புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
33 Posts - 70%
heezulia
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
12 Posts - 26%
cordiac
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
1 Post - 2%
Geethmuru
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
160 Posts - 57%
heezulia
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
95 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
1 Post - 0%
cordiac
தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_m10தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 9:05 am

எவருமே யூகித்திராத முடிவுகளைத் தமிழக சட்டமன்றத் தேர்தல் தந்துவிட்டது. தங்களின் கணிப்புகள் பலிக்காத நிலையில் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் முடிவுகள் கிடைத்த விதம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். அணிகளின் பலம், மக்களின் மனநிலை என்றெல்லாம் நீளும் அக்கணிப்புகளில் ஒன்று "சாதிகட்சிகள் தோற்றுவிட்டன' என்பது. திணமணி கலையங்கம் (மே 14, 2011) தொடங்கி தேமுதிக. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வரை இக்கருத்து வெளிப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போன்ற கட்சிகளின் தோல்வியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கூற்றுகளை உண்மை என்று கொள்வதைக்காட்டிலும் "சாதி'க்கட்சிகளுக்கு எதிரான கருத்துக்கொண்டோரின் கூற்றுகள் எனக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.

திமுக ஆட்சிக்கு எதிரான வாக்காளர்களின் கோபம் அதிமுகவை எதிர்பாராத வெற்றியை நோக்க இட்டுச் சென்றிருக்கிறது. இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் வெற்றியையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தோல்வியையும் பெற்றமையானது கூட்டணி அலையைச் சார்ந்ததேயாகும். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் இடதுசாரிகளைத் தவிர மற்றெவரும் கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்தளங்களிலோ திமுக ஆட்சிக்கு எதிராகவோ முடுக்கிவிட்ட போராட்டங்கள் என எவற்றையும் பெரிதாகக் கூற முடியாது. ஆனால் இக்கட்சிகளில் சில அதிமுக கூட்டணியில் இடம் பிடித்ததாலேயே வெற்றியைப் பங்கிட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் அதிமுக சாதியைக் கடந்ததென்றோ கூட்டணியிலிருந்த கட்சிகள் சாதிக்கட்சிகள் இல்லையென்றோ கூற முடியாது. புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வார்டு பிளாக் போன்றவை சாதிசார்ந்து செயற்படும் அமைப்புகளே. எனவே திமுக கூட்டணிக் கட்சிகள் தோற்றிருப்பதாலேயே சாதிக்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன எனச் சொல்வது பொருத்தமான கருத்தல்ல. தேர்தலைப் பொறுத்தவரை வெளிப்படையாக மக்களின் மனநிலை செயலாற்றினாலும் உள்ளீடாகச் சாதி, பணம், சினிமா உள்ளிட்ட கவர்ச்சியும் உணர்ச்சியும் சார்ந்த அம்சங்கள் செயல்படுகின்றன, மிகவும் அரிதான சமயங்கள் தவிர மற்றெல்லா வேலைகளிலும் "மக்களின் மனநிலை'யைக் கட்டமைப்பதாகவோ கட்டுப்படுத்தக் கூடியதாகவோ இந்த அம்சங்களே இருந்துள்ளன. இப்போதைய தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலை தேர்தல் முடிவை மாற்ற பங்கு வகித்தாலும் அவையும் இந்த அம்சங்களோடு ஒத்திசைந்து போய்விடுகின்றன. இதில் பணம் போன்ற வெளிப்படைப் பிரச்சினைகளே விவாதிக்கப் படுகின்றன. பேசுபொருளாகக்கூடக் கருதப்படாத அளவிற்கு சாதியென்பது இயல்பாகிவிட்டது. அதே வேளையில் பெரும் கலவரங்களை, பெருத்த உயிர்ச்சேதங்களை மட்டுமே சாதிப் பிரச்சினையாகக் கருதும் பொதுமனநிலையில் அத்தகைய "முக்கியத்துவத்தை' இத்தேர்தலில் சாதி பெறவில்லை. மொத்தத்தில் நேரடியான சாதிமுரண் என்பது அழுத்தம் பெறவில்லை. எனில் இத்தேர்தலில் சாதியின் இடமும் வகுப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளின் பங்கும் என்னவாயின என்பது ஆராயப்பட வேண்டியதாகிறது.

ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரின் தலைமையிலான பாமாகவும் விசிகவும் கருணாநிதியோடு கூட்டணி அமைத்ததால் இக்கூட்டு அரசியல் தளத்திலும் "சமூகநீதி' என்னும் பெயரில் சமூகத் தளத்திலும் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்து எதிர்பார்க்கப்பட்டன. இத்தகைய சாத்தியம் எற்படவிருப்பதாக மூன்று தலைவர்களுமே வெவ்வேறு வார்த்தைகளில் பேசினர். இந்தவகை எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது குறித்த வியப்பை எழுத்தாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய முகச்சுவடியில் (ஊச்ஞிஞு ஆணிணிடு) வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இக்கூட்டணி தோல்வியைத் தழுவியதோடு இவர்களால் எதிர்க்கப்பட்ட விஜயகாந்தின் இருப்பு வடமாவட்டத்திலேயே உறுதிப்பட்டுள்ளது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் ஆகிய மூவரை முன்வைத்து, சாதிசார்ந்த வாக்குகளில் நடந்துள்ள மாற்றங்களை அணுகுவது அவசியம்.

முரண்கொண்ட இருவேறு வகுப்புகளின் நலன்களைப் பிரதி பலிப்பவையாகப் பிறந்தவை பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும். அரசாங்கத்திற்கு எதிரான வன்னியர்களின் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது அச்சாதியினரின் கோபத்தைக் கூர்மைப்படுத்த தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துதல் போன் "சபால்டன் உத்திகள்' கையாளப்பட்டன. தொடர்ந்து தங்களால் ஒடுக்கப்பட்ட தலித்துகளை எதிர்கொள்ளுவதன் வழியாகவே பாமகவின் வளர்ச்சி சாத்தியமானது. பாமகவின் அரசியல் எழுச்சியால் அச்சுறுத்தப்பட்டிருந்த தலித்துகள் தங்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அமைப்பொன்றிற்காகக் காத்திருந்தபோது தெற்கேயிருந்து ஆவேசம் மிக்கப் பேச்சாற்றல் கொண்ட திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பரவியபோது தலித்துகள் அக்கட்சியில் திரண்டனர். சாதிமுரணையும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தையும் பிரதிபலித்ததன் மூலம் இப்பகுதியில் விசிகவின் வளர்ச்சி சாத்தியப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறை மூலமே அதிகாரம் என்ற நிலையில் தத்தம் சாதிகளின் எண்ணிக்கையால் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியாது என்று எதார்த்தத்தை உணர்ந்தபோது இக்கட்சிகளுக்கு அரசியல் கூட்டு தவிர்க்க முடியாததாகிவிட்டது. தத்தம் சாதிகளை ஓட்டுவங்கிகளாகத் திரட்டிவிட்டதாகக் கருதிய இக்கட்சிகள் இவ்விரண்டு சாதிகளின் எண்ணிக்கையைக் கூட்டும் பெரும்பான்மை வாதத்தின் மூலம் அரசியலில் முன்னகர விரும்பின. ஒடுக்கும் சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் சமமான அதிகாரப் பங்கீடு என்னும் வாதம் ஒப்பீட்டு அளவில் ஒடுக்கப்பட்டோருக்கு அதிக உøஒப்பையும் குறைந்த பலனையும்தான் தரும். மேலும் இதுபோன்ற போலியான தோற்றத்தின் மூலம் சாதிரீதியான நியாயங்கள் கிடைத்ததில்லை என்பதே இந்திய எதார்த்தங்கள் காட்டும் உண்மை. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுப் போராட்டம் என்பது எண்ணிக்கை பெரும்பான்மைவாத பெரியாரின் இடஒதுக்கீட்டுப் பார்வையோடு தொடர்புகொண்டது. இடஒதுக்கீட்டுக் குரல், ஈழத் தமிழர் ஆதரவு போன்றவையெல்லாம் ராமதாஸ் உருவாக்க விரும்பிய தமிழ் ஆதரவு போன்றவையெல்லாம் ராமதாஸ் உருவாக்க விரும்பிய தமிழ் அடையாளத்திற்கு உதவிபுரிந்தன. தன்னுடைய சாதிமுகத்தை மறைக்க விரும்பும் போது மட்டுமே அவரால் தமிழ் அடையாளம் கையாளப்பட்டது.

ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரின் கூட்டணி உருவாக்கப்பட்டபோது இருவரும் தங்களின் சாதி அடையாளத்தை மறைக்கத் தமிழ் அடையாளத்தைத்தான் பயன்படுத்தினர். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், ஈழத் தமிழர் போராட்டம் என்று சிலகாலம் பயணிக்க முடிந்த இவர்களால் அடுத்த தேர்தலில் அன்புமணிக்குச் சீட்டு என்னும் "அதிதீவிர சமூகநீதி' கோரிக்கையை நோக்கி மட்டுமே பயணித்த ராமதாஸின் துணையுடன் ஓர் அரசியல் கூட்டணியை அமைக்க முடியவில்லை. வட்டார அளவில் நெருங்கிவாழும் ஆதிக்கச் சாதியினரால் ஒடுக்கப்படும் தலித் மக்களின் விருப்பத்தைப் புறந்தள்ளி, திருமாவளவன் ஆரம்பகாலம் முதலே தன்னை ஈர்த்துவந்த தமிழ்வழி அரசியல் என்ற சுயவிருப்பத்திலிருந்து இந்தத் தமிழ் அடையாளத்தைத் தலித் மக்கிளன் விடுதலை அரசியலாக வலிந்துகூறி பாமகவோடு கூட்டு அமைத்தார். முரண்படும் இருவேறு சாதிகளை மொழியின் வழியாக இணைக்க முடியும் எனும் கருத்தை இக்கூட்டு முன் வைத்தது. ஆனால் சாதிமுரண்டாடுகளைக் களைவதற்கு மாறாக அதை மறைப்பதற்குத்தான் இந்தத் தமிழ் அடையாளம் பயன்பட்டது. இக்கட்சிகள் பங்கெடுத்த தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திமுக வழிப்பட்ட பெயரளவிலான தமிழ்ப் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்தன. சாதிமுரண்களைக் கடப்பதற்கான வெளிப்படையான எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஒருவகையில் சாதிமுரண்களை அப்படியே காப்பாற்றி வைத்திருப்பதன் மூலமே தங்கள் கட்சிகளின் ஆயுளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கருதி சாதிகளின் எண்ணிக்கைகளை மட்டுமே ஒருங்கிணைத்துத் தேர்தல் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள அவை விரும்பியிருக்கக்கூடும்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தோற்றத்திற்குப் பின்பு ராமதாஸோடு அரசியல் கூட்டணி தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் திருமாவளவன் தன்னைத் தீவிரத் தமிழ் அடையாளப் போராளியாகவே முன்வைத்து வந்தார். தினசரி வாழ்வில் சாதிய அழுத்தத்தைச் சந்திக்க நேரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரைக் கொண்ட அக்கட்சியை ஈழத் தமிழர் உள்ளிட்ட தமிழ்சார்ந்த சிக்கல்களுக்காகவே உருவான கட்சி என்றும் சொல்லிக்கொள்ள அவர் தவறவில்லை. இத்தகைய தமிழ் அடையாளத்திற்காகச் சாதிய முரண்களைப் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டு முரண்களே இல்லாமல் இருந்தது என்று விளக்க முனைந்த திருமாவளவன் கடந்த சில ஆண்டுகளாகத் தலித் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதை விடுத்துத் தமிழ் அடையாளப் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்துச் சென்றதையும் பார்க்கலாம். இந்த நிலையில் திமுக தன் கூட்டணியில் இருவருக்கும் இடமறித்ததன் மூலம் இருவரின் ஒருங்கிணைவும் சாத்தியமானது. இவ்வாறு இரண்டு கட்சிகளின் முரணை இரண்டு கட்சிகளின் முரணை மறைத்தத் தமிழ் அடையாளத்தைக் கட்டும்போது அதற்கொரு எதிரி தேவைப்பட்டார். அவர்தான் விஜயகாந்த்.

தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜயகாந்தின் வருகை விநோதமானது. சமூகத் தேவைகளோ மக்களின் விருப்பங்களோ இல்லாமல் உருவாக்கப்பட்டது அவரது கட்சி. பிராதனக் கட்சியொன்றிலிருந்து விலக்கப்பட்டதால் தனக்கெனக் கட்சியொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டிய எம்ஜிஆரின் நெருக்கடி கூட விஜயகாந்திற்கு இருந்ததில்லை. சினிமாவில் பேசிய ஊழல் எதிர்ப்பு போன்ற மேலோட்டமான பிரச்சினைகளையே கட்சியின் கொள்கையாக முன்வைத்தார். அவர் பேசிய இந்த விசயங்களுக்காகப் போராடி மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லாமல் சினிமாக் கவர்ச்சியை முதலீடாக்கிச் சொற்ப நாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனால். தமிழ் ஒழுக்கவாதப் பார்வையிலிருந்து விஜயகாந்தை முதலில் எதிர்கொண்டதன் விளைவாகப் பாமகவைத் தொடர்ந்து எதிர்த்தச் செயலாற்றி வருகிறார் விஜயகாந்த். தங்களின் தமிழ்ச்சாதி எனும் அடையாளத்தின் வழியாக விஜயகாந்தின் சினிமாக் கவர்ச்சியை மட்டுமல்ல அவரது தமிழர் அல்லாத அடையாளத்தையும் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரின் கூட்டு சுட்டத் தவறவில்லை.

தமிழரல்லாத புதிய எதிரியைச் சுட்டுவதன் மூலம் தங்களின் தமிழ் அடையாளத்திற்கு மொழி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளச் சாத்தியமுண்டாகிறது. ஆனால் இத்தமிழ் அடையாளத்தின் ஊடாகப் பின்னுக்குத் தள்ளப்பட்ட சாதிய முரண்தான் விஜயகாந்தின் தேர்தல் வெற்றிக்கு ஒருவகையில் காரணமாகிவிட்டது. ஏனெனில் இத்தமிழ் அடையாளம் சாதிய முரண்பாட்டைக் களைந்தோ களைவதற்கான முயற்சிகளிலோ உருவானவையாக இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்துக்கொள்ளும் பாவனையிலிருந்து பிறந்தது. இது சாதிய முரண்பாட்டை அப்படியே தக்கவைத்துக்கொண்டது.



தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 9:06 am

விஜயகாந்த் சாதியமுறைக்கு எதிரான எந்தப் பார்வையையும் கொண்டிராதவர். அதைக் குறித்துப் பேசாமலிருந்தாலே அதை எதிர்ப்பதாகிவிடும் என்று நம்புகிறவர். அதே வேளையில் சாதியைத் தீர்க்கமான வரையறைகளோடு பயன்படுத்தியவராகவும் சொல்ல முடியாது. இச்சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி எந்தப் புரிதலோ அதை மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களோ அவரிடம் கிடையாது. இதில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளுக்காகப் போராடிய ராமதாஸையோ ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிய திருமாவளவனையோ அவருடன் ஒப்பிடமுடியாது. ஆனால் இவர்களைத்தான் விஜயகாந்த் தேர்தலில் வெற்றிகொள்கிறார். சாதி வாக்குகள் மூலமாக விஜயகாந்தை எதிர்கொள்ள நினைக்கும்போது அதுசார்ந்த போலித்தனத்தால் ராமதாஸும் திருமாவளவனும் அவரிடம் தோற்றுப்போகிறார்கள் என்பதே உண்மை. இச்சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியின் 41 வேட்பாளர்களில் சுயசாதியினர் குறைவு. அதோடு தெலுங்கு பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மதுரைக்குத் தெற்குப்பகுதியில் அவர் போட்டியிட்ட இட்ஙகள் நான்குதான். நால்வரும்கூட சுயசாதியினர் இல்லை. ஆனால் பாமகவும் விசிகவும் அடர்த்தியாக உள்ள வடமாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது. சாதியரீதியான ஓட்டுகளை நோக்கி அவரது பிரச்சாரம் அமையவில்லை. எனவே அவருக்குக் கிடைத்த ஓட்டுகளும் அதனடிப்படையில் அமையவில்லை. ஆனால் தமிழ் அடையாளம் பற்றிப் பேசிய ராமதாஸால் தேர்தலுக்காகச் சாதியைப் பற்றிப் பேசாமலிருக்கவோ சொந்த சாதி வேட்பாளர்களை மட்டும் நிறுத்தாமலிருக்கவோ முடியவில்லை. கண்ணுக்குப் புலப்படும் குறிப்பான சாதியடையாளத்தை சினிமா நடிகர் என்னும் கவர்ச்சி வாதத்தால் பின்னுக்குத் தள்ள முடிந்திருக்கிறது. உள்ளீடற்ற சாதிக்கூட்டணியை சினிமா என்னும் கவர்ச்சிவாதம் வீழ்த்திவிட்டது. சினிமாவைக் காட்டிலும் ஆபத்தானது சாதி.

பாமகவைப் பலவீனப்படுத்தியதில் விஜயகாந்தின் பங்கு முக்கியமானது. 2006 சட்டமன்றத் தேர்தலிலேயே அவர் பாமக செல்வாக்குப் பெற்றிருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறார். விஜயகாந்திற்கு வன்னியர்களின் வாக்குகள் மட்டுமல்ல தலித்துகளின் வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. பாமகவின் அரசியல் பலம் குறைவதென்பது அப்பகுதியில் வாழும் தலித்துக்களுக்குச் சாதகமானதுதான். ஆனால் தமிழ் அடையாளத்தின் பெயரால் சாதியால் பயன்பெறுவோருக்காக மீண்டுமொரு முறை தலித் அரசியல் பலியிடப்பட்டிருக்கிறது. விஜயகாந்தோடு தலித் அரசியல் கைகோக்க வேண்டுமென்பது இத்தகைய வாதத்தின் நோக்கமல்ல. மாறாகச் சாதி அடையாளத்தைக் கரைப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டிராத தமிழ் அடையாளம் மட்டுமல்ல வேறெந்த அடையாளமும் தலித்துகளுக்கே இழப்பைக் கொண்டுவந்து சேர்க்கும். எனவே பாமகவோடு விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியென்பதுதான் இயல்பானது எனக் கூறிக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை.

பாமக மூன்று இடங்களிலும் பாமகவும் விசிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள பகுதிகளில் திமுக 10 இடங்களிலும் வென்றுள்ளன. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் சட்சி தனக்குரிய 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. திமுக ஆட்சிமீதான வெறுப்பும் விஜயகாந்த் வருகையும் மட்டுமல்ல திருமாவளவன் பெரிதும் நம்பிய தமிழ்ச்சாதி கூட்டணியும் அவரைக் கைவிட்டுள்ளது. இக்கட்சி பத்துத் தொகுதிகளிலும் ஐந்து லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. இதன் மூலம் வன்னியர் சாதி ஓட்டுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பரிமாற்றப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் வீசிய திமுக எதிர்ப்பலையில் வீழ்ந்த கட்சியாக இருப்பினும் அக்கட்சிக்கென்று தனித்த வாக்கு வங்கியைக் கொண்ட காட்டு மன்னார்கோயில், மங்களூராக இருந்து தொகுதி மறுசீரமைப்பில் பெயர் மாறிய திட்டக்குடி ஆகிய தொகுதிகளைக்கூட அக்கட்சியால் தக்கவைக்க முடியவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்முதலாக 1999ஆம் ஆண்டு மூப்பனாரின் தமாகாவோடு கூட்டணி அமைத்து சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அந்நாடாளுமன்றத் தொகுதிக்கு அடங்கிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில்தான் அதிக ஓட்டுகளைப் பெற்றிருந்தது. அடுத்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் எட்டு இடங்களைப் பெற்றுப் போட்டியிட்டபோது அதிக வாக்குகளை வாங்கிய தொகுதி என்னும் முறையில் இந்த மங்களூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்து வென்றார் திருமாவளவன். மீண்டும் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டபோது தலித் மக்களின் ஓட்டுக்களனைத்தையும் திருமாவளவன் பெற்றிருந்தார். இத்தேர்தலில் காட்டுமன்னார்க்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றதை வைத்து 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டு வென்றது.

திருமாவளவன் இரண்டுமுறை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோதும் வன்னியர்களால் தலித் மக்கள்மீது கடும் வன்முறைகள் ஏவப்பட்டன. அதை எதிர்கொள்வதற்காகவே தலித் மக்களில் பெரும்பான்மையோர் தன்னெழுச்சியாகத் திருமாவளவனுக்கு ஓட்டுப்போட்டனர். தலித் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே திருமாவளவன் தோற்றார். தலித் மக்களிடம் பெரும் எழுச்சி இருந்தது. பாமக பிரதிநிதித்துவப்படுத்தும் வனியார்களால் ஒடுக்கப்படும் அனுபவத்திலிருந்து தங்களுக்கான அரசியல் அடையாளமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தலித் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினர் என்பதே இதன் பொருள். இதே மனநிலையோடுதான் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மங்களூர், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் செல்வப்பெருந்தகையும் ரவிக்குமாரும் போட்டியிட்டபோது அம்மக்கள் வரவேற்றனர். இக்கட்சி தனித்தப் பெற்ற வாக்கு சதவிகிதத்தோடு வேறெந்தவொரு கட்சியின் சிறிய அளவு ஓட்டுகள் சேர்ந்தாலும் வெற்றிபெற்றுவிடும் நிலைமைதான் இருந்தது. எந்தக் கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வாக்குக்குரிய தொகுதிகளாகவே இவ்விரண்டும் இருந்தன. ஆனால் 2006இல் காட்டுமன்னார் கோவிலில் 13,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இக்கட்சி இத்தேர்தலில் 31,000 வாக்க வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. அது போலவே மங்களூரில் 6,900 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுத் தற்போது 15,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலையால் மட்டுமே அத்தோல்வி அமையவில்லையென்பதை இந்த வாக்கு வித்தியாசம் காட்டுகிறது. முன்பு திருவிழாக் கோலத்தோடு வரவேற்ற கிராமங்களில் இப்போது எம்.எல்.ஏவே வரக் கூடாது என்று எதிர்ப்பு காட்டப்பட்டது. மங்களூரில் வெற்றி பெற்ற செல்வப்பெருந்தகை இக்கட்சியிலிருந்து இடையிலேயே விலகிச் சென்றுவிட்டார். இரண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் கடந்த ஐந்தாண்டுக் காலச் செயற்பாடுகளும் தலித் மக்களுக்கு எந்தவிதமான உபகாரத்தையும் செய்து தரவில்லை. தலித் மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கான தனித்துவமான காரணங்களைத் தங்களின் மோசமான செயற்பாடுகளால் அழித்துவிட்டிருந்தனர். இந்நிலையில் இக்கட்சிக்குத் தலித் மக்களிடமே செல்வாக்குக் குறைந்திருப்பதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்க முடிகிறது. ஒன்று இத்தொகுதி பிரதிநிதிகளின் மோசமான செயற்பாடுகள், மற்றொன்று அக்கட்சி பாமகவோடு ஏற்படுத்திய அரசியல் கூட்டணிக்காகத் தலித் மக்கள் பிரச்சினையில் ஏற்படுத்திக்கொண்ட மோசமான சமரசங்கள், சாதிய முரண்களைக் குறித்த மௌனம் ஆகியவற்றைக் கூறலாம். மேலும் கூட்டணிக் கட்சி என்னும் வரையறையை அழித்துவிட்டு, திமுகவின் கிளையைப் போல் இயங்கி, தலித் மக்கள் நோக்கிலிருந்து எந்தவித அழுத்தத்தையும் தராமல் போனதால் இக்கூட்டணி குறித்த நம்பிக்கையைத் தலித் மக்கள் கைவிட்டிருக்கிறார்கள் எனலாம்.

தமிழ் அடையாளத்தின் வழியிலான சாதிக் கூட்டணி என்னும் நம்பிக்கையை இரண்டு சாதிகளுமே நம்பவில்லை என்பதையே இக்கூட்டணியின் தோல்வி காட்டுகிறது. அத்தகைய நம்பிக்கையைத் துலக்கமாக எடுத்தவைக்கும் படியான பணிகள் எவையும் பரஸ்பரம் இக்கட்சிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் சாதிகளை ஆதரித்தே ஆக வேண்டுமென்ற சமூக நிர்ப்பந்தங்கள் இல்லாமலாக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழகம் தழுவிய திமுக எதிர்ப்பு அலையையோ விஜயகாந்த் போன்று சாதியடையாளத்தை வெளிப்படையாகப் பேசாத ஒருவரையோ உள்வாங்கிக்கொள்வதில் இம்மக்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. தேர்தலில் எல்லாவற்றையும் போல் தமிழ் அடையாளமும்கூடச் சந்தர்ப்பவாத நோக்கத்திற்குரியவையாய் மாறிவிட்டது. பொது அடையாளத்தைப் பேசினாலும் ஒடுக்கப்பட்டவனுக்கு அதிகாரம் தர மறுக்கிறது ஆதிக்கச் சாதி மனம். தன்னை ஒடுக்கியவனின் அரவணைப்பைச் சந்தேகத்தோடு பார்க்கிறது ஒடுக்கப்பட்டவனின் அனுபவம். இங்கு எல்லாவற்றைக் காட்டிலும் வலியது சாதி. இந்த வலிமைக்கு முன்பு தமிழின அடையாளம் மட்டும் விதிவிலக்காகிவிடுமா? என்ன?

-ஸ்டாலின் ராஜாங்கம்



தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 9:10 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா தமிழ் அடையாளமும் சாதி அடையாளமும் 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 27, 2011 10:52 am

பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா ..



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக