புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
83 Posts - 55%
heezulia
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_m10நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 10:29 am

அலுவல், நண்பர்கள் என பல காரணங்களை அடுக்கி, தான் கோவா சென்றே ஆகவேண்டும் என சாந்தியிடம் அரை மணி நேரமாக சொல்லிக்கொண்டே இருந்தான் கமலக்கண்ணன்.

சாந்திக்கு தெளிவாக தெரிந்தது. புளுகுமூட்டையை வாந்தி எடுக்கிறான் என. முடிவு எடுத்து விட்டான். ஆமாம் பூசாரி போட்டு தான் ஆகவேண்டும். மறுத்து பேசினால் பெரிய சண்டை ஆகும். வீடு சுத்தத்திலிருந்து ஆரம்பித்து, சமையல், குழந்தை வளர்ப்பு, அவன் ஏற்கனவே சொல்லிய வேலைகள் என மேலும் மேலும் யோசித்து சண்டை வளர்ப்பான். கடைசியில் தான் அழுது கொண்டே மூலையில் அமர்ந்திருக்க சில ஆயிரம் ரூபாய்களை முட்டிக்கால் மீது விட்டெறிந்து விட்டு விர்ரென கோவா கிளம்பி போய்விடுவான். மெலிதாக நிமிர்ந்து பார்த்தாள்.சரிங்க என்ன பண்றது.... போய்ட்டு தான் வாங்க என்றாள். குழந்தை மடியில் உச்சா போய்கொண்டு இருந்தான்.

பின் மதிய நேரத்தில் மட்காவோனில் துப்பியது விமானம். ரெஸார்ட்டிற்கு பின்புறம் பீச்சில் குடை நட்டிருந்தார்கள். ரெஸார்ட் பீச்சில் இருந்து 300 அடி உயரத்தில் இருந்தது. ரஷ்யன் ஒருவன் கடலில் சர்ப்பிங் செய்தபடி இருந்தான். ஒரு ரஷ்யன் உதட்டோடு உதடு பொருத்தி ரொம்ப நேரம் முத்தமிட்டபடியே இருந்தான். மார்பளவு ஆழமுள்ள கடலில் சிறிது நேரம் பீச்சில் கழித்து விட்டு மாலை ரெஸ்டாரண்ட் சென்றனர்.

மேங்கோ ட்ரீ ரெஸ்டாரண்ட் மாமரத்திற்கு கீழே பல டேபிள்கள், உள்ளேயும் டேபிள்கள், 80 சதவீதம் வெளிநாட்டுக்காரர்கள் நிரம்பி வழிந்தது. வெளியே சில ரஷ்யர்கள் கஞ்சாவோ வேறு ஏதோ புகைத்து கொண்டு இருந்தனர். ஒருவன் கிடார் இசைத்து கொண்டிருந்தான். அவனருகே இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டியபடி இருந்தார்கள். சிலர் செஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு இந்தியன் கர்ம சிரத்தையாக பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருந்தான்.

2 ரஷ்யபெண்கள் தனியாக ஒரு வாடகை பைக்கில் வந்து ரெஸ்டாரண்ட் முன்புறம் ஏற்கனவே இருந்த வரிசையில் பார்க் செய்தனர். கமலக்கண்ணன் குழுவுக்கு ஜிவ்வென இருந்தது. ஒருத்தி மெலிதாக மேல்தட்டு தேவதை போல சின்ன உதட்டுடன் இருந்தான். இன்னொருத்தி கொஞ்சம் கட்டையாக இருந்தாள். ஆனாலும் முகம் மற்றும் முன்னழகில் அனைவரையும் வென்றெடுத்தாள்.

பெண்கள் இரண்டு ரவுண்ட் போனார்கள். கமலக்கண்ணன் குழுவினர் 4...5 என ரவுண்டை ஏற்றிக்கொண்டே சென்றனர். மெலிந்த தேவதையை எப்படியாவது இன்று இரவுக்கு தனதாக்கி கொள்ள வேண்டும் என கமலக்கண்ணன் குழுவில் மெஜாரிட்டி நண்பர்கள் நினைத்தனர். எனில் முன்னழகு முத்தம்மாவை எத்தனை பேர் தனதாக்கி கொள்ளவேண்டும் என நினைத்தனர் என சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒழுங்காக சொன்னவர்களுக்கு ஒரு ரவுண்ட் டக்கீலா, வாயை பிளந்து கொண்டு கவனமாக கதையை படிக்காதவர்களுக்கு 80 வயது ரஷ்ய கிழவியோடு டேட்டிங்.

கடும்போதையில் மூளை உருவாக்கித்தள்ளும் வார்த்தைகளை மறந்து விடுவதற்குள் வெளித்தள்ளும் அவஸ்தையில் அனைவரும் கமலக்கண்ணன் எல்லோரையும் கஷ்டப்பட்டுஅடக்கிஒரு பிளான் சொல்றேன் கேளுங்க. அவங்க பைக் நிக்கிற இடத்தை பாருங்க. ஒரு பெரிய என்ஃபீல்டு புல்லட் மறைச்சாப்ல நிக்கிது. அவங்களால அதை எடுக்க முடியாது. நாம போய் ஹெல்ப் பண்றாப்ல பேசலாம். ஆனா யாராவது ஒருத்தர் தான் பேசணும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இரண்டு பெண்களும் பைக்கை நோக்கி நடந்தனர். கமலக்கண்ணன் அவர்களின் பின்னாலேயே நடக்க, மற்ற மூவரும் பின் தொடர்ந்தனர்.

கமலக்கண்ணன் பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே நடுவில் புகுந்து சொதப்பினான் ஒரு நண்பன். அதற்கு பின் நண்பர்களுக்குள் நடந்த சண்டை காலையில் பெரிதாக யாருக்கும் நினைவில்லாததால் பெரிய பிரச்னை எதுவும் ஆகவில்லை. பில் செட்டில் செய்து விட்டு சிகரெட் அடித்துகொண்டே நடந்து வந்ததும், ரெஸார்ட்டில் தொண்டை எரிய எரிய சிகரெட் குடித்துக்கொண்டே இருந்ததும் மட்டும் நினைவிருந்தது.

மறுநாள் மதியம் வரை டீ, டிபன் மற்றும் ஹெவியான லன்ச்சை ரெஸார்ட்டிலேயே முடித்து விட்டு மயங்கி கிடந்தனர். ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பாரில் பில் செட்டில் செய்து விட்டு கர்லீஸ் பீச் பார்ட்டிக்கு சென்றான்.

பாடல் வரிகள் இல்லாத இசை அதிர்ந்தது. இரண்டு பெண்களும் லேசாக இடுப்பை அசைத்தபடி நடனமாட தொடங்கினர். கமலக்கண்ணனும் அவர்கள் அருகில் ஆடத்தொடங்கினான். இவனைப்போல கிட்டத்தட்ட 8 பேர் அந்த பெண்களை சூழ்ந்து கொண்டு ஆனால் சூழாதது போல ஆட ஆரம்பித்தனர். முதலில் அந்த பெண்களின் உடைகளின் மீது உரச ஆரம்பித்தான். கமலக்கண்ணன். மற்றவர்களும் அதே செய்தனர். கொஞ்சம் தைரியம் பெற்று அந்த பெண்களின் கை, இடை பின்புறம் என உரச ஆரம்பித்தனர். அந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர். கமலக்கண்ணன் சோர்வாக ஓரிடத்தில் வந்து அமர்ந்து ஒரு பியர் அடிக்க ஆரம்பித்தான்.

மறுநாள், மற்ற மூன்று நண்பர்களும், ஆள் செட்டாச்சி மச்சி, கடைசி நேரத்துல என்னாச்சின்னா என எதையோ புளுகினர். இன்னும் 2 நாள் தான் மச்சி இருக்கு. அதுக்குள்ள பிகர் செட்டாகுமா? என்ன மச்சி செய்யறது என பதறிபோய் முகம் வெளிறி கேட்டுக்கொண்டு இருந்தனர் ஒருவரை ஒருவர்.
நண்பர்கள் அனைவரும் பகலிலேயே வகதூர் பீச்சுக்கு சென்றனர்.

பீச் முழுவதும் குடை நட்டு படுக்கை போட்டு மல்லாக்கவும் குப்புற அடித்தும் படுத்தினர். வெளிநாட்டினர் சணிசமான அளவில் வட இந்தியர்களும் வட இந்திய பெண்ணுக்கும் வெளிநாட்டு பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் காணமுடியவில்லை. பீச் ஓரத்தில் இருந்த ரெஸ்டாரண்டுகளில் இருந்து துள்ளலான இசை கலவையாக ஒலித்துகொண்டே இருந்தது. மீன் வறுபடும் வாசனை தொடர்ந்து மூக்கின் வழியாக வயிறோடு பேசிக்கொண்டே இருந்தது. இந்திய டீன் ஏஜ் பெண்கள் குரூப் எல்லாவற்றையும் அடக்க முடிந்த குறுஞ்சிரிப்போடு சூரிதார் பேண்டை லேசாக தூக்கியவாறு கடந்து சென்றனர். கமலக்கண்ணன் சில குழு பெண்களிடம் பேச முயன்று தோற்று பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை காலி செய்தனர்.

அசந்துபோய் டீ ஹோட்டல் டீ ஆர்டர் செய்தனர். மாலை சன்பேர்ன் பார்ட்டி செல்வதாக ப்ளான். நுழைவு மட்டும் 5500 ரூபாய் இந்தியாவிலேயே நம்பர் ஒன் பார்ட்டி.
7 மணிக்கு உள்ளே நுழைந்தனர். பல ஏக்கரை பீச்சில் வளைத்து பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். மொத்தம் 4 அரங்குகள். ஒரு லட்சம் பேர் கூடலாம்.

வேறொரு இடத்தில் பெரிய டான்ஸ் புளோர், மிகப்பெரிய பேடை, மேடையில் டீஜே. அவ்வளவு பெரிய மேடையில் சவுண்ட் சிஸ்டத்தை தவிர டீஜே மட்டுமே. ஒரு பியர் கேன். கீழே ஆயிரக்கணக்கில் மக்கள். இசைத்த இசைக்கு அன்று கண்டிப்பாக கடலில் உள்ள மீன்கள் கூட நடனமாடி இருக்கும். கூட்டம் பித்துப்பிடித்தபடி ஆடிக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் செட்டிலாக ஒரு இடம் தேடினான் கமலக்கண்ணன். இரண்டு பெண்கள் கூட்டத்திலிருந்து வெளியே வந்து கொண்டு இருந்தனர். கமலக்கண்ணன் லேசாக ஆடியபடி இருந்தான். அதில் ஒர பெண் கமலக்கண்ணனை நோக்கி ஒரு விரலைக் குவித்தபடி ஆடியபடியே அருகில் வந்தாள். கமலக்கண்ணன் சிரித்தான்.

ஹாய் ப்ளீஸ் டான்ஸ் வித் மீ என்றான். அவள் தயங்கி நிற்க, சடாரென அடவள் கையை பற்றி ப்ளீஸ் என்றான். மன்றாடுவதைப்போல ப்ளீஸ் டான்ஸ் வித் மீ என கூறியவாறே ஆட ஆரம்பித்தான். அவளும் லேசாக சீராக அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே ஆட ஆரம்பித்தாள். அவளை சற்றே நெருக்கமாக இழுத்தான். தேங்க்ஸ். என்றால். யூ மேட் திஸ் நியூ இயர். ஆம் தி ஹேப்பியஸ்ட் பெர்சன் திஸ் நியூ இயர் என்றான். தப்பு செய்து கொண்டு இருக்கிறோம் எனஅவனுக்கு உறைத்து கொண்டு இருக்கையிலேயே என்ன செய்வது எனத் தெரியாமல் அவளை முத்தமிட்டான். அது எசகு பிசகாக மூக்கில் பட்டது.

அவள் இவனை விலக்கியவாறே காதில் ஏதோ சிரித்தபடியே கூறியவாறு இயல்பாக மின்னி மறைந்து விட்டாள்.
துக்கம் தொண்டையை அடைத்தது. தண்ணி அடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காக ஹேண்டில் செய்திருக்கலாம் எனத்தோன்றியது. தண்ணி அடிக்காமல் இருந்திருப்பின் இதைக் கூட செய்திருக்க மாட்டோம் எனவும் தோன்றியது. பார்ட்டியை விட்டு வெளியேறினான்.

ரோடு இருட்டாக இருந்தது. போக்குவரத்து இருந்து கொண்டே இருந்தது. கூச்சல்களோடு கார்கள் கடந்து சென்ற வண்ணம் இருந்தன. பைக்கை எடுத்துக்கொண்டு வகதூர் வந்தான். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் திறந்திருந்தது. ஒரு பியர் வாங்கி எரிச்சலோடு குடித்தான். ரெஸார்ட்டுக்கு வந்தான். நண்பர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. போதை கடும் உச்சத்தில் இருந்தது. மடக்மடக்கென தண்ணீர் குடித்தான். சிகரெட் பற்ற வைத்தான். இழுக்கவே பிடிக்கவில்லை. தூக்கி எறிந்தான். கட்டிலில் அப்படியே சரிந்தான்.

மனைவி நினைப்பு வந்தது. காதல் பொங்கியது. பாவம் தூங்கியிருப்பாள். ஆழ்ந்த நித்திரையில் இருப்பாள் என நினைத்து கொண்டே அரைத் தூக்கத்தில் மனைவியின் மொபைலுக்கு ஐ லவ் யூ செல்லம் என டைப் செய்து சென்ட் செய்து விட்டு அடுத்த செகண்ட் பிளாட் ஆனான்.

ஐ டூ லவ் யூ என்ற ரிப்பை உடனே ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வந்த ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. இந்தக் கதை இங்கேயே முடிந்து விட்டது. இன்னொரு கதையின் ஆரம்ப வரிகள் மட்டும் கீழே.

ஏய் இப்ப உடனே ரிப்ளை பண்ணி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு மாட்டிக்கணுமா? நீ நல்லா தூங்கிட்டு இருப்பேன்னுதானே அவன் நினைச்சிட்டு இருப்பான் என அதிரும் டிரம்ஸ் சத்தத்திற்கு இடையே ஆடிக்கொண்டே சாந்தியின் தலைமுடியை விலக்கி காதருகே அவன் கிசுகிசுத்தான்.
உடம்பு லேசாக ஒரு முறை உதற கஷ்டப்பட்டு திரும்பி படுத்தான் கமலக்கண்ணன்.

நன்றி - kumudham- அராத்து




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 11:07 am

உலகம் ரொம்ப கெட்டுப்போச்சுடா சோகம் வேற என்ன சொல்லறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Aug 05, 2013 3:07 pm

என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  ஊத்திக்கிச்சு

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 5:04 pm

கடவுளே என்ன கொடுமை சார் இது 

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 05, 2013 5:09 pm

ஏன் அக்கா இந்த கதை எல்லாம் போட்டு என்னை (இந்த சிறுவனை) கெடுக்குரிங்க ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 6:40 pm

புரட்சி wrote:ஏன் அக்கா இந்த கதை எல்லாம் போட்டு என்னை (இந்த சிறுவனை) கெடுக்குரிங்க ..

"களவும் கற்று மற " ....................

இது கலி.......எனவே " முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" ..............

" நீ மற்றவருக்கு எதை தருகிறாயோ அது வே உனக்கு கிடைக்கும்" ......இந்த

வாக்கியங்களின் விளக்கமே அந்த கதை மதன் புன்னகை ஓகே வா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக