ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon Sep 28, 2020 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

இராம காவியம்

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வாழ்த்து இராம காவியம்

Post by Admin on Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே

Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down


வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Jun 15, 2009 3:09 pm

இராவணன் சாலையுடன் சீதையைத் தேரில் வைத்து இலங்கையை நோக்கிச் செல்லலாயினான். அதுகண்டு ஜடாயு பெரிதும் வருந்தினார். "என் சிறை அற்றுவிட்டது. ஆனால், சீதாதேவியின் கற்பு என்றும் சிறையறாது" என்று புலம்பி மூர்ச்சித்து விட்டார்.

சீதாதேவி ஜடாயுவுக்கு நேர்ந்த மரணத்தைக் கண்டு துயரக் கடலில் ஆழ்ந்தர். "தர்மம் தோற்றும் அதர்மம் வெல்வதா ? என்னைக் காக்க வந்த நீர் இந்த நிலையை அடைந்தீரே ? அந்தோ தேவரீர் தங்கள் புதல்வரைக் கண்டு என் நிலையைக் கூறுவீராக " என்று அழுதாள்.

இராவணன் இலங்கையடைந்து தேவியை அசோக வனத்தில் சிறை வைத்தான். கொடிய அரக்கியரைக் காவல்புரிய ஏற்பாடு செய்தான்.

சீதை தனியே இருப்பதால் என்ன இடர் விளையுமோ ? ஏது வருமோ ? என்ற வருந்தி இலட்சுமணர் அண்ணனை நாடிச் சென்றார்.

மாரீசன் குரலை மாற்றிப் புலம்பினானே இதனைக் கேட்டுச் சீதை கலங்குவாளே என்று இராமர் எண்ணி, வேகமாகத் திரும்பி வந்தார். வருகின்ற வழியில் தொலைவில் தம்பியைக் கண்டார். திடுக்கிட்டார்.. . மனம் பதைபதைத்தார்.

சீதையைத் தனியே விட்டு என் தம்பி வரமாட்டான். மாரீசன் குரலைக்கேட்ட ஜானகி கடுஞ்சொற்களால் என் தம்பியை வைதிருக்கவேண்டும். இல்லையேல் என் தம்பி வந்திருக்கமாட்டான்.

அண்ணா இது மான் அன்று. மாரீச அரக்கன். மான் பிடிக்கப் போகவேண்டாம்" என்று என் தம்பி என்னைத் தடுத்தான். அவன் சொல்லைக் கடந்து நான் மான் பின் சென்றேன். என் தம்பி என் சொல்லைக் கடந்து வருகின்றான். அதலால், என் தம்பி மீது பிழையில்லை. என்மீதுதான் பிழை என்று இராமர் கருதினார்.

இலட்சுமணர், இராமருடைய திருவடியில் வீழ்ந்தார், இராமர், தம்பீ அண்ணியைத் தனியே விட்டு ஏன் வந்தாய் ? என்று கேட்டார்.

இலட்சுமணர், அண்ணா அரக்கன் குரலைத் தங்கள் குரலாகக் கருதிய அண்ணி, தங்களுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது நீ சென்று துணை புரிக என்றார். நான் பலப்பல கூறியும் அண்ணி கேளாமல் நெருப்பில் வீழ்ந்து மாள்வேன் என்று நெருப்பிடம் நெருங்கினார். "நான் வரவில்லை யென்றால் நெருப்பில் வீழ்ந்து மாண்டுபோவார். ஆதனால், வர நேர்ந்தது" என்றார்.

இராமர், தம்பி உன்மீது குற்றம் இல்லை.. மானை நோக்கி வந்தது என் பிழை என்று பர்ணசாலையிருந்த இடம் சென்றார். பர்ணசாலை மண்ணோடு பறிக்கப்பட்டு வெறுமையாக இருந்தது இராமருக்குக் கண் சுழன்றது. விண் சுழன்றது. மண் சுழன்றது. ஆறாத்துயரம் அடைந்தார். அவருக்கு உலகமே இருண்டுவிட்டது.

இலட்சுமணர், எம்பிராட்டியைத் தீண்டுவதற்கு அஞ்சி பர்ணசாலையுடன் கொண்டு சென்றுள்ளான். தேர்ச்சுவடு தெரிகின்றது. அதுவுந் தெற்கே நோக்கிச் சென்றுள்ளது. நாம் விரைந்து செல்லுவோம் என்றார். இராமரும் இலட்சுமணரும் தெற்கு நோக்கிச் சென்றார்கள். வழியில் வீணைக் கொடி வீழ்ந்திருந்தது.

இலட்சுமணர், அண்ணா இதோ பாருங்கள் வீணைக் கொடி.. இது இராவணனுடைய கொடி.. . நமது பெரியப்பா ஜடாயு போர் புரிந்திருப்பார் போலும்.. . அவருடைய மூக்கினால் கொடி முரிந்துள்ளது என்ற கூறி, மேலும் விரைந்து சென்றார்கள் வழியில் பல தலைகள், பல கரங்கள் அறுபட்டு வீழ்ந்திருந்தன. இதனைக்கண்ட இராமபிரான் தம்பீ தலைகள் பல கைகள் பல இருப்பதனால் பலர் சேர்ந்து சீதையை அபகரித்திருப்பார்கள் போலும்" என்றார்.

இலட்சுமணர், அண்ணா தலைகள் பல, கரங்கள் பல ஆனால், கால்கள் இல்லை.. . அதனால் இராவணன் ஒருவன் தான் கவர்ந்துளன், அவனுடைய சிரங்களும் கரங்களும் அறுக்க அறுக்க முளைக்கும் வரம் பெற்றவன் என்ற கூறி, மீண்டும் விரைந்து செல்வராயினர். உதிரச் சேற்றிலே ஜடாயு நினைவு இன்றி மூர்ச்சிருப்பதைக் கண்டார்கள்.

இராமர், தந்தையே தந்தையே என்று வாய் விட்டுப் புலம்பியழுதார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Jun 15, 2009 3:10 pm

நாட்டில் ஒரு தந்தையை இழந்தேன். காட்டில் ஒரு தந்தையரை இழந்தேன். அந்தோ என் செய்வேன். என் பொருட்டுத் தேவரீர் இந்த மரணத்தை எய்தினீர் என்று கதறி யழுதார்.

ஜடாயு மூர்ச்சை தெளிந்தார். இராவணனுடைய பத்துத் தலைகளையும் பலமுறை வெட்டி, வெற்றி பெற்ற மூக்கால் இராம லட்சுமணருடைய உச்சியை மோந்தார்.

மக்களே சீதையைத் தனியே விட்டு எங்குச் சென்றீர்கள் ? இராவணன் என் மருகியைச் சாலையுடன் எடுத்துச் சென்றான். நான் என்னால் ஆனமட்டுந் தடுத்தேன். சிவன் தந்த வாளால், என் சிறையை வெட்டி விட்டான் என்றார்.

இதனைக்கேட்ட இராமர் எரிமலைபோலச் சீறினார். சீதையை இராவணன் எடுத்ததையும் தங்கள் சிறகுகளையும் இராவணன் வெட்டியதையும் பார்த்திருந்த விண்ணவரையும் விண்ணவர் உலகையும் அழிப்பேன் என்ற கோதண்டத்தை வளைத்து நாணொலி செய்தார். இராமருடைண கோபாக்கினியைக் கண்டு உலகம் நடுங்கியது.. . இலட்சுமயரும் அஞ்சினார்.

இவ்வாறு இராமச்சந்திர மூர்த்தி, விண்ணவர்கள்மீது கோபித்தபோது, ஜடாயு பகவான், இராகவா அழகிய இளம் பெண்ணைத் தனியே காட்டில் விட்டு, மான் பின் சென்று குலப்பழியைத் தேடிக் கொண்டீர்கள். உங்கள் குற்றமேயாகும், உலகத்தைக் கோபிக்கலமா ? என்று சிறிது உரத்த குரலில் கூறினார். இராமருக்கு அறிவுரை கூற, அவரையன்றி வேறுயாருளர் ?

இராமர் சீற்றத்தை விடுத்துச் சாந்தமாகி, பெரியப்பா இராவணன் எங்கே சென்றான் ? என்று கேட்டார்.

ஜடாயு இலங்கை என்று ஒரு சொல் கூறியிருந்தால் சீதா தேவியை உலகமெலாம் தேடும் தன்மை நேர்ந்திருக்காது. உரத்த குரலில் பேசியதால் ஜடாயு ஆற்றல் அடங்கி பரமாத்மாவாகிய இராமரைப் பார்த்துக் கொண்டே ஆவி நீங்கினார். அறுபது ஆயிரம் ஆண்டு தவம் செய்து இராமரை மகனாகப் பெற்ற தசரதருக்கு இந்தப் புண்ணியம் அமையவில்லை. மரணத் தருவாயில் இராமரைத் தரிசிக்கும் வாய்ப்பு தசரதர் பெறவில்லை. ஜடாயு செய்த புண்ணியத்தால் மரணப் படுக்கையில் இராமச்சந்திர மூர்த்தியைத் தரிசித்தார். "ராம ராம" என்று கூறிக்கொண்டே, அவருடைய ஆன்மா சாந்தியடைந்தது.

அரண்மனையையும் விலைமதிக்கவொண்ணாத ஆடை ஆபரணங்களையும் துறந்து வந்து சீதாதேவி மானைப் விரும்பியதும், அதனைப் பற்றித் தருமாறு கணவனுக்குக் கட்டளை யிட்டதும் வேதங்கள் தேட நின்ற விமலன், காட்டுமானைத் தேடிச் சென்றதும், சீதை இலட்சுமணருடைய மனம் நோவப் பேசியதும் ஆகிய அனைத்தும் விதி செய்யும் விளையாடல் என உணர்க. எல்லாம் விதிப்படிதான் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஜடாயுவின் ஆன்மா பரகதியை அடைந்தது. அவருடைய பிரிவை எண்ணி இராமர் பெரிதும் புலம்பினார். அவருடைய உடம்பை மந்திரத்துடன் கூடிய புனித நீரால் அலம்பி காட்டில் உள்ள விறகுகளை அடுக்கி, ஓமாக்கினி வளர்த்து தகனம் செய்து எலும்பை நீரில் கரைத்தார்.

இந்தப் பாக்கியம் ஜடாயு பெற்றார்.

அங்கிருந்து இராம லட்சுமணர் கிரவுஞ்ச வனத்தையடைந்தார்கள். ஆதித்தன் மேற்கடலில் முழுகினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Jun 15, 2009 3:11 pm

சபரி மோட்சம்இராமர் ஜடாயு பகவானுக்கு நெருப்புக்கடன், நீர்க்கடன்களைச் செய்தபிறகு, சீதாதேவியைத் தேடும் பொருட்டு, இராமரும் இலட்சுமணரும் தெற்கு நோக்கிச் சென்றனர். ஆதித்தன் மேற்கடலில் வீழ்ந்தான். எங்கும் இருள் சூழ்ந்தது. ஒரு மலைச்சாரலில் இராமர் இருந்து சீதா தேவியை நினைந்து, பெரிதும் உள்ளம் வருந்தினார். இட்சுவாகு குலத்தில் பிறந்த என் மனைவியை அரக்கன் கவர்ந்து சென்றனனே என்ற தன்மானமும் சீதை மீதுள்ள காதலும் அவரை மிகவும் வருத்தின. "எனக்கு இனி கோதண்டம் வேண்டுமோ ?" என்று எண்ணி, வில்லை நோக்கிச் சிரிக்கும். ஆற்றல் நிறைந்த தன் தோள்களை நோக்கிச் சிரிக்கும். உலகத்தைக் காக்க வந்த நான், என் மனைவியைக் காக்க முடியாது கவல்கின்றேனே என்றும், சீதை என்ன துன்பம் அடைகின்றாளோ என்றும் எண்ணி வேதனை அடைந்தார்.

இலட்சுமணர் மாந்தளிர், அசோகந்தளிர், புங்கந்தளிர் முதலிய தளிர்கள் பரப்பிய படுக்கையில் சாய்ந்தார். அவருடைய திருமேனியின் வெப்பத்தால், அந்தத் தளிர்கள் தீய்ந்துவிட்டன, வாயும், நெஞ்சும் உலர்ந்து விட்டன.

இராமர் தம்பியை நோக்கி, தம்பீ தண்ணீர் விடாய் மிகுந்துள்ளது. தண்ணீர் கொண்டு வருவாய் என்று பணித்தருளினார்.

இதைக் கேட்ட இலட்சுமணர், "இராமர் கேட்பதற்கு முன்னமே செய்திருக்க வேண்டும் ஏவா மக்கள் மூவா மருந்து என்ற பழமொழிப்படி நானே குறிப்பறிந்து தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். என் கடமை தவறிவிட்டேனே" என்ற எண்ணித் தண்ணீரை கோக்கிப் புறப்பட்டார். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. புதிய வனம். கையில் விளக்கு இல்லை, நெஞ்சில் இராம பக்தி நிறைந்திருந்து. காலால் தடவிக் கொண்டு தண்ணீரை நாடி நான்கு திசைகளிலும் அலைந்தார்.

அங்கே அயோமுகி என்ற அரக்கி இலட்சுமணரைக் கண்டு, காமத்தீயால் கருகினாள், உள்ளம் உருகினாள். "ஆ இவன் என்ன மன்மதனா ? இந்திரன் மைந்தனா ? எத்துணை அழகு ? இவனைக் கணவனாக அடைந்து வாழ்வேன்" என்று எண்ணினாள்.

அவள் ஆயிரம் அமாவாசை ஒருங்கு சேர்ந்தாற் போன்ற கரிய உடம்பும், பெரிய தனங்களும், விகாரமான முகமும் உடையவளாய் நின்றாள், மலைப்பாம்புகளைக் கை வளையலாக அணிந்தும் பாம்பாகிய கயிற்றில் கட்டிய புலிகளை ஆரமாக அணிந்தும், இரண்டு சிங்கங்களைக் காதில் குழைகளாக அணிந்தும், நெருப்புச் சிந்திய கண்களுடனும் காட்சியளித்தாள். இலட்சுமணருக்கு முன்னே வந்து நின்றாள். இலட்சுமணர் அவனை நோக்கி, "நீ யார் ?" என்று வினாவினார்.

அயோமுகி, என் உள்ளத்தை கவர்ந்த அழகனே, நான் இந்தக் காட்டில் வாழும் அயோமுகி. உன்னைக் கண்டு மையல் கொண்ட தையலானேன். ஐயனே உன் கரங்களால் என்னைப் அணைத்து என் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக என்றாள்.

இலட்சுமணர், அவளுடைய கோர வடிவத்தைக் கண்டு சிரித்தார். இந்தக்காட்டில் சூர்ப்பணகை போன்ற அடங்காப் பிடாரிகள் பலர் இருப்பார்கள் போலும். "கொடியவளே என் அருகிலே வந்து நெருப்பிலிட்ட பஞ்சைப்போல, எரிந்து கரிந்து சாம்பலாகாதே.. . விலகிப்போ" என்று விரட்டினார்.

அயோமுகி ஒரு விநாடியில் இலட்சுமணரை எடுத்துத் தன் மார்பில் அணைத்து விண் வழியே பறந்து செல்லலானாள். அந்தக் காட்சி முருகன் மயில் மேல் சென்றது போலிருந்தது. இலட்சுமணருடைய ஆற்றல் அவள் கையில் அடங்கியது. இரு மலைகளுக்கு நடுவே அகப்பட்டு கொண்டது போல் ஆனார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Jun 15, 2009 3:11 pm

இராமரது துயரம்

இராமபிரான், தண்ணீரைத் தேடிச் சென்ற தம்பி திரும்பி வாராமையால் பெரிதும் வருந்திப் புலம்பலானார். இலட்சுமணர் எள் என்றால் எண்ணெயாய்க் கொண்டு வருவான், பஞ்சென்றால் புடைவையாய்க் கொண்டுவருவான். தண்ணீரை நாடிச் சென்றவன் திரும்பி வரவில்லையே. தண்ணீர் கிடைக்காமையால் அலைகிறானோ ? ஒருகால் சீதையை கவர்ந்த அரக்கன் எதிர்ப்பட, போர் செய்யத் தொடங்கினானோ ? என் அருமைத் தம்பியை இராவணன் கவர்ந்து சென்றானோ ? அவன் செய்த மாயத்தால் மாண்டு போனானோ ? தம்பீ இலட்சுமணா உத்தம குணங்களுக்கு உறைவிடமானவனே உன் பிரிவால் பெரிதும் வருந்துகின்றேன். சீதையை பிரிந்தும், உன்னைப் பிரியாத தன்மையால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

என் சிற்றன்னையாகிய சுமத்திரை இலட்சுமணரைப் பார்த்து "மகனே இராமன் அயோத்திக்கு வந்தால் நீ வருக. இல்லையேல் அவனுக்கு முன் மாண்டுபோக வேண்டும்" என்று கட்டளையிட்டாளே. அதனை நிறைவேற்றும் பொருட்டு எனக்கு முன் நீ மாய்ந்துவிட்டாயோ ? இனி, எப்பிறப்பில் காண்பேன் ? உன்னைப் போன்ற உத்தம சகோதரன் உலகில் உண்டோ ? உன்னைப் பிரிந்து உயிர் வாழேன். பதினான்கு ஆண்டுகள் என்னை உண்பித்து நீ உண்ணாமலிருந்தாய். என்னை உறங்குவித்து நீ உறங்காமலிருந்தாய். நாட்டைத் துறந்து, நகரைத் துறந்து, வீட்டை துறந்து அன்புருவாகிய இன்ப மனைவியைத் துறந்து, காட்டில் கண்ணிமைக்காமல் என்னைக் காத்து நின்றனையே. தருமத்தின்மேல் ஆணை. அடுத்த பிறவி எனக்கு வருமானால் நீ எனக்குத் தமையனாகப் பிறக்கவேண்டும். நான் உனக்கு தம்பியாகப் பிறந்து, இந்த கடன்களைத் தீர்ப்பேன். இனி நான் வாழகில்லேன் என்று புலம்பி, வடிவாளை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக் கொண்டார். தற்கொலை செய்து கொள்ள முயல்கின்றார்.

இராமர் தன் காதல் மனைவியைப் பிரிந்தபோது பெரிதும் வருந்தினார். ஆனால், உயிர்விடத் துணியவில்லை. இப்பொழுது தன் அருமைத் தம்பியைப் பிரிகின்றபொழுது. உயிர்விடத் துணிந்தார். இதனால், இராமருக்குச் சீதை மீதுள்ள பட்சத்தைக் காட்டிலும் உடன் பிறந்தான் மீது பட்சம் அதிகம் என்பது புலனாகின்றது.

அயோமுகியின் கைக்குள் அகப்பட்ட இலட்சுமணரின் செவியில் இராமருடைய அழுகுரல் கேட்டது. இலட்சுமணர். அண்ணா அழுகின்றாரே என்று எண்ணி. வாள் பிடித்த கையை வெளியே எடுத்து வாளினால் அயோமுகியினுடைய மூக்கு முதலிய உறுப்புகளை அறுத்து வீழ்த்தினார். வேதனைப் பட்ட அயோமுகி "ஓ" வென்று புலம்பினாள். அரக்கியின் குரலைக் கேட்ட இராமர், கழுத்தில் வைத்த வாளை எடுத்துக் கொண்டார். அது இருளை நீக்கி ஒளியை வாரியிறைத்தது.

இலட்சுமணர், பெண் கொலை கூடாது என்று அயோமுகியைக் கொல்லாமல் விட்டு, இராமரிடம் ஓடி வந்து வணங்கி நின்றார். கன்றைக் கண்ட பசுவைப் போல் இராமர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

"அன்புத் தம்பியே நீ மாய்ந்து விட்டனையோ என்று வருந்தினேன். என்ன நிகழ்ந்தது ?" என்று வினாவினார்.

இலட்சுமணர், அண்ணா "அயோமுகி என்ற அரக்கி என்னைக் கவர்ந்தாள். பெண்ணைக் கொல்லக்கூடாது என்று அவளுடைய மூக்கு முதலியவைகளைக் கொய்து திரும்பினேன்" என்றார்.

"தம்பீ இலட்சுமணா மாதரைக் கொல்வது பழி பாவம் என்று அவளை மன்னித்து மனுகுல நெறியை நிலைநாட்டினாய். உன் புகழ் வாழ்க" என்று வாழ்த்தினார்.

தண்ணீர் கிடைக்காமையினால் வருணாஸ்திரத்தை விடுத்து வான நீரைத் தருவித்துப் பருகி விடாய் தீர்ந்தார். தம்பி அமைத்த தளிர்ப்படுக்கையில் தம்பி கால் வருடக் கண் துயின்றார். கதிரவன் உதயஞ் செய்தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ரூபன் on Mon Jun 15, 2009 6:25 pm

இந்த வாரம் பக்தி வாரம்!!!!!!!!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Feb 11, 2010 3:56 am

கவந்தன்


இராம இலட்சுமணர் ஜனஸ்தானத்தில் இருந்து மூன்று குரோச தூரம் அப்பால் சென்று. கிரௌஞ்சாரண்யத்தைக் கடந்து மூன்று குரோச தூரம் சென்று, ஒரு வனத்தை அடைந்தனர். அவ்வனமே கவந்த வனமாகும். நடுப்பகல் எய்தியது. சீதையைத் தேடிச் சென்ற இராம லட்சுமணர் கவந்தன் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். கவந்தன் என்ற அரக்கன் இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் அடிக்க, தலை உடம்புக்குள் புதைய, வெறும் முண்டமாக இருந்து அவ்வனத்தில் வாழ்கின்ற முனிவர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு செய்து வந்தான். அவனுக்கு ஒரு யோசனை தூரம் நீண்ட கரங்கள் இருந்தன. அவன் கையை நீட்டி மடக்குவானால் அவ்வனத்திலுள்ள முனிவர்களும் விலங்குகளும் அவன் வயிற்றுள் சென்று மாண்டு விடுவார்கள்.

இராமரும் இலட்சுமணரும் கவந்தனைக் கண்டு அதிசயம் அடைந்தார்கள். இராமர், "தம்பி நாம் இந்தப் பூதத்தின் கையில் அகப்பட்டு கொண்டோம். என்னை விட்டுச் சீதையும் பிரிந்துவிட்டாள். இனி எனக்கு வாழ்வு வேண்டுமோ ? நீ இந்த இடரிலிருந்து தப்பித்துக்கொள்" என்று கூறினார்.

இலட்சுமணர் முன்னே செல்லவும், இராமர் அவரை முந்திச் செல்லவுமாக ஒருவரை ஒருவர் முந்திச் சென்றார்கள். கவந்தன் இராம லட்சுமணரைக் கண்டு கர்ஜனை செய்தான். இராமரும் இலட்சுமணரும் அவனுடைய இரண்டு கரங்களையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார்கள். கவந்தனுடைய உடம்பிலிருந்து ஒர் ஒளிமயமான உருவம் விண்ணிலே நின்று இராமரைத் துதி செய்தது.

"இராமச்சந்திர மூர்த்தி என் மாயப் பிறப்பை நீக்கித் தூய உடம்பினைத் தந்தனை. உனக்கு ஒரு கோடி வணக்கம்". இராமர் அவனைப் பார்த்து, "உன் வரலாறு யாது ?" என்று கேட்டார்.

"இராகவா நான் தனு வம்சத்தில் பிறந்தவன். ஒரு முனிவருடைய சாபத்தால் அரக்கனாயினேன். இந்திரன் வஜ்ஜிரத்தால் அடித்தால் தலை உடம்புக்குள் செருகியது, அதனால் கவந்தனானேன். உன் கருணையினால் நல்லுருப் பெற்றேன். இராமச்சந்திர மூர்த்தி உன் திருவடிக்குப் பலகோடி வணக்கம். எம்பெருமானே பரந்து விரிந்த இவ்வுலகத்தில் நீங்கள் இருவருமே சீதையைத் தேடிச் கண்டுபிடிக்க இயலாது. துணையின்றி ஒரு பெரிய காரியத்தை முடிக்க முடியாது. துணை இன்றியமையாதது. இனம் இனத்துடன் சேர வேண்டும். மதங்க வனத்தில் சுக்ரீவன் என்ற வானர வீரன் இருக்கின்றான். அவன் சூரிய குமாரன். சூரிய குலத்தில் உதித்த நீயும் அவனும் ஓர் இனமாகும். எந்த வகையில் என்றால் உன்னுடைய மனைவியை இராவணன் கவர்ந்து கொண்டான். சுக்ரீவன் மனைவியை வாலி கவர்ந்து கொண்டான். மனைவியை இழந்தவனுக்குத்தான் மனைவியை இழந்த கவலை தெரியும். கடையில் உண்டவனுக்குத்தான் கடையின் உணவினால் வருந் துன்பந் தெரியும். சுக்ரீவன் நற்குண சீலன். நீ வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவன் மனைவியை மீட்டுக் கொடுப்பாயாக. அவன் எழுபது வெள்ளம் வானரங்களுக்குத் தலைவன். அவன் சீதையைத் தேடவும், இராவண சம்மாரத்திற்கும் உதவி செய்வான். எனவே, நீ சீதையைத் தேடுகின்ற முயற்சியை விடுத்து சுக்ரீவனை அடைவாயாக என்று கூறித்தொழுது தன் உறைவிடம் சேர்ந்தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Feb 11, 2010 3:57 am


சபரி முக்தி


ராம லட்சுமணர் பல காதங்கள் மலையுங் காடுங் கடந்து, நடந்து பம்பா நதிக்குமேல் கரையிலுள்ள மதங்காஸ்ரமத்தை அடைந்தனர். அங்கு மதங்க முனிவர் தவம் செய்த ஆசிரமத்தைக் கண்டனர்.

சபரி என்ற நரை மூதாட்டி, இராம லட்சுமணரைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அழுதாள். தொழுதாள்.

சபரி, மதங்க முனிவருடைய மாணவி. அவள் பல காலம் தவஞ்செய்து இராமரைக் காண வேண்டுமென்று காத்திருந்தாள். இராமருடைய வரவை முன்கூட்டியே யோகக் காட்சியால் கண்டு பலப்பல கனிகளைக் கடித்துச் சுவை பார்த்து, இராம லட்சுமணருக்குக் கனிகளைக் கொடுத்துச் விருந்து செய்தாள். இராமர், அவளது அன்புக்கு மிகவும் மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து உருகினார்.

சுபரி இராகவனை நோக்கி, "இராமா சூரிய குமாரராகிய சுக்கீவனைத் துணையாகக் கொண்டு, சீதா தேவியைத் தேடி அவளை அடைவாயாக" என்றாள். இராம இலட்சுமணர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் முக்தியடைந்தாள்.

இராம லட்சுமணர் பம்பா நிதியை நோக்கிச் சென்றார்கள்.

அநுமனின் அறிமுகம்


பம்பா நதி- இராமரும் இலட்சுமணரும் சபரி வாழ்ந்த மதங்க ஆசிரமத்தைவிட்டு, சீதையைத் தேடுகின்ற தன்மையை விடுத்துச் சுக்ரீவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்கள். சபரியினுடைய ஆலோசனைப்படி சுக்ரீவனைக் கண்டு அவனுடைய துணையுடன் சீதையைக் கண்டுபிடித்து அவளை யடையலாமென்று ரிசியமூக பர்வதத்தை அடைந்தார்கள்.

ரிஸ்யம் - மான்;

மூகம் - ஊமை

அங்குள்ள மான்கள் நாம் இரைந்து ஓசையிட்டால் இங்குள்ள முனிவர்களின் தவநிலை கலையும் என்று கருதி, வாயிருந்தும் பேசாமல் ஊமைபோல் இருப்பதனால், அந்த மலை ரிசியமூகம் என்ற பெயரைப் பெற்றது.

அந்த மலைச்சாரலில் பம்பாநதி, ஞானிகள் திருவுள்ளம் போல் தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதியில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசிக்கொண்டிருந்தன. அந்தச் சிவந்த தாமரை மலர்களில் அன்னப் பறவைகள் புகுந்தன. அக்காட்சி அன்னங்கள் இராமருடைய துயரத்தைப் பார்த்து, நாம் என் இனி வாழ வேண்டும் ? இவருடைய துன்பத்தை நம்மால் களைய முடியவில்லையே ? இறந்து போவதே நல்லது என்று எண்ணிச் செந்தாமரையாகிய அக்னியில் வீழ்வனபோல் இருந்தது.

இராம இலட்சுமணர் பம்பா நதியில் அகமர்ஷணம் ( பாபத்தைக் கெடுக்கும் மந்திரம் ) மந்திரத்தை ஓதி நீராடி ஜபதபங்களைச் செய்து அதன் கரையில் தங்கினார்கள்.

இராமர், தம்பியை நோக்கி, "தம்பி சீதை இருந்தால் என்னுடன் சேர்ந்து இந்த நதியில் நீராடி மகிழ்வாள். அவள் என்ன துன்பத்தை அனுபவிக்கிறாளோ ? தம்பி அவள் என்னை நினைந்து வருந்துவாள்" என்று கூறினார்.

இலட்சுமணர், "அண்ணா சீதாதேவி தங்களை நினைக்க மாட்டார்" என்றார்.

இதைக் கேட்ட இராமர் அதிர்ச்சியடைந்தார்.

"தம்பி உன் சொல் விசித்திரமாக இருக்கின்றதே. கற்புடைய பெண்கள் கணவனைப் பிரிந்தபோது கணவனை நினைப்பார்களே, சீதை கற்புடையவளாயிற்றே. என்னை நினைக்காமல் இருப்பாளா ?"

"அண்ணா கற்புடைய பெண்கள் தன்னைப் பிரிந்திருக்கிற போது கணவனை நினைப்பார்கள். ஆனால், அண்ணி நினைக்கமாட்டார் என்றேன். அண்ணி மகா மகா மகா பதி விரதா சிரோன்மணி. அவர் கற்புக்கு அரசி. தங்களை மறந்தால்தானே நினைப்பார்கள். என் அண்ணி கணப்பொழுதும் தங்களை மறக்கவே மாட்டார்கள். ஆகவே, நினைக்க மாட்டார்கள் என்று சொன்னேன்."

இலட்சுமணருடைய பேசுந்திறத்தைக் கண்டு இராமர் வியப்பு அடைந்தார். இராமர் சுக்ரீவனைக் காணவேண்டுமே அவன் எங்கு இருக்கின்றானோ ? அவனை எப்படிக் காண்பது ? சீதாதேவி எங்கு உறைகின்றாளோ ? என்ன துன்பத்தை நுகர்கின்றாளோ ? அவளை மீண்டும் காண முடியாதோ ? என்னை நம்பி என்னைத் தொடர்ந்து வந்த மனைவியின் துயரத்தைப் போக்கும் ஆற்றல் இல்லாத எனக்கு இந்தக் கோலமும் இனி வேண்டுமோ ? மனைவியின் துயரத்தைப் போக்காத இவனுக்கு வில் ஏன் ? என்று உலகம் பழிக்குமே. வில்லைச் சுமப்பதுடன் பழிச்சொல்லையும் சுமக்கின்றேனே.

ஒரு பெண்ணின் துயரத்தை அகற்ற மாட்டாத யான் உலக மக்களின் துயரத்தை எவ்வாறு மாற்றுவேன் ? என்று கூறி இராமர் புலம்பியழுதார். இலட்சுமணர் தேற்ற, ஒருவாறு தேறினார்.

சந்திரன் உதித்தான். சந்திர உதயத்தால் நிலம் குளிர்ந்தது, எங்கும் நலம் விளைந்தது. ஆனால், இராமருடைய உளம் குளிரவில்லை. மேலும் மேலும் வருந்தினார். இரவு முழுவதும் உறங்காமல் உள்ளம் உலைந்தார். தன் குலத்து மைந்தனுக்கு இந்தத் துன்பம் வந்ததே. நான் போய் அத்துயரை மாற்றுவேன் என்று வருவான் போல் ஆதித்தன் உதித்தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Feb 11, 2010 3:57 am

இராமரும் இலட்சுமணரும் பம்பையில் விதிப்படி நீராடி, சூரியனுக்கு அர்க்கியங் கொடுத்தார்கள், தெய்வத்தை வணங்கினார்கள்.

எழுந்தவுடன் இறைவனை வணங்க வேண்டும். ஏன் வணங்க வேண்டும். நன்றிக் கடனுக்காக வணங்க வேண்டும். வேறு எந்த உயிர்களுக்கும் இல்லாத பகுத்தறிவாகிய ஆறாவது அறிவுடன் இந்த மனிதப் பிறவியை இறைவன் நமக்குத் தந்தான். அவன் கொடுத்தான் உடம்பால் அவனை வழிபட வேண்டும்.

எழுந்தவுடன் இறைவனை வணங்குவதை வடமொழியில் சந்தியாவந்தனம் என்று கூறுவார்கள். சந்தியாவந்தனம் என்பதற்குப் பொருள், நன்றாகத் தியானித்து வணங்குவது என்பதாகும். தமிழில் காலைக்கடன் என்று கூறுவார்கள். கடனைத் திரும்பிக் கொடுக்கவில்லையானால் பாவமாகும். இறைவன் தந்த உடம்பால் அவனை வழிபடவில்லையானால் நமக்கு நன்றி கொன்ற பாவம் வரும். சந்தியாவந்தனம் என்பதைக் காட்டிலும் காலைக்கடன் என்பது பொருட்செறிவு உள்ளதாகும்.

நடையினாலுயர் நாயகனாகிய இராமச்சந்திர மூர்த்தி வில்லை யெடுத்துக்கொண்டு சுக்ரீவனைத் தேடிக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.

அநுமன் சந்திப்பு- அடங்காமையே ஒருவடிவாகிய வாலி தன் தம்பியாகிய சுக்ரீவனைப் பலமுறை கொல்லுவதற்கு முயன்றான். சுக்ரீவனுடைய மனைவியாகிய "ருமா" என்ற பெண்மணியைக் கவர்ந்து கொண்டான். இந்த ரிசயமூக மலைக்கு வாலி வருவானாயின் அவன் தலை ஆயிரம் துண்டாக வெடித்துவிடும். இது மதங்க முனிவருடைய சாபம். அந்தச் சாபத்துக்கு அஞ்சி வாலி அம்மலைக்கு வருவதில்லை. தமையனுடைய கொடுமைக்கு அஞ்சிய சுக்ரீவன் அநுமன் முதலிய முப்பத்திரண்டு வானர வீரருடன் அம்மலையில் வாழ்வானாயினான்.

சுக்ரீவன் தன்னைக் கொல்லும் பொருட்டு வாலியினால் அனுப்பப்பட்டு இவர்கள் வருகின்றார்களோ என்று இராம இலட்சுமணரைக் கண்டு அஞ்சினான், நடுங்கினான். மிகவும் ஓடுங்கினான். சிங்கத்தைக் கண்ட குறுநரிபோல் ஓடி ஒரு பாறையின் கீழ் ஒளிந்து கொண்டான். அவனுக்குத் துணை செய்கின்ற வானர வீர்கள் அவனுக்கு முன்னரே சென்று ஒளிந்து கொண்டார்கள்.

ஒரு மன்னவன் தன் பரிவாரங்களுடன் கானகம் போனான். ஒரு புலி துரத்திக் கொண்டு வந்தது. அப்பரிவாரங்களில் ஒருவன் நீங்கள் புலிக்குப் பயப்பட வேண்டாம். நான் தரையில் படுத்துக் கொள்வேன் புலிக்குப் பயந்தவர்களெல்லாம் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள் என்றானாம். புலி மேலே இருப்பவனைத்தானே அடித்துக் கொல்லும் ? இதுபோல் இருந்தனர் சுக்ரீவனின் துணைவர்கள்.

இராம இலட்சுமணரைக் கண்டு அநுமன் அஞ்சவில்லை. அறிவுடையார் ஒன்றுக்கும் அஞ்சமாட்டார்கள். அஞ்சுவதில்லை, அஞ்ச வருவதுமில்லை என்பார் அப்பர்.

ஆகவே, அறிவுடையார் எதற்கும் அஞ்சமாட்டார்கள். ஆனால், அஞ்சாதவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் அல்லர். பால் வெண்மையாக இருக்கும். ஆனால், வெண்மையாக இருப்பதெல்லாம் பால் ஆகா.

ஆஞ்சநேயர் சுக்ரீவனைப் பார்த்து, "நான் சென்று இங்கு வருகின்றவர்கள் யார் என்று அறிந்து வருவேன்" என்று கூறி விட்டு மரங்களில் மறைந்து இராம இலட்சுமணரைக் கூர்ந்து நோக்குவாராயினார்.

இவர்கள் தேவகுலத்துக்கே தலைவராக இருக்க வேண்டும். ஆனால், தேவருக்குத் தலைவர் பிரமன், திருமால், சிவன் என்ற மூவராயிற்றே. இவரகள் இருவராக இருக்கின்றார்கள். இவர்களை இன்னார் என்று எளிதாகக் கண்டுக்கொள்ள இயலாது. இவர்கள் எல்லாம் செய்ய வல்லவர்கள். இவர்களால் ஆகாத காரியம் ஒன்றும் இருக்க முடியாது. இவர்களுடைய பார்வையினால் ஏதோ ஒரு பொருளை நாடி வருவதாகத் தெரிகிறது. மிக உயர்ந்த பொருளைத் தேடி வருகின்றார்கள். தேவர்களுக்குக் கால் நிலம் தோயாது. இவர்களுக்குக் கால் நிலம் தோய்வதால் இவர்கள் தேவர்கள் அல்லர், மனிதர் களாகத்தான் இருக்க வேண்டும்.

தருமம், கருணை பெருந்தன்மை, மாண்பு, பண்பு முதலிய குணநலன்கள் அனைத்தும் ஒரு வடிவாக இவர்கள் காட்சி தருகின்றார்கள். இவர்கள் தம்மிடமிருந்த மிக்க அரிய பொருள் காணாமல் போக, அதனை இவர்கள் தேடி வருகின்றார்கள் என்பது இவர்கள் பார்வையினால் விளங்குகிறது.

இவர்களிடத்து இல்லாதது சினம் ஒன்றுதான். பொறுமையே ஒரு வடிவாக வந்த சாந்த சீலர்கள். இவர்களுடைய முகத்தில் அருள் வெள்ளம் வழிகின்றது. கண்களில் கருணை பொழிகின்றது. ஒழுக்கமும் பேராற்றலும் படைத்தவர்களாக இருக்கின்றார்கள். மன்மதனும் நாணக்கூடிய பேரழகு படைத்தவர்களாக இருக்கின்றார்கள். ஆ ஆ சிங்கம், புலி, கரடி காண்டாமிருகம் முதலிய விலங்குகள் அதன்தன் கன்றுகளைக் கண்டு காதல் செய்வது போல, கொடிய விலங்குகள் வால்களை அசைத்துக் கொண்டு இவர்களைக் கண்ட மாத்திரத்தில் விலங்குகள் கொடுமை மாறி அடிமையாக அன்பு செய்கின்றன. இவர்களின் பாதங்கள் மண்ணில் தோய்கின்ற பொழுது கல்லும் முள்ளும் மலர்களைப் போல் குழைந்து விடுகின்றன. இத்தகைய அதிசயம் நான் எங்குப் பார்க்க முடியும் ?

மக்களுக்குத் தீமை செய்யும் பேய்களும் இவர்களை கண்டு உள்ளம் உருகி நன்மை செய்கின்றன. வானளாவிய மரங்களும் இவர்களைக் கண்டு சாய்ந்து சாய்ந்து தொழுகின்றன. இவர்கள் தங்கள் அருள் ஆற்றலால் சராசரங்களை எல்லாம் தன்வசப்படுத்துகின்றனர். மயில் முதல் பறவை யினங்கள் இவர்கள்மீது வெயில்படா வண்ணம் நீண்ட சிறகுகளை விரித்து நிழல் தருகின்றன. மேகங்கள் இவர்கள் மீது தண்ணீர்த் திவலைகளைச் சிந்திக் குளிர்ச்சியைத் தருகின்றன. அம்மம்மா இவர்கள் அருள் ஆற்றல்தான் என்னே என் உள்ளம் நீறாய் உருகின்றதோ

இப்படி எண்ணி இராம இலட்சுமணருக்கு முன் சென்று அநுமன் அன்புடன் அஞ்சலி செய்து நின்றார்.

இராமர் அநுமனைப் பார்த்து, "நற்குணம் அமைந்த நம்பியே நீ யார் ?" என்று வினாவினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Feb 11, 2010 3:58 am

அநுமன் கூறுகின்றார், "பயிர் தழைக்க வருகின்ற மஞ்சுபோல் உயிர்தழைக்க வந்த திருமேனியை உடையவரே பெண்களை உற்றுப்பார்க்காத, ஒழுக்கமுள்ள கண்களையுடையவரே சிறியேனுடைய தந்தை வாயுதேவன், என் தாய் அஞ்சனா தேவி, கருணையங்கடலே நான் இதோ இம்மலையில் வாழும் வானர வீரனாகிய சுக்ரீவனுடைய பணியாளன். தங்களை வரவேற்கும் பொருட்டு வந்திருக்கின்றேன். உங்கள் வரவு நல்வரவாகுக .. .." என்றார்.

இராமர், "ஐயனே அந்தச் சுக்ரீவனைத்தான் நாங்கள் தேடிக் கொண்டு வருகின்றோம். அந்தச் சுக்ரீவன் எங்கிருக்கின்றான். உடனே, அவனைக் காட்டு. நாங்கள் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

அநுமார் சிந்திக்கின்றார். "இவர்கள் வாலியினால் அனுப்பப்பட்டுத் தன்னைக் கொல்ல வருகின்றார்களோ என்று அநுமானிக்கின்றார். இப்போது இவர்கள் சுக்ரீவனைத் தேடி வருவதாகச் சொல்கின்றார்கள். வாலியினால் அனுப்பப்பட்டு வந்திருப்பார்களாயின் இவர்கள் திருமுகத்திலே கோபக்குறி இருக்க வேண்டும். கொடுமை நிலவ வேண்டும். ஒருகால் சுக்ரீவனுடைய கருத்தின்படி இவர்கள் வாலியினால் அனுப்பப்பட்டுச் சுக்ரீவனைக் கொல்லத்தான் வந்தவர்களாயின் நாம் சுக்ரீவனைக் காட்டினால். இவர்கள் சுக்ரீவனைக் கொன்று விடுவார்களாயின், அது பெருந்தீமையாக விளைந்துவிடுமே" என்று எண்ணினார்.

இராமரைப் பார்த்து "எம்பெருமானே பேராற்றலும் பெருங்கருணையும் படைத்த தாங்கள் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வருவீர்களாயின் அவனும் அவன் குலமும் உய்யும். வாய்க்கால் மகாநதியை நோக்கிச் செல்லவேண்டும். மகாநதி வாய்க்காலை நோக்கிச் செல்லக்கூடாது. நீங்கள் மகாநதி. சுக்ரீவன் வாய்க்கால். நீங்கள் இங்கே இருங்கள். நான் சென்று என் தலைவனாகிய சுக்ரீவனை அழைத்துக் கொண்டு வருவேன்" என்று கூறி இராமருடைய திருமுகத்தை உற்று நோக்கினார்.

ஒரு வியாபாரி துணியெடுத்து, வாங்க வந்தவனுக்குக் காட்டி விலை கூறி அவன் முகத்தை உற்றுப் பார்ப்பதுபோல் இருந்தது இந்த நிகழ்ச்சி. இராமர் முகத்தில் எந்த மாறுபாடும் இல்லை. ஒரு சந்தன மரத்தை ஒடித்து இராமருக்கு முன் இட்டு அதில் அமருமாறு செய்தார். இவர்கள் யாரென்று உணர முடியவில்லையே என்றும், மிகவும் தகுதி வாய்ந்தவர்களை நீங்கள் யாரென்று கேட்பது முறையல்லவே என்று கருதினார்.

"பெருமானே என் தலைவனை நான் அழைத்து வருவேன். யார் அழைப்பதாக அவரிடம் கூற வேண்டும் ? தங்களை யாரென்று அவரிடத்தில் தெரிவிக்க வேண்டும் ? எனக்கு இதனைக் கட்டளையிடுங்கள்" என்று வணக்கத்துடன் கூறினார்.

இராமர் தங்களை யாரென்று அறிந்து கொள்ளும் பொருட்டு அநுமான் பேசும் இனிய நுண்ணிய சொற்களைக் அகமிக மகிழ்ந்தார்.

"தம்பி இலட்சுமணா இந்த வானரவீரன் கல்லாத கலைகளே இல்லை என்பது இவன் சொல்லாலே விளங்குகின்றது. இவன் சொல்லின் செல்வனாக விளங்குகிறான். இவன் கலைமகளை நாவில் வைத்திருக்கின்ற பிரமதேவனா ? அல்லது சிவபெருமானா ? நம்மை நேரடியாக யாரென்று கேளாமல் என் தலைவனுக்கு உங்களை யாரென்று சொல்லுவேன் என்று கேட்கின்ற சொல் திறம் மிகவும் பாராட்டுக்குரியது".

இலட்சுமணர், "அன்பனே சூரியகுலத் தோன்றலாகப் பத்து ரதங்களை வென்று உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் திருமைந்தர் இவர். இராமர் என்றும் பெயரை உடையவர். சிறிய தாயாரின் சொல்லுக்கு இணங்கித் தன் அரசச் செல்வத்தைத் தன் தம்பியாகிய பரதனுக்கு வழங்கிவிட்டுத் தவம் புரியக் கானகம் வந்திருக்கின்றார். நான் இவருடைய பணியாளன்."

"தம்பி என்னும் படிக்கு அன்று, அடியாரின் ஏகுதி" என்று சுமத்திரை இலட்சுமணரை நோக்கிக் கூறியிருப்பதனால் இங்கு இலட்சுமணர் தம்மைத் தம்பி என்று சொல்லிக் கொள்ளாமல் அடியவன் என்று அடக்கத்துடன் கூறினார். ஆனால், மாருதி இராமருடைய தம்பி இலட்சுமணர் என்று தெரிந்து கொண்டார்.

மாருதி தாம்போய், தம் தலைவனை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுச் சுக்ரீவனிடம் வந்தார். தனக்கு என்ன இடர் விளையுமோ என்று துடிதுடித்திருக்கின்ற சுக்ரீவனிடம போய், வாலிக்குக் காலன் வந்திருக்கின்றார் என்று கூறினார். சுக்ரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிந்து அங்கு வாழுகின்றான். அவனுக்கு இராமன் வந்தார் என்று கூறினால் அவனது அச்சம் அகலாது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற திருக்குறளின் படி சுக்ரீவனுக்கு யாரிடம் அச்சம் அகாலதிருக்கின்றதோ அவனுக்கு எமன் வந்தான் என்று கூறும் திறம் மிகமிக உயர்வானது.

"சுக்ரீவா உன்னுடைய துன்பம் நீங்கி இன்பம் விளையப் போகின்றது. இராமர் வாலியைக் கொன்று உனக்க வாழ்வு தருவார். நராயணராகிய பரம்பொருளே இராமராக ஆதரித்திருக்கின்றார். நீதி நிறைந்தவர். விசவாமித்திரர் தந்த அளவில்லாத தெய்வப் படைக்கலன்கள் உடையவர். தாடகையையும் சபாகுவையும் ஒரே பாணத்தால் வதைத்தவர். அகலிகை;குக் கல்லுரு அகற்றி நல்லுரு தந்தவர். அளவில்லாத கற்புடைய சிறிய தாயராகிய கைகேயியின் கட்டனைக்கிணங்கித் தன் அரச பதவியைத் தம்பிக்கு ஈந்தவர். பரசுராமனை ஒரு விநாடியில் வென்றவர். விராதனைக் கொன்றவர், அரனிடம் வரம் பெற்ற கரன் முதலிய அரக்கர்களை எளிதாகக் கொன்றவர். எனவே, இராமருடைய தொடர்பினால் உனக்கு வாழ்வும் வளமும் உண்டாகும்" என்று அநுமார் கூறினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Mar 01, 2010 11:37 pm

அண்ணியின் அணிகலன்கள்

சுக்ரீவன் தனது முதலமைச்சராகிய அநுமனுடைய அமுத வசனங்களைக் கேட்டு அக மிக மகிழ்ந்தான். தொலைவில் நின்று பகவானை உற்ற நோக்கினான். அவருடைய திருமேனியையும் திருவருட்பொலிவையும் கண்டு அப்படியே நிலைத்து நின்றுவிட்டான். கண்கள் இமை கொட்டாமல் கண்டு களித்தான். பிரமதேவன் படைத்த உலகங்களிலே உள்ள அத்தனை ஆன்மாக்களும் செய்யும் புண்ணியம் முழுவதும் திரண்டு இரண்டு வடிவங்களாக வந்திருக்கின்றன போலும் என்று எண்ணி இறும்பூதடைந்தான்.

பெருமானை அணுகி அவரை அஞ்சலி செய்தான். இராமச்சந்திரமூர்த்தி அவனைத் தழுவி அக மகிழ்ந்தார். இராமனும் சுக்ரீவனும் இருந்த காட்சி, முன் செய்த தவமும் முயற்சியும் ஒருங்கு இணைந்ததுபோல் இருந்தது. இராமர் சூரிய குலத்து மன்னர். இவன் சூரிய குமாரன். இனம் இனத்தோடு சேர்ந்தது அன்றியும் சுக்ரீவன் மனைவியை வாலி கவரந்துகொண்டான். இராம பிரான் மனைவியை இராவணன் கவர்ந்துகொண்டான். மனைவியைப் பிரிந்து வாழ்கின்றவர்களுக்குத்தான் மனைவியைப் பிரிந்த கவலை மீதியும். ஆதலால், இந்த இருவரும் ஒன்றுபட்டிருந்தனர்.

சுக்ரீவன் இராமரை நோக்கி, "கருணைக்கடலே! தங்களை நான் துணையாகப் பெற்றேன். நான் பெருந்தவம் செய்திருக்கின்றேன். ஆதலால், தேவரீருடைய துணை எனக்குக் கிடைத்தது. இந்த வகையில் என்னைப்போல் தவம் செய்தவர் எவரும் இல்லை" என்றான்.

இராமர், "அன்பனே! மதங்காசிரமத்தில் சபரி என்ற சகோதரி உன்னுடைய குணநலங்களை எனக்கு உரைத்து, உன்னையடையுமாறு கூறினாள். நான் உன்னை நாடி வந்திருக்கின்றேன்" என்றார்.

சுக்ரீவன், "ஐயனே! என் அண்ணனாகிய வாலி குற்றஞ் செய்யாத என்னை அடித்து, உதைத்து நொறுக்கி, ஓடஓட விரட்டி, என்னைத் துன்புறுத்திக் கொல்ல முயற்சி செய்தான். இம்மலைக்கு வந்தால் என் அண்ணன் தலை ஆயிரம் துண்டாக வெடிக்கும். இது மதங்க முனிவரின் சாபம். ஆதலால், இம்மலையில் சுகம் இன்றி வாழுகின்றேன். என்னைக் காப்பது தங்கள் கடன்" என்றான்.

இராமச்சந்திர மூர்த்தி அவனைக் கட்டித்தழுவி, "சுக்ரீவா! இன்று முதல் நீ எனக்கு தம்பி, தசரதச் சக்ரவர்த்திக்கு ஆறு புதல்வர்கள். உனக்கு உற்றவர் எனக்கு உற்றார். உனக்கு பகைவர்கள் எனக்குப் பகைவர்கள் உனக்குள்ள இன்ப துன்பங்கள் எனக்கும் உள்ளனவானும். இது உண்மை" என்று கூறி ஆறுதல் செய்தார்.

இவ்வாறு இராமர் சுக்ரீவனுக்கு அபயந் தந்தவுடன் வானவர் மலர்மழை பொழிந்தார்கள். அநுமார் புளகாங்கிதம் அடைந்தார். வாநர வீரர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். எல்லாரும் சுக்ரீவன் இருக்கும் குகைக்குச் சென்றார்கள்.

சுக்ரீவன் தன் இருப்பிடத்துக்கு வந்த இராமருக்கு ஆசனந்தந்து அடி வணங்கி, பாக்கு மடலில் கொம்புத் தேனைவிட்டு மா, பலா, வாழை, முதலிய கனிகளைத் திருத்தி எம்பெருமானுக்கு உவகையுடன் தந்து உண்பித்தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Mar 01, 2010 11:38 pm

இராமர் எண்ணுகின்றார். இல்லற நெறியில் மனைவியோடு வாழ்கின்றவன் விருந்தினருக்கு மனைவியைக் கொண்டு உணவு படைக்க வேண்டும். அதுதான் விதி. மனைவி இருக்க ஆண்கள் படைப்பது விதியாகாது. அங்கே சுக்ரீவனின் மனைவி, உணவு படைக்கவில்லையே என்று கருதி, "தம்பி! மனை வாழ்வுக்குத் துணைசெய்யும் மனைவியை நீயும் பிரிந்திருக்கின்றனையோ?" என்று கேட்டார்.

இராமருடைய இன்னுரையைக் கேட்ட சுக்ரீவன் கண் கலங்கி நின்றான். சத்திய வசனத்தையுடைய அநுமார் கூறு வாராயினார்!

"எம்பெருமானே! வானுலகில் நிகழ்ந்த ஒரு விழாவில் ஆதித்தனுடைய தேர்ப்பாகனாகிய அருணபகவான் பெண் குரங்கா வடிவெடுத்தனன். அப்பொழுது அப்பெண் குரங்கை இந்திரன் மருவிப் பிறந்தவன் வாலி. அப்பெண் குரங்கை ஆதித்தன் மருவிப் பிறந்தவன் சுக்ரீவன். வாலியும் சுக்ரீவனும் சகோதரர்களாய் எழுபது வெள்ளம் வாநர சேனைகளுடன் கிட்கிந்தையை அரசு புரிந்து வந்தார்கள். வாலியின் மனைவி தாரை. சுக்ரீவன் மனைவி ருமாதேவி.

திருமாலின் அம்சமாகிய உபேந்திரன் அங்கதனாக வந்து பிறந்தான். வாலி அளவில்லாத வலிமையை உடையவன். தன்னை எதிர்த்துப் போர் புரிபவரின் வலிமையில் பாதி வலிமை அவன்பால் எய்தும். இது சிவபெருமான் கொடுத்த வரம். தேவரும் அசுரர்களும் பாற்கடலைப் பலநாள் கடைந்ததும் அமிர்தம் தோன்றாமையால் வருந்தினார்கள். சிவபூiஜ செய்யும் பொருட்டு அங்கே சென்ற வாலி ஒருவனே பாற்கடலைக் கடைந்து கடைந்து அமிர்தம் தோன்றுமாறு செய்தான்.

ஆதிசேஷன் கிடந்து தாங்கும் உலகை, இவன் நடந்து தாங்குவான். அவனுடைய மார்பில் முருகனுடைய வேலும் செல்லாது, அவனுடைய வால் செல்லாத இடத்தில் மட்டும், இராவணனின் செங்கோல் செல்லும்..

ஒரு சமயம் மாயாவி என்ற கொடிய அரக்கன் வாலியிடம் போர் செய்து தோற்று ஒரு பிலத்துவாரத்தில் ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திக் கொண்டு வாலியும் பிலத்துவாரத்தின் உள்ளே சென்றான். பிலத்துவாரத்தினுள் வாலியும் மாயாவியும் இருபத்தெட்டு மாதங்கள் போர் புரிந்தார்கள். அண்ணனுக்குத் துணை செய்யச் சுக்ரீவனும் பிலத்துவாரத்துக்குள் நுழைய முயன்றான். வாநர வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். மாயாவியை வாலி கொன்றான். அவனது உதிரம் பிலத்தின் முகப்பில் கொப்பளித்து வந்தது. அதைக் கண்டு அஞ்சிய வாநரர்கள், சிறு சிறு குன்றுகளைக் கொண்டு வந்து பிலத்துவார முகப்பை அடைத்துச் சுக்ரீவனைக் கொண்டுபோய் அரசனாக முடி சூட்டினார்கள். சுக்ரீவன் பலமுறை மறுத்தும் வாநரர்கள் கேட்கவில்லை.

வாலி மாயாவியை வதைத்துவிட்டு முகப்பில் அடைத்திருந்த குன்றுகளைக் காலால் உதைத்துத் துகளாக்கி, இதைச் செய்தவன் சுக்ரீவன் என்று கருதி, அவனை அடித்து இடர்ப்படுத்தினான். சுக்ரீவன் வாலியின் காலில் வீழ்ந்து அண்ணா! என்னைக் கோபிக்காதே. இதை நான் செய்தேனில்லை. தாங்கள் இருக்க நான் அரசு புரிவேனா? தலையிருக்க வால் ஆடுமா? நான் உனக்கு என்றும் அடிமை என்று கூறியும் வாலி சினந்தணிந்தானில்லை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Mar 01, 2010 11:38 pm

எட்டுத் திக்குகளிலும் உதிரம் சிந்த விரட்டி விரட்டி அடித்தான். இம்மலைக்கு வந்து உயிர் தப்பினான்.

சுக்ரீவனுடைய மனைவி ருமாதேவியையும் வாலி தனக்கு மனைவியாக்கிக் களங்கப்படுத்திக் கொண்டான்."

தம்பிக்குத் தன் அரசைக் கொடுத்த தயாநிதியாகிய இராமர் இதனை கேட்டுப் பொறுப்பாரோ? அவரது கண்கள் சிவந்தன. மணியதரம் துடித்தது.

"சுக்ரீவா! வாலி இருக்குமிடம் காட்டு. அவனைக் கொன்று உனக்கு முடி சூட்டுவேன்" என்று கூறினார்.

வாலியை இராமபிரானால் கொல்ல முடியுமா என்று சுக்ரீவன் ஐயுற்றான். அநுமார் சுக்ரீவனைத் தனியாக அழைத்துக் கொண்டுபோய், "மன்னவனே! அளவில்லாத வலிமையுடைய வாலியை இராமர் கொல்லக் கடவரோ என்று நீ சந்தேகப்படுகின்றனை. வானளாவிய மராமரங்களை இராமருடைய கணை தொளைக்குமானால் வாலியின் மார்பையும் துளைக்கும். நாம் இதனைச் சோதித்து அறியலாம்" என்று கூறினார்.

இருவரும் சேர்ந்து போகின்ற வழியில் வானளாவிய ஏழு மரங்கள் நின்றன. கல்லினும் இரும்பினும் வலியதாக இருந்தன.

சுக்ரீவன் இராமரை நோக்கி, இந்த மரங்களைத் தொளைக்க இயலுமோ? என்று வினவினான். இராமர்;, நமது ஆற்றலை இவன் சோதிக்க எண்ணுகிறான் என்று எண்ணிக் கோதண்டத்தை எடுத்த எட்டுச்திசையும் செவிடுபட நாணொலி உண்டாக்கினார். அதைக்கேட்டு வாநரங்களும் வானவர்களும் எட்டுத் திக்கிலும் ஓடி ஒளிந்தார்கள். இலட்சுமணர் ஒருவர்தான் அஞ்சாமல் நின்றார். மற்றவர்கள் உடலும் குடலும் நடுங்க ஓடினார்கள்.

இரகுநாதர் சிறந்த பாணத்தை ஏவினார். அது ஏழு மரங்களையும் துளைக்க, அந்த ஏழு மரங்களும் வேரோடு வீழ்ந்தன. ஏழு என்ற எண்ணிக்கையுடைய ஏழு முனிவர்களும், ஏழு கடல்களும், ஏழு மாதாக்களும், ஏழு மேகங்களும், ஏழு உலகங்களுடம் ஏழு மலைகளும், ஏழு குதிரைகளும் அஞ்சி ஏழு என்ற எண்ணிக்கையில் இராமர் பாணம் தொளைக்குமோ என்று நடுங்கி நின்றன.

இதைக்கண்ட சுக்ரீவன், ஒரு மரத்தைத் தொளைப்பதே அரிது. ஒரே பாணத்தால் ஏழு மரங்களையும் தொளைத்தார் என்றால்.. . இது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த மரங்களைத் தொளைத்து கணை வாலியின் மார்பையும் தொளைக்கும் என்று ஐயம் தீர்ந்தான். இராமரை துதி செய்தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Mar 01, 2010 11:39 pm

துந்துபி

பின்னர் அவர்கள் போகிற வழியில் துந்துபி என்ற எலும்பு மலைபோல் கிடந்தது. இராமர், "சுக்ரீவா! இது என்ன எலும்பு?" என்று கேட்டார்.

சுக்ரீவன், "ஐயனே! துந்துபி என்ற கொடிய அரக்கன் மலைபோன்ற கரிய பெரிய வடிவை உடையவன், வாலியிடம் போருக்கு வந்தான். வாலி அவனுடன் கடும்போர் புரிந்து அவனைக் கொன்றான். அவனடைய உதிரம் எங்கும் சிந்தின அவனுடைய எலும்பே இது" என்றான்.

இராமர் இலட்சுமணரைப் பார்த்து, "தம்பி! நீ இதனை அகற்று" என்றார்.

இலட்சுமணர் கால் பெருவிரல் உந்தினார். அந்தத் துந்துபியின் எலும்பு பிரமலோகம் வரை சென்று மீண்டும் மண்ணுலகில் வீழ்ந்தது. சுக்ரீவன் இலட்சுமணருடைய பேராற்றலைக் கண்டு. இவர் இராமபிரானுக்கு இளையான், ஆற்றில் இளையான்.. . என்று மதித்து துதித்து மகிழ்ந்தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Mar 01, 2010 11:39 pm

அணிகலன் காணுதல்

இராமபிரான் தம்முடைய அன்பர்களுடன் ஒரு சோலையில் அமைதியாக அமர்ந்தார். அப்பொழுது சுக்ரீவன் இரகு நாயகனை வணங்கி, "ஐயனே! நாங்கள் இந்த மலையின் உச்சியில் ஒரு சமயம் இருக்கும் பொழுது இராவணன் ஒரு பெண்மணியைக் கவர்ந்து செல்வதைக் கண்டோம். அந்தப் பெண்மணி நாங்கள் தூதுவர்களாகத் தங்களைச் சந்திப்போம் என்று கருதியோ, யாதோ தன் அணிகலன்களைக் கழற்றி கண்ணீர்த் துளிகளோடு எங்களை நோக்கி விட்டெறிந்தாள். அந்த அணிகலன்களை நாங்கள் பாதுகாவலாக வைத்திருக்கின்றேறோம். எம்பெருமானே! அதனைக் கொண்டு வந்து காட்டுவேன். அது அம்மையின் அணிகலன்களா என்று பாருங்கள்" என்று கூறிச், சீதாதேவியின் அணிகலன்களைக் கொண்டுவந்து பெருமான் திருமுன் வைத்தான்.

இராமர் அந்த அணிகலன் பொதியை அவிழ்த்துக் கண்ணுற்றார். அவையனைத்தும் தேவியின் அணிகலன்கள். இவை அத்திரி முனிவரின் அருந்தவப் பத்தினியாகிய அநுசூயை தேவிக்கு தந்தவையாகும்.

இராமர் அவற்றைக் கண்டு கண்ணீர் வடித்தார், உள்ளம் துடித்தார்.

"தம்பீ! இலட்சுமணா இந்தத் தலையில் அணியும் நவரத்னப் பதக்கம் உன் அண்ணியினுடைதுதானே பார்?"

"அண்ணா, இது எனக்குத் தெரியவில்லை "

"தம்பீ! இந்தத் தோடு உன் அண்ணியனுடையதுதானே? "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்த மூக்குத்தி உன் அண்ணியினுடையதுதானே? "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்தக் கண்டமாலை உன் அண்ணியினுடையது தானே? "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்த வளையல்கள் உன் அண்ணியினுடையவை தானே! "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்த ஒட்டியாணம் உன் அண்ணியினுடையது தானே! "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இலட்சுமணா! இந்தக் காலாழி உன் அண்ணியினுடையதுதானே? "

"அண்ணா! இது என் அண்ணியினுடையதுதான் .. .. சந்தேகமில்லை" என்றார்.

"தம்பீ! இத்தனை அணிகலன்களுக்கும் அடையாளம் தெரியவில்லையே? இந்த ஒன்றுக்கு மட்டும் எப்படி அடையாளம் தெரிந்தது?" என்று கேட்டார்.

"அண்ணா! இந்தப் பதினான்கு ஆண்டுகளிலும் தேவரீருக்கும் என் தாய் சீதாதேவிக்கும் பாத பூiஜ செய்யும் பொழுது பாதந் தவிர வேறு திருமேனி அங்கங்களைப் பார்த்தேனில்லை. அதனால், ஏனைய அணிகலன்களுக்கும் அடையாளந் தெரியவில்லை. காலாழிக்கு மட்டும் அடையாளந் தெரிந்தது. "

இந்த வசனத்தைச் சுக்ரீவன் முதலியோர் கேட்டு, இவரல்லவா தம்பி, இப்படி இருந்தால்தானே இருக்கலாம் நம்பி, இவர் நற்குண நம்பி. ஒழுக்கத்தின் தங்கக் கம்பி என்று பாராட்டினார்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Mon Mar 01, 2010 11:40 pm

இராமர், "ஆதித்தன் மகனே! அருமை நண்பனே! சீதை துன்பத்தால் துள்ளித் துடித்து, இந்த நகைகளை முடித்து உங்கள் பால் எறிந்தனளே, இதைவிடத் துன்பம் வேறு எனக்கு உண்டா? கற்புடைய பெண்கள் கணவனை இழந்தபின் அணிகலன்களைக் கழற்றி எறிவார்கள். நான் இருக்கவே சீதை அணிகலன்களைக் கழற்றி எறிந்தனளே. இதனால், நான் மாண்டேனா, இதனால் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் உள்ளம் உலைகின்றது. "

"சுக்ரீவா! என்னுடைய முன்னோர்களாகிய சகரர்கள் கடலைத் தோண்டினார்கள். அதனால், அது சாகரம் என்று பேர் பெற்றது.

என் குலத்து மூதாதையாராகிய பகீரதன் விண்ணிலிருந்து கங்கா நதியை மண்ணுலகிற்குக் கொண்டு வந்தார். கங்கை பாகீரதி என்று பேர் பெற்றாள்.

என் தந்தையாகிய தசரதர் சம்பராசூரனைக் கொன்று இந்திரனுக்குப் பொன்னுலகை வழங்கினார்.

இத்தகைய அரிய பெரிய ஆதித்தன் குலத்தில் பிறந்த நான் தாலி கட்டிய மனைவியின் துன்பத்தைக் களையாமல் வில்லையும் பழிச் சொல்லையும் தூக்கிக் கொண்டு அலைகின்றேன். என்று பலவாறாகப் புலம்பி அழுதார்.

அநுமர் எம்பெருமானைத் தொழுது நீங்கள் வருந்தாதீரகள். வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடிசூட்டி விட்டால், எழுது வெள்ளம் வாநரங்களும் நம் வசமாகும். நாம் சீதையைத் தேடி இராவணனைக் கொன்று, சீதையைச் சிறை மீட்கலாம். வாலி வதம் நாளை செய்யலாம் என்றார் எல்லாரும் இளைப்பாறினார்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum