புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
32 Posts - 51%
heezulia
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
74 Posts - 57%
heezulia
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_m10பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 8:55 am

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2501

`சினிமா', என்ற மூன்றெழுத்து, ரசிகர்களின் உயிரெழுத்து.

பேரழகிகளை காதலிக்க வேண்டும்- அவர்களோடு பாடிக்கொண்டே ஆட வேண்டும்- தன்னை எதிர்க்கும் பத்து, பதினைந்து பேரை தாக்கி வீழ்த்த வேண்டும் என்றெல்லாம் சராசரி மனிதனுக்கும் ஆசைகள் பல உண்டு.

ஆணிடமும், பெண்ணிடமும் இருக்கும் இந்த ஆசைகளை அவர்களால் தனியாக, சுயமாக நிறைவேற்ற முடியாது. அந்த ஆசைகளை, கனவுகளை அந்தரங்கமாக நிறைவேற்றி சிலிர்க்கவைப்பதுதான் சினிமா!

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2502

தனக்கு பிடித்த நடிகையோடு இன்னொரு நடிகர் ஆடும்போது தன்னை அந்த இடத்தில் வைத்து பார்த்து லயித்து, அந்த நடிகைக்கே ரசிகர்கள் ஆகிவிடுபவர்கள் ஏராளம்.

இப்படி எல்லோரது உள்ளத்தோடும், உணர்வுகளோடும் ஆழப் பதிந்துபோன சினிமாவை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருப்பவர்கள் நடிகைகள். நடிப்பிலோ, அழகிலோ, ஸ்டைலிலோ தங்கள் உணர்வுகளோடு ஒத்துப்போய், உள்ளங்கவர்ந்தவர்களை ரசிகர்கள் கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டார்கள்.

70 வயது பெரியவர் தனது கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி என்று பொக்கைவாய் திறந்து சொல்கிறார்.

60 வயதானவர் பானுமதி என்றுகூறி நமட்டு சிரிப்பு சிரிக்கிறார். 55 வயதானவர்கள் சாவித்திரி என்கிறார்கள். இப்படி சில நடிகைகள் பல லட்சம் பேருக்கு கனவுக்கன்னிகளாக காட்சி இன்பம் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் கால மாற்றத்தில் இந்த கனவுக்கன்னி மவுசு காணாமல் போய்விட்டது. நேற்று இருந்தவரை இன்று காணவில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. சில நடிகைகள் 20, 30 ஆண்டுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பிடித்த நடிகைகளாக கோலோச்சிய காலம்போய், வந்த வேகத்திலே இப்போது பல நடிகைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2503

இன்னொரு புறத்தில் இப்போது மடை திறந்த வெள்ளம்போல் இளம் நடிகைகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்துகொண்டிருக்கிறார்கள்.

- அவர்களிடம் நடிப்பு இருக்கிறதா?

- மொழி இருக்கிறதா?

- கலை உணர்வு இருக்கிறதா?

.. இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டால் `இல்லை.. இல்லை..' என்ற பதில்தான் வந்துகொண்டிருக்கிறது.

- அப்படியானால் அவர்களிடம் என்னதான் இருக்கிறது? என்றொரு கேள்வியை அழுத்தமாக எழுப்பினால், `கவர்ச்சியான உடல் இருக்கிறது.. கலர் இருக்கிறது.. எப்படி வேண்டுமானாலும் நடிப்போம் என்று கூறும் துணிச்சல் இருக்கிறது' என்கிறார்கள்.

அப்படியானால் நடிப்பையும், உணர்வுகளின் துடிப்பையும், அதோடு பண்பட்ட அழகையும் நடிகைகளிடம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இப்போதுள்ள நடிகைகளிடம் எதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்?

- `கவர்ச்சி, கிளர்ச்சி, கட்டழகை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு புஸ்வாணம் போல் வந்து திடீர் கிளுகிளுப்பையும், கிறுகிறுப்பையும் தந்து விட்டு போய்விடுகிறது. எதுவும் மனதில் நிற்பதில்லை. அதனால் அவர்களும் எங்கள் மனதில் நிலைப்பதில்லை'- என்கிறார்கள், ரசிகர்கள்.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2504



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 8:56 am

60 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தமிழ் திரை உலகத்தை திரும்பிப்பார்த்தால் அத்தனை ஆச்சரியங்கள்.. அதிசயங்கள்!

1940-50-ம் ஆண்டுகளில் கதாநாயகியாக உலாவந்து, அன்றைய இளைஞர்களின் இதயங்களை கவர்ந்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. இவர் புடவை கட்டியிருக்கும் முறையை, பெருமையாக சொல்வார்கள். இடுப்பு மறைக்கப்பட்டிருக்கும். தொப்புள் தெரியவே தெரியாது. குண்டாகவும் இருந்தார். ஆனாலும் நடிப்பில் உச்சத்தை தொட்டார். காரணம், அவர் இடை பேசவில்லை. கண்கள் பேசின. அவரது தொப்புள் ரசிகர்களை கிறங்கடிக்கவில்லை. ஆனால் அவர் இமைகள்கூட அபிநயம் பிடித்தன. அவர் இதழ்களும் நடித்தன.

கட்டுடல், கவர்ச்சி ஆடை என்ற பேச்சுக்கே இடமின்றி மக்கள் அவரை ரசித்தார்கள். புகழ்ந்தார்கள்.

அதற்கு அடுத்த காலகட்டத்து கனவுக்கன்னி பானுமதி. இவரும் சற்று குண்டான உடல்வாகை கொண்டவர்தான்.

பி.ï.சின்னப்பாவிடம் நடித்து தேறி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமராவ் என்று எல்லா சூப்பர் ஸ்டார்களுக்கும் நடிப்பில் ஈடுகொடுத்து ரசிகர்களை திருப்திபடுத்தினார். இவரை பேரறிஞர் அண்ணா, `நடிப்பிற்கு இலக்கணம்' என்று புகழ்ந்து, புகழின் உச்சிக்கு கொண்டுசென்றார்.

பானுமதியின் நடிப்பைதான் எல்லோரும் பார்த்தார்களே தவிர, அவர் உடலை பார்த்துவிட்டு `குண்டல்லவா' என்று குறை சொல்லும் நிலை ஏற்படவே இல்லை.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2505

அடுத்து பத்மினி, சாவித்திரி, தேவிகாவின் காலம். அப்போது சரோஜாதேவியும் புகுந்து புகழ்கொடி நட்டார். சாவித்திரியை சினிமாவிற்கு அப்பால் நேரடியாக பார்த்தவர்கள் `உருவம் குண்டாக இருக்கிறது. இடுப்பு பெரிதாக இருக்கிறது' என்று கிசுகிசுத்தார்கள். ஆனால் சினிமாவில் பார்த்தவர்கள் அபிநயம் பிடித்த அவரது கண்கள்.. இமைகளுக்குள் சிக்குண்டு, அவரது நடிப்பில் மெய்மறந்து போனார்கள்.

அப்போதெல்லாம் நடிகைகளின் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் குறையாக பார்க்க ஒன்றும் இல்லாததால், நிறைவாக நிறைய காலம் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

1980-ஐ தாண்டி, 1990-க்குள் சினிமா அடியெடுத்துவைத்தபோது, சினிமா கவர்ச்சிக்குள் கவிழ்ந்துவிழுந்தது.

இலையில் தயிர் சாதத்தை படைத்து, ஒரு ஓரத்தில் ஒரு துண்டு ஊறுகாய் வைத்ததுபோல், கவர்ச்சி நடிகையை வைத்து கிளுகிளுப்புக்கு ஒரு பாட்டு வைத்தார்கள்.

பின்பு இலை முழுக்க ஊறுகாய் படைக்கப்பட்டு, ஓரத்தில் கொஞ்சம் மட்டும் தயிர் சாதம் வைக்கப்பட்டது காலத்தின் கோலம் தான்.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2506



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 8:57 am

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், சிலர் நடிகைகளை தேடிப்பிடித்தது சுவையான கதை. பிரபலமான டைரக்டர்கள்கூட கதையை ரெடி செய்துவைத்துக்கொண்டு, நடிகைகளுக்காக கல்லூரி, கடைத்தெரு என்று அலைந்துகொண்டிருந்தார்கள். பொருத்தமானவர்கள் யாராவது கிடைத்துவிட்டால் பின்னால் போனார்கள். `நடிக்க வர்றீங்களா' என்று கேட்டார்கள். பதிலாக சிலருக்கு அடி கிடைத்தது.

பலருக்கு திட்டு கிடைத்தது. சிலர் மட்டும் லட்டு போல் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார்கள். (திட்டு வாங்கிய டைரக்டர்களும், அடி வாங்கிய உதவி டைரக்டர்களும் பின்பு அதை எல்லாம் ருசிகரமாக பேட்டி கொடுத்து அந்த நடிகைகளுக்கு பெருமை சேர்த்தது தனிக்கதை).

`நடிப்பதற்கு தேவையான நடிகைகளை தேடி டைரக்டர்கள் அலைந்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு நடிகையை கண்டுபிடித்து கொண்டு வந்தார்கள்' என்று சொன்னால், அதை இன்று நம்புவதற்கு பலர் தயங்குகிறார்கள்.

அந்த அளவுக்கு இப்போது `நான்... நீ...' என்று நடிக்கும் ஆசையில் இளம் பெண்கள் கொத்துகொத்தாய் சினிமா உலகை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

`உப்புமா கம்பெனி' என்று சொல்வோமே அப்படி ஒரு போர்டை மாட்டிக்கொண்டு இருந்தால்கூட, போட்டிபோட்டு அங்கேயும் குவிந்துவிடுகிறார்கள், அழகிகள்.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2510

அப்படி அணி, அணியாக வந்து குவியும் அழகிகள், முன்பு வெள்ளித்திரையில் தோன்றிய நடிகைகளை விட பன்மடங்கு மேலான அழகு, பள பள சருமம், எடுப்பான உடல், துடிப்பான இளமையோடு தோன்றுகிறார்கள். நடிப்பில்லை. மொழி இல்லை. கலை உணர்வில்லை. கவர்ச்சி, ஆடை குறைப்பு, எப்படிவேண்டுமானாலும் நடிப்போம் என்ற உறுதி மொழி.. போன்ற ஆயுதங்களோடு காத்திருக்கும் அழகிகளின் பட்டியல் கிறுகிறுக்க வைக்கிறது.



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 8:58 am

ஒல்லியாக இருப்பதுதான் அழகா?

ஒல்லியாக இருப்பதுதான் அழகு. அப்படி இருந்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று சில நடிகைகள் தப்பாக கணக்கு போட்டு விடுகிறார்கள். ஓரளவு பூசினால் போன்ற உடல்வாகு இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

இதற்கு, அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த பானுமதி, சாவித்திரி, தேவிகாவில் இருந்து சமீப காலத்தில் திரையுலகை கலக்கிய குஷ்பு, மீனா, ரோஜா மற்றும் தற்போது ஆதிக்கம் செலுத்தும் அனுஷ்கா, ஹன்சிகா என்று எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2507

ஆனால் இப்போது வரும் சில நடிகைகள் பல நாட்கள் பட்டினி கிடந்தவர்கள் போல் கிள்ளிப்பிடிக்கக் கூட சதை இல்லாமல் அநியாயத்துக்கு ஒல்லியாக இருக்கிறார்கள்.

தங்கள் ஆரம்ப கால படங்களில், அப்போதுதான் மரத்தில் இருந்து பறித்த ஆப்பிள் போல திரட்சியாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் வலம் வந்த சில நடிகைகள், கொஞ்ச நாளிலேயே கத்திரி வெயிலில் வாடிவதங்கிய வெள்ளரிப்பிஞ்சு போன்று பொலிவிழந்துரத்த சோகை பிடித்தவர்கள் போல் ஆனது உண்டு.

உடல் நலத்தை கவனிக்காமல் இரவு-பகலாக அவர்கள் கடுமையாக உழைப்பதோ அல்லது ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று பட்டினி கிடப்பதோ கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் வாய்ப்புகளை இழந்து படவுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கிறார்.

அளவுக்கு அதிகமாக சதை போட்டு குண்டாகும் நடிகைகள் படஉலகில் வாய்ப்புகளை இழப்பது போல், அளவுக்கு அதிகமாக மெலியும் நடிகைகளும் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.

ஒல்லியோ, குண்டோ களையான முகமும், நேர்த்தியான உடற்கட்டும், ஓரளவு நடிப்பு திறமையும் இருந்தால் திரையுலகில் அவர்கள் தாக்குப்பிடிக்க முடியும்.



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 8:59 am

புதுமுகங்கள் அறிமுகம்

தமிழ்ப்பட உலகில் புதுமுகங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. புற்றீசல் போல் புதுமுகங்களின் படையெடுப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் கடந்த மூன்று மாதங்களில், புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இவர்களில் பட உலகில் நிலைத்து நிற்பவர்கள் வெகு சிலரே. மற்றவர்கள் அனைவரும் அறிமுகமான படத்துடன் காணாமல் போய் விடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்துக்கு முன்பும், அவர்கள் காலத்திலும் தமிழ் பட உலகில் புதுமுகங்களின் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலங்களில் அழகான முகமும், சுருள் தலைமுடியும், பாடுகிற குரல் வளமும் இருந்தால் மட்டுமே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

சுத்தமாக தமிழ் பேசுகிறவர்களுக்கு மட்டுமே படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ``நாதா...ஸ்வாமி...'' என்று இலக்கண-இலக்கிய தமிழில் வசனங்கள் எழுதப்பட்டன. அதை சொந்த குரலில் பேசி நடிப்பவர்கள் மட்டுமே தமிழ் படங்களில் அங்கீகரிக்கப்பட்டனர். நடிகர்-நடிகைகளுக்கு இரவல் குரல் என்பது அப்போது அபூர்வமாக இருந்தது. எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில் கூட, புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் துணிச்சல் சில தயாரிப்பாளர்களுக்கே இருந்தது. அந்த நிலை, 1970-80களில் கொஞ்சம் மாறியது.

1980-க்குப்பின், கமல்ஹாசன்-ரஜினிகாந்த் வருகைக்கு அப்புறம் தமிழ்ப்பட உலகில் புதுமுகங்களின் வரவு அதிகரிக்க ஆரம்பித்தது. இதற்கு காரணம், புதுமுகங்கள் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதுதான். 1980-ல் வெளிவந்த `ஒரு தலை ராகம்' படத்தின் இமாலய வெற்றி, அதற்கு பிள்ளையார் சுழி போட்டது.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2509

அந்த படத்தின் கதாநாயகன் சங்கர், இன்னமும் `ஒரு தலை ராகம்' சங்கர் என்றே அழைக்கப்படுகிறார். கதாநாயகி ரூபா அந்த ஒரே படத்தின் மூலம் நட்சத்திர நடிகை ஆனார். `ஒரு தலை ராகம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழ் பட உலகில் புதுமுகங்களின் வரவு அதிகரிக்க தொடங்கியது

பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற டைரக்டர்களின் வருகைக்குப்பின், தமிழ்ப்பட உலகில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஸ்டூடியோக்களில் மட்டுமே நடைபெற்று கொண்டிருந்த சினிமா படப்பிடிப்புகள், வெளியுலகத்துக்கு வந்தது. கதாநாயகன் என்றால், சிவப்பாக-அழகாக இருக்க வேண்டும் என்ற `பார்முலா' உடைக்கப்பட்டது. கதாபாத்திரத்துக்கு பொருத்தமான முகம் இருந்தால் போதும். தமிழ் கூட தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவல் குரலை பயன்படுத்தி, அதை சரிக்கட்டி விடலாம் என்கிற துணிச்சல், அதன் பிறகே தொடர ஆரம்பித்தது.

மும்பையில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் புதுசு புதுசாக நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். கதாநாயகிகள் இறக்குமதி செய்யப்பட்டது போல் வில்லன்களும், சில குணச்சித்ர நடிகர்களும் கூட, வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள். ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்ட காலம் மாறி, ஒரே ஆண்டில் 25 அல்லது 30 புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.

பாலா இயக்கிய `சேது' படத்தின் வெற்றி, தமிழ் பட உலகில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. கதைதான் கதாநாயகன்...மற்றதெல்லாம் அப்புறம்...என்ற நிலையை, `சேது' உறுதி செய்தது. இந்த புதிய அலை மேலும் நிறைய புதுமுகங்களை அள்ளிக்கொண்டு வந்தது. வருடத்துக்கு 50-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமானார்கள்.

சமீப காலத்திய புது வரவுகளில் காஜல் அகர்வால், தமன்னா, ஆண்ட்ரியா, அமலாபால், அனுஷ்கா, `களவாணி' ஓவியா, சமந்தா, `அங்காடித்தெரு' அஞ்சலி, ஹன்சிகா மோத்வானி, சமீரா ரெட்டி, இலியானா, `சுப்பிரமணியபுரம்' சுவாதி, சுருதிஹாசன், டாப்சி, இனியா, ரிச்சா, சமந்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 56 புதுமுக கதாநாயகர்களும், 54 புதுமுக கதாநாயகிகளும் அறிமுகமாகியிருந்தார்கள்.

இந்த வருடம் (2012-ல்) கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழ்ப்படங்கள் மூலம் 18 புது கதாநாயகர்களும், 16 புது கதாநாயகிகளும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

இவர்களில், நினைவில் நிற்பவர்கள் `மெரினா' சிவகார்த்திக்கேயன், `தோனி' ராதிகா ஆப்தே ஆகிய இரண்டே இரண்டு பேர் மட்டுமே...மற்றவர்கள் அறிமுக படத்துடன் மாயமாகி விட்டார்கள்.



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 8:59 am

அன்று `கிளப் டான்ஸ்'... `இன்று குத்தாட்டம்'

முன்பெல்லாம் பெரும்பாலான சினிமா படங்களில் `கிளப் டான்ஸ்' என்ற ஒரு அயிட்டம் இருக்கும். இதற்காகவே இருக்கும் கவர்ச்சி நடிகைகள் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கக்கூடாது என்று கருதி மிகவும் சிக்கனமாக உடை அணிந்து ஒளி வெள்ளத்தில் ரசிகர்களுக்கு போதை ஏற்றும் ஆட்டம் ஒன்றை போட்டு விட்டு காணாமல் போய்விடுவார்கள். இந்த பட்டியலில் விஜயலலிதா, ஜோதிலட்சுமி, சில்க் சுமிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என்று கொடி கட்டி பறந்த பலர் இருக்கிறார்கள்.

இவர்களுடைய ஆட்டத்தை தரிசிப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்களும் உண்டு. ஆனால் காலப்போக்கில் கவர்ச்சி நடிகைகளுக்கு மவுசு குறைந்தது. அப்படி சொல்வதை விட அவர்களுடைய இடத்தை கதாநாயகிகளே பிடித்துக் கொண்டார்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  SPA2508

அதாவது கதாநாயகிகளே திறந்த மனதுடன் பாடல் காட்சிகளில் தாராளமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். கதாநாயகிகளின் இந்த கவர்ச்சி புரட்சியால் தயாரிப்பாளருக்கு செலவு மிச்சம்.

அது மட்டுமா... கவர்ச்சி காட்டுவதில் கதாநாயகிகளுக்கு இடையே போட்டி மனப்பான்மை உருவானது. விளைவு... ரசிக கண்மணிகளுக்கு ஒரே கொண்டாட்டம்.

அப்போது கிளப் டான்ஸ் என்று சொல்லப்பட்ட சமாச்சாரம்தான் இப்போது குத்தாட்டம் என்ற பெயரில் மறுபிறப்பு எடுத்து இருக்கிறது. கதாநாயகிகளே குத்தாட்டம் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்கள். சில சமயங்களில் கதாநாயகி வாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் நடிகைகளும் சற்று இறங்கி வந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு கல்லாவை நிரப்புகிறார்கள். குத்தாட்டத்துக்கு அடிப்படை தகுதி கட்டான உடல் அமைப்பு என்பதால், அது இருக்கும் யாரும் கல்லா கட்டலாம் என்ற நிலை உள்ளது.

தினதந்தி



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 9:09 am

இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன்... அடேங்கப்பா படங்களை காலையில் பார்த்ததும் தலை கிர்ன்னு சுத்துது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 9:12 am

அசுரன் wrote:இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன்... அடேங்கப்பா படங்களை காலையில் பார்த்ததும் தலை கிர்ன்னு சுத்துது

ஹலோ......! படிக்கச் சொன்னா, நீங்க எதுக்கு பாஸ் படத்தை பாக்குறீங்க! சிரி



பட்டாம் பூச்சிகளின் படையெடுப்பு...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 9:14 am

சிவா wrote:
அசுரன் wrote:இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன்... அடேங்கப்பா படங்களை காலையில் பார்த்ததும் தலை கிர்ன்னு சுத்துது

ஹலோ......! படிக்கச் சொன்னா, நீங்க எதுக்கு பாஸ் படத்தை பாக்குறீங்க! சிரி
பார்ரா போடுறதையும் போட்டுட்டு கேள்வி கேக்குறத..... முதல்ல படம் பிறகு தான் படிப்பு... ஜாலி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக