புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
12 Posts - 2%
prajai
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
9 Posts - 2%
jairam
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல்


   
   
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 16, 2011 9:48 am

றுபதாயிரம்
காதல் கவிதைகளும்
உதிரியான சில குறிப்புகளும்

சுகுமாரன்

[/
பின்வரும் கணக்கெடுப்பு தோராயமானது; ஆனால்
ஓரளவுக்கு நம்பகமானது - நதியின் நீரோட்டத்தை வைத்து எங்கோ கன மழை பெய்திருக்கிறது
என்று முடிவுசெய்வதைப் போல.


தமிழில் வெளியாகும் புத்தகங்களில் கணிசமானவை கவிதைத் தொகுப்புகளே. சிறு, நடு,
பெரும் பத்திரிகைகளின் மதிப்புரை, புதிய புத்தகங்கள் அறிமுகம், வரப்பெற்றோம்
என்னும் ஒற்றை வரித் தகவல்கள், விளம்பரம் ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்துக்
கணக்கிட்டால் மாதத்துக்குச் சராசரி இருபது கவிதை நூல்கள் வெளியாகின்றன. ஒரு
தொகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து கவிதைகளாவது காதலைப் பற்றிப் பேசுவனவாக
இருக்கின்றன. இவை தவிரக் காதலில் கசிந்துருகுவதையே கவிப் பொருளாகக் கொண்டிருக்கும்
தனித் தொகுப்புகள் வேறு. தற்காலிகமாக அவற்றை விலக்கிவைத்துப் பார்த்தால் ஒரு
மாதத்துக்குச் சுமார் நூறு காதல் கவிதைகள். ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு
கவிதைகளாகின்றன. இன்று கவிதை பெற்றிருக்கும் ஜனநாயக வடிவமே இந்த அமோக மலர்ச்சிக்கான
சுதந்திரத்தைத் தந்திருக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.


முதல் காதல்  Natesh-drawing-3-kc831934இல் வெளிவந்த ந. பிச்சமூர்த்தியின் கவிதையிலிருந்தே புதுக்கவிதை வரலாறு
தொடங்குவதாக விமர்சன மரபு வரையறுக்கிறது. அதை ஏற்றுக்கொள்வோமெனில் நவீனக் கவிதை
எழுபதாண்டுகளைக் கடந்திருக்கிறது என்பது உறுதி. இந்த எழுபது ஆண்டுகளில்
புதுக்கவிதைமீதுள்ள ஒவ்வாமை காரணமாக இருபது ஆண்டுகள் கணிசமான எண்ணிக்கையில்
கவிதைகள் வெளிவரவில்லை என்று ஊகிக்கலாம். ஆக, ஐம்பது ஆண்டுகள். ஆண்டுக்கு ஆயிரத்து
இருநூறு மேனியில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் காதல் கவிதைகள் வெளி வந்திருக்கின்றன
என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதுக்கவிதை வடிவில் பிச்சமூர்த்தி அச்சியற்றிய
முதல் கவிதையின் தலைப்பு 'காதல்' என்பது தற்செயலானதல்ல என்றும் வரலாறு நிர்ணயித்த
போக்கு என்றும் நம்புவது வியப்புக்குரியதாகாது. இந்த அடிப்படையில் இன்று
கவிதையெழுதும், குறிப்பாகக் காதல் கவிதை எழுதும், இளங்கவிஞன் மாபெரும் வரலாற்றுக்கு
உடமையாளனாகவும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுபவனாகவும் ஆகிறான்.


இன்னொரு கோணத்திலும் இதை வியாக்கியானம் செய்யலாம். வாழ்க்கையின் நடைமுறைகளை அகம்,
புறம் என்று பகுத்துவைத்திருக்கும் மரபில் இந்த அபாரப் பெருக்கம் நீர்போல
அநாதியானது; சரளமானது. ஆனால், சமகாலத் தமிழ் வாழ்க்கையில் காதல் இந்த அளவுக்கு
எளிமையானதா என்னும் கேள்விக்குப் பதில் காண்பது சிக்கலானது. ஓர் அர்த்தத்தில்
உலகியல் தளத்தில் நிறை வேற்றிக்கொள்ள முடியாத உணர்வை உளவியல் தளத்தில்
பூர்த்திசெய்துகொள்ள மனித மனத்தை அனுமதிப்பதும் இலக்கியத்தின் கடமைகளில் ஒன்றுதானே?


இந்தச் சுய நிறைவேற்றம்தான் எல்லா மொழிகளிலும் காதல் கவிதைகளின் அதீதப்
பெருக்கத்தைச் சாதாரணமாக்குகிறது என்று கருதுகிறேன். இந்த மனநிறைவு இல்லாத வாழ்க்கை
கற்பனைக்கு அப்பாற்பட்டது. சக உயிருடன் உறவில்லாத நடவடிக்கை இயற்கைக்கு முரணானது.
வாழ்க்கையில் காதல் வகிக்கும் பங்கு இதுவாகலாம். நேரடி அனுபவம் இல்லாமலே கைகூடக்
கூடிய சிறப்புத் தன்மை பொருந்திய உணர்வு காதல் மட்டுமே. பசியுணர்வை உணவைத் தவிர
வேறு எதனாலும் ஆற்ற முடியாது. ஆனால், காதல் பற்றிய கற்பனையை மென்றுகொண்டே அந்த
உணர்வின் ஏகதேச நிலையை அடைந்துவிட முடியும். வாழ்நிலை அனுமதிக்கும் சலுகை இது என்று
கொள்ளலாம். அதே சலுகையை இலக்கியமும் அனுமதிக்கிறது. குறிப்பாகத் தமிழ்க் கவிதை
மரபு. அகத் துறை முன்னுதாரணங்களை அடியொற்றியே கூடப் புதிய கவிதையை எழுதிவிட
முடியும். துறவிகளும் பெண்ணை உதாசீனப்படுத்திய சித்தர்களும் காதல் ததும்பி வழியும்
கவிதைகளை எழுத இந்த விரிவான மரபுதான் இடமளித்திருக்கிறது. இது தொடர்பான மேலதிக
விவாதத்தைக் கவிதையை ஆழமாகவும் அகலமாகவும் அலசும் திறனாய்வாளர்களிடம் விட்டு
விடுவதே நல்லது.


எத்தனை முறை எழுதினாலும் எத்தனை விதமாக வெளிப்படுத்தினாலும் அலுப்புத் தட்டாத
உணர்வாகக் கருதப்படுகிறது காதல். காதலையும் கவிதையையும் பற்றி யோசிக்கும்போது
உடனடியாக நினைவில் படரும் குறுந்தொகைப் பாடல் ஒன்று உண்டு. பரணர் இயற்றியது. 'ஊர்
மக்கள் நீரெடுக்கும் குளத்திலுள்ள பாசி போன்றது பசலை. காதலன் தொடும்போதெல்லாம்
விலகி, விடும்போதெல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது' என்ற பொருளில் வரும் பாடலின் சில
சொற்களை மாற்றினால் காதல், கவிதை இரண்டின் காலாதீதத் தன்மையை (நன்றி - பிரமிள்)
விளக்கிவிடமுடியும்.


n

காலப் புழக்கத்தில் ஒற்றைப் பொருள் கொண்டனவாக மாறிய சொற்களில் காதலும் ஒன்று.
வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதாக இருந்த இந்தச் சொல்லுக்கு இன்றைய பயன்பாட்டில்
ஆண்-பெண் விழைவு என்பதாக மட்டுமே பொருள் காண முடிகிறது. தமிழில் புதுக்கவிதை பெரும்
பாய்ச்சலை நிகழ்த்திய சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப் பகுதியில் இந்தக்
கருத்தமைவின் பிடிவாதம் நிலவியதாக இப்போது என்னால் அவதானிக்க முடிகிறது.
பேராசிரியர் நா. வானமாமலை எழுதிய 'புதுக்கவிதை: முற்போக்கும் பிற்போக்கும்' என்ற
விமர்சன நூலில், சார்புநிலை மேற்கொண்டிராத எழுத்து, நடை போன்ற இதழ்களில் வெளியான
கவிதைகளை ஃபிராய்டிய பாதிப்பில் உருவான நசிவு எழுத்துக்கள் என்று
வகைப்படுத்தியிருந்தார். காதல் கவிதைகள் என இன்று நாம் அடையாளம் காணும் கவிதைகளைக்
குறிப்பிட 'இணைவிழைச்சு' என்ற சொற்சேர்க்கையையும் முன் வைத்திருந்தார். முன் சொன்ன
சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளை அவர் இரண்டே பெட்டிகளில் போட்டிருந்தார். ஒன்று -
அழுகுணித்தனமானவை, இரண்டாவது - இணைவிழைச்சு வேட்கையைத் தூண்டி விடுபவை. இரண்டு
பெட்டிகளில் இருந்தவற்றைக் குவித்துப்போட்டுப் பரிசீலனை செய்தே இவையெல்லாம்
பிற்போக்குத்தனமான கவிதைகள் என்ற விமர்சன முடிவுக்கு வந்திருந்தார். பிச்சமூர்த்தி
மட்டும் அந்தக் கண்டனத்திலிருந்து விலக்கப்பட்டதன் காரணம் அவரது நீண்ட தாடியென்று
நம்புகிறேன். அவரது இலக்கியத் தோழரான கு.ப.ரா.வின் கவிதை ஒன்றும் இத்தகைய
கண்டனத்துக்கு இலக்காயிற்று என்று நினைவு.
இத்தனைக்கும் காதல் பற்றிய எதார்த்தமான மன நிலையைத்தான் அந்தக் கவிதை
பதிவுசெய்திருந்தது. காதலைச் சந்தேகமாக உணரும் பெண்ணிடம் அந்த உணர்வு அவளிடமே
ஊடுருவியிருப்பதைக் காதலன் சுட்டிக்காட்டுவதாக அமைந்த கவிதை அது.
"காதலென்றால் கேலிசெய்கிறாயே, எதற்காக?
கவிதையைக் கள்ளச்சொல் என்கிறாயே வேண்டுமென்றுதானே?
நான் துதிக்கிறேன் என்றுதானே?
இருக்கட்டும்,
நமது இன்பத்து ஏகாந்த இரவின் இறுதியில்
பிறைவெளுத்த பின்மாலையில்,
இருள்வெள்ளம் வடிந்த வைகறையில்,
ஓவியமூட்டும் உன் ஒளிக்கரங்களைவிட்டு
நான் பிரிவினைகொள்ளும் போர்வேளையில்,
உன் கண்களைக் கலக்குவதென்ன, காதலல்லாமல்?
அந்தக் கனவழியும் பொழுதில்
உன் வாயின் வார்த்தைவனப்புத் தானென்ன, கவிதையல்லாமல்?"

ரொமான்டிக்கான உணர்வை ரொமான்டிசிசப் பகட்டில்லாமல் வெளிப்படுத்திய கவிதை இது என்று
இப்போது வாசிக்கும்போதும் தோன்றுகிறது. ஓர் அர்த்தத்தில் தமிழில் இதுவரை
வெளிவந்துள்ள ஆயிரக் கணக்கான காதல் கவிதைகளுக்கும் ஆதாரமான மனத் தளம் இதுதான்
என்றும் நம்புகிறேன். இந்த மனத் தளத்தின் பரிமாணங்கள் வெவ்வேறு கவிஞர்களிடம்
வெவ்வேறு வடிவம் பெற்றிருந்தாலும் அடிப்படை இலக்கணம் இதுவாகத்தான் இருக்கிறது.
காதல் என்ற உணர்வு தீண்டியதும் ஆவேசமடைந்து 'காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்'
என்ற அதீத உணர்வுடன் காதலனோ கவிஞனோ துள்ளிக் குதிக்க முடியாது என்பதை நவீன வாழ்க்கை
எடுத்துக்காட்டுகிறது. அதையே நவீனக் கவிதை நடைமுறைப்படுத்துகிறது. அப்படி விண்ணைச்
சாடுகிற காதல் கவிதைகளை, புரட்சிகரமான கவிதைகள் எழுதி அறைகூவல் விடுத்த
கவிஞர்கள்தாம் எழுதிக் குவித்தார்கள் என்பது வரலாற்றின் விநோதம். அப்படி எழுதப்பட்ட
கவிதைகள் பிற்போக்கானவை என்னும் விமர்சனத்துக்கு இலக்காகக்கூடும் என்ற எச்சரிக்கை
உணர்வில் காதலியின் புன்னகையைப் புரட்சியில் அடைந்த வெற்றியுடனும் காதலியின்
புருவத்தைச் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கொய்யும் அரிவாளுடனும் ஒப்பிட்டுக் காதலை
முற்போக்கான சங்கதியாக மாற்றிய இலக்கிய வித்தைகள் நடத்தப்பட்டதும் உண்டு. எல்லாப்
புரட்சிகளும் தோற்கடிக்கப்படும் இன்றைய காலப் பகுதியில் இது போன்ற கவிதைகள் கால
வழுவாயின; அல்லது வெகுசன ஊடகத்தின் பகுதியாயின. அன்று முற்போக்குக் கவிதைகளுக்கான
வகை மாதிரிகளாக இருந்த பிற நாட்டுக் கவிஞர்கள் பலரும் (உதாரணம்: விளாதிமிர்
மயாகாவ்ஸ்கி, பாப்லோ நெரூதா, பெர்டோ ல்ட் பிரெக்ட்) காதலுக்காகக் கசிந்து உருகிக்
கரைந்தவர்கள் என்பதும் அது போன்ற கவிதைகள் எழுதுவது புரட்சிக்கு விரோதமானது என்னும்
மூட நம்பிக்கை அற்றவர்களாக இருந்தவர்கள் என்பதும் நமது கவிதைச் சூழலில்
கவனிக்கப்படவில்லை. எத்தனை சுவாரசியமான முரண்!
அன்றாட நடவடிக்கைகளில் உள்ளோடும் மனச் சஞ்சாரம்தான் நவீனக் காதல் கவிதைகளில்
வெளிப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஓர் அர்த்தத்தில் இதைத் தமிழ்க் கவிதையில்
தொடர்ந்து வரும் மரபின் குணங்களில் ஒன்றாக வகுக்கலாம். சங்கக் கவிதை இயலில் அன்றாட
நடவடிக்கையின் பின்புலத்திலேயே கவிதையின் சாத்தியங்கள் கண்டறியப்படுவதைச் சான்றாகக்
குறிப்பிடலாம்.
'காணாமற்போன அணிகலனைக் கண்டுபிடித்தவளைப் போல, ஓடிச் சென்று அவனுடைய துடிக்கும்
மார்பில் சேர்வாயாக', 'பானை வனையும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்ட சிறு பல்லிபோல
இவனுடன் பல பாதைகள் கடந்தேன்' என்பன போன்ற வரிகளை இந்தக் குணத்துக்கான
எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கலாம்.
நவீனக் கவிதைகளில் இந்தக் குணம் மேலோங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இதன் விளைவு
கவிதைகளில் காட்சிப் படிமங்களின் பிரயோகம் அதிகம் என்பதே. 'சிணுக்கம்' என்ற
பிச்சமூர்த்தியின் கவிதை முதலே இந்த இயல்பு தொடர்கிறது. தமிழில் வெளியான மென்மையான
காதல் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று இந்தக் கவிதை.
காதலி, பெரும்பாலும் மனைவியின் செல்லச் சிணுங்கல்தான் கவிதை மையம். ஒரு விநோதமான
ஊடல். பிரியும் வேளையில் எல்லாரும் விடைபெற்றுக்கொள்கிறார்கள்; தன் காதலன் அல்லது
கணவன் மட்டும் சொல்லிக்கொண்டு போவதில்லை என்ற மனத்தாங்கல் அந்தப் பெண்ணுக்கு. அதை
அவனிடமே சொல்லவும் செய்கிறாள். ரயிலேறும் உறவினர்கள் மதகின் திறப்பருகே நீர்ச்
சுழல் தயங்குவதுபோல நின்று விடைபெறுகிறார்கள்; படிகளைத் தொட்டுப் பிரிகையில்
விடைபெறும் அடையாளமாகக் குளத்தின் அலை, சின்ன மூச்சை விட்டுப்போகிறது. ஆனால், நம்ம
ஆள் மட்டும் தன்னைப் பொருட்படுத்தாமல் போகிறான் என்ற அவளது செல்லப் புகாருக்கு அவன்
சொல்லும் பதில்:
'அடி கிறுக்கே,
சென்றாலன்றோ விடைபெறவேண்டும்
போனாலன்றோ வரவேண்டும்?
என்னுயிர் என்னிடம்
இல்லாதிருக்கையில்
இருள் ஏது?
உடலுக்கு வாக்கேது?
போக்கேது, வரவேது?
வீட்டிலிருந்தும்
என்னுடன் வருகின்றாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கிறேன்'

இந்தப் பதிலில் சிணுக்கம் விலகிச் சிரிப்பாகிறது. கவிதையின் மென்னுணர்வும் அதற்கான
படிமங்களும் அனுபவமாகப் பதிகின்றன. மதகில் சுழித்துத் தயங்கும் நீரின் நிச்சலன
அசைவையோ படிகளில் முட்டிப் பின்னொதுங்கும் அலை வளையத்தையோ பார்க்கும்போது காதலியை
அல்லது மனைவியை நினைவில் கொண்டுவராமலிருக்காது இந்தக் கவிதை. இதேபோலக் காதலின்
மென்னுணர்வை எழுப்பும் மற்றொரு எழுத்து காலப் படிமம், எஸ். வைதீஸ்வரன் கவிதையில்
தென்படுகிறது. 'மலரற்ற தார் ரோடில் விழிக்கு மலராகவும், வெயில் எரிக்கும் வெறும்
தரையில் வழியெதிரில் பாவாடை நிழலுக்குள் வெண்முயல்களாகவும்' பெண்ணின் பாதங்கள்
மாறித் தெரிவதன் காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?
முன்னோடிக் கவிஞர்களின் கவிதைக்கான பல பாடுபொருள்களில் காதலும் ஒன்றாக இருந்தது
என்பதைக் கடந்து விரிவாக யோசிக்க அதிகம் இல்லை. காதல் பற்றிய அவர்களது மனப் போக்கு
வரையறைக்குட்பட்டது. அவர்களது காதல் வானவில்லில் ஓரிரு நிறங்களே இருந்திருக்கின்றன.
இந்தக் கவிதைகளில் இடம்பெறும் பெண் உருவமாகப் பெரும்பாலும் மனைவியரே
முன்னிருத்தப்பட்டனர் என்று வாதிப்பது சரியாக இருக்கும். இந்தக் கவிதைகளை எழுதிய
கட்டங்களில் அவர்கள் மணமானவர்களாகவே இருந்திருக்கக்கூடும். நடுத்தர வர்க்க
மதிப்பீடுகளைச் சார்ந்தே அவர்களது அந்தரங்க மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
என்பதைக் கவிதைகள் பட்டவர்த்தனமாகச் சொல்கின்றன. காதலை ஓர் இனிய மனநிலையாகச்
சொல்லும்போதே அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
பெண்மீதான வசீகரம், அவளது அழகு, அவளுக்காகக் காத்திருப்பதன் சுகம், பெண்ணை
இழந்துவிடுவதில் நேரும் துக்கம், பிரிவாற்றாமை ஆகிய உணர்வுகளை ஆண் நிலையிலிருந்து
சொல்லியிருக்கிறார்கள். ஒருவிதமான லட்சியக் காதல் நிலைதான் (ஜீறீணீtஷீஸீவீநீ
றீஷீஸ்மீ) இக்கவிதைகளில் துலங்குகிறது.
பின்னாட்களில் தேவதேவன் எழுதிய கவிதை ஒன்றில் காதலுக்கு நேர்ந்த மாற்றம் பற்றிய
சித்தரிப்பு காணப்படுகிறது. நவீனக் காதலின் சூழலையும் அது எதிர்கொள்ளும்
சிக்கலையும் நையாண்டி செய்கிறது கவிதை.
'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்?

ஒரு காப்பி சாப்பிடலாம் வாயேன்'

தேவதேவனால் காதலியைக் காபி சாப்பிட அழைக்கவாவது முடிகிறது. முன்னோடிகளால் அது பற்றி
யோசிக்கவாவது முடிந்திருக்குமா என்பது சந்தேகம். காதல் பற்றிய மனநிலையிலும்
அக்கவிஞர்கள் கனவான்களாகவே இருக்க விரும்பியிருப்பார்கள்போல.
சி. மணிதான் ஆண்-பெண் விழைவின் புனிதப் பாசாங்குகளைக் கலைத்த முன்னோடிக் கவிஞர்.
காதலின் முதிர்வில் காமத்தின் வாசனையும் எழுமென்று சுட்டிக்காட்டியவர். காதலுறவின்
மென்மையான படிமங்களை உருவாக்கிய அதே சமயத்தில் காமத்தின் வலுவான தருணங்களையும் சி.
மணி சித்தரித்தார். மனத்தின் பரிதவிப்பு மட்டுமல்ல; உடலின் வேட்கையும்தான் காதல்
என்று அவர் கவிதைகள் ருசுப்படுத்தின. அப்படி நிறுவும் தீவிரத்தில் அவரது காதல்
கவிதைகளில் காதலில் அல்லது காமத்தில் ஈடுபடும் மனம் புனையும் நுட்பமான உணர்வுக்
கோலங்கள் இல்லாமற்போயின.
முதல் காதல்  Natesh-drawing-1-kc83காதலையும் காமத்தையும் பகுக்க முடியாத மனோ வேளைகளைக் கவிதையில் நிறுவியவர் பிரமிள்.
காதலின் தீராத் தாபமும் காமத்தின் மாளாத ஆவேசமும் கொண்ட வரிகளை அவர்தான் எழுதினார்.
ஆண் நிலையிலிருந்து கற்பிக்கப்பட்ட காதலுணர்வில் பெண்ணின் மனவோட்டத்தை
முன்னிருத்தியவர் பிரமிள் என்பது என் கணிப்பு. எடுத்துக்காட்டாக 'ராமன் இழந்த
சூர்ப்பநகை' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம். சனாதனமான பொருளில், அதாவது ஆண்மையப்
பார்வையில் சூர்ப்பநகை செய்தது ஆள்மயக்கும் லீலை. பிரமிளின் வரிகளில் இந்தத் தருணம்
பெண்ணின் காதலாகவும் காமமாகவும் அவை உதாசீனப்படுத்தப்படும்போது எழும் சீற்றமாகவும்
மாறுகிறது. கவிதைத் தலைப்பு என்னுடைய சார்பை வலுப்படுத்துவதாகவும் கருதுகிறேன்.
கவிதையில் வெளிப்படும் குரல் பெண் தொனியுள்ளது. அவளுக்கு நேரும் மனவோட்டங்களை
முன்வைப்பது. ராமனை இழந்த சூர்ப்பநகையின் கூற்று அது. அவள் விரும்பிய தருணம்
கைகூடாத ஆற்றாமைதான் கவிதையின் மையம். ஆனால் தலைப்பு 'ராமன் இழந்த சூர்ப்பநகை'. ஆக,
இழப்பு பெண்ணுக்கல்ல; ஆணுக்கு. அவன் கடவுளாக இருந்ததுதான் காரணம். அந்தக் கவிதையை
இங்கே நினைவு கூரலாம்.
'இருளின்நிற முகக்கதுப்பில்
தணல்கள் சிரித்தன
அவள் ராக்ஷஸப்பாறைகள்
பாகாய் உருகின.
உருகியென்?
அவனோ கடவுள்
ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்
நடையோ
ரடியொவ்வோ
ரடியில்
தசையின்
ஜ்வாலை நடுக்கம்
நடுங்கியென்?
அவனோ, பாவம்
கடவுள்
தழுவ விரியும்
தொடைகள் திரண்டு
பிரிந்துபிரிந்து
இடையே ஓர்
தலைகீழ்க் கருஞ்சுடர்
எரிந்தெரிந்து அழைக்கும்
அழைத்தென்?
அவனோ, த்சொ,
கடவுள்'.

முதல் வாசிப்பில் இக்கவிதையைப் பற்றி எனக்குள் திரண்ட இந்தப் பார்வை காலப் போக்கில்
மேலும் செழுமை பெற்றே வந்திருக்கிறது. இன்றுள்ள கருத்துச் சூழலில் கூடுதலாகவும்
பொருள்படும் வாய்ப்பும் விரிந்திருக்கிறது என்பது என் அனுமானம்.


n

ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தர்க்கம் மறைந்திருக்கிறது என்ற நம்பிக்கையில்
குதர்க்கமான ஒரு வகைப்படுத்தலை இங்கே மேற்கொள்ள விரும்புகிறேன்.
நவீனக் கவிதையின் பின்புலம் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்தே உருவானது. ஆண்-பெண்
உறவு பற்றிய கவிதைக்கான கருத்தமைவுகளும் இந்த மனோபாவத்திலிருந்தே வெளியாகியுள்ளன
என்பது இயல்பானது. காதல் அடுத்தவன் பிரச்சினையாக இருக்கும்போது ரசிக்கத் தகுந்த
ஒன்றெனவும் தன்னுடையதாக வரும்போது ரகசியமாகக் காப்பாற்ற வேண்டிய பிரமாணம் எனவும்
இந்த மனோபாவம் வற்புறுத்துகிறது. எனவே, காதலியின் அடையாளங்களையோ, குறைந்தபட்சம்
பெயரையோகூட வெளிப்படுத்துவது அத்துமீறலாகிறது. அதனால் கவிதைப் பெண்கள்
பெரும்பான்மையும் மனைவியின் சாயலிலோ நிழலிலோ ஒண்டிக்கொள்கிறார்கள். தமிழில்
இன்றளவும் ஆகச் சிறந்த காதல் கவிதைகளை எழுதிய பாரதியின் கண்ணம்மாகூட அவரது மனைவி
செல்லம்மாளின் முகமூடியுடன்தான் நமக்கு அறிமுகமாகிறாள்.
பாரதி கவிதைகளை அடிப்படையாக வைத்து அவரது வாழ்க்கையை அவரது வாய்மொழியாகப் பதிவு
செய்ய முயன்ற முத்துக்கிருஷ்ணனின் வரலாற்று நூலில் (என்.சி.பி.எச். வெளியீடு)
கண்ணம்மா என்பது செல்லம்மாள் அல்லவென்றும் பாரதியின் பிள்ளைப் பிராயத் தோழியென்றும்
குறிப்பிட்டிருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே படுகிறது. அச்சில் வெளிவந்த அவரது
முதல் கவிதையான 'தனிமை இரக்கம்' காதலும் காமமும் பிணைந்தது. பதினாலரை வயதில்
திருமணம் முடித்த இளைஞனுக்குப் பதினெட்டு வயதில் இரு தள அனுபவமும் சாத்தியம்.
எனினும் மேற்சொன்ன வாழ்க்கை வரலாற்றை வாசித்தது முதல் இதில் காதலின் சொல்லப்படாத
ரகசியம் புதைந்திருப்பதாக நம்ப மனம் விரும்புகிறது. பதினான்கு வயது நிறைவுபெறும்
முன்பே திருமணம். மறு ஆண்டில் தந்தை மரணம். அதைத் தொடர்ந்து காசிக்குப் போகும்
பாரதி மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டுச் செல்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப்
பின்பு ஊர் திரும்பிய பின்னர்தான் குல வழக்கப்படி சாந்தி முகூர்த்தம் நடைபெறுகிறது.
'தனிமை இரக்கம்' கவிதை அதற்கு அடுத்த ஆண்டில் (1904) வெளியாகிறது. பிரிவாற்றாமைதான்
கவிதையின் கரு. அது மனைவியைப் பிரிந்த நாட்களின் மனவோட்டமாகவே இருக்கலாம். அல்லது
மனத்துக்குள் பதிந்துபோன பெண்ணின் நினைவுகூரலாக இருக்கலாம். இரண்டாவதே பொருத்தம்
என்று தோன்றுகிறது. அப்படி நம்புவதற்கான ஆதாரங்கள் கவிதைகளிலேயே தென்படுகின்றன.
பாரதியின் காதல் கவிதைகளில் இணைவிழைவின் தவிப்புகளும் குதூகலங்களும் அதிகம். இந்தக்
காதலின் அடிவேர்கள் பக்தியிலும் ஆன்மீக விசாரங்களிலும் படர்ந்திருப்பதால் காமத்தின்
ஆவேசம் குறைவு. முன்னதை லட்சியக் காதலின் உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த நிலையில்
'பங்கமில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்'. அதுவே நிறைவு. இரண்டே இரண்டு
கவிதைகளில் மட்டும் காமத்தின் பெருங்கடல் கொந்தளிக்கிறது. அவை 'தனிமை இரக்க'மும்
'எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி' என்ற வள்ளிப்பாட்டும். இவற்றில் காதல் முற்றிக்
காமம் பீறிடுகிற மனச் சஞ்சாரத்தைப் பார்க்கலாம். 'வட்டங்களிட்டும் குளமகலாத
தெப்பத்தைப்போல' நிறைவு தேடி அலைந்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு
வரம்புகளுக்குள் தமிழின் காதல் கவிதைகளை அடக்கிவிடலாம். காதலியையோ மனைவியையோ
கவிதையில் சித்தரிக்கும்போது தமிழ்க் கவிஞர்கள் கனவான்கள்; உடல் துய்ப்பின்போது
ஆதிமனவாசிகள்.
இதே அடிப்படையில் கவிதையில் பெண்கள் சித்தரிக்கப்படுவதையும் வகைப்படுத்தலாம்.
முன்னோடிக் கவிஞர்களின் கவிதைப் பெண்கள் அனைவரும் தேவதைகள். அவர்களது நெருக்கம்
இந்தக் கவிஞர்களின் இருப்பையும் படைப்புச் செயலையும் அர்த்தப்படுத்துகிறது.
பின்னாளில் இதே பெண்கள் மோகினிகளாக உருமாறுகின்றனர். ஆணை அலைக்கழிக்கும்
காரணிகளாகிறார்கள். கலாப்ரியா, விக்ரமாதித்தன் கவிதைகளில் பெண் பெரும்பாலும் தேவதை;
சில சமயம் மோகினி. அபூர்வமான தருணங்களில் இரண்டும் சேர்ந்த ஈருடலி.
நவீனத் தமிழ்க் கவிதையாளர்கள் பலரும் இந்த இருவகையான பெண்ணிருப்புச் சார்ந்து காதல்
கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். அபூர்வமாக ஓரிருவர் மட்டும் இந்த நீரோட்டத்தில்
கால் நனையாமல் கடந்து போயிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி ஓர் உதாரணம். அவரைத்
தேவதைகளோ மோகினிகளோ தீண்டவேயில்லை. நூற்றுச் சொச்சம் கவிதைகள் எழுதியிருந்தும்
அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரே ஒரு காதல் கவிதை 'பூக்கள் குலுங்கும் கனவு'.
மனத்துக்குள்ளிருக்கும் பெண்ணின் மணநாள் தோற்றம் பின்பும் ஆக நினைவுகளை
அடுக்குகிறது கவிதை. வாழ்வின் தேனை வண்டைப் போல உறிஞ்சும்படி பெண்ணுக்கு வாழ்த்துக்
கூறிவிட்டு ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார் கவிதை சொல்லி. வாழ்வின் 'பாதை
முடிவுறும் முன்னே என்றேனும் ஒருநாள் / அந்த இளம் மீசையிடம் என்னைப் பற்றியும்
கொஞ்சம் சொல்லு / உன் கடந்த காலங்களின் பழைய நினைவாய்' என்பது அந்த வேண்டுகோள். இது
முன்னாள் காதலின் ஞாபக மிச்சமா, அல்லது ஏதோ பெண்ணுக்குச் சொன்ன பொதுவான நினைவூட்டலா
என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. எனினும் இந்த வரிகளிலுள்ள நெகிழ்ச்சியும்
மீசைக்காரக் கணவனிடம் வாழ்ந்து தீரும் முன்பு தன்னைப் பற்றிச் சொல்லக்கோரும்
முனைப்பு ஒரு காதலனுடையது என்ற ஊகத்திலும் இதைக் காதல் கவிதை என்று உறுதியாக
நம்புகிறேன்.
கிட்டத்தட்ட இதே தருணத்தைச் சித்தரிக்கும் இன்னொரு கவிதை சமயவேல் எழுதிய 'சந்தி'.
சுந்தர ராமசாமி கவிதையிலிருந்த சந்தேகச் சாயல் இந்தக் கவிதையில் இல்லை. முன்னாள்
காதலியைத் தற்செயலாகச் சந்திக்கும் காதலன். அவன் தன் மனைவியோடு. அவள் தன் கணவனோடு.
காதலன் கணவனிடமும் காதலி மனைவியுடனும் பேசிக்கொண்டிருப்பதும் அதன் இடைவேளையில்
'அந்த ஒரேயொரு விஷயம்' மட்டும் தொடப்பட முடியாமல் புதைந்து எழுந்து புதைந்து
நழுவிக்கொண்டிருப்பதும் கவிதைக்கான கணங்களாகின்றன. இந்த மென்கண நினைவுகள்தாம்
கவிதையின் காலியாகாத களஞ்சியம். அவைதாம் காட்சிப் படிமங்களை உருவாக்குகின்றன.
படிமங்களின் பின்னங்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கூட்டுப் படிமத்தை மனப் பிம்பமாக
நிறுத்திய கவிதை ஞானக்கூத்தனின் 'பவழமல்லி'.
கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா, மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா, சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும், சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடும் தூங்கும்.
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்தநேரம்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?


நவீன எழுத்துக்களில் மிக நேர்த்தியான காதல் கவிதை இது என்பது என் அபிப்பிராயம்.
கவிதையில் இடம்பெறும் காட்சி அடுக்குகள், பின்னணி, பாத்திரங்களின் செயல் மூலம்
தெரிகிற மனப்போக்குகள், அவற்றுக்கெல்லாம் மையமான ஒரு பெண்ணின் இருப்பு ஆகிய
அனைத்தையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது. கூடவே எல்லாப் பூக்களும் மலர்ந்து ஓய்ந்த
பிறகு யார் கவனத்தையும் கவரும் நோக்கமில்லாமல் மலரும் பவழமல்லியின் வாசனை.
கவிதையில் வரும் காதலியும் அன்றாடச் செயல்கள் முடிந்த பின்னர்தான் காதலைப் பற்றி
யோசிக்க அனுமதிக்கப்படுகிறாள் என்ற மெல்லிய சோகத்தின் வாசனையைப் பவழமல்லி மறைமுகமாக
வெளிப்படுத்துகிறது. இன்னொரு கோணத்திலும் இந்தக் கவிதை நவீனமானது. கவிதை ஓர் ஆண்
குரலில்தான் வெளிப்படுகிறது. அதிலேயே பெண்ணின் இருப்பும் விளங்கிவிடுகிறது.


n

தொடர்ந்த எதார்த்தமாகவும் வசப்படாத கனவாகவும் கரைந்து கரைந்து காதலை எழுதியவர்
கலாப்ரியா. நவீனக் கவிதையில் காதலுக்குப் புதிய வகைமாதிரிகளைச் சிருஷ்டித்தவரும்
அவர்தான். காதல் கவிதைகள் எழுதுவதிலிருந்த நடுத்தர வர்க்க சங்கோஜத்தை உதறினார்.
காதலியின் முகத் திரையை விலக்கி அடையாளத்துடன் வெளிப்படுத்தினார். நவீனக் கவிதையில்
'சசி' என்ற காதல் பாத்திரத்தை நடமாடவிட்டார். ஒரே சமயம் வரமருளும் தேவதையாகவும்
அலைக்கழிக்கும் மோகினியாகவும் அவதாரம் கொண்டிருக்கிறாள் சசி.
காதல் பாத்திரத்தைப் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தியவர் நகுலன் என்பது என் யூகம்.
நகுலனின் சுசீலாதான் கலாப்ரியாவின் சசிக்கு முன்னுதாரணம் என்பதும் என் எண்ணம். இந்த
முன்னுதாரணங்கள் தந்த துணிவில் பிற்காலக் கவிஞர்கள் தாங்கள் காதலிக்கும் பெண்களின்
பெயர்களை வெளிப்படையாகச் சொல்லத் தயாரானார்கள். சங்கர ராமசுப்ர மணியனின் கவிதைகளில்
அங்கங்கே தட்டுப்படும் வாணி என்ற பெயர் மனப் பெண்ணின் அடையாளம் என்று
தோன்றுவதுண்டு. அவ்வளவு தைரியமில்லாதவர்கள் கவிதையின் அடியில் '....க்கு' என்று
போடுமளவுக்காவது துணிந்திருந்தார்கள். சில உடல்மொழியின் சாயல்களாலும் தோற்றச்
சித்தரிப்பிலும் வெளிப்படுத்தினார்கள். யூமா வாசுகியின் கவிதையொன்றில் பர்தா அணிந்த
காதலி தென்படுவதை நினைவுகூரலாம்.
கலாப்ரியாவின் காதல் ஒரு விதத்தில் நாசூக்கானது. அவரது கவிதையுலகில் புகைரூபமாக
நடமாடும் சசியைப் பற்றிய சுட்டிக்காட்டல்களில் காதலனின் தாப மனம்தான் பெரும்பாலும்
வெளிப்படுகிறது. சசி இந்தக் காதல் சமர்ப்பணங்களைப் பற்றி என்ன கருதியிருப்பார்
என்பது கவிஞர் மட்டும் அறிந்த ரகசியம். கலாப்ரியா மட்டுமல்ல, தொண்ணூறுகள்வரை
கவிதையில் இயங்கிய எல்லாருக்குமான பொது விதி இது. எல்லாருடைய காதல் பெண்களும்
தேவதைகளாகவும் மோகினிகளாகவும் மட்டுமே காட்சியளித்தனர். கவிதையில் சகஜமான பெண்கள்
உலாவத் தொடங்கியது புதிய தலைமுறைக் கவிஞர்கள் வருகைக்குப் பின்னரே. இவர்களிடம்
பெண்களின் தேவதைத்தனம் செல்லுபடியாகவில்லை. அலைக் கழிக்கிற மோகினிகளும் சாதாரணப்
பெண்களும்தாம் இவர்களை வசீகரித்தவர்கள். சங்கோஜமற்றுக் காதலையும் பூடகமாகக்
காமத்தையும் முன் தலைமுறை சொன்னது. புதியவர்களிடம் இந்த இடக்கரடக்கல் அவசியமற்றுப்
போயிற்று. 'அன்றைக்கு உன் / முலைக்கணவாய் இடைப்பிளவு தொடையாடம்பரம் எங்கும் / என்
மத்தகச் சிதறல்கள்' என்றோ 'தொண்டையடைத்த பறவையின் விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது
/ உன் விரியோனியின் சமிக்ஞை' என்றோ காதலைத் தீட்டிக் காட்டுவதில் யூமா வாசுகிக்கோ
'காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம் / மாறி மாறி மன்னிப்புக்கோரினேன் /பல்தடங்கள்
சிரித்தன' என்று எழுத பிரான்சிஸ் கிருபாவுக்கோ மனத் தடையில்லை.
இந்தத் தடையின்மையை வெகுவாகக் கொண்டாடிய கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பாகக் காதல்
கவிதைகளில் அல்லது ஆண்-பெண் விழைவு சார்ந்த கவிதைகளில் விக்ரமாதித்யன் ஆனந்தக்
கூத்தனாகிவிடுகிறார். காதலும் காமமும் சமயங்களில் ஆன்மீகச் சின்னங்களுமாகப்
பெண்ணைக் கொண்டாட விரும்புகிறார். ஆனால் அவரது இயல்பான மனநிலை 'சின்ன உருவமானால்
கையில் அள்ளிக்கொள், பெரிய வடிவானால் காலில் விழு' என்ற நோக்கில் திரண்டிருப்பதால்
அங்கே பெண்கள் வெறும் சுகவர்த்தினிகளாகக் குறைவுபடுத்தப்பட்டு விடுகிறார்கள் என்ற
சந்தேகம் எனக்கு இருக்கிறது.
[center]
[size=9]n

பெண்ணுறவை இயற்கைமீதான மோகமாகக் காட்டிய கவிஞர்களாகச் சிலரை வகைப்படுத்தலாம்.
தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், 'தனிமொழி' என்ற தலைப்பில் வெளியான கவிதைகளுக்காக
பிரம்மராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியவர்களை இந்த வரிசையில் அமர்த்த வேண்டும்
(வரிசையில் துண்டைப் போட்டுவைக்க ஆசைதான். அவையடக


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 9:54 am

இந்த பதிவு தெளிவாக இல்லையே..எழுத்துக்கள் எல்லாம் மிக சிறியதாகவும், சில வார்த்தைகள் முழுமை பெறாமலும் இருக்கிறது முதல் காதல்  838572



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக