ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 21, 2020 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:24 am

Admins Online

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை!

Go down

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Empty தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை!

Post by சாமி on Mon Aug 26, 2013 7:13 pm

"தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை' என்ற பெயரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலரில் (21.8.1961) இடம்பெற்ற "தணிகைமணி' வ.சு.செங்கல்வராய பிள்ளையின் (15.8.1883-25.8.1972) கட்டுரைச் சுருக்கம் இது.

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை
ஏழாம் நூற்றாண்டில் - செந்தமிழ் நாட்டில் மக்களின் நிலை, நாகரிகம், பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பது அக்காலத்துத் திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரத்தினின்றும் ஒருவாறு புலப்படும். அதனை ஈண்டு விளக்குவாம்.

மக்கள்
உயர் ஞானத்தார், எழுமையும் விழுமியர், கேடில் எண்ணத்தர், சீலம்மிகு சித்தத்தவர், தலைப்படுந் தவத்தார், தவமலிபத்தர், துலை எடுத்த சொற்பயில்வார், நடுவுணர் பெருமையர், நித்த நியமங்கள் விதிப்படி நின்றவர், நிலைகொண்ட மனத்தவர், புலன்களை வென்றவர், மனந் தளராத் தகுதியர், வாய்மை வழுவாதவர், வெஞ்சினம் ஒழிந்தவர் ஆகிய பலரிருந்தனர்.

கலைவல்ல புலவர்கள், கற்றல் கேட்டல் உடையார், தமிழ்க்கலை தெரிந்த செஞ்சொலாளர்கள், நாவலர்கள், பாவலர்கள் பலரிருந்தனர். இரப்போர்க்குக் கரப்பு இலாமலும் - இல்லை என்று சொல்லாமலும் ஈந்து மகிழ்ந்த பெரியோர்களும், வரையின்றி அளித்த செல்வர்களும், அறங்களைப் பயிற்றி வந்த அறிஞர்களும், மழையின்றிப் பஞ்சம் புகுந்த காலத்தும் வண்மை குன்றாத வள்ளல்களும், எக்காரணத்தாலும் புலவர்மாட்டு வெய்யமொழி கூறாத பெருங்குணத்தவர்களும் அக்காலத்து வாழ்ந்துவந்தனர். கூகையன்ன மாக்களும் பொய்மிகுந்த வாயரும் இருந்தனர்.

மாதர்கள்
காலையில் இசைபாடி எழுவார்கள். சோலையில் உள்ள சுனைக்கோ, பொய்கைக்கோ, யாற்றுக்கோ, கடலுக்கோ சென்று குடைவார்கள். பொய்கையிற் குதித்து விளையாடுவார்கள். கொடி முல்லை, மல்லிகை, சண்பகம் ஆகிய பூக்களைக் கொய்வார்கள். மாளிகை மேலிருந்து அச்சமின்றிப் பாடல் ஒலியை எழுப்புவர். ஊ(ஞ்)சல் ஏறி இனிதாக இசை பாடுவர். கிளிக்கும் பூவைக்கும் சொல் பயிற்றுவர்; அம்மானை, கழல், பந்து ஆடுவர். கோயிலுக்கு மலர், புனல், தூபம், சாந்தம் இவை கொண்டு கன்னியர் செல்வர்; சிவவேடத்தைப் பரவுவார்; அண்ணல் புகழ் பாடுவார்.

அடியார்கள்
இறைவன் பேச்சையே பேசி இன்புறுவர். வேறு பேச்சுக்களுக்குத் தமது செவிகொடார். அடியார்கள் வட்டம் வட்டமாகச் சூழ்ந்து நின்று இறைவன் திருவடியைப் பரவுவார்கள். அடியார்களுக்கு அன்னம் அளித்தல் உயர்ந்த அறச்செயலாகக் கொள்ளப்பட்டிருந்தது.

அரசர்கள்
இவர்களுக்குக் கழல், குடை, முடி, யானை, சிவிகை, அந்தளம் (கவசம்), ஈச்சோப்பி (ஈயோட்டி), வட்டில் (பொற்) கிண்ணம் முதலியன உண்டு. இவர்கள் பட்டணப் பிரவேசம் செய்யும்பொழுது மணியொலி, சங்கொலி, முரசொலி ஒலிக்கும்.

கோயிலும் - வழிபாடும்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை என்னும் பக்கவாத்தியங்களுடன் அடியார்கள் இன்னிசை பாடியும், நடனம் செய்தும் தொழுவார்கள். பல தொண்டர் ஒன்றுகூடித் திருநீறு பூசி அதிகாலையிற் பஜனை செய்வார்கள். தமிழிலும் வடமொழியிலும் வேற்றுத் திசைமொழியிலும் நரம்புக் கருவிகள் கொண்டு இசைகூட்டி வாசித்துத் தொழுவார்கள்.

தமிழ்
தமிழ்க்கலை தெரிந்த பெரியோர் இருந்தனர். தமிழின் தொன்மை, பெருமைகளைப் பேசிப் பாடல்கள் பாடுவார்கள். மாதர்களும் தமிழில் ஊறு பொருளைத் தேர்ந்து உணர்ந்திருந்தனர். தமிழ்மொழி - இசை மலிந்தது; இனிமை கொண்டது. கீதத்துக்கு ஏற்றது, பல ஓசைக்கும் இடம் தருவது, பெருகுந் தன்மையது, முடிவிலாதது - எனப் பாராட்டப்பட்டுள்ளது.

இசை, நடனம்
இன்னிசையாற் பாட வல்லவரும், கீதத்தை மிகப்பாடும் அடியார்களும், நடத்தொடு இசைபாடும் அடியார்களும், வேற்றுத் திசை இசைகளைக் கேட்டுத் தேர்ந்து ஆயும் பெரியோர்களும், இசை பாடும்பொழுது விம்மியழும் பெரியோர்களும் இருந்தார்கள். யாழ், வீணை, குழல், மொந்தை, முழவு இவை கீதம் பொலிதலுக்கு முக்கியமாய் விளங்கின. இசைபாடும் அடியார்கள் கூட்டம் கூட்டமாய்க் கூடித் துதிப்பர்; பாடுவர்; ஆடுவர்.

திருவிழாக்கள்
விழாக்களில் நெடுவெண்கொடிகள் நெருங்கிப் பொலிய - முழவு, குழல், மொந்தை, கொக்கரை, சங்கம், படகம், பறை - இவைகள் கடலொலி அயரப் பேரொலி எழுப்பும். சிவனடியார்களுக்கு அன்னம் இடப்படும். அரங்க மேடைகளில் மாதர்களும் மைந்தர்களும் ஏறி இறைவன் புகழைப் பாடித் துடிப்பார்கள். வேத ஒலி முழங்கும்.

வழக்கங்கள் - பழக்கங்கள்
மேழி கொண்டு உழுவார்கள்; கடைசியர்,
வயலில் வேலை செய்பவர் - கழனியில் பாடுவர்; விளையாடுவர்.
ஊர்களில் அந்தணர் வேள்வி, மறை ஒலி,
செந்தமிழ் கீதம் - இவை சிறப்புடன் வளர்ச்சி பெற்றிருந்தன.
இறைவனுறையும் திருமலையை வலமாக வணங்கும் வழக்கம் இருந்தது.
விரதம் அநுட்டிப்போர் நிலத்தில் உண்ணுதல் சொல்லப்பட்டுள்ளது.
புலவர்களிடத்தில் மிக மதிப்பு இருந்தது.
வழிபாடு, வந்தனை செய்யும் காலம் தவிர மற்ற நேரங்களில் மறைபேசியும், சந்திப்போதில் நிஷ்டையிலிருந்தும் பெரியோர்கள் காலம் கழித்தனர்.

நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Empty Re: தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை!

Post by டார்வின் on Mon Aug 26, 2013 8:33 pm

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! 3838410834 தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! 3838410834 தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! 103459460 
டார்வின்
டார்வின்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 857
இணைந்தது : 03/02/2009
மதிப்பீடுகள் : 304

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum