ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Yesterday at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் !

Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் ! Empty மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் !

Post by krishnaamma on Fri Aug 02, 2013 8:09 pm

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் ! Images?q=tbn:ANd9GcTizQ0yMFoFqnfBF5v2N2b9wOT6Ved3UfrMfZau0pj6GiclmYiT

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்தகைய மழைக்காலத்தை விரும்புவதற்கு பெரும் காரணம், மிதமான வெப்பநிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்கத்திற்கே எடுத்துச் செல்லும்.

நம்மை பொருத்தவரை மழைக்காலம் என்றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட்டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்றும் இருக்கத் தானே செய்யும்.

என்ன புரியவில்லையா? வீட்டை விட்டு மழையில் வெளியே செல்லும் போது, வீட்டிலிருந்து ரசித்த மழைத்துளிகள் நம்மீது படும்போது, நோய்கள் வராதா? ஆம், மழையை நாம் எவ்வளவுக்கு அதிகம் ரசிக்கின்றோமோ, அந்த அளவு அதில் ஆபத்தும் உள்ளது. அதிலும் இந்த காலத்தில் பொதுவாக பல நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.

அதிலும் சில நோய்களை விரைவில் குணப்படுத்தலாம் மற்றும் சில நோய்கள் உயிருக்கே ஆபத்தாகக் கூட கொண்டு செல்லும். ஆகவே மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அந்த நோய்களைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிக்கக்கூட முடியும். சரி, அந்த நோய்களைப் பார்ப்போமா!!!

* மலேரியா: பருவக்காலத்தில் வரும் நோய்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது மலேரியா தான். மலேரியா என்னும் நோயானது பெண் அனாஃபிலிஸ் கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

எனவே மலேரியாவின் இடர்பாட்டை தடுக்க, வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும். காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் தான் மலேரியாவின் அறிகுறிகளாகும்.

* வயிற்றுப் போக்கு: மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்று போக்கும் ஒன்று. சுத்தமில்லாத உணவை உண்பதாலும், தண்ணீரை பருகுவதாலும் ஏற்படும். பொதுவாக வயிற்றுப் போக்கில் இரண்டு வகைகள் உண்டு.

அவை கடுமையான வயிற்றுப் போக்கு (அக்யூட்டையரியா) மற்றும் தீவிரமான வயிற்றுப் போக்கு (குரோனிக் டையரியா). இவை இரண்டையுமே வரும் முன் தடுத்து நிறுத்தலாம். அப்படியே வந்தாலும் கூட உரிய சிகிச்சை கொண்டும் குணமாக்கலாம்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது சுத்தத்தைக் கடைப்பிடிப்பது தான். அதில் உண்ணும் முன் கையை கழுவுவது, எப்போதும் வெந்நீரைக் குடிப்பது போன்றவை அடங்கும்.


தொடரும் ......


Last edited by krishnaamma on Fri Aug 02, 2013 8:11 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63486
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் ! Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் !

Post by krishnaamma on Fri Aug 02, 2013 8:10 pm

* டெங்கு காய்ச்சல்: மழைக்காலத்தில் கொசுக்களால் ஏற்படுவது. இந்த காய்ச்சல் வந்தால், காய்ச்சலுடன் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள் தான்.

இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் நல்ல உடையை அணிந்து, முழுமையாக உடலை மூடிக் கொள்ள வேண்டும்.

* சிக்கன்குனியா: ஏய்டெஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது தான் சிக்கன்குனியா. இந்த கொசுக்களானது தேங்கிய நீரில் தான் அதிகம் இனப்பெருக்கமாகும். மேலும் இது பகல் நேரத்தில் தான் கடிக்கும்.

திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து வரும் மூட்டு வலி தான் இதற்கான முக்கிய அறிகுறி. இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சீரான முறையில் சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

* டைபாய்டு: டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வரும் நோயாகும். இது அதிகமாக பரவுவது மழைக்காலத்தில் தான். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால், இந்த நோய் நம்முள் வந்து விடும். மேலும் இந்த நோய் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலை உருவாக்குவதாலும் பரவும்.

இந்த நோய்க்கான அறிகுறிகளாவன காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டை புண் ஆகியவைகள் தான். டைபாய்டு வராமல் தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தெருவோரம் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது மற்றும் சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.

* வைரஸ் காய்ச்சல்: பொதுவாக வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் வருவதுண்டு. மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இந்த காய்ச்சல் 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும்.

* காலரா: பருவக்காலத்தில் வரும் ஆபத்தான வியாதி தான் காலரா. இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் வரும். மேலும் சுத்தமில்லாமல் இருப்பதாலும் உண்டாகும். இந்த காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப் போக்குடன் பேதியும் சேர்ந்து இருக்கும்.

ஆகவே சுத்தமான தண்ணீரை குடிப்பதாலும், சுத்தமான சுற்றுசூழலில் இருப்பதாலும் காலராவை தடுக்கலாம்.

* லெப்டோஸ் பிரோசிஸ்: லெப்டோஸ் பிரோசிஸை வீல்'ஸ் சிண்ட்ரோம் என்றும் அழைக்கலாம். இந்த நோய் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதாலும், குடிப்பதாலும் வருவதுண்டு.

தலை வலி, தசை வலி, காய்ச்சல், நடுக்கம் மற்றும் சுழற்சிகள் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகள். இந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், வெளியில் செல்லும் போது பாதங்களை நன்றாக மூடிக்கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக உடலில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

* மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி ஆகிவைகள் தான் இதன் அறிகுறிகள்.
[இதற்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து, தெருவில் விற்கும் உணவை சாப்பிடாமல் இருந்தால், மஞ்சள் காமாலையில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வயிற்றில் ஏற்படும் தொற்று இந்த காலத்தில் இரைப்பை குடல் சுழற்சி போன்ற தொற்றுக்கள், வயிற்றில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இது வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும். இதனை தடுக்க தெருவோரம் விற்கும் உணவுகளை தவிர்த்து, கொதிக்க வைத்த தண்ணீரையும், அதிக அளவில் சத்தான பானங்களையும் குடிக்க வேண்டும்.

நன்றி : மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63486
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் ! Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் !

Post by Muthumohamed on Fri Aug 02, 2013 10:22 pm

சிறந்த பதிவு பதிவுக்கு நன்றி அம்மா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் ! Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum