புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
4 Posts - 4%
Rutu
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
2 Posts - 2%
prajai
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
2 Posts - 2%
Jenila
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
1 Post - 1%
manikavi
பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_m10பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவ மாற்றமும் "பஞ்ச' மிரட்டலும்


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Nov 24, 2012 5:01 pm

கே.என். ராமசந்திரன் தினமணி .



ஓய்வுபெற்ற தாசில்தார் நண்பர், ""ரேஷன் கடையிலே போய் அரிசி வாங்கிக்கொண்டு வருகிறேன்'' என்றார்.

""விலையில்லா அரிசியா? நல்ல தரமாக இருக்கா? சாப்பிடப் பிடிக்கிறதா?'' என்று கேட்டேன்.

""தரம் எப்படியிருந்தாலென்ன? வீட்டிலே நாலு நாய் வளர்க்கிறேனல்லவா, அவற்றுக்குச் சமைத்துப் போடத்தான் இந்த அரிசி! நாங்கள் சாப்பிட வெளிச்சந்தையில் நல்ல அரிசியாகப் பார்த்து வாங்குகிறோம்'' என்றார் அவர்!

நம் நாட்டின் விடுதலைக்குப்பின் பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், நாட்டில் அரை வயிற்றுக்கு மட்டுமே உணவு கிடைக்கப் பெறுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமானது. ஆண்டுதோறும் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களுக்கு உரிய தானியம் வளர்ப்பு நாய்களுக்குப் போய்ச் சேருகிறது! கிராமப்புற மக்களில் 87 சதவீதம் பேர் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்துள்ள உணவைக்கூடப் பெறுவதில்லை.

வயல்களின் உற்பத்தித்திறன் குறைந்துகொண்டே போகிறது. பெருமளவில் தானியங்கள் கால்நடைகளுக்கும் வளர்ப்புப் பறவைகளுக்குமான தீவனமாக மாற்றப்படுகின்றன. ஏற்றுமதி செய்யக்கூடிய உயர் ரகத் தானியங்களையும் பணப் பயிர்களையும் பயிரிட அரசு ஊக்குவிக்கிறது.

மனிதருக்கான உணவு தானியங்களின் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. இது போதாதென்று எரியன் உற்பத்தி செய்வதற்கு நீர்ப்பாசன வசதியுள்ள நஞ்சை நிலங்களில் காட்டாமணக்கைப் பயிரிட அரசு திட்டமிடுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேறு பயிர் நிலங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. முன்னுரிமைகள் தவறாகக் கணிக்கப்படுகின்றன.

தாராளமயமாக்கல் கொள்கைகளின் காரணமாக விவசாயத் துறையில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. விவசாயத் தொழிலாளர்களில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளிடு பொருள்களின் செலவு கூடியிருப்பதும் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காததும், பயிர்கள் அல்லது கால்நடைகளுக்கு உருப்படியான காப்பீட்டுத் திட்டங்கள் வகுக்கப்படாததும் விவசாயத்துறையைக் கடும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. விவசாயக் கடன்களைப் பெறுவதிலும் பல இடர்ப்பாடுகள் உள்ளன.

நிகர உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாகத் தனிநபர் பெறும் உணவு அளவு குறைந்துள்ளது. 1965-ஆம் ஆண்டு வரை தனிநபருக்கு ஆண்டுக்கு 140 கிலோ முதல் 170 கிலோ வரை உணவு கிடைத்தது. 1979 முதல் 1994 வரையான காலத்தில் அது 180 கிலோவாக உயர்ந்தது. அதன் பின்னர், அது 150 கிலோவாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது.

உணவுச் சூழ்நிலை, பருவநிலை மாற்றங்களாலும் வளிமண்டல வெப்பநிலை உயர்வாலும் மேலும் சீரழியும் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது. அதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது யாருக்குமே தெரியவில்லை. நிகழ் ஆண்டில் பருவ மழை ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் வருங்காலத்தில் நிகழப்போகிற பேராபத்துகளைக் கோடி காட்டி எச்சரிப்பதாக உள்ளது.

தெற்கு ஆசியாவின் விவசாயப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என ஊக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வளிமண்டலத்தின் வெப்பநிலை உயர்ந்தால் பயிரிடும் பருவம் குறையும். விவசாய உற்பத்தி 40 சதவீதம் வரை வீழ்ச்சியடையலாம் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல வெப்பநிலை ஆகியவற்றின் தீய தாக்கங்களின் பெரும் பங்கு மழைநீரின் தயவில் விவசாயம் செய்யும் பிரதேசங்களின் தலையில்தான் வந்து விடியப் போகிறது.

எதிர்காலத்தில் விவசாயத்துக்கு ஏற்படப்போகிற சோதனைகளையும் அவற்றின் காரணங்களையும் விளங்கிக்கொள்ள விவசாயிகளுக்கு மட்டுமன்றி ஆட்சியாளர்களுக்கும் திட்ட அலுவலர்களுக்கும், ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகளுக்கும், வங்கித் துறையினருக்கும் வர்த்தகக் குழும நிர்வாகிகளுக்கும் கூடப் பயிற்சியளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வந்த விவசாயக் கால அட்டவணைகளும் பயிர்ச் சுழற்சி முறைகளும் நிலைகுலைந்து வருகின்றன. எதிர்பாராத விதத்தில் எதிர்ப்படும் மாற்றங்களையும் பிரச்னைகளையும் உய்த்துணர்ந்து அவற்றுக்கேற்பத் தமது விவசாயம் மற்றும் தொழில் உத்திகளை மாற்றியமைத்துக்கொள்ள அவர்களுக்குப் போதனைகளும் உந்தல்களும் ஊக்குவிப்புகளும் தேவைப்படுகின்றன.

"பாட்ஸ்டாம்' வானிலைத் தாக்க ஆய்வுக் கழகம், இந்தியா எதிர்வரும் 200 ஆண்டுகளில் வளிமண்டல வெப்பநிலையில் ஏற்படக்கூடிய உயர்வு காரணமாக அதன் பருவமழை அமைப்பில் அதிக எண்ணிக்கையிலும் அதிகக் கடுமையுடனும் ஏற்படுகிற பொய்ப்புகளால் பெரிதும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கிறது.

இந்தியாவின் உயிர்நாடியான விவசாயம் பெருமளவில் பருவமழை சார்ந்ததாயிருப்பது காரணமாக இந்த ஆய்வுக் கழகத்தின் முன்னறிவிப்புகள் கவலையளிக்கின்றன. அவை ஊகிக்கிறபடி 40 - 70 சதவீத மழைக் குறைவு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும் வகையிலிருக்கும்.

தென்மேற்குப் பருவத்தில் இந்தியாவின் மழையில் 70 சதவீதத்துக்கு மேல் பெய்கிறது. அது ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்துவிடுகிறது. 21-ஆம் நூற்றாண்டு இறுதி முதல் 22-ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரையான காலத்தில் வளி மண்டல வெப்பநிலை உயர்வும், வசந்த காலத்தில் பசிபிக் கடலில் ஏற்படும் வெப்பச் சலனக் காற்றுச் சுழற்சியும் பருவ மழைப் பாங்கில் அதிக எண்ணிக்கையிலும் கூடுதலான கடுமை கொண்டவையுமான மாற்றங்களை ஏற்படுத்தும் என "சுற்றுச்சூழல் ஆய்வுக் கடிதங்கள்' என்ற இதழில் வெளியான ஒரு கட்டுரை பயமுறுத்துகிறது.

பசிபிக் வெப்பச்சலனக் காற்றுச் சுழற்சிகள் "வாக்கர் சுழல்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ளன. அவை இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதிகளில் உயர் காற்றழுத்த மண்டலங்களை உருவாக்குகின்றன. ஆனால், "எல் நினோ' விளைவு உண்டாகும் ஆண்டுகளில் இந்த உயர் காற்றழுத்த மண்டலங்கள் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் உருவாக முனைகின்றன. அதன் காரணமாக இந்தியப் பரப்பின் மேல் வானில் காற்றழுத்தம் உயர்ந்து பருவ மழை பலவீனப்படத் தொடங்கும். குறிப்பாகப் பருவ மழைக்காலம் தொடங்குகிற வசந்த காலத்தில் இந்தச் செயல்பாடு நிகழ்கிறது.

மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாசனச் சிக்கனம் போன்ற நடவடிக்கைகளுடன் மக்கள் தம் உணவுப்பழக்கங்களையும் மாற்றிக்கொண்டு காய்கறிகள், கீரைகள், புலால், மீன் போன்ற உணவுகளையும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். விலையிலா அரிசிக்குப் பதிலாகப் புஞ்சைத் தானியங்களைக் கிராமப் புறங்களிலாவது வழங்க வேண்டும்.

இயற்கை உரங்களும், தொழு உரங்களும் தழை உரங்களும் நிலத்தின் ஊட்டச்சத்துச் செறிவையும், நீர் பிடிப்புத் திறனையும் அதிகரிக்க உதவும். அவற்றை அதிக அளவில் பெறத் தழைத் தாவரங்களை வரப்புகளில் வளர்க்க வேண்டும்.

நீர் நிலைகளில் பரவி இடைஞ்சல் செய்யும் ஆகாயத் தாமரையை நல்ல தழை உரமாக மாற்ற முடியும். அதைக் காயவைத்து எரியனாகப் பயன்படுத்தலாம். சாண எரிவாயுக் கலங்களிலும் அதைப் பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்ய முடியும். அதிலிருந்து காகிதம்கூடத் தயாரிக்கலாம்.

மலைச்சரிவுகளில் பெய்யும் மழை வேகமாகக் கீழே ஓடி நில அரிப்பையும் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க அதன் பாதைகளைத் திருப்பி விடும் வகையில் தடுப்பணைகளையும் வரப்புகளையும் அமைக்க வேண்டும். அதன் மூலம் நீர் மண்ணுக்குள் இறங்கி நிலத்தடித் தேக்கங்களை நிரப்பும். மலைச்சரிவுகளில் படிக்கட்டு வடிவ வயல்களை அமைத்துப் பயிரிடலாம்.

இந்தப் பணிகளுக்கெல்லாம் பெரிய அறிவியல் படிப்புகளும் நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களும் தேவையில்லை. இந்தியர்கள் ஐயாயிரம் ஆண்டுகள் அனுபவமுள்ள விவசாயிகள். தம் பட்டறிவின் மூலம் பல சிறந்த சாதனங்களையும் பயிர் வளர்ப்பு முறைகளையும் புதுப்புனைவு செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மறந்துபோன அல்லது மறைந்துபோன உத்திகளை மீட்டெடுத்துப் பயன்படுத்துவது கடினமல்ல. ஆனால், வளிமண்டல வெப்பநிலை உயர்வையும் அதன் காரணமாகத் தோன்றும் பருவ கால மாற்றங்களையும் யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

முற்காலத்தில் மன்னர்களும் மக்களும் நெடுநோக்குடன் செயல்பட்டுக் குளங்களையும் ஏரிகளையும் நிர்மாணித்து வைத்தார்கள். இன்று குறுகிய நோக்குடன் செயல்பட்டு அரசும் மக்களும் அவற்றைக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.

தொழிற்புரட்சிக்குப் பின்தான் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு அதிகரித்து வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு வழிகோலியது. அறியாமை காரணமாக அஜாக்கிரதையாகக் கையாளப்பட்ட "குளோரோ-புளோரோ கார்பன்' வாயுக்கள் 40 ஆண்டுக்காலம் மேல்நோக்கிப் பயணம் செய்து இன்று "ஓசோன்' படலத்தில் ஓட்டை போடுகின்றன.

இவ்வாறு மனிதன் நீண்டகாலமாகச் செய்துவரும் தவறுகளே இன்றையச் சிக்கல்களுக்குக் காரணம். அவற்றை நிவர்த்திக்கவும் நீண்ட காலம் பிடிக்கும். எனினும், அதற்கான முதல் அடிகளை இன்றே எடுத்து வைக்க வேண்டும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Nov 24, 2012 8:34 pm

சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 8:35 pm

தேர்தல் வரும்போது மக்கள் கொஞ்சம் தலையால சிந்திச்சி செயற்படனும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக