புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
26 Posts - 43%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 53 matches for பிரம்ம_ரிஷியார்

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 O85f3Ip

அப்புறம் #அண்ணாமலை...

, "ஊழலுக்கு எதிரான போர் ஆரம்பம்" அப்படின்னு நாலு அறிக்கை விடுங்கய்யா, அப்பதான ஜனங்க நம்ப ஆரம்பிப்பாங்க‌.

அப்படியே இங்கிலீஷ் மீடியாவுல போய், அந்த ஆள இப்படி வளர்த்துவிட்டதே அந்த அம்மாதான்னு ஒரு போடு போடுங்கய்யா அவனுக கதறிட்டே கிடக்கட்டும்.

ஆனா ஒண்ணுய்யா, இன்னும் கொஞ்ச நாளையில டீ கடையில பேசுவாங்க, தெருமுனையில பேசுவாங்க, பார்க்குற இடமெல்லாம் பேசுவாங்கண்ணு சொன்னீங்களே, அப்ப யாரும் நம்பல, இப்ப நம்புறோம்...

சொன்ன மாதிரியே பேச வச்சிட்டய்யா,...

இந்த உக்ரைன் விவகாரமா நம்பள கூப்பிட்டிருக்காக, போய் பேசிட்டு வந்துர்றேன் , மறக்காம அறிக்கைய அனுப்பிருங்கய்யா, வரட்டுமா...

#பிரம்ம_ரிஷியார்
திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் தேசத்தின் புதிய பாராளுமன்ற கட்டட விழாவினை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார்கள் இவ்வரிசையில் மம்தா, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆம் ஆத்மியும் உண்டு.

ஜனாதிபதி அந்த மன்றத்தை திறக்கவில்லை அதனால் புறக்கணிக்கிறோம் என இவர்கள் சொன்னாலும் உண்மையில் விஷயம் வேறு.

அந்த வைபவத்தை வேத முறைபடி சிருங்கேரி மடாதிபதி நடத்தி வைக்கின்றார், பாரம்பரிய இந்துமுறைபடி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்றால் தங்களை தாங்கும் சிறுபான்மைகள் பொங்கிவிடும் என்பதால் இவர்கள் இப்படி தலைமறைவு ஆகின்றார்கள்.


இந்து வேதமுறையினை எதிர்க்கின்றோம் என இவர்களால் வெளிபடையாக சொல்லமுடியாது சொன்னால் அப்பாவி இந்து விழித்துகொண்டு விரட்டி அடிப்பான்.

இதனால் அடிக்கமுடியாத பந்தை ஓடவிட்டு பார்ப்பது இல்லை முதுகில் வாங்கி கொண்டு நிற்கும் பேட்ஸ்மேன் போல நிற்கின்றார்கள்...

இவர்கள் இப்படியே பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் இன்னும் நல்லது.

1947ல் சுதந்திரம் வாங்கும் போது காஷ்மீர கவுல் பிராமணர் நேருவும் ராஜாஜியும் வைதீக முறைபடிதான் அதே பாராளுமன்றத்தில் நிகழ்வு நடத்தி செங்கோலை வாங்கினார்கள்..

தமிழக திருவாடுதுறை ஆதீனம்தான் அந்த மாபெரும் விடுதலை அறிவிப்பை ஆட்சி மாற்றத்தை வைதீக முறைபடி நடத்தி வைத்தது.

அதாவது வேதவழி நிகழ்ச்சியினை அந்த காங்கிரஸ்தான் நடத்தியது.

அன்று அப்படி இருந்த காங்கிரஸ் இன்று வேதவழி , இந்து பாரம்பரிய முறை என்றாலே தன் கூட்டணிகளுடன் தலைமறைவு ஆகின்றது என்றால் எந்த அளவு அது இந்துதுவேஷத்தில் இறங்கிவிட்டது என்பதை புரிவது கடினமல்ல‌.

இந்துஸ்தானின் பாராளுமன்றம் இந்து வேத முறைபடிதான் திறக்கபட வேண்டும் அவ்வழியில் சிருங்கேரி மடம் அதை செய்கின்றது.

எப்படியோ தர்மபுரி எம்பி இனி பாராளுமன்றம் செல்லமாட்டார் என தமிழகம் நம்புகின்றது, அது நடக்கட்டும்.

நிச்சயம் தமிழ்நாட்டு பாஸ்டர்களை அழைத்து அங்கே சென்று "எங்கடா கிறிஸ்தவன்? எங்கடா சீக்கியன்" என கத்தமுடியாது காரணம் புதிய பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகம், யாரேனும் அத்துமீற முயன்றால் தானியங்கி முறையில் துப்பாக்கிகள் தானாகவே சுடும் ஆபத்து உண்டு...

இந்த தேசம் சுதந்திரம் அடைந்தபோது இரு துண்டுகளாகியிருந்தது, இந்துக்களின் தேசத்தில் நாங்கள் வாழமுடியாது அது இந்து தேசம் என சொல்லி பாகிஸ்தானை வாங்கி கொண்டு சென்றார் ஜின்னா.

சென்றவர்கள் அவர்கள் முறைபடி சம்பிரதாயபடி இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானை ஸ்தாபித்தார்கள்.

இப்பக்கம் இந்து இந்தியா உருவானது, இந்தியா சுதந்திரம் பெறும்போது இந்துநாடுதான் .

இந்துக்களின் நாடாகத்தான் அறியபட்டது அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, இந்துநாடு என்றே அது முழுக்க அடையாளத்தோடு இருந்தது.

பின் 1950ல் சட்டங்களை தொகுக்கும் போதுதான் "சமய சார்பற்ற தேசம்" என தன்னை அடையாளபடுத்தியது.

இதெல்லாம் ஏன் என்றால் யாரிடமும் பதிலே கிடையாது, கேட்டால் சங்கி மதவிரோதி.

அப்படி இந்து இந்தியாவாக அறியபட்ட அந்த இந்தியாவின் சுதந்திரத்தை எப்படி அறிவிப்பது என மவுண்ட்பேட்டன் இந்தியர்களிடமே கோரினான்.

இந்த அதிகாரமாற்றம் இந்தியாவின் பாரம்பரியபடி நடக்கட்டும், அதுதான் நல்லது. எந்நிலையில் இந்தியாவினை பிரிட்டன் பெற்றுகொண்டதோ அந்த கலாச்சாரபடியே விட்டுவிட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்றான்

இந்து ஆச்சாரபடி சுதந்திரம் வழங்க வேண்டும் என முடிவு செய்யபட்டது

ஆம் பிரிட்டிஷ்காரன் நேருவுக்கு அந்த நல்ல விஷயத்தை சொன்னான் மவுண்ட்பேட்டன், இது இந்து தேசம் என்பது அவனின் சரியான நம்பிக்கை. நாத்திரகரான நேரு விஷயத்தை ஆத்திரகரான ராஜாஜியிடம் விட்டுவிட்டார்..

ராஜாஜி தேர்ந்த ஞானி, குறைசொல்லமுடியா இந்து, அவர் இந்துமரபுபடி ராஜகுருதான் செங்கோலை அரசனிடம் கொடுத்து ஆட்சிமாற்றத்தை செய்வார், அந்த மரபுபடி நாமும் செய்யவேண்டும் என்றார்.

அத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார், அப்பொழுது அந்த சன்னிதானத்தின் இளையபீடம் பண்டார சுவாமிகள் ஒரு செங்கோலுடன் டெல்லி சென்றார்.

ஆம், அப்பொழுது இந்து இசை ஒலிக்க , மங்கல வாத்தியங்கள் முழங்க, கங்கை நீர் தெளிக்கபட, திருவாவ‌டுதுறை ஆதீனமே செங்கோல் மாறும் நிகழ்வினை நடத்தி வைத்தார்கள்.

அப்பொழுது திருஞான சம்பந்தரின் தேவார வரிகள் ஓதப்பட்டன‌.

திருநனிப்பள்ளி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்

“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “

என்றும்.

திருவேதிக்குடி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்

“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர் அந்தவுலகெய்தி
அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”


கோளறுபதிகத்தில் இருந்து இந்த வரிகளும்

“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”

என ஓதப்பட்டன‌

ஆம், மும்முறை ” அரசாள்வார் ஆணை நமதே” என உரக்க சொன்னபடி , ஆம் தமிழில் சொன்னபடி செங்கொல் கைமாறி ஆட்சி இந்தியாவிடம் ஒப்ப்படைக்கபட்டது
எவ்வளவு பெருமை இது?

எவ்வளவு அர்த்தமான வரி இது?

“அரசாள்வார் ஆணை நமதே” என டெல்லியில் உரக்க தமிழில் பாடபட அதன் அர்த்தம் இதர மொழிகளில் சொல்லபட மிக உருக்கமான நெகிழ்ச்சி கண்ணீர் அங்கே பெருகிற்று

பிரிட்டிஷாரே அந்த அர்த்தம் கண்டு புன்னகை சிந்தினான், எந்த இதுமதத்தை அழிக்க முயன்றானோ அது தன்னை மீட்டு நின்ற தருனம் அது, பட்டொளி வீசி எழுந்த நிமிடம் அது.

ஆம், இப்படி இந்து முறைபடி தமிழ் தேவாரம் பாடித்தான் “அரசாளும் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்தரின் வார்த்தையோடுதான் சுதந்திரம் பெற்றோம்
இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, டெல்லி மியூசியத்திலும் உண்டு.

இப்படியெல்லாம் தமிழ் இந்து டெல்லிவரை கோலோச்சி, தமிழ் தேவாரம் பாட பெற்ற சுதந்திரம் இது “அரசாள்வார் ஆணை நமதே” என சொல்லி விடுதலை பெற்ற தேசமிது.

சரி, அந்த படம் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, அந்த செங்கோல்?

அது மறைந்தது, நேரு அதை எங்கோ வீசிவிட்டு தன் அலுவலகத்தில் மவுண்ட்பேட்டன், டல்ஹவுசி என யார் படத்தை எல்லாமோ மாட்டி வைத்து அழகு பார்த்தார்.

சீன பிரதமராக இந்தியா வந்த சூ என் லாய் இதை கண்டு வாய்விட்டு சிரித்தான் "நீங்கள் இந்த பிரிட்டிஷ்காரனை எதிர்த்து போராடி சிறை சென்றீர்கள், இப்போது அவன் படத்தையே வைத்திருக்கின்றீர்கள்" என அவன் கேட்டபோது நேருவிடம் பதில் இல்லை.

அதன்பின்னும் நேரு திருந்தவில்லை ,சீனன் அடித்து திருத்த முயன்றான்.

பின் அந்த செங்கோல் பற்றி தகவலே இல்லை, காங்கிரஸ் இந்து நாடு எனும் பெயரை மறைத்தது அப்படியே அது நிரந்தரமாக மறைய செங்கோலையும் மறைத்தது

ஆனால் காலம் அதனை மறைக்கவில்லை, அது பிரக்யாராஜ் காட்சிமாளிளையில் இருந்தது.

மோடி இப்போது அதனை அடையாளம் கண்டு மீட்டெடுத்து புதிய பாராளுமன்ற கட்டடத்தில் அந்த வரலாற்று பொக்கிஷத்தை வைப்போம் என்கின்றார்.

இந்த ஒரு விஷயத்துக்காக அவரை காலில் விழுந்தே வணங்கலாம், ஏன் விழுந்தே கிடக்கலாம்.

நாமும் இந்திய குடிமக்களாக நல்ல இந்துமக்களின் மரபில் உரக்க சொல்லலாம்.

"வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே."
ஆம் "வேந்தனும் ஓங்குக .. வேந்தனும் ஓங்குக.."
பாரத வேந்தனும் ஓங்குக.......


காசி துலங்க துலங்க தேசம் எப்படியெல்லாம் துலங்கும் என்றால் இப்படித்தான்.

சிவனடியார்களாக வாழ்ந்த தமிழக சோழ மன்னர்களின் மரபில் , அவர்கள் ஆட்சியின் அடையாளமாக வைத்திருந்த செங்கோலின் வடிவம் இன்று தேசத்தின் அடையாளமாக மாறுவதெல்லாம் இது சிவபூமி என்பதை அழுத்தமாக சொல்கின்றது.

சோழர்கள் தாங்கள் ராமபிரானின் வாரிசுகள் என்றதும், இந்த அரசபதவி என்பது மதத்தை தர்மத்தை காக்க என சொல்லி கல்வெட்டுகளில் வெட்டி வைத்ததும் அர்த்தமில்லாமல் இல்லை, அதெல்லாம் தெய்வத்தின் பரிபூரண அனுகிரஹம்.

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Yzco_y10

இந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி அல்லது புரட்சியாளன் யார்? என்பதில் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது வியட்நாமின் ஹோ சி மின். உலகம் உள்ள காலம் வரை நிற்கும் அவரது சாதனை.


காரணம் யாரும் எளிதில் அந்த சாதனை சிகரத்தின் அடிவாசலை கூட நெருங்குவது சிரமம்.

சோழர்கள் காலத்திலே நாம் வியட் அல்லது வியட் நாம் என அழைக்கபட்ட நாடு, பின் பிரான்சின் காலணியாக மாறி இந்தோ சீனா என அழைக்கபட்டது, அந்த அடிமைநாட்டில்தான் ஹோ பிறந்தார், இன்றுவரை அவரின் சொந்தபெயர், பிறந்த சரியான நாள் என எதுவும் தெரியாது, புனை பெயர்கள் 100க்கும் மேல் உண்டு.

மக்கள் அழைத்த பெயர் ஹோ சி மின் அதாவது வியட்நாமிய மொழியில் இருளை விரட்டியவர்.

பெரும் படிப்பு படித்தவரில்லை, ஆனால் தந்தையின் எதிர்ப்பினையும் மீறி பிரென்ஞ் கற்றார், ஒரு சமையல்காரனாகத்தான் கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். உலகினை சுற்றினார், அதுதான் அவரது சிந்தனையினை மாற்றிற்று.

எஜமான் நாடு பிரான்ஸ், சுதந்திர தேவி சிலையினை கொண்டாடும் அமெரிக்கா, பொதுவுடமை ரஷ்யா, சன்யாட்சனின் சீனா என முதல்சுற்று 1927க்குள் முடிந்தது, லெனினை மட்டும் அவரால் சந்திக்க முடியவில்லை.

ஆனால் கம்யூனிச அமைப்புகளில் பங்கெடுத்தார்.

அவருக்கு கம்யூனிசம் தெரியாது, தொழிற்சங்கம் தெரியாது, மார்க்ஸிசம் தெரியாது உலகெல்லாம் சுற்றியதில் அவர் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். வியட்நாம் சுரண்டபடுகின்றது, மக்களை திரட்டி அதற்கு விடுதலை கொடுக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஒரு கம்யூனிச கட்சியை நிறுவினார், அக்காலத்தில் ஏழைகளை ஒருங்கிணைக்க அது மட்டுமே சாத்தியம், மக்களிடம் துப்பாக்கியினை கொடுத்து அதோ பிரென்ஞ் வீரன், சுடு அல்லது குண்டுகட்டி சாவு என அவர் போராடவில்லை, அவரது முதல் அடி எது தெரியுமா?

மக்களுக்கு எழுத படிக்க்க சொல்லி கொடுத்து சிந்திக்க செய்வது, அதனைத்தான் செய்தார் 5 ஆண்டுகாலம் அவரது பணி இப்படித்தான் இருந்தது.

ஒரு வழியாக மக்களை திரட்டி பிரான்சினை எதிர்க்க தொடங்கினார், முதல் வியட்நாம் போராட்டம் அப்பொழுதுதான் வெடித்தது, பிரான்ஸ் முதல் எதிர்ப்பினை சந்திக்க ஆரம்பித்த‌பொழுதுதான் சிக்கல் இரண்டாம் உலகப்போர் வடிவில் வந்தது. 1941ல் ஜப்பான் வியட்நாமினை ஆக்கிரமித்தது.
நரிக்கு தப்பி புலியின் வாயில் விழுந்தது வியட்நாமிய நிலை.

இம்முறை மூர்க்கமான ஜப்பானியரை எதிர்த்து அவர் போராட்டம் திரும்பிற்று, சொல்லிகொள்ளும்படியான உதவிகள் இல்லை. பெரும் அமெரிக்காவே ஜப்பானை கண்டு அஞ்சிய காலங்கள் அவை. ஆனாலும் வியட்நாமிய காடுகளில் இருந்துகொண்டு கடும் கொரில்லா தாக்குதல்களை தொடுத்தார் ஹோ.

அந்தகால ஜப்பானியபடை மகா கொடூரமானது, அதனிடம் சிக்காமல் ஹோ ஆடிய ஆட்டம்தான் அவரது மகத்தான முதல் இன்னிங்க்ஸ். ஒரு வழியாக அணுகுண்டு அடி வாங்கி ஜப்பான் பின் வாங்க, வியட்நாம் சுதந்திரமானது, அந்த பிரகடணத்தை அறிவிக்க அவரை அழைக்கபொழுது, அவர் அவசரமாக செய்தது என்ன தெரியுமா?

அவரிடம் நல்ல துணி கிடையாது, உலகினர் முன் பேசுவதற்கு முதல்முறையாக நல்ல ஆடை தைத்துகொண்டிருந்தார்.

ஆனால் மறுபடிவந்து ஆக்கிரமித்து, விட்ட இடத்தினை பிடித்தது பிரான்ஸ். ஹோ வின் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆரம்பமாயிற்று
ஏற்கனவே 8 வருட போராட்டம், பின் ஜப்பானியருடனான 3 வருட யுத்தம், இம்முறை மறுபடியும் பிரான்ஸுடன் யுத்தம் ஆரம்பம், கொஞ்சமும் அசரவில்லை ஹோ, மக்கள் கொஞ்சமும் சளைக்காமல் அவருடன் இருந்தார்கள், அந்த அளவிற்கு அவரை நம்பினார்கள்.

இம்முறை சோவியத் மற்றும் மாவோவின் சர்வதேச பலம் இருந்தது, யார் இருந்தால் என்ன? களத்தில் சாவது வியட்நாமியர்கள். 8 ஆண்டுகால போருக்கு பின் 1955ல் பிரான்ஸ் கொஞ்சம் இறங்கி வந்தது,

அதாவது வியட்நாமினை இரண்டாக பிரித்து வடக்கு வியட்நாம் ஹோ சி மின் கட்சிக்கு, தெற்குவியட்நாம் பிரான்சுக்கு.

சுதந்திரம் என்றால் அது வியட்நாமின் மக்களுக்கு, வடக்கு வியட்நாமியரை சுதந்திரமாகவும், தெற்கு வியட்நாமியரை அடிமைகளாகவும் விடமுடியுமா? என்றார் ஹோ, எப்படிபட்ட உன்னத தலைவன்.

போராட்டம் ஆரம்பித்து 25 ஆண்டுகளில் வடக்கு வியட்நாம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒதுங்காத ஹோ, வியட்நாமினை ஒருங்கிணைக்கும் போராட்டத்திற்கு தாவினார், மிக முக்கியமான காலகட்டம் இது. ஒரு தலைவன் எப்படி சிந்திக்கவேண்டும் என்ற தொலைநோக்கு ராஜதந்திரம் இது.

அதாவது ஜெர்மனை பிரித்தது போல, கொரியாவினை பிரித்தது போல மேற்குலகம் வியட்நாமினையும் பிரித்திரிந்தது, இதோடு ஹோ ஈசிசேரில் படுத்திருந்தால் இன்று வடக்கு வியட்நாம் வடகொரியா போல தரித்திர தாதா தேசமாக இருந்திருக்கும், தென் வியட்நாம் அமெரிக்க அடிமையாக இருந்து தீரா மோதல்களை இன்றுவரை தொடர்ந்திருக்கும்.

கொரிய நிலவரம் போல வியட்நாம் நிலையும் ஆகியிருக்கும்

இந்த தொலைநோக்கில்தான் அடுத்த கட்ட யுத்தத்தினை தொடர்ந்தார் ஹோ, பலவீனமான பிரான்சினால் ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை, அதுவரை பிண்ணணியில் இருந்த அமெரிக்கா, அந்த நொடியில் அவமானத்தில் “சனியனே விலகு”, என பிரான்சை விரட்டி, தானே களமிறங்கியது.
35 ஆண்டுகள் போராட்டம் இரு நாட்டு ராணுவங்களை விரட்டிய ஹோ, இம்முறை உலகமாகா வல்லரசினை எதிர்த்து நிற்கும் தருணம், அமெரிக்காவோ 5 லட்சம் வீரர்களுடன் நவீன ராணுவத்துடன் களமிறங்கி நிற்கின்றது.

ஹோ வின் மூன்றாம் இன்னிங்க்ஸ் ஆரம்பமாயிற்று

ஹோவின் தாக்குதல் முன் அமெரிக்கபடைகள் சிக்கின, அவமானத்தில் அமெரிக்கா கண்மூடித்தனமாக தாக்கியது.

உடனே அமெரிக்க அதிபரை கொல்ல மனிதவெடிகுண்டினை அனுப்பவில்லை ஹோ, ராஜதந்திரமாக தாக்கினார்., அடிக்கடி அவரது உரைகள் அமெரிக்க பத்திரிகையில் வருமாறு பார்த்துகொண்டார்.

மக்கள் சிந்திக்கும் முன் ஹோ வின் கதையினை முடிக்க விரைவாக கிளம்பியது அமெரிக்க ராணுவம், அவர்கள் வாங்கி இருந்த அடி அப்படி.

உளவுதுறைகளும் சறுக்கின, ஹோ யார்? எப்படி இருப்பார், அவர் அலுவலகம் எது? அல்லது எந்த காடு என்று கூட தெரியாது, காரணம் தனி ஆளாக கிராமத்து வயல்களில் ஹோ உழுதுகொண்டிருந்த அதிசயமும் நடந்தது, எப்படி கண்டுபிடிப்பது, ஆனால் யுத்தம் நடந்துகொண்டு இருந்தது.

சேற்றில் புதைந்த யானை நிலையில் இருந்தது அமெரிக்கா, யார் எதிரி என தெரியாது,

வயலில் களைவெட்டிகொண்டிருக்கும் பெண்கள் கூட சிறிய அமெரிக்க குழுவினை கொன்றுவிட்டு அமைதியாக களைபறிக்கும் அளவிற்கு ராணுவம் அடிவாங்கி இருந்தது.

ஆனாலும் அமெரிக்க மக்களிடம் ஹோ இப்படி பேசினார்

“அமெரிக்க சுதந்த்திரத்தினை அங்கீகரித்து, சுதந்திர தேவி சிலையினை கொடுத்தது பிரான்ஸ், அவர்கள் எங்கள் சுதந்திரத்தை ஏன் பறித்தார்கள்?

சுதந்திரத்தின் மேன்மையினை உணர்ந்தவர்கள் அமெரிக்கர்கள். அப்படிபட்ட அமெரிக்கா, இந்த சின்னஞ்சிறிய தேசத்தை அடக்குவது எவ்வகை நியாயம்?

அமெரிக்கர்களே, கொஞ்சம் அந்த சுதந்திர தேவி சிலையினை உற்றுநோக்கிவிட்டு அரசிடம் கேளுங்கள், நான் அமெரிக்க சட்டத்தினை மிக நேசிக்கின்றேன், முழுக்க முழுக்க மனித சுதந்திரத்த காப்பாற்றும் சட்டமது” என பேசி அமெரிக்க மக்களையே சிந்திக்க வைத்தார்.

அமெரிக்க மக்களின் மனநிலை மாற ஆரம்பித்த தருணம் அது, வெளிப்படையாக கேட்டார்கள். வியட்நாம் சுதந்திரத்தில் உங்களுக்கு என்ன சிக்கல்?

மக்கள் வீதிக்கு வருமுன் ஹோ வின் கதையினை முடித்துவிட தீர்மானித்தது அமெரிக்கா, ராணுவபலத்தை பலமடங்கு அதிகரித்தும் அது முடியவில்லை.

சீனாவினையோ அல்லது ரஷ்யாவினையோ அழைத்திருந்தால் ஓடிவந்து அமெரிக்காவுடன் மோதியிருப்பார்கள், சாத்தியம் இருந்தது, ஹோவிடம் அந்த யோசனை வைக்கபட்டபொழுது அவர் சொன்னார்,

“உலகில் யாரும் சும்மா உதவமாட்டார்கள், உதவி கேட்டால் விலை அதிகம் கொடுக்கவேண்டும் அதாவது அமெரிக்கா வெளியேறினால் நாளையே இவர்களுடனும் போராட வேண்டும், அது நீளும்.

அந்த நீண்ட போராட்டத்தை அமெரிக்காவோடு மட்டும் நடத்தலாம், இன்னும் 30 ஆண்டுகாலம் இந்த போர் தொடரலாம்”

35 ஆண்டுகால யுத்தத்தில் கிஞ்சித்தும் கலங்காமல் ஹோசிமின் வியட்நாம், அமெரிக்க படைகளை எதிர்த்து அடுத்த நீண்ட யுத்தத்திற்கு தயாரானது, ஆனால் ஹோ சி மின்னின் உடல்நிலை மோசமானது, செப்டம்பர் 2ம் நாளும் வந்தது.

யுத்தம் நடந்துகொண்டே இருந்தது, ஹோ சி மின் படுக்கையில் வீழ்ந்தார்.

அமெரிக்க படைகளுக்கெதிரான யுத்ததம் தொடங்கி 4 ஆண்டுகளில் ஹோ சி மின்னின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

1945ல் ஜப்பானிய படைகளை விரட்டிய ஹோ செப்டம்பர் 2ம் தேதிதான் வியட்நாம் சுதந்திர பிரகடனத்தை வாசித்தார்.

அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க யுத்த காலத்திலே செப்டம்பர் 2ல் வடக்கு வியட்நாமில் காலமானார் ஹோ.

அவ்வளவுதான் அமெரிக்கா துள்ளி எழும்பியது இன்னும் 10 மணிநேரத்தில் வியட்நாம் யுத்தம் முடிந்துவிடும் என அறிவித்துவிட்டு கிளம்பியது,

ஆனால் ஹோ உருவாக்கி இருந்த கொள்கையும் விடுதலை வேட்கையும் கொண்ட வியட்நாமியர் முன் அமெரிக்க படைகளால் நிற்கமுடியவில்லை.

காரணம் தனக்கு பின் ஒரு நல்ல தலைவனை உருவாக்கிவிட்டு செல்பவனே உன்னத போராளி, அதாவது உண்மையான‌ மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டு ஒருவன் உண்மையாக போராடினான் என்றால் அதன் பின் அவன் இடத்தினை நிரப்ப நிச்சயம் ஆயிரம் பேர் வருவார்கள், அதில் ஒருவன் நிச்சய்ம் இடம் பிடிப்பான்.

லெனினுக்கு பின் ஸ்டாலினும், மார்த்திக்கு பின் காஸ்ட்ரோவும், சன்யாட்சனுக்கு பின் மாவோவும் அப்படித்தான் எழும்பி வரலாற்றில் இடம் பிடித்தார்கள், ஒரு போராளி தான் மட்டும் அனைத்தையும் கையில் வைத்திருந்தான் என்றால் அவனுக்கு பின் போராட்டம் என்ன ஆகும்?

இலங்கை தமிழர் நிலையே சாட்சி

நிச்சயம் வியட்நாமியர்களால் 3 வல்லரசுகளை விரட்ட முடிந்ததென்றால் இலங்கையில் ஏன் விடுதலை கிடைக்கவில்லை என்றால்? அந்த நிலை எப்படியானது என நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். அதாவது மாவோ போலவோ ஹோ போலவோ மக்களை திரட்டி பெரும் எழுச்சி போராட்டம் அங்கு நடைபெறவில்லை, அல்லது நடைபெறவிடவில்லை.

அப்படி 1969ல் ஹோ மறைந்தாலும் அவரின் இடத்தினை ஜெனரல் கியாப் பிடித்துகொண்டார், ஹோவின் அற்புதமான தயாரிப்பு அவர். ஹோ சொல்லிகாட்டிய அரிச்சுவடி வழியே போராடினார். காரணம் ஹோ சொன்னது அப்படி.

“இந்த போராட்டம் 40 வருடம் கூட நீடிக்கலாம், மனம் தளரகூடாது, நிச்சயம் ஒருநாள் வியட்நாம் விடுதலை அடையும், ஒதுங்க ஒரு இடம் இல்லாமல் தொடங்கபட்ட போராட்டம், நான் வடக்கு வியட்நாம் எனும் அங்கீகாரம் வரை கொண்டுவந்தாயிற்று, இனி உங்கள் கையில்.”

தலைவன் இல்லாவிட்டாலும் ஆயிரம் ஹோ உருவானார்கள், அமெரிக்க ராணுவம் அடிவாங்கிற்று, ஆத்திரத்தில் நேப்பாம் எனப்படும் ரசாயாண குண்டுகளை வீசியது அமெரிக்கா, ஆடையின்றி ஓடிவரும் சிறுமியின் படம் பார்த்திருப்பீர்கள்,

அது அமெரிக்க மக்களை உருக்கிற்று, கூடவே ஹோ கேட்டிருந்த அதே கேள்விகள் “சுதந்திரதேவி சிலையினை வைத்துகொண்டா, எமது சுதந்திரத்தினை தடுக்கின்றீர்கள்?”

இங்குதான் ஹோ நின்றார், 5 லட்சம் வியட்நாமியர்கள் பலியான காலத்திலும் அமெரிக்காவில் புகுந்து தற்கொலை குண்டு, துப்பாக்கி சூடு என அவர்கள் இரங்கவில்லை (அதாவது பதிலுக்கு பதில் என்பதல்ல போராட்டம், விவேகமான ராஜதந்திரமும் வேண்டும்). அப்படி இறங்கி இருந்தால் நிலை விபரீதம்.

ஆனால் அடித்துகொண்டே, அடிவாங்கி கொண்டே அமெரிக்க மக்களின் அனுதாபத்தினை வியட்நாமியர்கள் பெற்றார்கள், அமரிக்க மக்கள் பொங்கினால் அரசு அசையும் எனும் சாதாரண தத்துவம், அது வேலை செய்தது.

விளைவு அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

“சின்னஞ்சிறு தேசத்தில் 10 ஆண்டுகளாக வெற்றிபெறாவிட்டால் வந்துவிடுங்கள்” என்ற கோஷங்கள் பெருகின, அமெரிக்கா பெரும் அவமானத்தில் சிக்கியது, ஒரு கட்டத்தில் வியட்நாமிய படைகள் சைகோனை (இன்று ஹோ சி மின் சிட்டி) கைபற்றின, அமெரிக்க படைகளை திரும்ப அழைத்தது.

அமெரிக்கா இன்றுவரை எத்தனையோ போர்களை நடத்தியே தேசமது, ஆனால் முதல் மற்றும் இந்நாளை வரை ஒரே தோல்வியை அங்குதான் சந்தித்தது. அவர்களின் பத்திரிகைகளே சொன்னது, “இந்த நூற்றாண்டின் பெரும் ராஜதந்திரி ஹோ, கம்யூனிஸ்டாக இருந்திருந்தால் இந்தவெற்றியினை பெற்றிருக்கமாட்டார், அவர் நாட்டுபற்றில்தான் கம்யூனிசம் கலந்திருந்தது, அது மக்களை ஈர்த்தது, பெரும் புரட்சி அவரால் செய்யமுடிந்தது, அவரே மாபெரும் புரட்சியாளன்”.

இணைந்த வியட்நாம், ஹோ எழுதியிருந்த சட்டங்களையே நாட்டின் சட்டமாக்கிற்று, ஆச்சரியமாக அவர் அமெரிக்க சட்டங்களை படித்திருந்தார்,

போராட்ட காலத்திலே வருங்கால வியட்நாமிய சட்டங்களை எழுதியிருந்தார், அது பெரும்பாலும் அமெரிக்க சட்டங்களை சார்ந்தது.

ஹோ சொன்னது போல “அமெரிக்க ராணுவம் அபாயகரமானது, அரசியல் பொல்லாதது ஆனால் தனிமனித சுதந்திரத்தை அவர்கள் சட்டமல்லாமல் எதனாலையும் காப்பாற்ற முடியாது, முழுக்க முழுக்க சுதந்திரத்தை வலியுறுத்தும் சட்டம், நாம் அதற்குத்தான் போராடுகின்றோம்”.

எந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாரோ, தயக்கமே இல்லாமல் அவர்களின் நல்ல விஷயங்களை ஏற்றுகொண்டார், இதுதான் ஹோ.

அந்த ஒப்பற்ற தலைவனின் உடலை வியட்நாமியர்கள் பதபடுத்தி லெனின்,மாவோ போல இன்றும் பாதுகாத்து வருகின்றார்கள். அமெரிக்க படைகள் வெளியேறும் வரை அதனை கண்டுதான் தான் உத்வேகம் பெற்றதாக ஜெனரல் கியாப் சொல்வார்.

வியட்நாமின் சைகோன நகரினை ஹோ சி மின் சிட்டி என பெயர் மாற்றம் செய்து அங்கு இன்றளவும் அவரின் உடல் வைக்கபட்டிருக்கின்றது, புரட்சியின் தாக்கம் அப்படி.

உயிரினை பணயம் வைத்து லட்சகணக்கான மக்களை திரட்டி, நாட்டை மட்டும் நேசித்து,காடும்,மலையும் கடந்து உணவில்லாமல் ஓடி, உலகினை படித்து, உறுதியுடன் நொடிக்கு நொடி போராடி, ஆளும் வர்க்கத்தினை தூக்கி எறிவது எவ்வளவு சிரமம், அதுதான் புரட்சி.

ரஷ்யாவும்,சீனாவும்,வியட்நாமும் கண்டது அது. அண்ணா தலமையில் தமிழகம் கண்ட புரட்சி வேறு

1975ல்தான் வியட்நாம் ஒன்றினைந்தது, மெல்ல எழுந்தது. ஜப்பானும், தென்கொரியாவும்,தைவானும் அமெரிக்க பார்டனர்கள் அவர்கள் வளர்ந்தது விஷயமே அல்ல, ஆனால் இன்று வளரும் நாடு வியட்நாம், இதுதான் அதிசயம்.

அரிசி உற்பத்தியில் முதல் 3 நாடுகளுக்குள் வந்துவிட்டார்கள்.

கடந்தவருடம் சீனா எல்லை மீறி கடலுக்குள் கச்சா எண்ணெய் எடுக்கவந்தபொழுது மிக தைரியமாக விரட்டினார்கள், 40 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவே வியட்நாமிய முக்கிய தலைவரான குயெனை வெள்ளை மாளிகக்கு அழைத்தார். (சீனாவினை எதிர்த்தபின் விடுவாரா? )

ஒன்றுபட்ட வியட்நாமின் அதிபராக குயான் அமெரிக்காவிற்கே விருந்தினராக சென்றார் அல்லவா? இதுதான் ஹோ வின் வெற்றி. நிலைத்து நிற்கும் வெற்றி.

இன்று ஹோ சி மின் பிறந்த நாள். பதபடுத்தபட்ட அந்த புரட்சியாளன் உடலினை தன்மானமிக்க, கவுரமவமான வியட்நாமிய குடிமக்களாக வியட்நாமியர்கள் வணங்கி செல்கின்றார்கள்,

கல்வியில் வியட்நாம் மிக முன்னேற்றம் அடையவேண்டும் என்பது ஹோவின் கொள்கை, அதன்படி இன்று உலகின் ஏராளமான‌ ஆங்கில ஆசிரியர்களுக்கு வாய்பளிக்கும் நாடு வியட்நாம், அவ்வகையில் அக்குழந்தைகள் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை எல்லாம் இதுதான்
அங்கிள் ஹோ இஸ் அவர் ரோல் மாடல்.

ஒரு மெழுகுவர்த்தி ஆயிரம் தீபங்களை ஏற்றுவது போல, ஒரு நல்ல தலைவன் ஆயிரமாயிரம் அற்புத தலைவர்களை உருவாக்கலாம், ஹோ அதனைத்தான் சொல்லி சென்றிருக்கின்றார்.

3 வல்லரசுகளை எதிர்த்து வெற்றி கண்ட வரலாற்றின் பெரும் போராளி வரலாற்றில் என்றும் ஹோ சி மின் ஒருவர்தான்.

குறிச்சொற்கள் #Ho_Chi_Minh #ஹோ_சி_மின்


தமிழகத்தில் சில விஷயங்களை எங்கும் பேச கூடாது சினிமாவில் உள்பட அதே நேரம் ஒரு விஷயத்தை எல்லோரும் எங்கும் பேசலாம் அது இந்துமதம்


இந்துமதத்தை வைத்து அரசியல் செய்யலாம், சினிமாவில் சம்பாதிக்கலாம், அந்த ஒருமதத்தை மட்டுமே விமர்சித்து தன்னை அறிவாளியாக கவிஞனாக புரட்சியாளனாக பல வடிவங்களில் காட்டலாம், அது அவர்களுக்கு களிமண் போன்றது, விரும்பிய வகையில் அதனை அடிப்பார்கள் மிதிப்பார்கள் வகை வகையாக வடிப்பார்கள்

ஆனால் மற்றமதங்கள் மின்சாரம் போன்றவை தொட்டால் ஆபத்து

இந்துக்கள் நிலை களிமண்ணாகவும், மற்ற மதங்கள் மின்சாரம் போலவும் இருக்கும் மாகாணம் தமிழகம்


அப்படிபட்ட தமிழகத்தில் ஆயிரம் இந்துவிமர்சன படங்கள் வரலாம் சிக்கலே வராது ஆனால் ஒரு படமோ ஒரு காட்சியோ இதரமதத்தவர் வடிவில் சர்ச்சையாக வந்தால் அகதளம் செய்வார்கள்

அப்படி இப்போது வந்திருக்கும் படம் "பர்ஹானா'

ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மையார் நடித்த படம் இது,அம்மணி இந்த உதயண்ணா முகாமில் இருந்து அடிக்கடி புரட்சி தமிழ் வேடமெல்லாம் போடும் சிக்கல் வரவில்லை

இப்போது "#பர்ஹானா" படம் சிக்கலாகி அம்மணி வீடு போலிஸ் காவலில் இடபடும் அளவு நிலமை மோசமாகியிருக்கின்றது

இனி என்னாகும் என்பதுதான் அச்சம்

காரணம் இப்படித்தான் மணிரத்னம் என்றொரு டைரக்டர் இருந்தார், அவர் பம்பாய் படத்தில் பர்தாவினை கழற்றி ஒரு காட்சி வைத்ததில் அவர் வீட்டின் மீதே வெடிகுண்டு வீசபட்டது

மணிரத்னம் இந்து சமூகம் தனக்கு குரல்கொடுக்கும் என நம்பினார், தேசாபிமானிகள் தன்னை காப்பார்கள் என நம்பினார் எதுவும் நடக்கவில்லை.

தன் வலியெல்லாம் "இருவர்" என்றொரு படத்தில் சொல்லி தமிழகம் எப்படி கெட்டது, எதனால் தன் வீட்டுமேல் குண்டு வீசும் அளவு நிலமை சென்றது என்பதை மறைமுகமாக சொன்னார் , படம் ஒருநாள்தான் ஓடியது.

அவ்வளவுதான், மணிரத்னம் மணிசார் என்றானார், தன்னை கைவிட்ட தேசாபிமானிகளையும் இந்துக்களையும் எப்படி பழிவாங்கலாம் என இரவுபகலாக சிந்தித்தார், விளைவு ராவணா போன்ற படங்கள், கடல் படம் கடைசியில் செல்வன் வரை தொடர்ந்தார் இன்னும் தொடர்வார்.

பொன்னி படத்தில் எல்லோரும் "சிவலிங்கம் எங்கே? திருநீறு எங்கே" என கேட்டபோது மணிரத்னம் தனி அறையில் எப்படி குரூரமாக சிரித்து இந்துக்களை பழிவாங்கியிருப்பார், படம் பார்த்து இந்துக்கள் கத்தியபோது "வலிக்குதா? அழுங்கடா நல்லா அழுங்க" என சொல்லி மகிழ்ந்திருப்பார் என்பதெல்லாம் ஊகிக்க கடினம் அல்ல‌...

இப்படித்தான் தன்னை கைவிட்ட இந்துக்களை அவ்வப்போது பழிவாங்குவார் கமலஹாசன்.

ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மையாரும் இனி அப்படி இந்துக்களை பழிவாங்க கிளம்பலாம், என்னென்ன வகையில் பதிலடி தருவார் என இனிதான் தெரியும்.

அடுத்து மணிசார் டைரக்சனில் அம்மணி கமலஹாசன் ஜோடியாக நடித்தாலும் நடிக்கலாம்.

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 Image

தாயினை விட சிறந்த கோவிலும் இல்லை என்கின்றார் ஒளவையார், கோவில் என்பது புனிதமானது வாழும் வகைகளை வரங்களை தருவது ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல லவுகீக வாழ்விலும் அன்று மக்களை புயல் மழையில் இருந்து அதுதான் காத்தது.

நியாயங்களும் தீர்ப்புகளும் ஆலயத்தில்தான் வழங்கபட்டன‌

அப்படிபட்ட ஆலயங்களை விட தாய் சிறப்பானவள் என்கின்றார் ஒளவையார், ஆலய கருவறை போல தாயின் கர்ப்பத்தில் இருந்து வந்த நாம் தாயால் வளர்க்கபட்டு அவளால் உருவாக்கபட்டு இந்த உலகில் காரியங்களை செய்ய பணிக்கப்பட்டோம்.

அருள் உருவாகும் இடம் கோவில் என்றால் உயிர் உருவாகி வருமிடம் தாய் என்பதாலும் தெய்வம் பக்தனை காப்பது போல அயராது காப்பவள் தாய் என்பதாலும் இப்படி பெரும் இடம் கொடுத்து போதித்தார் ஒளவையார்.

இன்று அன்னையர் தினம்

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் உருகி கொண்டிருக்கின்றார்கள்
தாய்க்கு பாரதமும், இந்துமதமும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்?

சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு

"நானோடக்ஷனம் தானாம் ந
திதிட்ரவாடசி சாம‌
ந காயாத்திரிய பர மந்ரா
ந மதுர்தெய்வதம் பரம்"


அதாவது தானியமும் தண்ணீரும் கொடுப்பதை விட கொடை இல்லை, துவாதிசியினை விட நல்ல நாள் இல்லை, காயத்திரியினை விட மேலான மந்திரம் இல்லை, தாயினை விட சிறந்த தெய்வம் இல்லை.

ஆம் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்றார் இந்துஞானி ஒளவையார்.

நிலம், ஆறு என சகலத்திற்கும் தாய் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது..

இது மத‌ அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி தாயினை தொழுதிருக்கின்றார்கள், தாயிடம் செய்த சத்தியத்திற்காக உயிரையே விட்டிருக்கின்றான் கர்ணன்..

சிற்றன்னையின் கோரிக்கைக்காக காடு புகுந்தான் ராமன், கண்ணனுக்கும் யோசதைக்குமான பந்தம் பாரதம் முழுக்க கிடக்கின்றது.

அதே பாரதம் ஒரு அன்னை எப்படி இருக்க கூடாது என காந்தாரியினையும் காட்டிற்று.

பரசுராமரிடமும் அது தாய்பாசமே தவத்தின் உச்சம் என்பதை காட்டிற்று.

இந்துமதம் அன்னையின் அருமையினை அவ்வளவு போதித்தது, "மாதா, பிதா, குரு, தெய்வம்" வரிசையில் அன்னையினை முதல் இடத்தில் வைத்தது.

தாய் தந்தையினை தோளில் சுமந்தவன் பெரும் முனிவரை விட வலிமையானவன் எனபதை ஸ்வரன் பாத்திரத்தில் காட்டிற்று.

அன்னையினை பணிபவன் பக்தி தன்னைவிட பெரிதென அகத்தியர் வாயாலே அது சொல்ல வைத்தது.

பாண்டுரங்கன் கதை முதல் பல கதைகளில் அன்னையின் பக்தி தவஞானிகளை விட சிறந்தது என சொல்லவைத்தது.

காரைக்கால் அம்மையாரை சிவனுக்கே தாய் என்றது, சிவனும் அவரை "தாயே" என அழைத்தார். ஆம் சிவனுக்கும் ஒரு பெண் தாயாக முடியும் என சொன்னது இந்துமதம்.

நாயன்மார்களின் சம்பந்தரை வளர்த்த இசைஞானியாரையும் அவர் தியாகத்தின் பலனால் அது "நாயன்மார்" என பெரும் இடம் கொடுத்தது.

இந்து புராணங்கள், இதிகாசங்கள், அதன் அடையாள வரலாறுகள் என எங்கு திரும்பினாலும் அன்னையின் பெருமையினை அது சொல்லிகொண்டே இருந்ததை கவனிக்கலாம்.

தாயின் பெருமையினை அவ்வளவு தெளிவாக சொன்ன அம்மதம், லோகமாதா என பெரும் சக்தியினை தாய்வடிவில்தான் கண்டது.

அக்கால இந்து சமூகம் தாயின் பெருமையினை சொல்ல பல ஏற்பாடுகளை செய்திருந்தது.

அக்காலத்தில் கண்விழித்த உடன் ஒருவன் தாயின் கால்களில் விழுந்து வணங்குவது இந்திய குடும்பங்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. தாய் என்பவளை அந்த ஸ்தானத்தில் வைத்திருந்தது நமது பாரம்பரியம்.

இன்றும் தமிழகத்தில் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் அம்மா அல்லது தாயே என அழைப்பதுதான் பண்பாடு.

எல்லா பாசத்தினையும் வெறுத்து துறவியான பட்டினத்தார் கூட, தாய்பாசத்தில் உருகி அழியா பாடல்களை கொடுத்திருப்பதை கவனித்திருக்க முடியும்
கிராமங்களில் வயது குறைந்த சிறுமிகளையும் “தாயீ” என அன்போடு அழைப்பதுதான் நமது சிறப்பு.

இப்படியாக நம்மிடம் அன்னை பற்றி ஏதும் இல்லாதது போலவும், வெள்ளையன் மே 14ம் தேதி கொண்டாட சொன்ன பிறகுதான் நாம் மறக்காமல் அந்த நாளில் அன்னையினை நினைவு கூறவேண்டும் என்பதும் நகைப்புகுரியது.

இதற்கெல்லாம் பெரும் காரணம், கல்வியில் நமது பண்டைய நாகரீகங்களை தாங்கிய, பாரம்பரியங்களை தாங்கிய கல்வியினை கற்பிக்காதது.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என ஒரு இந்து குழந்தை படித்திருக்குமானால் அது மே 14ல் மட்டும்ற்கு வியந்து நிற்காது, தமிழகம் இப்படி கொண்டாடாது.

ஒளவையும், இதர தமிழ் இந்து ஞானிகளையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கற்றிருக்குமானால் இந்நாளை ஏளனமாக அது கடந்து செல்லும்
பண்டைய ஓலைசுவடிகள் மறைந்து நமக்கு அச்சிக்கு வந்தது மிக சொற்பமே, அவற்றையும் நாம் தொலைத்துகொண்டிருக்கின்றோம்.

அன்னையினை வணங்கினால் எல்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என என்பதில் சந்தேகமே இல்லை.

இன்றும் பாருங்கள், தமிழக அரசியல் மற்றும் சகல துறைகளில் உச்சம் பெற்றிருக்கும் பலரினை பாருங்கள், கடவுளை வணங்கி இருக்கமாட்டார்கள், ஆனால் தாயினை வணங்குபவர்களாக இருப்பார்கள்.

தாயினை வணங்குபவனுக்கு எல்லாம் கைகூடும் என்பதற்கு வீரசிவாஜி பெரும் உதாரணம் , இன்னும் யார் யாரெல்லாமோ உண்டு.

இந்திய வரலாற்றில் தாய்நாட்டை நேசித்து நல்ல குழந்தைகளை தந்ததாய்களும், நாட்டை தன் குழந்தை போல் காத்து நின்ற எல்லா அன்னைகளும் வணங்கதக்கவர்கள்.

அவ்வரிசையில் பெரியநாயகி தேவி முதல் பலர் வருவார்கள், அப்பக்கா, சென்னம்மா, ராணி வேலுநாச்சியார், மொகலாயரை வீழ்த்தி அடித்த தாராபாய் என பலர் வருவார்கள்.

ஜீஜாபாய் அதில் தனித்து நிற்கின்றாள்.

நம் தலைமுறையில் தேசியகொடி அமைத்த காமா முதல் நேதாஜியோடு துப்பாக்கி தூக்கிய பெண்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள்.

சர்ச்சைகள் இருந்தாலும் நாட்டிற்காக பல சவால்களை எடுத்த இந்திராவும் நினைவு.கூறதக்கவர்

இன்று இந்தியாவினை தலைநிமிர செய்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இங்கு தாயாக வாழ்த்தவேண்டியவர்

காமராஜரை நாட்டுக்கு தந்த சிவகாமி அம்மையார் போல மோடியினை தந்த அந்த தியாகி ஹீரா பென்னும் வணங்கதக்கவர்

ஒரு தலைவன் தன் நாட்டின் கலாச்சாரத்தை தான் சார்ந்த மதத்தின் பெருமைகளை உலகுக்கு சொல்பவனாக இருத்தல் வேண்டும்

அவ்வகையில் மோடி மிக சிறந்த தலைவர், அன்னையினை வணங்கி நம் கலாச்சாரத்தை உலகுக்கு ஓங்கி சொன்ன பெரும் தலைவர்

அந்த மாமனிதன் வழியில் தாய்மார்களை எல்லாம் வணங்கி, அதுவும் நாட்டுபற்றும் கலாச்சார இந்து அபிமானமும் கொண்ட ஜீஜாபாயின் சாயல் கொண்ட அன்னையினர் அனைவரையும் வணங்கி வாழ்த்துகின்றோம்

நாட்டிற்கு தேவையான நல்ல குழந்தைகளை சிவகாமி அம்மையார் போல, ஹிரா அம்மையார் போல அவர்கள் கொடுக்கட்டும்

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 3 ZT1gUUK
பிளஸ் டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணுடன் உதயநிதியார் ராம்சாமி சிலையோடு சிரித்து கொண்டிருக்க மறுபடியும் திமுகவினர் மண்டையில் ஓங்கி அடித்திருக்கின்றார் ஆளுநர்

அவர் மாகாணத்தில் தமிழ்வழி கல்வி பயின்று 590 மதிப்பெண் குவித்த சப்ரீன் இமானா எனும் தென்காசி ஏழைகுடும்பத்து மாணவியினை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து, அங்கே பிரதமர் போன்ற அதிமுக்கிய பிரமுகர்கள் தங்கும் இடத்தில் அமரவைத்து உபசரித்துள்ளார்

இது விதிமுறைகளை மீறியது என்றாலும் ஏழைப்பெண்ணின் சாதனைக்கு விதிமுறைகளை தளர்த்தி மரியாதை செய்யலாம் என அவர் பதிலுரைத்துவிட்டார்

கவனியுங்கள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் கறறு சாதனை படைத்த மாணவியினை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழிவந்த அரசு கவனிக்கவில்லை, தமிழுக்காக தண்டவாளத்தில் தலைவைக்கும் போராளிகள் கண்டுகொள்ளவில்லை

மாறாக கவர்னர்தான் தமிழ்மொழியில் பயின்ற மாணவியினை வரவேற்று உபசரித்து வாழ்த்தி ஆலோசனை வழங்கியிருக்கின்றார்

இந்து கவர்னர், சதானதன தர்ம பிடிவாதக்காரன் என்றெல்லாம் திராவிட கோஷ்டிகளால் பொய் பரப்பபடும் ஆளுநர் இஸ்லாமிய மாணவிக்கு பெரும் உபச்சாரம் அளித்துள்ளார்

இது நிச்சயம் தமிழ் காத்த, தமிழ்வாழ அரியணை ஏறிய திமுகவுக்கு ஒரு அவமானம் என்பதில் சந்தேகமில்லை

ஆக கிரிக்கெட் கோப்பையில் மட்டுமல்ல, தமிழ்வழி கல்வி தேர்வு முடிவிலும் திமுக மேலிடம் மிக மிக கடுமையாக சொதப்புகின்றது, விளம்பரம் தேடும் வேகத்தில் அடிமட்ட உறுதிபடுத்த வேண்டிய காரியங்களை மறக்கின்றார்கள்

ஆள ஆசை இருக்கும் அளவு நிதானமும் பொறுமையும் கொள்கையும் கொள்கை காக்கும் கடப்பாடும் கொஞ்சமும் இல்லை

#பிரம்ம_ரிஷியார்
கடந்தவாரம் தமிழக ஆளுநரும் முதல்வரும் ஒருசேர டெல்லி சென்றார்கள், ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்ததாக செய்திகள் வந்தன, முதல்வர் குடியரசு தலைவரை சந்தித்ததாக படங்கள் வந்தன‌

இதற்கு பின் ஆளுநரின் அதிரடி தொடங்கியது, ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இருக்கும் முறுகல் இதனால் கொதிநிலையினை எட்டியிருக்கின்றது

சில வருமானவரி சோதனைகளுக்கு பின் ஆளுநர் "டைம்ஸ் ஆப் இந்தியா" இதழுக்கு கொடுத்த பேட்டிதான் இப்போது திமுகவினரை 100 டிகிரிக்கு கொதிக்க வைத்திருக்கின்றது

"திராவிட மாடல் காலாவதியானது" என தொடங்கி தமிழக அரசின் பல குழப்பங்களை அவர் தன் பேட்டியில் சொல்லியிருக்கின்றார், தமிழக ஊடகங்களில் அவை மறைக்கபட்டாலும் இந்தியா முழுக்க பரவிவிட்டது

திமுக கடும் கொந்தளிப்பில் பேச தொடங்கியிருக்கின்றது, ஆனால் இம்முறை அவர்களின் கூட்டணி ஏதும் வாய்திறக்கவில்லை என்பது கவனிக்கதக்கது

திமுகவின் கூட்டணிகளெல்லாம் தனித்து விலகி நிற்பது போல் நிற்கின்றன, திமுக களத்தில் ராவணனை போல தனியே நிற்கின்றது

ஆளுநர் தேர்ந்த ராஜதந்திரி, சில விஷயங்களை திமுகவினர் வாயாலே சொல்ல வைக்கும் நுணுக்கத்தில் அடிக்கடி ஆடுவார், அப்படி வெற்றியும் பெறுவார்

கவனியுங்கள் இதே ஆளுநர் முன்பு தமிழ்நாட்டை தமிழகம் என சொன்னார் உடனே உபிக்கள் பொங்கினர்

இப்போது "திராவிட மாடல்" என்பது பிரிவினைவாதம், இது ஒரே நாடு என சொல்லிவிட்டார்

உடனே உபிக்கள் வழக்கம் போல , இது ஒரே நாடு அல்ல இது சோழநாடு பாண்டியநாடு என்றிருந்த நாடு அதனால் ஒரே நாடு என கவர்னர் சொன்னதை ஏற்க முடியாது என பொங்கிவிட்டன‌

கவர்னர் புன்னகைப்பது இங்குதான்

முதலாவது கவர்னர் சொன்னபடி உபிக்கள் பிரிவினைவாதிகள்தான், ஒரே இந்தியாவினை அவர்கள் ஏற்கவில்லை

இரண்டாவது சோழநாடு, பாண்டியநாடு என்ற தேசங்கள் இருந்ததே தவிர திராவிட நாடு, தமிழ்நாடு என்றோரு பகுதிகளே இல்லை

இதனை உபிக்களே ஒப்புகொள்ளுபடி, அவர்கள் வாயாலே சொல்லும்படி செய்துவிட்டார் ஆளுநர்

ஆக இனி சோழமாடல், பாண்டிய மாடல், சேர மாடல் என்றுதான் உபிக்கள் சொல்ல வேண்டும் ஏனென்றால் திராவிட நாடோ தமிழ்நாடோ வரலாற்றில் இல்லை என்பதை அவர்கள்தான் இப்போது சொல்கின்றார்கள், அவர்களை சரியாக சொல்ல வைத்திருக்கின்றார் ஆளுநர்

#பிரம்ம_ரிஷியார்
இந்திய பாதுகாப்புதுறை நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி அது சரித்திர சாதனையினை செய்திருக்கின்றது, அந்த வெற்றி மூலம் உலகின் ஏவுகணை பலம் வாய்ந்த நாடுகள் வரிசையில் 5ம் நாடாக இணைந்து முதல் கட்ட வரிசைக்கு சென்றுவிட்டது.

அதாவது இந்தியா தன் இடைமறிப்பு எதிர்ப்பு ஏவுகணையினை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்திருக்கின்றது, "கடல்வழி இடைமறிப்பு ஏவுகணை" சோதனை வெற்றி பெற்றிருப்பதாக தன் அறிவிப்பில் அது சொல்லியிருக்கின்றது

அதாவது இந்தியாவினை தாக்க வரும் எதிரியின் ஏவுகணைகளை இந்தியாவின் கப்பல்களில் இருந்து ஏவபடும் ஏவுகணைகளே இனி முறியடிக்கும், நிலத்தில் இருந்து தாக்கும் இவ்வகை ஏவுகணைகளை விட கடலில் இருந்து ஓடி ஓடி ஏவபடும் ஏவுகணைகள், நீர்மூழ்கியில் இருந்து ஏவபடும் ஏவுகணைகள் பாதுகாப்பானவை எதிரிகளால் எளிதி ஏவுமிடத்தை அடையாளம் காணமுடியாதபடி சிக்கலானவை

சில தினங்களுக்கு முன் சீனா இந்த சோதனையினை செய்ததாக அறிவித்தது அதற்கு பதிலடியாக இந்தியா இந்த சோதனையினை செய்து வெற்றி பெற்றிருக்கின்றது

இது பிரித்வி ரக ஏவுகணையின் மேம்பட்ட வடிவம், எதிரியின் ஏவுகணை எங்கிருந்து வந்தாலும் அணுகுண்டோடு வந்தாலும் இது எளிதில் வீழ்த்தும்

இந்த ரக ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உண்டு, இந்தியா இந்த வரிசையில் இணைந்துள்ளது

இந்தியா போரை விரும்பாத நாடு, மற்ற நாடுகளை போல் அல்லாமல் அதன் எதிரிகள் மிக குறைவு, அதன் ஒரு எதிரி சீனா இன்னொரு எதிரி பாகிஸ்தான், இவை இந்தியாவோடு தரை எல்லையினை பகிரும் நாடுகள்

இந்த நாடுகளின்மேல் கூட இந்தியா வலுகட்டாயமாக போரை திணிக்கவில்லை, வரலாற்றில் அவைகள்தான் இந்தியா மேல் தாக்குதலை தொடுக்கும்

அதுவும் சீனா மிகபெரிய பலம் கொண்ட நாடு என்பதாலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான எல்லா காரியங்களையும் செய்யும் நாடு என்பதாலும் இந்தியா தன் பாதுகாப்பை வலுபடுத்தும் அவசியத்தில் இருக்கின்றது

தன் எல்லையில் இரு அணுகுண்டு நாடுகளை எதிர்க்கும் மிக மிக விழிப்பான நிலையில் இருக்க வேண்டிய தேசம் இந்தியா

இதனால் ராணுவ நவீனமயமாக்கல் என்பது அங்கு காலத்தின் கட்டாயம், இந்தியா அதை செய்கின்றது

இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவர் வாஜ்பாய், கார்கில் யுத்தம் முடிந்த காலத்தில் எதிர்காலத்தில் இது அவசியம் என அவரும் அப்துல்கலாமும் முடிவெடுத்தார்கள்

ஆனால் அன்றைய காலசூழல் கைகொடுக்கவில்லை, பின் வந்த காங்கிரசும் இந்த திட்டத்தை ஓரம்கட்டியது, தேசம் பலமாவது ஏனோ அவர்களுக்கு பிடிக்கவில்லை

மோடிவந்தபின் காட்சிகள் மாறின, மோடி இந்த திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்தார் அதனால் செய்ற்கை கோள் தகர்ப்பு ஏவுகணையினை தொடர்ந்து இந்த இடைமறிப்பு ஏவுகணை சாதனையினை தேசம் செய்திருக்கின்றது

இதை இன்னும் மேம்படுத்தினால் எஸ் 400 , இஸ்ரேலின் அயன்டோம், அமெரிக்காவின் பேட்ரியாட் சிஸ்டத்துக்கு நிகராக இந்தியா தன் சொந்த தயாரிப்பை செய்யும்

அடுத்த 15 ஆண்டுகளில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க வேண்டிய எஸ் 500, அல்லது அமெரிக்க சிஸ்டத்தினை வாங்கும் அவசியம் இனி இல்லை, நாமே இந்த நவீன ஏவுகணை தடுப்பு பொறிமுறையினை செய்யலாம்

#பிரம்ம_ரிஷியார்
இந்த 12 மணி நேர வேலை விவகாரம் பற்றி தமிழக ஊடகங்கள் பேசாது, இதர மாகாண ஊடகமும் பாஜகவும் பேசாது ஆனால் புன்னகைக்கும்

தமிழக ஊடகங்களும் இணையதளங்களும் இதனை பற்றி எதுவுமே விளக்கமாக சொல்லாததால் நாம் சொல்வது அவசியமாகின்றது

நம்மை பின்பற்றி வருபவர்களுக்கு தெரியும் ஓரிரு ஆண்டுக்கு முன்பாகவே நாம் இதுபற்றி சொல்லியிருந்தோம்

டிரம்பர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலே இந்த விவகாரம் தொடங்கிற்று. சீனாவுக்கு எதிரான பெரிய முடக்கங்களை அவர் அறிவிக்க சீனாவில் தொழில் செய்யும் அமெரிக்க கம்பெனிகள் அந்நாட்டை விட்டு வெளியேறின அது இன்றும் தொடர்கின்றது

குறைந்த சம்பளம், ஏகபட்ட மனிதவளம், நீர் வளம், நிலவளம் என சீனாவினை விட அடுத்த தேர்வு எக்காலமும் இந்தியாதான்

ஆனால் இந்தியாவின் மிகபெரிய பலவீனம் தொழிலாளர் நல சட்டங்கள்

எதற்கெடுத்தாலும் யூனியன், வேலை நிறுத்தம், போராட்டம் என இந்தியாவில் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் செய்துவைத்திருக்கும் இம்சை பெரிது

பல்லாயிரம் கோடி முதலீடு செய்யும் பெரும் நிறுவணங்கள் நிச்சயம் மனித நேயம், மக்கள் நலம், கம்யூனிசம், சமத்துவம் காக்க வராது எல்லாமே வியாபாரம், போட்ட பணத்தை எடுக்க வேண்டும்

என்னதான் கம்யூனிச நாடு தொழிலாளர் நல நாடு என பெயர் இருந்தாலும் சீனாவின் கட்டுபாடுகள் அதிகம் குறைந்தது 14 மணிநேரம் வேலைவாங்கும் நாடு அது, போராட்டம் தொழிற்சங்கம் யூனியன் அதன் தலைவர் என்பதெல்லாம் அங்கு சாத்தியமில்லை

காலத்துக்கும் மாறாத அரசாங்கம் , மாறாத கொள்கைகள்

இதெல்லாம் சேர்ந்துதான் சீனாவை வளர்த்தன, இன்னொன்று சீனரோ ஜப்பானியரோ கொரியரோ சுறு சுறுப்பாக வேலை செய்வதில் வல்லவர்கள் , அவை வளர்ந்ததில் இந்த உழைப்புத்தான் முக்கியம்

இந்த உலகில் இன்று முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் பின்னாலும் அம்மக்களின் அசுர உழைப்பு உண்டு சில எண்ணெய் வள‌ நாடுகளை தவிர‌

இப்படி இந்தியாவில் சில தொழிலாள நல சட்டங்கள் சிக்கலாக இருப்பதால் தொழிலாளர் நல சட்டங்களை தளர்த்தினால் நாங்கள் முதலீடு செய்ய தயார் என பன்னாட்டு நிறுவணங்கள் அறிவித்தன‌

இந்தியாவின் மோடி அரசு இதனை வரவேற்றது அதனை தன் கொள்கையாக்கிற்று, ஆனால் சிக்கல் நிறைந்த இந்தியாவில் மாகாண அரசுகளின் அதிகாரம் ஒரு விஷயம் என்பதால் எந்த மாநிலம் தொழில்களை ஈர்க்க விரும்புகின்றதோ அவர்கள் தொழிலாளர் நல சட்டத்தை திருத்தலாம் என ஆலோசனை சொன்னது

தமிழக அரசு மோடியின் குரலுக்குத்தான் செவிசாய்த்தது

மோடி கடந்த எட்டாம் தேதி சென்னையில் தமிழக அரசு பற்றி பேசும் போதே பல சந்தேகங்கள் எழுந்தன அதன் பொருள் இப்பொழுதுதான் புரிகின்றது

இது நிச்சயம் திமுக சவால் எடுக்க கூடிய நேரம், எங்கள் மாகாணத்தில் 8 மணிநேரம் அல்லது 6 மணிநேர வேலைதான் என மத்திய அரசோடு சவால் எடுக்கும் அரசியல் கோணமுள்ள நேரம்

ஆனால் மாநிலம் உருப்பட சிந்திக்கின்றார்கள் அல்லது வரும் மிகபெரிய முதலீட்டில் கொஞ்சம் அடிக்கலாம் என கணக்கிடுகின்றார்கள்

இந்த சட்டம் வழமை போல் கேரளத்தில் இல்லை இன்னும் பல மாநிலங்களில் இல்லை அவை உருப்படாது

திமுக கம்யூனிச சாயல் கொண்ட கட்சி என்றாலும் அதன் ஒரே கொள்கை பணம் , அதனால்தான் இதெல்லாம் சாத்தியம்

ஆக திமுக அரசு மாகாணத்துக்கும் தேசத்துக்கும் தனக்கும் நல்லது என இந்த தொழிலாளர் சட்டத்தை திருத்துகின்றது, நாட்டுக்கு நல்லது என மோடியும் புன்னகைக்கின்றார்

இன்னொரு வகையில் மோடியிடம் திமுக சரணடைந்ததும் தெரிகின்றது

ஆக பழனிச்சாமி செய்தால் அடிமைதனம் திமுக செய்தால் மாகாண நலம் என்பார்கள்

சரி, இந்த விவகாரத்தில் தமிழ்கா கம்யூனிஸ்டுகள் குதிக்க தொடங்கிவிட்டார்கள் அல்லவா? அவர்கள் அப்படித்தான்

சீனா பாதிக்கபடுவதை விரும்பமாட்டார்கள், தங்கள் எஜமான் வாழ சொந்தநாடு நாசமாகட்டும் என வழமை போல விரும்புவார்கள், அப்படியே சீனாவில் எத்தனைமணிநேர வேலை அம்மக்கள் எப்படியெல்லாம் உழைக்கின்றார்கள், ஏன் அங்கெல்லாம் தொழிற்சங்கம் போராட்டமெல்லாம் இல்லை என்பதை மட்டும் பேசவே மாட்டார்கள்

சீன கம்யூனிஸ்டுகள் சீன விசுவாசிகள், இந்திய தமிழக கம்யூனிஸ்டுகளும் அதே விசுவாசத்துடன் இருப்பதுதான் சரியல்ல.

#பிரம்ம_ரிஷியார்

Back to top

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next