராசா, கனிமொழி கைது என வரிசை கட்டியது. தேர்தலில் திமுக தோற்றது.

சந்தோஷமாக தான் இருந்தார்கள் மாறன் அன் கோ வினர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை புரிந்து கொள்ள தவறிய மாறன் பிரதர்ஸ்சை புரிய வைத்து விட்டார் சட்ட நிபுணர் பிரசாந்த்பூஷன். 2ஜி ஊழல் விவகாரத்தில் தயாநிதிமாறன்க்கு பங்கு உள்ளது என நீதிமன்றம் சென்றார். பாஜகவை சேர்ந்த நாடாளமன்ற பொது கணக்கு குழு தலைவர் முரளிமனோகர்ஜோஷி, மாறன் காலத்தில் தான் 2ஜி ஊழல் ஆரம்பமானது என குற்றம் சாட்டினார். அதற்க்கு சாட்சியாக தொழிலதிபரான முன்னால் ஏர்செல் ஓனர் சிவசங்கரன் வந்து நிற்க்கிறார்.

அடுத்ததாக 2005ல் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதி உயர் அழுத்தம் கொண்ட 320க்கும் அதிகமான இணைப்பு கொண்ட ஐ.எஸ்.டி வசதிகொண்ட தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் தயாநிதிமாறனின் போட்கிளப் வீடு டூ சன் டிவி அலுவலகத்துக்கு இடையே செயல்பட்டது. இதனால் அரசுக்கு 440 கோடி வருவாய் இழப்பு என்ற பூதம் கிளம்பியது. அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை என்றது அமுல்பேபி. இதோ ஆதாரம் என பக்கம் பக்கமாக காட்டினார்கள். இல்லையே என் பெயரில் ஒரே ஒரு இணைப்பு மட்டும் தான் உள்ளது என சான்று காட்டினார். அது பொய் என முகத்திரையை கிழிக்கப்பட்டது.

திமுகவை நோக்கி வீசிய ஆயுதம் பூமராங் போல இப்போது அவர்களை நோக்கி அதி வேகமாக வருகிறது. அதை தவிர்க்க சோனியா, பிரதமர் மன்மோகன் என பலரை போய் பார்த்தார். மாறனால் முடிய வேண்டிய காரியம் முடிந்ததால் அவரை கழட்டி விட்டுவிட்டார்கள். திமுக தலைமை மவுனத்தை கடைபிடிக்கிறது. தப்பிக்க தங்களது தொழிலதிபர் திறமையை பயன்படுத்துகிறார்கள் மாறன் பிரதர்ஸ்.




இந்த பிரச்சனைகள் முடிவதற்க்குள் சன் டிவி மதிப்பு காலி பெருங்காய டப்பாவாகிவிடும் போல்யிருக்கிறது. மாறன்க்கு எதிராக பிரச்சனை கிளம்பாத போது சன் குரூப்பில் 1 ஷேர் மதிப்பு 540 ரூபாய். பிரச்சனை தொடங்கியபின் ஒரேநாளில் 310 ரூபாய்க்கு வந்துவிட்டது. வரும் நாட்களில் அது இன்னும் குறைய வாய்ப்புள்ளது. ஆக தற்போதைய நிலையில் மாறன்களுக்கு இழப்பு சுமார் 2500 முதல் 3000 ஆயிரம் கோடி என்கிறார்கள் பங்கு வர்த்தகர்கள். பங்கு மையமான செபியிடம் இந்த பிரச்சனை தீர்ந்து விடும், தொழில் பாதிப்பு அடையாது, முடங்காது என விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டவர்கள். இது அரசியல் பழிவாங்கல் என காரணம் கற்பிக்கிறது மாறன் சார்பான ஊடக வட்டாரம். ராசா, கனி சிக்கியபோது அது ஊழல். மாறன் சிக்கினால் அது அரசியல் பழிவாங்கலாம். எப்புடீ………

கர்ப்பவதி என்னதான் வயித்தை மறைத்தாலும் ஒருநாள் பிள்ளை பிறந்தே தீரும். அதேபோல் மாறன் தன் ஊழலை என்னதான் மறைத்தாலும் வெளியே வந்தே தீரும். சோற்றில் மறைக்கப்பட்ட பூசணியை போல காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிவந்தால் சிறப்பாகயிருக்கும். வெளிவருமா?.



ராஜ்ப்ரியன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 5:14 am

விசாரணை வலையத்தில் சன் டிவியும் மாறன்களும்.


திமுகவை அழிக்க காங்கிரஸ்சுடன் ரகியமாக பணி செய்த மாறன் குரூப் தற்போது பழைய மோசடிக்காக நீதிமன்றம், விசாரணை என செல்ல போகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க தங்களது அரசியல், பண, தொழிலதிபர் செல்வாக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் செய்த ஒரு மெகா மோசடி பற்றி தினசாி நாளிதாழ் வெளியிட்டு செய்தியை பாருங்கள்.


டெல்லி: ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.
ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.
தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன். இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.
இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.
வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.


தன்னை காபபாற்றிக்கொள்ள இப்போது தாத்தாவிடம் ஒடிவருகிறார். திமுகவை காலி செய்ய தயாநிதிமாறனை காங்கிரஸ் மேலிடம் பயன்படுத்தி்க்கொண்டது. மாறன் குரூப்பும் கட்சியை கலகலக்கவைத்தது. இப்போது தயாநிதியை காலி செய்ய சி.பி.ஐயை பயன்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸ் துரோக தனம்.


ராஜ்ப்ரியன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 08, 2011 9:43 am

எல்லாருமே திருட்டு பசங்க தான். இந்த மாதிரி பெரிய அளவில் இழப்பு ஏற்படுத்திய அனைவருமே கடுமையாக தண்டிக்க பட vendiyaர்கள்.
ஆனா நம்ம நாட்டு சட்ட நிலைமைதான் மிகுந்த மோசமான நிலையில் இருக்கே. என்ன குற்றம் சுமத்தினாலும் பணம் இருப்பவர்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள்



தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Uதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Dதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Aதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Yதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Aதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Sதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Uதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Dதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு Hதயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 10:18 am

தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு 740322 தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு 740322 தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு 740322 தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு 740322 தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு 740322



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
satvijay
satvijay
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Postsatvijay Wed Jun 08, 2011 10:42 am

மக்கள் தான் மாற்று சக்தி வரும் எம் பி தேர்தல் சரியான பாடம் புகட்டும் 🐰

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 08, 2011 11:04 am

கர்ப்பவதி என்னதான் வயித்தை மறைத்தாலும் ஒருநாள் பிள்ளை பிறந்தே தீரும்
சிப்பு வருது சிப்பு வருது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 08, 2011 11:12 am

நடக்கட்டும் நடக்கட்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 08, 2011 11:40 am

அட பாவிகளா? இந்தியா வோட நிலைமை ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2011 1:24 pm

மகா பிரபு wrote:அட பாவிகளா? இந்தியா வோட நிலைமை ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கே!

ஆமாம் பிரபு , எவ்வளவுதான் ஆதாரம் கிடைத்தாலும் இவர்கள் ஒருவருக்காவது இதுவரை தண்டனை கிடைத்துள்ளதா என்றால் அது தான் இல்ல சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக