ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 10:59 am

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by மாணிக்கம் நடேசன் Today at 8:55 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:52 am

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 11:03 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Yesterday at 9:33 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Yesterday at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Yesterday at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Yesterday at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Yesterday at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Yesterday at 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Yesterday at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Yesterday at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Yesterday at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Yesterday at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Yesterday at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Yesterday at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Yesterday at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Yesterday at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Yesterday at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Yesterday at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Yesterday at 12:51 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Sat Sep 26, 2020 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Sat Sep 26, 2020 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Sat Sep 26, 2020 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Sat Sep 26, 2020 9:05 pm

Admins Online

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Fri Aug 30, 2013 12:17 am

[You must be registered and logged in to see this image.]
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்கு பதிவிடுகிறேன்.
மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாக புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லை சொன்னால் அது எதை குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதை பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு புதிய சொற்களை உருவாக்க அந்த மொழிசொல்லை அப்படியே மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து இது தான் அம்மொழி சொல்லுக்கான தமிழ் சொல் என்று கூறிவருகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொற்கள் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து புதிய தமிழ் சொற்களை உருவாக்கிவருகிறோம். 
உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மையான மொழி நம் தமிழ் என சொல்லிக்கொண்டு இன்று பலமொழிகளில் இருந்தது சொற்களை கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலத்தை நாம் பின்தொடர்கிறோம். அதை அடிப்படையாக கொண்டு சொல்லாக்கம் செய்கிறோம். எவ்வளவு ஒரு இழிவான நிலைக்கு தமிழை கொண்டுவந்து விட்டோம். இதற்கு பெயர் தான் சொல்லாக்கமா? இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாமே, நான் இங்கு சாடுவது கீழ்காணும் சொற்களை போல் சொல்லாக்கம் செய்யும் நமது அறிஞர்களை தான்.
Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்  
இப்படி பல சொற்களை சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் இதை சொற்கொலை என்று கூட சொன்னால் மிகையாகாது. நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு. இவற்றை நாம் கணக்கிற்கு வேண்டுமானால் இத்தனை சொற்கள் உருவாக்கப்பட்டது என எழுதி வைத்துகொள்ளலாம், பேச்சு வழக்கில் பயன்படுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஆங்கில சொற்களுக்கு இணையாக தமிழ் சொல் என மேலே காணும்படியான முறையில் புதிய சொற்களை உருவாக்கிவிட்டு அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுவதும், பட்டி மன்றங்கள் நடத்துவதும், மக்களுக்கு மொழி பற்று இல்லை என்று சாடுவதும், உணர்சிவசமாய் பேசுவதும் கேட்பவருக்கு நகைப்புக்குரிய விசயமாக தான் தென்படுமே ஒழிய எவ்வித மாற்றங்களும் தராது. இதுபோன்று தான் நாம் இன்று சொற்களை மன்னிக்கவும் சொற்தொடர்களை உருவாக்கி நமது மொழி சொல்லே இல்லாத வற்றிய மொழி போல் அதன் தொன்மை, புகழ், வளங்களை பாழ்படுத்து வருகிறோம். இன்று ஆங்கிலம் தமிழுக்கு ஆசானமொழியாகி விட்டது.
புகைவண்டி என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அதற்கு சொல்லாக்கம் செய்யும் போது உருவாக்கப்படும் சொல் ஒரு வேர்ச்சொல்லாக தான்  உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த அந்த சொல்லை கொண்டு அத்துறை சார்ந்த மற்ற சொற்களை உருவாக்க எதுவாக இருக்கும். அதை விடுத்து புகை விடுவதால் புகை வண்டி என பெயர் வைப்பதும், புகையில் படம் எடுத்ததால் புகைப்படம்  என பெயர் வைப்பதும் எவ்வளவு ஒரு அறிவு தனமான செயல்பாடுகள். இதனால் தான் நாமில் சிலர் புகைவண்டி என்றால் என்ன என்று கேட்டால் என் அப்பன் தான் என சொல்லி நக்கலடிக்க செய்கிறார்கள். 
சரி Photo என்பதற்கு புகைப்படம் என்றே வைத்துகொள்வோம். ஆங்கிலத்தில் Photography என்ற சொல்லை Clipping என்ற சொல்லாக்க விதிப்படி Photo என ஒற்றை சொல்லாகவும், Camera என்ற சொல்லை அதே விதிப்படி Cam என்றும் அழைகின்றனர். இந்த சொல்லுக்கு தமிழில் இரண்டு சொற்கள் அப்படியே சேர்த்து (புகை + படம்) எழுதும் நாம் Photocam என்ற ஒற்றை ஆங்கில சொல்லுக்கு என்ன எழுதுவோம் புகைப்பட ஒளிபதிவு கருவி. இதுபோல் சொற்களை உருவாக்கிக்கொண்டு இந்த சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழறிஞர் சொன்னால் நாம எப்படி பயன்படுத்தமுடியும். இதைசொல்லி முடிப்பதற்குள் விடிந்துவிடும் அல்லவா!. சொல் என்றால் ஒற்றையாக இருக்கவேண்டும், சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது. 

தொடரும்.....

பாகம் -2 க்கு [You must be registered and logged in to see this link.]சுடக்கவும்

Last edited by ராஜு சரவணன் on Sun Sep 08, 2013 12:55 am; edited 3 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by யினியவன் on Fri Aug 30, 2013 12:27 am

தொடருங்கள் டெக்லஸ் தொடருகிறோம் பதிவை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Fri Aug 30, 2013 12:34 am

நன்றி தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by yarlpavanan on Fri Aug 30, 2013 5:56 am

தங்கள் பதிவை விரும்புகிறேன்.
தொடருங்கள்.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
மதிப்பீடுகள் : 238

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Sat Aug 31, 2013 8:28 am

[You must be registered and logged in to see this link.] wrote:தங்கள் பதிவை விரும்புகிறேன்.
தொடருங்கள்.
நன்றி நண்பரே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜா on Sat Aug 31, 2013 10:49 am

சிறப்பான கண்ணோட்டம் ... புன்னகை
நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு
தொடருங்கள் டெக்லஸ் ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by பூவன் on Sat Aug 31, 2013 12:53 pm

நல்ல பதிவு அண்ணா தொடருங்கள் ...

அப்படியே நிறைய கலைசொற்களையும் அறிய தாருங்கள் ...தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Sun Sep 01, 2013 1:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சிறப்பான கண்ணோட்டம் ... புன்னகை
நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு
தொடருங்கள் டெக்லஸ் ....
 
நன்றி தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Sun Sep 01, 2013 1:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல பதிவு  அண்ணா  தொடருங்கள் ...

அப்படியே நிறைய  கலைசொற்களையும் அறிய தாருங்கள்  ...தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 
 
நிச்சயம் பூவன் அதுக்கு தானே இந்த பதிவு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Sun Sep 01, 2013 2:39 pm

Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்  
இவையாவும் சரியான சொற்கள் தானே இதை தவறு என்று சொல்கிறாரே என்று மனதில் பலருக்கு நிச்சயம் கேள்வி எழும். இந்த நினைப்பு தான் தவறு என்று சொல்லவருகிறேன். எத்தனை பேர் இதுபோன்ற பெயர்களை சொல்லி அழைகிறார்கள்/பயன்படுத்துகிறார்கள். சரி என்று சொன்னால் நாமே அதை பேச்சும் போது பயன்படுத்தலாமே, என தயங்குகிறோம்.
காரணம் :-
- யாருமே அதை பயன்படுத்துவதில்லை நான் மட்டும் என பயன்படுத்தனும். 
- இந்த சொற்களை பயன்படுத்தி பேச கூச்சமாய் இருக்கு.
- இந்த சொற்களை சொல்லி பேசினால் யாரும் மதிப்பதில்லை.
- சரியான சொல்லை நியாபகம் வைத்துகொள்ள கஷ்டமாக இருக்கு 
- ஒரு பொருளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சொல் கொண்டு அழைகின்றனர், எந்த சொல் சரியான சொல் என தெரியவில்லை (AC - குளிர்பதனம்/ செந்தனப்பு/குளிசாதனம்/குளுரூட்டம்/குளிரூட்டி/பனிக்காற்றுப்பெட்டி) 

மேலே சொன்னதுபோன்ற காரணங்களுக்கு என்ன தான் தீர்வு. அந்தகாலத்தில் தமிழ் கலைசொல்லாக்க பிரச்னை இருந்ததாக தெரியவில்லை ஏனெனில் அப்போதிருந்த சூழ்நிலைகளில் அனைத்து வகையான துறை சார்ந்த கலைசொற்கள் நல்லமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது என்ன புது பிரச்சனையாக பேசுகிறோம் என்ற பல விசயங்களை பின்வரும் பதிவுகளில் அலசுவோம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by chatchi on Sun Sep 01, 2013 3:05 pm

தொடக்கமே அருமை. தமிழில் பல புதிய சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தொடருகிறேன்.
chatchi
chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் on Sun Sep 01, 2013 10:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தொடக்கமே அருமை. தமிழில் பல புதிய சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தொடருகிறேன்.
கண்டிப்பாக புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum