புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_m10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10 
32 Posts - 51%
heezulia
இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_m10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_m10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_m10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian
இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_m10இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 11:21 am

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!

நண்பர் செய்யது இப்ராஹீம் எழுதிய "இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!" என்ற கட்டுரையைப் படித்தேன்.இந்த விரிவான விளங்களை அதற்கான விமர்சன கட்டுரை வடிவில் வடிக்கிறேன்.இது உண்மையில் நல்லதொரு உணர்ச்சியைத் தூண்டும் விழிப்பறிவுணர்வு கட்டுரைதான். விழிப்பறிவுணர்வு கட்டுரைகள் எல்லாம் சரியான விழிப்பறிவுணர்வை ஊட்டுவதாக இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சியைத் தூண்டும் விதமாக இருக்க கூடாது. ஆனால், இக்கட்டுரை முழுக்க முழுக்க உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

மனித குலத்திற்கு மட்டுமே உணர்ச்சி வசப்படும் நிலை உள்ளது. இப்படி உணர்ச்சி வசப்படும் போதுதான், அதில் உள்ள தீமைகளை அல்லது தில்லுமுல்லுகளை ஆராயாமல் மனித குலம் தவறு செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதை எனது கடமையாக கருதுகிறேன்.

இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?

சாதாரண மக்கள் இரத்ததானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம் செய்ததாக செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்ததானம் செய்தேன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?

பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது.

மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே! இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்? இதற்கு செய்யது இப்ராஹீம் போன்றோர்கள் எதற்காக துணை நிற்கிறார்கள்?

கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமான சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?

சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்ததானம் செய்வதைக் கடமையாக கொண்டுள்ளனர். அத்தோடு செய்யது இப்ராஹீம் போன்ற தன்னார்வலர்கள் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என கட்டாயமாக இரத்ததானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவமனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.
ஒருவேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலைதான். இரத்த கொடையாளரிடமே இரத்தகொடையளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

அப்படியானால், "யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளிகள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?"

இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?

இரத்ததான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாளருக்கும், இன்னாருடைய இரத்தம்தான் உங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத்துறையின் கடமையல்லவா? இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்து கொள்வது எந்த வகையில் நியாயமற்றது?

ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப்போவது இல்லை. ஏன் தெரியுமா?

நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்? ஒருவேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாற்று!

நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?

ஏழை எளிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை, கோடி கோடியாக கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொரு உணவை உண்ணுவிடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இரத்ததானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷம்தானே!? இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?

இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை.

அது சரி, புது இரத்தம் சுரந்துதான் புத்துணர்ச்சி தருகிறது என்றால், இரத்ததானம் செய்பவர்கள் எல்லாம் புத்துணர்ச்சி இல்லாதவர்களா? அவர்களின் இரத்தம் அசுத்தமானதா? அசுத்தமான இரத்தத்தை எதற்கு தானமாக எடுத்து ஆபத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்? எப்படி காப்பாற்ற முடியும்?

இதனால், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் சரியல்ல. 400 மில்லி இரத்த இழப்பால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அதே அளவிற்கு இரத்தம் சிந்தும்போது ஏன் சுய நினைவை இழந்து மயக்கமடைகிறார்கள்?

நாம் கொடுக்கும் 400 மில்லி இரத்தத்தால் நம் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அல்லாதோருக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் இரத்தத்தை அந்நோயாளியிடமே எடுத்துக் கொள்ளலாமே!

எனவே, 400 மில்லி இரத்தம் நம் உடலிலிருந்து இழப்பது நிச்சயமாக நம் உடலுக்குக் கெடுதியானதே. எப்படி?

இரத்தம் கொடுக்கும் ஒரு சிலருக்கு உடனடியாக மயக்கம் வரும் என்பதை மருத்துவத்துறையே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், மயக்கம் உடலுக்கு மிகவும் நல்லது என்று எந்த மருத்துவமும் சொல்வதில்லையே!

உண்மை இப்படி வெட்ட வெளிச்சமாக இருக்கும் போது, மயக்கமடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட தான இரத்தத்தை அவருக்கே திரும்ப செலுத்தி விடுவதுதானே தானத்தின் நியாயம். ஆனால், அப்படி ஒருபோதும் செய்வதில்லையே!

மயக்கம் ஏற்பட்டால் உடனே காலைத்தூக்கி பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இரத்ததானம் செய்யும் இடத்தில் மயக்கம் வந்தால் காலைத்தூக்கிப்பிடித்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்காகத்தான் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே 200 மில்லி குளிர்ச்சியான செயற்கை பானம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை உண்ண வைத்து படுக்க வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?

தானம் செய்தவரை டாஸ்மார்க் தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறான் பார் என்றல்லவா போவோர் வருவோர் நினைப்பார்கள். திட்டி தீர்ப்பார்கள்.

கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மரத்துப்போய் குத்தும், குடையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் பல முறை அனுபவபூர்வமாகவே உணர்ந்து இருக்கிறோம் அல்லவா? இரத்த ஓட்டத்தை சரி செய்து மரத்துப் போனதை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவர அத்தருணத்தில் வலியால் என்ன பாடுபடுகிறோம். அம்முயற்சி துவங்கிய பின்னர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறதுதானே!?

கை, கால் மரப்புக்கே இப்படிப்பட்ட விளைவு என்றால், மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஏன் மருத்துவர்களின் மூளையைப் போல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட நமது மூளை மட்டும் ஏன் மறுக்கிறது?

இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால், புண்ணியம் தேடி இரத்ததானம் கொடுத்தவர் புகலிடம் தேடி சாவை சந்திக்க வேண்டியிருக்கும். அல்ல அல்ல. இப்படி நிச்சயமாக நடந்திருக்கும். சாலையில் சென்றவர் சுருண்டு விழுந்து செத்தார் என்ற செய்தியை படித்திருக்கிறோம் அல்லவா? அச்சாவுகள் இந்தவகையைச் சார்ந்தது அல்ல என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? இப்படி சாவை சந்தித்தவர்களின் புள்ளி விபரங்கள் யாருக்கு தெரியும்!

இதுபோன்றதொரு நிலமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்ததானம் கொடுப்பவர் தக்க பாதுகாவலர்களோடு வர வேண்டும் என மருத்துவத்துறை இன்று வரையிலும் கூட அறிவுறுத்தியது இல்லை. இப்படி அறிவுறுத்தினால் யார் இரத்ததானம் செய்ய முன்வருவார்கள்? என்ற அடிப்படை காரணம் இதில் இல்லாமலும் இல்லை.

இரத்ததானம் செய்தவரின் உடல் நிலையைப் பொறுத்து சோர்வு ஏற்படும். இது எப்படிப்பட்ட பலம் கொண்டவராக இருந்தாலும் நிச்சயம் என்பதை நானே உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், உடனே மயக்கம் அடையாத இரத்ததான கொடையாளர்கள் தங்களின் சோர்வுக்கும், உடல் ஒத்துழையாமைக்கும் தானம்தான் காரணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாது.

நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400 மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமாக உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் உடல் நலம் தேற சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கிறது. இதனாலும் மருத்துவத்துறைக்கே லாபம்.

ஆனால், இதனையெல்லாம் புண்ணியம்தேடி சர்வ சாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விட முடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்ததானம்தான் காரணமாக இருக்குமோ என அறியக்கூட முற்படுவதில்லை.

மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாததாலுமே இரத்ததானம் செய்வதில்லை.
மேலும், தானமாக பெறப்படும் இரத்தத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத வகையில் ஊழலும் நடக்கிறது. ஆனால், அப்படி என்ன நடக்கிறது என்பது எனது அறிவுக்கு இன்னும் விளங்கவில்லை. விளங்கியதும் விளக்குகிறேன்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி (கிறித்துவ நண்பனின் மனைவி) விபத்தில் சிக்கி நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.

அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவளின் தொடர் சிகிச்சையை காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரணங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கிறது.

மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.

மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், - ARRKAY, நன்றி - www.inneram.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 09, 2012 12:16 pm

ரொம்ப நெகட்டிவ் ஆக சிந்தித்து இருக்கிறார் ஆசிரியர் சோகம்

நானும் 4 முறை இரத்தம் கொடுத்து இருக்கிறேன் .. எந்த ஒரு விளைவும் இல்லை ... இரத்தம் போவதும் தெரிவதில்லை 20 நிமிடங்களில் எல்லாம் சாதாரணமா எப்பொழுதும் போலவே உடலும் இயங்க ஆரம்பிக்கிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Ila
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Jan 09, 2012 12:29 pm

இந்த கருத்து முற்றிலும் ஏற்புடையதாய் இல்லை ,அரைகுறையாய் தெரிந்து கொண்டு எழுதியுள்ள கட்டுரை ,

(இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?)
நீங்கள் கண்ணார கண்டீர்களா? அவர்கள் கொடுக்கவில்லை என ?கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் ......நீங்கள் நினைப்பது போல அனைவரும் ரத்த தானம் கொடுக்க முடியாது ,போதை பழக்கம் உள்ளவர்கள் ,ஹெப்படிடிஸ் ,ஏய்ட்ஸ் ,உள்ளவர்கள் குடுக்க முடியாது ,110பவுண்ட்ஸ் எடைக்கு (49கே‌ஜி)உள்ளவர்களும் அதற்க்கு மேலாக உள்ளவர்கள் மட்டுமே குடுக்க முடியும்

(பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது)
என்ன கருத்து இது ,ரத்தத்தை வைத்து உறுப்புகளை கழுவுகிறார்களா ?
ஒரு உறுப்பு வெட்டி தைக்கும் பொது அல்லது உள்ளிருக்கும் தேவையற்ற உறுப்பை வெளியெடுக்கும்(ஹெர்னியா) போது ரத்தம் அதிகமாக விரயம் ஆகும் அதை தடுக்கவே அதிகமான ரத்தம் உட்செலுத்தபடுகிறது .

(மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே! இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்? இதற்கு செய்யது இப்ராஹீம் போன்றோர்கள் எதற்காக துணை நிற்கிறார்கள்?)

இப்பொழுது விபத்தில் தான் அதிக உயிர்கள் பிரிகிறது ,அதிக அளவில் ஆக்சிடென்ட் நடக்கிறது ,அனைவருக்கும் ஒரே மாத்ரியான ரத்த வகை இருப்பதில்லை ,ஏ நெகட்டிவ் ,ஏ பி நெகட்டிவ் எல்லாருக்கும் இருப்பதில்லை ,அந்த சம்யங்களில் மருத்துவமனை ஊழியர் (பொருந்தாத )ரத்தங்களை கொடுக்க சொல்கிறீர்களா ?

(கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமான சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?)

ஏனென்றால் ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் குடுக்க முடியாது ,அதில் இருக்கும் தொற்றுகள் ரத்தம் பெற்று கொண்டவருக்கும் வந்துவிடும் ,அந்த ரத்தத்தில் பிளேட்லட்ஸ் ,ஆக்ஸிஜன் வழங்குவது ,வெள்ளை ரத்த செல்கள் ,நோயி கிருமிகளை அழிப்பது ,இவை சரியான எண்ணிக்கையில் உள்ளதா என பரிசோதிக்கின்றனர் ,அதை சாதாரண பூத கண்ணாடியில் பார்த்துவிட முடியாது ,அதற்கென்ற உபகரணகள் ,சல்யூஷன்ஸ் தேவை ,அதற்கான விலைகளே அதிகம்

(ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?.)
ரத்த தானம் கொடுத்த பின் மயக்கம் என்பது லேசாக தலை சுற்றி நிற்பதற்க்கு வழில்லாமல் சிறிது நேரம் இருக்கும் ,அது கோமா ஸ்டேஜ் க்கு கொண்டு செல்கிற அளவுக்கு மயக்கமல்ல ,சிறிது தண்ணீர் தெளித்து ,தண்ணீர் குடிக்க கொடுத்தாலே சரியாகிவிடும் ,ரத்த தானம் கொடுத்த 24 மணி நேரத்திற்கு அவருக்கு பழங்கள் ,ஜூஸ் சாப்பாடு சரியாக குடுத்தால்
போதுமானது ,

(இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை)
உடம்பில் இருக்கும் அனைத்து ரத்தமும் அசுத்தமாக இருந்தால் உடனே உயிர் பிரிந்துவிடும் ,அசுத்த ரத்தம் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,புதியதாக உற்பத்தியாகும் ரத்தம் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும் (காரணம் புதிய பிளேட்லட் செல்கள் )அசுத்த ரத்தம் என்பது கார்பன் டை ஆக்ஸைட் இருக்கும் ,புதிய ரத்தம் உருவாகும் முன்னரே உடம்பில் சுத்தம் அசுத்த்ம் கலந்து தான் இருக்கும் ,புதிய ரத்தம் உற்பத்தியாகும் போது ஆக்ஸிஜன் அளவு சற்று அதிகமாக இருப்பதால் சிறுது வேகமாக இருக்கும்,அதை உற்சாகம் ,புத்துணர்சி என உணர்கிறார்கள் ,,இதில் எது கட்டு கதை?

இதில் உள்ள அனைத்து பத்திகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியும் ,(ஆனால் டைப் செய்து கை வலிக்குது )
ஒரு விஷயத்தை முழுவதும் தெரிந்து கொண்டு அதன் சிறப்புகளையும் ,ஏர்பில்லாததையும் பற்றி கூறுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 12:34 pm

முட்டாள் தனமான கட்டுரை .......... பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை என்ன கொடுமை சார் இது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 1:16 pm

ராஜா wrote:முட்டாள் தனமான கட்டுரை .......... பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை என்ன கொடுமை சார் இது

ஆமாம்... இந்த பதிவை பின்னோட்டம் இட்டவர்களுக்கு தெரிவித்துவிட்டு நீக்கி விடலாம் என்று நினைக்கிறேன்...

ஏன்எனில் அனைவரும் பின்னோட்டதை படிப்பார்கள் என்று சொல்ல முடியாது... அதனால் முடிந்தவரை விரைவில் நீங்க முயற்சிக்கவும்...

தவறான தகவல் சிலரை குழப்பிவிடும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 2:00 pm

நீக்க வேண்டாம் பிரசன்னா , கட்டுரையும் அதற்கு Rajarun அவர்களின் விளக்கமும் நன்றாக உள்ளது படிப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 2:25 pm

ராஜா wrote:நீக்க வேண்டாம் பிரசன்னா , கட்டுரையும் அதற்கு Rajarun அவர்களின் விளக்கமும் நன்றாக உள்ளது படிப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அப்ப இருக்கட்டும் தல...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 2:31 pm

யப்பா முடியலப்பா.இந்த கட்டுரைய படிக்கும்போது என் உடம்பில் இருக்கும் ரத்தத்தை முழுசும் உறிஞ்சு எடுத்த மாதிரி இருக்கு

எத்தனை சுயநலத்துடன் கூடிய கட்டுரை இது.கட்டுரை ஆசிரியருக்கு மற்றவர்களை குழப்பும் வேலை ஒன்று மட்டுமே இருக்கும் போல

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Uஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Dஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Aஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Yஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Aஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Sஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Uஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Dஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Hஇரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  A
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Jan 09, 2012 4:21 pm

ராஜா wrote:நீக்க வேண்டாம் பிரசன்னா , கட்டுரையும் அதற்கு Rajarun அவர்களின் விளக்கமும் நன்றாக உள்ளது படிப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

நன்றி அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 5:11 pm

rajarun wrote:இந்த கருத்து முற்றிலும் ஏற்புடையதாய் இல்லை ,அரைகுறையாய் தெரிந்து கொண்டு எழுதியுள்ள கட்டுரை ,

(இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?)
நீங்கள் கண்ணார கண்டீர்களா? அவர்கள் கொடுக்கவில்லை என ?கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் ......நீங்கள் நினைப்பது போல அனைவரும் ரத்த தானம் கொடுக்க முடியாது ,போதை பழக்கம் உள்ளவர்கள் ,ஹெப்படிடிஸ் ,ஏய்ட்ஸ் ,உள்ளவர்கள் குடுக்க முடியாது ,110பவுண்ட்ஸ் எடைக்கு (49கே‌ஜி)உள்ளவர்களும் அதற்க்கு மேலாக உள்ளவர்கள் மட்டுமே குடுக்க முடியும்

(பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது)
என்ன கருத்து இது ,ரத்தத்தை வைத்து உறுப்புகளை கழுவுகிறார்களா ?
ஒரு உறுப்பு வெட்டி தைக்கும் பொது அல்லது உள்ளிருக்கும் தேவையற்ற உறுப்பை வெளியெடுக்கும்(ஹெர்னியா) போது ரத்தம் அதிகமாக விரயம் ஆகும் அதை தடுக்கவே அதிகமான ரத்தம் உட்செலுத்தபடுகிறது .

(மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே! இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்? இதற்கு செய்யது இப்ராஹீம் போன்றோர்கள் எதற்காக துணை நிற்கிறார்கள்?)

இப்பொழுது விபத்தில் தான் அதிக உயிர்கள் பிரிகிறது ,அதிக அளவில் ஆக்சிடென்ட் நடக்கிறது ,அனைவருக்கும் ஒரே மாத்ரியான ரத்த வகை இருப்பதில்லை ,ஏ நெகட்டிவ் ,ஏ பி நெகட்டிவ் எல்லாருக்கும் இருப்பதில்லை ,அந்த சம்யங்களில் மருத்துவமனை ஊழியர் (பொருந்தாத )ரத்தங்களை கொடுக்க சொல்கிறீர்களா ?

(கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமான சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?)

ஏனென்றால் ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் குடுக்க முடியாது ,அதில் இருக்கும் தொற்றுகள் ரத்தம் பெற்று கொண்டவருக்கும் வந்துவிடும் ,அந்த ரத்தத்தில் பிளேட்லட்ஸ் ,ஆக்ஸிஜன் வழங்குவது ,வெள்ளை ரத்த செல்கள் ,நோயி கிருமிகளை அழிப்பது ,இவை சரியான எண்ணிக்கையில் உள்ளதா என பரிசோதிக்கின்றனர் ,அதை சாதாரண பூத கண்ணாடியில் பார்த்துவிட முடியாது ,அதற்கென்ற உபகரணகள் ,சல்யூஷன்ஸ் தேவை ,அதற்கான விலைகளே அதிகம்

(ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?.)
ரத்த தானம் கொடுத்த பின் மயக்கம் என்பது லேசாக தலை சுற்றி நிற்பதற்க்கு வழில்லாமல் சிறிது நேரம் இருக்கும் ,அது கோமா ஸ்டேஜ் க்கு கொண்டு செல்கிற அளவுக்கு மயக்கமல்ல ,சிறிது தண்ணீர் தெளித்து ,தண்ணீர் குடிக்க கொடுத்தாலே சரியாகிவிடும் ,ரத்த தானம் கொடுத்த 24 மணி நேரத்திற்கு அவருக்கு பழங்கள் ,ஜூஸ் சாப்பாடு சரியாக குடுத்தால்
போதுமானது ,

(இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை)
உடம்பில் இருக்கும் அனைத்து ரத்தமும் அசுத்தமாக இருந்தால் உடனே உயிர் பிரிந்துவிடும் ,அசுத்த ரத்தம் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,புதியதாக உற்பத்தியாகும் ரத்தம் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும் (காரணம் புதிய பிளேட்லட் செல்கள் )அசுத்த ரத்தம் என்பது கார்பன் டை ஆக்ஸைட் இருக்கும் ,புதிய ரத்தம் உருவாகும் முன்னரே உடம்பில் சுத்தம் அசுத்த்ம் கலந்து தான் இருக்கும் ,புதிய ரத்தம் உற்பத்தியாகும் போது ஆக்ஸிஜன் அளவு சற்று அதிகமாக இருப்பதால் சிறுது வேகமாக இருக்கும்,அதை உற்சாகம் ,புத்துணர்சி என உணர்கிறார்கள் ,,இதில் எது கட்டு கதை?

இதில் உள்ள அனைத்து பத்திகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியும் ,(ஆனால் டைப் செய்து கை வலிக்குது )
ஒரு விஷயத்தை முழுவதும் தெரிந்து கொண்டு அதன் சிறப்புகளையும் ,ஏர்பில்லாததையும் பற்றி கூறுங்கள்

அட்டகாசமான விளக்கம் அருண்! பாராட்டுக்கள்.

இங்கு நீங்கள் அளித்துள்ள விளக்கம் இந்தக் கட்டுரை எழுதியவரைக் குனிய வைத்து அரைமணி நேரம் விடாமல் தலையில் நீங்கள் கொட்டியது போல் உள்ளது! பாவம் அவர்! புன்னகை

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக