ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:55 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 7:50 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» அணையா அடுப்பு
by ayyasamy ram Today at 7:21 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by ayyasamy ram Today at 7:18 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by Powenraj on Sun Jul 14, 2013 8:42 am

மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், "வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும்,"வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வாழ்க்கை வாழலாம்.அதிகரித்து வரும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன.
-
நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம்தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, "வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சி. நடைப் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள், இதை மேற்கொள்ளும் முறை குறித்து விளக்குகிறார், மருத்துவர் ராமலிங்கம்.
-
தினமும், "வாக்கிங்' செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம்,"இன்சுலின்' சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
-
கூடுதல் ஞாபக சக்தி:
தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல்எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது.
-
"வாக்கிங்' செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில்,"அல்சீமர், "டிமென்ஷியா' போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. நடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.
-
ஆய்வில் தகவல்: எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் "டி' நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.
-
பெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை,நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், "வாக்கிங்' போகவேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையைவெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.
-
இரவில் "வாக்கிங்' போகக்கூடாது:
அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில்,"வாக்கிங்' போவதே, சிறந்த பலனை தரும். அவரவர் இருப்பிடத்தை பொறுத்து, மொட்டை மாடி, தெருக்களிலும், நடைப்பயிற்சி போவதில் தவறில்லை. உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில், உணவருந்திய பின்,"வாக்கிங்' போகக் கூடாது. மைதானம், பூங்காக்களின், இடப் பக்கம், "வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இதற்கு, ஆய்வுபூர்வமான நிரூபணங்கள் எதுவும் இல்லை. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும்,"வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வளமான வாழ்க்கை வாழலாம்.
-
டாக்டர்ராமலிங்கம்,
மருத்துவ துறை உதவி பேராசிரியர்,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
-
ஹலோ டாக்டர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by krishnaamma on Sun Jul 14, 2013 9:02 am

எதுக்கு இடது பக்கம் , வலது பக்கம் என்று சொல்வார்கள் என்றால் ரோடில் நடப்பவர்கள் எப்போதும் வலது பக்கம் நடப்பது சிறந்தது ஏன் என்றால், இடது பக்கம் நடந்தால்..... பின்னால் வண்டி  வந்தால்தெரியாது,
வலது பக்கம் நடப்பதால் எதிரில்  வரும் வண்டிகள் தெரியும் புன்னகை அவ்வளவுதான் 1
.
.
என்றாலும்..... எங்கேயோ....எப்படியோ.... டெய்லி நடந்தால் சரி புன்னகைசூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63487
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by ராஜா on Sun Jul 14, 2013 10:49 am

மகிழ்ச்சி தலைகீழா வாக்கிங் போனால் இன்னும் சிறந்தது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by யினியவன் on Sun Jul 14, 2013 11:50 am

உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by ராஜு சரவணன் on Sun Jul 14, 2013 3:07 pm

எந்தப்பக்கம் போன என்ன பாஸ் புன்னகை 

வாக்கிங் போன பத்தாத... புன்னகை

என்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by ராஜா on Sun Jul 14, 2013 3:08 pm

@ராஜு சரவணன் wrote:என்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது புன்னகை புன்னகை
சூப்பருங்க அதானே .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by யினியவன் on Sun Jul 14, 2013 3:27 pm

@ராஜு சரவணன் wrote:எந்தப்பக்கம் போன என்ன பாஸ் புன்னகை 
வாக்கிங் போன பத்தாத... புன்னகை
என்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது புன்னகை புன்னகை
அட நீங்க வேற அவன் நம்ம வீட்டு வாசலில் காத்துக் கெடப்பதால்
தானே நாமளே வாக்கிங், ரன்னிங் எல்லாம் போறோமே!!! புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by பூவன் on Sun Jul 14, 2013 3:29 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:எந்தப்பக்கம் போன என்ன பாஸ் புன்னகை 
வாக்கிங் போன பத்தாத... புன்னகை
என்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது புன்னகை புன்னகை
அட நீங்க வேற அவன் நம்ம வீட்டு வாசலில் காத்துக் கெடப்பதால்
தானே நாமளே வாக்கிங், ரன்னிங் எல்லாம் போறோமே!!! புன்னகை

அப்ப்டினா வீட்டுக்குள்ளேயே ரன்னிங்க் போங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by பூவன் on Sun Jul 14, 2013 3:31 pm

@யினியவன் wrote:உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு புன்னகை

சொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by ராஜு சரவணன் on Sun Jul 14, 2013 3:42 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு புன்னகை

சொல்வது நீங்கள்  மாட்டி விடுவது  என்னையா  
 
இன்னுமா தெரியல பூவன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by யினியவன் on Sun Jul 14, 2013 3:45 pm

@பூவன் wrote:சொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா
தர்மம் தலை காக்கும் அப்படீன்னா:

பிறருக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்தால்
அந்த தர்மம் நம் தலை காக்கும் பூவன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by பூவன் on Sun Jul 14, 2013 3:50 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:சொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா
தர்மம் தலை காக்கும் அப்படீன்னா:

பிறருக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்தால்
அந்த தர்மம் நம் தலை காக்கும் பூவன்

உங்க தலை காக்கும் ,
என் தலை போக்கும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by பூவன் on Sun Jul 14, 2013 3:51 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு புன்னகை

சொல்வது நீங்கள்  மாட்டி விடுவது  என்னையா  
 
இன்னுமா தெரியல பூவன் புன்னகை

அதான் ஊருக்கே தெரியுமே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by யினியவன் on Sun Jul 14, 2013 3:53 pm

@ராஜு சரவணன் wrote:இன்னுமா தெரியல பூவன் புன்னகை
அவருக்கு எப்படி தெரியும் டெக்லஸ் கண்ணுக்கு ரெண்டு பொண்ணுக தான நெரஞ்சு இருக்காங்களாம் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by பூவன் on Sun Jul 14, 2013 4:06 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:இன்னுமா தெரியல பூவன் புன்னகை
அவருக்கு எப்படி தெரியும் டெக்லஸ் கண்ணுக்கு ரெண்டு பொண்ணுக தான நெரஞ்சு இருக்காங்களாம் புன்னகை

நெரஞ்ச மனசு அவருக்கு புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா... Empty Re: எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum