புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_m10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_m10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_m10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_m10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_m10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_m10அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா?


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 1:01 pm

இது ஒரு பழைய கட்டுரை தான் , இருந்தாலும் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று படிவிட்டிருக்கிறேன்.
மேலும் விபரங்களுக்கு , இந்த பதிவின் இறுதியில் உள்ள வலைப்பூவை பார்க்கவும்
-------------------------------------***--------------------------------------------------

அரசும் அணுவாற்றல் நிர்வாகமும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றே கூறி வருகின்றன. உண்மையா?

சென்னை அணுமின் நிலைய உலைகள் கட்டும் போது அப்பகுதி நிலநடுக்கப் பகுதி 2இல் இருந்தது. எனவே 6 ரிக்டர் வரை நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்பகுதி நிலநடுக்க பகுதி 4க்குத் தள்ளப்பட்டுள்ளதால் 8 ரிக்டர் வரை நிலநடுக்கம் வரலாம். சுனாமியை உருவாக்க 7.5 ரிக்டரே போதும். சுனாமி அலைகளின் உயரமும் 100 முதல் 130 அடிகள் வரை இருக்கலாம். (திரு. பிரபு நிலநடுக்க வல்லுநரின் கூற்று). சென்னை அணுமின் நிலையத்தில் குளிர்விப்பதற்கான சாதனங்கள் அனைத்தும் கட ருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ளதாலும் தானாகக் குளிர்விக்கும் முறை (Passive Cooling System) இல்லை என்பதாலும் சப்பானில் நடந்த விபத்து போன்று கல்பாக்கத்திலும் நடக்காது எனக் கூற முடியாது. கல்பாக்க அணுஉலைகள் கட்டும்போது சுனாமியைக் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் 2004 சுனாமி விஞ்ஞானிகளின் கவனக்குறைவை வெளிப்படுத்தியது என்பதை நாம் மறக் கலாமா?

புதிய அணுஉலைPFBR நிலநடுக்கப்பகுதி 3 எனக் கொண்டே கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கப் பகுதி கூடும் போது பாதுகாப்புக்கான அனைத்து சாதனங்களும் அதற்கேற்றவாறு மாற்றப்பட வேண்டும்++ என அமெரிக்க அணுவாற்றல் நிர்வாகம் கூறியுள்ளதை ஏற்று இங்கு என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளனர்?

PFBR மாறாக நிலநடுக்க ஆய்வகச் சோதனை வெற்றி பெற்றதாகவும் மக்கள் தஞ்சம் புகுமளவு மிகப் பாதுகாப்பானது என்றும் செய்திதாள்களில் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. நிலநடுக்க உண்மை நிகழ்விற்கும் ஆய்வகச் சோதனைக்கும் வேறுபாடு இருக்கலாம் என்பதை நிர்வாகமே ஏற்கிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டால் அணு உலைகளில் மக்கள் தஞ்சம் புக முடியுமா? பாதுகாப்பு குறித்த இவ்வினாக்களை மக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் உயரதிகாரிகளின் முன்னே பதிவு செய்த பின்னரும் தக்க விடையளிக்காது, அதிகாரிகள் - பொதுமக்கள் கூட்டுக்குழு அமைக்க நிர்வாகம் திட்டமிடுவது நியாயம் தானா?

அணு உலைகளால் ஊழியர்களுக்கும் சுற்றுபுற மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள்

மரு. வீ. புகழேந்தி 2003இல் வெளியிட்ட ஆய்வறிக்கை ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர் மல்டிபிள் மைலோமா என்ற எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய்-இறப்பு விகிதம் புள்ளி விவரப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என நிர்வாகம் உறுதிப் படுத்தியது. ஆனாலும் மேம்போக்கான விளக்கங் களையே நிர்வாகம் அளித்தது.

அ) ஒன்றரை ஆண்டில் பாதிக்கப்பட்ட 3 பேர் அந்நோயால் இறக்கவில்லை என மறுக்கவில்லை. (எனவே புள்ளிவிவரம் சரியானது என அறியமுடிகிறது.)

ஆ) நிர்வாகம் மருத்துவ ஏடுகள் குறைந்த அளவு கதிர்வீச்சிற்கும் அப்புற்று நோய்க்கும் தொடர்பில்லை என்றே கூறுகின்றன என மறுக்கவில்லை, மாறாக குறைந்த அளவு கதிர்வீச்சே முக்கிய காரணம் தான் எனத் தெளிவாகக் கூறுகிறது.

இ) புள்ளி விவரம் அடிப்படையில் முக்கியத்தும் வாய்ந்ததாக இல்லை என நிர்வாகம் மறுக்கவே இல்லை.

ஈ) சப்பான், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க தனிச்சட்டமே உள்ளது. ஆனால் அந்நோய் வர, கதிர்வீச்சு முக்கிய காரணம் என்றாலும் அத்தகைய இழப்பீட்டுச் சட்டங்கள் இந்தியாவில் இல்லை.

உ) ஊழியர்கள் உள்வாங்கும் உள்கதிர்வீச்சின் அளவு (Internal dose) ஏன் அளந்து சொல்லப்படவில்லை என வினவியதற்கும் பதில் இல்லை, ஊழியர்கள் வாங்கும் வெளிக்கதிர் வீச்சின் அளவை சுயேச்சையாக அளக்க வாய்ப்புக் கேட்டும் மறுக்கப்படுவது எவ்வகை அறிவியல் அணுகுமுறை?

ஊ) உலக அளவில் பாதுகாப்பான அளவு எனக் கதிர்வீச்சைப் பொறுத்தவரை இல்லவே இல்லை என வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டதை நிர்வாகம் எதனால் மறைக்கிறது?

எ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை பேர் =மல்டிபிள் மைலோமா+ புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என கேட்டும் நிர்வாகம் பதிலளிக்கவில்லை. ஊழியர்கள் மத்தியில் வீடு வீடாய்ச் சென்று பரிசோதிக்கும் வாய்ப்பைக் கேட்டும் நிர்வாகம் ஏன் மறுக்க வேண்டும்.?

இத்தகைய வினாக்களுக்குத் தகுந்த பதிலளிக்காமல் அணுஉலைகளால் பிரச்சினை இல்லை என மீண்டும் கூறிக் கொண்டு மேலும் அணுஉலைகள் கட்டுவது அறிவியல் அடிப்படையில் பொறுத்தமாகுமா?

அணு உலைகளால் சுற்றுபுற மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள்

மரு. வீ. புகழேந்தி 2008இல் செய்த ஆய்வில் மீனவப் பெண்கள் ஆட்டோ இம்யூன் தைராய்டு என்ற தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளிவிவரங்கள்:

முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் 2010இல் அணு உலையைச் சுற்றியுள்ள (5 கி.மீ. சுற்றளவு) வரை சதுரங்கப்பட்டினம் போன்ற பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் இறப்பு விகிதம் புள்ளி விவர அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் செய்தித் தாள்களில் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வந்தன.

இந்த ஆட்டோ இம்யூன் தைராய்டு, புற்றுநோய்க்கு அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின்-131 என்னும் வாயுக்கழிவே மிக முக்கிய காரணம் என மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்ததை நிர்வாகம் மறுக்கவில்லை. ஆனால் நிர்வாகம் அயோடின்-131 மிகக் குறைவாகவே வெளியேற்றப்படுவதால் இப்புற்றுநோய்க்கு அயோடின்-131 காரணமாக இருக்க முடியாது என ஏமாற்றுகிறது. அணுஉலைகளால் அயோடின்-131 வெளியேற்றப்பட்டுச் சுற்றுச்சூழலை வந்தடைகிறது என ஏற்றுக்கொள்ளும் நிர்வாகம், இப்பாதிப்பைக் கண்டறிய ஆய்வு செய்யத் தேவையில்லை எனக் கூறுவது எப்படிச் சரியாகும்? அறிவியல் அடிப்படையில் அயோடின்-131 தான் ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய் உருவாகக் காரணம் என இருந்தும் ஆய்வு தேவையில்லை என்பது அறிவியலுக்கு முற்றிலும் முரணல்லவா? கதிர்வீச்சில் பாதுகாப்பான அளவு என்பது இல்லவே இல்லை என்பதை மீண்டும் மனதில் கொள்வோம். மேலும் நிர்வாகம் ஒரு தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் தைராய்டு புற்றுநோயின் பாதிப்பு அதிகமில்லை எனக் கூறினாலும் அவ்வாய்வு அறிக்கையைப் பலமுறைகேட்டும் பொதுமக்களுக்கோ செய்தியாளர்களுக்கோ ஏன் கொடுக்கவேயில்லை?

சுனாமி பாதிப்பு :

2004 சுனாமிக்குப் பிறகு கல்பாக்கம் கடற்கரை மணல் ஆல்ஃபா கதிர்வீச்சின் அளவு அதிகம் உள்ளது என மரு. புகழேந்தி ஆய்வு செய்துள்ளார் அது புளுட்டோனியம் 239இன் காரணமாக இருக்கலாம். எனவே மாவட்ட ஆட்சியர், செய்தியாளர்கள், பொதுமக்கள், பொதுவான அறிவியலாளர்கள் முன்னிலையில் கல்பாக்கம் கடற்கரை மண ல் ஆல்ஃபா கதிர்வீச்சின் அளவு, புளுட்டோனியத்தின் அளவு, கடல்வாழ் பூஞ்சைக் காளானில் உள்ள அயோடின்-129 போன்றவற்றை அளந்து காட்ட வேண்டும் எனக் கேட்டும் நிர்வாகம் அமைதியாகவே ஏன் உள்ளது?

கல்பாக்கம் நிர்வாகத்தின் அறிவியலற்ற ஏமாற்று அணுகு முறைகள்

2003இல் கல்பாக்கம் மறுசுத்திகரிப்பு நிலையத்தில் (KARP) ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் ஆறு பனியாளர்கள் அதிக அளவில் கதிர்வீச்சுத் தாக்கத்திற்கு ஆளானார்கள் என ஒப்புக் கொண்ட நிர்வாகம் அவர்கள் இரத்தத்தை ஆய்வு செய்ததில் (Chromosomal break age study) பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறுகிறது. ஆனால் அவர்கள் இரத்தத்தைச் சுயேச்சையாக ஆய்வு செய்ய அனுமதி கோரினால் அதை ஏன் மறுக்க வேண்டும்? சென்னை அணுமின் நிலையத்தில் (MAPS) 09-07-2002 அன்று திரு. செல்வக்குமார் என்ற ஒப்பந்தப் பனியாளர் என்ற கதிர்வீச்சுப் பொருளைக் கையில் எடுத்ததால் அவர் கை வெந்து போய் பனி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆய்வக முடிவுகளைப் பலமுறை கேட்டும் எழுதிக்ú கட்டும் திரு. செல்வக்குமாரிடம் நிர்வாகம் இதுநாள் வரை தரவேயில்லை. மேலும் அச்சம்பவத்தைச் சட்டப் படிப் பதிவு செய்ய வேண்டும் என இருந்தும் பதிவு செய்யாமல் விடப்பட்டது சரிதானா? அவர் வேலை செய்த காலத்தில் (Significant Event Report) இல் நிர்வாகத் தினர் பதிவு செய்ய வேண்டும் என இருந்தும் பதிவு செய்யாமல் தவிர்த்தது எந்த அணுகுமுறை?

அணுவாற்றல் ஒழுங்காற்று வாரியத்தின் (AERB) உயர் அதிகாரி திரு.ஒம்பால் சிங் என்பவர் மகன் என்ற புற்று நோயால் இறந்ததை ஏன் பதிவு செய்யவில்லை? இத்தகைய வினாக்களுக்கு விடையளிப்பது நிர்வாகத்தின் பொறுப்பல்லவா?

அணு உலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவரங்கள் அணு உலைகளில் வெப்பத்தைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கடல்நீரின் வெப்பம் 5 தான் மாற்றமடையலாம் எனத் தீர்மானித்தும் சென்னை அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை அது 8.4 வரை இருப்பதால் மீன்வளம் அழியாதா? இந்தியா போன்ற வெப்பநாடுகளில் கடல்நீரின் வெப்பம் 28ஸ்ரீ முதல் 29ஸ்ரீ வரை இருக்கும். கடல்நீரின் வெப்பம் 33ஸ்ரீ தாண்டினாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்வளம் பாதிக்கும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் 37ஸ்ரீ க்கும் மேலாக கடல்நீரின் வெப்பம் உயர்வதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் கடல்நீர் உறிஞ்சப்படும் இடத்தில் மீன் குஞ்சுகள் அடிப்பட்டு சாவதும் கடல் நிர்வாகத்தால் கலக்கப்படும் குளோரின் மூலமாக மீன்வளம் அழியும் எனத் தெரிந்தும் மீன்வளம் பாதிக்கப்படவில்லை என நிர்வாகம் சொல்வது நியாயமா? சிங்க இறால் போன்ற அதிக தூரம் இடம் பெயராத மீன் வளம் கல்பாக்கம் பகுதிகளில் மிகவும் குறைந்துள்ளது, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

சுற்றுப்புற மக்களின் பாதிப்புகளை அறியவும் கதிர்வீச்சுப் பாதிப்பை அறியவும் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் அணு உலைகளில் எந்த பாதிப்பும் இல்லை என நிர்வாகம் தொடர்ந்து கூறுவது சரியாகுமா? ஆய்வுகள் மேற்கொண்டால் அது பொதுமக்களின் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும் அல்லவா?

மேற்கூறிய வினாக்கள் அனைத்தையும் இதுபோல எதிர் காலத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு காரணங்களையும் அறிய வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே நமக்குத் தெரிந்த உண்மையகளையும் பாதிப்பு களையும் நாம் பிறருக்கும் தெரிவிப் போம். நமக்குத் தெரியாத வினாக்களுக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம். பொதுமக்களாகிய நாம் அனை வரும் ஒன்றாக இணைந்து போராடுவதன் மூலமாக மட்டுமே நம் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய முடியும்: நம் உரிமைகளை நாம் வென்றெடுக்கவும் முடியும்.

கல்பாக்கம் அணுஉலைப் பாதுகாப்பு நிர்வாகம் சொல்வதெல்லாம் உண்மையா?

கல்பாக்கம் அணு உலைகள் நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட புவியியல் மாறுபாடுகளான நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளைக் கணக்கில் கொண்டே கட்டப்பட்டதாக நிர்வாகம் கூறுவது உண்மையா?

கல்பாக்கம் அணுஉலைகளுக்கு அருகில் நிலநடுக் கத்தைத் தூண்டும் பிளவுகள் இல்லை என நிர்வாகம் கூறுவது உண்மையா?

1941ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தை நிர்வாகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. அதைக் கணக்கில் எடுத்திருந்தால் அதற்கேற்ப வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறைந்த அளவில் குடியிருப்புகளையாவது கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தள்ளிக் கட்டியிருந்திருப்பார்கள் அல்லவா? கடற்கரை ஓரத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிவிருப்பார்களா? 2004 சுனாமிக்கு பிறகு, சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு (DOSE) தலைவர் மருத்துவர் ஆர். இரமேசு கல்பாக்கம் பகுதியில் குறித்து ஆய்வு செய்யவேண்டிய தேவையை வற்புறுத்தினார். அதன் பின்னரே கல்பாக்கம் நிர்வாகம் சுனாமியால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய ஓர் ஆய்வினை நடத்த என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அந்த ஆய்வறிக்கை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்கப்படவில்லை.

கல்பாக்கம் அணு உலைகளுக்கு அருகில் நிலநடுக்கத்தைத் தூண்டும் பிளவுகள் இல்லை என நிர்வாகம் கூறுவது உண்மையா?

கல்பாக்கம் அணு உலைகளுக்கு அருகில் பாலாறு ஆற்றுப் பிளவு (Palar River Fault) என்னும் குறைந்த அளவு முதல் நடுத்தர அளவு வரை நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் பிளவு 22கி.மீ தொலைவில் அமைந்துள்ளதை நிர்வாகம் மறுக்க முடியுமா? இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கல்பாக்கம் பகுதியில் பிற்காலத்தில் நில நடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே க ப்பது மிகமிகக் கடினமானது எனக் கூறியுள்ளதே. 2004இல் வந்த ஆய்வுக் கட்டுரையில் அணுஉலை இடத்தின் அடித்தளம் வரை சென்று மேற்கொண்ட ஆய்வுகளில் அணுஉலை அமைந்துள்ள பகுதியில் பலவீனமான பகுதிகள் இருப்பது உண்மை என்றும் இவை முதல் செய்யப்பட்ட ஆய்வில் கண்டறியப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளதே.

தேசியப் பேரிடர் மேலாண்மைக் கழகத் தலைவர் திரு.சசீதர் ரெட்டி சென்னை/ கல்பாக்கம் அதிக நிலநடுக்கப் பகுதி எனக் கூறிய செய்தி செய்தித்தாள்களில் வந்துள்ளது (ஏப்ரல் 10, டெக்கான் கிரானிக்கல்). ஆனால் அவர்களது இணையதளத்தில் நிலநடுக்கக் குறைவுப் பகுதி என்றே உள்ளது. ஏன் இந்த முரண்பாடு? எது உண்மை? நிலநடுக்கம் அதிகமாகவோ குறைவாகவோ ஏற்பட வாய்ப்புள்ள இப்பகுதியில், சுற்றுப்புறப் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய புவியியல் விவரங்களையும் கணக்கில் எடுத்தால் மட்டுமே நிலநடுக்கப் பிரச்சனைகள் குறித்து கஉக்க முடியும் என அறிஞர்கள் கூறுவதை நிர்வாகம் ஏற்குமா? மாறிவரும் நிலநடுக்கச் சூழலுக்கேற்ப நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் முறைகள் கையாளப்படவேணடும் என்ற புவியியல் அறிஞர்களின் கூற்று ஏற்கப்படுமா?

கல்பாக்கம் கடற்கரை, மண் அரிப்பிற்கு ஆளாகாத கடற்கரை என நிர்வாகம் கூறுவது சரியா?

புவியியல் ஆய்வாளர்கள் கல்பாக்கம் கடற்கரை மண் அரிப்பிற்கு ஆளாகும் பகுதி (Erosional Coast) தான் எனக் கூறுவதை நிர்வாகம் ஏன் மறைக்கிறது? இதுகுறித்து விவாதம் தேவையில்லையா?

அணுக் கழிவுகளைக் கடல் கலக்கவில்லை என நிர்வாகம் கூறுவது உண்மையா?

சென்னை அணுமின் நிலையம், FBTR என்ற சோதனை வேக ஈனுலை, KARP என்ற மறு சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் அணுக் கழிவுகளில் திரவநிலையில் உள்ளதைக் கடல் கலப்பதும், வாயு நிலையில் உள்ளதைப் புகைபோக்கி வழி காற்றில் கலப்பதும் திடநிலையில் உள்ளதை நிலத்தில் பன்னெடுங்காலம் புதைத்து வைத்திருப்பதும் யாவரும் அறிந்த உண்மை. அவ்வாறே PFBR உலைகளிலும் நாளொன்றுக்கு 94,000 கட்டர் திரவக் கழிவுகள் (வகை ) 30,000 கட்டர் திரவக் கழிவுகள் (வகை -2 ) கலக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் இவ்வகைக் கழிவுகளில் எத்தகையக் கதிர்வீச்சுப் பொருட்கள் இருக்கும் என்பது சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை என்பதும் உண்மைதானே?

அப்படியானால்....இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் அணு உலைகளை இயக்கும் நிர்வாகம், மக்களுக்கு உண்மைகளைச் சொல்லாமல் மூடி மறைப்பது ஏன்?

தங்களுக்கு ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்புகளை, அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லையா?

மக்களுடைய வாழ்வுரிமைகளை ப யிட்டுவிட்டு யாருடைய நலன் காக்க இந்த அறிவியல் உண்மைகளை மூடிமறைக்கிறது கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம்?

கல்பாக்கம் அணுஉலை பாதுகாப்பு ஐயப்பாடு சம்மந்தமான சில சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு நிர்வாகம் கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது.

கல்பாக்கம் அணுஉலைகள் நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட புவியியல் மாறுபாடுகளான நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளை கணக்கில் கொண்டே பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. மேலும் நகரிய குடியிருப்புகள் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்படும்பொழுது நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பிறகு நகரியத்தில் தேவையான உயரத்திற்கு கருங்கற்களால் ஆன சுனாமி தடுப்புச் சுவர் மிகவும் பாது காப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கப் பகுதிகள் தொடர்ந்து (Geological Survey of India) இந்திய புவியியல் துறையால் தொடர்ந்து கண்காக்கப்பட்டு வருகிறது. கல்பாக்கம் பகுதி (Zone 3) - நிலநடுக்கப்பகுதி 3 என்று அந்தத் துறையால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே கல்பாக்கம் பகுதி (Zone 4)- நிலநடுக்கப்பகுதி 4 என்று கூறுவது முற்றிலும் தவறான செய்தியாகும். மேலும் நிலநடுக்கப் பகுதியை வரையறுப்பது மேற்கூறிய துறையின் பஉயாகும். அதில் ஏற்படும் மாற்றங்களை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு அணுஉலையின் பாதுகாப்புத் தன்மையை அனைத்து வகையிலும் உறுதி செய்த பின்னரே அணுஉலையை மேற்க்கொண்டு இயக்கும் உரிமையினை வழங்குகின்றது. எனவே மேற்கூறிய விளக்கத்தின் மூலம் நமது அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்கப்படுகின்றது.

கல்பாக்கம் அணுமின் நிலைய கடற்கரைப் பகுதியில் எவ்விதமான கடல் அரிப்பும் ஏற்படவில்லை. மேலும் அணுஉலை, பாறைகளின் மேல் அடித்தளம் அமைத்து கட்டப்பட்டுள்ளதால் கடல் அரிப்பு ஏற்பட்டாலும் பாதிக்க வாய்ப்பில்லை.

அணுசக்தி வளாகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும், சுற்றுச்சுழல் எவ்விதத்திலும் மாசுபடாத வண்ணம் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவைகளின் வரையறைக்குட்பட்டு பாதுகாப்புடன் இயங்கி வருகின்றன, PFBR எனும் அதிவேக ஈணுலையில் உருவாகின்ற திரவக் கழிவுகளின் அளவுகள் மிக மிக அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. இது தவறான கூற்றாகும். சென்னை அணுமின் நிலையம் துவங்குவதற்கு முன்னரே ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியம் கதிர்வீச்சின் அளவு கல்பாக்கம் கடற்கரை சார்ந்த இடங்களில் நிபுணர் குழுவால் அளவிடப்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னரும் அந்த அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

அணுசக்தித் துறை, கல்பாக்கம்

கல்பாக்க நிர்வாகத்தின் 15-10-11 அன்று பத்திரிக்கைகளில் வெளியான செய்தி ஒட்டி, நிர்வாகத்திற்கு நாங்கள் முன் வைக்கும் கேள்விகள்

சுனாமி

சுனாமியை கணக்கில் கொண்டே அணுஉலைகள் கட்டப்பட்டுள்ளது++ - நிர்வாகம்.

அப்படியெனில் 2004 சுனாமிக்குப் பின்பு, சுனாமியை நாங்கள் கணக்கில் கொள்ளவில்லை என திரு. கிருஷ்ணன் (நிலைய பாதுகாப்பு அதிகாரி) அளித்த பேட்டி உண்மையில்லையா?

சுனாமி ஆய்வாளர்கள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் 1881, 1883, 1941ல் சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியதை நிர்வாகம் மறுக்கிறதா?

1999ல் வெ வந்த ஆய்வுக் கட்டுரையில் திரு. சுனாமி பாதிப்பை பதிவு செய்தும், ==இந்தியாவை சுனாமி தாக்கும் என யாரும் நினைக்கவில்லை++ என திரு. கிருஷ்ணன் 2005ல் கூறியது நியாயமா?

சுனாமி அலைகளின் உயரம் 100-130அடி வரை இருக்க வாய்ப்புள்ளது++ என இருக்க சிறு தடுப்பு சுவர் பாதுகாப்பை அளிக்கும் என கூறுவது சரியா?

நிலநடுக்கம்

பிரதம மந்திரியை தலைவராகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் சென்னை-கல்பாக்கம் அதிக நிலநடுக்க பகுதியில் (Zone 4) அமைந்துள்ளது என கூறியது உண்மையில்லையா? இந்தியாவில் உள்ள அதிக நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ள 235 மாவட்டங்களில் சென்னை-கல்பாக்கம் அடக்கமா? இல்லையா?

இந்திய அணுசக்தி துறை மகாராஷ்டராவில் உள்ள ஜெய்தாபூர் அணுமின் நிலைய பகுதி நிலநடுக்க பகுதி 3ல் இருப்பதாக கூறியதும், ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவ ல் அது பகுதி 4ல் இருப்பதாக அரசே பதில் சொன்னதும் உண்மை தானே? நிலநடுக்க ஆய்வில் கல்பாக்க பகுதியில் பலவீனமான பகுதிகள் இருப்பதை ஆய்வாளர்கள் எழுதியும், நிர்வாகம் பதில் அளிக்காமல் ஏன் மறைக்க வேண்டும்?.

கல்பாக்க கடற்கரை மண் அரிப்பு

நிர்வாகம் கல்பாக்க கடற்கரை மேடாகும் பகுதி (Prograding Coast) என்று தானே கூறியது? (DOSE) தலைவர் திரு. மரு. இரமேஷ் புவியியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டி கல்பாக்க கடற்கரையில் ஆண்டுக்கு 55 மண் அரிப்பு ஏற்படுவதாக கூறியதை நிர்வாகம் மறுக்க முடியுமா?

கடல் அரிப்பு ஏற்படவில்லை என்றும், ஏற்பட்டால் பாதிப்பு வராது என கூறுவதும் நியாயம் தானா? புவியியல் அறிஞர்கள் கல்பாக்கம் Erosional Coast என்று கூறுவதை நிர்வாகம் ஏற்குமா?

PFBR இருந்து வெளியாகும் திரவக் கழிவுகள் :

திரவக் கழிவுகளை கடகல் கலக்கவில்லை என்றும் அதனால் மீன்வளம் அழியாது என்றும் கூறிய நிர்வாகம் தற்போது திரவக் கழிவுகளின் அளவு தவறாக, மிகைப்படுத்தி கூறப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

திரவக் கழிவுகளின் அளவை யார் கூறியது? நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை தானே?

வகை-1 கழிவுகள் மொத்தம் 94,000 கட்டர் / நாள் என்று தானே ஆய்வறிக்கையில் உள்ளது (EIA P-5-21: P-5-15) இதை நிர்வாகம் மறுக்குமா?

கல்பாக்க கடற்கரையில் உள்ள ஆல்பா மற்றும் புளூட்டோனியத்தின் அளவு குறித்து:

அணுமின் நிலையங்கள் கல்பாக்கத்தில் துவங்குவதற்கு முன்னரே, கடற்கரை மணல் ஆல்பா மற்றும் புளூட்டோனியத்தின் அளவை அளந்ததாகக் கூறும் நிர்வாகம் அந்த அளவுகளை ஏன் வெளியிடவில்லை?

சுற்றுசூழல் ஆய்வகத்தின் முன்னாள் தலைவர் திரு. கண்ணன் புளூட்டோனியம் கல்பாக்க கடற்கரையில் என்றுமே இருந்ததில்லை என்று தான் கூறி வந்துள்ளார். சுனாமிக்கு பின் கதிர்வீச்சு அளவில் மாற்றம் இல்லை என கூறும் நிர்வாகம் அந்த அளவை ஏன் வெளியிடவில்லை? கடற்கரை மண ல் உள்ள ஆல்பா மற்றும் புளூட்டோனியத்தின் அளவு, கடல்வாழ் பூஞ்சைக் காளானில் உள்ள அயோடின் 129ன் அளவை கலெக்டர், பத்திரிக்கையாளர், சுயேச்சையான அறிவியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அளக்க தயாரா என கேட்டதற்கு நிர்வாகம் ஏன் முறையான பதில் கொடுக்கவில்லை? சுற்றுச்சூழ ல் உள்ள கதிர்வீச்சை தொடர்ந்து அளப்பதாகவும், அவற்றை மக்கள் பார்வைக்கு முன் வைக்க தயார் என கூறும் திரு. கண்ணன், என்னென்ன பொருட்களில் கதிர்வீச்சு அளக்கப்படுகிறது என்றும் அவற்றில் உள்ள கதிர்வீச்சின் அளவையும் வெளியிட தயாரா? முக்கியமாக இருந்தும் சில பொருட்களிலுள்ள கதிர்வீச்சின் அளவை சுற்றுசூழல் ஆய்வகம் அளப்பதில்லை என இருப்பதாக தகவல் வெளியாவதால் நாங்கள் கூறும் பொருட்களில் உள்ள கதிர்வீச்சின் அளவை அளக்க திரு. கண்ணன் தயாரா?

கேள்விகளுக்கு விடை அளிப்பதே உண்மையான அறிவியலாகும்.

தொடர்புக்கு : அணுக்கதிர் வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம் மரு.வீ. புகழேந்தி - 8870578769, ஏ.ஏழுமலை - 9994491765, அ.இரா. உமாசங்கர் - 9965163783, முனைவர் உசைன் - 9894270529, க. நாகூரான் – 9894805232

நன்றி : http://antinuclearplant.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக