புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
17 Posts - 2%
prajai
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_m10உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 6:15 am

உயர் இரத்த அழுத்த நோயைக்
கவனத்தில் எடுங்கள்!

Dr.M.K.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL)

குடும்ப வைத்திய நிபுணர்

Blood Pressure Measuringநீங்கள் உங்கள் வைத்தியரிடம் ஏதோ காரணத்திற்காகச் செல்கிறீர்கள். அவர் உங்களைப் பரிசோதிக்கும்போது உங்களது பிரஸரையும் பரிசோதித்துப் பார்க்கிறார். அப்போது அவர் உங்களது பிரஸர் அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படாதீர்கள். 'எனக்கு தலைச்சுற்று இல்லை, தலையிடி இல்லை, களைப்போ சோர்வோ இல்லை, ஆனால் அவர் பிரஸர் என்று சொல்கிறாரே' இதுவே உங்கள் ஆச்சரியத்திற்குக் காரணம். ஆனால் ஆச்சரியப்படுவதற்கு நியாயம் இல்லை. ஏனெனில் பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். உங்களைப் போலவே இன்னும் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்.

ஆனால் எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.

* பிரஸர் உங்களது இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.

* உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

* பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.

* சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal Failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.

* பார்வை இழப்பு நேரிடலாம்.

காலம் செல்லச் செல்லவே இத்தகைய நோய்களும் அவற்றின் அறிகுறிகள் வெளியே தெரிய வரும். இறுதியில் ஆபத்தான விளைவுகளையும் எதிர் கொள்ள நேரிடலாம். வெளிப்படையான அறிகுறிகள் இல்லாத காரணத்தால்தான் இந்நோயை ஷஅமைதியான கொலையாளி' என்று சிலர் விபரிப்பதுண்டு.

ஏனெனில் பலர் மாரடைப்பு அல்லது பாரிசவாதம் ஏற்பட்ட பின்னரே தமக்கு பிரஸர் இருந்திருப்பதை அறிகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது.

பிரஸர் நோயை வைத்திய ரீதியில் உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension) என்கிறார்கள்.
யாருக்கு இந்நோய் வரும்?

எவருக்குமே உயர் இரத்த அழுத்த நோய் வரலாம். ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். எனவே இத்தகையவர்கள் உயர் இரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தமது இரத்த அழுத்த அளவை தமது வைத்தியர் மூலம் அளந்து பார்ப்பது அவசியமாகும்.

தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் எனலாம்.

* வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

* உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.

* அதீத எடையுள்ளவர்கள்

* புகைப்பவர்கள்

* அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.

* தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.

* கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள். கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.

சாதாரண பிரஸர் என்பது எவ்வளவு?

முதலில் இரத்த அழுத்தம் என்றால் என்னவென்று பார்ப்போம். உங்களது இரத்தக் குழாய்களின் சுவர்களின் மீதான உங்கள் இரத்தத்தின் அழுத்தம்தான் இரத்த அழுத்தமாகும். இது ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே அளவில் இருப்பதில்லை. அவ்வவ் நேர வேலைகளுக்கு ஏற்ப அது அதிகரிக்கவோ இறங்கவோ செய்யும். ஆனால் அது தொடர்ந்து அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension) எனப்படுகிறது.

உங்கள் உடலிலுள்ள இரத்தம் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் ஹோர்ஸ் பைப் போன்று இருதயத்திலிருந்து இரத்தக் குழாய்களுடாகப் பயணம் செய்து உடலின் பல்வேறு பகுதிகளையும் அடைகிறது. தண்ணீர் தாங்கி உயரத்தில் இருந்தால் ஹோர்ஸ் பைப் ஊடாக வரும் நீர் கூடிய அமுக்கத்தில் வரும். மாறக தண்ணீர் தாங்கி பதிவாக இருந்தால் ஹோர்ஸ் பைப் ஊடாக வரும் நீர் குறைந்த அமுக்கத்திலேயே வரும்.
இதே போன்று உங்கள் இருதயத்திலிருந்து வரும் இரத்தத்தின் அமுக்கத்திலும் வேறுபாடுகள் இருக்கின்றன.

சாதாரண இரத்த அழுத்தம் 120/80 mm Hg எனப்படுகிறது. இரத்த அழுத்தத்தை இரு அலகுகளால் குறிக்கிறார்கள். இதில் மேலே இருக்கும் எண்ணான 120 என்பது இருதயம் சுருங்கும் போது இருக்கும் இரத்த அழுத்தமாகும். இதனை Systolic blood pressure(SBP) சுருக்கழுத்தம் என்பார்கள். கீழே இருக்கும் எண்ணான 80 என்பது இருதயம் விரிவடையும் போது இருக்கும் இரத்த அழுத்தமாகும். இதனை Diastolic blood pressure(DBP) விரிவழுத்தம் என்பார்கள்.

ஆனால் இரத்த அழுத்தம் எப்பொழுதும் இதே அளவுகளில் இருக்கும் என்று சொல்ல முடியாது. சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் அது முன்பு கூறிய 120/80 mm Hg ற்கு அண்மையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகெங்கும் ஒரு முக்கிய மருத்துவப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இலங்கையிலும் இது முக்கிய பிரச்சினையே. இலங்கையில் ஏற்படுகின்ற இறப்புகளில் 15% ற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் என்று அறிகிறோம்.

எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மருத்துவ உதவியை நாடுங்கள். இல்லாவிட்டால் கூட உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுப்பதற்கான வாழ்க்கை முறைகளை அனுசரியுங்கள்.

அத்துடன் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதும், அதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும் ஆபத்தான பின் விளைவுகளைத் தடுக்கும் என்பதை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும்?

சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 mm Hg எனப் பார்த்தோம்.

இது 140/90 க்கு மேல் உயர்ந்தால் அது உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 2/3 பகுதியினர் உயர் இரத்த அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 55 வயதிலும் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வராவிட்டால் இனி ஒருபோதும் வராது என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். 55 வயதிற்கு மேல் அது வருவதற்கான வாய்ப்பு 90% ஆகும்.

உங்கள் பிரஸர் 120/80 ற்கும் 139/89 ற்கும் இடையே இருந்தால் அதனை முன் உயர் இரத்த அழுத்தம் (Pre HyperTension) என்பார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கு உங்களை மாற்றாவிட்டால் எத§ர்காலத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே.

ஆயினும் இது 130/85 க்கு அதிகமானால் நீங்கள் வைத்திய கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். எனினும் இந்த அளவு இரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு சிகிச்சை ஏதும் உடனடியாகத் தேவைப்படாது. பிரஸர் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களையும், உணவு முறையிலும் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

பிரஸர் 140/90 க்கு மேற்பட்டால் உங்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். இதற்காக மருந்துகள் உபயோகிக்கும் போது பிரஸரை 130/85 க்குக் கீழ் குறைப்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

உங்களுக்கு நீரிழிவு, சிறுநீரக நோய், கொலஸ்டரோல் போன்ற வேறு ஏதாவது பிரச்சனையும் சேர்ந்திருந்தால் உங்கள் பிரஸரை மேலும் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது 130/80 என்ற அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே. தனியாக மேல் உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.

பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

1)உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்

2)உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்

3)உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள்

4)உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.

5)புகைத்தலைத் தவிருங்கள்.

6)மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.

7)உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.

எடையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறையுங்கள்!
உங்கள் உயரத்திற்கு இருக்க வேண்டியதை விட 'அதிக எடை' உள்ளவராக இருப்பதும் (Over Weight), 'அதீத எடை' (Obese) உள்ளவராக இருப்பதும் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டு வரும். உங்கள் எடை அதிகரிக்க அதிகரிக்க உங்கள் இரத்த அழுத்தமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். மாறாக உங்கள் எடையைக் குறைத்தால் உங்கள் இரத்த அழுத்தமும் குறையவே செய்யும்.

அதிக எடையும் (Over Weight), அதீத எடையும் (Obese) இருதயநோய்களைக் கொண்டு வரும் காரணிகளாகும். அத்துடன் அவை உங்கள் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவையும் அதிகரிக்கச் செய்யும். அதிக எடையும் அதீத எடையும் நீரிழிவு நோயையும் கொண்டு வரலாம்.

உங்கள் எடை சரியான அளவில் இருக்கிறதா என அறிய உடற் திணிவுக் குறியீட்டைக் (BMI) கொண்டு கணிப்பார்கள். எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் கொழுப்பாகும். உங்கள் உடற் கொழுப்பானது முக்கியமாக வயிற்றறையில் இருந்தால் அது கூடிய ஆபத்தானது. வயிற்றறைக் கொழுப்பை வயிற்றின் சுற்றளவு கொண்டு கணிப்பார்கள்.

இவை பற்றி மேலும் தெளிவாக அறிந்து கொள்ளவும், எடையைக் குறைக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளவும் டொக்டர்.எம்.கே.முருகானந்தனின் 'எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்' என்ற நு¡லைப் பாருங்கள்.

உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியைப் படிப்படியாகவும், நிதானமாகவும் செய்யுங்கள். உங்கள் தற்போதைய எடையில் 10 சதவிகிதத்தைக் குறைப்பதையே இலக்காகக் கொள்ளுங்கள். அதையும் படிப்படியாகவே செய்யுங்கள். வாரத்திற்கு நூ முதல் 1 கிலோவிற்கு மேல் குறைக்க எத்தனிக்க வேண்டாம்.

ஒரு இறாத்தல் என்பது 3500 கலோரிக்குச் சமனாகும். எனவே வாரத்தில் ஒரு இறாத்தலைக் குறைக்க வேண்டுமாயின் நீங்கள் உங்கள் உணவில் 500 கலோரியைக் குறைக்க வேண்டும் அல்லது 500 கலோரியை மேலதிக உடற்பயிற்சி மூலம் கரைக்க வேண்டும்.

நீங்கள் எதை உண்கிறீர்கள் என்பதைப் போலவே எவ்வளவு உண்கிறீர்கள் என்பதும் முக்கியமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

உடலுழைப்பை அதிகரிப்பதின் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறையுங்கள்!



நன்றி தமிழ்குடும்பம்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Oct 13, 2009 11:06 am

உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Icon_eek அருமையான தகவல்கள்

இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 11:13 am

* வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

* உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.

* அதீத எடையுள்ளவர்கள்

* புகைப்பவர்கள்

* அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.

* தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.

* கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள். கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.




நன்றி "தாமு"

உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள் தான் என்னைப்போன்ற பலர்.

முன் எச்சரிக்கையோடு இருந்துகொள்ள தகவல் தேடித்தந்தமைக்கு நன்றி

நன்றி



உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Eegaraitkmkhan
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Logo12
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Oct 13, 2009 11:24 am

எனக்கும் அதே தான் . உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் 67637

வெறும் மூளை உழைப்பு உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் 502589

உடற்பயிற்சியை இன்று மாலை முதல் தொடங்குவோம் உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Icon_basketball உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் 938222

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 12:59 pm

உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் 678642 உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் 678642
எக்சசைஸ் பன்னலாம்...

கேம் விளையாடலாம்

துணி துவைக்கும் இயந்திரம் உபயோகிக்காமல கயில் தோய்யுங்கள்.

வாங்கிங்கு போகலாம்... உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் 154550

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 1:10 pm

நன்றி நன்றி நன்றி



உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Eegaraitkmkhan
உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 13, 2009 2:10 pm

மிகவும் சிறந்ததோர் மருத்துவத்தகவல், நன்றி தாமு!



உயர் இரத்த அழுத்த நோயைகவனத்தில் எடுங்கள் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக