புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
31 Posts - 36%
prajai
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
3 Posts - 3%
Jenila
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
1 Post - 1%
jairam
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
7 Posts - 5%
prajai
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
6 Posts - 4%
Jenila
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
4 Posts - 3%
Rutu
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்று முதல் இன்றுவரை  Poll_c10அன்று முதல் இன்றுவரை  Poll_m10அன்று முதல் இன்றுவரை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று முதல் இன்றுவரை


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 2:08 pm


கி.மு 14 பில்லியன்: பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்: பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்: நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000: இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000: முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000: யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000: நியாண்டெர்தல் மனிதன், கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000: கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000: தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000: தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000: ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000: ஒளியர் கிளை மொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527: முதல் தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100: பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000: கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087: கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000: கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000: உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000: சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000: கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200: சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113: அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102: சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்:
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000: ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600: எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387: இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000: காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915: திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900: வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500: முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450: உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316: மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250: மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200: ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000: உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600: வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950: அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950: வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925: யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900: இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்: இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776: கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750: பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700: சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543: கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600: லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600: கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527: மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560: பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478: கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500: கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478: இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450: ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348: சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400: கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328: உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270: மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326: அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305: சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302: சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300: சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300: கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232: மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245: சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251: புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220: சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221: புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200: கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180: குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200: முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200: தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87: ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62: செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42: யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25: பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31: உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9: இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1: கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4: ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.



கி.பி. 10: உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42: குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100: சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம். கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் (martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53: ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105 : சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107: ரோமப் பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175: வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200 : கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி) மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை (மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.

கி.பி.180: இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200: இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275: வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300: மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700: தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700: தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவ மன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358: துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400: மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419: பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535: தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632: முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631: சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900: வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610: நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644: சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம். தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன் படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.

கி.பி.641-645: அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650: திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788: ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800: இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825: சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850: மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900: குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம். பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900: இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000: உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000: சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000: பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000: துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.

கி.பி.1010: சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137: தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

கி.பி.1024: முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040: சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150: வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197: நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60: ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232: போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250: சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369: தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272: மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296: அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300: கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311: தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378: மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340: போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான். சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப் பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.1336: விஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது. அரிகரன் விஜயநகர அரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப் புலவர்களும், காலமேகப் புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1337: உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350: தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440: ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538: சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492: கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498: போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500: திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500: புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500: உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509: தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510: போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546: நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப் பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565: விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595: ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601: கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619: யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659: திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார். நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திர புராணத்தை படைத்தார். அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம்.

இவர்கள் பாண்டிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680: மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688: திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650: சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 - 1856: சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

கி.பி. 1677: விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689: அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706: இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1700: உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.

கி.பி. 1705-1742: தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.

கி.பி. 1706: மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.

கி.பி. 1712: மருத பாண்டியன் சாதாரண நிலையிலும் தோன்றி திறமையாலும் தொண்டாலும் சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன். அரசியல் முன்னோக்குப் பார்வையும், செயல்வன்மையும், பெற்று சிவகங்கையின் ஒப்பற்ற தலைவன் ஆனார். 1712 ல் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடிக்கவிருந்த சிவகங்கையை மீட்டார். அதைப் பழைய அரச குடும்பத்திடம் ஒப்படைத்தார். இராமநாதபுரத்து மேலப்பனும், சிங்கம் செட்டியும், முத்துக் கருப்பனும், தஞ்சை ஞானமுத்துவும் மருது பாண்டியனின் தலைமையை ஏற்றனர், திருநெல்வேலியில் உள்ள பாளையக்காரர்களின் பக்க வலிமையையும் சேர்த்துக்கொண்டு புரட்சிக்காரர்களின் கூட்டிணைப்பு ஒன்றினை உருவாக்கினார், வரிகொடா இயக்கம் இராமநாதபுரத்தில் துவங்கியது. மேலப்பன் தீவிரவாதியாக மாறினார். சிறைக்கு சென்று பின்னர் தப்பித்தார். இராமநாதபுரத்தில் வரிகொடா இயக்கத்தை துவங்கினார்.

கி.பி.1751: ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.

கி.பி.1760: ஏப்ரல் 4 பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்

கி.பி.1761: புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கி.பி.1761: திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினான். 1761-ல் தோற்கடிக்கப்பட்டான்.

கி.பி.1761: சகவீர பாண்டியன் மகன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் முப்பதாவது வயதில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மருது பாண்டியர்களுடன் நல்லுறவில் இருந்தார்.

கி.பி.1795-1799: பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.

கி.பி.1799: திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மன் மேஜர் பார்னனுக்கு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை காட்டில் மறைந்திருந்தான். காலப்பூர் என்ற காட்டிலிருந்த கட்டபொம்மனைப் புதுகோட்டை அரசன் விஜய




அன்று முதல் இன்றுவரை  Power-Star-Srinivasan
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 26, 2012 2:25 pm

நல்ல வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு.
நன்றிகள்.
(சூர்யாவிடம் சொல்லி நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியிலே கேள்வி கேட்கச் சொல்லலாம்)



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 2:28 pm

படிக்க நன்றாக இருக்கிறது ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் கற்பனையாக எழுதபட்டவையாக தெரிகிறது.
உதா : சிலப்பதிகாரம் , திருக்குறள் தோன்றிய ஆண்டுகள். ஈடு இணையற்ற மாமன்னன் விக்கிரமதித்தன் பற்றி எதுவுமே இல்லை அதே போல ராஜராஜன் , ராஜேந்திரன் பற்றியும் எதுவும் இல்லை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 26, 2012 2:29 pm

அன்று முதல் இன்று வரை வரலாறை அறியதந்தமைக்காக நன்றி நண்பா..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 2:59 pm

பகிர்வுக்கு நன்றி பிளேட்.............. நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 3:06 pm

பகிர்வுக்கு நன்றி பக்கிரி அண்ணே.


எனக்கு தெரிந்த வரை:


கி.மு - நீங்கள் ப்ளேடு போட்டு கிழிக்கும் முன்


கி.பி - நீங்கள் ப்ளேடு போட்டு கிழித்த பின்




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 3:07 pm

றினா wrote:நல்ல வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய பதிவு.
நன்றிகள்.
(சூர்யாவிடம் சொல்லி நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியிலே கேள்வி கேட்கச் சொல்லலாம்)
இந்த கேள்வி எல்லாம் கேட்டா அவங்க இழுத்து மூடிட்டு போய்டுவாங்க சிப்பு வருது




அன்று முதல் இன்றுவரை  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 3:07 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி பிளேட்.............. நன்றி
என்ன பிளேட்?! பிரியாணி பிளேட்டா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 3:09 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி பிளேட்.............. நன்றி
என்ன பிளேட்?! பிரியாணி பிளேட்டா
இதை பதியும் போதே இப்படி யாராவது கேப்பாங்கணு தெரியும் கேட்டுட்டீங்களே ராஜா...... அழுகை
அது சிதம்பர ரகசியம் ..... கூடாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 3:09 pm

ராஜா wrote:படிக்க நன்றாக இருக்கிறது ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் கற்பனையாக எழுதபட்டவையாக தெரிகிறது.
உதா : சிலப்பதிகாரம் , திருக்குறள் தோன்றிய ஆண்டுகள். ஈடு இணையற்ற மாமன்னன் விக்கிரமதித்தன் பற்றி எதுவுமே இல்லை அதே போல ராஜராஜன் , ராஜேந்திரன் பற்றியும் எதுவும் இல்லை.
ராஜான்னு பேரு இருக்கிறதால தான் நீக்கிட்டாங்களோ என்னவோ . சிரி சிரி
நன்றி




அன்று முதல் இன்றுவரை  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக