புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_m10ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:58 am

மியூசிக் ரசிக்க சரியான சாதனம் எது என்று கேளுங்கள் – உடனே ஐ–பாட் என்று எவரும் கூறுவார்கள். அக்டோபர் 21ல் தன் ஒன்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் ஐபாட் இன்று இசை உலகின் ஓர் அடையாளம். அறிமுகமான எட்டு ஆண்டுகளில் 22 கோடி அளவில் விற்பனையான சாதனம் ஐபாட் தான். அதிகமான எண்ணிக் கையில் விற்பனையான மியூசிக் பிளேயர் என்று மட்டும் இது பெயர் பெறவில்லை; அதிகமான அளவில் விற்பனையான டிஜிட்டல் சாதனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. எப்படி வனஸ்பதி என்பதற்கு நம்மில் பெரும்பாலானோர் டால்டா என்று அதனைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்கி றோமோ, நகல் காப்பி என்பதற்கு செராக்ஸ் என அதனைத் தந்த நிறுவனத்தின் பெயரைக் கூறுகிறோ மோ, அதே போல இன்று மியூசிக் பிளேயர் என்றால் அது ஐபாட் என்றே பெயர் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தும் ரசிகர்கள், கண்களை மூடிக் கொண்டு உரத்த குரலில் இதுதான் உலகிலேயே உயர்ந்த சாதனம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அனைத்து நாடுகளிலும், மக்களின் ஏகோபித்த இசை தரும் சாதனமாக ஐபாட் வளர்ந்து வந்துள்ளது.




எப்படி ஐபாட் இந்த அளவிற்குப் புகழைப் பெற்றது? புதிய வழி ஒன்றின் மூலம் இசையைத் தரும் சாதனமாக அறிமுகமான இந்த டிஜிட்டல் தோழன், தனி ஒரு அந்தஸ்தை அடைந்தது எப்படி?


முதன் முதலில் அக்டோபர் 21, 2001 அன்று முதல் ஐபாட் அறிமுகமானது. இப்போது இருக்கும் இதே வடிவத்தினையே அப்போதும் பெற்றிருந்தது. 5 ஜிபி கொள்ளளவும் கொண்டிருந்தது. 1000 பாடல்களைப் பதிவு செய்திட அதனால் முடிந்தது. கிளிக் செய்வதற்கு சிறிய சக்கரமும், பாடல்களை இயக்கவும் நிறுத்தவும் பட்டன்களும் இருந்தன. அதனுடைய திரை 160 x 128 பிக்ஸெல் கொண்ட கருப்பு வெள்ளை திரையாக இருந்தது. கம்ப்யூட்டருடன் பயன்படுத்த பயர்வயர் (Firewire) இன்டர்பேஸினை யே பயன் படுத்தியது. அப்போதிருந்த யு.எஸ்.பி. 1.1 இன்டர்பேஸைக் காட்டிலும் வேகமாக இயங்கியது. ஆனால் முதலில் வந்த ஐபாட், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டருடன் மட்டுமே இணைந்து இயங்கியது. விண்டோஸ் பயன்படுத்தியவர்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது.
2002 மார்ச்சில் இரண்டாவது வகை ஐபாட் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கொள்ளளவு 20 ஜிபி. இதில் ஒரு டச் வீல் மற்றும் பிளாப் இருந்தன. பாடல்களை வகைப்படுத்த கூடுதல் சாப்ட்வேர் தரப்பட்டது.
2003ல் மூன்றாவது வகை மாடல் வந்தது. இதன் கொள்ளளவு திறன் 20 மற்றும் 40 ஜிபி என்ற அளவில் இருந்தன. முந்தைய மாடல்களைக் காட்டிலும் தடிமன் மற்றும் எடை குறைவாக இருந்தன. சுற்றி வந்த கிளிக் வீலுக்குப் பதிலாக, நிலையான வீல் தரப்பட்டது. இப்போது இருக்கும் ஐபாட் கிளாசிக் மற்றும் நானோ மாடல்களில் உள்ள அதே வீல்தான் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முதலாக யு.எஸ்.பி. போர்ட் 2 உடன் இணைந்து செயல்படத் தேவையான வசதிகள் தரப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிள் நிறுவனம் ஐபாட் சாதனத்திற்கு மாற்றாக ஐபாட் மினி என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதில் 4ஜிபி கொள்ளளவு கொண்ட மைக்ரோ டிரைவ் இருந்தது. முழு வெளிப்பாகமும் அனடைஸ்டு அலுமினியம் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு, ஐந்து வண்ணங்களில் வந்தன. இதனால் தங்கள் விருப்ப வண்ணங்களில் மக்கள் ஐபாட் சாதனத்தை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் தான் முதல் முதலாக கிளிக் வீல் அறிமுகமானது. இதற்கு முன் வந்த மாடல்களில் பட்டன்கள் தனித்தனியாக இருந்தன. ஆனால் இந்த மாடலில், வீலிலேயே இவை உள்ளார்ந்து அமைக்கப்பட்டன.


ஜூலை 2004ல், ஆப்பிள் தன் நான்காவது வகை மாடல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. 20 மற்றும் 40 ஜிபி அளவில் இவை இருந்தன. இதன் பின் மூன்று மாதங்கள் கழித்து அக்டோபரில் ஐபாட் போட்டோ என்ற மாடலை ஆப்பிள் வெளியிட்டது. இது 40 மற்றும் 60 ஜிபி அளவில் இருந்தன. கருப்பு வண்ணத்தில் சிகப்பு கிளிக் வீலுடன் இருந்தது. இதுவரை வெள்ளையாக இருந்த ஐபாடினைக் கண்டு சலித்துப் போன ரசிகர்கள் இதனை வரவேற்றனர்.
2005 ஜனவரியில் தன் ஐந்தாவது வகை மாடலைக் கொண்டு வந்தது ஆப்பிள். ஐபாட் ஷப்பிள் (iPod Shuffle) என அழைக்கப்பட்ட இந்த சாதனம் மிகச் சிறிய அளவில், கேபிள் இணைப்பின்றி நேரடியாகக் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன் படுத்தும் அளவில் இருந்தது. 512 எம்பி மற்றும் 1ஜிபி அளவில் இவை இருந்தன. பிப்ரவரியில் மேலும் சில மாற்றங்களை இதில் ஆப்பிள் ஏற்படுத்தியது. தங்க நிற ஐபாடை எடுத்துவிட்டு, அதன் இடத்தில் வேறு வண்ணங்களைத் தந்தது.
அடுத்து ஐபாட் மற்றும் ஐபாட் போட்டோ சாதனங்களில் 40 ஜிபி மாடலை நீக்கி, ஐபோட்டோ இடத்தில் 30 ஜிபியையும், ஐபாடில் 20 ஜிபியையும் கொண்டு வந்தது. பின் இரண்டு மாடலையும் ஒன்றாக்கியது. கருப்பு –வெள்ளை திரையையும் மூட்டை கட்டியது.
இதே ஆண்டில் ஆப்பிளின் மிகப் பிரபலமான ஐபாட் நானோ வெளியானது. ஆனால் அதே நேரத்தில் நன்றாக விற்பனை செய்யப்பட்டு, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த ஐபாட் மினி முடக்கப்பட்டது. புதிய கலர் ஸ்கிரீன் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபான் இன்றும் 32 மற்றும் 40 ஜிபி திறனுடன் கிடைத்துவருகிறது. ஐபாட் நானோ 2 மற்றும் 4 ஜிபி திறனுடனும் கிடைத்தது.
2005 ஆம் ஆண்டிலேயே இன்னொரு ஐபாட் மாடலும் வெளியானது. இதில் புதுமையாக வீடியோ இயக்கும் திறன் அளிக்கப் பட்டது. ஐபாட் சாதனத்தில் இது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பாகும். இதனை மக்கள் ஐபாட் வீடியோ என அழைத்தனர். 2.5 அங்குல திரை 320 x 420 கலர் ரெசல்யூசனுடன் இருந்தது. வீடியோ பைல்கள் இதில் விநாடிக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் இயக்கப்பட்டு, ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கட்டணம் செலுத்தி, டவுண்லோட் செய்து இயக்கும் வசதி தரப்பட்டது. இந்த வகை ஐபாட் ஸ்லிம்மாகவும், சிறியதாகவும் அமைந்திருந்தது. இப்போது இது 30 மற்றும் 60 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது.
2006 ஆம் ஆண்டில் ஐபாட் ஷபிள் விலை குறைக்கப்பட்டது. முந்தைய 2 மற்றும் 4 ஜிபி மாடல்களோடு, ஒரு ஜிபி மாடலும் அறிமுகமானது.


இதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ஐபாட் சாதனங்கள் அனைத்தின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐபாட் ஷபிள் முந்தையதைக் காட்டிலும் பாதி அளவில் தரப்பட்டது. ஐபாடினை சட்டை மற்றும் பேண்ட்களில் மாட்டிக் கொண்டு கேட்க, கிளிப் ஒன்று சாதனத்திலேயே தரப்பட்டது.
புதிய ஐபாட் நானோ பலவகை வண்ணங்களிலும், கொள்ளளவு திறனுடனும் தரப்பட்டது. அக்டோபர் மாதத்தில் ஐபாட் நானோவின் சிகப்பு எடிஷன் அறிமுகமானது. இதன் விற்பனையில் ஒரு பங்கு பணம் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் ஐபாடுக்குப் புதிய வண்ணங்கள் அளிக்கப்பட்டன. ஆரஞ்ச், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வெளிவந்தன. மொத்தம் ஐந்து வண்ணங்களில் ஐபாட் கிடைத்தது.
இந்த நேரத்தில் தான் ஐபாட் என தொடர்ந்து மைய மாடலாக இருந்த சாதனம் ஐபாட் கிளாசிக் என அழைக்கப்படத் தொடங்கியது. இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், இதன் கொள்ளளவு 160 ஜிபி வரை கொண்ட மாடலும் வெளிவந்தது. இன்றைக்கும் இதுவே ஐபாட் ஒன்றின் அதிக பட்ச கொள்ளளவினதாக உள்ளது. 30 ஜிபி மாடல் கைவிடப்பட்டது.
ஜனவரி 2008ல் ஐபாட் நானோ 8 மாடல் பிங்க் கலரில் வெளியானது. இந்த ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில், அனைத்து மாடல்களிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆப்பிள் கிளாசிக் மாடலில் 160 ஜிபி மாடல் எடுக்கப்பட்டது. 80 மற்றும் 120 ஜிபி மாடல்கள் அதிகம் வரத் தொடங்கின. இதே போல ஐபாட் டச் பிளேயரிலும் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்பீக்கர் உள்ளாக அமைக்கப்பட்டது. வால்யூம் கண்ட்ரோல் ஐபோனில் உள்ளது போலத் தரப்பட்டது.
2009ல் ஆப்பிள் உலகின் மிகச் சிறிய மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியது. இது ஐபாட் ஷபிள் மாடலின் மூன்றாவது வகையாகும். இதுவரை வந்ததைக் காட்டிலும் சிறியதாகவும், ஸ்லிம்மாகவும், எடை மிகக் குறைவாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனுடைய நீளம் ஏறக் குறைய சுண்டு விரல் போலவே இருந்தது. வாய்ஸ் ஓவர் என்னும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பார்வை அற்றவர்கள் பாடல் குறித்த தகவல்கள் பெற்று இயக்க முடிந்தது. இந்த ஆண்டில் ஐபாட் நானோவில் புதிய வசதிகள் தரப்பட்டன. இதில் வீடியோ கேமரா தரப்பட்டு ரெகார்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் எப்.எம். ரேடியோவும் இணைந்திருந்தது.


இந்த ஆண்டில் ஐபாட் கிளாசிக் ஆப்பிள் நிறுவனத்தால் கைவிடப்படும் என்று எதிர்பார்த்த நேரத்தில், அதன் நினைவகத்தினை 120லிருந்து 160 ஜிபியாக உயர்த்தி, விலையை அப்படியே வைத்து ஆப்பிள் புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. அண்மையில் ஐபாட் 32 மற்றும் 64 ஜிபி மாடல்களுடன் தரப்பட்ட இயர்போனில் மைக் மற்றும் பிளே பேக் கண்ட்ரோல்களும் தரப்பட்டன.
ஐபாடின் அளவை சிறியதாக்கி, உள்ளே ஹார்ட் டிரைவின் அளவைப் பெரியதாக்கி, புதிய வசதிகளை இணைத்துத் தரும் பணியில் தொடர்ந்து ஆப்பிள் மேற்கொண்டு வருகிறது. இன்னும் பல மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக