புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 6 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 6 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 6 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
Jenila

1 Post - 2%
Ammu Swarnalatha

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 53 matches for பிரம்ம_ரிஷியார்

சோவியன் யூனியனின் பிரதான உளவுதுறையான‌ கேஜிபி கலைக்கபட்டு இப்பொழுது ரஷ்ய உளவுதுறையின் பெயர் எப்.எஸ்.பி என மாற்றபட்டுவிட்டது என்பது கூட தெரியாமல் ரஷ்ய கேஜிபியின் உக்ரைன் சாகசம் என சிலர் பொங்குவதை கண்டால் பரிதாபமே மிஞ்சுகின்றது

உக்ரைனில் ரஷ்யா செய்திருப்பது ஆக்கிரமிப்பு முயற்சி, அதனில் சந்தேகமே இல்லை. உக்ரைன் ஒரு இறையான்மை மிக்க நாடு அங்கு இன்னொரு நாடு ஆக்கிரமிப்பது எக்காலமும் ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌

ஆயிரம் சிக்கல் இருக்கலாம், மிரட்டல் இருக்கலாம் அதற்காக இன்னொரு நாட்டுக்குள் பலாத்காரமக நுழைவதெல்லாம் அப்பட்டமான சர்வாதிகாரம் அதனை உலகம் ஒரு காலமும் ஒப்பாது

இன்று உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்யா அதை அப்படியே விட்டுவிட்டால் நாளை மால்டோவா, ரோமேனியா என தொடங்கி ஒவ்வொரு நாடாக கைபற்றும் என்பதை மறுக்க முடியாது

பலமிருப்பதால் அண்டை நாடுகளை கைபற்றுவோம் என ஒவ்வொரு நாடும் களமிறங்கி அண்டை நாட்டை ஆக்கிரமித்தால் உலகம் தாங்காது, மானுட குலம் வாழமுடியாது

இந்த பூமியில் வரைபடங்கள் மாறிகொண்டே இருக்கும் அது யதார்த்தாம் காலம் மாற மாற அரசுகள் எழும் வீழும் நாட்டின் கோடுகள் மாறும்

அதற்காக அலெக்ஸாண்டர் காலத்து நாடுகளை மீட்போம் என கிரீஸ் கிளம்பினாலோ , செங்கிஸ்கான் காலத்து வரைபடத்தை அமைப்போம் என சீனா கிளம்பினாலோ, 18ம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை அமைப்போம் என பிரிட்டன் கிளம்பினாலோ அது மடத்தனம்

அதே மடதனத்தைத்தான் உக்ரைனில் பழைய சோவியத்தை அமைப்போம் என புட்டீன் முயற்சித்துகொண்டிருகின்றார்

இதனை ஒரு காலமும் உலகம் அனுமதிக்காது, இதை அனுமதித்தால் அடுத்து ஒவ்வொரு நாடும் தன் அண்டை நாட்டை ஆக்கிரமிப்பதை தடுக்க முடியாது

கியூபா எனும் குட்டி நாட்டுக்கு எல்லா இறையாண்மையும் உண்டு என பேசிய ரஷ்யா அதை இறையாணமை உக்ரைனுக்கு இல்லை என சொல்ல எக்காலமும் உரிமை இல்லை

நாம் இந்தியர்கள், இந்நாட்டின் மேல் சீனாவோ பாகிஸ்தானோ படையெடுத்தால் நாம் தாங்குவோமா? ஒரு காலமும் இல்லை, அவரவர் நாடு அவரவர்க்கு முக்கியம்

சிறிய நாடான வியட்நாம்,இலங்கை போன்றவையே அதை மிக உக்கிரமாக செய்தன எனும் பொழுது ஐரோப்பாவின் இரண்டாம் பெரிய நாடான உக்ரைன் எப்படி விடும்?

ஆம், அதைத்தான் உக்ரைன் மக்களும் உலக நாடுகள் ஆதரவோடு தங்கள் நாட்டின் மேலான ஆக்கிரமிப்பை எதிர்த்து மாபெரும் யுத்தம் நடத்துகின்றார்கள்

புட்டீன் உக்ரைனில் செய்வது மிகபெரிய தவறு, அந்த யுத்தத்தை இன்னும் தொடர்வது மிகபெரிய தவறு

ஒரு காலமும் உக்ரைன் மேலான ரஷ்ய ஆக்கிரமிப்பை உலகம் ஏற்காது எனும் நிலையில், தன் அண்டை நாட்டின் மேல் வலிய போரை திணித்து நடத்தும் புட்டீனே போர் நிறுத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளார்

அவர்தான் நிறுத்தவேண்டும் இல்லையேல் ரஷ்யா கொடுக்கவேண்டிய விலை பன்மடங்கு அதிகமாக , ரஷ்யா காலத்துக்கும் எழும்பமுடியா அளவில் பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும்

#பிரம்ம_ரிஷியார்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா என கேட்கபட்ட கேள்விக்கு மிக சாதுர்யமான பதிலை அளித்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

அவர் தன் உரையில் #பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் தீவிரவாதத்தை வளர்த்த நாடு என அடையாளபடுத்தி அந்நாட்டுக்கு உதவ வேண்டுமா இல்லையா என்பதை தேசத்து மக்களே முடிவெடுப்பார்கள் என பதிலளித்தார்

அதன் பொருள் பாகிஸ்தான் இந்தியாவில் ஏற்படுத்திய சேதம் அதிகம், இழப்பு மிக அதிகம் அதனால் எம்மக்கள் அந்நாட்டுக்கு உதவ விரும்பமாட்டார்கள் மக்கள் விருப்பத்தை மீறி இந்த அரசு ஏதும் செய்ய முடியாது என்பதே

பாகிஸ்தான் உருவான காலத்திலே திவாலாக வேண்டிய நாடு, அப்பொழுது 50 கோடி கொடுத்து அது நிலைக்க காரணமானவர் மகாத்மா காந்தியார், பாகிஸ்தான் உருவாக காரணமும் அவரே

அப்படி காந்தியால் உருவாகி வளர்ந்த பாகிஸ்தான் நேருவும் அவரின் வழிவந்த காங்கிரசும் செய்த அத்தனை குழப்பத்தாலும் தன்னை நிலை நிறுத்திகொண்டது, இந்திராகாந்தியும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை அடக்க தயங்கித்தான் நின்றார்

இப்படி பல வகையிலும் பழைய காங்கிரசால் பாதுகாக்கபட்ட பாகிஸ்தான் எங்கள் ஆட்சியில் பாதுகாக்கபடாது என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திரமான பதில் அதைத்தான் சொல்கின்றது

இந்துக்களோடு வாழமாட்டோம் அவர்கள் மதவெறியர்கள் சாதிகொடுமை கொண்டவர்கள் என என்னவெல்லாமோ சொல்லி தனிநாடு வாங்கினார் ஜின்னா, உலகின் முதல்நிலை இஸ்லாமிய நாடாக அதனை உருவாக்கி இந்தியாவினை விட பன்மடங்கு மேலான தேசமாக அதை நிறுவுவேன் என்றெல்லாம் சூளுரைத்தார்

காலம் ஜின்னா சொன்னதெல்லாம் சரியல்ல என்பதை காட்டிவிட்டது

மதசார்பு என போலிபெயர் சூட்டபட்டு ஒடுக்கபட்ட இந்தியா, இன்று மோடி தலமையில் பெரும்பான்மை இந்துக்களுடன் இப்படி சிலிர்த்து நிற்கும் இந்த இந்தியா, சுத்தமான இந்து இந்தியாக இருந்தால் உலகின் மாபெரும் சக்திமிக்க முதல்நிலை தேசமாக நிச்சயம் மாறும் என்பதுதான் உலக கணிப்பு

காரணம் இந்தியாவின் அடையாளமே அந்த இந்துமதம், மனிதனின் மனம் சமூகம் வாழ்வு பிரபஞ்சம் என எல்லாமும் போதிக்கும் அந்த ஞானமதம் எல்லோரையும் வாழவைக்குமே தவிர யாரையும் தாழ்த்தாது

அப்படித்தான் ஒரு காலத்தில் இந்தியா செல்வமிக்க நாடாக திகழ்ந்தது, இப்பொழுது அதனை மீட்டெடுத்து கொண்டும் இருக்கின்றது

இந்தியா ஏன் இந்துநாடாக அறிவிக்கபட வேண்டும் எனும் அவசியத்தை காந்தியும், நேருவும் மறைத்திருக்கலாம் ஆனால் காலம் தன் கடமைபடி பாகிஸ்தானை கைகாட்டி உண்மையினை உலகுக்கு சொல்லிகொண்டிருக்கின்றது

இந்தியா எனும் இந்து ஆன்மீக நாட்டை குழப்பவும் தொல்லைகொடுக்கவும் உருவாக்கபட்ட பாகிஸ்தான் இன்று இந்தியாவின் பெருமையினை கூறும் அடையாளமாக மாறிவிட்டதெல்லாம் தர்மத்தின் வெற்றி

இந்தியா இப்பொழுதும் பாகிஸ்தானுக்கு கைகொடுக்க காத்துத்தான் இருக்கின்றது, இது பகைவனையும் "இன்று போய் நாளைவா" என சொன்ன ராமனும், எவ்வளவு கொடுமை செய்தாலும் என் உறவுகளுடனா எனக்கு போர் அதை செய்யமாட்டேன் என தன் ரத்தபாசத்தில் வில்லை கைவிட்ட அர்ஜூனனும் வாழ்ந்த நாடு

அந்நியரான பிரிட்டிசார் அடக்கி ஆண்ட காலங்களிலும் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட கொள்ளை நோய்க்கும் பல இழப்புகளுக்கும் மனமுருகி "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என பாடிய பாரதி வாழ்ந்த பூமி இது

இது யாரும் துன்பபடுவதை சகிக்காத தர்மம் கொண்ட பூமி, இப்பொழுதும் சில உத்திரவாதங்களை கொடுத்தால் பாகிஸ்தானுக்கு உதவ தேசம் நிச்சயம் தயார், ஆனால் அதனை பாகிஸ்தான் செய்யுமா என்பது கேள்விகுறி

தர்மம் வெல்ல கடைசிவரை அதர்மத்திலே நிலைக்க வேண்டும் என்பது துரியோதனனின் கர்மா என்றால் அங்கு கண்ணன் என்ன செய்திருக்க முடியும்?

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 6 Fb_img20

இன்றோடு உக்ரைன்மேல் படையெடுத்து ஓராண்டை நிறைவு செய்கின்றது ரஷ்யா

இப்போரினால் என்னென்ன நடந்ததென்றால் அது பலவகை விளைவுகளை சொல்ல கூடியது

முதலாவது ரஷ்யா இதுகாலமும் மிரட்டி கொண்டிருந்தது போல இனியும் அக்கம்பக்கம் நாடுகளை மிரட்ட முடியாது என்பதும், எது நடக்க கூடாது என #ரஷ்யா அஞ்சியதோ அதாவது எக்காரணம் கொண்டும் நேட்டோவும் அமெரிக்காவும் தங்கள் காலடியில் வரகூடாது என அஞ்சியதோ அது நடந்தே விட்டது

போரின் முதல் தோல்வி ரஷ்ய ராணுவ வியூகமும் ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பில் வெளிநாட்டு மூலபொருள் இருந்ததுமாகும், ரஷ்ய ராணுவ வியூகம் சுத்தமாக சொதப்பியது

ஒரு பக்கம் ரஷ்ய ராணுவம் இன்னொரு பக்கம் ரஷ்ய வாடகை ராணுவமான் வாக்னர் குரூப்பெல்லாம் குழப்பி அடித்ததில் சூழல் உக்ரைனுக்கு ஆதரவானது

ரஷ்யா ஆயுத ஏற்றுமதி நாடு ஆனால் அதன் மூலபொருள் அன்னிய இறக்குமதியில் இரூந்ததை பின்னர் காணமுடிந்தது இதனாலே அதன் ஏவுகனை வீச்சு விமான படை வீச்சு எல்லாமே குறைந்து ஒரு கட்டத்தில் ஈரான், வடகொரியா என கை ஏந்தியது ரஷ்யா

போரில் #உக்ரைன் சாகசம் காட்டியது நிஜம், என்னதான் அமெரிக்க உதவி என்றாலும் அது கிடைக்கும் நாடெல்லாம் சாதிப்பதில்லை பாகிஸ்தானை போல‌

உக்ரைன் 2013ல் புட்டீன் கிரிமியாவினை ரஷ்யா பிடித்தபொழுதே யுத்தத்தை எதிர்பார்த்தது, #புட்டீன் செய்த மிகபெரிய தவறு உக்ரைன் சுதாரிக்க சுமார் 9 ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்தது அல்லது ரஷ்ய ராணுவம் மேல் கொண்ட பெரும் நம்பிக்கை

இந்த 9 ஆண்டில் உக்ரைனை மேலை நாடுகள் பலமாக்கின அதுதான் பின்னர் தெரிந்தது

அமெரிக்காவின் ஜாவலின் ஏவுகனைகள் ரஷ்யாவின் டாங்கிகளை முறித்து போட்டன, ரஷ்ய விமானபடை பல விமானங்களை இழந்தபின் ஒதுங்கி கொண்டது, ரஷ்யாவின் பிரதான கப்பலான மோஸ்வா மூழ்கடிக்கபட்டதும் ரஷ்ய கடற்படையும் வீச்சை குறைத்தது

அமெரிக்க ஹைமாஸ் சிஸ்டம் உள்ளிட்ட பல ஆயுதங்கள் சாகசம் காட்டும் பொழுது ரஷ்யாவிடம் பதில் ஆயுதமில்லை

ரஷ்யாவின் எஸ் 400, எஸ் 500 சிஸ்டமெல்லாம் கடைசிவரை கைகொடுக்கவில்லை ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் எளிதாக தாக்கின, ரஷ்ய கப்பலுக்கு கூட காவல் இல்லை

அதுவும் கடந்த செப்டம்பருக்கு பின் ரஷ்யா எந்த முன்னகர்வும் செய்யாமல் திண்ற ஆரம்பித்துவிட்டது

போரில் நேட்டோவும் அமெரிக்காவும் பலம்காட்டின, அவர்கள் ஆயுதங்கள் நின்று பேசின நிச்சயம் ரஷ்யாவிடம் பதில் ஆயுதமில்லை என்பது நிஜம்

ஒரு வகையில் 1980ல் ஆப்கனில் சிக்கியது போல் உக்ரைனிலும் ரஷ்யா சிக்கிவிட்டது இனி எத்தனை வரூட யுத்தம் நடந்தாலும் ரஷ்ய வெற்றி சாத்தியமில்லை

ரஷ்யாவின் ஒரே பலம் உள்நாட்டு உணவு உற்பத்தி மற்றும் எண்ணெய் உற்பத்தி , இந்த இரண்டும் இருந்தால் ஒரு தேசம் யுத்தத்தை தாங்கும், ஈராக்கின் சதாம் உசேன் அதை முயற்சித்தார்

புட்டீனின் ரஷ்யாவும் அதனை தாங்குகின்றது, அணுகுண்டு பலமான நாடு என்பதால் ஈராக் போல் உங்கே அப்படி நுழைய முடியாது என்பது புட்டீனுக்கு ஆறுதல்

ரஷ்ய வங்கிகளுக்கு தடை, விமானங்களுக்கு தடை என பல்வேறு தடைகளால் ரஷ்யா சிக்கியிருக்கின்றது இத் நிச்சயம் பின்னாளில் பாதிப்பினை கொடுக்கும், ரஷ்ய பொருளாதாரம் இப்பொழுது சீன இந்திய எண்ணெய் ஏற்றுமதியில் இருக்கின்றது

மோடி அரசு இந்தியருக்கு மட்டுமல்ல புட்டீனுக்கும் அதிர்ஷ்டம், அதனால் எண்ணெய் வியாபாரம் சரியாக நடக்கின்றது, இந்திய எரிபொருள் சந்தை ஸ்திரமாக நிற்கின்றது

இந்த போர் நிகழ்த்திய பெரிய விளைவுகள் சில உண்டு

முதலாவது இனி ரஷ்ய ஆயுதம் உலகளவில் பின்னடவை எட்டும், அந்த ஆயுத சந்தையினை அமெரிக்கா கைபற்றும்

இரண்டாவது இனி ரஷ்யா யாரையும் மிரட்டமுடியாது கடைசியில் கால்வைத்தால் உக்ரைன் நிலைதான்

மூன்றாவது உலக அளவில் பல அரசியல், ராணுவ பொருளாதார கூட்டணிகள் மாறும், மேற்காசிய நிலவரமும் மாறும்

#சீனா உலகில் அமெரிக்காவுக்கு நிகரான நாடாக தன்னை நிறுவ முயலும் அதை தடுக்க அமெரிக்கா ஆடும் ஆட்டத்தை இந்தியா தனக்கு சாதகமாக மாற்றும்

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக உகந்த சூழல் இனி உருவாகும்

ஒருவகையில் 1990க்கு பின் மறுபடியும் உலகை பாதிக்க தொடங்கியிருக்கின்றது ரஷ்ய நிகழ்வுகள்

இங்கு பெரும் பலம் பெற்ற நாடுகள் மூன்று

முதலாவது சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா, தன் மண்ணில் ஒரு ஓலைவெடி கூட வெடிக்காமல் நீண்ட கால எதிரியினை அதன் பங்காளியினை கொண்டே குலைப்பதெல்லாம் மிகபெரிய ராஜதந்திரம்

இதனால் உக்ரைன் எனும் அடிமை சிக்கிவிட்டது, அமெரிக்க ஆயுத உலகபுகழ் பெற்றுவிட்டது, #ஐரோப்பா எண்ணெய் சந்தை அமெரிக்கா கைக்கு சென்றும் விட்டது

இப்படி பல கணக்குகளில் அவர்களுக்கு வெற்றி

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சல்லி விலை எரிபொருள் என்பது மிகபெரும் அனுகூலம், அதுவும் இந்தியாவுக்கு மிக பெரும் அதிர்ஷ்டம்

சந்தடி சாக்கில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம் ஆனால் அமெரிக்காவினை பகைகமாட்டோம் என #இந்தியா ராஜதந்திரமாக நகர்ந்து உலகளவில் தன் ஆதிக்கத்தை தக்கவைத்து நிற்கின்றது

இரண்டாம் ஆண்டாக போர் தொடங்கும் நிலையில் மிகபெரிய தோல்வியின் வீழ்ச்சியில் நிற்கும் புட்டீன் இன்னும் ஆவேசமாக போரை தொடங்குவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கும் அவர் அடியாள் படையான வாக்னர் குருப்ப்க்கும் உரசல் தொடங்குவது மேலும் ரஷ்யாவுக்கு பின்னடைவு

புட்டீன் ராஜதந்திரமாக உருவாக்கிய அவரின் கூலிபடையான வாக்னர் குரூப் இப்பொழுது தனி குழப்பம் செய்வது புட்டீனுக்கு பெரும் அதிர்ச்சி மாபெரும் பின்னடைவு

ஏற்கனவே மிகபெரிய பின்னடைவில் இருக்கும் ரஷ்யா இனி இன்னும் திணறும் கவுரவமான தோல்விக்கு கூட அது வரமுடியாது

யுத்தம் நீடித்தால் 2013ல் இழந்த கிரிமியாவினை மீள கைபற்ற உக்ரைன் தீவிரம்காட்டும் அதை தடுக்க ரஷ்யாவும் வரிந்து கட்டும் என்பதால் இருதரப்பும் இப்போதைக்கு விவகாரத்தை விட போவதில்லை

இப்பொழுது உக்ரைனின் எல்லையோர 10 சதவீத பகுதிகளை தன் ரகசிய போராளிகள் மூலமும் தன் ஆதிக்கம் மூலமும் பிடித்த ரஷ்யா அதை தக்கவைக்கவே கடும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றது என்பதுதான் இன்றைய நிலை

அது முன்பு பிடித்த கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் திரும்ப மீட்டது போல இப்பகுதிகளை பிடிக்க  உக்ரைன் கடும் போர் நிகழ்த்துகின்றது

ரஷ்யா தாக்குதல் யுத்தத்தை நிறுத்திவிட்டு இப்பொழுத் தற்காப்பில் திணறுகின்றது

எப்படியோ இந்தியாவின் #எரிபொருள் சந்தை ஓராண்டாக ஸ்திரமாக நிற்கின்றது, இன்னும் பல ஆண்டுக்கு அப்படித்தான் இருக்கும் போலிருக்கின்றது

1980களில் ஆப்கனில் தடுமாறி பின் பெரும் பின்னடவை சந்தித்த அந்த காலங்களில் மறுபடியும் மாஸ்கோ சிக்கி கொண்டது என்பதுதான் நிஜம்

காரணம் ரஷ்ய ராணுவ வியூகபடி அது இன்னும் ஸ்டாலின் அதாவது ஜோசப் ஸ்டாலின் காலத்திலே இருக்கின்றது, அதிகமான ராணுவசேனை வெற்றிகொடுக்கும் என்பது அது

ஆனால் அமெரிக்காவும் நேட்டோவும் முழு தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டன ரஷ்யா அதை செய்யவில்லை

ரஷ்யாவின் வியூகம் 1950களில் கைகொடுத்திருக்கலாம் ஆனால் அது இனி எடுபடாது என்பதை ஆப்கனில் உணர்ந்தும் ரஷ்ய ராணுவம் இன்னும் தன்னை திருத்தவில்லை அதே தவறை உக்ரைனிலும் செய்கின்றார்கள் என்பது தெரிகின்றது

அதனை மாற்றாதவரை ரஷ்யாவுக்கு வெற்றி இல்லை

உண்மையில் ரஷ்யா மிக பலமான நாடு சந்தேகமில்லை , ஒரு வருடமாக சுமார் 30 சக்திவாய்ந்த நாடுகளை எதிர்த்து நிற்கின்றது, தன் நாட்டிலும் அரசியல் நெருக்கடி மக்கள் குழப்பம் வராத அளவு அது பலத்து நிற்கின்றது

ஆனால் இப்போரை உக்ரைன் தொடங்கியிருந்து இந்நிலை வந்திருந்தால் அது ரஷ்யாவின் வெற்றி, ஆனால் போரை தொடங்கியது ரஷ்யா எனும் வகையில் இது ரஷ்யாவின் தோல்வி, பெரும் தோல்வி என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

#பிரம்ம_ரிஷியார் @ முகநூல்

Back to top

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6