புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
30 Posts - 55%
heezulia
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
21 Posts - 38%
Manimegala
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
1 Post - 2%
jairam
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
12 Posts - 4%
prajai
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
3 Posts - 1%
Rutu
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_m10முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Dec 16, 2011 12:20 am

தமிழா!!! "இதை நீ படிக்கணும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!!



முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  390046_331034436924710_100000544701775_1296592_2018407325_n



முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள்!

116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?


இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.


கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது). எனவே, பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

' சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே?' என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.
மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.

35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்!!! வடிகட்டிய அயோக்கியத்தனம்!!


முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.


முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  379128_313982455292029_100000408316538_1108607_1648808487_n

வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக - 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.


முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  393735_328630007165153_100000544701775_1289773_57038908_n_001

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்...

பொங்கி எழு தமிழா!!

பி.கு:
* எனக்கு முகநூலில் வந்த கட்டுரை இது. தகுந்த நேரத்தில் பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.

* வந்தே மாதரம் சசி அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையைக் கொண்டு செல்லும் நோக்கில், ஒரு படிவம் ஏற்படுத்தி உள்ளார். அதில் சென்று அனைவரும் பதிவு செய்யும் படி அனைவரையும் வேண்டுகிறேன்.

படிவம் இருக்கும் இடம்: முல்லைப் பெரியாறு


அவரது கட்டுரையை படிக்க: இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது.. பார்க்க:
அவிழ்மடல்




முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 12:30 am

தகவலுக்கு நன்றி ஆளுங்க ..


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 12:48 am

அனைவரும் ஒன்றாக இணைந்து போராடுவோம் நன்றி பகிர்வுக்கு ஆளுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 8:39 am

நியாயமான இவைகளை மொழி பெயா்தது இந்திய மக்கள் அனைவரும் பூியும்படி செய்ய வேண்டும்.

சாியான முடிவெடுக்க நமது அரசாங்கம் தயக்கப்பட கூடாது.

தமிழ் நாட்டிற்குள் இருக்கும் வட பகுதி தமிழ் மக்கள் நமக்கென்ன என்று வாளாவிரு க்கக் கூடாது. தென் பகுதி மக்களுக்காக குரல் கொடுக்க தயங்கவும் கூடாது.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சில நல்ல சட்டங்களை நிறைவேற்ற சா்வாதிகாரம் படைத்த தலைவா் ஒருவா் அவசியம் தேவை படும் அவசியத்தை இது போன்ற செயல்களெல்லாம் நமக்கு உணா்த்துகிறது.
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  154550முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  154550முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  154550முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  154550முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக