புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
உலகின் முதல் நாகரீகம் Poll_c10உலகின் முதல் நாகரீகம் Poll_m10உலகின் முதல் நாகரீகம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் நாகரீகம்


   
   
diron
diron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 26/12/2012

Postdiron Wed Dec 26, 2012 2:23 pm

உலகின் மிகப் பழமையான நாகரீகம் எதுவென கேட்டால் உடனே பலறும் முன் நிறுத்திச் சொல்லுவது கிரேக்க, எகிப்த்திய அல்லது பாபிலோன் நாகரீகத்தைத் தான். ஆனால் இதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதல் நாகரீகமாய்த் தோன்றி பிற நாகரீகங்கள் உருவாக காரணமாய் இருந்தது இந்திய நாகரீகம் என்று நம்பப்படுகிறது. இது எந்த வகையில் உன்மையானது என்பதை மெய்ப்படுத்தவே இந்த தொடர் தொகுப்பு உருவாகியுள்ளது.

நன்றி: அமேசிங் தமிழ்ஸ்

முழுப் பதிவை தந்த சின்னவனுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 26, 2012 2:51 pm

டிரான் மற்ற பதிவில் பாலா சொன்னதுபோல் - முழு பதிவையும் தாருங்கள்.




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 2:52 pm

உலகின் முதல் நாகரீகம்

உலகின் மிகப் பழமையான நாகரீகம் எதுவென கேட்டால் உடனே பலறும் முன் நிறுத்திச் சொல்லுவது கிரேக்க, எகிப்த்திய அல்லது பாபிலோன் நாகரீகத்தைத் தான். ஆனால் இதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதல் நாகரீகமாய்த் தோன்றி பிற நாகரீகங்கள் உருவாக காரணமாய் இருந்தது இந்திய நாகரீகம் என்று நம்பப்படுகிறது. இது எந்த வகையில் உன்மையானது என்பதை மெய்ப்படுத்தவே இந்த தொடர் தொகுப்பு உருவாகியுள்ளது.
வரலாற்று அறிஞர்கள் பார்வையில் இந்திய நாகரீகத்தின் தொன்மை வெறும் 6500 – 4500 ஆண்டுகளுக்கு முந்தையதாகப் பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இதன் தொன்மையை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீம் குறித்த ஆய்வை மேற்கொள்பவர்களை இண்டாலஜிஸ்ட் (Indologist) என்று அழைப்பதுண்டு. இவ்வாறான ஆய்வாளர்கள் சமீப காலத்தில் பன் மடங்கு உயர்ந்துள்ளனர். துரதிர்ஷ்ட வசமாக இம்மாதிரியான ஆய்வாளர்கள் இந்தியாவில் சொற்ப்பமாகவே உள்ளனர்.
உலகின் முதல் மனித நாகரீகம் உறுவான இடம், மனிதன் எங்கிருந்து எவ்வாறு எந்தெந்த காலகட்டத்தில் எங்கெங்கு இடம் பெயர்ந்தான் என்று பல கோணங்களில், மொழி, கலை, கலாச்சாரம், அரசியல், மதம், நம்பிக்கை, வழிபாடு, விளையாட்டு என பல அம்சங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்தியாவை தொடர்பு படுத்தி முடிவடைகின்றன.
இவ்வாறான ஆராய்ச்களில் தமது வாழ் நாளின் பெரும் பகுதியை தனது மனைவியுடன் இணைந்து ஈடுபடுத்திக் கொண்டவர் வில் டுராண்ட் (Will Durant). இவர் ஒரு அமெரிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர். மனிதனின் வரலாற்றைத் தேடி உலகின் பல தொன்மையான நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பை “கலாச்சாரங்களின் வரலாறு” (The Story of Civilization) என்று தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். மொழி, கலை, வழிபாடு, கலாச்சாரம், அரசியல், விளையாட்டு என அனைத்து கோணங்களிலும் ஆய்வுகளை நடத்தி உலக கலாச்சார வரலாற்றுப் பிண்ணனியில் ஆச்சரியமூட்டும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். 10 பாகங்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட புத்தகத்தின் முதல் பகுதி “Our Oriental Heritage” என்ற தலைப்பில் உருவானது. அதில் அவர் உலகின் மிகத் தொண்மையான நாகரீகமாய் இந்தியாவைக் குறிப்பிடுகிறார். இதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் முன் வைக்கிறார். மேலும் கி.மு 9ஆம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கான கடல் வழியை அறிந்திருந்தார்கள். அதன் மூலமாக மெசப்பட்டோமிய, எகிப்த்து, அரேபியா போன்ற நாடுகளில் தங்களுடைய நாகரீகத்தை அப்போதே நிறுவினார்கள் என்றும் சான்றுகளோடு நிரூபனம் செய்கிறார்.
உலகின் பல்வேறு நாகரீகம் சிதைந்து கொண்டிருந்த வேலையில் இந்திய நாகரீகம் மட்டும் செழித்து வளம் பெற்றிருந்தது. 20ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கு கிடைத்த பொற்காலம் என்றே கூறலாம். இந்தியாவில் புனையப்பட்ட கட்டுக்கதைகளாக கருதப்பட்ட பல வரலாறுகளும், நடைமுறைகளும் வரலாற்று மற்றும் அறிவியல் அங்கீகாரம் பெறத் தொடங்கின. “The Story of India” என்ற தலைப்பில் வெளிவந்த இந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வுப் படத்தில் மைக்கல் வூட்ஸ் (Michael Woods) என்னும் அறிஞர் தென்னிந்தியாவை “வாழும் நாகரீகம்” என்று இன்றளவும் இந்திய நாகரீகம் பேனிக் காக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.
முனைவர் அருணால்டு ஜோஸப் டொய்ன்பீ (Dr. Arnold Joseph Toynbee) இந்தியாவைப் பற்றி குறிப்பிடும் போது “மேலை நாட்டின் அடிப்படையில் தொடங்கும் கலாச்சாரம் இந்திய வழியில் தான் முடிவடைய வேண்டும். இல்லையேல் இந்த மனித இனம் ஒரு மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். இந்த மிக இக்கட்டான கால சூழ் நிலையில், இந்திய கலாச்சார முறையைப் பின்பற்றுவது தான் ஒரே வழி. இதில் மட்டுமே மனித இனம் ஒற்றுமையையும் உயர்ந்த சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்”என்கிறார்.
1952 இல் அவர் குறிப்பிட்ட ஒரு செய்தி என்ன்வென்றால்“இன்னும் 50 ஆண்டுகளில் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க கலாச்சாரத்தின் மோகத்திலும், ஆதிக்க கரங்களிலும் அடிமையாகி விடும். ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் பின் நாளில் மதம் அறிவியலின் இடத்தைப் பிடிக்கையில் இந்தியா தன்னை ஆட்சி செய்தவர்களை எல்லாம் ஆட்சி செய்யும்.” என்று இந்திய கலாச்சாரத்தின் பெருமையை பறைசாற்றுகிறார்.
இந்தியாவின் வரலாறு இதுவென மனிதன் குறிப்பிடும் காலத்திற்க்கு பல்லாயிரமாண்டு மந்தைய வரலாற்றையும் தொன்மையையும் கொண்டது இந்தியா. உலகிற்கு இந்தியா கொடுத்த இரண்டு மாபெரும் மொழிகள், தமிழும் சமஸ்கிருதமும். மேற்கத்திய மொழிகள் அனைத்தும் இந்த இரண்டு ஆதி மொழிகளில் இருந்து உருவானது தான் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் வெளியாகும் போர்ஃப்ஸ் பத்திரிக்கை 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு செய்தி : “சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளை விட தொன்மையானது மற்றும் வளமானது. இது கணிணியில் பயன்படுத்த பிற மொழிகளைக் காட்டிலும் மிகச் சிறந்தது.” இதே போல் பிரிட்டனில் வெளியாகும் தி மிரர் நாளிதல் வெளியிட்ட செய்தி ” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிடுகிறது.
இது போல இந்திய கலாச்சார சுவடுகளும் நடைமுறைகளும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல மூலைகளிலும் நிலைப்பெற்றுள்ளன. ஆரியர்களின் (இங்கே ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுவது இந்தியர்களைத் தான். மேலும் இது குறிப்பாக தென்னிந்தியர்களையே குறிக்கும்) சுவடுகள் தெங்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கின்றன. இவர்கள் கடல் பிரயானத்திலும் கலாச்சாரத்திலும் அதீத வளர்ச்சிப் பெற்றிருந்தனர். பல ஆய்வுகளின் அடிப்படையில் இவர்கள் ஜாவா, பாலி, சுமத்ரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ், வியட்னாம், அன்னான், பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய தேசங்களில் 14ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்து தெரிய வருகிறது. இன்றும் கூட தாய்லாந்து அரச்சர்கள் ராமாயண புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வமான ராமரின் பெயரை தங்களது புனைப்பெயர்களாக சூட்டி வருகின்றனர். ராமாயண புராணம் பாங்காகின் தொன்மையான அரண்மனை சுவருகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் பண்டைய காலத்தில் “சாம்பா” என்றழைக்கப்பட்டது. இந்த நாட்டில் இந்திய கலாச்சாரம் மிக வேகமாக பரப்பப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் ஒடிசாவைச் சேர்ந்த களிங்க மன்னனால் தான் “ஜாவா” எனும் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜாவாவைத் தான் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள “யவ – தீபா” என்னும் சொல் குறிப்பதாக கருதப்படுகிறது. இந்தோனேஷிய தேசிய சின்னத்தில் கருடன் என்னும் பறவையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த கருடன் இந்திய புராணங்களில் விஷ்ணுவின் வாகனமாக குறிப்பிடப்பட்டுள்ளது.கம்போஜா என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பெற்ற தற்போதைய கம்போடியாவில் உலகிலேயே மிகப் பெரிய விஷ்ணு கோவில் உள்ளது. அங்கோர் வாட் என்ற அந்த கோவிலைக் கட்டியது இரண்டாம் சூரியவர்மன் என்னும் இந்திய மன்னன். உலக புராதானச் சின்னங்களில் ஒன்றாக ஐ.நா வால் அறிவிக்கப்பட்ட இக் கோவில் கம்போடிய நாட்டு தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் என்றும் அங்கோர் என்பது தலை நகரம் என்பதைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

1949இல் கோர்டன் எக்ஹோல்ம் (Gorden Ekholm) மற்றும் சமன் லால் (Chaman Lal) ஆகிய இரண்டு அற்ஞர்கள் இந்திய கலாச்சாரத்தை மாயன், அஸ்டெக், இன்கா மற்றும் வட அமெரிக்க கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு பல ஆய்வுகளைத் தொடங்கினர். அவர்களின் ஆய்வில் இந்த அனைத்து நாகரீகத்தினருடைய கால கணக்கீடு, வழிபாட்டுக் கடவுள்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் இந்திய நாகரீகத்தோடு தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம் அமெரிக்காவில் பரவியிருந்தமைக்கு பல சான்றுகள் கிடைத்தது (தாமரை மலர்களில் கடவுள், பாம்பு வடிவில் கடவுள், பாதி மீன் உறுவில் கடவுள் என பல ஓவியங்களும், சிற்பங்களும் இதில் அடங்கும்). மேலும் தென்னிந்தியாவில் பச்சிஸி (தாயம்) எனும் விளையாட்டு மெக்ஸிகோவில் பட்டோலி என்ற பெயரிலும் பர்சேசி என்ற பெயரிலும் பண்டைய காலத்திலேயே இருந்தது.
இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தனர். இரண்டு கலாச்சாரத்திலுமே காலக் கணக்கீடு நாங்கு யுகங்களாக பிறிக்கப்பட்டிருந்தன. இரு முறைகளிலுமே 12 நட்சத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமெரிக்கரின் ஆட்சி முறை மற்றும் கோவில்களில் தேவ தாசிகள் இருத்தல் என பல்வேறு ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகள் அமெரிக்க கலாச்சாரத்தைத் தோற்றுவித்தவர்கள் இந்தியர்கள் என்னும் உன்மையை பறைசாற்றுகிறது.
மெக்ஸிகன் ஆர்க்கியாலஜி என்னும் புத்தகத்தை எழுதிய ராமோன் மெனா என்னும் அறிஞர், நஹுஅல், சாபொடெகா மற்றும் மாயன் கலாச்சார மொழிகள் இந்தியாவில் இருந்து உருவானது என்று தம்முடைய மொழி ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய கலாச்சாரம் தோற்றுவித்த பல கலாச்சாரங்களை அடுத்து வரும் பகுதிகளில் காணலாம்…..




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 2:52 pm

உலகின் முதல் நாகரீகம் - 2
1949இல் அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அதே வரலாறு தான் கொலம்பஸ் முதன் முதலாக அமெரிக்காவில் தரையிரங்கிய போது ஒரு மனித இனத்தைக் கண்டதாகவும் அவர்களை இந்தியர்கள் என்று எண்ணி கொலம்பஸ் அவர்களை இந்தியர்கள் என்றழைத்து பின் நாளில் அவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்றும் அமெரிக்க இந்தியர்கள் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்றால் அங்கிருந்த மனிதர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? கொலம்பஸ்க்கு முன் அழகும் ஆபத்தும் நிறைந்த அட்லாண்டிக் கடல் பகுதியை கப்பல்கள் கடந்தனவா? வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் முந்தய கால வரலாற்றை தொடர்ச்சியாக பல ஆராய்ச்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், வல்லுனர்கள் தெரிவிக்கும் உன்மைகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. இதன் மூலம் உலகம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இழைத்த அநீதி வெளிப்படுகிறது. முனைவர் பேரன் ரோபர்ட் ஃப்ரெய்ஹெர் வான் ஹைன் கெல்டெர்ன் (Dr Baron Robert Freiherr von Heine Geldern) மற்றும் கோர்டொன் எக்ஹோம் (Gordon F. Ekholm) என்ற உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால்: “இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஃபா – ஹைனை (கி.பி. 399 – 414) ஏற்றிச் சென்ற மிகப் பெரிய அளவுடைய கப்பல்களுக்கு மெக்ஸிகோவையும், பெருவையும் அடைந்திருப்பது சாத்தியமில்லாமல் இருந்திருக்காது. ஐரோப்ப நாடுகளில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல்களை விட நினைத்துப் பார்ப்பதற்கு கூட முடியாத பன் மடங்கு பெரிய வலுவான கப்பல்களை கொலம்பஸ் பிறப்பதற்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் உபயோகித்தனர்.” ஸ்பெய்ன் வரலாற்று ஆய்வாளர் திரு. ஃப்ரே ஷாஹௌன் (1515 கி.மு) அவர்களது காலத்தில் இருந்து இன்று வரை அமெரிக்காவின் வரலாற்றையும், சிகப்பு இந்தியர்கள் என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதில் ஆய்வாளர்கள் பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அதில் பலர் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்த மக்கள் தான் கடல் மார்கமாக அமெரிக்கவை வந்தடைந்து அங்கு ஒரு பெரும் நாகரீகத்தை உருவாக்கினர் என்னும் முடிவுக்கு வந்துள்ளனர். “மெக்ஸிகோவின் வரலாறு” (“A Compact History of Mexico”) என்ற புத்தகத்தை எழுதிய திரு. இக்னகியோ பெர்னல் என்னும் எழுத்தாளர் ஆசியாவில் இருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் (35,000) ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் அமெரிக்கவிற்குள் நுழைந்தனர் என்கிறார். ஆனால் திரு ஆர்கியோ நுன்ஸ் என்னும் பிரிட்டனிய அனு விஞ்ஞானி ஆசியாவில் இருந்து 11000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர் என்று குறிப்பிடுகிறார். சில்வைன் லெவி (Sylvain Levi) எனும் பிரெஞ்சு கீழ்த்திசைவாணர் (Orientalist) கிழக்கு நாகரீகம், மதம், இலக்கியங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி ஆய்வுகளை எழுதிய்ருக்கிறார். “இந்தியாவும் உலகமும்” என்ற பிரஞ்சு மொழி புத்தகத்தில் அவர் ” பெர்ஸியா முதல் சீனக் கடல்பகுதி வரையில், பனிபடர்ந்த சைபீரியா முதல் ஜாவா மற்றும் போர்னியோ தீவுகள் வரை, ஒசீயானியா முதல் சாகாற்றா வரை, இந்தியா அவளுடைய நம்பிக்கை, வரலாறு, கொள்கை மற்றும் நாகரீகத்தைப் பரவச்செய்திருக்கிறாள். பல்லாயிறமாண்டு வரலாற்றில் அவள் உலக மனித இனத்தின் நான்கில் ஒரு பகுதியில் அவளுடைய சுவடுகளைப் பதித்திருக்கிறாள். அவளுடைய பழம்பெருமைகளைத் தெரியாமல் இத்தனைக் காலம் வாழ்ந்திருந்தாலும் அவளுக்கு உலக வரலாற்றை சொந்தம் கொண்டாட முழு உரிமையும் உண்டு.” என்று குறிப்பிடுகிறார். பல கடினமான முயற்சிகளின் பின்னனியில் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய கலாச்சாரம் இந்தியாவையும் தாண்டி பல நாடுகளில் பரவியிருப்பதை கண்டறிந்துள்ளனர். தெங்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் அமெரிக்காவும் இதில் அடங்கும். இதற்கான பல ஆதாரமும் இப்போது கிடைத்திருக்கிறது. பண்டைய கால பஸிபிக் கடல் பயணத்தை உறுதிப் படுத்தும் ஒரு முக்கிய ஆதாரமாய் விளங்குவது பண்டைய கால காகித தயாரிப்பு தொழில்நுட்பம். சீனா, தெங்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் மீசோ அமெரிக்கா பகுதிகளில் இத்தொழில்நுட்பம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. மைக்கேல் கோ (Michael Coe) அவருடைய புத்தகத்தில் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் கிழக்கு இந்தோனேசியாவில் இருந்து மீசோ அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்றிருக்கிறது என்று தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுவது இந்த தொழில் நுட்பம் சென்றிருக்கும் பட்சத்தில் இவ்விரு தேசங்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றமும் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 2:53 pm

டிரான் அவர்களின் முழு பதிவு




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 26, 2012 3:19 pm

சூப்பருங்க அருமை சின்னவன் - இதையே அவரும் தொடர்ந்தால் நலம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 4:17 pm

நல்ல வரற்று பதிவு நன்றி சின்னவன் அண்ணா சூப்பருங்க




உலகின் முதல் நாகரீகம் Mஉலகின் முதல் நாகரீகம் Uஉலகின் முதல் நாகரீகம் Tஉலகின் முதல் நாகரீகம் Hஉலகின் முதல் நாகரீகம் Uஉலகின் முதல் நாகரீகம் Mஉலகின் முதல் நாகரீகம் Oஉலகின் முதல் நாகரீகம் Hஉலகின் முதல் நாகரீகம் Aஉலகின் முதல் நாகரீகம் Mஉலகின் முதல் நாகரீகம் Eஉலகின் முதல் நாகரீகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:30 pm

நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மட்டுமல்லாது வரும் காலங்களில் நமது பண்பாடுகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக