புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
69 Posts - 58%
heezulia
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
111 Posts - 59%
heezulia
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_m10தென்னக ஜாலியன் வாலாபாக்! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னக ஜாலியன் வாலாபாக்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 03, 2013 10:22 am

இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மன்னர்கள் இடம் பெறுவர், மக்கள் இடம் பெறுவதில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயினும், மன்னர்கள் அறம் பிறழ்ந்தபோதும் அநீதி இழைத்தபோதும், சாதாரண மக்கள் நீதியை நிலை நாட்டும் நெஞ்சுரம் கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே இலக்கியங்களில் புதைந்து கிடைப்பதையும் மறுக்க இயலாது. அத்தகைய மக்கள் வரலாற்றில் ஒரு பதிவுதான் ""தென்னக ஜாலியன் வாலாபாக்'' எனப் போற்றப்படும் வீரம் விளைந்த ""பெருங்காமநல்லுர்'' கிராமத்தில் நடைபெற்ற தீரச் செயல் ஆகும்.

ஜாலியன் வாலாபாக்:
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 21.03.1919-ல் "ரௌலட் சட்டம்' என்ற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் - என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை' என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.

பத்திரிகைகளின் குரலை ஒடுக்கி, மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்கிட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய மக்கள் அனைவரும் இச்சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 10.04.1919-இல் கைது செய்யப்பட்டார். 13.04.1919 அன்று பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பெரிய மதில் அடைப்புச் சுவர்களும், சிறிய நுழைவாயிலும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திடலில், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்கள் கலைந்து செல்வதற்கு எச்சரிக்கையும் கொடுக்காமல், குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றும் - ஆயிரக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தியும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டான் ஜெனரல் டயர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும்.

குற்றப்பரம்பரைச் சட்டம்:
ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது "குற்றப்பரம்பரைச் சட்டம்'. வடஇந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம் இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை ராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,
1) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.
2) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.
3) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
4) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.
5) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
6) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.
7) சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.

(நன்றி - தினமணி - என்.எஸ்.பொன்னையா- கட்டுரையாளர்: வழக்குரைஞர்.)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 03, 2013 10:24 am

மக்களின் எதிர்ப்பலை:
"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம் எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

1) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.
2) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.
3) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.
4) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.
எனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:
மதுரை மாவட்டம் பிறமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகையில், இறுதிமுகமாக பெருங்காமநல்லுர் கிராமத்திற்கு வந்தனர். மக்கள் இச்சட்டத்திற்கு அடிபணிய மறுத்தனர். ""சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உகந்த சட்டங்கட்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்குக் கட்டுப்பட முடியாது'' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எந்த வகையில் - என்ன செய்தாகிலும் சரி, சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.

02.04.1920 இரவில் ஆயுதப்படை மற்றும் குதிரைப்படைகளுடன் பெருங்காமநல்லுர் செல்வதற்காக அதிகாரிகள் சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் முகாம் இட்டனர். தகவல் அறிந்த பெருங்காமநல்லுர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தனர். "ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அடுத்த நாள் அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்கு வேட்டுப் போட்டுப் பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும்' என முடிவு செய்தனர்.

03.04.1920 அன்று அதிகாலை குதிரைப்படை மற்றும் ஆயுதப்படையுடன் அதிகாரிகள் பெருங்காமநல்லுர் கிராமத்தை முற்றுகையிட்டனர். முக்கிய அதிகாரிகள், மந்தையில் இருந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அங்கே வரவழைத்தனர்.

சட்டத்தை மறுப்பது குற்றம் என அதிகாரிகள், பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர்.
""நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா? அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா?'' எனக் கேட்டனர். வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு தயாராவதுபோல அணி வகுத்தனர். மக்கள் படாங்கு வேட்டை வெடித்தனர். பக்கத்து ஊர் மக்கள் வேட்டு சத்தம் கேட்டதும் படை திரண்டு வந்தனர். இந்த மக்களை அடி பணிய வைப்பது எளிதான செயல் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகெண்டனர்.

"சட்ட அமலாக்கத்தில் ú தால்வி அடைந்துவிட்டோம்' என்ற எண்ணம் அதிகாரிகள் நெஞ்சில் உறுத்தியது. பின்வாங்குவதுபோல் பாவனை செய்து, அதிகாரிகள் ஊருக்குக் கீழ்புறம் அரை பர்லாங் தூரம் சென்றனர். பெரும் திரளான மக்களிடமிருந்து முனைப்புடன் நின்றவர்களைப் பிரித்து இழுக்கவே அவர்கள் இந்த உத்தியைக் கையாண்டனர்.

முன்னணி வீரர்கள் ஆயுதப்படையின் அருகில் சென்றதும், தங்கள் தோல்வியை மறைத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சுயநல உள்நோக்கத்துடன் துப்பாக்கியைத் தூக்கினர். மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர்களின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

துப்பாக்கி சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் "ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், "ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

கள்ளர் சீரமைப்பு:
பெருங்காமநல்லுர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கின. அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தமாக இதனைக் கொள்ளலாம்.

ஒப்பிடலாம்:
ஆங்கில அதிகார வர்க்கம் நடத்திய கொலைக்களம் என்ற வகையில் ஜாலியன் வாலாபாக்கையும், பெருங்காமநல்லுரையும் ஒப்பிடலாம். ஜாலியன் வாலாபாக்கில் பலியானவர்கள் அங்கு நடந்த கண்டனக் கூட்டத்தைப் பார்க்க வந்த அப்பாவிகள் மற்றும் அருகில் இருந்த கோவில் வழிபாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள்.

பெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், "குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.

வீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:06 pm

நல்ல வரலாற்று பதிவு தொடருங்கள் சாமி அண்ணா




தென்னக ஜாலியன் வாலாபாக்! Mதென்னக ஜாலியன் வாலாபாக்! Uதென்னக ஜாலியன் வாலாபாக்! Tதென்னக ஜாலியன் வாலாபாக்! Hதென்னக ஜாலியன் வாலாபாக்! Uதென்னக ஜாலியன் வாலாபாக்! Mதென்னக ஜாலியன் வாலாபாக்! Oதென்னக ஜாலியன் வாலாபாக்! Hதென்னக ஜாலியன் வாலாபாக்! Aதென்னக ஜாலியன் வாலாபாக்! Mதென்னக ஜாலியன் வாலாபாக்! Eதென்னக ஜாலியன் வாலாபாக்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக