புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
72 Posts - 53%
heezulia
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10இதிலுமா வாக்கு வங்கி? Poll_m10இதிலுமா வாக்கு வங்கி? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிலுமா வாக்கு வங்கி?


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 5:44 pm



டிசம்பர் 3-ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேரும் விடுதலை செய்யப்பட்டு டிசம்பர் 13-ஆம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தனர்.

இந்த 40 பேரும் கைது செய்யப்பட்டபோது தமிழக மீனவர்களிடத்தில் வழக்கமான கொந்தளிப்பு குறைவாக இருந்தது. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு மீதான குற்றச்சாட்டும் ஒலிக்கவில்லை. இதற்குக் காரணம், இலங்கைக் கடற்படை கைது செய்த 40 பேரும் சென்ற 5 படகுகளும் மீன்வளத் துறையின் டோக்கன் (அடையாள ரசீது) பெறாமல் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவை என்று கூறப்படுவதுதான்.

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு படகு உரிமையாளரும் ஒவ்வொரு முறையும் டோக்கன் பெற்றுத்தான் கடலுக்குள் சென்றாக வேண்டும். இதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. படகுகளுக்கான நங்கூர அனுமதி பெற மட்டுமே சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது ஒரு பேருந்து எந்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று உரிமம் வழங்குவதைப் போல, ஒரு படகு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மீன் பிடிக்கலாம் என்பதற்கு தான் இத்தகைய நங்கூர அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது பிடிபட்ட 5 படகுகளில் 3 படகுகள் நாகை பகுதிக்கு நங்கூர அனுமதி பெற்றவை. ஆனால் காரைக்காலில் இருந்து இயக்கப்படுகின்றன. சட்டப்படி இது குற்றம். ஆனால் வாக்குவங்கிக்காக இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.

அடையாள ரசீது பெறும்போது, படகின் நங்கூர அனுமதி எண், படகில் கொண்டு செல்லப்படும் பொருள்கள், வலைகள் எண்ணிக்கை, மீனவர்கள் பெயர் முகவரி அனைத்தும் பதிவு செய்துகொள்ளப்படுகிறது.

இத்தகைய டோக்கன் இல்லாமல் கடலுக்குள் சென்ற படகுகளை இலங்கைக் கடற்படை மடக்கிப்பிடித்தால், இலங்கை அரசு மூலமாகத்தான் நமக்கு இவர்கள் கைது செய்யப்பட்டது தெரியவருகிறது. அந்த நேரத்தில் இவர்கள் சென்ற படகு எது என்பதும் தெரியாமல், அதில் பயணம் செய்தவர்கள் எத்தனை பேர், யார்யார் என்றும் விவரம் தெரியாமல் தமிழக அரசும் மீனவளத் துறையும் குழம்புகின்றன. இந்தியத் தூதரகம் மூலமாகத்தான் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களைப் பெறும் அவல நிலைமை இருக்கிறது. ஆனால், வாக்கு வங்கிக்காக இதைச் சகித்துக்கொள்கிறார்கள்.

இது பற்றித் தமிழக அரசும் மீனளத் துறையும் ஏன் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்றால் அரசியல் நெருக்கடி மட்டுமே காரணம். மீனவர்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள இத்தகைய மீறல்கள் குறித்து அரசியல் கட்சிகளோ, தமிழக அரசோ, மத்திய அரசோ வெளிப்படையாகப் பேசுவதில்லை.

கடந்த செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் தமிழக அரசுக்கு எழுப்பிய கேள்வி இதுதான். "ஏன் எப்போதும் மத்திய அரசையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரத்தில்தானே இருக்கிறது. கடலோர காவல்படை உங்களிடம் இருக்கிறதே, ஏன் இந்திய கடற்படையுடன் சேர்ந்து மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடாது? எல்லை தாண்டி செல்வது மட்டும்தானே இப்போதைய பிரச்னையாக இருக்கிறது. இதை சரிசெய்ய முடியாதா?'

நீதிமன்றத்தின் கேள்வி நியாயமானதுதான். இன்றைய பிரச்னை எல்லை தாண்டி மீன்பிடிப்பது ஒன்று மட்டுமே!

தமிழக மீனவர்கள் மூலமாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பெட்ரோலியப் பொருள்கள், மருந்து மாத்திரைகள் போன்ற இன்றியமையா பொருள்கள் சென்று கொண்டிருப்பதாகவும், இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு வந்து சென்று கொண்டிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இருந்தது. அந்தக் குற்றச்சாட்டை முன்னிறுத்தியே இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்துவதாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியக் கடற்படையும்கூட சொல்லிவந்தது. ஆனால், இன்றைய நிலைமை அதுவல்ல. கடல் எல்லையைத் தாண்டிப்போய் மீன் பிடிப்பது ஒன்று மட்டுமே தமிழக மீனவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

சர்வதேச எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் அனைத்துப் படகுகளிலும் கடலின் ஆழம் அறியும் எகோ சவுண்ட் கருவி, மீன்அடர்வு அறியும் ஃபிஷ்ஷிங் ஃபைன்டர், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டும் ஜிபிஎஸ் கருவி மூன்றும் இருக்கவே செய்கின்றன. இதையும் மீறி, தெரிந்தே கடல் எல்லையைக் கடப்பவர்கள்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது. தெரிந்தே எல்லை தாண்டுபவர்களுக்காக, அரசியல் காரணங்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பது சரியாக இருக்குமா?

இந்த சிறிய விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையாக மாறாமல் தடுக்க வேண்டுமானால் சில எளிமையான கட்டுப்பாடுகளையும், வெளிப்படைத்தன்மையையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

மீன்வளத் துறையிடம் அடையாள ரசீது பெறாமல் கடலுக்குள் சென்று, இலங்கைக் கடற்படை கைது செய்தால், அத்தகைய மீனவர்களுக்காக தமிழக அரசு குரல் கொடுக்காது, அவர்கள் இறக்க நேரிட்டால் அவர்தம் குடும்பத்துக்கு இழப்பீடு கிடையாது என்று அறிவித்து, அதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்யும்போது, இந்த நடவடிக்கையைக் கட்டாயமாக விடியோ செய்து இந்திய அரசிடம் ஒரு பிரதியைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.

சிங்கள ராணுவத்தின் தமிழினப் படுகொலையைப் பார்க்கும் அதே நோக்குடன், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதையும் பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. தமிழக மீனவர்கள் கைது விவகாரம் எல்லை மீறிய தொழில் தகராறு. அதை அரசியலாக்குவதும், அரசியல் ஆதாயமாக்கப் பார்ப்பதும் தவறு!


தினமணி




இதிலுமா வாக்கு வங்கி? Mஇதிலுமா வாக்கு வங்கி? Uஇதிலுமா வாக்கு வங்கி? Tஇதிலுமா வாக்கு வங்கி? Hஇதிலுமா வாக்கு வங்கி? Uஇதிலுமா வாக்கு வங்கி? Mஇதிலுமா வாக்கு வங்கி? Oஇதிலுமா வாக்கு வங்கி? Hஇதிலுமா வாக்கு வங்கி? Aஇதிலுமா வாக்கு வங்கி? Mஇதிலுமா வாக்கு வங்கி? Eஇதிலுமா வாக்கு வங்கி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:55 pm

பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வரும் பிரச்சினை .என்று தான் தீருமோ ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக