புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_m10கனவுகளில் வாழ்ந்தவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளில் வாழ்ந்தவன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 4:53 pm

"சார்! போஸ்ட்", தபால்காரரின் குரல் கேட்டது. வேகமாகப் போய்க் கதவைத் திறந்தேன். ஏதாவது அப்பாயின்மென்ட் ஆர்டரோ, இன்டர்வியூ கார்டோ வந்திருக்கும் என்ற நப்பாசை தான் காரணம். என் தகுதிக்கு அதைப் பேராசை என்று கூட சொல்லலாம். ஆனால் அப்படி எந்த அதிசயமும் நிகழவில்லை. ஒரு திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாமல், வந்த வேலையை முடித்து விட்டுப் போனார் அவர்.

தபாலில் திருமண அழைப்பிதழா? அப்பாவுக்குத் தெரிந்தவர்களாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால், அந்த அழைப்பிதழின் மேல் கவிதையால என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அவளுக்குத் தான் கல்யாணமாம். அழைப்பிதழ் நழுவிக் கீழே விழுந்தது. எதுவும் நினைக்கத் தோன்றவில்லை. எல்லா நினைவுகளும் அழிந்து போயின. கல்லூரியில் செமஸ்டர் தேர்வறையில் எந்தக் கேள்விக்குமே பதில் தெரியாமல் உட்கார்ந்திருக்கும் உணர்ச்சி என்னைக் கவ்விக் கொண்டது.

இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் அவளுக்கு. என்னால் எதுவுமே பண்ண முடியாது. எதற்கு கல்யாணப்பத்திரிகை அனுப்பியிருக்கிறாள்? இதைப் பார்த்து நான் பொறாமைப்பட்டு வயிறெரிய வேண்டும் என்றா? இன்னும் அவளுக்கு ஏதாவது கோபம் இருக்குமா? நியாயமாகப் பார்த்தால் கோபப் பட வேண்டியவன் நான்தானே?

என்ன செய்வது என்று தெரியவில்லை. கல்யாணத்துக்குப் போகாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டது போலாகிவிடும். காதலில் தான் தோற்று விட்டோம். கவுரவத்திலாவது ஜெயிக்கலாம். அவளது முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து வர வேண்டும். எனக்குத் தோல்வியில்லை என்று காண்பிக்க வேண்டும். அம்மா என்னைச் சின்ன வயசில் கல்மனசுக்காரன் என்று சொல்லியிருக்கிறாள். அதை உண்மை என்று நிரூபிக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் தூக்கம் பிடிக்கவில்லை. கண்கள் சிவந்து போனது. கல்யாணத்துக்கு முந்தின நாள். அன்றைக்கும் தூங்காமலிருந்தால் கல்யாணத்திற்குப் போகும் போது என் தோல்வி அவளுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து விடும்.

ராஜீவின் கிளினிக்குக்குப் போனேன்.

"தூக்க மாத்திரை பிரஸ்கிரிப்ஷன் எழுதித் தாடா".

"நல்லாத் தானடா இருந்த? இது என்ன பழக்கம்?"

சில நொடிகளை மவுனம் விழுங்கியது. "இன்னைக்கு ஒருநாள் தாண்டா, அதுக்கப்புறம் இல்ல". லேசாக முறைத்தான். பிரஸ்கிரிப்ஷன் எழுதித்தந்தான்.

"பழகிராத, அதுக்கப்புறம் விடாது". நல்ல வழியனுப்பு வாக்கியம்.

மாத்திரையை வாங்கப் போனேன். கடைக்காரன் சந்தேகப் பார்வையுடனே தந்தான்.

என்றைக்கும் போல் எட்டு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தேன். அப்பா அவரது வழக்கமான புராணத்தை ஆரம்பித்து விட்டார். "படிச்சு முடிச்சு நாலு வருஷமாவுது, என்னைக்கு நீயெல்லாம் வேலைக்குப் போய் சம்பாதிக்கப் போறே?". கேட்டுக் கேட்டுப பழகிப் போய்விட்டது. நான் எதுவும் சொல்லவில்லை. சொன்னால் சண்டை வரும். சாப்பிட முடியாது. அம்மாவுக்கு நான் வேலைக்குப் போய் கல்யாணம் பண்ணி ஒரு பேரக்குழந்தையை சீக்கிரமாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற பேராசை வேறு. அவள் பேரக்குழந்தை என் கனவிலேயே இறந்து போனதைப் பற்றி அவளுக்கெப்படித் தெரியும்?

பத்து மணிக்குத் தூக்க மாத்திரையை விழுங்கி விட்டேன். ஒரு ஆழமான உறக்கம். எழும்பும்போது மணி ஏழு.

மாசத்துக்கொருமுறை எண்ணெய் தேய்த்துக்குளிப்பது என்ற விரதத்தை ஒருமுறை உடைக்க வேண்டியதாயிற்று. வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி ஒன்பது. அருகில் தான் இருந்தது, அவளின் திருமண மண்டபம்.

உள்ளே போய் கடைசி வரிசையில் ஒரு இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டேன். கல்லூரிப் பழக்கம் கடைசி வரையில் விடாதோ? முன்னால் நின்று பாஸ்டர் உரக்க முழங்கிக் கொண்டிருந்தார்.

"தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக"

"அவரை எதற்கு வம்புக்கிழுக்கிறீர்கள்? புரோக்கர்கள் இணைத்து வைத்ததை பிறர் பிரிக்காதிருப்பார்களாக என்று சொல்ல வேண்டியது தானே", சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை.

"இவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்"

எனது மனைவியாக எனது கனவுகளில் வாழ்ந்தவளை எவனோ ஒருத்தன் என் கண் முன்னாலேயே கவர்ந்து சென்று கொண்டிருந்தான். நான் கையாலாகாத ஒரு பார்வையாளனாய் நின்று கொண்டிருந்தேன்.

அவள் ஒரு வெள்ளைச் சேலை உடுத்தி, வெள்ளை முக்காடு அணிந்து தேவதை போல் அமர்ந்திருந்தாள். இன்னும் சில நிமிடங்களில் அந்தத் தேவதைப் பெண் இன்னொருவனைக் கைப்பிடித்து, வாழ்விலும், தாழ்விலும் அவனுடன் வரப் போவதாக ஒப்புதல் அளிக்கப் போகிறாள். இனி அவளை நினைத்து கனவு காணக்கூட எனக்குத் தார்மீக உரிமை இல்லை. வெட்கப்படுவது போல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். ஒருவேளை அந்த வெட்கம் நடிப்பாகக் கூட இருக்கலாம்.

அருகில் அவன் உட்கார்ந்திருந்தான். அவனை அதற்கு முன் பார்த்ததில்லை. பார்த்திருக்க வாய்ப்பில்லை. கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான். அவன் நிறத்திலும், தோரணையிலும் பணத்தின் செழிப்பு அபாரமாக வெளிப்பட்டது. வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் அதிகமாக வாழும் நாட்டில் வேலையுடன் வாழும் பெருமை. ஒட்டுமொத்த பெந்தெகோஸ்தே மாப்பிளைகளின் மாதிரியாய் உட்கார்ந்திருந்தான், என் கனவுலகைத் திருடிச் செல்ல வந்தவன்; என் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்த அந்த சின்ன ஆட்டுக்குட்டியையும் பறித்துப் போக வந்தவன். அவனைப் பார்க்கும் போது மனதுக்குள்ளிருந்து ஒரு வெறி எழுந்தது. சில ஆங்கிலப் படங்களில் பார்த்ததைப் போல ஒரு ஓநாயாக மாறி, வேகமாக ஓடி அவனைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிப்பட்ட அபூர்வ சக்திகள் திரைப்படக் கதாபாத்திரங்களுக்குத் தான் உண்டு. எனக்கு இல்லை.

வழக்கமாக எல்லா கல்யாணங்களிலும் கேட்டுப் பழகியிருந்த ஒரு கேள்வியை பாஸ்டர் கேட்டார். "இந்தத் திருமணத்தில் யாருக்காகிலும் ஆட்சேபணை இருந்தால்...." நான் இதுவரை போயிருந்த திருமணங்களில் யாரும் எந்த ஆட்சேபணையும் சொன்னதில்லை. இருந்தாலும் ஆட்சேபணை தெரிவிக்கும் ஆசையுடன் ஒருத்தனாவது எல்லாக் கல்யாணங்களிலும் இருந்திருப்பான் என்றே தோன்றியது. ஏதாவது சொல்லலாமா? சொல்லி என்ன பிரயோஜனம்? அவள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னதேயில்லையே. சொல்வதற்குத் துணிச்சலும் என்னிடமில்லையே.

நெற்றியின் மத்தியில் ஒரு வலிப்பிரளயம் உருவாகிக் கொண்டிருந்தது. அழவேண்டும். ஒருவழியாக அவர்களிருவரையும் கர்த்தரின் பெயரால் கணவன் மனைவியாக்கி பாஸ்டர் சடங்கை முடித்துக் கொண்டார்.

அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். அவளது முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து நான் தோற்கவில்லை, என்னைத் தோற்கடிக்க முடியாது என்று காண்பிக்க வேண்டும். அதனால்தான் அம்மாவின் ஓடாத பழைய வாட்ச்சை எடுத்து கிப்ட் பேக் பண்ணிக் கொண்டு வந்திருந்தேன்.

கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் பரிசைக் கொடுத்துவிட்டு கேமரா முன் சிரித்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அங்கே போய் நானும் "புதுமணத் தம்பதி"களிடம் அந்தப் பரிசைக் கொடுத்தேன். ஒரு நொடி அவள் நிமிர்ந்து பார்த்தாள். அப்புறம் குனிந்து கொண்டாள். என்ன நினைத்திருப்பாள் என்று தெரியவில்லை. "இந்த விவஸ்தையில்லாதவன் ஏதாவது வம்பு பண்ணத் தான் வந்திருப்பான்" என்று நினைத்திருப்பாளோ? அருகில் நிற்கும் போது அவர்கள் உடல்களிலிருந்து சென்ட் வாசனையும், வியர்வை வாசனையும் கலந்து விசித்திர நாற்றமாய் மாறி மூக்கைத் துளைத்தது. மூக்கைச் சுளித்தால் கேமராவில் நன்றாகத் தெரியமாட்டேன். ஏற்கனவே உற்பத்தி செய்திருந்த செயற்கைப் புன்னகையொன்றை கேமரா வுக்குக் கொடுத்துவிட்டு வெளிறேினேன்.

அடுத்து எந்த கல்யாண வீட்டிலும் என்னால் தவிர்க்க முடியாத பணியொன்றைச் செய்ய வேண்டியிருந்தது. சாப்பிடுவதைத் தான் சொல்கிறேன். இலைமுன் உட்கார்ந்தேன். பிரியாணியும், பொரித்த கோழியிறைச்சியும். பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறியது. ஒரு ஓடாத வாட்சுக்கு அந்த சாப்பாடு அதிகம் என்றே தோன்றியது.

எதிரிலேயே புதுமணத் தம்பதிகளை அழைத்து வந்து உட்கார வைத்தார்கள். அவர்களுக்கும் அதே சாப்பாடு. அவள் முதல் கவளத்தை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள். அவனும் முதல் கவளத்தை அவளுக்கு ஊட்டி விட்டான். நான் என் கையாலேயே எனக்கு ஊட்டி விட்டிருந்த முதற்கவளம் வாயிலேயே நின்றது. விழுங்கலாமா, இல்லையென்றால் வெளியே போய் துப்பிவிட்டு அப்படியே போய்விடலாமா? வெகு நாளாயிற்று இப்படி சாப்பிட்டு. இனி எப்போது இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. கடைசியில் சாப்பாடு ஜெயித்தது. பிரியாணியும் சிக்கனும் கலந்த அந்தக் கவளம் தொண்டை வழியே வழுக்கிக் கொண்டு கீழிறங்கியது. பிரியாணி மூன்று தடவை இலையில் நிரம்பியது; காலியானது.

அவர்கள் எழும்பிப் போனார்கள். அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் ஏதோ பேசிக் கொண்டு போனான். அவள் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள். ஏதாவது செய்ய வேண்டும். ஓடிப் போய் அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிடலாமா? நான் அனுபவித்த கோபத்தை சில விநாடிகளாவது அவனும் அனுபவிக்கட்டும். வேண்டாம். இப்போது தான் இறைச்சி சாப்பிட்டிருக்கிறாள். வாய் நாறும் என்று தோன்றியது.

மெல்லத் தடுமாறிக் கொண்டே (அவளைப் பார்த்ததால் அல்ல, வயிறு நிரம்பியதால்) எழுந்து கைகழுவி விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது மணி ஒன்று. தெரிந்த முகங்கள் அவ்வளவாகத் தென்படவில்லை. அவளுடன் படித்திருந்த கொஞ்சம் பெண்களைத் தான் பார்த்தேன். அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. பார்த்தது போல் காட்டிக் கொள்ளவில்லை என்று கூடச் சொல்லலாம். அதுவரையில் நல்லது. கூடப்படித்த பையன்களில் எனக்கு மட்டும் தான் பத்திரிகை அனுப்பியிருக்கிறாள் என்று தோன்றியது. எதற்கு? உன்னைவிட நல்ல மாப்பிளை, வேலையுள்ள, விலையுள்ள மாப்பிளை கிடைத்து விட்டான் என்று பெருமிதங் காட்டுவதற்கா? இருக்கலாம்.

சுற்றியலைந்து மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தேன். அம்மா ஆபீசுக்குப் போயிருந்தாள். அப்பா ஏதோ கட்டிட பிளானுக்கு அப்ரூவல் வாங்கப் போயிருந்தார். அம்மாவுக்கு ஐம்பத்தேழு வயசாகிறது. இன்னும் ஒரு வருஷத்தில் ரிட்டயராகி விடுவாள். அதற்கப்புறம் வரும் பென்ஷன் பணம் அவளுக்கும், அப்பாவுக்கும் கூடப் பத்தாது. நானும் எவ்வளவு நாள் தான் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருப்பது?

பையன் ஐ.ஏ.எஸ் ஆகணும் என்று அப்பா சின்ன வயசிலிருந்து வளர்த்திருந்த கனவுகள் நினைவுக்கு வந்தது. அப்பா என்னிடம் அடிக்கடி கேட்பார், "ஒரு கூலிக்குப் பொறந்த நான் எஞ்சினியர் ஆகியிருக்கேன். அப்டின்னா ஒரு எஞ்சினியருக்குப் பொறந்த நீ என்னவாகணும்?". ஒரு ஈவ்டீசிங் கேஸிலும், அடிதடி கேஸிலுமாகக் கம்பிக்குப் பின்னால் கழித்த சில வாரங்களில் ஐ.ஏ.எஸ் கனவு கலைந்து போயிருந்தது. அவளிடம் போய் காதலைச் சொன்னதற்காக ஈவ்டீசிங் கேஸ்; அவள் அண்ணனிடம் அடி வாங்கியதற்காக அடிதடி கேஸ்.

எஞ்சினியரிங் படித்திருந்தாலும் எதுவும் தெரியாது. பெயருக்குப் பின்னால் B.E என்று போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான். எவன் வேலை தருவான். M.E முடித்துவிட்டு ஏதாவது காலேஜில் லெக்சரராயப் போய்விடலாம் என்ற யோசனை இருந்தது. ஆனால் என் லெக்சரரர்களை நான் மனதுக்குள் திட்டிய வார்த்தைகள் என்னைப் பயமுறுத்தியதால் அந்த எண்ணமும் ஒழிந்து போனது. நாலு வருஷம் வீட்டில் வெட்டியாய் உட்கார்ந்திருந்தால் எவன் மதிப்பான்? தற்கொலை செய்து விடலாம் என்று தோன்றியது. தைரியம் இருந்ததில்லை.

அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வரும்போது மணி ஏழு. சாப்பிடும்போது வழக்கம்போல வேலையில்லாதவன் புராணம். வாழ்க்கையில் முதன்முதலாக அவர் சொல்வது சரி என்று தோன்றியது. உதவாக்கரையை உதவாக்கரை என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஏதாவது வேலைக்குப் போக வேண்டும். வெட்டியாக உட்கார முடியாது. M.E, Ph.D எதுவுமே இல்லை. லெக்சரராகப் போக முடியாது. வேண்டுமானால் லேப் அசிஸ்டென்டாகப் போகலாம். அந்த வேலையும் கிடைக்காவிட்டால்? அப்படியே கிடைத்தாலும் என்ன பிரயோஜனம்? இஷ்டப்பட்ட எதுவும் கிடைக்கவில்லையே. இஷ்டத்தையும் தாண்டி ஒரு வெறி இருந்திருந்தால் எங்காவது, ஏதாவது சாதித்திருக்க முடியும்.

வாழ்க்கை ஒரு தின அட்டவணையில் குறிக்கப்பட்டிருப்பதைப் போல் நகர்ந்து கொண்டிருக்கிறது. மெதுவாக, ஒரு சின்ன நத்தையைப் போல. ஏதாவது செய்ய வேண்டும். இன்றைக்கே செய்ய வேண்டும்......



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 4:55 pm

வாழ்க்கை ஒரு தின அட்டவணையில் குறிக்கப்பட்டிருப்பதைப் போல் நகர்ந்து கொண்டிருக்கிறது. மெதுவாக, ஒரு சின்ன நத்தையைப் போல. ஏதாவது செய்ய வேண்டும். இன்றைக்கே செய்ய வேண்டும்....

சூப்பருங்க


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 17, 2012 10:57 pm

இஷ்டம் இல்லாதவர்களே எம்.இ படித்து பி.எச்.டி முடித்து விடும் அளவுக்கு கல்லூரிகள் பெருகிவிட்டன....வெறி கூட தேவையில்லை முயற்சி இருந்தால் போதும்
அருமையான கதை
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:17 am

உங்கள் முதல் பதிவு நீக்கப்பட்டவுடன் - நம் தளத்துக்காக நீங்க மாறுதல்கள் செஞ்சு பதிவிட்ட கதை அருமை ரங்கராஜன்.




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sat Aug 18, 2012 6:56 am

யினியவன் wrote:உங்கள் முதல் பதிவு நீக்கப்பட்டவுடன் - நம் தளத்துக்காக நீங்க மாறுதல்கள் செஞ்சு பதிவிட்ட கதை அருமை ரங்கராஜன்.
நன்றி தோழரே





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக