புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுளை அறிவோம் Poll_c10கடவுளை அறிவோம் Poll_m10கடவுளை அறிவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை அறிவோம்


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 26, 2012 11:40 pm

நாம் ஏன் கடவுளை அறிய வேண்டும்?

நாம் கடவுளால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். எனவே, நம்மால் கடவுளைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது. நாம் கடவுளைப்பற்றி அறிய வேண்டும். அதுதான் முடிவே இல்லாத நித்திய வாழ்வுதனை நமக்கு தரும். நமது பெற்றோரை பற்றி நமக்கு தெரியும். அது போல நம்மை படைத்த தேவனைப்பற்றி நாம் அறிய வேண்டும்.

" Science - you prove it - I Belive it
Bible - you belive it - I prove it "



அறிவியல் - "நீ நிரூபி - நான் நம்புகிறேன்" என்கிறது;
பைபிள் - "நீ நம்பு - நான் நிரூபிக்கிறேன்”

அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் உண்டு.

உண்டாக்கப்பட்ட காரியத்தை குறித்து விளக்க முயற்சிப்பது - அறிவியலாகும்.
அறிவியலில் ஒரு காரியத்தை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க வேண்டும்.

ஆன்மீகத்தில் - உண்டாக்கப்பட்டவைகளையும், உண்டாக்கினவரையும் விசுவாசத்தின் அடிப்படையில்தான் அறிய முடியும்.

வான சாஸ்திரம் (Astrology) தோன்றும் முன்பே - நட்சத்திரங்கள் இருந்தன.
தாவரவியல்( Botany) தோன்று முன்ப‌ே - மலர்களும்
உயிரியல்(Biology) தோன்று முன்பே - உயிர் உள்ள ஜீவராசிகள் இருப்பதுபோல

நாம் கடவுளைப்பற்றி அறியும் முன்ப‌ே கடவுள் இருந்தார் என்பது உண்மை என நாமறிவோம்.

தாவரங்கள், நட்சத்திரங்கள், உயிரினங்கள், மலர்கள்... இவைகளை குறித்து மனிதன் சரிவர அறியாததினால், குருட்டு நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், தவறான மார்க்கங்கள் மனிதனை ஆட்கொண்டன.

கடவுளை குறித்து முறையாக நாம் அறிந்து கொள்ளும்போது, மனிதன் தனது தவறுகளை களைந்து, உணரவும், திருந்தவும் முடியும். அந்த மெய் தெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெறவும் முடியும். அதற்காகவே இந்த திரியை தொடங்கி இருக்கிறேன்.

தேவன் ஒருவரே

தேவன் ஒருவரே - என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. கடவுள் ஒருவர்தான். ஆனால், அவருக்குள் மூன்று அமைப்பு உள்ளது.

1. பிதா 2. குமாரன் 3. பரிசுத்த ஆவி
மூன்று கடவுளல்ல. ஒருவா்தான். அவருக்குள் மூவர். மூன்றில் ஒருவர்.

என்ன? ஒரே குழப்பமாக இருக்கிறதா?! ஒரு குழப்பமும் படத்தேவையில்லை.

உதாரணமாக, நம்மை எடுத்துக் கொள்வோம். நாம் ஒரு நபர்தான். நமக்குள் மூன்று அமைப்பு உள்ளது.
1. ஆவி(உயிர்) 2. ஆத்துமா ( மனசு, உள்ளம்) 3. சரீரம் (உடல்) - இம்மூன்றும் சோ்ந்தது தான் முழு மனிதன். ஒரு மனிதன். நமக்குள் இருக்கும் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருந்தாலும், ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு தோற்ற முடையதாக இருந்தாலும் ஒருங்கே ஒன்றிணைந்துதான் செயல்படும். ( சரி இதைப்பற்றி பின் வரும் நாட்களில் விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்)
நமக்குள் மூன்று அமைப்பு இருந்தாலும் நாம் மூவரல்ல. ஒருவர்தான். அதுபோலத்தான் கடவுளுக்குள் மூன்று அமைப்பு இருந்தாலும் கடவுள் மூவரல்ல; ஒருவர்தான்.

இன்னும் சற்று விளக்கமாக பார்ப்போம்:

பரிசுத்த வேதாகமம் (பைபிள்) 2 பகுதிகளாக உள்ளது. 1. பழைய ஏற்பாடு 2. புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு - எபிரேய மொழியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு - கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.
நமது தமிழ் மொழியில் ஒருமை என்றால் - 1. ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்டவை பன்மை என இலக்கணம் கூறுகிறது. ஆனால், ...

எபிரேய மொழியில் ஒருமை என்பது - 1,2,3 வரை ஒருமை என்றுதான் கூறுவார்கள். மூன்றிற்கு பின் தான் பன்மை. எனவே, பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளதால், நாம் அதனுடைய கண்ணோட்டத்தில் சென்று பார்த்தால்தான் கடவுள் காட்டும் சத்தியத்தை, கடவுளைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பைபிளின் மூல பாஷை அல்லது மூல மொழி என்பது எபிரேய, கிரேக்க மொழிகள்தான். ஒரு சத்தியத்தைமுழுமையாக அறிந்து கொள்ள அதன் மூல பாஷையில் சென்று ஆராய்ந்தால்தான் சகலத்தையும் நாம் சரியாக கண்டறிய முடியும் என்பது நாம் அறியாததல்ல.

எனவே, கடவுளும் மூவரல்ல; மனிதனும் மூவரல்ல.

கடவுள் ஒருவரே; மனிதன் ஒருவனே.

கடவுளுக்குள் மூன்று அமைப்பு; மனிதனுக்குள் மூன்று அமைப்பு.

கடவுள் மூன்றிலொருவர்; மனிதனும் மூன்றிலொருவன்.

தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது, ஆதியாகமம்: 1:26 - “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;...” - என்று சொல்லி மனிதனை தேவன் தமது சாயலாகவும், தமது ரூபத்தின் படியும் சிருஷ்டித்தார்.

இங்கு நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும். நமது சாயல்... நமது ரூபம்... உண்டக்குவோமாக... என்று பன்மையில் கூறுவதை கவனிக்க வேண்டும். நமது என்பது கடவுளுக்குள் இருக்கும் மூன்று அமைப்புகளையும் சோ்த்து கூறுவதை நாம் கவனிக்க தவறக் கூடாது.

கடவுளுக்குள் உள்ள மூன்று அமைப்புகளும் அதாவது ஆளத்துவம் இணைந்து ‌செயல்படுவதை கவனிக்க வேண்டும். (பிதா, குமாரன், பரிசுத்தாவி)

1. சிருஷ்டிப்பில் மூவரும் இணைந்த‌ே காணப்படுகின்றனர்:

யோபு: 33:4 - “தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வ வல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர் கொடுத்தது.”

ஏசாயா: 44:24 - “உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியை பரப்பினவர்.

2. மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்தாவி) யெகோவா என அழைக்கப்படுகின்றனர்:

எசேக்கியேல்: 8:1,3 - “ .... கர்த்தராகிய ஆண்டவரின் கரம் என்மேல் அமர்ந்தது. ... ஆவியானவர் என்னை வானத்துக்கும் பூமிக்கும் நடுவே கொண்டு போய்....”

யோவான்: 14:23 - ல் இயேசு: “என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தை கைக் கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்.

1யோவான்: 5:7 - “பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தாவி என்பவர்களே, இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்”

லூக்கா: 3:21,22 - ல் இயேசுவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்தாவியானவர் புறா ரூபங் கொண்டு அவர் மேல் இறங்கினதையும் பிதா பரலோகத்திலிருந்த பேசுவதையும் காண்கிறோம்.

மத்தேயு: 28:19 - ல் - பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசு கட்டளையிட்டார்.

2கொரிந்தியர்: 13:14 - ல் - ஆசீர்வாத ஜெபத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், தேவனையும், பரிசுத்தாவியையும் காண்கிறோம்.

ஆகிலும், மூன்று தேவர்களல்ல. தேவன் ஒருவரே. ஒரே தேவனில் மூன்று ஆளத்துவம் இருக்கிறது. ஒரே நபரில் எப்படி மூன்று ஆளத்துவம் இருக்க முடியும் என்பதற்கு பதில் இதுதான்: நமக்குள் ஒரு மனிதனுக்குள் எப்படி ஆவி ஆத்துமா, சரீரம் இருக்கிறதோ அப்படித்தான் அவரும். ஒரு பிசாசு பிடித்த மனிதனுக்குள் 6000 பிசாசுகள் (லேகியோன்) குடியிருந்ததாக வேததத்திலே நாம் வாசிக்கவில்லையா?

இன்னும் வளரும்...








இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 11:44 pm

“அறிவியல் - நீ நிரூபி - நான் நம்புகிறேன் என்கிறது; பைபிள் - நீ நம்பு - நான் நிரூபிக்கிறேன்”

அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் உண்டு.

உண்டாக்கப்பட்ட காாியத்தை குறித்து விளக்க முயற்சிப்பது - அறிவியலாகும்.
அறிவியலில் ஒரு காாியத்தை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க வேண்டும்.


நல்ல கருத்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளை அறிவோம் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 27, 2012 1:45 am

கடவுள் ஒரு திரித்துவ தேவன்
(திரித்துவம் - என்றால் - மூன்றிலொருவர்)

பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த பக்தர்களுக்கு தேவன் தாம் ஒருவர் என்பதை வெளிப்படுத்தினார். ஏனென்றால், அன்றைய சூழலில் மக்கள் பல தெய்வ வழிபாடுகளையும், இயற்கைகளையும் வணங்கி வந்தனர். பழைய ஏற்பாட்ட கால கானானிய மக்கள் - “பாம்பை” தெய்வமாக வணங்கி வந்தனர். இன்னொரு கூட்டம் மக்கள் “பாகால்” என்று சொல்லக்கூடிய விக்ரக தெய்வத்தை ( மழைக்காக, பிள்ளை பேறுக்காக) வணங்கி வந்தனர். இதுவும் கானானிய தெய்வம்தான்.
எபிரேயர்கள் ஒரே தேவனை அறிந்திருந்தனர். “யாவே”, “அடோனாய்”, “ஏலோஹீம்” என்ற எபிரேய சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்டதை குறிக்கிறது.

பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல், தான் எழுதிய நிரூபத்தின் இறுதியில்திரியேக தேவனின் ஆசீர்வாதத்தை கூறுகிறார். 2கொரிந்தியர்: 13:14 - “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்தாவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்” என எழுதுகிறார்.

இயேசுவின் நெருங்கிய சீஷனாகிய பேதுரு, திரியேக தேவனாகிய தேவன் தன்னை எவ்வாறு தெரிந்தெடுத்தார் என்று எழுதுவதை 1பேதுரு: 1:2 - ல் - “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படிய‌ே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினால‌ே, கீழ்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் ....” என்று எழுதுகிறார்.

பழைய ஏற்பாட்டில் திரித்துவத்தை குறித்த வசனங்கள்:

பிதா: ஏசாயா: 63:16 - ”...கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்...”

குமாரன் (இயேசு): நிதிமொழிகள்: 30:4 - “வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றை தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
ஏசாயா: 9:6 - “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.”
பரிசுத்தாவி: ஆதியாகமம்: 1:2 - “...ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்”
ஏசாயா: 11:2 - “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் தங்கியிருப்பார்”

ஏசாயா: 48:16 - “ நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதி முதற் கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்”

ஏசாயா: 61:1 - “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைபட்டவர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்....”

ஏசாயா: 63:10 - “அவர்களோ கலகம் பண்ணி, அவருடைய பரிசுத்தாவியை விசனப்படுத்தினார்கள்;...”

ஏசாயா: 6:3 -ல் - “...சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்...” - என்று மூன்று முறை துதிப்பதை பார்க்கிறோம். அதின் உட்கருத்து திரியேக தேவன் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி ஆகிய மூன்று ஆளத்துவத்திற்கும் சோ்த்து தேவ தூதர்கள் 3 முறை துதிப்பதை காண முடிகிறது.

ரோமா்: 9:5 - “பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே; இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்” - அந்த வசனத்திலிருந்த என்ன தெரிந்து கொள்கிறோம்?
பழைய ஏற்பாட்டு யூதரும் புறஜாதியாரும் இயேசுவின் நிமித்தம் இணைந்து ஒரே தேவனை விசுவாசிப்போம் என சாட்சி சொல்ல முடிந்ததை தெரிந்து கொள்ளலாம்.

தேவன் திரித்துவர் என்றும் , தேவன் மூன்றில் ஒன்றானவர் என்றும், மூன்று ஆள் தத்துவங்களை உடையவர் என்றும் புரிந்து கொள்ள சில உதாரணங்களை காட்டுகிறேன். ( உடனே கடவுளை இதற்கு இணை வைத்து விட்டாரே! என கூறி விடாதீர்கள். வாசிப்பவர்கள் விளங்கிக் கொள்ளவே இவ்வுதாரணம்):

1. முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் உண்டு. அதில் ஒரு பக்கம் இல்லை என்றாலும் அது முக்கோணம் என்று அழைக்க மாட்டோம். மூன்று பக்கங்களும் இருந்தால்தான் அது முக்கோணம். அதுபோல கடவுளும் முக்கோணத்தைபோல மூன்று ஆளத்துவ அமைப்பாக காணப்படுகிறார்.

2. தண்ணீர். இது ஒரு திரவ பொருள். இது மூன்று விதமாக இருப்பதை காண முடியும். 1. திரவ நிலை 2. திட நிலை 3. ஆவி நிலை. தண்ணீர் ஒன்றுதான். நிலைகளை பாருங்கள். இது ப‌ோல கடவுள் மூவரில் ஒருவராக விளங்குகிறார். செயல்படுகிறார்.

3. மனிதனின் ஆளத்துவம் : நமக்குள் மூன்று அமைப்பு இருப்பதை போல ஆளத்துவம் இருப்பதுபோல, கடவுளுக்குள்ளும் மூன்று ஆளத்துவங்கள் இருக்கின்றன.

கடவுளின் அமைப்பை பற்றி போதுமான அளவிற்கு விளக்கி விட்டேன் என நினைக்கிறேன். கடைசியாக ஒன்று:

திரித்துவத்தை விளக்குவது சற்று கடினமான காரியமாக இருந்தாலும், விளங்கிக் கொள்வதும் சற்று கடினமாக இருந்தாலும், முடியாவிட்டாலும் கூட வேத சத்தியம் ஒரு போதும் தவறானதல்ல என்பதை நாம் அறிந்திட வேண்டும்.

“திரித்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ள முற்படும் ஒருவன் - தன் சிந்தையை இழந்து விடுவான்; ஆகிலும், திரித்துவத்தை மறுதலிக்கும் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து விடுவான்”

2யோவான்: 7 முதல் 10 வசனங்கள் வரை: “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்தி கிறிஸ்துவுமாயிருக்கிறான். உங்கள் செய்கையின் பலனை இழந்து போகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவனெவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்டு வராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்ததல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிர்யைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்”

நாம் ஆராதிக்கும் தேவன் இன்னாரென்பதை (திரித்துவ தேவன்) இப்போது நாம் நன்கு அறிந்து கொண்ட‌ோம்.

பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். ஆமென்! அல்லேலூயா!







சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 28, 2012 9:53 pm

“தேவனுடைய திரித்துவம்”

வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தை எங்கும் காணப்படவில்லை. ஆனால் திரித்துவத்தைக் குறித்த சத்தியம் வேதத்தில் தெளிவாகக் காணக் கூடியதாய் இருக்கிறது. திரித்துவ சத்தியத்தை வேதம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.
திரித்துவம் என்ற வார்த்தை முதன் முதலாக கி.பி.181 -ல் அந்தியோகியாவை சோ்ந்த தியோபிலஸ் என்பவர் பயன்படுத்தினார். திரித்துவம் என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “திரியோஸ்”; இலத்தீன் வார்த்தை “தினிதாஸ்” . கி.பி.220 ல் தொ்த்துல்லியன் என்ற சபைபிதா இந்த வார்த்தையை முதன் முதலாக பயன்படுத்தினார்.
தேவன் ஆவியாயிருக்கிறார்; ஆளத்துவம் உடையவர்; தேவனில் 3 ஆளத்துவங்கள் அடங்கியுள்ளன. பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்தாவியாகிய தேவன் என்பதே அது. இந்த சத்தியம் மனித அறிவிற்கு எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாய் இல்லை. இதற்கு இணையாக உலகத்தில் எந்தவொரு உதாரணமும் இல்லை. எனவே, விளக்கி சொல்வதில் பிரச்சினைகள் உண்டு.

வேதத்தில் இது போன்ற மனித அறிவிற்கு மேற்பட்ட எத்தனையோ சத்தியங்கள் இருக்கின்றன. நமது அறிவு குறைவுள்ளது. எல்லைக்குட்பட்டது.ஆனால் சத்தியம் எப்போதும் நிலைத்து நிற்கின்றது. திரித்துவம் மனிதன் ‌கொண்டு வந்த உபதேசமல்ல. வேதம் அதை தெளிவாகக் காட்டுகிறது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 28, 2012 10:27 pm

பழைய ஏற்பாட்டில் திரித்துவத்திற்கு ஆதாரமான வசனங்கள்:

1. ஆதியாகமம்: 1:26 - நமது சாயல் நமது ரூபம்
2. ஆதியாகமம்: 3:22 - நம்மில் ஒருவரைப் போலானான்
3. ஆதியாகமம்: 11:6,7 - நாம் இறங்கிப் போய்
4. ஏசாயா: 6:8 - நமது காரியமாய் போவான்

இந்த வ‌ேதபகுதிகளில் தேவன் தம்மை “நாம்” என்று பன்மையிலேயே அழைத்துள்ளார்.

த‌ேவனுக்கு எபிரேய மொழியில் “ஏலோகிம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஏலோகிம்” என்ற வார்த்தை பன்மையாகும். “ஏல்” என்ற ஒருமைப் பதத்திற்கு “ஏலோகிம்” என்ற பன்மை பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிருஷ்டித்தார் என்பது ஒருமையில்தான் வருகிறது.

கர்த்தருடைய தூதனானவர் என்று பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் வருகிறது. இது திரித்துவத்தில் ஒருவராகிய கிறிஸ்துவையே குறிக்கிறது என்று நம்பலாம். கர்த்தருடைய தூதனானவர் என்று அழைக்கப்படுகிறவரே த‌ேவன் என்றும், கர்த்தர் என்றும் அழைக்கப்படுகிறதைப் பார்க்கிறோம்.

ஆபிரகாமிடத்தில் கர்த்தருடைய தூதனானவர்....

ஆதியாகமம்: 22:11 - “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்”

ஆதியாகமம்: 22:15 - “கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமை கூப்பிட்டு:”

ஆதியாகமம்: 11:18 - “நி என் சொல்லுக்கு கீழ்படிந்த படியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்”

யாக்கோபினிடத்தில் கர்த்தருடைய தூதனானவர்...

ஆதியாகமம்: 31:11 - “அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்”

ஆதியாகமம்: 31:13 - “... பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நான‌ே...”

மோசேயினிடத்தில் கர்த்தருடைய தூதனானவர்...

யாத்திராகமம்: 3:2 - “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார்.”

யாத்திராகமம்: 3:4 - “அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதை கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி:...”

இப்படி பழைய ஏற்பாட்டில் பல உதாரணங்களை வேதத்தில் நாம் காணலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக