புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
139 Posts - 56%
heezulia
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
9 Posts - 4%
prajai
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_m10இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் .


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 11, 2013 11:48 am

இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . LBS

லால் பகதூர் சாஸ்த்ரி நேர்மையான தலைவராக வாழ்ந்தாலும் மக்களுக்கு ரவி சாஸ்திரியை தெரிந்த அளவு அவரை தெரியவில்லை சோகம் கொஞ்சம் அவரைப்பற்றி இன்றாவது பகிரலாமே என்று தான் இந்த பதிவு .

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சாரி என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்தார் [1]. மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்கு குழந்தை கிடையாது, எனவே இது தனக்கு கடவுளின் பரிசு என கருதி லால் பகதூரை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். குழந்தையை காணாத லால் பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரை கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்பித்தனர் [2]..

லால் பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார் [3]. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையை பார்க்க போனார். திரும்பும் போது படகுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக ஆற்றை நீந்தி கடந்தார் [4].

மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [5]. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1]. 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரை கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [6]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 ல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது[3]. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[7]. பின் அவ்வமைப்பின் தலைவரானார்.

1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் [8]. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்கு திரும்பிவிட்டார் [9]. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்கு திரும்பினார்[9].

1937 ல் உத்திர பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணிக்கமர்ந்தார் [10]. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார் [11]. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளை\ஆணைகளை ஒரு வார காலத்திற்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்[11]. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்[12]. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களை படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரச்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்.

தொடரும் .....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 11, 2013 11:51 am

இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந் பல்ல பண்ட் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்து துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தை கலைப்பதற்கு கம்பால் அடிப்பதற்கு பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும் படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [13].

1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்கு பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பானரவாக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.

1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [14]. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3].

1957 ஆண்டு நடந்த பொது தேர்தலை தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராக பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்[3]. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்கு காரணமாகவிருந்தார்.

பாகிஸ்தான் போர்

இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [16].
“ நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்... ”

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.[17]. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [18]. சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.
மரணம்

போர் நிறுத்த சாற்றுதலுக்கு பின் அதனை அமல் படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.

அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரே பிரிந்து விட்டது.மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இவரே பதவியில் உள்ள போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.

இந்தியாவை உலுக்கிய நம்ப இயலாத செய்தியாக இருந்தது அது. உலகமும் கொஞ்சம் ஆடிப் போனது. ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்திருக்கிறார்.

சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள் என்பது சிலிர்க்க வைக்கும் செய்தி.

எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனைத் தான் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 11:52 am

அவரை போற்றும் விதமாக நாமும் நினைவு தினத்தில் நினைவு கொள்வோம் .....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 11, 2013 11:53 am

இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Shashtri

எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு !

தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னாள் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சுதந்திரப் போராட்ட த்தில் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்

சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை, மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.

ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.

ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார்.

தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.

இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார்.

இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிச் செய்த காவலாளி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அதைவிட முக்கியமான ஒன்று, மாண்புமிகு அமைச்சரே அன்று தனியாக வந்திருக்கிறார். ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் கூட ஒரு கூட்டத்தோடுதான் செல்கிறார். இத்தைகைய சம்பவங்கள் நேரும்போது, சம்பந்தப்பட்ட பிரமுகர் கூட சும்மா இருந்தாலும், உடன் செல்லும் நல்லவர்கள் சும்மா இருப்பதில்லை. "அய்யா யாருன்னு தெரியுமா?" என்ன தைரியம் இருந்து அண்ணன் தெரியாதுன்னு சொல்லுவ?" "உன்பேரு என்ன? எந்த ஊரு?" இப்படி எல்லாம் விசாரித்து மிரட்டி ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இந்த நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. சுயநலம் சிறிதும் இன்றி, நாட்டிற்காக வாழ்ந்த தலைவர்கள் இருந்த இடத்தில் இதுபோன்ற போலி மனிதர்களைத் தான் நாம் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறோம் சோகம் அழுகை அழுகை அழுகை

நன்றி : இணையம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 11, 2013 11:58 am

அவருடைய நினைவு தினமான இன்றாவது நாம் எல்லோரும் அவரைப்போலவே பல அரசியல் வாதிகள் பிறந்து நம் நாட்டை வழி நடத்தி செல்ல வேண்டும் என்று வேண்டுவோமாக ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 12:13 pm

லால் பகதூர் சாஸ்திரி நம் நாட்டில் நல்ல மேஸ்திரி
ரவி சாஸ்திரி கிரிகெட்டின் நல்ல இஸ்த்திரி

பகதூர் சாபின் புகழும் அரசியல் ஒழுக்கமும்
நிலைத்திருக்கும் நம் ஹிஸ்டிரியில்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 12:23 pm

நல்ல வரலாற்று தகவல் நன்றி அம்மா




இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Mஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Uஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Tஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Hஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Uஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Mஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Oஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Hஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Aஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Mஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . Eஇன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Fri Jan 11, 2013 12:35 pm

[quote="krishnaamma"]இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . LBS

லால் பகதூர் சாஸ்த்ரி நேர்மையான தலைவராக வாழ்ந்தாலும் மக்களுக்கு ரவி சாஸ்திரியை தெரிந்த அளவு அவரை தெரியவில்லை சோகம் கொஞ்சம் அவரைப்பற்றி இன்றாவது பகிரலாமே என்று தான் இந்த பதிவு .

ote]




alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Fri Jan 11, 2013 12:48 pm

உத்திரபிரதேசத்தில் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி பற்றி தெரிந்த இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் பிறந்த திருப்பூர் குமரன் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே . திருப்பூர் குமரனின் நினைவு தினமும் இன்றுதான் . [url][/url][img][/img][code][url=இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . 80273366 ]இன்று லால்பகதூர் சாஸ்த்திரி அவர்களின் நினைவுதினம் . 80273366 [/url]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 12:51 pm

அலெக்ஸ் பூவனின் திரியை நீங்கள் இன்னும் பார்க்கலையா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக