Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

சீன நாகரீகமும் அரச வம்சங்களும் - பகுதி 2

சிவா | Published on the mon Jan 23, 2023 1:21 pm | 246 Views

சீனத் தனி எழுத்துகளின் அச்சுத் தொழில்நுட்பம் 14ஆம் நூற்றாண்டு கொரியாவிலும் ஜப்பானிலும் பரவியது.இத்தொழில்நுட்பம் சிங்கியாங்கிலிருந்து பெர்சியா மற்றும் எகிப்தின் மூலம், ஐரோப்பிய நாடுகளில் பரவல் செய்யப்பட்டது. சுமார் 1450ஆம் ஆண்டுக்கு முன்னரும், பின்னரும், ஜெர்மனின் குட்டன்பேர்க் மக்கள் சீனாவின் அனுபவத்தைப் பயன்படுத்தி, பின்யின் எழுத்துகளை உலோகத்தில் உருவாக்கினர். இந்த வகையில் சீனாவின் அச்சுத் தொழில்நுட்பம் நவீனச் சமூகம் உருவாவதற்கு வாய்ப்பை வழங்கியது.

பண்டைய சீன சிங் வம்சத்திற்கு (கி.மு 1644-1911) முன் சீனாவில் கண்ணாடி உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் சீனாவில் கண்ணாடி தயாரிப்பில் முந்தைய தொல்பொருள் ஆதாரம் பின்னர் வந்த சவ் அரசகுலத்திலிருந்து (கி.மு1046 221BC) வருகிறது. மட்பாண்டப்பொருள்கள் மற்றும் உலோக வேலைப்பாடுகளை ஒப்பிடும் போது சீன வரலாற்றில் கண்ணாடி கலை மற்றும் கைவினை ஒரு பெரும் பங்கை பெற்றுள்ளது. கண்ணாடிப் பொருட்களின் பயன்பாடு பற்றிய தொல்பொருள் சான்றுகள் சீனாவில் கிடைத்துள்ளன. இலக்கிய ஆதாரங்களின் படி கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கண்ணாடி உற்பத்தி இன்றுவரை காணப்படுகிறது.சீன ஒப்பிடக்கூடியதாக பின்னர் மொசபத்தேமியர் மற்றும் எகிப்தியர்கள் விட கண்ணாடி உற்பத்தி கற்று சிறப்பான முறையில் உற்பத்தி செய்தனர்.

ஹான் வம்ச காலத்தில் (206 கிமு 220 AD) கண்ணாடி பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தப்பட்டது.குறிப்பாக கண்ணாடி சடங்கு பொருளாக பயன்பட்டது.உற்பத்தி போரிடும் அரசுகளின் கால சீன கண்ணாடி பொருட்கள் ஊக்கம் மற்றும் ஹான் வம்சம் இறக்குமதி கண்ணாடி பொருட்களின் ரசாயன கலவை மாறுபட்டிருக்கின்றன.

போரிடும் அரசுகளின் காலம் மற்றும் ஹான் வம்சம் இடையே காலம் ஆரம்பத்தில் சீன கண்ணாடித் தொழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கால கண்ணாடி பொருட்களை மிகவும் கோபுரங்களின் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹான் திபெத் மங்கோலியா உள்ளிட வெவ்வேறு சீன இனக்குழுக்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுக்கும் சீன மருத்துவம் என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இனக்குழுக்களிடையே ஹான் இனம் பயன்படுத்தும் மருந்துதான் சீனாவிலும் உலகம் முழுவதிலும் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. ஹான் இனம் தான் முதன் முதலில் தனக்கென ஒரு மருத்துவ முறையை உருவாக்கியது. 19ம் நூற்றாண்டில் மேற்கத்திய மருத்தும் பிரபலமடைந்தது போல ஹான் மருத்துவம் கீழை நாடுகளில் பிரபலமானது.

சீனாவின் தேசிய இனங்கள் உருவாக்கிய பல்வேறு மருத்துவ முறைகளில் ஹான் இனம் உருவாக்கிய மருத்துவ முறைதான் மிகவும் பழமையானது. நடைமுறைப் பயன்பாட்டிலும் கோட்பாட்டு அறிவிலும் வளம் மிக்கது. மஞ்சள் ஆற்றுவளநிலப் பகுதியில் உருவெடுத்த சீன மருத்தும் வெகுகாலத்துக்கு முன்பே ஒரு அறிவியல் புலமாக நிலைநிறுத்தப்பட்டது. அது வளர வளர நல்ல பல மருத்துவர்களும் கோட்பாடுகளும் முன்னேற்றங்களுக்கு உருவெடுத்தன.

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஷாங் வம்சத்தில் இருந்த செல்வாக்கு எலும்பு,கல்வெட்டுக்களிலேயே மருத்துவ சிகிச்சை, தூய்மை, நோய் போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வந்த ச்சோ வம்சத்தில் நோய்க் கூறு கண்டறியும் பல்வேறு நுட்பங்களை மருத்துவர்கள் கற்றுக் கொண்டனர். இந்த நுட்பங்கள் நான்கு பெரும் முறைகளாக இப்போது பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கூர்ந்து கவனித்தல், கேட்டல், மற்றும் முகர்ந்து பார்த்தல், விசாரித்த்ல், நாடித்துடிப்புமு இதயத்துடிப்பும் அறிதல் ஆகியன அடங்கும். நோய்களைக் குணப்படுத்துவதற்காக மருந்துகள், அக்குபங்ச்சர், அறுவை சிகிச்சை போன்ற பல மருத்துவ முறைகளை மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். சின் மற்றும் ஹான் வம்ச காலத்தில்(கி.மு.221-கி.மு.220)மஞ்சள் போரரசரின் மருத்துவ சாத்திரம் அல்லது ஹாவாங் தி நிய் ஜிங் என்ற புதிய புத்தகம் எழுதப்பட்டது. அதில் சீன மருத்துவக் கோட்பாடுகள் முறைப்படி விவாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைக்கும் மிகவும் பழமையான நூல் இதுவாகும். மற்றொரு புத்தகம், மூன்றாம் நூற்றாண்டில் ச்சாங் சோங்ஜின் என்பவர் எழுதிய பெஃப்ரில் மற்றும் இதர நோய்கள் என்ற புத்தகம் உள் உறுப்புக்களால் ஏற்படக் கூடிய பல்வேறு நோய்களின் கூறுகளை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை தருவது என்ற இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அர்த்தம் மிகுந்தது. பல நூற்றாண்டுகள் கழித்து மருத்துவமனை மருந்துகள் உருவெடுப்பதற்கு இது உறுதுணையாக இருந்தது. ஹான் மன்னராட்சி காலத்தில் அறுவை சிகிச்சை ஒப்பீட்டளவில் உயரிய இடம் பெற்றது. மூன்று பேரரசர் வரலாறு அல்லது சன் சோ ச்சி என்ற புத்தகத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக பொது மயக்க மருந்து கொடுத்த ஹுவாத்துவோ என்ற மருத்துவர் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பின்னர் சோங் வம்சத்தில் (கி.மு960-கி.பி,1279)வேங் வெய்யி என்பவர் அக்குபங்ச்சன்ரக் கற்பிக்க புதிய முறைகளை பின்பற்றினார். அவர் தனது நுட்பங்களை வரைபடங்கள் மற்றும் மனித உடம்பின் மாதிரிகளைக் கொண்டு விளக்கினார். மிங் வம்சத்தில்(கி.மி1368-கி.பி1644)டைபாய்டு காய்ச்சல், பருவநிலைமாற்றத்திற்கு ஏற்ப ஏற்படும் தொற்றுநோய், பிளேக் எனப்படும் கொள்ளை நோய் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மருத்துவர்கள் காதைக்கத் தொடங்கினர். இதற்காக தணிப்பட்ட புதிய புத்தகம் ஒன்று ச்சிங் வம்சகாலத்தில் எழுதப்பட்டது.

மிங் வம்சகாலத்தில் தான் மேற்கத்திய மருத்துவம் சீனாவில் அறிமுகமானது. அப்போது மருத்துவ அறிவியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழை மருத்துவத்தையும் மேலை மருத்துவத்தையும் இணைக்கத் தொடங்கினர். இந்த முயற்சி தொடர்ந்து இணைக்கும் சீன மருத்துவத்தில் இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கின்றது. இதன் அடிப்படையில் சீனரின் மருத்துவத்துறை ரீதியன சாதனை புலனாகிறது.

சீனரின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக விளங்குவது அவர்களின் கட்டிடக்கலை ஆகும். சீனரின் கட்டிடக்கலை என்னும் போது சீனப்பெருஞ்சுவராகும்.கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன.கிமு 208 (கின் வம்சம்), கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்),1138 - 1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்),1368 (மிங் வம்சம்)

மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.

மேலும் ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக வரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது. இந்த கல்லறை தற்போது உலகில் புகழ் பெற்ற சின் கல்லறையாகவும் குதிரை மற்றும் படைவீரர் உருவ சிலைகளின் காட்சியாகவும் திகழ்கின்றது. இதுவும் சீனரின் கட்டிடக்கலை ரீதியான சாதனையினை வெளிக்கொணர்கிறது.

இத்தகைய பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு சீனர் விளங்குவதற்கு சீன அரச வம்சங்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. எனவே இத்தகைய வாழ்க்கை முறையினை ஏற்படுத்துவதில் அரச வம்சங்களின் பங்கினையும் அரச வம்சங்கள் பற்றிய தகவல்களையும் அறிவது சாலச்சிறந்தது.

சியா அரசமரபு சீன வரலாற்றுப் பதிவுகளின் படி சீனாவை ஆட்சி செய்த முதலாவது அரசமரபு ஆகும். கிமு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த அரச மரபு ஆட்சிக்கு வந்தது. மரபு வழிச் செய்திகளின் படி இந்த அரசமரபு கிமு 2205 இருந்து 1766 சிறப்புற்று இருந்ததாக கூறப்படுகிறது.17 மன்னர்கள் அடுத்தடுத்து 500 ஆண்டுகளுக்ரு ஆட்சிபுரிந்தனர். அதன் அதிகார எல்லை தற்போதைய சீனாவின் சான்சி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்து ஹொநான் மாநிலத்தின் மேற்கு பகுதி வரை விரிவடைந்தது.

சியா வம்சத்தை நிறுவியவரான தா யு மன்னர், நீர்வளத்தை கட்டுப் படுத்தி மக்களுக்கு அமைதியான வாழும் சூழ்நிலையை உருவாக்கிய புகழ் பெற்ற வீரராக பாராட்டப்பட்டார். நீண்டகாலமாக வெள்ள பெருக்கு ஏற்பட்ட மஞ்சள் ஆற்றை வெற்றிகரமாக மட்டுப்படுத்திய அவர் பழங்குடி மக்களின் பாராட்டைப் பெற்றார். அவருடைய தலைமையில் சியா வம்சம் தொடங்கியது. பழஞ் சமூகம் தனியார் சொத்துரிமை உடைய சமூகமாக மாறியதை அதன் உருவாக்கம் எடுத்துக்காட்டுகின்றது. அப்போதே அடிமை சமூகம் சீனாவில் நுழைந்து விட்டது.

சியா வம்சத்தின் முடிவில் மன்னர் குடும்பத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. வர்க்க முரண்பாடு கடுமையாகியது. சிற்றரசுகள் அடுத்தடுத்து முரண்பட்டு குழப்பத்தை செய்தனர். அவர்களில் ஒருவரான ஸான் என்ற சிற்றரசுகள் இந்த குழப்பத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கிளர்ச்சியை தூண்டிவிட்டு கடைசியில் சியா சியெயின் படைவீரர்களை தோற்கடித்தார். சியா சியெ தப்பி ஓடிய பின் சியா வம்சகாலம் முடிவடைந்தது.

சியா வம்ச காலம் பற்றிய பதிவேடுகள் மிக குறைவு. ஆய்வின் படி சியா வம்ச வரலாற்றை மறு உருவாக்கம் செய்வது அவர்களின் விருப்பங்களில் ஒன்றாகும்.ஏலிதொ பண்பாட்டுச் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் முக்கியமான பொருட்களாகும். வீட்டின் அடிப்படை தளம், சாம்பல் குழி, சவபெட்டி புதைக்கப்பட்ட குழி ஆகியவற்றின் சுவரில் மரக் கருவிகளின் சாயல் காணப்பட்டது. அப்போது வாழ்ந்த உழைப்பாளிகள் பயன்படுத்திய கருவிகள் மிகவும் எளிதானவை. இருந்தாலும் அவர்கள் அயராது உழைத்து விவேகத்துடன் நீர்வளத்தைக் கட்டுப்படுத்தி வேளாண்மை உற்பத்தியை வளர்த்தார்கள். இதுவரை சியா வம்சச் சிதிலத்தில் பெரிய வெண்கல பொருட்கள் எதுவும் கண்டிபிடிக்கப்பட வில்லை. ஆனால் ஏலிதொ பண்பாட்டு மரபுச் செல்வங்களில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சுத்தி, குத்தூசி, உளி முதலிய கருவிகள் உள்ளன. அவற்றின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்படட் வெண்கல வார்ப்பு அச்சு, வெண்கல கழிவு போன்ற பொருட்கள் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தவிரவும் ஏராளமான கை வினை தரம் கொண்ட மணிக்கல் பொருட்கள் கல் இசைக் கருவிகள் தொல்பொருட்களில் காணப்பட்டன. அப்போதைய கைவினை தொழில்துறையின் தொழில் நுட்பமும் மேலும் வளர்ச்சியடைந்ததை இந்த தொல் பொருட்கள் எடுத்துக்காட்டின.

பண்டைகால பதிவேட்டில் சியா வம்ச ஆட்சியில் நேரம் கணக்கிடுவது பற்றிய பதிவேடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாக்கப்பட்ட “தாத்தை அற நூலில்”உள்ள சியா வம்சத்தின் நேரம் கணக்குதல் மிக முக்கிய பண்பாட்டு பதிவேடாகும். வட நட்சத்திரக் குழு காட்டிய இடத்தின் படி மாதங்களை உறுதிப்படுத்தும் திறமையை அப்போதைய மக்கள் பெற்றிருந்தனர். இது சீனாவின் மிக முற்கால நாள்காட்டியாகும். சியா வம்சத்தின் நாள் காட்டியின் படி ஆண்டு 12 மாதங்களாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் நட்சத்திர நிலை, காலநிலை, பொருள் நிலை அப்போது செய்ய வேண்டிய வேளாண் நிலை, அரசியல் நிலை என்பன தனித்தனியாக குறிப்பிடப்பட்டன. அப்போதைய சியா வம்சத்தின் வேளாண்மை உற்பத்தியின் வளர்ச்சி நிலை குறிப்பிடத்தக்க அளவில் பிரதிபலிக்கப்பட்டது. பண்டைக்கால சீனாவில் மதிப்புக்குரிய அறிவியல் அறிவு சியா வம்சத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சாங் அரசமரபு சீன மரபுவழி வரலாற்றுப் பதிவுகளின் படி சீனாவை ஆண்ட இரண்டாவது அரசமரபு ஆகும். Xia Shang Zhou Chronology Project கருத்தின் படி இந்த அரசமரபு சீனாவை கிமு 1600 - 1046 காலப் பகுதியில் ஆட்சி செய்தது. இந்த வம்சத்தைப் பற்றிய தகவல்கள் பண்டங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்தும், விலங்கு ஓடுகளில் எழுதப்பட்ட சீன எழுத்துப் படங்களில் இருந்தும் கிடைக்கின்றன. மொழி வரலாற்றில், மிக தொன்மைக் காலத்தில் கிடைத்த எழுத்து ஆதாரங்களில் இக்காலத்தவையும் அடங்கும்.

சௌ வம்சம் சீனாவை அதிக காலம் ஆண்ட வம்சம் (ஆட்சி மரபு) ஆகும். இந்த வம்சம் 1045 கிமு 256 காலப் பகுதியில் சீனாவை ஆண்டது. இவர்களின் காலப் பகுதியில் இரும்பு சீனாவுக்கு அறிமுகமானது. செப்பு சிற்பவேலை உச்சங்களைக் கண்டது. சீன மொழியின் எழுத்துமுறை விரிவு பெற்றது.

சௌ வம்ச காலத்தில் தான் பிற்காலத்தில் சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல மெய்யியலாளர்கள் வாழ்ந்தார்கள். கன்பூசியசு, லா ஒசி, மோகி, Han Fei, மென்சியசு போன்றோர் இன்றுவரை சீன சிந்தனையின் அடிப்படைகளாக விளங்குகிறார்கள். இவ்வம்ச காலத்திலேயே தான் தாவோயிஷம் என்ற தத்துவக்கோட்பாடு தோன்றி வளர்ந்தது. இது மக்கள் மத்தியில் தோன்றக்கூடிய பிரச்சனைகளை உள்ளடக்கியிருந்தது.ஆயினும் இக்கோட்பாடு பெரும்பாலும் கொன்பூசியசின் கோட்பாட்டிற்கு முரணாக காணப்பட்டது.இவ்வகை தத்துவ ஞானிகள் சீனாவில் முதன் முதலாக இவ்வுலகம் அல்லாத மரு உலகக் கோட்பாடுகளுடன் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

சின் வம்சம் பற்றி நோக்குகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான அடிமை சமூகத்துக்கு பின் ஒன்றிணைந்த மத்திய அதிகாரத்துடந் சீன வரலாற்றின் முதலாவது நிலபிரபுத்துவ வம்சமான சின் வம்சம் உருவாகியது. அதன் தோற்றம் சீன வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.கி.மு.255ம் ஆண்டு முதல் கி.மு.222ம் ஆண்டு வரையான காலம் சீன வரலாற்றில் போரிடும் நாடுகள் காலமாகும். அக்காலத்தில் தான் சீனாவில் அடிமைச் சமூக முறை முடிவடைந்தது. அப்போது பல சிறிய சுதந்திர நாடுகள் இருந்தன. அவற்றுக்கிடையில் மோதல் ஏற்பட்டு பல அழிந்தன. இறுதியில் 7 பெரிய நாடுகள் மட்டுமே எஞ்சியன. சிங், சி, சூ,, வெய், யென், ஹான், சௌ ஆகிய நாடுகள்7 வீரர்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த ஏழு நாடுகளில் வட மேற்கில் உள்ள சிங் நாட்டில் ராணுவ மற்றும் வேளாண் மேற்குர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே அதன் ஆற்றல் மேற்குக்கிரமாக வலிமையடைந்தது. கி.மு.247ம் ஆண்டில் சிங் வம்ச மன்னராக 13 வயதான யின்சன் பதவி ஏற்றார். 22 வயதில் அவர் ஆட்சிபுரிந்த பின் மற்ற ஆறு நாடுகளை அழித்து நாட்டை ஒன்றிணைக்கும் மகத்தான நெடுநோக்கு திட்டத்தை துவக்கினார். திறமைசாலிகளை அவர் தேடினார். எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் திறமைசாலி என்றால் அவர் பதவியில் நியமிக்கப்பட்டார். எடுத்துக்காட்டாக, “சன் கோ கால்வாயை” கட்டும் அதிகாரத்தை ஹான் நாட்டைச் சேர்ந்த உளவாளி சென் கோசினுக்கு அவர் கொடுத்தார்.
கி.மு.230ம் ஆண்டு முதல் கி.மு.221ம் ஆண்டு வரையான பத்து ஆண்டுகளுக்குள் யின்சன் அடுத்தடுத்து ஹான், சௌ, வெய், யென், சு, சி ஆகிய ஆறு நாடுகளை தோற்கடித்து ஒன்றிணைப்பு இலட்சியத்தை நிறைவேற்றினார். அத்துடன் சீன வரலாற்றில் பிரிவினை நிலைமை முடிவடைந்தது. ஒருங்கிணைக்கப்பட்டு, மத்திய அதிகாரம் சின் மன்னராட்சியின் கீழ் வந்து யின்சன் சீன வரலாற்றில் முதலாவது மன்னராகினார். “ஸ்குவாண்டி” என்று அவர் அழைக்கப்பட்டார். சின் வம்ச அரசர்கள் முதன் முதலில் குவாங்தீ என்ற பட்டப் பெயரை சூடிக்கொண்டனர். பல அரசுகள் ஒடுக்கப்பட்டு ஒன்றுபடுத்தப்பட்டு ஒரு பெரும் பேரரசு என்ற நிலையை அடைந்தன.

சின் நாடு சீனாவை ஒன்றிணைத்து சீன வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியது. இந்த வம்ச காலத்தயே பேரரசுக்காலம் என்பர்.இது மிக முக்கியத்துவம் உடையது. முதலில், அரசியலில் ஸ் குவாங் நிலவாரிசு உடைமை முறையை சின் மன்னர் ஒழித்தார். நாட்டை 36 நிர்வாக வட்டாரங்களை பிரித்தார். அதன் கீழ் மாவட்டங்கள் உள்ளன. மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மன்னரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறையாக அதிகாரிகளை நியமிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. சின் நாடு உருவாக்கிய நிர்வாக வட்டார அமைப்பு முறை சீனாவின் ஈராயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவ வரலாற்றில் முடிவான அமைப்பு முறையாக செயல்பட்டது. தற்போதைய சீனாவில் உள்ள பல மாவடங்களின் பெயர்கள் அப்போது தான் நிர்ணயிக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.
சின் நாடு நாட்டின் அளவீட்டு முறையை ஒருமைப்படுத்தியது. அதற்கு முன் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவீட்டு ஆய்வு முறைகள் இருந்தன. பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்திருந்தது. இதற்கு ஏற்ப நாணயத்தையும் சட்டத்தையும் சின் ஸ் குவான் டி ஒருக்கிணைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கினார். அதேவேளையில் மத்திய அதிகாரம் பெரிதும் வலுப்படுத்தப்பட்டது.

சிந்தனை மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அரசு தொகுத்து“சின் வரலாறு”நூல் தவிர மற்ற நாடுகளின் வரலாற்று நூல்களையும் கம்பியூசியஸ் படைப்புகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு சின் ஸ் குவான் கி.மு. 213ம் ஆண்டில் கட்டளையிட்டார். இந்த மதிப்புக்குரிய படைப்புகளை தனிப்பட்ட முறையில் மறைமுகமாக சேகரித்து பிரசாரம் செய்தவரை கொன்று விடும்படி அவர் கட்டாயப்படுத்தினார். வடக்கிலுள்ள சிறுபான்மை தேசிய இனஅதிகாரத்தின் ஊடுறுவலை தடுக்கும் வகையில் சின் ஸ் குவான் முந்திய சின், சௌ, யென் நாடுகள் கட்டியமைத்த பெருஞ் சுவரை பழுதுபார்த்து கட்டும் படி அவர் கட்டளையிட்டார். பெருஞ்சுவர் அபோது முதல் மேற்கில் பாலைவனத்திலிருந்து கிழக்கில் கடலுக்கு செல்லும் நீளமான பெருஞ்சுவராகியது. அவருடைய கல்லறையைக் கட்ட சின் ஸ் குவான் 7 லட்சத்துக்கும் அதிகமான உழைப்பாளர்களை அணிதிரட்டினார். இந்த கல்லறை தற்போது உலகில் புகழ் பெற்ற சின் கல்லறையாகவும் குதிரை மற்றும் படைவீரர் உருவ சிலைகளின் காட்சியாகவும் திகழ்கின்றது.

சின் வம்ச ஆட்சியில் அரசியல் அமைப்பினை அறிமுகம் செய்யப்பட்டது. முன்னர் காணப்பட்ட எழுத்துக்கலையும் மறுசீரமைக்கப்பட்டது. பேரரசு எங்குமே ஒரே சீரான எழுத்தின் உபயோகம் காணப்பட்டது. இற்றை வரை சீனாவில் உபயோகிகப்படும் எழுத்தின் இறுதி வடிவம் வழங்கியவர்கள் இவ்வம்சத்தவராவர். இக் காலப் பகுதியில் தான் எழுத்துக்கலையை பயில பயன்படுத்தப்பட்ட மூங்கில் களி மண் பயன்படுத்தப்பட்டமைக்கு பதிலாக கடதாசி, தூரிகை, மை என்பன இக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

இரும்பு வண்டி உபயோகிக்கும் மரபையும் ஆரம்பித்தனர். பேரரசில் வண்டி உபயோகமானது மாகாணங்ககளை ஒன்றிணைக்க மட்டுமன்றி சீரான செய்திப் பரிமாற்றத்திற்கும் உதவியது.மற்றும் அறிவியல் துறை சார் கண்டுபிடிப்புக்கள் ஒரே நேரத்தில் சீன பூராகவும் பரவ இது உதவியது. இக் காலப் பகுதியில் சட்டவாதம் தவிர்த்த பல சீன செவ்வியல் ஆக்கங்கள் அழிக்கப்பட்டன. . பிரபுக்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. நிலம் விற்கக் கூடாது என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டது. நில விற்பனைக்கு அனுமதி அளித்தான். சாலைகள் அமைப்பு, நீர்ப்பாசன வசதிகள் போன்ற பல பணிகள் இவரது காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. சின்-குவங்க்-டி செருக்கு முகுந்தவராக விளங்கினார். புதிய சிந்தனைகளை அறிமுகம் செய்தார். பழைய நூல்களை எரித்தார். பழைய கருத்துக்கள் யாவும் மாற்றப்பட்டன. கி.பி 210 இல் இவர் இற்ந்த பின்னர் கலகம், உள்ளூர் ஒற்றுமை சீர் குலைவு என்பனவற்றை சாதகமாகப் பயன்படுத்தி கான் மரபினர் சின் மரபினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

கான் அரசமரபு (The Han Dynasty) கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும். ஹான் கோ டி மன்னரான லியுப்பான் ஹான் வம்சத்தை உருவாக்கி சான் அன்னை தலைநகராக ஆக்கினார். இது கின் அரசமரபைத் தொடர்ந்தும், மூன்று இராச்சியங்களுக்கு முற்பட்டும் நிலை பெற்றிருந்தது.

லியுப்பான் ஆட்சிபுரிந்த 7 ஆண்டுகளில் மத்திய அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நன்மை தரும் பல அரசியல் கொள்கைகளை வகுத்து தமது ஆட்சியை உறுதிப்படுத்தினார். கி.மு.159ம் ஆண்டில் கோச்சு மரணமடைந்த பின் குவெய் மன்னராக பதவி ஏற்றார். ஆனால் அப்போதைய அதிகாரம் ஹான்கோட்டியின் மனைவியான ராணி லயூச்சின் கையில் சேர்ந்தது. ராணி லயூ 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் சீன வரலாற்றில் மிக அரிதான பெண் ஆட்சியாளர்களில் ஒருவராவார். கி.மு.183ம் ஆண்டு வெண்டி மன்னராக பதவி ஏற்றார். அவரும் அவரின் மகனான சுச்சின் மன்னரும் மக்களுக்கு நன்மை தரும் கொள்கைகளில் உறுதியாக நின்று மக்களின் மீது திணித்த வரியை குறைத்தனர். இதனால் ஹான் பேரரசின் பொருளாதாரம் விறுவிறுப்பாக வளர்ந்தது. வரலாற்று ஆசிரியர்கள் இந்த காலத்தை “வென்சிங் ஆட்சி”காலமாக பாராட்டினர்.இந்த அரச மரபினர் புகழ் பெற்ற லியூ (Liu) என்னும் இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஆண்ட காலம் சீன வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. சீனாவின் பெரும்பான்மைச் சமூகத்தினர் இன்றும் தம்மை கான் மக்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

மேற்கு ஹான் வம்சம் சீன வரலாற்றில் ஒப்பிட்டளவில் வலிமைமிக்க பேரரசுகளில் ஒன்றாகும். மக்களுக்கு நன்மை தரும் கொள்கை இடையில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் பின்பற்றினர். மக்கள் உடைக்கும் உணவுக்கும் கவலைப்படமல் செழுமையாக வாழ்ந்தனர். ஹான் வம்சத்தின் அரசியல் உறுதியடைந்தது. வூதி மன்னர் அமைச்சர் தொங் ச்சொன் சூ முன்வைத்த கொன்பியூசியஸ் தத்துவத்தை மட்டும் பின்பற்றுவதென்ற யோசனையை ஏற்றுக் கொண்டார். அப்போது முதல்கொன்பியூசியஸ் தத்துவம் உருவாயிற்று. இந்த தத்துவம் சீன மன்னர்கள் ஆட்சிபுரிந்த போது கடைபிடித்த நாட்டை நடத்தும் கொள்கையாக விளங்கியது.

அரசியலும் பொருளாதாரமும் உறுதியடைந்ததால் கைவினைத் தொழில், வணிகம், சமூகவியல் கலை இயற்கை அறிவியல் ஆகிய துறைகள் பெரிதும் முன்னேற்றம் அடைந்தன. அறிவியல் தொழில் நுட்பம் உயர்ந்ததுடன், உலோகம், துணி ஆகியவற்றை முக்கியமாக கொண்ட மேற்கு ஹான் கைவினைத் தொழிலின் பயன்பாடு அதிகரித்தது. இதன் வளர்ச்சி மூலம் வணிகத் துறை செழுமையாகியானது. பட்டுத் துணிப் பாதை மூலம் மேற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுடன் தூதாண்மை மற்றும் வணிகத் தொடர்புகள் திறக்கப்பட்டன.

கி.பி.25ம் ஆண்டு முதல் கி.பி.220ம் ஆண்டு வரையான காலத்தில் ஹென்குவாங் வூ மன்னர் லியூ சியு கிழக்கு ஹான் மன்னராட்சியை நிறுவினார். கி.பி.25ம் ஆண்டு லியு சியூ லியூலின் எனும் படையின் உதவியுடன் ஆட்சியை கைபற்றிய ஓங் மானைத் தோற்கடித்து மன்னராக பதவி ஏற்றார். ஹான் நாட்டை நிறுவினார். லொயானை தலைநகராக நிர்ணயித்தார். இரண்டாவது ஆண்டில் குவான்யூ மன்னர் லியு சியு ஓங் மான் நடைமுறைபடுத்திய பழைய கொள்கையை மேற்குர்திருத்தி ஆட்சி முறையை சரிபடுத்த கட்டளை பிறப்பித்தார். நாட்டின் விவகாரங்களை கையாள 6 அமைச்சர்களை அவர் நியமித்தார். அதிகாரிகள் அமைமைகளைக் கொண்டிருக்கும் முறைமையை நீக்கினார். நிலத்தை சரிபார்த்தார். இதன் விளைவாக மக்களின் வாழ்க்கை படிபடியாக அமைதியாகியது. கி.பி.முதலாம் நூற்றாண்டின் நடுபகுதியில் குவான் மன்னர், மின் மன்னர், சான் மன்னர் ஆகியோரின் நிர்வாகத்துக்குப் பின், கிழக்கு ஹான் வம்சம் முந்திய ஹான் வம்சத்தின் செழுமையை மீட்டது. அந்த காலம் மக்களால் மறுமலர்ச்சி காலமாக பாராட்டப்பட்டது.

கிழக்கு ஹான் வம்சத்திந் முற்காலத்தில் அரசியல் அதிகாரம் மேலும் வலுபட்டு உள்ளூர் அதிகாரத்துடன் இணைந்ததால் நாட்டின் நிலைமை நிதானமானது. பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் தரம்மேற்கு ஹான் தரத்தைத் தாண்டியது. கி.பி.105ம் ஆண்டில் சைலன் தாள் தயாரிப்பு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கவே சீனாவில் மூங்கில் பலகையில் எழுத்துக்கள் செதுக்கப்பட்ட காலம் முடிவடைந்தது. தாள் தயாரிப்பு நுட்பம் சீனாவின் பண்டைர்காலத்திய 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இப்போது அங்கீகரிக்கப்படுகின்றது. இயற்கை அறிவியல் துறையில் சான் ஹன்னை பிரதிநிதியாகக் கொண்ட கிழக்கு ஹான் கல்வியியல் வட்டாரத்தில் மதிப்பு பெற்றது. வானியல் புவி உருண்டை, பூகோளம் கண்காணிப்பு கருவி போன்ற அறிவியல் கருவிகளை சாங் ஹன் உருவாக்கினார். தவிரவும் கிழக்கு ஹான் வம்சத்தின் பிற்காலத்தில் புகழ் பெற்ற சீன மூலகை மருத்துவர் குவா தோ மயமக்க மருந்து நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளித்தார்.

கான் அரசமரபினர் காலத்தில் சீனா அதிகாரபூர்வமாகக் கன்பூசிய மதத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டது. இக்காலத்தில் சீனா, வேளாண்மை, கைப்பணி, வணிகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்ததுடன், மக்கள்தொகையும் ஐந்தரைக் கோடியைத் தாண்டியிருந்தது. அதே வேளை ஆன் பேரரசு, தனது அரசியல், பண்பாட்டுச் செல்வாக்கைக் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இது பின்னர் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகக் குலைந்து போயிற்று.
கான் அரசமரபை இரண்டு பிரிவுகளாக அடையாளம் காண்பது உண்டு. முதலாவது, முந்திய ஆன் அரசமரபு அல்லது மேற்கத்திய கான் அரசமரபு என்றும், மற்றது பிந்திய ஆன் அரசமரபு அல்லது கிழக்கத்திய ஆன் அரசமரபு என்றும் அழைக்கப்படுகிறது. முந்திய ஆன் அரசமரபு, கி.மு 206 தொடக்கம் கிபி 24 வரையும் சாங்கானில் இருந்து ஆண்டு வந்தது. அடுத்தது, கி.பி 25 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 220 வரை லுவோயாங்கிலும் இருந்தது. இந்த அரச மரபில் பெண்களும் அரசாட்சி செய்தனர். இவ்வம்ச வெந்தி என்ற மன்னன் வாசிக சாலை ஒன்றை நிறுவினான். கடும் குற்றம் இழத்தோருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. மேற் கூறிய வகையில் சீன நாகரீக அரச வம்ங்கள் சீன மக்களின் உன்னத நிலைக்கு வழி வகுத்தன.

About the author