புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
10 Posts - 24%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Rutu
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 53 matches for பிரம்ம_ரிஷியார்

ராகுலார் விவகாரத்தில் மேலை நாடுகள் தலையிடவேண்டும் என காங்கிரஸ்காரர் திக் விஜய் சிங் டிவிட்டரில் அழைப்பு விடுத்திருப்பது பெரும் சலசலப்பாகின்றது

ராகுலார் இந்திய சட்டபடி தண்டிக்கபட்டிருக்கின்றார், இந்தியாவின் உள்நாட்டு சட்டம் என்பது அதன் இறையாண்மையில் இயற்றபடுவது இங்கு இன்னொரு நாடு தலையிட கோருவது ஏற்றுகொள்ளமுடியாதது

பொதுவாக இப்பொழுதெல்லாம் இந்தியாவினை பகைக்க மேற்கு நாடுகள் தயாரில்லை அதுவும் ராகுலுக்காக பகைப்பதெல்லாம் நடக்காத விஷயம், மண் படகை நம்ப அவர்கள் ஒன்றும் காங்கிரசார் அல்ல‌

ராகுல் விவகாரத்தில் சீனா கூட வாய்திறக்கவில்லை அப்படியே அமெரிக்காவோ பிரிட்டனோ அதன் அடிபொடிகளோ யாருமே கண்டுகொள்ளவில்லை

ஜெர்மன் அமைச்சர் ஒருவர் "நிலமையினை பார்த்துகொண்டிருக்கின்றோம்" என்பதோடு நிறுத்தி கொண்டார்

அதாவது எல்லோரும் பார்ப்பதை போல ஜெர்மனும் பார்த்துகொண்டிருக்கின்றது என அவர் சொன்னதுதான் தாமதம் இந்த திக் விஜய்சிங் ஒடி சென்று டிவிட்டரில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என சொன்னார் விளைவு இந்தியர்களால் வாங்கி கட்டிகொண்டிருக்கின்றார்

வெளிநாடு தலையிட்டு இந்திய சட்டம் சரியில்லை என்றும் ராகுலை விடு என என்றும் சொல்லுமானால் எதற்கு சுதந்திரம்? எதற்கு இந்திய ஆட்சி? என ஆளாளுக்கு விளாசுவதில் திக் விஜய் சிங் மவுனமாகிவிட்டார்

இப்போதுள்ள சூழலில் முன்பெல்லாம் மிரட்டியது போல் மேலை நாடுகள் இந்தியாவினை மிரட்டமுடியாது, உலகின் ஐந்தாம் பொருளாதார பலமான நாடு, மிக பலமான காவல் கொண்ட நாடு என மேலை நாடுகளே காஷ்மீர் விவகாரம் முதல் பல விவகாரங்களில் ஒதுங்கி கொண்டன‌

உலக சூழலில் இந்தியாவின் தயவு அவசியம் என கெஞ்சாத குறையாக கதறிகொண்டிருக்கின்றது அமெரிக்கா

இந்நிலையில் பழைய 1940களின் நினைப்பிலே காங்கிரசார் இருப்பது நல்லதல்ல‌

சீனா, வடகொரியா, சில அரபுநாடுகள் என பல நாடுகளில் நடக்கா சலசலப்புகள் இல்லை, அங்கெல்லாம் பேசமுடியா மேலை நாடுகள் இந்தியாவில் மட்டும் தலையிட முடியுமா என்ன?

சரி, சீனாவில் ஏன் மேலை நாடுகளால் பெரிதாக தலையிட முடியவில்லை தலையிட்டாலும் ஒரு பலனுமில்லை

விஷயம் எளிது, அங்கு பிரிட்டிசார் ஆளவில்லை அதனால் காங்கிரஸ் போன்ற கைகூலி இயக்கங்கள் இல்லை,எங்கள் நாட்டில் தலையிட வாருங்கள் எனும் தேசதுரோக சத்தம் அங்கு இல்லை

ஹாங்காங் எனும் முன்னாள் பிரிட்டன் காலணியில் மட்டும் இந்தியா போல சலசலப்பு உண்டு என்றால் அந்நியர் விதைத்த விதை எப்படியானது, காங்கிரஸின் மூலமும் நோக்கமும் திட்டமும் என்ன என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல‌

ராகுல் என்றல்ல மொத்த காங்கிரசாரையும் பிடித்து அடைத்தாலும் உலகில் யாரும் இந்தியாவினை கேள்வி கேட்க மாட்டார்கள் அதுதான் இன்றைய நிலவரம், மோடியின் இந்தியா அடைந்த பலம் அது

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Jai-sriram

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் என்பதன் தத்துவ வடிவம் என்ன்ன என்பதை இப்படி சொன்னார்

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

ராமனை போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் , ஆழமாக இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் , வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும், நீங்கள் இன்னும் ஒரு ராமனை காணவே முடியாது

அவன் ஒப்பற்றவன். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்

இந்துக்கள் தர்மகொடிநாட்டி ஆட்சி செய்யும் போது ராமன் உலகெல்லாம் கொண்டாடபடுவான், அதே இந்துக்கள் நான்கு பேராக சுருக்கபட்டாலும் அவர்கள் நடுவில் ராமன் வாழ்ந்துகொண்டிருப்பான், அவன் இந்திய தர்மத்தில் முழுக்க கலந்த நாயகன்

அது முழுக்க உண்மையானது

அதர்மம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அவதாரமாய் வந்து அதை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது என்பது பரமாத்மா ஏற்றுகொண்ட சுதர்மம்

பூமியில் அக்கிரமங்கள் மிகும்பொழுதெல்லாம் அதை சரியாக செய்யும் பரமாத்மா தன் 7ம் அவதாரமாக ராமனாக இறங்கி வந்தார்

அக்காலம் கடுமையானதாய் இருந்தது, வாலி முதலான கூட்டம் ஒருபுறம், தாடகை முதலான அரக்கியர் ஒருபுறம், யாராலும் வீழ்த்தமுடியா ராமன் ஒருபுறம் இன்னும் எண்ணற்ற அரக்கரும் அங்காரர்களும் கொடியவர்களும் உலகை படாதபாடு படுத்திய நேரமிது

உதாரணம் சொல்லும் அளவு ஒரு நல்லவன் வரமாட்டானா, எக்காலமும் அவன் பெயர் சொல்லும்படி ஒரு தர்மவீரன் உருவாக மாட்டானா என பிரபஞ்சமே ஏங்கிய நேரமது

அப்பொழுதுதான் ராமபிரான் அவதரித்தார்

அவதாரங்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லை வந்தவைதான், ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு நோக்கம் உண்டு, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ராம அவதாரம்

ராமவழிபாடு என்பது கம்பன் தொடங்கிவைத்தது அல்ல, அது பற்றிய குறிப்புகள் புறநானூறு முதல் மகா பண்டைய இலக்கியம் வரை உண்டு, முருக வழிபாடு போலவே ராமன் வழிபாடும் இங்கு மகா பழமையானது

அயனம் என்றால் வழி என பொருள், ராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று.
கம்பன் இப்படி சொல்கின்றான் அவன் வரியில் தொடங்கலாம்

"மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்"

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம், அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது

ராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது, உலகமும் தாங்காது. காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கதுக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம்

அவன் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தான், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான்.

அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது, ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன்நிலை தவறவில்லை

மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழவேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது

சகோதர்களுடன் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன், அவனின் குருமார்களுக்கு அருமை சீடன் அவன்

அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை, விசுவாமித்திரர் சொன்னார் என்பதற்காக‌ உடைத்தான் சீதைக்கு மாலையிடுவதை கூட‌ தசரதனே முடிவு செய்வான் என ஒதுங்கி நின்றான் ராமன்

ஆம் சீதை ராமனுக்கு நிச்சயம் செய்யபட்டவள் அல்ல, ஆனால் அவள் ராமனை மணந்து அவன் வழியேதான் ராவணனுக்கு முடிவுகட்ட வேண்டும் எனும் தர்மத்தின் திட்டம் விசுவாவித்திரர் மூலம் அழகாக ஆடியது

பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்றபின்பும் தந்தையினையே அவன் நோக்கினான்

தந்தை அனுமதித்தபின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டான்

மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்டபொழுது, அவன் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்னபொழுது "யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே" என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவனை அயோத்தி வணங்கி நின்றது

ராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின, அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது, தர்மத்தை அவன் அப்படி காத்தான்

பெண்கள் மேல் அவனுக்கு தனி இரக்கம் இருந்தது,

சூர்ப்பநகையின் காதலை அவன் மறுத்து அவளுக்கு போதனையே செய்தான், இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தான் .

(ஆனால் சீதை இருக்கும்வரை தன் காதலை ராமன் ஏற்கபோவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லக்குவனே மூக்கறுத்து விரட்டினான்)

தாடகையினை கொல்லுமுன் கூட விசுவாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என அஞ்சி வேண்டுகின்றான் , "மானிட குலத்துக்கு எதிரான , தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண்பெண் பேதமில்லை" என அவன் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றான்

கல்லான அகலிகை அவனால் உயிர்பெற்றாள் அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன் "கவுதமா முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்கோழி என தெரியவில்லையே, அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?" என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றான் முனிவன்

மானிடருக்கு இருக்க வேண்டிய மிகபெரும் குணம், தர்மமும் நியாயமும் கலந்த குணம் அவனுக்கு இருந்தது, அது எல்லா உயிர்மேலும் அன்பு.

ஆம் குரங்குகளை தனக்கு சமகாக அமர்த்தியவன் அவனே

கழுகு என்றாலும் ஜடாயுவுக்கு தன் உடன்பிறந்தவன் போல் காரியம் செய்தவனும் அவனே

தன்னை அறியாமல் அம்பால் குத்தபட்ட தேரைக்கும் அவன் கண்ணீரோடு அருள்பொழிந்தான் என்கின்றது ராமாயணம்

இதனாலே வானர கூட்டம் அவன் அடிபணிந்தது, அனுமன் தான் கண்ட மனித கடவுளாகவே அவரை வணங்கினான், கடைசி வரை கூடவே இருந்தான்

அந்த இலங்கை போரில் கூட ராவணன் திருந்த கடைசி வரை சந்தர்ப்பம் கொடுத்தான், "இன்று போய் நாளை வா" என அவன் சொன்னது கடைசி இரவிலாவது அவன் திருந்த்மாட்டானா எனும் ஒரு நம்பிக்கையன்றி வேறு என்ன?

ராமனின் விஷேஷ குணங்களில் ஒன்று அரசுக்கு ஆசைபடாதது,

முதலில் தம்பி பரதனுக்கு ஆட்சியினை விட்டு கொடுத்தான்

வாலியினை வீழ்த்தியபின் கிஷ்கிந்தா ராமனுக்கே சொந்தம் ஆனால் சுக்ரீவனுக்கு விட்டு கொடுத்தான்

லங்காபுரியினினை வென்றபின் நிச்சயம் அதன் அரசன் ராமனே, ஆனால் விபீஷ்ணனுக்கு விட்டு கொடுத்தான்

ராவணனை அவன் வென்றபின் மண்டோதரியினை அபகரித்து பழிவாங்கியிருக்கலாம் ஆனால் மிக மிக கண்ணியமாக கடந்து சென்றான் அந்த ஞானமூர்த்தி

சென்ற இடமெல்லாம் தர்மத்தை வாழவைத்து அரியணை ஏற்றிவைத்துவிட்டு வந்தான் அந்த ஞான‌மூர்த்தி
தன்னை நம்பியோயோரை எல்லாம் காத்தான், யாரெல்லாம் அக்கிரமத்தின் கொடுமை தாங்காமல் அடைக்கலம் என வந்தார்களோ அவர்களை எல்லாம் அரணாக நின்று காத்தான்.

இலங்கை போருக்கு பின்பே அவன் அயோத்தி அரசனாகின்றான், இன்றுவரை ராமராஜ்யம் என்ற அவன் ஆட்சிமுறை புகழபடுகின்றது என்றால் அவனின் ஆட்சிதிறன் அப்படி

கவனியுங்கள், ஒரு சலவை தொழிலாளி சீதை யோக்கியமா? என்றவுடன் அவன் தலையினை ராமன் சீவவில்லை, சிறையிடவில்லை, நாடுகடத்தவில்லை மாறாக அவன் தன் குடிமகன் தன் அரசின் கீழ்வாழ்பவன் அவன் நம்பிக்கையினை பெறுவது அரசனின் கடமை என்றே சீதையினை தீகுளிக்க சொன்னான்

அவனுக்கு சீதைபற்றி தெரியும், அவளின் கற்பு பற்றியும் அவளுக்கு இருந்த சக்தி பற்றியும் தெரியும்

இதனால் அவளை முழுக்க நம்பி அதே நேரம் தன் நாட்டு குடிமக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே சீதையின் புகழ் அறியபட வேண்டும் என்பதற்காகவே தீயிலிறங்க சொன்னான்

அங்கு நெருப்பே அந்த தாயினை வணங்கியது

உலகிலே அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என சொன்ன அரசன் அவனே, அது உலகெல்லாம் புகழ்பெற்ற வரியாய் மாறிற்று, காலம் காலமாக தொடர்ந்தது
ரோமர்களின் சாம்ராஜ்யத்திலும் அந்த வரி ஒலித்தது,

சீசருக்கு பல லட்சம் வருடம் முன்னாலே அதை சொன்னவன் ராமன், ராமனின் புகழ் உலகம் முழுக்க பரவியிருந்தது இன்னும் தாய்லாந்து முதல் இந்தோனேஷுயா கிழக்கு சைனா வரை அவனின் வரலாறு உண்டு, அப்படி மேற்கிலும் பரவி இருந்த ராமனின் புகழ்வரிதான் சீசர் சொன்னதாக நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது

ராமனின் அரசு தேவலோக அரசுக்கு நிகராய் இருந்தது. அவன் பரதனிடம் கேட்கும் கேள்விகளின் தொகுப்பு, அவன் விளக்கும் பல நிர்வாகங்களின் தொகுப்பு சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்தில் அப்படியே வரும்
ஆம் ராமன் இங்கு எல்லா விஷயங்களுக்கும் எடுத்துகாட்டானவன்

அவன் செய்த ராஜநீதியே பின்னாளில் மனுநீதி சோழன் தன் மகனை பசுவுக்காய் கொல்லும் அளவு ஆட்சி கொடுத்தது, அவனின் பொய் சொல்லா குணமே அரிச்சந்திர கதையின் நாதம்

அவனின் சகோதர பாசத்தின் தொடர்ச்சியே பாரதம்

அவனின் அரச நீதியின் தொடர்ச்சியே சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்

இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு

ஒருவனின் நற்குணத்தை பற்றி அவனின் நண்பர்களோ பலன் பெற்றவர்களோ சொல்வதில் அர்த்தமில்லை, அவனின் எதிரி என்ன சொல்கின்றானோ அதுதான் நிஜம்

ராவணன் மாயமான் உருவெடுக்க மாரீசனிடம் சொன்னபொழுது ராமனின் குணம் பற்றி வியந்துரைத்து அவனுக்கு துரோகம் புரிய முடியாது என மருவுகின்றான் மாரீசன்

ராமன் உருவெடுத்தால் சீதை மயங்குவாள் என திட்டம் போட்ட ராவணன்,, ராம உருவெடுத்து அந்த உருவில் தனக்கு மாபெரும் நல்ல குணங்கள் வருவதை உணர்ந்து அதை சட்டென மாற்றி அழுதான் என்கின்றது புராணம்

போர்களத்தில் ராமனின் அழகையும் அவனின் வீரத்தையும் , "ஆயுதம் இல்லா தன்னை வீட்டுக்கு அனுப்பி நாளை வா" என சொன்ன ராமனிடம் மனமார தோற்றான் ராவணன்

லங்காபுரியில் அவன் அழகில் தோற்றாள் சூர்ப்பநகை, அவன் அன்பில் தோற்றான் விபீஷ்ணன், அவன் வீரத்திலும் கருணையிலும் தோற்றான் ராவணன்

ராவணன் வாலியாலோ, இல்லை கார்த்த வீரியனாலோ கொல்லபட்டிருக்க வேண்டியவன் ஆனால் அவனின் பெரும் பக்தியின் பலன் ராமன் எனும் நல்லவனால் கொல்லபட்டான், இதை உணர்ந்தே மகிழ்வாய் உயிர்விட்டான் ராவணன்

இதைவிட ராமனின் பெருமை சொல்ல என்ன உண்டு?

தந்தை பாசத்துக்கு எடுத்துகாட்டான ஒருவன் உண்டா? ராமன் வாழ்வு சொல்லும்

ஒரு மூத்த சகோதரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யார் உதாரணம்? ராமன் வாழ்வு சொல்லும்

ஒன்றுமே இல்லா பராரி நிலையில் ஒருமனிதன் எப்படி இருக்க வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

தந்தையும் மனைவியும் பிரிந்த நிலையில் அனாதையாய் நிற்கும் நிலையில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? ராமன் வாழ்வ் சொல்லும்

நம்பியோரை காப்பது எப்படி, தர்மத்தை அரங்கேற்றுவது எப்படி? அவன் வாழ்வு சொல்லும்

மனிதன் தன்னிலும் கீழான விலங்குகளிடமும் பறவைகளிடமும் கருணையாய் இருப்பது எப்படி? அவன் வாழ்வு சொல்லும்

எல்லாம் தொலைத்த நிலையிலும்எதுவுமே இல்லா நிலையிலும் தர்மமும் கருணையும் ஒருவனிடம் இருந்தால் அவன் எப்படி மீள்வான்? அதை அவன் வாழ்வு சொல்லும்

ராஜ்யமும், ஏராளமான‌ பெண்களும், ஏன் அந்நிய ராஜ்யங்கள் ஏராளம் கண்முன் நின்று தனக்காக ஏங்கினாலும் ஒரு மனிதன் எப்படி ஒதுங்க வேண்டும்? ராமன் வாழ்வு சொல்லும்

நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும், தன் குடிகளை கண்காணித்து தன்மேல் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்? ராமனே உதாரணம்

இதனாலே காலம் காலமாக இந்த உலகில் ராமனை வழிபட சொன்னார்கள், அவன் கதையினை படிக்க சொன்னார்கள்

ராமன் கதையினை முழுக்க வாசிக்கும் ஒருவனுக்கு அவனின் ஏதாவது ஒரு குணம் வரகூடும், அவன் அதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக

ராமனை யார் யாரோ சந்தித்தாலும் அனுமன் என ஒரு மாபெரும் வீரன் அவனால் உருவானான் அல்லவா? அதை போல லட்சோப லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அவனை போல் ஒருவன் வருவான் என ராமனின் கதையினை இச்சமூகம் வைத்திருந்தது

எல்லா அரச குடும்பங்களுக்கும் உலகெல்லாம் அவன் வாழ்வு பாடமாயிருந்தது, சீசர் என்பவன் ஒரு உதாரணமே

காதலருக்கு அவன் கதையே பாடம், சகோதர பாசத்துக்கு அதுவும் மூத்த மகனின் தியாகத்துக்கு அவனே வழிகாட்டி, நட்புக்கும் தர்மத்துக்கும் அவனே வழிகாட்டி , தியாகம் வீரம் கொடை என எல்லாவற்றுக்கும் அவனே வழிகாட்டி என இந்த பூமி காலம் காலமாய் அவன் புகழை காத்தும் வந்தது

மகா முக்கியமாய் அவன் வாழ்வு எதற்கும் ஆசைபடாத குணத்துக்கும் அகங்காரத்தை ஒழிக்கும் உதாரணமாகவும் காட்டபட்டது

தான் வீரன் எனும் வாலியின் அகங்காரம் அவனால் ஒழிக்கபட்டது, அழகி எனும் கர்வம் கொண்ட சூர்ப்பநகையின் அகங்காரம் அவனாலே ஒழிக்கபட்டது, தாடகை அவனிடமே அடங்கி வீழ்ந்தாள்
மூவுலகை வென்ற ராவணின் அகங்காரம் அவனிடமே ஒழிந்தது, தன்னை வெல்ல சத்திரியன் எவனுமில்லை எனும் பரசுராமனின் அகங்காரமும் அவனிடமே ஒழிந்தது

அகங்காரம் ஒழிய ராமனை வணங்கு என்றது இந்த பூமி, ஆற்றல் கொண்டவன் ராமனை பணிந்தால் அனுமன் போல் வாழ்வான், அகங்காரம் கொண்டவன் அழிவான் என சொன்னது

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் (மனைவி) என வாழ்ந்தவன் ராமன்..

ராமனின் ஒரே குறை, குறை காணமுடியா வாழ்வினை அவன் வாழ்ந்தான் என்பதன்றி வேறல்ல

ராமனை இங்கு எக்காலமும் நினைவில் நிற்க சொன்னார்கள், அவனை அனுதினமும் வணங்கினால் அவனை போல் நற்குணத்தில் ஒன்று வரும் என்றார்கள், அவன் அருள் பெருகும் என்றார்கள்

அருள் பெருகுமோ இல்லையோ ராமனின் வாழ்வினை தியானிப்பவர்களுக்கு ஞானம் வரும்

மானிட வாழ்வு சிக்கலும் கண்ணீரும் கவலையும் மிகுந்தது, ராமனுக்கு வந்த சிக்கலா நமக்கு வரும் என்ற தைரியம் பிறக்கும்

ராமன் ராஜ்ஜியம் போனாலும் மனைவி பிரிந்தாலும் மீண்டும் பெற்றது போல் பெறுவோம் எனும் நம்பிக்கை வரும்

வனவாசம் மட்டும் செல்லாமல் இருந்தால் அவன் அனுமனை கண்டிருப்பானா? குகனை கண்டிருப்பானா?

ராவண வதம் நடந்திருக்குமா? இல்லை சலவை தொழிலாளியின் நம்பிக்கையினை பெற்று மாபெரும் அரசனாய் வீற்றிருப்பானா? எல்லாம் நன்மைக்கே எனும் நம்பிக்கை பிறக்கும்

நல்லவனாய் இருப்போம் ராமனுக்கு அனுமன் போல நமக்கும் ஒருவன் வராமலா போய்விடுவான் எனும் தைரியம் பிறக்கும்

ராமனின் பரசுராம மோதல் காட்சிகளை காணும் பொழுது அகம்பாவம் ஒழியும், ஆட்சியாளர் படித்தால் நாமும் அப்படி ஆள வேண்டும் என்ற் ஆசைவரும், வீரன் படித்தால் நாமும் ராமனை போல் தர்மப்போர் புரிய வேண்டும் என்ற வீரம் வரும்

குறைந்த பட்சம் குகனைப்போல் நண்பனை பெறவேண்டும் எனும் ஆசை வரும், விபீஷ்ணன் சுக்கீவன் ராஜ்யம் அவனுக்கு என்பதை போல் மண் ஆசை குறையும்

ராமனை வணங்கினால் பரதனுக்கு நாடு கொடுத்த ராமன் போல் நாமும் சகோதரனுக்கு விட்டு கொடுப்போம் மண்ணாசை வராது, பேரழகி ஆனாலும் ஏறேடுத்து பார்க்கமாட்டோம் இதனால் பெண்ணாசையும் வராது

இதனாலே ஒவ்வொரு மனிதனும் ராமனின் கதையினை படிக்க வேண்டும் என்றது இந்த ஞானபூமி, இன்றும் இந்துக்கள் வாயில் "ராமா..." எனும் வார்த்தை சர்வ சாதாரணம்

அது அவர்கள் ரத்தத்தில் வந்தது, பூர்வ பூர்வ ஜென்மமாய் வந்தது அது இன்னும் வரும்

(திராவிட கோஷ்டி ஏன் ராமனை குறி வைத்து அடித்தது என்பதன் பொருள் இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், மனிதன் மனிதனாகவே வாழ்ந்துவிட கூடாது என்பது அவர்கள் பகுத்தறிவு)

ராமன் காலம்தோறும் யாரையாவது உலகிலும் இப்பூமியிலும் தொட்டுகொண்டே இருப்பான், நல்ல அரசர் முதல் மோடிவரை வரை அவன் தொட்டான்

இந்தியாவின் புகழ்மிக்க மன்னர்கள் முதல் கவிஞர்கள் ஆட்சியாளர்கள் ஞானியர் வரை ஆழமாக கவனியுங்கள் அவர்கள் ராமபக்தர்களாய் இருப்பார்கள்

ராமன் பெயரில் வாழ்ந்து அவனை பணிந்தவர்களே தேசத்தின் விடுதலையினை முன்னெடுத்து சனாதான தர்மத்தை மீட்டெடுத்தார்கள்

ராமதாஸர், துக்காராம் போன்ற ராமன் பக்தர்கள் அவர்களில் முக்கியமானவர்கள், வீரசிவாஜி அப்படித்தான் இவர்களால் உருவாகி இந்துராஜ்ஜியத்தை மீட்டெடுத்தான்

ராமனின் நினைவு இல்லாமல் அவன் பிரஞ்ஞையில் கரையாமல் நல்லாட்சி தரமுடியாது, காந்திக்கு கூட ராமன் மேல் ஒரு தனி பக்தி இருந்தது

காந்தி ராமனின் பல குணங்களை பின்பற்றினார், அதை மறுக்கமுடியாது. ராமன் அவரின் விருப்பமான கடவுளாய் இருந்தான்

இதனாலே பரதனுக்கு ராமன் கொடுத்த தேசம் போல் ஜின்னாவுக்கும் கொடுத்தார் என்பதுதான் சோகம்

ஆனால் ராமனை மனமார பின்பற்றினார், அனுதினமும் அவர் பெயரை சொல்லிகொண்டே இருந்தார், சாகும் பொழுதும் அவர் சொன்ன வார்த்தை "ராமா.."

ஆம், ராமனே இந்த சுதந்திர இந்தியாவினை காக்க முடியும் என அவர் நம்பியிருக்கலாம்

அப்படிபட்ட ராமன் இத்தேசத்தை இன்றல்ல எக்காலமும் காப்பான், சோதனை வந்தாலும் மீள் எழவைத்து காப்பான்

பல ஆயிரம் வருடம் கழித்து அவன் ஆலயம் கட்டபடுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல, எகிப்து ரோம் இன்னும் பல மதங்கள் செத்தே விட்ட நிலையில் ராமன் ஆலயம் மட்டும் உயிர்த்தெழுவது எப்படி?

ஆம் அவனே தர்மம், அவனே சத்தியம் அது ஒருகாலும் அழியாது

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் என்பதன் தத்துவ வடிவம் என்ன்ன என்பதை இப்படி சொன்னார்

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

ராமனை போல ஒருவனை காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் , ஆழமாக் இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் , வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும், நீங்கள் இன்னும் ஒரு ராமனை காணவே முடியாது
அவன் ஒப்பற்றவன். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய ஒருவனை காணமுடியும்"

இன்று ராமநவமி, இந்துக்கள் அவன் பெயரால் பூஜித்து கொண்டிருக்கின்றார்கள், இன்றல்ல எக்காலமும் உச்சரித்து கொண்டிருக்கவேண்டியது அவன் பெயரே

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே."

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் , புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே விடுதலையும் கிட்டும்.

அந்த ராமனை மனமார வணங்குங்கள், வான் மேகத்தில் ஒரு துளியும் தாகம் தீர்க்கும் என்பது போல, வைரத்தின் ஒவ்வொரு துண்டும் மின்னும் என்பது போல ராமனின் குணங்களில் ஒன்று , ஒன்றே ஒன்று உங்களில் கலந்தால் போதும், உங்கள் வாழ்வே மாறும் அது சமூகத்தை மாற்றும்

அனுமன், விபீஷ்ணன், வால்மீகி, கம்பன், விவேகானந்தர், காந்தி , மோடி என ஏராளமான உதாரணங்களை சொல்லிகொண்டே இருக்கமுடியும்

நிச்சயம் அதில் உங்கள் பெயரும் வரும், அழியா அடையளமாவீர்கள்

ஒவ்வொரு அன்னையும் தன் மகனை ராமன் போல வளர்க்கவும், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ராமன் போல் கணவன் கிடைக்கவும் வேண்டும் நாளிது

ஒவ்வொரு அண்ணனும் தான் ஒரு ராமனாகவும், ஒவ்வொரு தம்பியும் தான் ஒரு லக்குவனாகவும் வாழவேண்டும் என உருகும் நாள் இது

ஒவ்வொரு குருவும் ராமனை போல் ஒரு சீடன் வேண்டும் என மனமுருகும் நாள் இது,

ஒவ்வொரு பக்தனும் அனுமனை போல் ராமனை வணங்கி நிற்கும் நாளும் இதுவே.

ராவணன் சிறைபோல் பெரும் இக்கட்டில் இருப்போரெல்லாம் ராமா.. என கூவி அழைக்கும் நாளும் இதுதான்.

அதே நேரம், நல்லாட்சி அமைய ஒவ்வொரு இந்துவும் அழைக்கும் நாமமும் அவன் நாமமே.

ஆம் தலைமகனாக, அண்ணனாக, கணவனாக, நாயகனாக, வீரனாக ,குருவாக மின்னினான் ராமன், "ராமன் எத்தனை ராமனடி" என்பது அதுதான்.

எத்தனையோ வகையாக மின்னிய ராமனில் அவன் அரசனாக ஜொலித்தது தனி இடம்.

அந்த பரந்தாமனின் தனி அருளில் நாடு ஜொலிக்கட்டும் என தேசம் வேண்டிகொண்டிருக்கின்றது.

ராமநாமம் ஒலிக்கட்டும், அது ஒலிக்க ஒலிக்க தேசம் செழிக்கட்டும்

.

Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Annamalai-eegarai

டெல்லி சென்றுவிட்டு வந்த வேகத்தில் தமிழக மாகாணம் தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கும் விஷயம் பல விஷயங்களை உறுதிபடுத்துகின்றது,

முதலாவது தமிழக பாஜகவின் தலைவராக அவர்தான் இனி நீடிப்பார், அவரின் பதவிகாலம் முடிந்தபின்பும் சிறப்பு அந்தஸ்து கொண்ட தலைவராக் நீடிப்பார் அதனில் மாற்றமில்லை

இரண்டாவது அண்ணாமலை அரசியல் செய்ய வரவில்லை, வழமையான கூட்டணி தொகுதி நிலவரம், தந்திர அரசிய என எதற்கும் அனுப்பபடவில்லை, அவர் ஒரு புல்டோசர் போல அனுப்பபட்டிருக்கின்றார் அதை சரியாக செய்ய டெல்லி முழு ஒத்துழைப்பு வழங்கும்

மூன்றாவது என்னதான் 2026 சட்டசபை தேர்தல் இலக்கு என அவர் சொன்னாலும் நிஜத்தில் கட்சியின் வெற்றி தோல்வியினை பற்றி கொஞ்சமும் கவலைபடாது அடித்து ஆடும் அரசியல் , இது தமிழகத்திற்கு புதிது

இப்படி பல விஷயங்களை சொல்லி அண்ணாமலை மேல் பாயும் எல்லா பாஜகவினருக்கும் தலையில் மெல்ல தட்டி வாயை அடக்க வைத்து உட்கர வைத்திருக்கின்றது டெல்லி

வந்த வேகத்தில் திமுகவின் 27 பேருக்கு 2 லட்சத்து 20 ஆயிர்ம கோடி சொத்து என அவர் அறிவித்திருப்பது டெல்லியின் அதிரடி அரசியல் தொடங்கிவிட்டது, பாஜக பெரும் முடிவோடு தமிழகத்தை முற்றுகை இட்டுவிட்டது என்பதை சொல்கின்றது

என்னதான் மக்களாட்சி என்றாலும் இங்கு நடப்பது மன்னர்கால அரசியல், அரசியல் அப்படித்தான் உருவம் மாறுமே தவிர அடிப்படை மாறாது

பாஜக எனும் பெரும் அரசனுக்கு கப்பம் கட்ட திமுக ரெடி, அதிமுகவும் தயார்

இங்கு கூடுதல் கப்பம் அதாவது எம்பிக்கள் தர அதிமுக தயார்

ஆனால் இரண்டும் வேண்டாம் நேரடியாக இனி என் ஆட்சி என பாஜக களமிறங்குகின்றது, அதன் தளபதி அண்ணாமலை

அவர் ஏப்ரல் 14ம் தேதி சொல்லபோகும் பட்டியல்தான் முதலில் வீசபடும் பெரும் குண்டு, அதை தொடர்ந்துதான் கோட்டை சுவர் வீழ்ந்து யுத்தம் தொடங்கும்

நிச்சயம் அவர் தென்காசியில் சொன்ன வார்த்தைகள் பெரும் பரபரப்பை சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்

கவனியுங்கள், திமுக தரப்பு பெரும் அமைதி கனத்த அமைதி

ஒருவரவாது அண்ணாமலை முடிந்தால் நிருபிக்கட்டும் எங்கள் கட்சியில் அப்படி யாரும் இல்லை என்பதால் அச்சமில்லை என சொல்லவே இல்லை

இந்த அமைதிதான் மிகபெரிய எதிர்பார்ப்பை அண்ணாமலை மேல் ஏற்படுத்துகின்றது

வழமையாக எதிர்குரல் கொடுக்கும் திமுக இம்முறை கனத்த அமைதி

இதுதான் தமிழகத்துக்கு தேவையான அரசியல், அதை செய்யும் தகுதி வானதிக்கு இல்லை, நயினாருக்க்கு இல்லை, பொன்னாருக்கு இல்லை, கேஸ் விநாயகயத்துக்குமில்லை

மாரிதாசருக்குமில்லை

இது மிகபெரிய முதலை அகழி, அதை தாண்டி விஷ நாகம், சிங்கம் திமிங்கலம் பாதாளம் மாயலோகம் என என்னவெல்லாமோ உண்டு

அக்கா வானதியின் "அண்ணன் ஸ்டாலின் அவர்களே" போன்ற அரசியலும் பொன்னாரின் "மரியாதைக்குரிய அய்யா ஸ்டாலின்" வச்னங்களும் இங்கு எடுபடாது

இங்கு அடிக்கவேண்டும் ஓங்கி அடிக்க வேண்டும் அதற்கு திமுகவின் ஆணிவேர் வரை தோண்டிபார்க்கும் பலமும் தைரியமும் பன்னாட்டு தொடர்பும் பெரும் பின்புலமும் வேண்டும்

அது அண்ணாமலைக்குக்குத்தான் இருக்கின்றது

இந்த நிர்மல் குமாரோ, காயத்திரியோ, எஸ் வி சேகரோ இதையெல்லாம் செய்யமுடியுமா என்றால் முடியாது, பல தகவல்களை திரட்டும் மாரிதாசராலும் இதனை செய்யமுடியாது

அதை செய்யும் பலமும் வாய்ப்பும் தகுதியும் அண்ணாமலையிடம் மட்டும்தான் இருக்கின்றது, ஏபரல் 17ல் அவர் சொல்லபோகும் பட்டியல் சுமார் 100 ஆண்டு கால தமிழக அரசியலை நிச்சயம் அசைக்கும்

இதனால் தமிழக பாஜகவினரும் வோட்டு கணக்கிட்டு கூட்டணி அவசியம் என புலம்புவோரும், எல்லோரையும் அணைப்பவனே தலைவன் என அறிவுரை சொல்வோரும் அமைதியாக இருத்தல் நலம்

கூண்டைவிட்டு வெளிவரபோவது கிளி அல்ல, அது டைனோசர்

இங்கு நடக்கபோவது அரசியல் அல்ல, இது யுத்தம் மாபெரும் யுத்தம், அதை நடத்த அண்ணாமலையினை தவிர யாருக்கும் சக்தி இல்லை

வழமையான ஒரு தொகுதி இரண்டு தொகுதி விளையாட்டு அல்ல, மெல்லமாக விளையாடும் சதுரங்கம்,கேரம்போர்டு ஆட்டம் அல்ல‌

இது இனி போர், இறங்கி அடிக்கும் போர், காலகாலமான கோட்டைகளை தகர்த்தெறியும் உக்கிரமான போர்

இரு எதிர்களில் ஒரு எதிரி பலவீனமான நேரம் அவனோடு கூட்டணி அது இது என பேசமால் உன் இடம் எனக்கு என அடித்து மோதும் போர்

எமது ஆச்சரியமெல்லாம் அண்ணாமலையின் பேட்டியினை தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி எப்படி அமைதியாய் இருக்கின்றார் என்பதுதான், "இது மோசமான கட்சி டோவ்" என அடிக்கடி சொல்லும் அவர் என்னென்ன திட்டம் வைத்திருப்பார் என்பதை நினைத்தாலே பகீரென்கின்றது

ஆர்.எஸ் பாரதியினை அண்ணாமலை எப்படி எதிர்கொள்ள போகின்றார் என்பதுதான் முதல்கட்ட எதிர்பார்ப்பு

குறிச்சொற்கள் #அண்ணாமலை #பாஜக #திராவிடம்


தமிழக பாஜக கோஷ்டிகளுக்கும் அதன் அடிபொடிகளுக்கும் ஒரே இரவில் பாஜக தமிழகத்தினை ஆளவேண்டும் எனும் ஆசை இருக்கின்றது, இது பேராசை மட்டுமல்ல இந்த எதிர்பார்ப்பு முழு பைத்தியகாரதனம்

ஆனானபட்ட திமுகவே ஆட்சியினை பிடிக்க சுமார் 20 ஆண்டுகள் போராடிற்று, இத்தனைக்கும் அண்ணாதுரை, கருணாநிதி , எம்ஜி ராமசந்திரன் என எவ்வளவோ பெரும் பிம்பங்கள் இருந்தன‌

எத்தனையோ தோல்வி, அவமானம், வெட்ககேடு, குழப்பம் என தாண்டித்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்

மிக விரைவாக ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர் ஒருவர்தான், அவர் கட்சி தொடங்கி ஐந்து வருடத்தில் வந்திருந்தாலும் அரசியலில் சுமார் 30 ஆண்டுகாலம் இருந்து , ஒரு கட்சியினை பிரித்துத்தான் அதனை சாத்தியமாக்கினார்

தமிழக பாஜக இப்பொழுதுதான் அடையாளம் பெறுகின்றது, இரு ஆண்டுக்கு முன்பு வரை அதை மதித்தவர் யாருமில்லை

டெல்லியினை கண் வைத்து திமுக அதிமுக சிலவற்றை வீசுமே தவிர ஜாண்பாண்டியன் கட்சிக்குள்ள மரியாதை கூட பாஜகவுக்கு இல்லை

இப்பொழுதுதான் அது முளைக்க தொடங்கியிருக்கின்றது, அண்ணாமலை சரியான அடித்தளமிடுகின்றார் இன்னும் ஏகபட்ட அண்ணாமலைகள் அப்படி வந்து கட்சி வளர சுமார் 15 ஆண்டுகாலம் ஆகலாம் அதற்கு மேலும் ஆகலாம்

விஞ்ஞான யுகத்தில் போக்குவரத்து நினைத்தவுடன் சாத்தியம், தகவல் தொடர்பு சாத்தியம் என்பது போல் அல்ல அரசியல்

இங்கு பொறுமை முக்கியம், கால நேரம் முக்கியம், நீண்ட பயணம் முக்கியம், ஏகபட்ட தோல்வியும் அவமானமும் தாண்டிவரும் பக்குவம் முக்கியம்

ஒளவையார் சொல்வார்

"அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழ"

அதாவது கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.

இதை உணர்ந்தவன் தன் போக்கில் கட்சிபணி செய்கின்றான், உணராதவன் மோடி அமித்ஷா என கொதித்து கொண்டிருக்கின்றான் அவனால் மருந்துகடையில் ரத்த கொதிப்பு மாத்திரை அதிகம் விற்பனையாகுமே தவிர வேறொன்றும் நடக்காது

#பிரம்ம_ரிஷியார்
விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

இதனை நட்டு விவசாயி என்ன செய்ய வேண்டும் என்றால் சொல்ல தெரியாது

பனம்பழ சாறு ஏற்றுமதி, #பனங்கிழங்கு ஏற்றுமதி, குறைந்தபட்சம் பனைநார் பொருள் ஏற்றுமதிக்கு வழியுண்டா என்றால் இல்லை

#பனங்கருப்பட்டி விற்பனைக்கு பெருவழி உண்டா , ரேஷனில் கருப்பட்டி வழங்கபடுமா என்றால் இல்லை

குறைந்தபட்சம் கள் இறக்க அனுமதி உண்டா என்றால் அதுவுமில்லை

பின் எதற்கு இத்தனை #பனைமரம் என்றால் நிலத்தடி நீரை பெருக்குவார்களாம், ஒரு கல்குவாரிக்கு பல்லாயிரம் அடி ஆளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு பனைமரத்தால் நீர்மட்டம் பெருக்குவோம் என்பதெலலம் நோபல் பரிசு வழங்க வேண்டிய காமெடி

இந்த பனைமரத்தில் தூக்கு போட்டுகொள்ள கூட முடியாது என்பதும் கூடுதல் சோகம்

#பிரம்ம_ரிஷியார்
தமிழக பாஜகவின் ஆலோசனை கூட்டத்தில்தான் அண்ணாமலை தன் கருத்தை சொன்னாரே தவிர தமிழகத்துக்கான அறிவிப்பாக அவர் எதையும் சொல்லவில்லை

அந்த கூட்டம் பூட்டிய அறையில் நடந்தது, அங்கே எவனோ ஸ்டிங் ஆப்பரேஷனாக விஷயத்தை கடத்திவிட்டான் அல்லது வேண்டுமென்றே கசியவிடபட்டது

ஒருவகையில் அண்ணாமலை சொன்னது சரி, தமிழக வரலாறு அது

இங்கு டெல்லியின் அலை பெரிதாக வீசும்பொழுதெல்லாம் திராவிட கட்சிகளே பலன் பெற்றன, உதாரணம் இந்திராவின் கொலை, அந்நேரம் காங்கிரஸ் தமிழகத்தில் எளிதாக ஆட்சியினை பிடித்திருக்கலாம்

ஆனால் கூட்டணி என தவறவிட்டது

அதே தவறை மறுபடியும் 1991ல் ராஜிவ் சம்பவத்தில் செய்தது, காங்கிரசுக்கு வரவேண்டிய வாய்ப்பு ஜெயாவுக்கு சென்றது

1997ல் ஜெயாவின் பெரும் ஊழலால் மூப்பனார் பெரிய கவனம் பெற்றார் வரவேற்பு இருந்தது ஆனால் கூட்டணி என கருணாநிதி தனக்கு சாதகமாக மாற்றினார்

வாஜ்பாய்க்கான பெரும் வரவேற்பும் திமுகவுக்கே சேர்ந்தது

அண்ணாமலை இதைத்தான் சுட்டிகாட்டுகின்றார், ஒவ்வொரு தேச எழுச்சி நேரமும் காங்கிரஸ் எப்படி இங்கு ஏமாந்து அழிந்ததோ அந்த வலையில் நாம் சிக்க கூடாது என்கின்றார்

வானதி அம்மையார் இதனை மறுத்ததாக சொல்கின்றார்கள், அப்படி நடந்தால் இது வெறும் அதிமுக கூட்டணியில் இரு எம்பி தொகுதிகளை வென்று அமைச்சராகும் கனவில் சொன்னதாகத்தான் கருத முடியும்

சி.பி ராதாகிருஷ்ணன் இல்லா கோவையில் அதிமுக கூட்டணி இருந்தால் தான் எம்பி ஆகி அமைச்சராகலாம் எனும் கணக்கு வானதிக்கு இருக்கலாம்

இப்படி யாரெல்லாம் அதிமுக கூட்டணியால் தனக்கு ஆதாயம் என கருதுகின்றார்களோ அவர்கள் கூட்டணியினை எதிர்கின்றார்கள், யார் கட்சி முக்கியம் வளர்ச்சி முக்கியம் என கருதுகின்றார்களோ அவர்கள் ஆதரிக்கின்றார்கள்

இதுதான் நிஜம்

இது அவர்கள் உட்கட்சி பிரச்சினை, அங்கு அண்ணாமலையினை விரட்டிவிட்டு தங்களுக்கு சாதகமான தலமையினை கொண்டு வர சில கோஷ்டிகள் சிண்டிகேட் அமைத்து நிற்கின்றன‌

இங்கு திமுக அதிமுக என மாயகரங்களும் உண்டு

ஆனால் டெல்லி அண்ணாமலையினை முடிவோடுதான் அனுப்பியிருக்கின்றது, இல்லாவிடில் இப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கமாட்டார்கள்,மோடி அண்ணாமலையோடு ஒரே காரில் ஒரு மணி நேரம் பயணித்திருக்கமாட்டார்

அண்ணாமலையினை மோடி நினைத்தால் ரகசியமாகவே டெல்லியில் சந்தித்திருக்கமுடியும் மாறாக தமிழகத்தில் ஊரறிய ஒரே காரில் வந்ததெல்லாம் அண்ணாமலை என் மனதின் குரல் என காட்டியதே அன்றி வேறல்ல‌

அதனால் எம் அனுமானத்தை சொல்கின்றோம்

பாஜக ஒரு முடிவோடுதான் இருக்கின்றது, இங்கு கட்சியினை இடித்துகட்ட விரும்புகின்றார்கள், அப்படி இடிக்கும்பொழுது ஓசை வரத்தான் செய்யும்

பாழடைந்த வீட்டில் இருந்த நாகங்களும் கரப்பான் பூச்சும் பூரான்களும் அலறி ஓடத்தான் செய்யும்

அதற்காக வீட்டுக்காரன் விடமாட்டான், அவன் ஓங்கி ஓங்கி அடிக்கத்தான் செய்வான் எல்லாவற்றையும் விரட்டத்தான் செய்வான்

90 வருடகாலம் போராடி தேசத்தின் ஆட்சியினை பிடித்தவர்களுக்கு தமிழக மாகாணத்தை பிடிக்க எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருக்க தெரியும்

இதனால் இந்த சலசலப்பெல்லாம் அதிமுவுடன் சேர்ந்தால் தனக்கென்ன லாபம் என கவலைபடும் கும்பலால் வந்ததே அன்றி உண்மையாக நாட்டையும் மக்களையும் தமிழகத்தையும் நேசிப்பவர்களால் வந்த கவலை அல்ல‌

அதனால் அண்ணாமலை அவர்போக்கில் தன் பணியினை செய்கின்றார், அப்படி எல்லோரும் அவரவர் பணியினை செய்வதுதான் நல்லது

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 5 Fb_img23

இந்தியா வரலாற்று புரட்சி ஒன்றை செய்துள்ளது, அதன்படி 18 நாடுகள் இந்திய பணமான ரூபாயினை பயன்படுத்தலாம் என அறிவித்துவிட்டது இந்திய ரிசர்வ் வங்கி


போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், பிரிட்டன், கென்யா, மலேஷியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா என 18 நாடுகளில் இந்திய பணம் புழங்க அனுமதி என இந்திய தலமை வங்கி அறிவித்துவிட்டது

இதனால் என்னாகும் என்றால் இந்த நாடுகளில் நடக்கும் வியாபாரம் இந்திய பணத்தில் நடக்கும், அப்பொழுது அமெரிக்க டாலரை வாங்க வேண்டிய அவசியம் இராது

ஒரு நாட்டின் ஒவ்வொரு கரன்சியும் வியாபார பரிவர்த்தனை செய்யபடும் பொழுது குறிப்பிட்ட பங்கு பணம் அந்நாட்டுக்கு செல்லும் இது பணமாற்று விதி

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் டாலரில் வர்த்தகம் நடந்தால் ஒரு அமெரிக்க டாலருக்கு 3% சதவீத வருமானம் அமெரிக்காவுக்கு செல்லும், அப்படியானால் இந்த பெரும் மதிப்பினை நினைத்து பாருங்கள்

அமெரிக்க வருமான ரகசியம் இதுதான்

இனி இந்த பணம் இந்திய ரூபாய்க்கான கமிஷனாக இந்திய அரசுக்கே செல்லும்

நதி ஓட ஓட அதன் கரையெல்லாம் விளைவது போல, பணம் இப்படி சுற்றி சுற்றி புழங்க புழங்க அரசுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்க வேண்டும் அதுதான் கரன்சி பொருளாதார விதி

முன்பு இந்தியாவின் பணம் இந்தியா தாண்டி செல்லாது, அதனை டாலரிலோ இல்லை சம்பந்தபட்ட நாட்டின் மதிப்பிலோதான் மாற்ற வேண்டும் இதனால் இந்திய பணத்துக்கு இந்தியா தாண்டி சந்தையில்லை

இப்பொழுது அக்கம்பக்கம் எல்லா நாடுகளிலும் செல்ல தொடங்கிவிட்டது, இனி இந்திய பணமதிப்பு மெல்ல மெல்ல மேலெழும்

கடந்த ஓராண்டாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருக்க ரஷ்யாவுடன் பெரும் எண்ணெயினை இந்திய பணத்தில் வாங்குவதுதான் காரணம்

1920களில் ஒருஇந்திய ரூபாய்க்கு வெகு கீழே கிடந்த அமெரிக்கன் டாலர் அடுத்த 100 ஆண்டுகளில் இப்படி எகிற காரணம் உலகளாவிய பணமாக டாலரை தங்கள் போர் வெற்றியால் கொண்டுவந்து தங்கம், கச்சா எண்ணெய் இன்னும் உலக வியாபாரம் அனைத்தும் டாலருக்கு அவர்கள் மாற்றியதால் மட்டுமே

அதனில் இருந்து தன்னை விடுவித்தாலே இந்தியா மெல்ல மேலெழும் இதோ தொடங்கிவிட்டது

இந்திய பணத்தை டாலரில் வைக்க 1960களிலே கட்டுபாடு வைத்தது அமெரிக்கா இந்திரா அதை ஏற்றார், அதனை ரூபிள் அதாவது ரஷ்ய பணத்துக்கு மாற்ற சோவியத் முனைந்தது அதுவும் நடக்கவில்லை

இப்படி இந்தியாவின் கரன்ஸி வெளிநாட்டு பிடியில் இருந்தது

டாலரை இத்தேசம் வாங்கிய காலம் மாறி இனி இந்திய கரன்சியினை மற்ற நாடுகள் வாங்கும்

இப்பொழுது உலகில் இந்தியாவுக்கு சாதகமான நேரம்

உக்ரைன் விவகாரம், சீனாவுக்கு லாடம் அடிக்கும் விவகாரம் என இந்தியாவினை அமெரிக்க தரப்பால் ஐரோப்பிய தரப்பால் பகைக்கமுடியவில்லை

இந்தியா தவிர்க்கமுடியா நாடு என்பதால் இதனை மனவலியோடுதான் அனுமதிக்கின்றன‌

இன்னொரு பக்கம் இந்தியா இதை செய்யாவிட்டால் சீனா செய்ய வாய்ப்பு உண்டு என்பதால் மவுனமாக தலையசைக்கின்றன‌

இப்படி கால சூழலை கணக்கிட்டு இந்திய பணத்தை உலக பணமாக்கிவிட்டார் மோடி

மோடி ஏன் நாடுநாடாக சென்றார், அவரை தொடர்ந்து ஜெய்சங்கர் ஏன் சென்றார் என்றால் அதன் பலன் இதுதான்


சரி, 19ம் நாடாக இணைய முழு எதிர்பார்ப்பில் இருக்கும் நாடு எது தெரியுமா?

பங்காளி பாகிஸ்தான், வெகுவிரைவில் வருவார்கள் ஆனால் வழக்கமான பாணியான இந்திய கரன்சியின் கள்ளநோட்டுடன் தான் வருவார்கள் ஆனால் இந்த அரசிடம் அது செல்லாது


#பிரம்ம_ரிஷியார்
தமிழக பத்திரிகைகளும் ஊடகஙளும் எப்பொழுதுமே இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி திரும்பும் இடமெல்லாம் சொல்லவைத்து மெல்ல மெல்ல மக்களை மூளை சலவை செய்வதில் வலுவானவை

ஆனால் பல இடங்களில் இந்த மூளை சலவை எடுபடாமல் போனாலும் அவை தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருக்கும்

யோகி வெல்லமாட்டார், குஜராத்தில் காங்கிரஸ் எழும், வடகிழக்கில் காங்கிரஸ் பிரகாசிக்கும், முலாயம் சீறுவார், மம்தா மின்னுவர் என்றெல்லாம் சொல்லி அவை வழுக்கிய இடமும் உண்டு

இப்பொழுது மறுபடியும் கிளம்பிவிட்டன‌

கர்நாடகாவில் பாஜகவ்க்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்குமிடத்திலும் காங்கிரஸ் சீறும் என தமிழக மீடியாக்கள் சொல்கின்றன, அப்படி சீறும் இடத்துக்கு ராகுலார் ஏன் வரவில்லை? முடிவு தெரிந்துதானே வரவில்லை என்றால் பதில் வராது

அந்த மூளைசலவையில் இப்பொழுது வந்திருக்கும் முக்கிய திட்டம் "ஸ்டாலினார் அடுத்த பிரதமர்"

ஒருமாதிரி குழப்புகின்றார்கள், சொன்னதையே சொல்லி சொல்லி பதியவைக்க முயல்கின்றார்கள்

ஆனால் பாரத பிரதமர் 125 கோடி மக்களுக்கானவர், 5 கோடி தமிழருக்கானவர் அல்ல அவர் இந்தி வெறுப்பு இந்து வெறுப்பு கொண்டவராக ஒரு காலமும் இருக்க முடியாது என்பது பற்றியெல்லாம் அந்த ஊடகங்களுக்கு கவலையே இல்லை

தமிழக மக்களை முழு முட்டாளாக்குவதன் பெயர் அங்கு பத்திரிகா தர்மம்

#பிரம்ம_ரிஷியார்
இந்த பாஜக அதிமுக முறுகலை மாநில அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சரியாக புரியாது, அதை காண தேசிய அரசியல் பார்வை அவசியம்

இப்பொழுது பழனிச்சாமி தமிழகத்தில் தன்னை ஒரு சக்தியாக காட்டி பாஜகவினை தன் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு கட்சியாக திமுகவுக்கு காங்கிரஸ் போல் ஆக்க நினைக்கின்றார் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது

தமிழகத்தில் நாங்கள்தான் எல்லாம் எங்களுக்கு பணிந்து நின்றால் சில இடங்களில் வெல்ல உங்களுக்கு உதவுவோம் அதே நேரம் நாடளாவிய பிரச்சினையில் உங்களை ஆதரிப்போம், நாடு உங்கள் பாடு தமிழகம் எங்கள் காடு, உங்களுக்கு நாட்டுபற்று இருந்தால் எங்களை ஆதரித்தே தீரவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு

அப்படி ஆதரிக்காவிட்டால் உங்களை கழற்றிவிடுவோம் ஒரு சீட்டும் ஒரு தேர்தலிலும் கிடைக்காது எனும் ரகசிய மிரட்டல் வேறு

இப்படியெல்லாம் அதிமுக நம்ப காரணம் அதனை பழைய பாஜகவாக நினைத்து அது பல சமரசங்களை செய்யும் என எதிர்பார்ப்பதுதான்

பாஜக அப்படியான சமரசங்களை முன்பு செய்த கட்சி, சந்தேகமில்லை ஆனால் அந்த காலம் வேறானது

பாஜகவின் முதல் எதிரி காங்கிரஸ், அது ஒன்றுதான் பரம வைரி முதல் எதிரி

அந்த காங்கிரஸை வீழ்த்த எல்லா மாகாண கட்சியுடனும் தயக்கமின்றி கூட்டணி வைத்தார்கள், ஒவ்வொரு மாகாண கட்சிசொன்ன நிபந்தனைக்கெல்லாம் கட்டுபட்டார்கள்

அப்படித்தான் ஊழல் கட்சி என அறியபட்ட ஜெயலலிதாவுடனெல்லாம் கூட்டணி கண்டார்கள் , 1996ல் மிக மோசமான நிலையில் இருந்த அதிமுகவினை பாஜக கூட்டணிதான் தூக்கி நிறுத்திற்று

ஆனால் பாஜகவின் பலவீனத்தை பயன்படுத்தி தன் இஷ்டத்துக்கு அதனை ஜெயா ஆட்டுவிக்க முயல பாஜக திமுக பக்கமே சாய்ந்தது

இதெல்லாம் காங்கிரஸை ஒழிக்க அவர்கள் செய்த ராஜதந்திரம், அந்த இலக்குக்காக எந்த கூட்டணி என்றாலும் ஏற்றுகொண்டார்கள்

ஆனால் இப்பொழுது காங்கிரஸ் களத்தில் இல்லை, இனி மீளவாய்ப்பு இல்லை எனும் வகையில் பாஜகவின் பார்வையும் ஆட்டமும் மாறிவிட்டது

இன்னும் மாகாண கட்சிகளை விட்டுவைத்தால் அல்லது அங்கு நாம் ஆதிக்கம் செலுத்த தயங்கினால் எதிர்காலத்தில் அது கட்சிக்கு சிக்கலாகும் என கருதுகின்றார்கள்

இப்பொழுதெல்லாம் அவர்கள் ஆட்டமே அதிரடியானது, பழனிச்சாமி போல தப்புகணக்கிட்ட சிவசேனா இன்று அடையாளமேமாறி நிற்கின்றது

பழைய பாஜக இது இல்லை, மாகாண கட்சிகள் ஆட்டிவைக்கும் அந்த பாஜக இது இல்லை

அதுவும் தமிழகத்தில் அவர்களின் எம்பி கணக்கு பூஜ்ஜியம் எனும் வகையில் இந்த காலி மைதானம் அவர்களுக்கு கவலையே இல்லாதது

சிக்கல் இங்கு பழனிச்சாமிக்கே அன்றி பாஜகவுக்கு அல்ல‌

எங்களுடன் சேராவிட்டால் என பாஜகவினை அதிமுக மிரட்ட முடியாது, அதே நேரம் தங்கள் பக்கம் வராவிட்டால் பழனிச்சாமியினை எப்படி பந்தாட முடியும் என்பது பாஜகவுக்கு தெரியும்

இப்பொழுது ஜெயா இருந்திருந்தாலே பாஜக இந்த ஆட்டம்தான் ஆடும், அதுதான் நிஜம் இங்கே பழனிச்சாமியெலலம் வெறும் தூசு

இந்த புதிய பாஜகவின் சீற்றமான முடிவினைத்தான் அண்ணாமலை அடித்து சொன்னார் "இனி இதுதான் அரசியல், எங்கள் முடிவுதான் முடிவு, எங்களை யாரும் கட்டுபடுத்த முடியாது" என்பது ஆயிரம் அர்த்தம் கொண்ட பேச்சு

பெரும் முடிவோடுதான் பாஜக நிற்கின்றது, இல்லையேல் இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து இப்படி அவரை மோதவிடமாட்டார்கள்

பழனிச்சாமி தன்னால் முடிந்தவரை பம்மாத்து காட்டலாம், கூட்டணி இல்லை என குழப்பலாம் இன்னும் சில பின்னடைவுகளை பாஜகவுக்கு கொடுக்கலாம்

அனால் பின்வாங்கிவிட்டு பின் சீறிவரும் சுனாமி போல பாஜக அதன் பின் மிக பலமான அடிகளை அடிக்கும் அதனில் பழனியார் தப்பமுடியாது என்பது நிஜம்

ஆக எல்லா வகையிலும் நெருக்கடியும் பலவீனமும் அதிமுகவிற்குத்தான் உண்டே தவிர பாஜகவுக்கு அல்ல, அதனால் பழனிச்சாமி தரப்பு எல்லா வகை அஸ்திரத்தையும் தன் பலம் முழுவதையும் பயன்படுத்திபார்க்கும்

ஆனால் அவர்களால் வெல்லமுடியுமா என்றால் இல்லை, கங்கையின் பெரும்வெள்ளம் முன்னே கொங்கு நாட்டு ஓடைகள் நின்றுவிட முடியாது

காலம் அதை காட்டும், அண்ணாமலையின் குரல் டெல்லி பாஜகவின் குரலாக அதைத்தான் சொல்கின்றது

தமிழக காங்கிரஸ் எப்படி நாசமானதோ அப்படி தமிழக பாஜகவினையும் உருவாக்க அவர்கள் நினைக்கவில்லை, தமிழக அரசியலின் வழமையான கோஷ்டி அரசியலை முளையிலே அகற்றுகின்றார்கள்

தமிழிசை முதல் எல்லோரும் கவுரமாக வெளியேற்றபட்டது , தனக்கென கோஷ்டி உருவாக்க நினைப்போர்களை தட்டி வைப்பது இல்லை ஓட வைப்பது என ஒரு தலமையின் கீழ் கட்டுகோப்பாக செயல்படும் கட்சியாக அதனை உருவாக்குகின்றார்கள்

அகில இந்திய பாஜகவில் கோஷ்டிகள் இல்லை, ஒரே நோக்கம் ஒரே தலமை ஒரே இலக்கு என தெளிவாக கட்டுப்பாடோடு இருக்கின்றார்கள்

அந்த கட்டுபாட்டைத்தான் தமிழக பாஜகவிலும் கொண்டுவர முயல்கின்றார்கள் அதுதான் அவசியமும் கூட, அவ்வகையில் இங்கு நடப்பதெல்லாம் மிக சரியானது

அதுதான் நல்லது அதுதான் சரியானது

இங்கு நடப்பது அண்ணாமலையின் சர்வாதிகாரம் அல்ல மாறாக காங்கிரஸ் போல் குழம்ப கமலாலயம் தயாராக இல்லை, கோஷ்டி சேர்த்து சண்டையிட இது சத்யமூர்த்தி பவன் இல்லை

"மோடி தலமையில் அண்ணாமலையும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான், முடிந்தால் அமைதியாக வேலை செய்யுங்கள் இல்லை வெளியேறுங்கள் சிக்கல் இல்லை, அண்ணாமலையினை எதற்கு அனுப்பினோம் என எங்களுக்குத்தான் தெரியும், அவர் தன் வேலையினை செய்யட்டும் நீங்கள் உங்கள் வேலையினை செய்யுங்கள்

இல்லாவிட்டால் அகலுங்கள்" என்பதுதான் இப்போது பாஜகவின் நிலைப்பாடு

இதை புரிந்தவன் அமைதியாகின்றான், புரியாதவன் தவளை போல் தன்னை பாம்புகளுக்கு காட்டி கொடுக்கின்றான் அவை ஓடிவந்து விழுங்குகின்றன

குறிச்சொற்கள் #பிரம்ம_ரிஷியார் #பாஜக #அதிமுக #தேசிய_அரசியல்
இடைதேர்தல்களில் இதைவிட அதிகமான வாக்கு வித்தியாசங்களில் ஜெயலலிதா வென்ற காலமும் உண்டு, இன்று அவர்கட்சி என்னாயிற்று என்பது எல்லோரும் அறிந்தது

முன்பு திருமங்கலம் இடைதேர்தலில் அதைவிட சாகசங்கள் நடந்தன அய்யா கருணாநிதி அவர்களே தன் மகன் மு.க அழகிரியினை பார்த்து "இவரிடம் கற்றுகொள்ள நிரம்ப உண்டு" என சொன்ன தருணமும் உண்டு

இடைதேர்தல் முடிவுகள் அப்படித்தான் இருக்கும் அவற்றை கொண்டு வருங்கால தேர்தலை கணிப்பது சரியல்ல‌

ஏதோ இருவார காலம் தொகுதி மக்கள் சந்தோஷமாக இருந்தார்களா , வயிறும் பையும் நிரம்பிற்றா என்பதை தவிர ஏதும் சொல்வதற்கில்லை

வெற்றி என்றால் வடகிழக்கு மாகாண தேர்தலில் பாஜக தன்னை தக்க வைத்து நிற்கின்றதல்லவா அது வெற்றி

முன்பு நேபாள மாவோஸ்டுகளின் அடுத்த குறி இவையாக இருக்கலாம் , பர்மா சீனா போன்ற நாடுகளில் இருந்துவரும் மிரட்டல் இந்த மகாணங்கள் மூலம் தேசத்தின் தலைவலியாகலாம் எனும் அச்சம் இருந்தது

அது அடியோடு களையபட்டிருக்கின்றது, பாஜக அந்த அதிசயத்தைச் செய்திருக்கின்றது, பாஜக தேசத்தின் காவல் அரண் எனும் நம்பிக்கை தேசாபிமானிகளுக்கு உற்சாகத்தை கொடுக்கின்றது

ஆக அடுத்த பிரதமர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் மோடி என்பது தெரிகின்றது அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கமுடியும்

#பிரம்ம_ரிஷியார்

Back to top

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next