ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

Admins Online

புகைப் பழக்கம் (Smoking)

Go down

புகைப் பழக்கம் (Smoking) Empty புகைப் பழக்கம் (Smoking)

Post by தாமு on Tue Oct 27, 2009 6:34 am

புகைப் பழக்கம் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்கள் தொடர்வதற்கு புகையிலையில் உள்ள நிகோட்டின் தான் காரணம். இது உபயோகிப்பவர்களுக்கு ஒரு வித மயக்கத்தை அளித்து பழக்கத்தை தொடரத் தூண்டுகிறது.

நிக்கோட்டின் என்றால் என்ன?

இது இயற்கையாக கிடைக்கக்கூடிய திரவ அல்கலாய்ட். அல்கலாய்ட்கள் பொதுவாக உடலையும் மூளையையும் தூண்டி விடக்கூடியவை. நாம் பரவலாக உபயோகிக்கும் மற்றொரு அல்கலாய்ட் காப்பியில் உள்ள 'காஃபெய்ன்' (Caffeine).

புகையிலை பழங்காலத்திலிருந்தே அமெரிக்காவில் பழங்குடியினரால் உபயோகிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்து ஐரோப்பாவிற்கு பெருமளவு புகையிலையை ஏற்றுமதி செய்த ப்ரெஞ்சுக்காரரான 'ஜீன் நிகோட்' என்பவரது பெயரைக் கொண்டு இது 'Nicotiana Tobaccum' என்ற தாவரவியல் பெயரைப் பெற்றது. இதில் உள்ள முக்கியமான ரசாயனப் பொருளுக்கும் நிகோட்டின் என்ற பெயரே நிலைத்து விட்டது.

புகைப்பிடிப்பதால் வரும் கேன்சர், மூச்சடைப்பு போன்றவற்றிற்கு புகையிலையில் உள்ள மற்ற ரசாயனங்களே காரணம். ஆனால் நிகோட்டின் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. இது தனியாக தயாரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லியாக விற்கப்படுகிறது. வெறும் 60மில்லிகிராம் நிகோட்டின் ஒரு மனிதனைக் கொல்லக் கூடியது. வருடாவருடம் சிகரட் துண்டுகளை மென்ற குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு அட்மிட் ஆவது அதிகரித்து வருகிறது
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப் பழக்கம் (Smoking) Empty Re: புகைப் பழக்கம் (Smoking)

Post by தாமு on Tue Oct 27, 2009 6:36 am

புகைப்பிடித்தால் நுரையீரலில் என்ன நடக்கறது? (Smoking Effects)


Lungs புகைப்பவர்களுக்கு ஒரு சிகரெட்டிலிருந்து சராசரியாக 1மில்லிகிராம் அளவு நிகோட்டின் நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்கிறது.


நுரையீரல் உள்சுவர்களில் கோடிக்கணக்கான 'ஆல்வியோலி' Alveoli என்ற நுண்ணிய காற்றுப் பைகள் உள்ளன. இதன் மூலமாகவே உடலுக்குள் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. (இந்த ஆல்வியோலியின் சுவர்ப் பகுதியின் பரப்பளவு நமது மொத்தத் தோல் பகுதியை விட 90 மடங்கு அதிகம்). இதன் வழியாக ரத்தக்குழாய்களை எட்டும் நிக்கோட்டின் உடனடியாக மூளையை நோக்கி பயனிக்கிறது.


ஆல்வியோலி பைகளுக்குள் நிகோட்டின் நுழைந்ததுமே நுரையீரல் வேகமாக செயல்பட்டு சுமார் 80 சதவிகித நிகோட்டினை 'கோட்டிநைன்' (Cotinine) மற்றும் 'நிகோட்டின் ஆக்சைட்' (Nicotine Oxide) என பிரித்து உடலுக்குள் அனுப்புகிறது. (இதில் கோட்டிநைன் நேரடியாக சிறுநீரில் வெளியேறி விடும். நிகோட்டின் ஆக்சைட் பின்னர் இரத்ததிலிருந்து சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேறும்.).


தொடர்ந்து புகைப்பவர்களுக்கு, ஆல்வியோலி பகுதி அதிக வேலைப்பளுவுடன் இருப்பதால் இவை செயல்திறன் குறைந்தும், சில பகுதிகளில் அழிந்தும் போவதுண்டு. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுரையீரலில் புண்கள் உண்டாகி 'கேன்சர்' வரக் கூடும். போதிய அளவு காற்று கிடைக்காததால் இதயமும் பாதிக்கப்படலாம்.


புகையிலையில் நிகோட்டினைத் தவிர ஆயிரக்கணக்கான மற்றப் பொருள்களும் உண்டு. இதில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் புகை, தூசி போன்றவை நுரையீரலுக்கு வரும் குழாய்களில் (ப்ரோன்கஸ்) வந்துவிட்டால் ம்யூகஸ் எனும் திரவம் இதன் சுவர்களில் சுரந்து அவைகளை ஒட்டிக் கொள்ளச் செய்யும். இதுவே சளியாக வெளியேறுகிறது.

அதிக அளவு புகை இந்தக் குழாய்களில் செல்லும் போது தொடர் இருமல் ஏற்படுகிறது.

இது தவிர நிகோட்டின், தான் பயணம் செய்யும் ரத்தக்குழாய்களை சுருங்க செய்வதும் உண்டு. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் கூடும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப் பழக்கம் (Smoking) Empty Re: புகைப் பழக்கம் (Smoking)

Post by தாமு on Tue Oct 27, 2009 6:37 am

தொடர்ந்து புகைக்க ஆசை வருவதேன்? (Smoking Addiction )


இது நிகோட்டினின் வேலை தான். நிகோட்டின் முதலில் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி விட்டு உடலுக்குள் வேகமூட்டுகிறது.


பின்னர் தொடர்ந்த உபயோகத்தால் செயல்திறன் இழந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது (மதுவைப் போல).


இங்கு மூளையின் ஒரு நரம்புப் பகுதியைப் பற்றி கூற வேண்டும். உதாரணமாக பசி உணர்வு நம் உடல் தேவையை நமக்கு தெரிவிக்கிறது. பசிக்கும் போது உணவு உண்டு முடித்தால் ஒரு நிறைவு உணர்வு உண்டாகிறது. இந்த நிறைவு உணர்வு ஒரு சுகமான, இதமான உணர்வாக இருப்பதால் தேவையில்லா விட்டாலும் (பசி தீர்ந்த பின்னும்) தொடர்ந்து சாப்பிடும் விருப்பம் ஏற்படுகிறது.


மூளையில் இந்த சுகமான உணர்வை ஏற்படுத்தும் பகுதிக்கு செல்லும் 'டொபாமைன்' (Dophamine) எனும் நியூரான்களை நிகோட்டின் அதிக அளவில் செயல்படுத்த வைக்கிறது. இதனால் 'கோகெய்ன்' மற்றும் 'நிகோட்டின்' உபயோகிப்பவர்களுக்கு அது உடலுக்கு தீங்கானது என்று தெரிந்தாலும் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஆக்கம்: viggie -- நன்றி புகைப் பழக்கம் (Smoking) 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப் பழக்கம் (Smoking) Empty Re: புகைப் பழக்கம் (Smoking)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum