புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
47 Posts - 47%
heezulia
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
12 Posts - 2%
prajai
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
9 Posts - 2%
jairam
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_m10 என்னைச் சொல்லிக் குற்றமில்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைச் சொல்லிக் குற்றமில்லை


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Wed Feb 27, 2013 1:11 pm

என்னைச் சொல்லிக் குற்றமில்லை
(சிறுகதை)

வீட்டிற்குள் நுழைந்து. நிதானமாய் செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு, என் அறையை நோக்கி நடந்த என்னை, தடுத்து நிறுத்தியது அப்பாவின் அடித் தொண்டைக் கத்தல்.

'போதும் இதுவரைக்கும் நீ கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் போய் கிழிச்சது…நாளையிலிருந்து போக வேண்டாம்….நின்னுடு”

'திடு..திப்”பென்று அப்பா அப்படிச் சொன்னது என்னை அதிர்ச்சி மற்றும் குழப்பத்திற்குள்ளாக்கி விட, 'என்னங்கப்பா…ஏன்..திடீர்னு இப்படிச் சொல்லறீங்க?” யதார்த்தமாய்க் கேட்டேன்.

'காரணமெல்லாம் உன் கிட்டச் சொல்லிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை..நின்னுடுன்னா…நின்னுடு…அவ்வளவுதான்”

சமையலறையிலிருந்து வெளி வந்த அம்மா, 'என்னங்க நீங்க?...என்ன….ஏது…ன்னு காரணம் செல்லாம இப்படிப் “பொசுக்”னு போக வேண்டாம்னு சொன்னா…இத்தனை நாள் போனது…பணம் கட்டினது…படிச்சது எல்லாமே வேஸ்டாயிடுமல்ல?”

'ம்ம்ம்…அவசியம் காரணத்தைத் தெரிஞ்சுக்கணுமோ?” அப்பா நக்கலாய்க் கேட்க,

'அட…அமாம்…சொல்லுங்க”

'நாலு வீடு தள்ளி இருக்கானே....காதுல கடுக்கன் போட்டுக்கிட்டு…பாகவதர் மாதிரி பின்னாடி முடி வெச்சுக்கிட்டு…ஒரு பையன்…?”

'ஆமாம்….ஆடிட்டர் வீட்டுப் பையன்..”

'அவனும்…இவ போற அதே கம்ப்யூட்டர் சென்டருக்குத்தான் போறானாம்”

'சரி…இருந்திட்டுப் போகட்டும்….அதுக்காக நாம ஏன் நம்ம பொண்ணை நிறுத்தணும்?” அம்மா எனக்காக வாதாடினாள்.

'ஏய்…உனக்குத் தெரியாது…வாயை மூடிக்க…அந்தப் பையன் அங்க போறதே இவளைப் பார்க்கத்தான்…இவளோட பழகி….லவ் பண்ணத்தான்.”

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. நாலாவது வீடு ஒரு ஆடிட்டர் வீடு என்பதும். அங்க பாகவதர் கிராப்போட ஒரு பையன் இருக்கிறானென்பதும், அவன் நான் படிக்கும் அதே கம்ப்யூட்டர் சென்டரில்தான் படிக்கிறான் என்பதும், இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாத விஷயங்கள்.

'த பாருங்க…எனக்குக் கண்டவங்களைப் பத்தியெல்லாம் கவலையில்லை….என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கையிருக்கு…அவ அப்படியெல்லாம் போறவளில்லை” அம்மா என் மேலுள்ள நம்பிக்கையை வார;த்தைகளாக்கிக் கொட்டினாள்.

'அப்படின்னு நீதான் நெனச்சிட்டிருக்கே…இந்தப்பக்கமிருந்து க்ரீன் சிக்னல் வராம அந்தப் பையன் எப்படி அங்க போவான்?”

”பக்”கென்றது எனக்கு. 'ச்சே…அப்பாவா இப்படிப் பேசறார்..? இவ்வளவுதானா இவருக்கு என் மேல் நம்பிக்கை?”

நான் அரண்டது போலவே அம்மாவும் அரண்டு போனாள். 'ச்சீய்….வாய் புளிச்சுதோ…மாங்காய் புளிச்சுதோ…ன்னு எதை வேணுமானாலும் பேசாதீங்க…இவ நம்ம பொண்ணு….தப்புத் தண்டாவுக்குப் போக மாட்டா..” அம்மா ஆணித்தரமாக அடித்துப் பேசினாள்.

'அவ நம்ம பொண்ணுதான் யார் இல்லேன்னா….ஆனாலும் அவ இந்தக் காலத்துப் பொண்ணாச்சே!...”

கடும் கோபத்திற்குள்ளான நான் சடடென்று அப்பாவின் முன் சென்று, அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டேன், 'அப்பா…நீங்க என்னை நம்பலையா?”

அவரோ பதில் பேசாமல் இறுகிய முகத்துடன் எங்கோ பார்த்தார்.

'அப்பா….நீங்க சொல்லுற அந்த நாலாவது வீட்டுப் பையன் யாரு…எப்படியிருப்பான்…கருப்பா…சிவப்பா…ன்னு கூட எனக்குத் தொpயாதுப்பா” தழுதழுத்த குரலில் சொன்னேன்.

நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதை நம்பாதவராய், தலையை இட..வலமாய் ஆட்டியபடி அங்கிருந்து நகர்ந்த அப்பாவை கண்ணீருடன் பார்த்தேன.

மூன்று நாட்களுக்குப் பிறகு,

மாலை ஆறு மணியிருக்கும், ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கி வீடடிற்குள் நுழையப் போன என்னை எரிப்பது போல் பார்த்தபடி வாசலிலேயே நின்றிருந்தார் அப்பா.

'இப்ப…இதுக்கு என்ன சொல்றே?” கண்களை உருட்டியபடி கேட்டார்.

'எதுக்குப்பா?”

'ஆஹா….உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு…”

'ப்ச்….அப்பா…எதுவானாலும் நேரடியாச் சொல்லுங்கப்பா…நீங்க பார்க்கறது….பேசறது…எதுவுமே புரியலைப்பா”

'இப்ப…ஷேர் ஆட்டோவுலதானே வந்தே?”

'ஆமாம்”

'கூட வந்தது யார்?”

'ம்ம்ம்…யாரு…தெரியலையே…நான் இறங்கும் போது யாரோ ஒரு ஆள் மட்டும்தான் உள்ளார உட்கார்ந்திட்டிருந்த மாதிரி இருந்தது…அவ்வளவுதான்”

'அது யாருன்னு உனக்குத் தெரியாது…அப்படித்தானே?”

'என்னப்பா இது…ஷேர் ஆட்டோன்னா…அங்கங்கே நிக்கும் போது யார் யாரோ ஏறுவாங்க…இறங்குவாங்க…அதெல்லாம் யாருன்னு எனக்கெப்படிப்பா தெரியும்?”

'பரவாயில்லைம்மா…நல்லா சமாளிக்கறே…” அசிங்கமாய்ச் சிரித்தார் அப்பா.

நான் கடுப்பாகி முறைத்தேன்.

'அதெப்படி அந்த நாலாவது வீட்டுப் பையனும் நீயும் மட்டும் கரெக்டா ஷேர் ஆட்டோவுல ஒண்ணு சேருவீங்க?...இத்தனைக்கும் அவன்கிட்ட சொந்தமா ஒரு பைக் இருக்கு…அவன் ஏன் ஷேர் ஆட்டோவுல வரணும்,”

அப்போதுதான் எனக்கே தெரிய வந்தது, அந்த ஷேர் ஆட்டோவுல நான் இறங்கும் உட்கார்ந்திருந்த நபர்தான் அப்பா குறிப்பிடும் அந்த நாலாவது வீட்டுப் பையன் என்று.

'அப்பா…நீங்க நம்பினாலும் சரி…நம்பாட்டாலும் சரி…எனக்கு எந்தப் பையனையும் தெரியாது…நான் எவன் கூடவும் வரலை” வெடுக்கென்று சொல்லி விட்டு வேகவேகமாய் என் அறைக்குள் புகுந்து கொண்டேன்.

வெளியே அவர் தொடர்ந்து அரை மணி நேரம் கத்திக் கொண்டிருந்ததைக் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை நான்.

மதியம். தபால்காரருக்காக காத்திருந்தேன். 'ச்சை…மத்த நாளெல்லாம் ஒரு மணி…ஒன்றரை மணிக்கே வந்திடுவாரு…இன்னிக்குன்னு பாத்து…மணி மூணாச்சு….இன்னும் காணோம்”

'என்னடி கலைவாணி..ரோட்டையே திரும்பத் திரும்பப் பார்த்திட்டிருக்கே…என்ன விஷயம்?” அம்மா கேட்டாள்.

'ஒண்ணுமில்லைம்மா இன்னிக்கு தபால்ல நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் பாஸ் செய்ததற்கான சான்றிதழ் வருமாம்…சென்டர்ல சொன்னாங்க..அதான் போஸ்ட்மேனைப் பார்த்திட்டிருக்கேன்”

'போஸ்ட்மேன் இன்னுமா வரலை…இன்னேரம் வந்திருக்கணுமே…”நெற்றியைச் சுருக்கியபடி அம்மா சொல்லும் போது,

வெளியே சைக்கிள் மணியோசை. பாய்ந்து வெளியில் ஓடியவள் அதே வேகத்தில் திரும்பினேன். பக்கத்து வீட்டுப் பால்காரன். 'ச்சை” நொந்தவாறே என் அறையை நோக்கித் திரும்பியவளின் முதுகில் ”மடேர்” என்று அந்த அடி விழ, 'தொப்”பென்று தரையில் விழுந்தேன்.

விழுந்தவள் 'விருட்”டென்று எழுந்து பின்னால் பார்த்தேன். அப்பா நின்று கொண்டிருந்தார். 'அ…ப்…பா....நீ…நீங்களா அடிச்சீங்க?” கேட்டேன்.

'பின்னே…நீ செஞ்ச காரியத்துக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா?”

எதுவும் புரியாதவளாய் எழுந்து நின்ற என்னை நெருங்கி வந்த அப்பா, 'அந்தப் பையனோட பைக் சத்தத்தைக் கேட்டுத்தானே இப்ப நீ அரக்கப்பரக்க வெளிய ஓடுன?..சொல்லு…”

'இல்லப்பா…நான்…தபால்காரர்..”

'எந்த ஊர்ல தபால்காரன் பைக்குல வர்றான்…ஏண்டி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தில ஏறாதா?”

யோசித்துப் பார்த்தபோது லேசாய்த் தெரிந்தது. 'ஆமாம்…பால்காரனோட சைக்கிள் போகும் போது பின்னாடியே ஒரு பைக் போன மாதிரிதான் இருந்தது…ஓ…அதுதான் அவனா?”

வுழக்கம் போல் இந்த முறையும் என்னைக் காப்பாற்ற அம்மா வந்தாள். 'ஏங்க…அவ ஒரு மணியிலிருந்து தபால்காரருக்காக வெய்ட் பண்ணிட்டிருக்காளுங்க…அவளோட கம்ப்யூட்டர் சர்ட்டிபிகேட் வருமாம்..”

தன் பக்கம் வலுவான ஆதாரம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த அப்பா என்னையும் அம்மாவையும் முறைத்துப் பார்த்தபடியே நகர்ந்தார்.

மறுநாள் காலை. கோவிலுக்குச் செல்வதற்காக தெருவில் இற்ங்கி நடந்தேன்.

அப்பா குறிப்பிடும் அந்த நாலாவது வீட்டை நெருங்கும் போது என்னையுமறியாமல் என் தலை நிமிர்ந்து பார்த்தது. 'எங்கே அவன்?” என் கண்கள் தேடின.

அருகில் ஒரு பைக் சப்தம் கேட்க, ஆவலுடன் திரும்பிப் பார்த்தேன்.

காதில் கடுக்கண் மற்றும் பாகவதர் கிராப்புடன் அந்த நாலாவது வீட்டின் முன் வந்து நின்ற அந்த பைக்கிலிருந்து இறங்கிய இளைஞனை…

முதன் முறையாக….

நேரடியாக…

சிறிதும் லஜ்ஜையின்றி….

ஊடுருவிப் பார்த்தேன்.

(முற்றும்)

===================================
முகில் தினகரன்
கோயமுத்தூர்











உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 27, 2013 4:57 pm

இப்படித்தான் காதலிக்கனும்ன்னு இல்லாதவங்களை கூட காதலில் மாட்டி விட்டுடறாங்க.


நல்ல கதை முகில். தொடர்ந்து எழுதுங்க



 என்னைச் சொல்லிக் குற்றமில்லை U என்னைச் சொல்லிக் குற்றமில்லை D என்னைச் சொல்லிக் குற்றமில்லை A என்னைச் சொல்லிக் குற்றமில்லை Y என்னைச் சொல்லிக் குற்றமில்லை A என்னைச் சொல்லிக் குற்றமில்லை S என்னைச் சொல்லிக் குற்றமில்லை U என்னைச் சொல்லிக் குற்றமில்லை D என்னைச் சொல்லிக் குற்றமில்லை H என்னைச் சொல்லிக் குற்றமில்லை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக