புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
4 Posts - 3%
Kavithas
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
1 Post - 1%
bala_t
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
1 Post - 1%
prajai
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
292 Posts - 42%
heezulia
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
6 Posts - 1%
prajai
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
4 Posts - 1%
manikavi
சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_m10சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 28, 2011 6:23 pm


சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல்
கட்டுரை!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ)

பணம், பதவி, புகழ்
இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால்
பணம்
, புகழ், பதவி இருந்தால் மட்டும்
வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது
, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே
சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு
வியாபாரிகளின்
கதையினை


இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என
நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார்.
ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி
மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள்.
ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா
அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப் பட்டார் அவர் கடைக்கு. வழியில்
அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை
பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று
விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப்
பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார். இரண்டாவது வியாபாரி அவரைப்
பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று
சொல்லி விட்டுச் சென்றார். மறுபடியும் பட்டு வியாபாரி தொப்பியினை எடுத்துப்
பார்த்தார். அவர் சொன்னது சரியில்லை என்று தெரிந்து தன் நடையினைக் கட்டினார்.
மூன்றாம் வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை அழகாக உள்ளது ஆனால் மஞ்சள்
தொப்பிதான் சரியில்லை என்றார். பட்டு வியாபாரி குழம்பி கடைப் பக்கத்தில் சென்றதும்
நான்காம் வியாபாரி அவரை பார்த்து உங்கள் வெள்ளை டிரஸ் மிகவும்
நேர்த்தியாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் பொருத்தமாக இல்லை என்று

சொன்னாரேப் பார்க்கலாம் தன்
தொப்பியினை கீழே தூக்கி எரிந்து விட்டுக் கடைக்குச் சென்று குழம்பிக் கொண்டு
இருந்ததால் அன்று வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லை. அதன் பின்பும் வீட்டுக்கு
போன பின்பும் சரியாக சாப்பிடாமல் தன் மனதினை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார். கடைக்கும் சரியாக போகவில்லை. அவர் வியாபாரம் நொடித்து
மற்ற வியாபாரிகளின் வியாபாரம் மிக விமரிசையாக நடந்ததால் அவர்களுக்கு எல்லாம்
சந்தோஷம். ஆகவே மனிதன் எப்போதும் சுய சிந்தனையோடும் தன் நிலை தடு மாறாமலும்
இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதப் பட்டுள்ளது இந்த
கட்டுரை.


எதிலும் தனித்தன்மையுடன்
விளங்குங்கள்
:



ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய
பேச்சில் சுவை இருக்காது, மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை
இருக்கும். ஒரு கருத்தருங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும்
விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம்.
ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாது அடுத்தவர் கருத்து ஏற்கும்படி இருக்கும். ஒரு
பள்ளிகூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை
மாணவர்கள் மொய்ப்பார்கள், இன்னொருவரைப்
பார்த்தால் மாணவர் ஒதிங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை
நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்ப்பதுபோல் ஓடி ஓளிவார்கள்.
இன்னொரு தந்தையினைப் பார்த்தல் பாசத்துடன் குழந்தைகள் வந்து
கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும்
இருங்கள். "செல்வத்தினை பெருவதிர்க்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்".


அன்புடன் பழகுங்கள்:



நீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும் பொது
உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். அதே பாசத்தினை நீங்கள் உங்கள்
குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிறந்த குடும்பத் தலைவனாக கருதப் படுவீர்கள்.


நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு
தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும்
நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது. மின்சார தட்டுப்பாட்டில் கரண்ட்
போய் விட்டால் யாரையும் திட்டுவதினை தவிர்த்து மண்ணெண்ணெய் விளக்கினை பொறுத்த
தயாராக விட வேண்டும்.


ஏழைகளிடம் அன்புக் காட்டுங்கள்:



"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்
என்றார் சான்றோர்" ஆனால் சிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர்
ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொனனால் சிரிக்க மாட்டார்கள். அனால் ஒரு
பணக்காரர் ஒரு செய்தியினைச் சொனனால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள்
சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன்
உற்றார் உறவினர் செய்தால் அமுக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால்
உங்கள் தரம் உயரும் அல்லவா
?


வீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்:

ஒரு கிராமப் பழமொழியுண்டு. "ஒரு பெண் ஆட்டினைப்
புறக்கணித்தால் ஒரு ஆண் ஆட்டின் துணையினை அது நாடும் என்று". இன்று பெண்கள் வழி
தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும்
கிடைப்பதில்லை என்றக் குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனவியினைப்
புறக்கணித்தால் மனைவி தடம் புரள வைப்புக் கொடுதவர்கலாவோமல்லவா
? ஆண்கள் கட்டு மஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான்.
ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன்
கணவனுடைய வறுமை
, அழகின்மை,
ஓய்வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட
நஷ்ட காலங்களில் உறு துணையாக இருக்கும்போது
, ஆண்கள் ஏன் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப்
படுத்துவதும்
, புறக்கணிப்பதும்
எந்த வகையில் நியாயம்
? பெண்கள்
ஆண்களுக்கு ஆடையாகவும்
, ஆண்கள்
பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா
?


குழந்தைகளின் செயல்களுக்கு உங்களின் முன்
மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்
:




உங்களது குழந்தை வீட்டில் சுட்டி
செய்யும்போது
, பள்ளியில்
சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள்
பள்ளியில் படிக்கும் பொது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த
அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தை களிமண் போன்றவர்கள். ஒரு
குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது
போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக
நினைக்கின்றீர்களோ அதேபோன்று தான் அவன் உருவாவான்.


மக்கள் மனதினைக் கவரும் விதம்:



மனிதர்கள் ஒரு விதம் ஆனால் மக்கள் மனதினை கவருவது
பல விதம்'. ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதிற்கு பல
விதத்தில் விளம்பரம் செய்வார். ஓர் டி.வீ. சானெல் பிரதானமாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை
புகுத்துவார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால்
மிகையாகாது. நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை
கொடுக்கிறீர்கள்.அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு
கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார்,
மூன்றார்மவர் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே கை கொடுப்பார். ஆனால்
நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து
உங்களுக்கு கைகொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக்
கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார். உங்களுக்கு அறிமுகமில்லாத
நபரினைதான் பிடிக்குமல்லாவா. ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள்
செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ
முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செலவந்தர் தனது
செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக்
கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக
நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா?


பொருத்தமான விஷயங்கள் தெரிந்து
பேசுங்கள்
:




பேசும் பொது சரியான தலைப்பினை எடுத்துப்
பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயம் அறிந்து
பேசுங்கள்.ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும்
தகவல்களை சகோதரிகளிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை
வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால்
அவர்களை சந்தோசப் படுத்தலாம். ஒரு விதவைத் தாய்க்கு நன்கு மகன்கள். நால்வரும்
திருமணமாகி தனித்தனியே வசிக்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் அவர்கள் வந்து தாயைப்
பார்த்துச் செல்வது வழக்கம். மூன்று பேர் தாயைப் பார்க்க வந்த கொஞ்ச
நேரத்தில் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு மகன் மட்டும் தாயிடம் வெகு நேரம்
பேசிவிட்டுச் செல்வாராம். அதனைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் அவரை
அழைத்து
'ஏன் தம்பி உங்கள் உடன்
பிறப்புகளில் நீங்கள் மட்டும் வெகு நேரம் உங்கள் தாயிடம் பேசிக் கொடு உள்ளீர்களே
அப்படி என்ன பேசுவீர்கள்
' என்றுக்
கேட்டார். அதற்கு மகன்
'என் தாய்
எங்கள் அப்பா
வினை இழந்து தனியே இருக்கிறார். அவர் பேச்சைக்
கேட்பதிற்கு யாருமில்லை. ஒவ்வொரு தடவை நான் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுப்
புது உலக
, கிரமாத்தின் மற்றும்
குடும்பத்தின் பழங்காலத் தகவல்களைச் சோவார். அதனை நான் காது கொடுத்துக் கேட்டால்
அவர் மனது சந்தோசப் படும் அவரும் தந்தையும் எப்படியெல்லாம் சோகங்கள்
, துக்கங்கள், தழும்புகளினைத் தாங்கிக் கொண்டு எங்களை
வளர்த்தார்கள் என்ற விபரத்தினை அறிந்து வியப்படைந்தேன். ஆகவேதான் நாம் அதிக நேரம்
அவர் பேச்சினைக் கேட்டு விட்டுச் செல்கிறேன்
' என்றார். ஆகவே சிலர் நம்மை
மதித்து பேசும் பொது அவரைப் புறக்கணிக்காதீர்கள்.


கலந்துரையாடலில் அன்பாக
இருங்கள்
:




உங்களில் பலர் நிறுவன மேலாளராக
இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம்
இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அன்பாக இருங்கள். இதற்கு உதாரணமாக ஒரு
சம்பவத்தினை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு தொழிச்சாலையில் பல்வேறு இடங்களில் வேலைப்
பார்க்கும் தொழிலார்களுக்கான ஒரு கருத்தரங்கிற்கு நடத்தினார்கள். அதில் பேசுவதிற்காக
மேலாளர் வருமுன் கருத்தரங்கில் உள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நலம்
விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இரச்ச்சலாக இருந்தது. மேலாளர் உள்ளே
நுழைந்ததும் ஒருவரைப் பார்த்து ஏன் இறைந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியே
போங்கள் என்று அனுப்பி விட்டார். அதன் பின்பு ஒவ்வொருவராக அங்கு வந்தவர்களிடம்
தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். தனது பேச்சினைத் துவங்குமுன்
அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஒவ்வொரு தாளிணைக் கொடுத்து தனது பேச்சின் தன்மையினை
எவ்வாறு இருந்தது என எழுதுங்கள் என்றார். ஆனால் அந்த தாள்களில் உங்கள் பெயர்
இருக்கக் கூடாது என்றார். அதன் பின்பு தனது பேச்சினைத் துவங்கி முடித்தார். தான்
கொடுத்த தாள்களில் கருத்துக்களை எழுதித் தாங்கள் என்றார். அதன் பின்பு
அங்கிருந்தவர்களிடம் நீங்கள் இந்தக் கருத்தரங்கிற்கு பல இடங்களில் இருந்து
குடும்பத்தினை விட்டு வந்துள்ளீர்கள். நான் வெளியே அனுப்பிய நபர் மட்டும் ஏன்
வெளியே நிற்க வேண்டும் ஆகவே அவரை உள்ளே அழைக்கலாம் என்று அவரை அழைத்து அறிவுரை
சொல்லி உள்ளே உட்கார வைத்து விட்டு தனது பேச்சினை மேலும் தொடர்ந்து முடித்தார்.
இப்போது வேறொரு தாள்களை அவரிகளிடம் கொடுத்து இப்போது தான் ஆற்றிய உரையின் மதிப்பினை
எழுதித் தாருங்கள் என்றார். எல்லாத் தொழிலாளியும் பெயர் போடாது எழுதித் தந்தார்கள்.
அப்போது மேலாளர் தான் ஒரு தொழிலாளரை வெளியே அனுப்பி விட்டு கருத்துக்
கேட்ட்தினையும் அதன் பின்பு வெளியே நின்ற தொழிலாளியினை உள்ளே அழைத்து
தனது உரைக்க கருத்து வித்தியாசத்தினை தொழிலாளர்களுக்கு படித்துக் காண்பித்தார்.
முதலில் எழுதிய கருத்துக்களில் தொழிலாளர்கள் பெரும்பாலும் மேலாளரை கொஞ்சம் கூட
இரக்கமில்லாதவர் என்றும் ஆனால் மறு கருத்துக்களில் அவர் மனிதாபமானவர் என்றும் எழுதி
இருந்தது. அப்போது மேலாளர் சொன்னார் இதேபோன்று தான் நீங்கள் உங்கள் சக
தொழிலாளர்களிடமும், வீட்டிலும் மற்றும்
வாடிக்கையாளர்களிடமும் அன்பாக பழக வேண்டும் என அறிஉரை சொன்னார்.


மனிதன் பலவிதம், அவர் ஒவ்வொருவரும் ஒரு விதம்:



பூமியில் இருக்கும் தாதுப் பொருள்கள் பல விதமாக இருப்பதுபோல
மனிதர்களும் பல விதமாக இருப்பார். அவர்களுடைய குணாதிசயங்களை அறிந்து அவர்களுடன்
நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனிடம் தீய செயல்கள் குறைவாக இருந்து
நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால் நல்ல செயலுக்காக அவருடன் பழகுங்கள். மறைந்த
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பக்கரி முகம்மது கோவையில் நீதிபதியாக
இருந்தபோது நான் டி.எஸ்.பீ யாக இருந்தேன். அவர் ஒரு தீர்ப்பு எழுதுமுன் இரண்டு
இரக்காது தொழுது விட்டு தனது தீர்ப்பு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எழுதுவாகச்
சொல்லுவார். அதுபோன்றே உங்களிடம் ஒரு பஞ்சாயத் சம்பந்தமாக ஒரு வழக்கு வந்தால்
பசியுடனோ அல்லது தாகத்துடனோ அல்லது கோபத்துடன் இருக்கும்போதோ அல்லது இயற்கை உபாதை
ஏற்படும்போதோ தீர்ப்புக் கூறாதீர்கள். மன அமைதியுடன் இருக்கும்போதே
எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டும்.






தீயை தீயால் அணைக்க
முற்படாதீர்கள்
:




தீயினை தீயால் அணைக்க முற்ப்பட்டால் அது தீயின்
வேகத்தினை அதிகரிக்குமல்லவா
?


இதற்கு உதாரணமாக இரண்டு ஆசிரியர்களின்
வழிமுறைகளின் வேறுபாடுகளைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒரு ஆசிரியர்
தனது வகுப்பில் நுழைந்து மாணவர்களைப் பார்த்து ஆளுக்கு ஒரு பேப்பரை எடுத்துக்
கொள்ளுங்கள் நான் ஒரு பாடம் சம்பந்தமாக உங்களிடம் டெஸ்ட் வைக்கப் போகிறேன் என்றார்.
மற்ற மாணவர்கள் பேப்பரை எடுத்து எழுத தயாராக இருக்கும்போது ஒரு முரட்டு மாணவன்
மட்டும் திடீர் என்று சொன்னால் எப்படி எழுதுவது என்றான். உடனே அந்த
ஆசிரியர் அந்த மாணவனை 'மடையா, முட்டாள், நீ மாடு
மேய்க்கத தான் லாயக்கு என்று திட்டினார். வெட்கப்பட்ட அந்த மாணவனும் ஆசிரியரை
பதிலுக்குத் திட்ட ஆரம்பித்தான். புகார் பள்ளி நிர்வாகத்திற்குப் பொய் அந்த
மாணவனுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. ஆனால் அந்த ஆசிரியர் ஒரு மாணவனிடம் திட்டு
வாங்கிய செய்தி காட்டுத் தீபோல் மாணவர் மற்றும் ஆசிரியர்களிடையே பரவி அந்த ஆசிரியரை
பள்ளியில் எல்லோரும் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தால் வெட்கப் பட்ட அந்த ஆசிரியர்
பள்ளியினை விட்டு வேறு பள்ளிக்குச் சென்று விட்டார். அதே வேலைக்கு
இன்னொரு ஆசிரியார் வந்தார். அவரும் ஒரு திடீர் டெஸ்ட் வைத்தார். முரட்டு மாணவனும்
முன்பு நடந்ததுபோல் மறுத்தான். ஆனால் ஆசிரியர் உன்னால் எழுத முடியா விட்டால்
வகுப்பினை விட்டுப் பொய் விடலாம். விருப்பமுள்ள மாணர்கள் எழுதட்டும் என்றார். எல்லா
மாணவர்களும் பேப்பரினை எடுத்து எழுதும் பொது அந்த மாணவனும் வேறு வழியில்லாமல் எழுத
ஆரம்பித்தான். ஆகவே ஒரு முரம்பாடான முரண்பட்ட நடத்தையினை தவிர்ப்பது
நல்லதல்லவா?

ஒரு கொலையாளி சிறு கோபத்திற்குக் கூட தன் சொந்த
பந்தங்களை நண்பர்களை கொலை செய்வார்கள். ஒரு மனிதன் பலசாலி என்பது ஒருவரை தரையில்
வீழ்த்துவதில்லை. மாறாக ஒருவடைரு கோபத்தினை அடக்குவதுதான்


நெஞ்சம் திறக்கும் சாவிகள்:



ஒவ்வொரு வீட்டின் கதவிற்கும் ஒரு சாவி உள்ளது. அதேபோன்று மனிதர்களின் மனதினைத்
திறக்க அவர்களின் குணாதிசயங்கள் அறிந்தும், அவர்களுடைய
பிரச்சனைகள் தீர்க்க வழி செய்வதின் மூலம் அவர்கள் அன்பினைப் பெற முடியும்.
உதாரனத்திற்க்கு ஒரு மகனுக்கும், தகப்பனுக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டு மகனை தந்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டார். அதனை அறிந்த
அவருடைய நண்பர் தந்தையிடம் சென்று அவர் மகனை வளர்க்க எவ்வாறெல்லாம் பாடுபட்டார்
என்பதினையும், அவர் மகன் தற்போது படும் துன்பத்தினையும் அவர்
மனதினைத் தொடும் அளவிற்கு எடுத்துச் சொன்னதின் மூலம் அவர் மனம் இலக
வைத்து விட்டார். உடனே அவரிடமே சொல்லி மகனை அழைத்து வரச் சொல்லிவிட்டார்.
.


மனநிலை அறிந்து செயலாற்றுங்கள்:



ஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம்,
துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு
மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே
அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோசத்தில்
இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின்
உடல்களிடம் பேசக் கூடாது.




மற்றவர்களின் நலனில் அக்கறைக்
காட்டுங்கள்
:




ஒரு தந்தைக்கு நான்கு மகன்கள். அவர் வேலைக்குச்
சென்று விட்டு களைப்புடன் வீட்டுக்குள் நுழைகிறார். முதல் மகன் டி.வி. பார்த்துக்
கொண்டு இருந்தான். இரண்டாவது மகன் ஹோம் ஓர்க்கு செய்து கொண்டு இருந்தான்.
மூன்றாமவன் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
கடைப் பையன் தந்தையுனைப் பார்த்தும் அவரிடம் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
இப்போது செல்லுங்கள் தந்தை யார் மீது பிரியமாக இருப்பாரென்று
?
நீங்கள் அன்பினை யாரிடம்
காட்டுகிண்றீர்களோ அதேபோன்று நாம் அவர்களிடமிருந்து அன்பினைத் திரும்பப்
பெரமுடுமல்லவா
?




உங்களுடைய தகப்பனார் மருத்துவ மனையில்
சிகிச்சைக்காக இருக்கிறார்.அவரை நீங்கள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டு
இருக்கின்றீர்கள். உங்கள் நண்பர் அதனை அறிந்து உங்களுக்குப் போன் செய்து
'நான் உனக்கு
அல்லது உன் குடும்பத்திற்கு எதாவது உதவி செய்யவா
? என்று கேட்கின்றார். தன் நண்பன் கஷ்ட காலத்தில்
உதவ முன் வந்ததினைக் கண்டு நீங்கள் உண்மையிலே சந்தோசப் படுவீர்கல்லவா
? இன்னொரு நண்பர் உங்களுக்கு போன் செய்து வார
விடுமுறையில் சந்தோசமாக கழிக்க வெளியே செல்லலாமா
? எனக் கேட்கின்றார். நீங்கள் உங்கள் தந்தையின்
நிலைமையினை சொல்லியும் கூட விடாது உங்களை வற்புறுத்துகிறார் இப்போது சொல்லுங்கள்
யார் உங்களின் உண்மையான நண்பர் என்று! ஆகவே நீங்கள் மற்றவர்களின் நலனில் அக்கறை
செலுத்துவதின் மூலம் அவர்களின் அன்பினை பெறமுடியும்.




ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்திருப்பார்கள்
ஆனால் அவர்களின் மருத்துவ மனைகளில் கூட்டம் அலைமோதும். அனால் சில மேல்படிப்பு
படித்த மருத்துவ மனைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். காரணம் டாக்டர்கள்
வைத்தியம் செய்வதில் பாதி குணம் அன்பாக பேசுவதில் பாதி குணம் நோயாளிகள்
அடைவரில்லையா
?










பெயர்களை ஞாபகபடுத்திக்
கொள்ளுங்கள்
:




நீங்கள் பலரை ரயில், பஸ், விமானங்கள், நடைப்
பயிற்சியின்போது
, கூட்டங்களில்
பார்த்து பேசி விட்டு அவரி பெயரினை கேட்டுத் தெரிந்து ஞாபகப் படுத்திக்
கொள்ளுங்கள். அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போதோ அல்லது தொலை பேசியில் பேசும்போதோ
அவர் பெயரினைச் சொல்லி அழைத்தால் உங்களுடன் அவர் நெருக்கத்தினை ஏற்படுத்திக்
கொள்வார்.அதற்காக தேவை இல்லாதவர் பெயரினை ஞாபகப்படுத்த வேண்டிய
அவசியமில்லை.


விழிப்போடு கவனிப்பவராகவும்,
மற்றவர்களை பாராட்டுவராகவும்
இருங்கள்:




உங்களை மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என
எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று நீங்களும் அடுத்தவர்களை நடத்த வேண்டும் என
எதிர்பார்ப்பது இயற்கைதானே! உங்களை ஒருவர் சாப்பாட்டுக்காக அழைக்கின்றார். அந்த
சாப்பாட்டில் உள்ள குறைகளை பொறுத்துக் கொண்டு நிறைவினை பாராட்டினால் உங்களுக்காக
கால் கடுக்க அடுக்களையில் நின்று சமைத்த அவரது தாய்க்கோ
, அல்லது மனைவிக்கோ அல்லது சகோதரிக்கோ
மனம் சந்தோசப்படுத்துமல்லவா
? சில துர்மனங்கொண்ட பூக்களில் கூட
நீங்கள் தேந்துளிகளை சேகரிக்கும் தேனீக்களாக இருக்க ஆசைப் படுங்கள். நீங்கள்
புண்களில் மொய்க்கும் ஈக்களாக இருக்காதீர்கள்.


ஒரு சொர்ப்பழிவிற்க்குச் செல்லுகிறீர்கள், பேச்சாளர் தான் தயார் செய்து வந்த பேச்சினை ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர்
பேச்சில் நீங்கள் விரும்பினால் அவரை நேரில் பாராட்டுங்கள். அவர் ஒரு மணி நேரம்
தயார் செய்த பேச்சின் பலனை அடைவார்.
அதே நேரத்தில் அளவோடு பாராட்டுங்கள். நீங்கள்
ஒரு நோயாளியினைப் பார்க்க மருத்துவமனை செல்லுகிறீர்கள்
, அவருக்கு மகிழ்ச்சியாக சில வார்த்தைகளை
செல்லுவதினை விட்டு விட்டு நீங்கள் மிகவும் மெலிந்து உள்ளீர்கள்
, உங்கள் முகம் வெளிரியிருக்கிறது என்று சொல்லி
அவரை மேலும் கலவரப் படுத்தார்தீர்கள்


குடும்பத்தில் சர்வாதிகாரியாக
மாறாதீர்கள்:




ஒரு பள்ளி செல்லும் மாணவன் டி.வி. வீட்டில்
பார்த்துக் கொண்டிருப்பான். அதனை மூன்று தகப்பனார்கள் எவ்வாறு அணுகுகிறார்கள்
என்றுப் பாப்போம். ஒரு தந்தை அதிகாரத்துடன்
, 'டி.வியினை ஆப் செய்து விட்டு படத்தினை
திருப்பிப் பார் என்று அதிகாரத் தோரணையில் சொல்லுவார்.




இரண்டாவது தந்தை, 'நீ பாடத்தினை திருப்பிப்
பார்க்கவிட்டால் உன்னை அடிப்பதோடு
, உன் பாக்கெட் செலவிற்கு ஒரு காசு தரமாட்டேன் என
மிரட்டுகிறார்.




மூன்றாமவர் சொல்வார், 'பாடத்தினை திருப்பிப் பார்ப்பது உனக்கு உசிதமாக
தெரியவில்லையா
?' என கேள்வி
எழுப்புகிறார். இந்த மூவரில் மூன்றாமவரின் அணுகுமுறை பலனைக் கொடுக்கும். நீங்கள்
தேன்கூட்டைக் கலைக்காமல் தேனைப் பருக முயலுங்கள்




அனாவசிய சம்பவங்களில் உங்கள் மூக்கை
நுழைக்காதீர்கள் ஒரு சபையில்
நீங்கள்
இருக்கின்றீர்கள். உங்கள் நண்பருக்கு ஒரு போன் வருகிறது. அவர் பேசி முடித்ததும் அது
யார் போன்
, என்ன விஷயம் என்று
கேள்விக்குமேல் கேள்விக் கேட்டுத் துளைக்காதிஈர்கள். ஒரு நபர் அடுத்தவருடைய
பொருள்களை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகிப்பாது நல்ல பண்பாடு இல்லை
?



குச்சியினை நடுவில்
பிடியுங்கள்




ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டும்போது அவரின்
நிறைகளைப் புகழ்ந்து குறைக
ளைச் சொன்னால் அவர்
குறைகளைத் திருத்திக் கொள்வார். ஒரு பெட்டிக் கடைக்கு நீங்கள் செல்கிறீர்கள்.
கடைக்கு முன் வாழைப் பழத் தோல்
, சிகரெட் அட்டை, பாதி
எறிந்த சிகரெட் போன்றவை அசுத்தமாக கிடந்தன. அந்தப் பெட்டிக்கடைக்காரரிடம் உங்கள்
கடையில் மிகவும் பிசியாக வியாபாரம் நடக்கிறது. ஆனால் மற்ற கடைகளெல்லாம்
அப்படியில்லை என்று சொல்லுங்கள் அவர் மிகவும் சந்தோசப் படுவார். இப்போது அவரிடம்
சொல்லுங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் கழிவுப் பொருளைப் போடுவதிற்கு ஒரு அட்டைப்
பேட்டியினை வைத்தால் நலமாக இருக்கும் என்று சொல்லுங்கள். உடனே உங்கள் பேச்சுக்கு
மதிப்பு அளித்து ஒரு அட்டைப் பெட்டி வைத்து விடுவார். ஆகவே குறைகளைச் சொல்ல
நேர்ந்தால் நிறைகளை முதலில் சொல்லுங்கள். அவர் திருத்திக் கொள்வார்


தவறினை திருத்த முயலுங்கள்:



மனிதனின் உருவப் படைப்பில் பல வேறுபாடுகளைப்
பார்க்கலாம். அதேபோன்று தான் அவர்களின் கருத்தும் வேறுபடும். முடிந்தவரை
அடுத்தவரின் தவறினைத் திருத்த முயலுங்கள். அவ்வாறு முடியாவிட்டால் அவரை உங்களின்
எதிரியாகக் கருத வேண்டாம். ஆனால் அவரின் தவறை திருத்தும் நம்பிக்கையிலிருந்து
ன்று விடாதீர்கள்.


உங்களை மட்டமாக நினைத்தவர்களிடமும்
கருணைக் காட்டுங்கள்
:




மென்மையான அணுகுமுறை உங்களுக்குப் பெருமை சேர்க்கும்.
கடுமையான அணுகுமுறை உங்கள் புகழைக் கெடுக்கும்.


சிலர் பலனை அனுபவிக்க மட்டும் வருவார்கள்.
ஆனால் உடல்
,பொருள் பங்களிப்பில்
அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அதற்காகக அவர்களை கடிந்து கொண்டால் நீங்கள் அவர்களுக்கு
விரோதியாக மாறுவீர்கள்.


ஒரு காட்டில் இரு வழிப் போக்கர்கள் ஒரு வார
பயணம் கொண்டார்கள். முதல் வழிப் போக்கர் தனது உடமைகளுடன் தனக்கு வேண்டிய உணவு
தயாரிக்கத் தேவையான
பொருக்களையும் சுமந்து
சென்றார். அனால் இரண்டாம் வழிபோக்கர் உணவுப் பொருள் எதனையும் எடுத்துச்
செல்லவில்லை. இரண்டு நாட்கள் நடந்த களைப்பில். இருவரும் ஒரு மர
நிழலில் தங்கினார்கள். முதலாமவர் தான் கொண்டு வந்த உணவுப் பொருளை வெளியே எடுத்து
வைத்தார். இரண்டாமவரிடம் நீங்கள் இதனை சூடு செய்ய சில காய்ந்த
விறகுகளை எடுத்து வரச் சொன்னார். அதற்கு இரண்டாம் வழிப் போக்கர் தான்
மிகவும் களைப்பாக இருப்பதாகவும்
, நீங்கள் போய் எடுத்து வாருங்கள் என்றார். முதலாமர் சிரமம் பார்க்காது விறகு
சேகரித்து வந்து அடுப்பினை பற்ற வைத்து சமைத்து முடித்தார். அதன் பின்பு
இரண்டாமவரிடம் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்கள் குடிக்க கொஞ்சம் தண்ணீர்
எடுத்து வாருங்கள் என்றார். இரண்டாமவரோ மறுபடியும் களைப்பாக இருக்கிறது என்றார்.
சிரமம் பார்க்காது முதலாமவர் தண்ணீர் கொண்டுவர
கிளம்பி விட்டார். இந்த
சந்தர்ப்பத்தினை சாதகமாக எடுத்துக் கொண்ட இரண்டாமவர் சமைத்திருந்ததினை சாப்பிட
ஆரம்பித்து விட்டார். முதலாமவர் தண்ணீர் எடுத்து வந்ததினையும் வாங்கிக் குடித்து
தூங்கச் சென்று விட்டார். இரண்டாமவர் போன்று வேட்டிகுமேல் சொரியும் கனத்த தோளினைக்
கொண்டவர்களை அடித்தா திருத்த முடியும். ஆகவே உங்கள் மென்மையான அணுகுமுறையின் மூலமே
திருத்த முடியும்.


அடுத்தவரை குறை சொல்லாதீர்கள்:



ஒருவரின் குறைகளை திரும்ப, திரும்ப குத்திகாட்டாதீர்கள். அதுவும் பலர்
முன்னிலையில் குறை சொல்லுவது பிறருக்குப் பிடிக்காது. ஆனால் தனியாகச் சொன்னாள்
ஏற்றுக் கொள்வார்கள். ஒரு லாரி டிரைவர் தன் குடும்பத்தினைக் காப்பாற்ற இரவில் பல
நாட்கள் கண்விழித்து ஓட்டுகிறார். ஒரு நாள் அவ்வாறு ஓட்டும்போது கண் திறந்து கண்
திறப்பதிற்குள் ஒரு சைக்கிள் ஒட்டி மீதி மோதி லாரியும் விபத்துக்குள்ளானது. பாத
சாரிகள் காயம் பட்ட சைக்கிள் ஒட்டியினையும் லாரி டிரைவரையும் மருத்துவமனையில்
சேர்க்காது லாரி டிரைவரை ஏக வசனத்தில் பேசி விட்டுச் சென்றார்கள். ஒரு சிலர்தான்
உதவ முன் வந்தனர். வசை பாடுவர்கள் அந்த லாரி டிரைவர் நிலையில் இருந்து பார்த்தால்
அவரை திட்ட மாட்டீர்கள்.


குரங்கு தனக்கு ஒரு புண் வந்தால் அதனை சொரிந்து சொரிந்து
பெரிதாக்குமாம். அதேபோன்று அடுத்தவர் குறையினை ஊதி பெரிதாக்காதீர்கள்



அதேபோன்று ஒரு மனிதரைப் பற்றி தவறான செய்தி உங்கள்
கவனத்திற்கு வந்தால் அதன் நண்பகத்தன்மையினை ஆராயுங்கள். காதில் விலும் செய்தி
எல்லாம் உண்மையில்லை


காலத்திற்கு கட்டுப்
படுங்கள்
:




நீங்கள் எதிரியின் கையை முருக்க
முடியவில்லையா
, அவரின் கையைப்
பற்றி வாழ்த்து தெரிவியுங்கள்.


உங்கள் மனைவி பல நல்ல குணங்களைக் கொண்டவராக இருக்கலாம்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக