புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Rutu
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 53 matches for பிரம்ம_ரிஷியார்

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 VANnn9w

ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து படித்து வந்து சாமான்யன் மனநிலை எப்படி இருக்கும்? ஒரு வேலை கிடைத்து அதிலே மேலேறி நிம்மதியான வாழ்வும் மேலதிக பதவியும் பெற்று நிம்மதியான வருமானத்துடன் நல்ல வசதியுடன் வாழ்வை நகர்த்த வேண்டும் என்றுதான் இருக்கும் அது உலக இயல்பு.

ஒரு இளம் காவல்துறை அதிகாரியின் சிந்தனை மேலதிக பதவிகளை பெற வேண்டும், பணி ஓய்வு காலத்தில் டி.ஐ.ஜி போன்ற பெரும் பதவிகளை பெற்று ஓய்வுக்கு பின்னும் தேர்வு கமிட்டி பயிற்சி கமிட்டி என செல்ல வேண்டும் என்றே வரும்.

காவல்துறையில் இருப்போர்க்கு இன்னொரு ஆசை வரும் அது மாபெரும் ஆலைகளுக்கு பாதுகாவல் வேலை ஏற்பது , தானே ஒரு பாதுகாப்பு படை உருவாக்கி தனியார் காவலை கொடுப்பது.\

இப்படி ஏழை சாமானிய வாரிசுக்கு சிந்தனை பொதுவாக இப்படித்தான் செல்லும்.

ஆனால் அந்த அண்ணாமலை இங்குதான் தனித்து நிற்கின்றார்.

பொதுவாக கட்டளை இட்டு பழகியவன் அந்த நிலையில் இருந்து இறங்கமாட்டான் மானிட சுபாவம் அது.

குள்ரூட்டபட்ட அறை , தனக்கு கீழ் எகபட்ட காவலர்கள், சாலையில் சென்றாலே தனி மரியாதை, யாரையும் எங்கேயும் தூக்கும் அதிகாரம், ஜனாதிபதியே தன் எல்லைக்கு வந்தால் தானே காவல் கொடுக்கும் கம்பீரம் என பெரும்செல்வாக்கோடு இருந்தவர் அவர்.

அப்படிபட்ட அண்ணாமலை எல்லாம் துறந்து தூசிபடிந்த தமிழக தெருக்களில் மாதகணக்கில் நடக்கின்றார், தன் வேலை பதவி அந்தஸ்து என எலலாம் தூக்கி வீசிட்டு அடிதட்டு மக்களை தேடி இந்த மண்ணில் நடக்கின்றார் என்றால் அவர் இந்த மகக்ளை மண்ணை எவ்வளவு நேசிக்கின்றார் என்பதை உணரமுடிகின்றது.

தன்னலத்துக்கும் பொதுநலத்துக்குமான வேறுபாட்டை அறியமுடிகின்றது.

அவருக்கு தன்னலம் இல்லை, இந்த மக்களும் மண்ணும் மீளவேண்டும் எனும் பொதுநலம் ஒன்றே அவரில் நிறைந்திருக்கின்றது, அந்த பொதுநலத்துக்காக எல்லாம் இழக்க தயாராகிவிட்டார் என்பது உருக்கமாக தெரிகின்றது.

பாரதம் முழுக்க கால் தேய தேய நடந்த விவேகானந்தர், மலேயா சிங்கப்பூரில் நேதாஜி இந்திய சேனைக்கு ஆள்திரட்டியபோது தமிழக தெருக்களில் அலைந்து நேதாஜி படைக்கு ஆள் திரட்டிய அய்யா பசும்பொன் தேவர் ஆகியோரெல்லாம் இப்போது நினவுக்கு வருகின்றார்கள்.

அண்ணாமலையின் நடைபயணம் அதனை நினைவுபடுத்துகின்றது.

அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் வரவேற்பு களைகட்டுகின்றது, மாபெரும் தலைவனை கண்டது போல் வரவேற்கின்றார்கள்.

கவனிக்கவேண்டிய விஷயம் அண்னாமலை 50 ஆண்டுகால அரசியல் செய்தவர் அல்ல, அவர் தாத்தாவும் தகப்பனாரும் அரசியல்வாதி அல்ல‌.
\
அண்ணாமலை சினிமா நடிகரும் அல்ல, கிரிக்கெட் ஆட்டக்காரரும் அல்ல, அரவிந்த்சாமி போல தோற்றம் கொண்டவரும் அல்ல‌.

அவர் சார்ந்திருக்கும் கட்சி பெரும் வாக்குவங்கி கொண்ட கட்சியும் அல்ல‌.

ஆனால் மக்கள் விழுந்து விழுந்து வரவேற்கின்றார்கள்,செல்லுமிடமெல்லாம் தங்கள் வீட்டு பிள்ளை போல கொணடாடுகின்றார்கள், கொஞ்சம் ஆழமாக வரலாற்றை புரட்டினால் 1972ல் எம்ஜிஆருக்கு என்ன வரவேற்பு மக்களிடம் இருந்ததோ அது அப்படியே இவருக்கும் இருக்கின்றது,

செல்லுமிடமெல்லாம் அங்குள்ள பிரச்சினைகளை பேசுகின்றார், நியாயவிலை கடையில் கருபப்ட்டி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதெல்லாம், கள் விற்க அனுமதி வேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெறுகின்றது.

எந்த அரசியல்வாதியும் செய்யாத விஷயமாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை சந்திக்கின்றார், இன்னும் நாட்டுக்காக உழைத்த அத்தனை பேரையும் சந்திக்கின்றார்.

இந்த பயணம் நிச்சயம் திட்டமிட்டபடி ஜனவரி 4ல் முடியாது, இடையில் வரும் மழைகாலம் வெள்ளம் வரும் காலம் இது தாமதமாகும், அநேகமாக பெப்ரவரியில் முடியலாம்.

அதன் பின் ஏப்ரலில் அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது இதே ஆதரவு தேர்தலில் மாற்றத்தை கொடுக்கலாம்.

இந்த பயணம் என்பது சாதாரணம் அல்ல், ஓய்வில்லா பயணம் , அலுக்காத சந்திப்பு, இடைவிடாத பேச்சு என அவர் செய்து கொண்டிருப்பது தன்னை ஒறுத்து ஒரு தவம்.

அந்த தவம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

அவரின் பயணத்தையும், தன்னை வருத்தி அவர் தமிழகம் மீட்க படும்பாட்டையும் கவனித்தால் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன‌.

"எங்கிருந்தோ வந்தான் க‌டைச்சாதி நான் என்றான்
மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்
கற்ற வித்தை யேதுமில்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்றுபல சொல்லி நின்றான்
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் மண்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்த மாக்குகிறான்
இங்கிவனை யாம் பெறவே என்னதவஞ் செய்து விட்டோம்"

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 AYrdmTq

பொதுவாக தமிழக டிவிக்கள், யூ டியூப் அலப்பறைகளை கண்டாலே அலர்ஜி, கொஞ்சமும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான விஷயங்களை அவர்கள் கொடுப்பதே இல்லை, எல்லாம் வெட்டி நியாயம் வீணான தர்க்கம், ஐந்து காசுக்கு உபயோகமில்லா விஷயம்

அதை பார்ப்பதை போல நேர விரயம் ஏதுமில்லை என்பதால் அப்பக்கம் செல்வதே இல்லை

ஆனால் அண்ணாமலை அரசியலுக்கு அப்பாற்பட்டு கலாட்டா சேணலின் நிகழ்வில் கலந்து கொண்டார் என்றதும் பார்க்க தோன்றிற்று

பொதுவாக அரசியல் என்பது அழுத்தமிக்கது, அது கொடுக்கும் அழுத்தம் தாங்க மோடிபோல் யோகி போல் தவத்தில் இருப்பது ஒருவகை, எல்லாம் கடந்த ஞானவைராக்கியத்தில் நின்று தாங்கிகொள்வது ஒருவகை

அய்யா கலைஞர் போல வைரமுத்து வாலி போன்றோர் அமர, கவியரங்கம் இலக்கியம் முரசொலியில் கவிதை, அடிகக்டி குடும்ப சண்டை என அரசியல் அழுத்தம் போக்குவது இன்னொரு வகை அதெல்லாம் அவருக்கே சாத்தியம்

அன்னாமலை அந்த மோடி யோகி வகை, அவர் அரசியலுக்கு வந்து இரு ஆண்டுகள்தான் ஆகின்றது ஆனால் அவர் கடுமையாக உழைக்கின்றார், அவரின் பொழுதுபோக்கு என்றோ தனிபட்ட நண்பர்களுடன் விளம்பரமான பொழுதுபோக்கோ எதுவும் அவர் செய்ததில்லை

அரசியல் தாண்டி அதிகம் பேசுவதுமில்லை

அப்படிபட்டவர் ஒரு பேட்டி கொடுக்கின்றார் என்றால் கவனிக்க வேண்டும்

அந்த பேட்டியில் அவரை சிக்கத்தான் வைத்தார்கள், ஆட்டு குட்டி ஒன்றை மேடையில் ஏன் காட்டினார்கள் அதன் அவசியம் என்ன என்பது தெரியவில்லை

ஆனால் அவர் அசத்தினார், ஆடு மேய்த்துத்தான் படித்தேன் என் தந்தையர் ஆடுமாடு மேய்த்துதான் வாழ்ந்தனர் என்னை வாழவைத்தனர் என்பதை தெளிவாக சொன்னார்

பாரதம் வணங்கும் பகவான் கண்ணனே மேய்ப்பன் எனும் வகையில் அவரின் பதில் பெருமிதமாய் இருந்தது

நாம் உலகை கவனிக்கின்றோம், இந்துக்களை தவிர கோசாலை அதாவது மாடுகள்பராமரிப்பு நிலையம் கொண்டவர்கள் யூதர்கள்

அவர்களின் மூல குலதொழில் ஆடுமாடு மேய்ப்பதுதான், அதனால் ஆடுமாடு பலிகொடுக்கும் வழக்கம் உண்டு, இப்போது மிக சிறிய ஆனால் வலுவான தனிநாடு கொண்ட சமூகமாக இருந்தாலும் இன்னும் அந்த கோசாலைகளை பராமரிக்கின்றார்கள்

ஜெருசலேம் எவ்வளவு முக்கியமோ அப்படி இந்த கோசலையும் அவர்களுக்கு முக்கியம், இதற்கெல்லாம் அவர்கள் சொல்லும் ஒரே பதில் "முன்னோர்கள் செய்த தொழிலையும் அவர்கள் வாழ்ந்த மண்ணையும் மறக்கும் சமூகம் உருப்படாது

அண்ணாமலை அந்த ஆட்டினை தொட்டு தட்டி இதுதான் எனக்க்கு சோறுபோட்டது படிக்கவைத்தது எனும்போது அவரின் பெரும் பக்குவம் வெளிபட்டது

காவல்துறையின் அந்த தொப்பிக்கு அவர் காட்டிய மரியாதை பிரமிக்க வைத்தது, உண்மையில் ஒரு உன்னதமான காவல்துறை அதிகாரியின் மனம் அப்படித்தான் இருக்கும்

எமக்கு தெரிந்து பிரிட்டிஷ் காலத்தில் பெரும் பதவி வகித்த காவல்துறை அதிகாரி உண்டு, அவர் வீட்டில் அவர் பணியில் இருந்தபோது எடுத்தபடம் அதாவது தொப்பி காக்கிசட்டை கையில் அந்த அதிகார கோல் எல்லாம் கொண்டு அவர் நிற்கும் கம்பீரமான படம் அது

80 வயதில் அவர் இருந்தபோது நாம் கேட்டோம், மறுபடி இதே தொப்பி வைத்து படமெடுப்பீர்களா

அவசரமாக மறுத்தார் "நோ.. அது உயர்ந்த பதவி , நான் அந்த பதவியினை வகித்தபோது அந்த பதவியின் அடையாளத்தான் அணிந்தேன், எப்போது அதைவிட்டு நீங்கினேனோ அதன் பின் அதனை அணிவதோ , அதை சூடி அழகுபார்ப்பதோ அந்த பதவியின் மாண்புக்கு எதிரானது, அதையெல்லாம் காவல் அதிகாரியாக செய்யமுடியாது"

நல்ல காவல் அதிகாரியின் அனுபவமிக்க வார்த்தை அது, இந்த இளம் வயதிலே அந்த பக்குவத்தை அவர் அடைந்தது ஆச்சரியம்

மனிதர் அவர் வாழ்வின் பாதைகளை, குடும்பத்தை பற்றியெல்லாம் சொல்லும் போது வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து உழைத்து படித்து இந்த நிலையினை அவர் அடைந்திருக்கின்றார் என்பது தெரிகின்றது

அண்ணாமலையிடம் மிக மிக கவனிக்க வேண்டிய விஷயம், எந்த மேடையிலும் எந்த இடத்திலும் அவர் உணர்ச்சிவசபடுவதில்லை

அப்படி எளிமையாக தன் குடும்பம் மனைவி என கடந்து சென்றார், அந்த மொராக்கோ சம்பவத்தில் கூட குற்றவாளி பெயர், குற்றபின்னணி என எல்லாமும் மிக கவனமாக தவிர்த்தார்

சிறிய வயதிலே அவருக்கு மிகபெரிய பக்குவ்ம் வந்திருகின்றது, அது எல்லோருக்கும் வாய்க்காது

ஆக அவரின் பேட்டி சில விஷயங்களை சொன்னது

முதலில் வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து வந்த ஒருவனை, போராடி மேலேழுந்த சாமானியனை பாஜக கட்சிதான் அடையாளம் கண்டு மாநில தலைவராக்கி தேசிய தலமையினை நோக்கி அழைத்து செல்கின்றது

பாஜக தவிர இன்னொரு கட்சியில் இதெல்லாம் சாத்தியமா என்றால் அடுத்த ஆயிரம் ஆண்டுக்கு இல்லை

பாஜக எவ்வளவு பெரும் காரியத்தை எப்படியெல்லாம் அடிதட்டு மக்களை மேலே கொண்டுவரும் காரியத்தை செய்கின்றது என்பதை உணர அண்ணாமலை பெரும் உதாரணம்

அவரின் அந்த ஆடு காட்சியினை கடந்து செல்லமுடியவில்லை, நினைவுகள் எங்கோ சுழல்கின்றன

பல வருடங்களுக்கு முன் நயினார் நாகேந்திரனின் தகப்பனார் நயினார் தேவர் என்பவரை சந்தித்தேன், அவருக்கு அப்போதே 85 வயது இருந்தது, வாழ்ந்த காலத்தில் குறிப்பிடதக்க தொழிலதிபர் அவர்

நயினார் நாகேந்திரன் அப்போது அமைச்சராக இருந்தார்

அப்பொழுதெல்லாம் மதுகடைகள் தனியாரிடம் இருந்தன, ஏகபட்ட கடைகளை அவர் நடத்தினார் இன்னும் பிரதான பெரும் பெரும் தொழில்களெல்லாம் உண்டு

அதனால் ஏகபட்ட பெரும்புள்ளிகளெல்லாம் அவரை காண ஓடி ஓடிவருவார்கள்

கோடிகணக்கான சொத்துக்கள் பெரும் அதிகாரம் என இருந்த அவரை சந்தித்தபோது ஆடம்பர கார்கள் அணிவகுத்து நின்றன, பெரிய பெரிய ஆட்களெல்லாம் நின்றார்கள்

அந்த விலைஉயர்ந்த கார் ஓரமாக சில ஆட்டுகுட்டி கட்டபட்டிருந்தது அதற்கு தளைகள் இடபட்டிருந்தன‌

அவரிடம் மெல்ல கேட்டோம் "அய்யா இங்க எதுக்கு இந்த ஆட்டுகுட்டி"

சிரித்து சொன்னார் "தம்பி இன்னைக்கு வசதி வந்திருக்கலாம், கோடி கோடியா குவிந்திருக்கலாம் ஆனா அன்னைக்கு சோறுபோட்டது ஆடுதான், அதனால எங்க இருந்தாலும் அத மறக்ககூடாதுல்ல, பழசு கண்முன்னால இருந்தான் நாம எங்க இருந்து வந்தோம்னு தெரியும்ப்பா.."

ஆயிரம் அர்த்தமுள்ள வார்த்தை அது

இன்று கல்குவார் கொள்ளை மணல்குவாரி கொள்ளையெல்லாம் உச்சத்தில் இருக்கும் நேரம் அந்த வைகுண்டராஜனை பலர் மறந்திருக்கலாம், உண்மையில் அவர்மேல் சுமத்தபட்டவையெல்லாம் ஆதாரபூர்வ குற்றசாட்டு அல்ல‌

அந்த தொழிலை நியாயமாகத்தான் செய்தார், எவ்வளவோ பேர் தோற்றோடி ஏன் அரசே நடத்தமுடியாமல் விட்ட தொழிலை திறம்பட செய்து மேலெழுந்தார், அரசியல் அழுத்தங்களால் அவர் ஒதுக்கபட்டார்

பின்னாளில் பெரும் சர்ச்சைகள் பெரும் சொத்துக்களை கொண்ட வைகுண்டராஜனை எல்லோரும் அறியலாம் ஆனால் தொடக்கத்தில் 5 பேரோடு தொடங்கபட்ட மணல் ஆலயினை தன் தலையில் கூடை சுமந்து கைகளால் மண்ணை அரித்து பிரித்தெடுத்த அந்த உழைப்பாளி வைகுண்டராஜனை பலருக்கு தெரியாது

எந்தமண் அவருக்கு வாழ்வு கொடுத்ததோ அந்த மண்ணை மதித்து இன்றுவரை அவர் காலில் செருப்பு அணிவது இல்லை

இன்னும் எவ்வளவோ பேரை பார்க்கமுடியும், யார் பழையதை மறக்கவில்லையோ அவர்கள்தான் பெரும் உயரம் தொட்டார்கள், யார் மறந்து கனவில் பறந்தார்களோ அவர்கள் சரிந்தார்கள்

வந்தவழி தெரியாதவனுக்கு செல்லும் வழியும் தெரியாது

தான் உச்சநடிகராக இருந்தபோதும் படபிடிப்பு தளத்தில் ஒரு லைட்பாய் அவமானபடுத்தபட்டாலோ பசியோடு இருந்தாலோ எம்ஜிஆர் தாங்கியதில்லை தான் எங்கிருந்து வந்தாமோமோ அந்த அடிதட்டு மக்களின் வலியினை அவர் உணர்ந்திருந்தார்

அவரின் வெற்றிக்கெல்லாம் அதுதான் காரணம்

அண்ணாமலை அந்த நம்பிக்கையினைத்தான் தருகின்றார், அவர் சாமானியரில் இருந்து வந்ததால் இந்த மக்களின் வலி தெரியும், இந்த மக்களின் போராட்டம் தெரியும், அதனாலே அவரால் இப்படி மின்னமுடிகின்றது

அண்ணாமலையினை ஆட்டுகுட்டி என்போருக்கு அழகாக அவர் பதிலும் கொடுத்துவிட்டார்

திமுகவினர் இப்படி விமர்சிப்பதெல்லாம் எப்போதும் உண்டு , முன்பு காமராஜர்மேல் வன்மமாக "காமராஜரின் அன்னை கருவாடுவிற்றவள்" என்றார் கருணாநிதி

கண்ணதாசன் அமைதியாக சொன்னார் "என் தலைவனின் தாய் கருவாட்டை மட்டும்தான் விற்றாள்"

அப்படி இப்போதும் சொல்லலாம் "தலைவர் அண்ணாமலை ஆட்டுகுட்டியினை மட்டும்தான் மேய்த்தார்"

சரி அண்ணாமலைக்காவது எங்கள் குலதொழில் இது, இந்த தொழிலால் நாங்கள் பிழைத்தோம் வாழ்ந்தோம் என தைரியமாக சொல்லமுடிகின்றது, சொல்கின்றார்

இப்படி அவரை ஆட்டுகுட்டி என விமர்சிப்போர் தரப்பில் தங்கள் கட்சியின் பிம்பங்கள் குறித்து இப்படி சொல்லமுடியுமா?

சொல்லட்டும் பார்க்கலாம்..

#பிரம்ம_ரிஷியார்
ஒரு பெரிய நாடு எதிர்கள் அதிகம் கொண்ட நாடு ஆனால் உலகில் யாருமில்லாமல் தனித்து நிற்போம் அணிசேராமல் நிற்போம் என தனித்து நின்றால் என்னாகும் என்பதை மிக மோசமான அனுபவங்களால் பெற்ற நாடு இந்தியா.

நேருவின் அந்த குழப்பமான கொள்கையால் தேசம் சந்தித்த குழப்பம் அப்படி, ஆளாளுக்கு அடித்தார்கள், யானை தனியாக நின்றால் செந்நாய்கள் சூழும் என்பது போல் சூழ்ந்து அடித்தார்கள்.

இதோ இப்போது நேட்டோ என்றொரு அமைப்பு இருக்கின்றது அங்கிருக்கும் நாடுகளை இன்னொரு நாடு தொடமுடியுமா? தொட்டால் எல்லா நாடுகளும் சேர்ந்து அடிக்கும்.

ஆனால் தனியே ஒரு நாடு இருந்தால் என்னாகும் அதுவும் அடித்தால் ஆளில்லாத நாடு என்றால் உற்சாகமாக அடிப்பார்கள்.

அதனால்தான் குட்டிநாடான பாகிஸ்தான் இந்தியா மேல் புகுந்து புகுந்து அடித்ததது, இலங்கையெல்லாம் இந்தியாவினை எதிர்க்க துணிந்தது.

சீனா போட்டு பரிதாபமாக அடிக்கும் அளவு இந்தியா பலவீனமாக இருந்தது.

அந்த பலவீனம்தான் கார்கில் போருக்கும் வழிவகுத்தது, இந்தியாவினை அடித்தால் கேட்க யாருமில்லை என்ற துணிச்சலில் புகுந்து அடிப்பார்கள்.

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார்.

அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது.

பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது.

சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் முத்திரை பதித்த இடங்களும் உண்டு.

வஞ்சகமாக தன் குரங்கு சேட்டையினை நரிதந்திரமாக செய்தது பாகிஸ்தான், இந்திய உளவுதுறையின் தோல்வியும் நாம் ஒப்புகொள்ள கூடியது.

எனினும் பனிபடர்ந்த அம்மலை புவியில சிக்கல் உள்ள இடம் என்பதும் இன்னொரு விஷயம்.

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி அந்த இடத்தை இந்தியா மீட்டது.

காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று..

மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள்.

அதில் பாகிஸ்தான் ராணுவம், அல் கய்தா, தாலிபன் என பல பயங்கர முகங்கள் இருந்தன.
உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது.
அந்த போரினை பார்த்தவர்களுக்கு புரியும், அது முஷாரப் ரகசியமாக நடத்திய போர், முதலில் திணறிய இந்தியா கொஞ்சம் உயிர் பலிகளை கொடுதது.

பின் சுதாரித்து நிலமையினை அளந்து அடித்தது, இந்திய விமானபடையின் வீரமான அதே நேரம் நுட்பமான தாக்குதலும் பாகிஸ்தானை ஓட வைத்தது.

இது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என ராஜதந்திரமாக இந்தியா அடித்த அடியில் திருடனுக்கு தேள் கொட்டியது போல் பாகிஸ்தான் ராணுவம் பல்லை கடித்து கொண்டிருந்தது.

மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள் இன்று, இந்த தோல்வியே பின்பு முஷாரப்புகும் நவாசுக்கும் பெரும் முரண்பாடாய் முடிந்தது.

இந்திய எல்லையில் ஊடுருவ வந்த எதிரிகளை அடித்து விரட்டி நம் நிலத்தை நம் ராணுவம் காத்த நாள் இன்று.
கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்.

அந்த யுத்தத்தில் மிராஜ் ரக விமானங்களின் பலத்தோடு இந்திய விமானபடை காட்டிய வீரமும் மறக்கமுடியாதது.
அந்த ராணுவத்துக்கு வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என்ற பாரதியின் வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்.

இந்த வெற்றிக்கு பின் இந்தியா தன் வான் பாதுகாப்பு, பல்வகை உளவு, எல்லை பாதுகாப்பு என எல்லாவற்றையும் பலபடுத்தியது. அதன் பின் ஒரு இன்ச் கூட பாகிஸ்தானால் தொட முடியவில்லை.

இனி கனவில் கூட தொட்டுபார்க்க முடியாது.

நேருவின் அணிசேரா கொள்கையினை வீசி விட்டு மோடி குவாட் அமைப்பிலும் இன்னும் பல நாட்டு அமைப்பிலும் இந்தியாவினை சேர்த்தபின் தேசம் இப்போது மிகவும் பலமாயிற்று.

பாகிஸ்தான் இனி நாட்டை நடத்தவே வழி இல்லை எனும் வகையில் இனி யுத்தமில்ல்லை.

உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து படும்பாட்டில் இனி சீனா இந்தியாவோடு யுத்ததிற்கு வரபோவதில்லை, எனினும் எந்த யுத்தத்துக்கும் தேசம் தயாராக இருக்கின்றது.

பாரதம் ஒருபோதும் தோற்காது.. வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்


#பிரம்ம_ரிஷியார்


இந்துக்களின் பஞ்சாங்கமும் நாள்காட்டியும் வானிலையினை அடிப்படையாக கொண்டவை, பருவகால நிலைகளை வானியல் அசைவுகளுடன் கோள்களின் சஞ்சாரத்துடனும் சரியாக சொல்பவை.

12 ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை சரியாக 12 மாதங்களாக பிரித்தார்கள், அந்த பிரிவுகளை மாதங்கள் என்றார்கள், கோள்களின் சஞ்சாரபடி என்னென்ன பலனும் பாதிப்பும் பூமிக்கு வரும் என மானிடருக்கு உரைத்தார்கள்.

இன்றும் பரசுராமனின் கேரளத்தின் ஒவ்வொரு மாத பெயரும் 12 மாத பெயர்களே, இந்த ஆடிமாதம் அவர்களுக்கு கற்கடக மாதம், கடகம் ராமபிரானின் ராசி என்பதால் அங்கே இம்மாதம் முழுக்க ராமாயணம் படிப்பார்கள்.

ஆம், அங்கே கடகராசி மாதம்.

இந்த கடகராசியில் சூரியன் வரும் மாதம் ஆடிமாதம், கடகராசி சில விஷயங்களுக்கு அடையளம் காணப்படுவது...

முதலாவது அது சந்திரனின் ராசி, இரண்டாவது அது பித்ருக்களின் சம்பந்தமான ராசி, மூன்றாவது அது நீர் ராசி.

அப்படிபட்ட ராசி மண்டலத்தின் சந்திரன் சூரியன் வரும் பொழுது தனி சக்தி பெறும், குரு அங்கு உச்சமடையும். சந்திரன் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாகவும் சூரியன் சிவனின் அம்சனாகவும் அறிபடுவதால் அமமாதத்தில் சந்திரன் பெரும் சக்தி அன்னையின் தனிப்பெரும் சக்தியாகின்றது.

அந்த பாதிப்பு பூமியிலும் உண்டு அது அன்னையின் சக்தி பெருகி நிற்கும் மாதம் என்பதால் ஆடிமாதம் அம்மனுக்கு என வகுத்தது இந்துமதம், கடகராசியின் நீர் ராசியில் குரு அம்சமும் சேர்வதால் அந்த மாதத்தில் மழைபெருகும் அந்த மழையின் நீரில் குருவின் அருளால் சக்தி அதிகமாயிருக்கும்.

அந்த நீரை எல்லோரும் பாவிக்கும்படியும் அந்த சக்திமிக்க நீரில் குளித்தும் அதை தொட்டெடுத்து அன்னைக்கு அபிஷேகம் செய்து சக்திபெறவும் அது பல சம்பிரதாயங்களையும் விழாக்களையும் உருவாக்கிற்று.

அன்னை வழிபாடும், ஆடிபெருக்கும் இன்னும் பலவகை கொண்டாட்டமும் இதனால் தான்.

கடகராசி பித்ருக்களுக்குரியது என்பதால் ஆடி அமாவாசையினை அது பித்ருக்களுக்கான பெரும் நாளாக ஆக்கிற்று.

அந்த ஆடிமாத நீர்நிலைகள் குரு அருளால் தனித்து நிற்பதால் அந்த நீரை பயிர்களுக்கும் கொடுக்க சொன்னார்கள், "ஆடிப் பட்டம் தேடி விதை" என இந்துக்கள் சொன்னது அதனால் தான்.

சந்திரனின் ராசி உச்சத்தில் இருக்கும் நேரம் அதுவும் சூரியனோடு சேர்ந்து நிற்கும் நேரம் அந்த பிரஞ்ச சக்தியின் தனி அருளை பெறுவதற்குத்தான் ஆடிமாத வழிபாடுகளை செய்தார்கள்.

இந்த ஆடிமாதமே மகாபாரத யுத்தம் நடந்ததாக ஒரு செய்தி உண்டு, அப்படியே ராமன் போரை தொடங்கியதாகவும் இன்னொரு புராண செய்தி உண்டு.

ஆடிமாதம் சூட்சும ரீதியாக சக்திமிக்கது என்பதால் துர்தேவதைகள் அல்லது துர்சக்திகளின் ஆதிக்கமும் கூடும், அதனை அம்மாதத்தில்தான் பரம்பொருள் அடக்கி வைத்ததாக சொல்லி நம்பிக்கை ஊட்டியது இந்துமதம்.

அன்று பாரதம் முழுக்க ஆடிமாதம் அம்மனுக்கான மாதம் என பெண்களை பெருமைப் படுத்தியது.

ராமகாதையும், பாரத தத்துவமும் நாடெங்கும் சொல்லிக் கொடுத்தபடியே அம்மனை கொண்டாடினார்கள் அதாவது பெண்களை கொண்டாடினார்கள்.
பெண்கள் கண்ணீர் எவ்வளவு வலுவானது என்பதையும் பெண்களை கொடுமைப்படுத்தினாலோ அழவைத்தாலோ என்னாகும் என்பதை எல்லா கோவில் வாசலிலும் சொல்லி கொடுத்தார்கள், பெண் தெய்வங்களை கொண்டாட சொன்னார்கள்.

அன்று ஆடியின் முதல் 18 நாளும் கீதை உபதேசிக்கப்பட்ட காலம் உண்டு, பாரத போரின் 18 நாட்களில் 18 பெரும் சக்திகள் அழிந்த கதையினை சொன்ன காலமும் உண்டு.

ராமாயண பெருமை சொல்லி சீதை கண்ட துயரை சொல்லிக் கொடுத்த காலம் உண்டு, இன்றும் அந்த மரபு கேரளாவில் உண்டு. ஆடி முழுக்க ராமகாதை பாடப்படும், அன்றிலிருந்தே கேரளம் அப்படித்தான். இதனாலே கம்பராமாயணம் பாடிய கம்பன் சேரநாட்டில் அடைக்கலமானான்.

பின்னாளைய அந்நிய ஆட்சியில் இந்துமதம் தன் ஸ்தானத்தை இழந்து நலிவுற்ற பொழுது எல்லாம் மாறிற்று, நிறைய சம்பிரதாயங்கள் இழக்கப்பட்டன ஆனால் அம்மனுக்கான கொண்டாட்டம் அதில் தனித்து நிற்கின்றது.

ஆடியில் திருமணம் செய்யக்கூடாது என்பதும் ஆடியில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாது என்பதும் மூட நம்பிக்கை அல்ல, ஆடியில் வெள்ளம் வந்து ஆவணியில் மணமும் மங்களமும் ஆரம்பிக்கும்.

அந்த வாழ்வு எவ்வளவு சிரமமானது என்பதையும், வாழ்வுக்கு புராணமும் தத்துவமும் என்னென்ன போதனைகள சொன்னது என்பதையும் இந்துக்களுக்கு கோவில்களில் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆடிமாதம் என்பது வாழ்வின் ஞானம் பெறும் மாதம், வாழ்வினை தொடங்க பெற வேண்டிய ஞானத்தையும் தத்துவங்களையும் பெறும் மாதம், அந்த தியான நிலையில் இருக்கவேண்டும் என்றுதான் மங்கள காரியங்களை தவிர்க்க சொன்னார்கள், கொண்டாங்களை ஒதுக்கிவைக்க சொன்னார்கள்
பாரதமும் ராமாயணமும் அம்மன் அவதார கதைகளும் கோவிலில் திருவிழா என ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு புகட்டப்பட்டது.

ஞானகாரியங்களை தாண்டி வானியல் அம்சங்களை தாண்டி அம்மாதம் புதுமழை காலம், அம்மாதம் அடுத்து விவசாயம் களைகட்டும்
அந்த புதுவெள்ளமும் காலமாற்றமும் சில நோய்களை ஏற்படுத்தும் இதனாலே கோவில்களிலும் தெருக்களிலும் மஞ்சள் தெளிக்க சொன்னார்கள், வேப்பிலையும் இன்னும் பல பொருட்களும் புழங்குமாறு பார்த்து கொண்டார்கள், அது அம்மனுக்கு பிடிக்கும் என்றார்கள்.

கூழ் போன்ற உணவுகளை கோவில்களில் கொட்டி கொடுக்க சொன்னார்கள்.

இது சீதோஷ்ன நோய்களை கட்டுப்படுத்தும் இன்னொன்று மக்களிடம் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தும் அந்த ஐக்கியம் ஆறு குளம் வயல் என எங்கும் சேர்ந்து உழைக்கும் மனதை கொடுக்கும்.

ஒவ்வொரு காரியத்தையும் இந்தமாதம் பார்த்து பார்த்து ஏற்படுத்தினார்கள் இந்துக்கள்.

இந்துமதம் மானிட வாழ்வில் அவர்கள் மனம் உணர்ந்து மனநிலை உணர்ந்து அவர்களை வழிநடத்தவும் அந்த வழிநடத்தலில் பிரபஞ்ச சக்தியினை கலந்து கொடுக்கவும் ஏற்பாடுகளை செய்த ஞானமதம்.

ஆடி கொண்ட்டாட்டமும் வழிபாடும் இதர சம்பிரதாயங்களும் அதைத்தான் சொல்கின்றன‌.

ஒவ்வொரு நாளும் ஆடியில் முக்கியமானது, அந்நாளில் அம்மனை தவறாது வணங்குங்கள் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஒரு அம்மனுக்கு செய்யுங்கள், பலன் உண்டு.

முடிந்தால் ஒரு நேரமாவது சீதை கதையும் , பாரத பாஞ்சாலி கண்ட துயரங்களையும் மனதால் நிறுத்தி ஒரு ஆணும் பெண்ணும் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யகூடாது என சிந்தியுங்கள்.

திருமண வாழ்வை தொடங்க இருப்பவர்களுக்கும் ., வாழ்வில் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு அது பெரும் நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுக்கும்.

கைகேயி, கூனி கதைகளை தாண்டி பொன்மானை கேட்டாள் சீதை என்பதையும் அவள் கேட்டதும் பொன்மான் உண்டா என யோசிக்காமல் ஓடிய ராமனின் நிலையும் நினைத்தாலே ஆயிரம் சிந்தனை பெருகும்.

ஆம் தவறு இரு பக்கமும் உண்டு, அந்த தவறுக்கான விலை என்னவென்று உணர முடியும். பெரும் பாடம் படிக்கமுடியும்.

மனைவியின் விருப்பமின்றி சூதாடிய தர்மனின் நிலையினை படித்தாலே ஆண்களுக்கு ஞானம் வரும், பாஞ்சாலி கதையினை படித்தால் கண்ணனை பற்றினால் எப்பெண்ணும் வாழ்வாள் எனும் நம்பிக்கை வரும்.

அம்மன் ஆலயங்கள் பெண்களுக்கு தனி சக்தி கொடுப்பவை எனும் வகையில் பெண்களே இச்சமூகத்தின் இயக்கும் சக்திகள் எனும் வகையில் அம்மனுக்கு வழிபாடும் பெரும் யாகபூஜைகளும் செய்யபட்டால் நல்லது.

ஒவ்வொரு நாளும் முக்கியம் எனினும் ஆடிமாத வெள்ளியெல்லாம் தனி சிறப்பு வாய்ந்தது.

நீர்நிலைகளுக்கான மாதம் இதுவே ஆடிபெருக்கு அதை சொல்லும், பித்ருக்களுக்கான மாதமும் இதுவே...

தமிழகத்தில் இது கிராம கொடைவிழாக்கள் நடக்கும் காலம், இந்து தெய்வங்களில் ஒரு காலமும் பெரும் தெய்வம் சிறுதெய்வம் என்ற பிரிவினை எல்லாம் இல்லை, அதெல்லாம் மதமாற்றிகள் தூண்டிவிட்ட வார்த்தைகள்.

மதுரை போன்ற பெரும் ஆலயங்களில் வீரபத்திரர் இருப்பார், அவர் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் இருப்பார். அதாவது சிவனின் அம்சங்கள், பார்வதியின் அம்சங்களே, விஷ்ணுவின் அம்சங்களே கிராம தெய்வங்களாயின‌. சிவனின் அம்சம் சுடலை மாடன் என உக்கிர தெய்வங்களானது, அன்னையின் அம்சம் இயக்க்கி எனும் சக்தியாகி பின் இசக்கி என மருவிற்று. இயக்கும் சக்தி கொண்டவள் அன்னை என்பதே இசக்கி என்றாயிற்று. கருப்பன் போன்ற காவல் தெய்வங்கள் விஷ்ணுவின் அம்சமாயிற்று.

மனிதர்களில் பல வகை உண்டு, மென்மையானவர்கள், கொஞ்சம் இளகிய மனத்தோர், மிக பெரிய முரடர்கள் என பல வகை உண்டு.

ஞானமிக்க அம்மதம் அந்த மனிதர்கள் குணமறிந்து வழிநடத்த மென்மையான தெய்வம் முதல் முரட்டு சக்தி தெய்வம் வரை காட்டிற்று. முரட்டு இயல்புடைய மக்களை முரட்டு தெய்வ அம்சத்தை காட்டி வழிநடத்திற்று, இந்த வலுவான ஆக்ரோஷமான தெய்வங்களே முரட்டு மனிதர்களையும் அடக்கி சமூக அமைதி காத்தது. ஆம், அவரவர் இயல்புக்கு தக்கபடி தெய்வங்களையும் வகுத்து கொடுத்தமதம் இந்துமதம்.

ஒவ்வொர் மானிடருக்கும் அவரவர் தொழில் வாழ்க்கைமுறைக்கு ஏற்றபடி தெய்வ அம்சங்களை சொன்ன இந்துமதம் கிராம மக்களுக்கும் அவர்கள் வாழ்வுக்கும் காவலுக்கும் மூல பரம்பொருளின் அம்சத்தை சொன்னது.

அவர்களுக்கு இந்த ஆடிமாதம் பெரும் திருவிழா நடக்கும்.

இன்றும் மேளம், வில்லுபாட்டு, கொடை, சமையல், அலங்காரம் என பண்டை இந்துக்களின் பாரம்பரியத்தை கொடைகள்தான் காட்டிகொண்டிருக்கின்றன‌.

ஊர் கூடி மகிழும் ஏற்பாடு அது, கவனியுங்கள் அந்த கோவில்களும் சாமிகளும் இல்லையென்றால் ஏன் ஊர் ஒன்றாக கூடபோகின்றது, ஒன்றுபட இருந்து உணவருந்த போகின்றது?

கோவில்களே இந்துக்கள் ஒன்றுபட்ட இடம், நல்லது கெட்டது பேசி முடிவெடுத்த இடம், அம்மன் கோவிலோ சுடலை கோவிலோ ஊரின் உச்சநீதிமன்றமாய் இருந்த காலங்கள் அவை.

தெய்வத்தின் பெயரால் மனசாட்சியோடு வாழ்ந்தார்கள் அன்றைய இந்துக்கள் அதனால் நீதிமன்றமும் இல்லை காவல் நிலையமில்லை இன்னும் பல இல்லை, காவல் தெய்வங்கள் அந்த அற்புதத்தை செய்தன‌.

அம்மன் முன் சொல்லபடும் சத்தியம் எல்லா சட்டத்தையும் விட உயர்வாய் அன்றைய இந்துக்களுக்கு இருந்தது.

அப்படிபட்ட வாழ்வியல் முறைகளை வகுத்து மக்களை மக்களாக அமைதியாக நல்வழியில் வாழ சொன்னவை கிராம தெய்வங்கள், அவைகளின் அசைவில்தான் கிராமங்கள் ஜொலித்தன கிராமங்களின் செழிப்பில்தான் பாரதமே செல்வமாய் மின்னிற்று.

அந்த கிராம தெய்வங்களுக்கு ஆடி மாதமே பிரதானம்.

(பின்னாளைய மதமாற்றிகள் தந்திரமாக கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் ஆடியில் திருவிழா என மாற்றினார்கள் , இந்துக்களின் சம்பிரதாயத்துக்கு ஏற்றபடி மாற்றினார்கள்.

இன்றும் தென்னக பிரதான கத்தோலிக்க ஆலயங்கள் ஆடிமாதமே கொண்டாடப்படும், கொடியேற்றம் கடாவெட்டு, தேர் என எல்லா இந்து சம்பிரதாயத்தையும் அப்படியே பின்பற்றுவார்கள். ஆனால் தெய்வம் மட்டும் வேறு.

ஆனி, ஆடி தென்னக மக்களின் வாழ்வில் பொருளாதார வளத்தை காட்டிய மாதங்கள். ஆனி ஆடி சாரலுக்கு நல்லமிளகு விளையும் அது மேற்கே, அதே ஆனி ஆடி மாதத்தில்தான் பனைபொருட்களின் விற்பனையும் உச்சத்தில் இருக்கும் கருப்புகட்டி போன்றவை அப்படியானவை இன்னும் புஞ்சை விளைச்சலும் கைகொடுக்கும்.

அம்மன் ஆலயமும், சுடலைமாடன் ஆலயமும் நிரம்பிய தென் மாவட்டத்தில் பனைபொருட்கள் அதிகம், அதனால் அந்நேரம் வருமானமும் அதிகம்
வியாபாரத்துக்கு பெயர் பெற்ற நெல்லை வியாபாரிகள், அந்நேரம் மக்களிடம் பணம் விளையாடுவதை கண்டும் இன்னொரு பக்கம் கோவில் விழாக்கள் நடைபெறுவதை கண்டும் ஆடிமாதம் தள்ளுபடி அறிவித்தார்கள்.

அது ஆடி தள்ளுபடி என மெல்ல மெல்ல வளர்ந்தது, பின் நெல்லையர்கள் பல இடங்களுக்கு பரவி வியாபாரத்தில் ஜொலிக்க இன்று உலகெல்லாம் ஆடி தள்ளுபடி உண்டு.

ஆம் அன்று தென்னக மக்கள் பணம் வந்தவுடன் தெய்வத்தினை தேடி சென்று நன்றி தெரிவித்தார்கள், மனம் உவந்து அளித்த கொடைகள் பின்னாளில் அதே மாதங்களில் நிலைபெற்றது, தொடர்கிறது.

தென்னகத்தில் பல தெய்வங்களை வணங்கி வந்தாலும், இரு தெய்வங்களுக்கு அப்பகுதியில் சிறப்புகள் அதிகம்.

ஒருவர் சிலப்பதிகார காலத்திலே சேரநாட்டின் (கேரளம்) எல்லைக்கு காவல் தெய்வம் என அழைக்கபட்ட இசக்கி அம்மன், கேரளாவில் இன்றும் அம்மனே பிராதான காவல் தெய்வம்.

முற்காலத்திலே அப்பகுதியின் கேரள எல்லையான முப்பந்தல் இன்றும் என்றும் இசக்கியம்மனின் பிரதான கோயில்.
இன்னொருவர் சுடலைமாடன்.

இசக்கியம்மனாவது கேரளம் மற்றும் தென் தமிழக தெய்வம், ஆனால் நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளின் பிராதன காவல் அரசர் நிச்சயமாக சுடலைமாடன் சாமியே.

அவரின் பிரதானம் எனவென்றால் மகா உக்கிரமான சிவ அம்சமான அவர் இந்த பகுதிகளை மிகவும் நேசிப்பவர், மண்ணை பிரிய மனமில்லாதவர், வேறு எங்கும் செல்ல மாட்டார், அவ்வளவு பிரியம் அவருக்கு அந்த மண்ணின் மீது.

உலகில் வேறு எங்கும் அவரை காணமுடியாது, உலகினை விடுங்கள் தாமிரபரணிக்கு வடக்கே கூட கிடையாது.

நெல்லை,தூத்துகுடி,கன்னியாகுமரி பகுதிகளை தவிர எங்கும் செல்லமாட்டார். மிக மிக பிராதான் கோயில்கள் அவருக்கு இங்கு மட்டுமே உண்டு.

அங்கு எல்லா ஊர்களிலும் இருவருக்கும் அல்லது ஒருவருக்காவது கோயில்கள் உண்டு, ஊரின் மின்கம்பிகளை விட இவர்களின் ஆலயங்கள் அதிகமான ஊர்களும் உண்டு, எங்கும் வியாபித்திருப்பவர்கள், மக்களுக்கும் இவர்களின் மீது அவ்வளவு பக்தி, மரியாதை.

ஒரு விஷயத்தினை இங்கு கவனிக்க வேண்டும்

தமிழக மக்கள் ம‌க்கள் சாதாரமானவர்கள் அல்ல, 50பைசா மளிகையை கடைக்காரர் ஏமாற்றினால் கடையை மாற்றுவார்கள். அரசு சரியில்லை என்றால் 5 வருடத்தில் மாற்றுவார்கள்.

தொன்றுதொட்டு இன்றுவரை இந்த தெய்வங்களை கொண்டாடுகின்றார்கள் என்றால், நிச்சயமாக அந்த தெய்வங்களின் சக்தி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, வாழ வைக்கும் நம்பிக்கை.

அந்த தெய்வம் அவர்களை வாழவைத்து கொண்டிருக்கும் நம்பிக்கை..

ஆம் ஆடிமாதம் அற்புதமானது, அம்மன் வழிபாட்டில் மனம் லயித்து ஏகபட்ட ஞானங்களை பெற வேண்டிய மாதம்.

சந்திரனும் சூரியனும் இல்லாவிட்டால் உலகில் மழை இல்லை, மழை இல்லாவிட்டால் உயிர்களில்லை. நிலம் நீர் பட்டவுடன் துளிப்பது போல அதாவது உயிர் சக்தி என்பது மழையும் மண்ணும் கலந்தவுடன் வெளிபட்டு எல்லா உயிருக்கும் ஆதாரமான உணவினை உயிர்சக்தியாய் கொடுப்பது போல பெண்ணும் பெரும் சக்தி என்பதை சிந்துக்கும் மாதம் இது.

ஆம் இயக்கும் பெரும் சக்தியே மழையாய் பொழிகின்றது அந்த மழை ஆறாய் ஓடிவந்து உலகுக்கு உணவூட்டுகின்றது, புல்முதல் மானிடர் வரை எல்லாருக்கும் உயிர்சக்தியாய் அது மாறிகொண்டே இருக்கின்றது, கடைசியில் எல்லா உயிர்சக்தியும் இறையிடம் தஞ்சமடைகின்றன‌.

மழைபோல் நிலம் போல் ஆறுபோல் பெண்ணும் பெரும் சக்தி என பெண்களை போற்ற சொன்ன மதம் இந்துமதம், அந்த பெரும் உயிர்சக்திக்கு பெண் தெய்வ வழிபாட்டை கொடுத்து மானிட ஞானம் முதல் பிரபஞ்ச சக்திவரை பெற்று, மானிடம் தானும்வாழ்ந்து பித்ருக்கள் கடமையினை செய்து இன்னும் பல வகையில் மேன்மை அடைய இம்மாதத்தில் பெரும் ஏற்பாடுகளை செய்த மதம் இந்துமதம்.

ஆடியில் செய்யவேண்டிய வழிபாடும் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களும் நிரம்ப உண்டு, நல்ல இந்துக்கள் அதை செய்யட்டும், இவ்வொரு இந்துவும் தான் யார் என்றும், தன் பாரம்பரியம் எது என்றும் உணரும் பட்சத்தில் தேசம் தன் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்கும்.

ஒவ்வொரு இந்துவும் ஆடிமாதத்தில் தங்கள் கடமையினை செய்யட்டும், பிரபஞ்சம் அருள் புரியட்டும், பாரதம் உய்யட்டும்


சிவா
Fri Jul 07, 2023 8:11 pm

Search in: தினசரி செய்திகள்
Topic: சந்திரயான்-3
Replies: 43
Views: 1917
உலகில் 1950க்கு பின் விண்வெளி பலம் இல்லாமல் எதிர்காலம் இல்லை, யார் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவார்களோ அவர்கள்தான் பூமியிலும் ஆதிக்கம் செலுத்தமுடியும்

இன்றும் ரஷ்யா என்றால் ஒரு அச்சம் இருப்பதற்கும், எந்த நாடும் ஒரு எல்லைக்கு மேல் உக்ரைனுக்கு பெரிய ஆயுதங்கள் கொடுக்க தயங்குவதற்கும் காரணம் ரஷ்யாவின் விண்வெளி பலம், அந்த அளவு விண்வெளி மேன்மை அவர்களுக்கு உண்டு

இந்த பலத்தை பெற்றுவிட சீனாவுக்கும் ஆசை அதிகம் வானில் அவர்களும் ஒரு விண்வெளி நிலையம் வைத்திருப்பது, நிலவில் சீனரை இறக்குவதாக சொல்லிகொண்டிருப்பது என அவர்களும் கடும் முயற்சியில் இருக்கின்றார்கள்

இந்த போட்டியில் இந்தியாவும் உண்டு, அதுவும் பல சவால்களை கொடுக்கும், ஆனால் அதன் சில விண்வெளி முயற்சிகள் ரஷ்ய கட்டுபாடு என்பதால் பலத்த முன்னேற்றம் இல்லை

அதாவது ராகேஷ் சர்மா எனும் இந்தியரை விண்வெளிக்கு அழைத்து சென்றது சோவியத் ரஷ்யா, அது நடந்து 40 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் அடுத்த இந்தியர் விண்வெளிக்கு செல்லவில்லை

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர்கள் செல்வதை ரஷ்யா அனுமதிப்பதுமில்லை

மோடி காலத்தில் "ககன்யான்" திட்டம் அதாவது மறுபடி இந்தியர் விண்வெளிக்கு செல்ல ரஷ்யா உதவுவதாக சொன்னது ஆனால் இன்னும் நடகக்வில்லை இனியும் நடக்காது

இந்நிலையில்தான் ரஷ்யா தனக்கொரு முட்டுகட்டை போடுவதையும் விண்வெளியில் இந்தியா பெரும் இடம் பிடிப்பதை அது விரும்பவில்லை எனப்தையும் மவுனமாக கவனித்த இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்ந்தது

இனி இஸ்ரோவும் நாசாவும் சேர்ந்து பணியாற்றும் இனி இந்தியா மேலேழும்

உலகில் இப்போது சிக்கல் என்னவென்றால் விண்வெளிக்கு செல்லும் ஓடங்கள் இப்போது அமெரிக்காவிடம் இல்லை அவர்களின் டிஸ்கவரி, அப்பல்லோ, எண்டேவர், சேலஞ்சர் , கொலம்பியா என எதுவுமில்லை

இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யாவின் சோயுஸ் மட்டும்தான் போக்குவரத்தை செய்கின்றது

இந்நிலையில் அமெரிக்கா ஆறாம் தலைமுறை விண்வெளி ஓடங்களை தயாரிக்கின்றது, இந்தியாவும் இந்த ஆய்வில் உள்ளது

இதனால் எதிர்காலத்தில் இந்தியர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லலாம், கொஞ்ச காலம் ஆகும்

ஆனால் இந்தியா அதுவரை சும்மா இருக்கவிரும்பவில்லை தொடர்ந்து முயற்சிகளை செய்கின்றது, நிலாவில் சீனா எதையாவது செய்யுமுன் தான் செய்து சீனாவுக்கு குறைவான இடத்தில் இந்தியா இல்லை அது சரிக்கு சமமான இடத்தில் இருக்கின்றது என காட்டமுனைந்து பல திட்டங்களை செய்கின்றது

அதில் ஒன்றுதான் சந்திரயான் 3

வரும் ஜூலை 14ம் நாள் அது நிலாவுக்கு ஏவபடும் பல ஆய்வுகளை அது செய்யும், இதனால் இந்தியாவின் விண்வெளி பலம் நிலைநிறுத்தபடும்

இந்த அனுபவங்கள்தான் எதிர்காலத்தில் இந்தியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் வைக்கவும் காலம் வாய்ப்பளித்தால் சொந்தமாக விண்வெளியில் ஒரு நிலையம் அமைக்கவும் பயிற்சிகளை கொடுக்கும்

இந்த திட்டம் வெற்றிபெற, சந்திரயான் 3 தன் இலக்கில் பூரண வெற்றிஅடைந்து தேசத்தின் பெருமையினை நிலைநாட்ட தேசம் பிரார்த்திக்கின்றது

#பிரம்ம_ரிஷியார்
பிரான்ஸில் முகமதிய பதின்ம வயதுக்கார வாலிபன் சுட்டு கொல்லபட்தில் ஏற்பட்ட பெரும் கலவரம் இன்னும் முழுக்க ஓயவில்லை, அவன் உடல் அடக்கம் நடந்தபின்பும் நிலமை கட்டுக்குள் இல்லை, வரலாறு காணாத கைதுகள் பல்லாயிர கணக்கான காவலர்கள் அணிவகுப்பு, எங்கும் எரியும் நெருப்பு என நிலமை மிக குழம்பி கிடக்கின்றது

ஆனால் ஒரு முகமதிய இளைஞனை சுட்டு கொன்றதில் ஆரம்பித்த சர்ச்சைபற்றி ஐரோப்பிய யூனியன் பேசவில்லை, அமெரிக்கா கனடா பேசவில்லை

ஆச்சரியமாக அரபு நாடுகளும் பேசவில்லை

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் எப்படியெல்லாம் உலகம் பொங்கும் என்பது ரகசியமல்ல‌

ஆம், இந்த உலகில் இந்த அருமையான தேசத்துக்கு எதிரிகள் அதிகம், இந்துஸ்தானம் பலமான இந்துநாடாக மாறிவிட கூடாது என்பது ஆப்கானியர் தொடங்கிவைத்து இன்றுவரை ஐரோப்பியர் கவனமாக கண்காணிக்கும் அளவு அதன் எதிரிகள் மிக அதிகம்

அரேபியா, ஐரோப்பா என அங்கு பழைய பகையின் தொடர்ச்சி அதிகம், சீனா போன்ற நாடுகளின் கொள்கை ரீதியான முரண்பாடு அதிகம்

இத்தனை எதிர்ப்புக்குள் இந்த தேசத்தை வழிநடத்துவது எவ்வளவு சிரமம் என்பதை உணர்வது கடினம் அல்ல, இத்தனை எதிர்ப்பிலும் சாதுர்யமாக தேசத்தை நடத்தி உலகின் பலமான நாடாக, பொருளாதார கேந்திரமிக்கை நாடாக ஒரு தலைவன் உயர்த்தி , உலகின் மிக முக்கிய நாடாக ஜொலிக்க செய்திருக்கின்றான் என்றால் அம்மனிதன் எப்படிபட்ட மகாசக்தி பொருந்தியவனாக இருக்க முடியும்?

தேசம் நிச்சயம் ஒரு அவதாரத்தின் கையில் பத்திரமாக இருக்கின்றது, காலமட்டும் அவனே இத்தேசத்தை நடத்த முழு தகுதியுள்ள திருமகன்

#பிரம்ம_ரிஷியார்
தமிழக முதல்வர் ஸ்டாலினார் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கபட்டிருக்கின்றார் என்கின்றன செய்திகள்

இது வழமையான பரிசோதனையே என அவர் தரப்பும் மருத்துவமனை தரப்பும் சொன்னாலும் அய்யா ஸ்டாலினாரின் விருப்பமமான மருத்துவமனை காவேரி என்பதும் அது அல்லாது ராமசந்திரா என்பதும் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்தது

இம்முறை அப்பல்லோவில் தன் வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருக்கின்றார், வழமையான சோதனைகள் முடிந்து இனி அவர் பணியினை தொடர்வார்

காவேரிக்கு அவர் செல்வது செந்தில்பாலாஜி அங்கிருக்கும் நேரம் கூடுதல் பரபரப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் தவிர்த்திருக்கலாம்

பொதுவாக காமராஜர் கக்கனுக்கு பின் தமிழக முதல்வர்கள் தமிழக அரச மருத்துமனை பக்கம் செல்வதே இல்லை. இவ்வளவுக்கும் அவர்கள் ஏகபட்ட மருத்துவமனைகளை திறந்து மக்களுக்கு கொடுப்பார்கள் ஆனால் அவர்கள் அங்கே செல்லமாட்டார்கள்

அரச மருத்துமனைகள் ஏழைகளுக்கானது நாம் ஏழைமக்களுக்கு கிடைக்க கூடிய சிகிச்சையில் பங்குபெற கூடாது எனும் மிகபெரிய நல்லண்ணமே அதற்கு காரணமாக இருக்கமுடியும்

இந்த பரிசோதனைகளால் தேசிய அளவில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டங்களுக்கு முதல்வர் செல்வாரா இல்லை இவரை நலம் விசாரிக்க அவர்களெல்லாம் சென்னைக்கு ஓடிவருவார்களா இல்லை இரண்டுமே நடக்காதா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்

#பிரம்ம_ரிஷியார்
சிதம்பரம் ஆலயத்தில் என்ன பிரச்சினை என்றால் முதல் பிரச்சினை அந்த ஆலயம் அறநிலைய கைக்கு வராமல் இன்னும் இந்து ஆகமவிதிபடி இயங்குவதுதான் இவர்களுக்கு முதல் பிரச்சினை, அந்த ஒரு காரணத்தில் இருந்து அடிக்கடி வருவது அடுத்தடுத்த பிரச்சினைகள்

சிவனுக்கு ஐந்து சபைகள் உண்டு, திருவாலங்காடு ரத்தினசபை,நெல்லை தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரசபை, மதுரை சோமநாதருக்க் வெள்ளி சபை, அப்படியே சிதம்பரத்தில் அவருக்கு தங்க சபை உண்டு

சிவாலயங்களின் இந்த சபையில் அவர் நடனமாடும் தோற்றத்தில் தோன்றி அருள்புரிவார் இது ஐதீகம்

இப்படியான நிலையில் அந்த சிதம்பரத்தில் சிவனுக்கு ஐந்து உட்சபைகள் உண்டு

அது சித்சபை, கனகசபை, இராஜசபை, நிருத்த சபை, தேவ சபை என ஐந்து


இதில் சித்சபை என்பது கருவறை, அதைத்தான் சிற்றம்பலம் என்பார்கள், அங்கேதான் அவர் நிரந்தரமாக இருப்பார்

இந்த ஆலயத்தில் சில கால அளவுகளில் அபிஷேகங்கள் உண்டு, அப்போது வேறு வேறு இடத்துக்கு வந்து அவர் பெற்றுகொள்வதாக ஐதீகம், அப்பொழுது இடம்மாறுவார்

சித்திரை, மாசி, ஆவனி, புரட்டாசி மாத அபிஷேங்களை அவர் கனசபைக்கு வந்து பெறுவார், மீதமுள்ள இரு முக்கிய அபிஷேகமான ஆனி, மார்கழி மாத அபிஷேகங்களை ராஜசபையில் பெறுவார்

இது பெரும் கூட்டத்தை கட்ட்படுத்தும் வழியாகவும் எல்லோரும் சிவனை காணும் ஏற்பாடாகவும் அன்று இருந்தது

இது 48 வருடத்துக்கு ஒருமுறை இன்னும் மாறும் அந்த மண்டல கும்பாபிஷேகத்தின் போது தேவ சபையில் சிவன் தரிசனமாவர்

நிருத்தசபைதான் அவர் தேவியுடன் போட்டியிட்டு வென்ற இடம், ஆனால் மாலிக்காபூர் கால படையெடுப்பின் அழிவுக்கு பின் அங்கே சிவன் நிற்கும் பாரமபரியம் பின்பற்றபடவில்லை

இப்போது விஷயத்துக்கு வரலாம்

கனகம் என்றால் தங்கம், இந்த சித்சபை அதாவது கருவறைக்கு முன் இருக்கும் அந்த மண்டபத்தின் கூரைக்கு தங்கம் வேயபட்டிருக்கும் அதுதான் கனகசபை

இந்த பொற்கூரை சோழர்காலத்தில் முதலில் செய்யபட்டது பின் மாலிக்காபூர் எல்லாவற்றையும் கொள்ளையிட்டு சென்றபின் பொற்கூரை இல்லாமல் இருந்தது

1677ல் சிதம்பரம் வந்த சிவாஜி இதுகுறித்து பெரிதும் வருந்தினான், பின் அவன் மகன் சாம்பாஜி இப்போது இருக்கும் பொற்கூரையினை அமைத்தான்
சித்சபை கனகசபை என இரண்டுமே உருவத்திலொன்றுபோலத்தான் இருக்கும், சிவன் இரு இடங்களிலும் தங்குவார்

இது பரம்பொருள் மற்றும் ஆத்ம தத்துவம், சிதம்பர ஆலயத்தினை மனித உடலாக கொண்டால் இதயம் இருக்குமிடத்தில்தான் சிற்சபை இருக்கும் கனகசபை அதை காப்பது போல் அமைந்திருக்கும்

ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தில் கட்டபட்ட அமைப்பு இது

ஜீவாத்மாவில் இருந்து பரமாத்மாவினை காணலாம் என சொல்லபட்டதே நாளடைவில் கனசபையில் இருந்து சிவனை காணலாம் என திரிந்தது, அப்படி கனசபை ஏறி சிவனை காணும் வழக்கம் வந்தது

இது சோழர்காலத்திலே உண்டு ராஜராஜசோழன் படங்களில் இக்காட்சி உண்டு, இதற்கு அனுமதி உண்டு

பொதுவாக வருடத்தில் நான்கு முறை சித்சபை இறங்கி நடராஜர் கனகசபைக்கு வரும் போது கனகசபை மீது ஏற வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை, அதற்கு அவசியமும் இல்லை. காரணம் நடராஜர் அருகே இருக்கிறார்.

ஆனால் ஆனி உத்திர திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா திருமஞ்சனம் போது இயல்புகள் வேறாக இருக்கும். விழாவின் போது இரண்டு நாட்கள் நடராஜர் சபையில் இருப்பதில்லை.

காரணம் முதல் நாள் இரவு தேர் பவனிக்கு நடராஜர் ஆயத்தமாகி சபையில் திருமுக தரிசனம்(மற்றவை மறைக்கப்பட்டு) காட்சித் தருவார். அன்று இரவே கனகசபையில் அடுத்த நாளுக்கு உரிய ஆறு கால பூஜைகளும் நடைபெறும்.

மறுநாள் நடராஜர் தேர் ஏறிவிட்ட பிறகு, அவர் இருந்த இடத்தில் சொர்ணகால பைரவரும், சந்திரசேகரரும் (சபைக்கு உள்ளே இருப்பவர்கள்) இருப்பார்கள், கனகசபை மூடப்படும். கனகசபையில் நடக்கும் பூஜைகள் சித்சபை உள்ளேயே நடைபெறும்.

இவை அனைத்தும் பதஞ்சலி சூத்திரம்(சிதம்பரம் கோயில் பூஜை முறை விளக்கும் நூல், வேதம் ஆகமம் கலந்தது) முறைப்படி இரகசியமாக நடைபெறும்.

அதில் பொது மக்கள் கலந்துக்கொள்ள அவசியமில்லை நடராஜரே சபை நீங்கிய பின்னர், யாரைக் காண வேண்டும்?

இதனால் இக்காலகட்டத்தில் கனகசபை ஏற அவசியமில்லை என்பதால் அனுமதிக்கமாட்டார்கள், இந்த வழக்கமான நடைமுறைதான் இப்போதும் வந்தது, இதற்குத்தான் இவ்வளவு சர்ச்சைகள்

அந்த குறிப்பிட்ட நாளுக்கு பின் ஆனிமாதம் அவர் அந்த ராஜமண்டத்தில் எழும்போது வழக்கம்போல கனகசபையில் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள், அது தொடங்கிவிட்டது

ஆக நடந்தது ஆலயத்தின் வழமையான ஒரு நடைமுறை, தேர் திருவிழா காலங்களில் கனகசபை ஏற அவசியமில்லை என்பதாலும் இன்னும் சில நடைமுறைகளாலும் சில நாட்கள் அது காலம் காலமாக பூட்டபடும் அதுதான் நடந்தது

இதற்கு பிரச்சினை உண்டாக்கி அறநிலையதுறை அமைச்சர் வரை வரிந்துகட்டுவடுதான் ஆச்சரியம்

இதற்கு இரு காரணங்கள் முதலில் கனகசபை என்றால் என்ன என்பதே பலருக்கு தெரியவில்லை, அதில் ஏறி சிவனை காண்பது ஆத்மா பரமாத்மாவினை காணும் ஒரு குறியீடு என்பது தெரியவில்லை

இரண்டாவது அந்த ஆலயநடைமுறைபடி ஆனி தேரோட்ட காலங்களில் அந்த மண்டபத்தில் ஏற அவசியமில்லை என்பதால் அது பூட்டபட்டிருக்கும்

இன்னும் சில மூலிகை பூச்சுக்கள் அக்காலத்திலும் இப்போதும் அந்நேரம் பூசுவார்கள் என்பதாலும் அனுமதி இல்லை

ஆக வழக்கமான நடைமுறைகளும் அதன் ஆத்மார்த்த அர்த்தங்களும் தெரியாமல் வீண் சர்ச்சை செய்வது சரியல்ல‌

இவ்வளவு பேசுபவர்கள் சிதம்பரம் தென்னக வாயில் ஏன் அடைபட்டது என்பதை, இன்னும் சில வலிகளின் நினைவுகள் எஞ்சியிருப்பதை சொல்வார்களா?

மாலிக்காபூர் அந்த ஆலயத்தை எவ்வளவு கொடூரமாக சுரண்டிபோட்டான் என்பதை அந்த வலியின் நினைவாலே தென்னக சுவர் அடைபட்டிருகின்றது என்பதை சொல்வார்களா மாட்டார்கள்

அந்த ஆலயம் எவ்வளவு பாரம்பரியமானதோ அவ்வளவு வலி மிக்கது, மாலிக்காபூரால் அது அழிந்தபோது நாயக்கர்கள் வந்து காத்தார்கள்

பின் பிஜப்பூரில் இருந்த ஆப்ரிக்க சித்திகள் ஆப்கானிகள் அதை அழிக்க நினைத்தபோது வீரசிவாஜி வந்தான்

அப்படி பல போராட்டங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது , எவ்வளவோ சிக்கல்களை சந்தித்து மீண்டு நிற்கும் ஆச்சரியமது

அதன்மேல் வீசபடும் எல்லா குற்றச்சாட்டுக்கும் வரலாற்றிலும் ஞான ஆன்மீகத்திலும் சுத்தமான இந்து மரபிலும் பதில் உண்டு,அதை பற்றி அறியாமல் தெரியாமல் வேண்டுமென்றே சர்ச்சை செய்வது சரியல்ல‌

வரலாற்றில் யாரெல்லாமோ அதனோடு மோதினார்கள் ஆனால் யார் வென்று நிலைத்தார்கள் என்றால் கனகசபை உள்ளிட்ட ஐந்து சபைளின் அதிபதியான சபாபதி சிவனேதான் வென்றார், அதுதான் இன்னும் நடக்கும்

#வீரசிவாஜி தொடர்பாக ஆங்கிலம், இந்தி, மராத்தி நூல்களே உள்ளன, தமிழில் அப்படியான நூல்கள் இல்லை.

தமிழில் எப்படியான நூல்கள்தான் உள்ளன என தேடிபார்த்தால் அது "நெஞ்சுக்கு நீதி" "தமிழன் ஏன் அடிமையானான்" "ஆரியர் புகுந்தகதை" "அய்யாவின் போராட்டங்கள்""ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" என்றுதான் எல்லாமும் வருகின்றது..

இது போக பார்த்தவுடனெ தூக்கி எறிய வேண்டிய நாவல் இம்சைகள், காதல் காமம் என என்னவெல்லாமோ சொல்லி காகிதத்தை நிரப்புகின்றார்கள், கழுதைகளுக்கு பயன்படலாம்

தேசத்தின் வரலாற்றை அறியவேண்டிய முக்கிய நூல்கள் தமிழில் இல்லை அதற்கான முயற்சிகளில் காமராஜர் காலம் தொட்டு இன்றுவரை மாகாண அரசுகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதெல்லாம் ரணமான வலி

இதனையெலாம் வருங்காலத்தில் மாற்றவேண்டும், காலம் மாற்றும் என நம்புவோம்

#பிரம்ம_ரிஷியார்
மாமன்னன் படத்தின் ட்ரைலர் வந்திருக்கின்றது

அதே ஒடுக்கபட்டோம், நசுக்கபட்டோம், உருட்டபட்டோம் எனும் அந்த கதைதான், தென்னக கதைபோல் தெரிகின்றது

கரடிக்கு நூறுபாட்டு தெரியும் ஆனால் எல்லாம் தேனைபற்றித்தான் இருக்கும் என்பார்கள், அப்படி இந்த கோஷ்டிகளுக்கு வேறுகதையே சிந்திக்க தெரியாது, அவர்கள் அப்படித்தான்

தமிழகத்தில் புத்தவழிபாடு எங்கே உண்டு?, யார் புத்த சிலைவைத்து வணங்குகின்றார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத்தான் தெரியும்

படத்தில் உதயநிதியார் ஹீரோவாக நடித்திருக்கின்றார் என்பதுதான் விஷயம்

காரணம் இன்று உதயநிதியார் வந்து ஒடுக்கபட்டோம் நசுக்கபட்டோம் என இந்த படத்தில் நடிக்கலாம் அல்லது நடிக்க முயற்சிக்கலாம்

ஆனால் இதையெல்லாம் அன்றே சொல்லி பெரும் இடத்துக்கு வந்து தன் குடும்பத்தையே கோடீஸ்வர குலமாக மாற்றியவர் உதயநிதியாரின் தாத்தா அய்யா கலைஞர் அவர்கள்

இந்த படம் எப்படியும் இருக்கட்டும் ஆனால் இந்த படத்துக்கு பொருத்தமான வசனம் அய்யா கருணாநிதி தயாரித்த "மறக்க முடியுமா?" படத்தின் தொடக்க வசனம்
அங்கே அய்யா கருணாநிதியே தோன்றி முழங்குவார் "மறக்க முடியுமா? மனிதர் பலவிதம் ஒவ்வொருவர் ஒருவிதம்,

வலிகள் பலவிதம் சோகங்கள் பலவிதம்

நினைக்கமுடியா கொடுமைக்கு ஆளாகி நெஞ்சில் மறக்கமுடியா வலியினை தாங்கி வாழ்பவர்கள் வீரர்களாகின்றார்கள்" என படத்தை விட நீளமாக வசனம் பேசுவார் அய்யா

ஒருவகையில் வலியினை கொஞ்சம் ஆழமாக சொல்லும் வசனம்

இப்படி ஏகபட்ட வசனங்களை அய்யா எழுதியிருக்கின்றார், பல படங்களில் அவை உண்டு

நிச்சயம் இந்த படத்தின் தொடக்கத்தில் அய்யா கருணாநிதி வசனம் சரியாக பொருந்தியிருக்கும், நிச்சயம் பொருந்தும்

ஆனால் ட்ரைலரில் அப்படி இல்லை

ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது, அய்யா கருணாநிதியின் படங்களை அவர் பேரனே பார்க்கவில்லை என்பது தெரிகின்றது, அப்படியே டைரக்டரும் பார்க்கவில்லை யாரும் பார்க்கவே இல்லை என்பதும் தெரிகின்றது

முரசொலியினையாவது அவர்கள் படிப்பார்களா இல்லையா என்பதும் தெரியவில்லை

சமூக போராளி,சாதி ஒழிப்பு போராளி என சொல்லபடும் கருணாநிதியின் படங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்தும் படுக்கவில்லை என்பதும் தெரிகின்றது
அவர் குடும்பத்தார் உள்பட யாரும் அவரின் தமிழ்மொழி ஆளுமை என சொல்லபடுவதை தேடவில்லை அதை ஒரு பொருட்டாக கருதவே இல்லை என்பதும் தெரிகின்றது

நூற்றாண்டு விழாவில் அய்யாவுக்கு நடந்துவிட்ட சோகங்களில் முக்கியமானது இதுதான்

#பிரம்ம_ரிஷியார்

Back to top

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next