புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
57 Posts - 55%
heezulia
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
99 Posts - 58%
heezulia
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_m10கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 11:32 am

தமிழர்கள் எந்த கொள்கையைப் பின்பற்றினாலும், அதில் தொன்றுதொட்டு தீவிரமாகவே இருந்து வருகிறார்கள். நாத்திக கொள்கை என்றாலும், ஆத்திக கொள்கை என்றாலும், அதோடு ஒன்றிப்போய் விடுவார்கள். அந்த வகையில், பழங்காலம் முதல் இறை பக்தி உள்ளவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்தை, ஒரு கடவுளாக மட்டும் நினைத்து, சம்பிரதாயத்துக்காக சாமி கும்பிட்டுவிட்டு மட்டும் போய்விடுவதில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்பதை பரம்பரை பரம்பரையாக நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்குமே கோவிலும், கடவுளும்தான் சரணம் என்றே வாழ்ந்து வருகிறார்கள். அந்தக்காலத்து பெரியவர்கள் தங்கள் வருமானம் சொத்துக்கள் எது என்றாலும் சரி, அதில் ஒரு பங்கு அந்த ஊரில் உள்ள தங்களின் ஆத்மார்த்த ஆண்டவன் அல்லது அம்மனின் கோவிலுக்குத்தான் என்று எழுதி வைத்தார்கள், அப்படியே வழங்கியும் வந்தனர். அந்த வகையில்தான், பல கோவில்களுக்கு ஏராளமான நிலங்கள், கட்டிடங்கள், தங்க நகைகள் என்று சொத்துக்கள் பல பக்தர்களால் வழங்கப்பட்டன.

ஆனால் இப்போது இப்படி சொத்துக்கள் எழுதி வைக்கும் வழக்கமே நின்றுவிட்டது. அந்த உணர்வுகள் இன்னும் மங்கிப்போய்விடவில்லை. ஆனால் மூதாதையர்கள் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களை கோவில்களுக்கு எழுதிவைத்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாதது கண்டே பலர் வெதும்பிப்போய், நாம் ஏன் இந்த சொத்துக்களை எழுதிவைக்க வேண்டும்? என்று நினைக்கிறார்கள். கோவிலுக்கு என்று எழுதிவைக்கும் சொத்துக்களின் வருமானம் கோவிலுக்கு வராமல், வேறு எங்கோ போய்விடுவது கண்டு ஒரு சலிப்பான உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 38,481 திருக்கோவில்கள், திருமடங்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,462 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவரி நிலங்களும், 22,599 கட்டிடங்களும், 33,627 மனைகளும் உள்ளன. விவசாய நிலங்களை மட்டும் ஒரு லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கணக்கில் வந்த சொத்துக்கள் விவரம். பல்வேறு காரணங்களால், கணக்கிலே வராமல், யார் -யாரோ அனுபவித்து வரும் சொத்துக்களின் விவரம் முழுமையாக தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கிராமக் கோவில்கள், சிறிய கோவில்களின் சொத்துக்கள் விவரமெல்லாம் தெரியவில்லை. இந்த கோவில் சொத்துக்களின் குத்தகை பாக்கி கோடிக்கணக்கான ரூபாய் அளவு இருக்கிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதற்கெல்லாம் கொஞ்சமும் பயப்படாமல், கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் நிலங்களின் ஆவணங்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் அசல் பத்திரம், வரைபடம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் நில நிர்வாக ஆணையர், நில அளவை பதிவு மற்றும் நிலவரித்திட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர்கள், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை ஆவணக் காப்பகம் ஆகியோரிடம் இருந்து பெற்று, அதை சி.டி.யில் பதிவு செய்து இந்து சமய அற நிலையத்துறையிடம் அரசு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை இன்னும் செயல்படுத்தவில்லை என்று இப்போது தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், அரசுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோவில்களுக்கும் அது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்றாலும் சரி, அந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத சிறிய கோவில் என்றாலும் சரி, ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நில புலம், கட்டிடம், மனை, நகைகள் இருக்கிறது என்ற கணக்கை துல்லியமாக எடுத்து, வரவேண்டிய பாக்கிகளை கெடுபிடி வசூல் செய்து, நியாயமான குத்தகை மற்றும் வாடகைகளை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் கோரிக்கையாகும்.

தினதந்தி



கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 11:48 am

மிகவும் உண்மை சிவா அவர்களே...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக