புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் குறிப்புகள் Poll_c10மருத்துவக் குறிப்புகள் Poll_m10மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
11 Posts - 50%
heezulia
மருத்துவக் குறிப்புகள் Poll_c10மருத்துவக் குறிப்புகள் Poll_m10மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் குறிப்புகள் Poll_c10மருத்துவக் குறிப்புகள் Poll_m10மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
மருத்துவக் குறிப்புகள் Poll_c10மருத்துவக் குறிப்புகள் Poll_m10மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
மருத்துவக் குறிப்புகள் Poll_c10மருத்துவக் குறிப்புகள் Poll_m10மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மருத்துவக் குறிப்புகள் Poll_c10மருத்துவக் குறிப்புகள் Poll_m10மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் குறிப்புகள்


   
   
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 08, 2012 6:48 pm

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

•2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்...போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

•3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

•4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

•5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

•6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
•7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
•8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
•9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.




மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 08, 2012 6:52 pm

மிக நல்ல பதிவு-பகிர்வு...
நன்றி ரக்ஸா அவர்களே...



மருத்துவக் குறிப்புகள் 224747944

மருத்துவக் குறிப்புகள் Rமருத்துவக் குறிப்புகள் Aமருத்துவக் குறிப்புகள் Emptyமருத்துவக் குறிப்புகள் Rமருத்துவக் குறிப்புகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 08, 2012 7:05 pm

> மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
>. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
>‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்஦#183ுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
>ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
>‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
>ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
>ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
>. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
>. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை

>. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
>. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
>இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
>அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
>. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
>சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:33 pm

தோழமைக்கு,
மிக அருமையான தகவல்கள், அத்தனையும் வைரமணி முத்துக்கள். நன்றி தங்களின் பதிவிற்கு!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu Feb 09, 2012 8:20 pm

இரவு நேரத்துக்கு ஏற்ற உணவுகள்


ஜீரண மண்டலங்கள் எப்போது சிறப்பாக இயங்கும்? வேலை செய்யும்போதா? ஓய்வாக இருக்கும்போதா? தூங்கும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கும்? இவற்றுக்கான விடையை உங்களால் எளிதில் சொல்லிவிட முடியும்.ஆமாம்,உறக்கத்திலும்,ஓய்வு நிலையிலும் செரிமானத்தின் ஆற்றல் மிதமாக இருக்கும்.


இரவு நேரத்தில் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இப்போது புரிந்திருக்கும். எளிதாக ஜீரணம் செய்யத்தகுந்தவையாக இருக்க வேண்டும். அசைவம் உள்ளிட்ட கொழுப்பு உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. பழங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ராத்திரி பொழுதுகளில் வயிற்றை சங்கடப்படுத்தும் உணவுகள் தூக்கத்தையும் பாதிக்கின்றன. தூக்கம் பாதிக்கப்பட்டாலே உடலில் நோய்களுக்கான வாசல் திறக்கப்பட்டு விட்ட்து என்று அர்த்தம்.வாயுவை உண்டாக்கும் கிழங்கு வகைகள்,அதிக பருப்புகள், முட்டை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் ஆகியன பலருக்கு நல்ல உறக்கத்தை கெடுக்கும்.

அசைவ உணவுகள் எளிதில் செரிப்பவை அல்ல! ஆனால் இரவு நேரங்களில்தான் அசைவ உணவு வகைகளும்,மற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளும் அதிகம் விற்பனையாவதாக ஹோட்டல் நட்த்துபவர்கள் சொல்கிறார்கள்.மதுப் பிரியர்கள் ஒரு காரணம் என்றால் இன்றைய வாழ்க்கை முறையும் அப்படித்தான்.

உள்ளூரில் தொழில் நட்த்தும் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.”நைட்லதான் சார் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடிகிறது,ருசி பார்த்து சாப்பிடறதும் அப்போதான்” காலையில் அரக்க பரக்க வெந்த்தையும், வேகாத பண்ட்த்தையும் வாயில் திணித்துக் கொண்டு பறக்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு தயார் செய்ய வேண்டும்,அலுவலகத்துக்கு,தொழிலுக்கு தயாராக வேண்டும். இந்நேரத்தில் மதிய உணவையும் அவ்வளவு சிறப்பாக தயார் செய்ய முடிவதில்லை.

குடும்பத்தோடு ஒரு நாளைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற பழக்கம் அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் இருக்கும்.தின்பதும் அதிக மசாலா சேர்க்கப்பட்ட கொழுப்பு வகைகளையும், மைதாவால் செய்யப்பட்ட பண்டங்களையும்தான். மைதா நீரிழிவை தூண்டுகிறதென்று கேரளாவில் இயக்கம் நட்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தென்னிந்தியாவில் இதன் பயன்பாடு அதிகம் என்கிறார்கள்.

நொறுக்குத்தீனிகளை உண்பதும் மாலை நேரங்களில்தான்.வயிற்றுப் புண்ணிலிருந்து நீரிழிவு வரையிலான பிரச்சினைகளுக்கு காரணம் நமது பழக்கங்கள்தான்.இவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மருந்துக்கடைகளில் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இவற்றுக்கு ராத்திரி நேரத்து உணவுகளுக்கு அதிகம் பங்கிருக்கிறது.

தொலைக்காட்சி வரவுக்குப் பிறகு தூங்கும் நேரமும் வெகுவாக குறைந்து விட்ட்து.இன்று சராசரியாக தூங்கப்போகும் நேரம் பல வீடுகளில் இரவு பன்னிரண்டு மணி.இதன் விளைவுகளை உணர்ந்து திருத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu Feb 09, 2012 8:23 pm

தலைக்காயம்: உடனடியாக கவனிக்க வேண்டியவை!


தலை, மனித உடலின் சிகரம். மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் அமைந்துள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் தலையில்தான் இருக்கிறது. மூளையை பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வதும் தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். இப்படி பல சிகரமான பணிகளைச் செய்யும் நம் சிரத்தை (தலை) நாமும் சிரமம் பாராமல் பாதுகாப்பது அவசியம். “தலைக்காயங்கள் பல வழிகளில் ஏற்படுகிறது. அவைகளில் குறிப்பிடத்தக்கது, சாலை விபத்துகள். அடிதடி சண்டைகளாலும், உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழும்போது தலை தரையில் மோதுவதாலும் தலைக்காயம் ஏற்படும்.
தலை காயம் ஏற்படும்போது, தோல் கிழியும். மண்டை ஓட்டு எலும்பு உடைந்து போகும். மண்டை ஓட்டிற்கும்- மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துபோகும். மூளையின் உள்ளே உள்ள திரவம் போன்ற பொருள் காது வழியாக வெளியேறும். கண்ணிற்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு கண் பார்வை பறிபோகக்கூடும். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து மூளையின் உள்ளேயும் ரத்தம் உறையலாம்.

தலைக்காயம் ஏற்பட்ட நபரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பார்கள். முதலில் அவருக்கு மூச்சு திணறல் உள்ளதா? என்று பார்ப்பார்கள். சில நேரங்களில், தலைக்காயம் அடைந்த நபரின் எச்சில், ரத்தம் முதலியவை மூச்சு குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுவிட சிரமத்தை உண்டாக்கும். அப்படியானால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கவேண்டியதிருக்கும்.


பின்பு காயமடைந்த நபரின் ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு அவை சீரடைவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். தலைக்கு வெளியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டு ரத்தம் வெளியேறுவதும் தடுக்கப்படும். கிளாஸ்கோவ் கோமா ஸ்கேல் என்னும் கருவியால், காயமடைந்த நபரின் சுயநினைவு திறனும் அளவிடப்படும். சுவாசம், ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு போன்றவைகள் சீரமைக்கப்பட்டு, காயத்திற்கும் தையல் போட்ட பின்புதான் அந்த நபர் ஸ்திர நிலையை அடைவார்.


இந்த சிகிச்சைகள் தொடரும்போது, தலைக்காயம் ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்கள் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை தெளிவாக மருத்துவரிடம் விளக்க வேண்டும். இதன் பிறகு அந்த நபர் அடுத்தகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.


முதலில் மண்டை ஓடு எந்த அளவிற்கு உடைந்துள்ளது என்பதை அறிவதற்கு எக்ஸ்ரே எடுக்கப்படும். பின்பு மூளையின் எந்த பகுதியில்- எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது? என்பதை தெளிவாக அறிவதற்கு மூளை சி.டி.ஸ்கேன் எடுக்கப்படும். அந்த ஸ்கேனை வைத்துதான் அடிபட்டவருக்கு, எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்று முடிவு செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சை தேவை எனில் அந்த நபர் உடனடியாக அறுவை சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்படுவார். சுவாசத்தில் தடை இருந்தாலோ, அல்லது காயமடைந்த நபர் நினைவு இழந்த நிலையில் இருந்தாலோ, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடருவார். சிறு காயமாக இருந்தால் அந்த நபர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.


இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதனை அணிந்தால் தலைவலி உண்டாகும், தலைமுடி உதிரும், தலை மிகவும் கனமாக இருக்கும் என்பதெல்லாம் தவறு.


சாலை விபத்து ஏற்படும்போது தலை மீது விழும் அழுத்தம் நமது மூளையையும், மண்டை ஓட்டினையும் தாக்கும். தலைக்கவசம் அணிந்திருந்தால், அந்த அழுத்தத்தை தலைக்கவசம் தாங்கிக்கொண்டு மூளைக்கும், மண்டை ஓட்டிற்கும் ஏற்படும் காயத்தை வெகுவாக குறைக்கும்.


தலைக்காயம் ஏற்படும்போது உருவாகும் அழுத்தம், மேலும் மூளையை பாதித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் விபத்தால், சில நரம்புகள் சீர் செய்ய முடியாத அளவிற்கு பழுதாகிவிடும். அப்போது உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்காவிட்டால், பழுது அடையும் நரம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.

பொதுவாக மூளை காயத்தின்போது மூளையின் உள்ளே இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். ரத்த அழுத்தம் உயரும். இதனால் மூளை செல்கள் இறக்கும். அத்துடன் ரத்த இழப்பு, உடலில் தாதுப் பொருட்களின் தட்டுப்பாடு, சிறுநீரக கோளாறு, மூச்சு திணறல் முதலியனவும் காயமடைந்த மூளையை மேலும் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகளை தடுக்க முதல் உதவி சிகிச்சையை விபத்து நடந்த இடத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.


விபத்தில் காயம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தை நாம் `பொன்னான நேரம்` என்று கூறுகின்றோம். ஏனெனில் அந்த நேரத்தில் காயம் அடைந்த நபருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி மூச்சுக்குழாய் அடைப்பாலோ, குறைந்த ரத்த அழுத்தத்தினாலோ, காயம் ஏற்பட்ட மூளை மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. மூச்சுக் குழாயில் திரவங்களாலோ, மற்ற பொருட்களாலோ அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். அந்த நேரத்தில் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து அது காயமடைந்த மூளையின் செல்களை பாதிக்கும்.


அதைப்போன்று ரத்தக் கசிவு உடம்பில் உள்ளேயோ, வெளியேவோ ஏற்பட்டால் அது ரத்த அழுத்தத்தை குறைக்கும். அதனால் காயம் அடைந்த மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மேலும் குறைந்து காயத்தின் அளவு அதிகமாகும். ஆகவே விபத்தின் பொன்னான நேரத்தின்போது காயம் அடைந்த மூளை மேலும் பாதிக்கப்படாமல் காப்பது மிக முக்கியம்.’


காயமடைந்தவருக்கு செய்ய வேண்டியவை:

* காயமடைந்த நபரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவமனையில் சுவாசத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும், ரத்தக் கசிவிற்கும் முதல் உதவி செய்த பின்பு, காயமடைந்த நபர் பெரிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவேண்டும்.


* விபத்து நடந்த உடனே முதலுதவி அவசியம் என்பதால், விபத்தில் காயமடைந்த நபருக்கு எவ்வாறு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்பதை போக்குவரத்து காவலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


* விபத்தின் பொன்னான நேரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக வேண்டும்.


* காயமடைந்த நபரை மெதுவாக திருப்ப வேண்டும். திருப்பும்போது ஒருவர் காயமடைந்தவரின் தலையை பிடித்து கொள்ள வேண்டும்.


* காயமடைந்த நபரை தூக்குவதற்கோ, திருப்புவதற்கோ குறைந்தது 2 பேர் தேவை. 4 பேர் இருப்பது நல்லது. கழுத்து எலும்பில் அசைவு ஏற்படாமல் தூக்கவேண்டும். காயம் அடைந்த நபர் தரையில் இருந்தால் மெதுவாக அவரை ஒரு புறமாக திருப்பிவிடவோ, அல்லது விரித்த போர்வையிலோ மாற்ற வேண்டும்.


* கழுத்தில் ஏதேனும் காயம் இருந்தால் ஒரு கையால் தாடையையும், மற்றொரு கையால் பின் மண்டையையும் பிடித்துக்கொண்டு மெதுவாக கழுத்தை இழுத்து பின்பு தலையைத் தூக்கிக்கொண்டு உடம்பை திருப்ப வேண்டும். தலையை ஒரு புறமாக சாய விடக்கூடாது காயமடைந்த நபரை திருப்பிய பின்பு அவரின் கழுத்து பக்கத்தில் மணல் மூட்டை கொண்டோ, அல்லது மடித்த போர்வையை கொண்டோ தலை அசையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனில் ஒரு `காலர்’ (கழுத்துப்பட்டை) அணிவித்து தான் கொண்டு செல்ல வேண்டும்.


* பாதிக்கப்பட்டவரின் முதுகு எப்பொழுதும் நேராக வைத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் தலையை நகர்த்தக் கூடாது. ஒருபோதும் தலை கீழே தொங்கிவிடக்கூடாது.


* அருகில் எங்கே மருத்துவமனை இருக்கிறதோ அங்கு உடனடியாக சேர்த்து, அங்கு காயம் அடைந்த நபருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர்தான் அரசு மருத்துவமனைக்கோ அல்லது வேறு மருத்துவமனைக்கோ மாற்ற வேண்டும்



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Fri Feb 10, 2012 5:04 pm

கொட்டாவி கெட்ட ஆவியா?

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி இவை எல்லாம் திடீரென்று நிகழும் சில உடலியல் நிகழ்வுகள். இவற்றுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு .

இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதற்கு காரணம் சுவாசக்குழாய்க்குள் இருக்கும் அழுக்கு, தூசு அல்லது சளி போன்றவற்றை நம் உடலானது வெளியில் உந்தித்தள்ளுவதே.

மாறாக, விக்கல் ஏற்படுவதற்கான காரணம் சற்று சுவாரசியமானது. நம் மார்புக்கூட்டில் நுரையீரலுக்கு கீழே இருக்கும் `டயாபிரம்' என்னும் தோல் பகுதியானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, தவிர்க்க, `எபிக்லாட்டிஸ்' என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒருவித `விக் விக்' எனும் சப்தத்தைத்தான் நாம் விக்கல் என்கிறோம்!

இப்படி, இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆனால், நம்மில் பலர் கொட்டாவி விடும் ஒருவரைப்பார்த்தால், `பாவம் அவர் ரொம்ப சோர்வாக இருக்கிறார் போலிருக்கிறது' என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப் பதே மெய் என்பதை கொஞ்சம் மாற்றி, கொட்டாவி பற்றி தீர ஆய்வு செய்து அறிந்துகொள்வதே மெய் என்கிறார்கள் கொட்டாவி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!

வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது.

ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது.
இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொட்டாவி ஏன் ஏற்படுகிறது? கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு டசினுக்கும் மேலான ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.

கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ!

மேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் நிபுணர்கள்.



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக