புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
32 Posts - 56%
heezulia
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_m10இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:26 pm

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Pittuகாலையில் பாண், இரவில் கடையில் வாங்கிய கொத்து அல்லது நூடில்ஸ். பல வீடுகளில் தினமும் இவ்வாறு கடை உணவுதான்.

சமைப்பதற்கும் நேரம் இல்லை.

மதியம் ஒரு நேரத்திற்கு மட்டும் சோறு, அதுவும் சமைப்பதற்கு இலகுவான அதிக காஸ் செலவாகாத நன்கு 'பொலிஸ்' பண்ணிய சம்பா அரிசி. அல்லது அதிலும் சுலபமான நூடில்ஸ்.

இவ்வாறுதான் காலம் கழிகிறது

இன்றைய வாழ்வு நெருக்கடிகளுக்கு உள்ளாகிவிட்டது. நீண்ட வேலை நேரங்கள், கணவனும் மனைவியும் உழைக்கப் போக வேண்டிய நிர்ப்பந்தம், பிள்ளைகளின் படிப்பு ரியூசன் என நேரத்துடன் போராட வேண்டிய வாழ்க்கை. மிகுதியுள்ள சொற்ப நேரம் தொலைக்காட்சியில் முடங்கிவிடுகிறது. எனவே சமையலிலும் சாப்பாட்டிலும்தான் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.

இதனால் எமது பாரம்பரிய உணவுகளான குத்தரிச் சோறு, தவிட்டுமா இடியப்பம், அரசிக் கஞ்சி, ஒடியல் பிட்டு, குரக்கன் ரொட்டி, களி போன்ற பலவும் சிலருக்கு மறந்தே போய்விட்டன.
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் String-hoppersஇடியாப்பம் நன்றி :-www.roshani.co.uk/.../recipes-vegetables/

குடும்பமாகக் கூடியியிருந்து சாப்பிடும் வழக்கம் அருகிக் கொண்டே போகிறது. உணவு வேளையின் கலந்துரையாடலும், பகிர்ந்து உண்ணும் ஆனந்தமும் நழுவி ஓடிவிட்டன.

உடல் உழைப்பு என்றால் என்னவென்று கேட்கும் காலமாயிற்று. உடற் பயிற்சிக்கும் நேரம் கிடையாது.

பாரம்பரிய உணவுகளின் நன்மை என்ன?

அவற்றின் முழுமைத் தன்மையிலிருந்து கிட்டுகிறது.
அதாவது அவை அதிகம் சுத்திகரிக்கப்படாதவை.
அவற்றில் மாப்பொருள், விட்டமின், புரதம், கொழுப்பு, கனிமம் யாவும் உள்ளன. எதுவுமே அதிகமல்லாமல் தேவையான அளவில் மட்டும் உண்டு.
நார்ப்பொருள் மட்டுமே அதிகம் உண்டு.
உணவில் நார்ப்பொருள் என்பது முருங்கைக்காய், வாழைக்காய் தோல் போன்றவற்றிலிருக்கும், நாம் வெட்டி நீக்கும் நார் அல்ல.
மாறாக சப்பித் துப்பும் நாருமல்ல.
உணவோடு உணவாகச் சேர்ந்திருப்பவை.

அரிசியின் தவிடு நல்ல உதாரணம். இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Red+and+white+rice

இது குத்தரிசியில் மாத்திரமல்ல, சம்பா அரிசியிலும் இருக்கவே செய்கிறது. ஆயினும் நன்றாகத் தீட்டப்பட்டால் அவை மாட்டுத் தீவனமான தவிடாக அகன்று விடும்.
நன்றாகத் தீட்டப்படாத சம்பா அரியிலும் சற்று மஞ்சளடித்து போல இருப்பதும் தவிடு தான்.
மாறாக நன்கு தீட்டப்பட்ட குத்தரிசியில் குறைவாகவே இருக்கும். அரிசியில்

மாத்திரமின்றி பழங்களிலும், காய்கறிகளிலும் கூட நார்ப்பொருள் உண்டு.

நார்ப் பொருள் என்பது என்ன?

நார்ப் பொருள் என்பதை எமது உணவில் உள்ள சக்கை எனலாம். அதாவது எமது உடலால் ஜீரணிக்க முடியாதவையும், உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட முடியாதவையும் ஆகும். உணவில் உள்ள மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியன உணவுக் கால்வாயில் சமிபாடடைந்து உறிஞ்சப்பட்டு உடல் வளர்ச்சிக்கும், செயற்பாட்டிற்குமான போஷணைப் பொருட்களைக் கொடுக்கின்றன.

ஆனால் நார்ப் பொருள் சக்கையாக மலத்துடன் வெளியேறுகிறது.
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Images
அப்படியாயின் அது ஏன் எமக்குத் தேவை?

உணவில் உள்ள நார்ப்பொருள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.

  1. கரையும் நார்ப்பொருள் (soluble fiber).

  1. கரையாத நார்ப்பொருள் (insoluble fiber).

  • கரையாத நார்ப்பொருளானது, உணவு உணவுக்கால்வாய் ஊடாக இலகுவாகப் பயணம் செய்வதற்கும் மலம் நன்றாக வெளியேறுவதற்கும் உதவுகின்றது.
  • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், மலம் ஒழுங்காகக் கழியாதவர்களுக்கும் இது உதவும்.

  • அத்துடன் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும்.
தீட்டாத அரிசி, கோதுமை, வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் உண்டு.

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Soluble+fibreகரையும் நார்ப்பொருளானது நீரில் கரைந்து ஜெல் போன்ற ஒரு பொருளாக மாறுகிறது. இது குருதியில் கொலஸ்டரோல், சீனி ஆகியன அதிகரிப்பதைத் தடுக்கவல்லது. அவரை இன உணவுகள், கரட், புளிப்புத்தன்மை உள்ள பழங்கள். ஆப்பிள், ஓட்ஸ், பார்லி, psyllium போன்றவற்றில் தாராளமாகக் கிடைக்கும்.

நார்ப் பொருட்கள் மலச்சிக்கலை நீக்குகிறது என்றோம்.
இதனை அது இரண்டு வழிகளில் செய்கிறது.

  1. நார்ப்பொருள் செமிபாடடையாதது என்பதால் மலத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
  2. இரண்டாவதாக மலம் இறுகாமல், மெதுமையாக இருப்பதற்கு உதவுகிறது. இதனால் முக்கி வேதனைப்பட வேண்டிய தேவை இன்றி மலம் தானாகவே சுலபமாக நழுவி வெளியேறும்.
'இது செமிபாடடையாது என்றும், சளிக்கு கூடாது' என்று வயதானவர்களும், ஆஸ்த்மா போன்ற சளி நோயுள்ளவர்களும் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அத்துடன் பத்தியம் பார்த்து பல்வேறு மரக்கறிகளையும் சாப்பிடாது ஒதுக்குகிறார்கள்.

வேறு சிலர் சோயா, கடலை, பயறு, உழுந்து, பயிற்றை, போஞ்சி, அவரை போன்ற சத்துணவுகள் பலவற்றையும் 'வாய்வுச் சாப்பாடு, சமிப்பதில்லை' என ஒதுக்கிவிடுகிறார்கள்.

இவை தவறான கருத்துக்கள். இவற்றைக் குளிர் என்றும், செமிபாடடையாது எனவும் ஒதுக்குவது பிழையானது. பழங்கள், காய்கறிகள் போன்றவை சளியைத் தூண்டாது.

அத்துடன் செமிபாடு அடையாது என அவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள் உண்மையில் மெதுவாகச் செமிபாடு அடைவதால் நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற தீவிர நோய்கள் அதிகரிக்காமல் பாதுகாக்கின்றன.

அதிகமாகச் சப்பிச் சாப்பிட வேண்டியவை நார்ப்பொருளுள்ள உணவுகள்.

  • அதனால் உண்பதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும்.

  • அவசரப்படாது ஆறுதலாக நன்கு மென்று உண்பது உடலுக்கு நல்லது.

  • நேரம் எடுப்பதால் தேவையற்ற வீண் பசியை தணிந்துவிடும்.

  • தேவைக்கு அதிகமாக உண்ண வேண்டியிருக்காது.

  • அத்தகைய உணவுகள் வயிறை நிரப்புவதால் நீண்ட நேரத்திற்கு மீண்டும் பசியெடுக்காது.

  • நார்ப் பெர்ருள் உணவுகளில் கலோரிச் சக்தியும் குறைவு.

  • எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது எனலாம்.

மாறாக இன்று நாம் உண்பவை என்ன?
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Pitza_r
பாண், பேஹர் பணிஸ், பிஷா, நூடில்ஸ், கொத்து என சுலப உணவுகள்.

போதாக்குறைக்கு இடையே கொறிக்க ரோல்ஸ், கட்லற், பற்றிஸ் மிக்சர், பகோடா, வடை, ஐஸ்கிறீம் போன்றவை.

இவற்றில் மாப் பொருளும் எண்ணெய் மாஜரீன், அஜினமோட்டோ போன்றவையும் தானே உள்ளன.

வெற்றுக் கலோரிக் குண்டுகள்!

நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை.

உதாரணத்திற்கு நூடில்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஏறத்தாள 70சதவிகிதம் மாப்பொருளும், 17 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. அதிலுள்ள உப்பு 1500 மிகி முதல் 3000 மிகி வரையாகும்.

இது அமெரிக்க அரசு அங்கீகரித்த அளவை விட 60 சதவிகிதம் அதிகமாகும்.
உப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள இறுக்கமான காதலை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

இத்தகைய வெற்று கலோரிக் குண்டுகள் என்ன செய்யும்?

உடலை ஊதச் செய்யும். நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்றவற்றை வா வாவென அழைக்கும்.

மூளையிலும், இருதயத்திலும் இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்து
மரணத்தை முற் கூட்டியே வரவேற்கும்.

உங்கள் தேர்வு எது?

பாரம்பரிய உணவா? நவ நாகரீக உணவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 1:30 am

இவ்வளவு விசயங்களை தெளிவு படுத்திய பிறகும் ந்வ நாகரீக உணவுகள் வேண்டும் என்று சொல்வோமா.........

பாரம்பரிய உணவுதான் வேண்டும்.

ஆனால் வெளி நாட்டில் சில நேரங்களில் நாம் தேடினாலும் பாரம்பரிய உணவு கிடைப்பதில்லை என்பது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்று.

- நன்றி மீனு.

இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Eegaraitkmkhan
இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்யும் மரணக் குண்டுகள் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக