புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
30 Posts - 50%
heezulia
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
72 Posts - 57%
heezulia
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_m10கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் கருகின... கண்ணீரே மிச்சம்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 12, 2012 2:57 pm

கல்யாணத்தைப் பற்றி எல்லா பெண்களுக்கும் கனவுகளும் கற்பனைகளும் இருக்கும். என் விஷயத்தில் அது வெறும் கனவோடும் கற்பனையோடுமே முடிந்து விட்டது போல உணர்கிறேன்.

24 வயது, எம்.காம் பட்டதாரி நான். திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. 2 தம்பிகள், ஒரு தங்கை, அப்பா, அம்மா என என்னுடையது சற்றே பெரிய குடும்பம். அப்பாவுக்குப் பெரிய வருமானமில்லை. சின்னதாக ஒரு பிசினஸ். அதில்தான் குடும்பம் ஓடுகிறது. இந்த நிலையில்தான் எனக்கு மிக வசதியான இடத்திலிருந்து வரன் வந்தது. என் கணவர், அவரது வீட்டுக்கு ஒரே வாரிசு. பெண் பார்க்க வந்த போது, நான் அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். கணவர் வீட்டாரின் குலதெய்வக் கோயிலில் எங்கள் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போதும் சரி, அதன் பிறகு புகுந்த வீடு சென்ற போதும் சரி, என் கணவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர் வரவே இல்லை. அவரது நடவடிக்கைகள் எனக்கு அச்சத்தைக் கொடுத்தன. ஒருவேளை ஏழை வீட்டுப் பெண் என்பதால் வெறுக்கிறாரா எனக் குழம்பினேன். என் எண்ண ஓட்டத்தை மாமியார் புரிந்து கொண்டார். ‘அவன் தனியாவே வளர்ந்தவன்... கூச்ச சுபாவம் அதிகம்... மறு வீடு, ஹனிமூனெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு வச்சுக்கலாம்’ என்றார். மாமனார், மாமியாரின் அளவு கடந்த அன்புக்கு முன் என்னால் எதுவும் பேச முடியவில்லை.

இப்படியே நான்கைந்து நாள்கள் கழிந்தன. கணவரிடம் எந்த மாற்றமும் இல்லை. ‘அவனை ஒரு குழந்தையா பாவிச்சு, அனுசரிச்சு நடந்துக்கோ... போகப் போக எல்லாம் சரியாகிடும்’ என்றார். புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு, பொறுத்துக்கொள்ளப் பழகினேன். பிறந்த வீட்டு வறுமை, புகுந்த வீட்டில் இல்லை. எல்லாவற்றுக்கும் வேலையாள்கள்... ஆளுக்கொரு அறை என பணக்கார வீட்டின் ஆடம்பரமும் பளபளப்பும் எனக்கே கொஞ்சம் புது அனுபவம்தான். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒருநாள் கணவரின் உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தார்கள்.

அவர்களில் வயதான ஒரு பெண்மணி, யாருக்கும் தெரியாமல் ஒரு கடிதத்தை என் கையில் திணித்துவிட்டுச் சென்றார். அதைப் படிக்கிற போதே எனக்கு மூச்சு நின்றுவிடாதா என்றிருந்தது. என் கணவர் சிறுவயதிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவராம். அதற்கான சிறப்புப் பள்ளியிலேயே படித்தவராம். அவர் படித்த பள்ளியின் முகவரி, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் பெயர் மற்றும் முகவரி என எல்லாத் தகவல்களும் அந்தக் கடிதத்தில் இருந்தன. இந்தத் திருமணத்தின் மூலம் ஒருவேளை அவரது பாதிப்பு சரியாகலாம் என்றும், அவர்களது சொத்துகளுக்கு வாரிசு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்த்துதான் என்னை அவருக்குக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சியையே தாங்க முடியாத நிலையில் அடுத்த இடியும் என்மேல் இறங்கியது. அதாவது என் பெற்றோர் என் கணவரின் நிலை தெரிந்துதான் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார்களாம். அதற்கு ஈடாக அவர்கள் பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டதும், அதை என் அப்பா தன்னுடைய கடனை அடைக்கப் பயன் படுத்திக் கொண்டதும் தெரிந்ததும், என் உயிரே என்னைவிட்டுப் பிரிந்தது போல உணர்ந்தேன். உடனே அம்மாவிடம் கதறினேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து மழுப்பலான பதிலே வந்தது.

ஒரு பக்கம் கை தட்டினால் வேலையாள்... வாசலைத் தாண்டினால் கார்... சொகுசு வாழ்க்கை... ஆனால், அது எதையுமே பெரிதாக நினைக்க முடியாத கசப்பு நாட்கள்... தங்கக்கூட்டில் மாட்டிக் கொண்ட கிளி மாதிரி இருக்கிறது என் மனம். சராசரிப் பெண்களைப் போல நானும் என் கணவர், என் குழந்தைகள், எனக்கென ஒரு குடும்பம் என ஆயிரம் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து கொண்டுதானே கழுத்தை நீட்டினேன்... இதுவரை என் கணவரின் விரல் நுனி கூட என் மீது படவில்லை.

உடல் சுகத்துக்கு ஆசைப்படுகிறேன் என நினைக்க வேண்டாம். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? பெற்றோர், உறவினர் எல்லாரும் இருந்தும் தனிமரமாக நிற்கிறேன். என்னைச் சுற்றிலும் நம்பிக்கைத் துரோகிகள்... வாழவே பிடிக்கவில்லை. இவர்கள் யாரும் இல்லாமல் வாழ முடியுமா என்றும் புரியவில்லை. கனவுகள் கருகிப் போய் கண்ணீருடன் நிற்கிற எனக்கு இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில்?

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 12, 2012 2:58 pm

வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி சொல்கிறார்...

உங்களுக்கு நடந்தது ஒரு திருமணமே இல்லை. வியாபாரம்! தன் மகனின் நிலை அறிந்து இந்த ஏற்பாட்டைச் செய்த உங்கள் மாமனார், மாமியாரைவிடவும், பணத்துக்காக உங்கள் வாழ்க்கையைப் பணயமாக்கிய உங்கள் பெற்றோர்தான் குற்றவாளிகள்.

சட்டத்தின் பார்வையில் திருமண வயதை அடைந்த, நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும், முழு மனதுடன் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சம்மதிக்கும் திருமணமே செல்லும். உங்கள் விஷயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட, திருமண பந்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஒரு ஆண் (உங்கள் கணவர்) திருமணத்துக்குக் கொடுக்கும் சம்மதம் செல்லுபடி ஆகாது. சட்டப்படி இந்தத் திருமணத்தை ஸீuறீறீ ணீஸீபீ ஸ்ஷீவீபீ என்று சொல்லலாம். எனவே, நீதிமன்றத்தின் உதவியுடன் இதை ரத்து செய்வது எளிது.

உங்களைச் சுற்றி பணத்துக்காக நடந்த இந்த பொம்மைக் கல்யாண பந்தத்தை விட்டு சட்டப்படி வெளியே வரத் தயங்காதீர்கள். தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு விஷயம். அதற்காக ஆசைப்படவில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? திருமண உறவில் அதுவும் ஒரு அங்கம்தான். அது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவான, இயல்பான விஷயம்.

உங்களுக்கு நடந்த சதி வேலையை ‘விதி’ எனச் சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பணக்கார வாழ்க்கை வேண்டும் என முடிவு செய்தால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘தங்கக் கூண்டு’ உங்களுக்கு நிரந்தரம். வேண்டாம் என நினைத்தால், அதை உடைத்துக் கொண்டு வெளியே வர உங்களால் முடியும்.

நீங்கள் படித்த பெண். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, சொந்தக்கால்களில் நிற்க உங்களால் முடியும். உறவுகள் தராத பாதுகாப்பையும் நம்பிக்கையையும் படிப்பும் வேலையும் தரும். தைரியமாக இருங்கள்!

தோழி... உன் அப்பா, அம்மாவையும், மாமனார், மாமியாரையும் உட்கார வைத்து மனம்விட்டுப் பேசு. நீ ஒன்றும் துறவியில்லை. உனக்குக் கடைசி வரை துணை தேவை. கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று உனக்கு நடந்ததைக் கூறி, உன்னை விரும்பி திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நல்ல ஆண்மகனை மணந்து கொள். உன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டு மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்து!

தினகரன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 12, 2012 3:09 pm

படிச்சதும் ரொம்ப கஷ்டமாகிடுச்சு..அதுவும் அவளின் பெற்றோரே இதற்கு உடந்தை எனும்போது கொடுமை தான்...வழக்கறிஞர் சொல்வதும் சரிதான்...

பகிர்வுக்கு நன்றி அருண்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 12, 2012 3:14 pm

அருண் wrote:வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி சொல்கிறார்...

உங்களுக்கு நடந்தது ஒரு திருமணமே இல்லை. வியாபாரம்! தன் மகனின் நிலை அறிந்து இந்த ஏற்பாட்டைச் செய்த உங்கள் மாமனார், மாமியாரைவிடவும், பணத்துக்காக உங்கள் வாழ்க்கையைப் பணயமாக்கிய உங்கள் பெற்றோர்தான் குற்றவாளிகள்.

சட்டத்தின் பார்வையில் திருமண வயதை அடைந்த, நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும், முழு மனதுடன் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சம்மதிக்கும் திருமணமே செல்லும். உங்கள் விஷயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட, திருமண பந்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஒரு ஆண் (உங்கள் கணவர்) திருமணத்துக்குக் கொடுக்கும் சம்மதம் செல்லுபடி ஆகாது. சட்டப்படி இந்தத் திருமணத்தை ஸீuறீறீ ணீஸீபீ ஸ்ஷீவீபீ என்று சொல்லலாம். எனவே, நீதிமன்றத்தின் உதவியுடன் இதை ரத்து செய்வது எளிது.

உங்களைச் சுற்றி பணத்துக்காக நடந்த இந்த பொம்மைக் கல்யாண பந்தத்தை விட்டு சட்டப்படி வெளியே வரத் தயங்காதீர்கள். தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு விஷயம். அதற்காக ஆசைப்படவில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? திருமண உறவில் அதுவும் ஒரு அங்கம்தான். அது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவான, இயல்பான விஷயம்.

உங்களுக்கு நடந்த சதி வேலையை ‘விதி’ எனச் சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பணக்கார வாழ்க்கை வேண்டும் என முடிவு செய்தால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘தங்கக் கூண்டு’ உங்களுக்கு நிரந்தரம். வேண்டாம் என நினைத்தால், அதை உடைத்துக் கொண்டு வெளியே வர உங்களால் முடியும்.

நீங்கள் படித்த பெண். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, சொந்தக்கால்களில் நிற்க உங்களால் முடியும். உறவுகள் தராத பாதுகாப்பையும் நம்பிக்கையையும் படிப்பும் வேலையும் தரும். தைரியமாக இருங்கள்!

தோழி... உன் அப்பா, அம்மாவையும், மாமனார், மாமியாரையும் உட்கார வைத்து மனம்விட்டுப் பேசு. நீ ஒன்றும் துறவியில்லை. உனக்குக் கடைசி வரை துணை தேவை. கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று உனக்கு நடந்ததைக் கூறி, உன்னை விரும்பி திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நல்ல ஆண்மகனை மணந்து கொள். உன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டு மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்து! தினகரன்!
மிகச்சிறந்த ஆலோசனைகளை கூறியுள்ளார் , இந்த பெண் எடுக்க போகும் தைரியமான முடிவுகள் தான் இவரின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் , வாழ்த்துக்கள் சகோதரி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 6:13 pm

மிகவும் வருத்தமான செய்தி. இதுவும் ஒரு விதத்தில் விபச்சாரமே. ஆம் மனவிபச்சாரம்.
அப்பெண்ணின் வாழ்க்கை மீண்டும் துளிர்க்க இறைவனை வேண்டுகிறேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 6:23 pm

மனதிற்கு மிகவும் வருத்தமான செய்தி.
இப்படியும் சில மனிதர்கள் வாழத்தானே செய்கிறார்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக