ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

Admins Online

ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax ) -- நோய்

Go down

ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Empty ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax ) -- நோய்

Post by தாமு on Tue Oct 27, 2009 6:47 am

ஆந்த்ராக்ஸ் மிகப் பழங்காலத்திலேயே அறியப்பட்ட நோய்களில் ஒன்று. ஒரு காலத்தில் 'பிளேக்' போன்று பேரழிவை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.
பாக்டீரியாக்களால் உண்டாகும் நோய்களில் ஆந்த்ராக்ஸ் உண்டாகும் பாக்டீரியா தான் முதன் முதலில் பிரித்து கண்டரியப்பட்டது.

1850ம் ஆண்டு ஆந்த்ராக்ஸால் பாதிக்கப்பட்ட ஆட்டின் இரத்தத்தை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராயும் போது 'சி.ஜெ. டவைன்' (C.J. Davaine) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி உருட்டுக் கம்பி வடிவிலான இந்த பாக்டீரியாக்களைக் கண்டு பிடித்தார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் லூயிஸ் பாஸ்டர் இந்தக் கிருமிகளால் தான் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது என்பதை நிரூபித்ததோடு 1881ம் ஆண்டில் இந்த நோய்க்காக விலங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசியையும் உருவாக்கினார். இதற்கு சில வருடங்கள் முன்பாக 187ல் ராபர்ட் கோச் எனும் ஜெர்மானிய விஞ்ஞானியும் எலிகளுக்கு இந்தக் கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார்.

1979ம் ஆண்டு ரஷ்யாவில் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் (தற்போதைய யெகாடெரின்பர்க் Yekaterinburg) என்னுமிடத்தில் 'உயிரியல் ஆயுதத் தொழிற்சாலை' என்று கருதப்படும் கட்டிடத்திலிருந்து விபத்து மூலம் காற்றில் இந்தக் கிருமிகள் பரவியதால் சுமார் 66 பேர் இறந்தார்களென்று கூறப்படுகிறது. இங்கு வெளிப்பட்ட கிருமிகள் சுமார் நான்கு புதிய ரகங்கள் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் 1998ல் அறிவித்தனர். இதனால் தடுப்பூசிகளால் தடுக்கப்படாத புதிய ரகங்கள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

1991ம் ஆண்டு நடந்த வளைகுடா போரில், ஈராக் நாடு உயிரியல் ஆயுதங்களால் தாக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டதால் சுமார் 150,000 வீரர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. 2001ல் WTC மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை கடிதம் மூலம் அனுப்பினார்களா என்றும் ஆராயப்படுகிறது.

ஆந்த்ராக்ஸ்:

கிருமிகள் பரவும் முறை. விலங்குகள், மனிதர்களால் பாதிப்புகள்

'தபால் மூலம் ஆந் த்ராக்ஸ்' - பாதுகாப்பு முறைகள்:

பயங்கரவாதிகளால் அனுப்பப்படும் கடிதத்தைப் பெற நேர்ந்தால் கையாள வேண்டிய அணுகு முறைகள்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Empty Re: ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax ) -- நோய்

Post by தாமு on Tue Oct 27, 2009 6:48 am

ஆந்த்ராக்ஸ் (Anthrax )

 ஆந்த்ராக்ஸ் என்றால் என்ன?


ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோய். இது 'பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ்' எனும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இது கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது.

நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப் படும்.

ஆனால் இது எளிதில் பரவக்கூடிய நோய் அல்ல. காற்றின் மூலம் தானாக பரவுவது இல்லை. மேலும் ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதும் இல்லை. தடுப்பூசி மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

தற்போது 'பயலாஜிகல் போர்முறை' எனும் நோய்க் கிருமிகளை ஏவி எதிரி நாடுகளைத் தாக்கும் முறையில் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் பயன்பாட்டைப் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வாழும் விதம்:

இது மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கூட அழியாமல் நுண்ணிய பூஞ்சை கூடு கட்டி வாழக் கூடியது. இந்த கூடுகளை ஒரு வித திரவ முலாம் பூசுவதால் மிக அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும்.

விலங்குகளில் ஆந்த்ராக்ஸ்:

ஆந்த்ராக்ஸ் பூஞ்சைக் கூடுகள் உள்ள மண்ணில் வடிந்து வந்த நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கு இந்த நோய் பரவுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது.

நோயுற்ற விலங்குகளுக்கு தடுமாற்றம், இரத்தப் போக்கு, வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி மூலமும், நோய் ஏற்பட்டவுடன் மருந்துகள் மூலமாகவும் விலங்குகளைக் காப்பாற்ற முடியும்.

மனிதர்களில் ஆந்த்ராக்ஸ்:

மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு.


இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது.

பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள் (wool), மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக்கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும்.


இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது.

சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் சளி அல்லது ப்ளு பாதிப்பை போன்று - உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல் அல்லது இலேசான நெஞ்சுவலி ஆகியவை தென்படும்.

பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் உடனடியாக அளிக்கப்படாவிட்டால் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு தேவைப்படும் 'Ciproflaxacian', 'Pencillin' போன்ற மருந்துகள் நாம் பொது மருத்துவத்திலேயே அதிகம் பயன்படுத்துவதால் எளிதில் கிடைக்கக் கூடியது.

பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Empty Re: ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax ) -- நோய்

Post by தாமு on Tue Oct 27, 2009 6:50 am

'தபால் மூலம் ஆந்த்ராக்ஸ்' - பாதுகாப்பு முறைகள் ( Safeguarding from Anthrax)

 பயங்கரவாதிகளால் பொது மக்களிடையே ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்ப, இந்த கிருமிகள் அடங்கிய பூஞ்சைக் கூடுகள் (spores) பவுடர் வடிவில் தபால் கவரில் வைத்து அனுப்புவதாக நம்பப்படுகிறது.


கவரைப் பிரிக்கும் போது பொடி சிதறுவதால் காற்றில் கலந்து அருகிலிருப்போருக்கு சுவாசம் மூலம் பரவும் வாய்ப்பு ஓரளவுக்கு உண்டு.

இது போன்ற கந்த்தைப் பெற நேர்ந்தால் கையாள வேண்டிய அணுகுமுறைகள்:

* கடிதத்தை பாலிதீன் கவரில் பத்திரமாக மூடி வைக்கவும்
* கைகளை நீர் மற்றும் சோப்பு உபயோகித்து கழுவவும்.

* உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறையை நாடவும்.

பவுடர் வெளிப்புறமாக படிந்திருந்தால் அல்லது சிந்தியிருந்தால்:

* பவுடரை சுத்தப்படுத்த முயற்சிக்காதீர்கள். மற்றவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்

* ஆடைகள் முதலியவற்றை தட்டாதீர்கள்.

* கைகளை நீர் மற்றும் சோப்பு உபயோகித்து கழுவவும்.

* உடனடியாக உயர் அதிகாரிகள் அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

* ஆடைகள் முதலியவற்றை உதறாமல் அகற்றி பாலிதீன் கவரில் மூடி வைக்கவும்.

நீர் மற்றும் சோப்பு உபயோகித்து குளித்து விடுவது நல்லது.

ப்ளீச்சிங், கிருமி நாசினி முதலியவற்றை உபயோகிக்காதீர்கள்.

பவுடர் படக் கூடிய அளவில் யார் யாரெல்லாம் நின்றிருந்தார்கள் என்று பட்டியலிட்டு சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் முதலியவை ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட வேண்டும்.
சாதாரணமாக இந்தக் கிருமிகள் காற்றில் பரவுவதில்லை. இந்த பவுடர் காற்றில் வேகமாக உதறப்பட்டாலோ அல்லது ஸ்பிரே செய்யப் பட்டாலோ சுற்றியிருப்போரை நோய் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

ஆகவே மிகச் சிறிய குண்டு வெடிப்பின் மூலம் இந்தக் கிருமிகள் காற்றில் ஸ்பிரே செய்யப்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்த இயலும். இவ்வகை குண்டுகளை தயாரிக்க பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.


ஆக்கம்: viggie -- நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax )  --  நோய் Empty Re: ஆந்த்ராக்ஸ் - வரலாறு ( History of Anthrax ) -- நோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum