புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
17 Posts - 2%
prajai
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
jairam
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_m10பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:58 am


இந்து தலைவர்கள் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, "போலீஸ்' பக்ருதீன், சென்னையில் கைதானதை தொடர்ந்து, அவனது கூட்டாளிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர், ஆந்திர மாநிலம் புத்தூரில், போலீசாரின், 24 மணி நேர ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த, பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.

சென்னை சூளை சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, "போலீஸ்' பக்ருதீனை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் அவரது சகாக்கள் அடையாளம் கண்டு கைது செய்தனர். அப்போது, "போலீஸ்' பக்ருதீனை காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட, மேலும், மூவரும் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் நால்வரும், உடனடியாக, ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். "போலீஸ்' பக்ருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூட்டாளிகளான, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் இருப்பிடம் தெரிந்தது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகில் ஒரு வீட்டில், அவர்கள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணியை அடுத்து தமிழக எல்லையில் இந்த ஊர் உள்ளது.

அக்., 4ம் தேதி நள்ளிரவு 12:00 மணி: அடுத்த கட்ட "ஆபரேஷனை' சிறப்பு புலனாய்வு பிரிவினர் துவக்கியதுடன், இரவோடு இரவாக, ஆந்திர மாநில போலீசாரின் உதவியும் நாடப்பட்டது. கடந்த, அக்., 4ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, புத்தூர் பகுதியில், ரயில் நிலையம் மற்றும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள, புத்தூர் கேட் பகுதிக்கு போலீசார் சென்றனர். சிறப்பு புலனாய்வு குழு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார், சென்னை ஆயுதப்படை போலீசார், உட்பட, 50க்கும் மேற்பட்டோர், ஆந்திர மாநிலம், நகரி, இன்ஸ்பெக்டர் சிவபாஸ்கர் ரெட்டி தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், அப்பகுதியை சுற்றி வளைத்தனர். புத்தூர் கேட்டில், மேதர் தெருவில், அருகருகே உள்ள இரண்டு வீடுகளில், அவர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நள்ளிரவு, 1:30 மணி: அதில் ஒரு வீட்டிற்கு, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர், சென்றனர். வீட்டின் கதவை, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தட்ட, உள்ளிருந்தவர்கள் கதவை திறந்து எட்டிப்பார்த்து, உஷாராகினர். திடீரென, இன்ஸ்பெக்டர் லட்சுமணனை உள்ளே இழுத்து கதவை பூட்டினர். அப்போது, வீட்டினுள் இருந்து துப்பாக்கியால் வெளியில் சிலர் சுட்டனர். வெளியில் தயாராக இருந்த போலீசாரும், வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீட்டிற்குள் நுழைய முயற்சி"த்த, ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் மீது, "டியூப் லைட்' தாக்குதல் நடந்தது. அதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது, வெட்டுக் காயங்களுடன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வீட்டில் இருந்து வெளியில் வந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த போலீசார், லட்சுமணனை, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, முதலுதவி அளித்ததுடன், சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவு, 2:00 மணி: தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில், துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், "கியூ' பிரிவைச் சேர்ந்த, இன்ஸ்பெக்டர் நரசிம்மன், போலீசார் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அருகருகே உள்ள இரண்டு வீடுகளில், ஒரு வீட்டில் இருந்து ரியாஸ், ஆலிவ் ஆகிய பயங்கரவாதிகள் தப்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த பகுதியை போலீசார் ஆய்வு செய்து, கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றை கைப்பற்றினர்.

அக்., 5ம் தேதி, அதிகாலை, 4:00 மணி: இச்சம்பவத்தை தொடர்ந்து, இரு மாநில போலீசாரும் புத்தூரில்அதிகளவில் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் இருந்து, பயங்கரவாதிகள் இருவர் தப்பியதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, போலீசாரை பயங்கரவாதிகள், எச்சரித்துள்ளனர். வீட்டில் தங்கியிருந்த பயங்கரவாதிகளிடம், பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம் என்று கருதிய போலீசார், சுற்றிலும் குடியிருந்த பொதுமக்களை, அப்போதிருந்தே, வெளியேற்ற துவங்கினர்.

அதிகாலை, 5:00 மணி: போலீஸ் அதிகாரிகள், வீட்டினுள் இருப்பவர்கள் குறித்த தகவல்களை அறிய, முற்பட்டனர். அப்போது, வீட்டினுள், மூன்று ஆண்கள், ஒரு பெண், இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்தது. பெண் மற்றும் குழந்தைகள் இருப்பதை அறிந்த போலீசார், தாக்குதல் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

காலை 6:00 மணி: வீட்டில் இருந்த பயங்கரவாதிகளில் ஒருவன், "ஜிகாத், ஜிகாத்' என்று சத்தமிட்டதுடன், "நாங்கள் இறக்க தயாராக உள்ளோம். ஆனால், வீட்டை உடைக்க முயற்சித்தாலோ, உள்ளே வர முயன்றாலோ, எங்களிடம் உள்ள, 200 வெடிகுண்டுகளை வெடிக்க செய்வோம்' என, மிரட்டினான். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருந்தனர்.

காலை, 7:00 12:00 மணி: தொடர்ந்து, காலை, 7:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதுடன், பேச்சுவார்த்தை தொடர்ந்தது. போலீசார் வெளியில் இருந்து, "நாங்கள் இருக்கிறோம். பயப்படாமல் வெளியில் வந்து விடுங்கள்... உங்களை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்' என்று சத்தமாக குரல் கொடுத்தனர். ஆனால், எதிர் தரப்பில், அதற்கு ஒத்துழைப்பில்லாமல், "உள்ளே வந்தால், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வோம்' என்று எச்சரித்தனர். அந்த நேரத்தில், பிலால் மாலிக் கைது செய்யப்பட்டதாக, ஆந்திர டி.ஜி.பி., தெரிவித்ததாக தகவல் பரவியது

பகல், 12:10 மணி: சித்தூர் மாவட்ட எஸ்.பி., கிரான்டி ராணா டாடா தலைமையில், மூன்று பட்டாலியன் போலீசார், வந்தனர். மேலும், "ஆக்டோபஸ்' எனும், பயங்கரவாதிகள் நடவடிக்கை தடுப்பு அமைப்பைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர், நவீன ஆயுதங்கள், ஏணி உள்ளிட்டவற்றுடன் ஆஜராகினர். இருந்தாலும் இரு தரப்பிற்கும் இடையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. "பிலால் மாலிக் கைது' தகவல், தமிழக போலீசால் மறுக்கப்பட்டது.

பிற்பகல், 1:00 மணி: தமிழக, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திர பால் சிங் மற்றும் அதிகாரிகள், வந்தனர். அப்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால், அருகில் உள்ள வீடுகளின் மேல்நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். போலீசாரும் இறுதி நடவடிக்கைக்கு தயாராகினாலும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை வெளியில் பாதுகாப்பாக அனுப்பி விடும்படி, போலீசார், பயங்கரவாதிகளிடம் தெரிவித்ததுடன், "அவர்களுக்கு ஒன்றும் நேராது' என்றும் உத்தரவாதம் அளித்தனர்.

பிற்பகல், 1:30 மணி: துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பயங்கரவாதிகளை எச்சரிக்க போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர்.

பிற்பகல், 2:00 மணி: வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர்.

பிற்பகல், 2:10 மணி: போலீசாரின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட பயங்கரவாதிகள், தங்களுடன் தங்கியிருந்த, ஒரு பெண், மூன்று வயது ஆண் குழந்தை, ஒன்றரை வயது குழந்தை மற்றும் ஆறு மாத குழந்தை ஆகிய மூன்று குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினர். அவர்கள், பத்திரமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிற்பகல், 2:20 மணி: போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், "தாக்குதல் நடத்த மாட்டோம்' என, உத்தரவாதம் அளித்தனர்.

பிற்பகல், 2:35 மணி: போலீசாரின் உத்தரவாதத்தையடுத்து, 2:35 மணிக்கு, பயங்கரவாதிகள், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும், வீட்டில் இருந்து வெளியில் வந்து, போலீசிடம் சரணடைந்தனர். முன்னதாக, மயக்க புகை வீட்டினுள் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டதால், இருவரையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிற்பகல், 2:45 மணி: அப்பகுதி, பொதுமக்கள் சகஜமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். போலீசார் எண்ணிக்கை குறையத் துவங்கியது. பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நுழைந்து, சோதனை நடத்தத் துவங்கினர்.

பிற்பகல், 2:55 மணி: அக்., 4ம் தேதி, மாலை, 4:00 மணி முதல், 5ம் தேதி, பிற்பகல், 2:55 மணி வரை போலீசாரின், "ஆபரேஷன்' முடிவுக்கு வந்தது.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 3:59 am

புத்தூரில் பயங்கரவாதிகள் ஒளிந்திருந்தது ஏன்?

பயங்கரவாதிகள் புத்தூரை தேர்வு செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புத்தூரில், இவர்கள் தங்கியிருந்த புத்தூர் கேட், மேதர் தெருவில் குடியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாக இருப்பதும், வீடுகள் நெருக்கமாக அமைந்திருப்பதும், இவர்களுக்கு மிகுந்த வசதியாக இருந்துள்ளது. மேலும், அங்கு தற்போது தெலுங்கானா பிரச்னை நடந்து வருவதால், அவர்களை போலீசார் கவனிக்க வாய்ப்பில்லை என கருதி, தங்கியதாக கூறப்படுகிறது.இந்தப் பகுதியில், 100 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் கைத்தொழில் செய்பவர்கள்; அங்குள்ள நான்கு பகுதி கொண்ட ஒரு வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டை, 1,500 ரூபாய் வாடகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னும், மற்றொரு வீ"ட்டை, அதே வாடகையில், ஆறு மாதத்திற்கு முன்னும் எடுத்துள்ளனர்.இங்குள்ளவர்கள், தினசரி காலை, 6:00 மணிக்கு வெளியில் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவர். இதனால், இவர்கள் குறித்த எந்த தகவலும், தெரியவில்லை. மூன்று அறைகள் கொண்ட , முதல் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு, போலீசார் உள்ளே சென்றனர். அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். அடுத்துள்ள வீட்டில், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் மறைந்திருந்தனர்.அவர்களுடன் இருந்த பெண் மற்றும் குழந்தைகள், பிலால் மாலிக்கின் மனைவி மற்றும குழந்தைகள் என, கூறப்படுகிறது. அவர்களை கேடயமாக பயன்படுத்தி, தப்பிக்க முயற்சி நடந்ததாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆந்திர டி.ஜி.பி., பிரசாத் ராவ் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கிறது என்பதை, சித்தூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் கேட்டு அறிந்து கொண்டேன். ஆந்திராவில், போராட்டம் நடந்து கொண்டிருப்பதாலும், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, திருமலைக்கு வர உள்ளதாலும், அதற்கான பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழக போலீசாருக்கு உதவ, "ஆக்டோபஸ்' சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டனர். புத்தூரில் பதுங்கிய பயங்கரவாதிகள், "அல்உம்மா' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று உளவுப்பிரிவு கூறியுள்ளது; இவர்கள் பதுங்கிய வீட்டிற்கு அருகில், ரயில் பாதை உள்ளது. ஏதேனும் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு, ரயிலில் ஏறி தப்பிக்கும் எண்ணத்திலும், ஆந்திரா முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், இவர்களை போலீசார் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்திலும், இந்த வீட்டிற்கு வந்திருக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:00 am

மூன்று பேரின் பின்னணி இதுதான் :

கடந்த, 2011ல், ஊழலுக்கு எதிராக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி விழிப்புணர்வு யாத்திரை நடத்தினார். அதே ஆண்டு, அக்., 28ல், மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் புறப்படுவதற்கு, ஒருமணி நேரத்திற்கு முன், திருமங்கலம் அடுத்த, ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில், இரண்டு, 'பைப்' வெடிகுண்டுகள் இருப்பது, அப்பகுதியைச சேர்ந்த சிலரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவல்படி, போலீசார் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழித்தனர். இவ்வழக்கில், மதுரை நெல்பேட்டை, 'போலீஸ்' பக்ருதீன், 35, அவர் நண்பர் பிலால் மாலிக், 25, ஆகியோர், முதல், இரண்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 2011, அக்டோபர் முதல், தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.

சேலத்தில் பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், பா.ஜ., பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்குகளில், 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்டோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

'போலீஸ்' பக்ருதீன்:

'அல் - -உம்மா' பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இமாம் அலி, ஹைதர் அலி, மதுரை மேலூர் ஓவாமலை குண்டுவெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டனர். 2002ல், அவர்களை மதுரையில் இருந்து, பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில், திருமங்கலத்தில், போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் கூட்டாளிகள் மீட்டுச் சென்றனர்.இச்சம்பவத்தில் தான், 'போலீஸ்' பக்ருதீன், முதன்முறையாக ஈடுபட்டார்.இவரது தந்தை சிக்கந்தர், போலீஸ் ஏட்டாக இருந்தவர். இதனாலேயே பக்ருதீன் பெயரில், 'போலீஸ்' ஒட்டிக் கொண்டது.பெங்களூரில், இமாம் அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட, இப்ராகிமின் மைத்துனர் தான், பக்ருதீன். இவர் மீது, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இமாம் அலியை மீட்டுச் சென்ற வழக்கில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன், விடுவிக்கப்பட்டார்.கடந்த, 2010ல், நெல்பேட்டையில் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி, வீடுகளில், போலீசார் சோதனையிட்டனர். அப்போது உதவி கமிஷனர் வெள்ளைத் துரையுடன், பக்ருதீன், தகராறு செய்த வழக்கும், வேலூர் சிறையில் இருந்தபோது, ஜெயிலருடன் மோதலில் ஈடுபட்ட வழக்கும், இவர் மீது நிலுவையில் உள்ளன.இது தவிர, கடந்த ஜூன், 26ம் தேதி, மதுரை, நேதாஜி சாலையைச் சேர்ந்த, இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொலை வழக்கு, வேலூரில், ஜூலை 1ம் தேதி வெள்ளையப்பன், ஜூலை, 19ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை வழக்கிலும், 'போலீஸ்' பக்ருதீன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எதையும் செய்யும் மாலிக்:

நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக், எந்த அமைப்பையும் சேராதவர். 2005ல், மதுரையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்போது, 17 வயதான பிலால் மாலிக் சேர்க்கப்பட்டார். 'மைனர்' என்பதால், இவருக்கு மட்டும், தனி விசாரணை நடந்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பூசாரி கங்காதரன் என்பவர், கொலை செய்யப்பட்ட வழக்கில், 'பிடிவாரன்ட்'டும் நிலுவையில் உள்ளது.'போலீஸ்' பக்ருதீனுடன் இணைந்து, பல்வேறு சம்பவங்களில், பிலால் மாலிக் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அத்வானி ரத யாத்திரை, மதுரையில், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார், ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் ஆகியோர், கொலை வழக்கிலும், பிலால் மாலிக்கிற்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

தியாகப்படையை சேர்ந்தவர்கள்?

'போலீஸ்' பக்ரூதீனும், பிலால் மாலிக்கும், 'அல் - முஜாகிதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் கருதுகின்றனர். இதன் உறுப்பினர், தாங்கள் சார்ந்த மதத்திற்காக உயிர் தியாகம்கூட செய்ய தயாராக இருப்பதால், 'தியாகப்படை' என்றழைக்கப்படுகிறது.பாகிஸ்தானில் கூட தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் மறைமுகமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவர் மீதும், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பன்னா இஸ்மாயில்:

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர், பன்னா இஸ்மாயில், 37. அங்கு செயல்படும் வாரச் சந்தையில் பணம் வசூலிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அடிப்படைவாத அமைப்புகளில் ஈடுபாடு கொண்டவர். இதில் ஈடுபட்டு வந்த, கிச்சான் புகாரி உள்ளிட்டவர்கள் உடனும், தொடர்பில் இருந்துள்ளார். மேலப்பாளையத்தில், 1997ல், முஸ்லிம் பெண் ஒருவர், வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில், நடுத்தெருவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பன்னா இஸ்மாயில், முதன்முதலில் கைதானார். பின், 2002ல், மேலப்பாளையத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கு; 2004ல் கொலை முயற்சி வழக்கு ஆகியவற்றில் கைதானார். மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், அவர் மீது, ஆறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. மேலப்பாளையம் தொடர்புடைய அனைத்து வழக்குகளிலும், விடுதலை பெற்றுள்ளார்.சில மாதங்களுக்கு முன், பெங்களூரு குண்டுவெடிப்பில், மேலப்பாளையத்தை சேர்ந்த, கிச்சான் புகாரி உள்ளிட்டோர், கைது செய்யப்பட்டனர்.அதன் பிறகு, பன்னா இஸ்மாயிலுடன், மேலப்பாளையத்தை சேர்ந்த மேலும் ஐந்து நபர்கள், தலைமறைவாகி உள்ளதாக, உளவுத் துறை விசாரணையில் தெரிய வந்தது. பன்னா இஸ்மாயிலுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரிகளுடன், குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த, 1992ல், பாபர் மசூதி இடிப்புக்கு பின், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், 'அல் - உம்மா' போன்ற இயக்கங்களில், இளைஞர்கள் பெருமளவில் சேரத் துவங்கினர்.இயக்கங்களில் சேரும் இளைஞர்களுக்கு, 'கிச்சான்' புகாரி, 'பறவை' பாதுஷா என, பெயருக்கு முன், பட்டப் பெயர்களையும் வைத்துக் கொள்கின்றனர்.அவ்வாறு வைக்கப்பட்ட பெயர் தான் 'பன்னா!' பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த, பன்னா இஸ்மாயிலும், அத்தகைய இயக்கங்களில் நாட்டமுடன் இருந்தார். படிப்படியாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டார்.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:00 am

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள்:

புத்தூர் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார், அதிரடியாக வீட்டின் கதவை உடைத்து நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த, 17 கிலோ வெடிமருந்து, 106 டெட்டனேட்டர்கள், பைப் வெடிகுண்டுகள், டைம் பாம், ஒரு பிஸ்டல், மூன்று கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பல தாக்குதலுக்கு திட்டமிட்ட 'போலீஸ்' பக்ருதீன் :

வேலூரில் கடந்த ஜூலை, 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், சேலத்தில், அதே மாதம், 19ம் தேதி, பா.ஜ., மாநிலச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவங்களில், ஈடுபட்ட கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திரபால் சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை துவக்கிய நிலையில், இந்த கொலைகள் தொடர்பாகவும், வேறு சில வழக்குகளிலும் தொடர்புடைய, மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த, 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில், நாகூரைச் சேர்ந்த, அபுபக்கர் சித்திக் ஆகிய நால்வரையும், தமிழக போலீஸ், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.இதைத் தொடர்ந்து, மேலப்பாளையத்தில், வெடிபொருட்களுடன், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல், மதுரையில் இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய, மூவரும் தான், ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது உறுதியானது.இதையடுத்து, மூவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சமீபத்தில் ஆந்திர எல்லையில், பங்களா வீட்டில் தங்கியிருந்தவர்கள், கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.இந்த தகவல்கள் அடிப்படையில், பயங்கரவாதிகளின், 'நெட்வொர்க்' மற்றும் அவர்களின் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள், சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளது.அதைக் கொண்டு, மதம் தொடர்பான அமைப்புகளை கண்காணிக்கும், திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் (ஓ.சி.ஐ.யு.,), கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பயங்கரவாதிகளின் தகவல் பரிமாற்றத்தில், இரண்டு, 'ஆபரேஷன்'கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வு செய்ததில், சென்னை மற்றும் திருப்பூரில், இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்த, அவர்கள் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூரில் அந்த, 'ஆபரேஷனை' நடத்த நியமிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை எடுத்து, திருப்பூர் சிறப்பு பிரிவு சி.ஐ.டி., மற்றும் ஓ.சி.ஐ.யு., பிரிவினர் இணைந்து, ரகசிய இடத்தில் இருந்த அவர்களை, நேற்று முன்தினம் காலை, கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை, 'ஆபரேஷனில்' தாக்குதல் நடத்த இருக்கும் இடம் கிடைத்தது.நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, சென்னையில், யானைக்கவுனி பகுதியில் இருந்து, திருப்பதி குடை யாத்திரை, துவங்குவதாக இருந்தது. இந்த ஊர்வலத்திற்கு அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஓ.சி.ஐ.யு., பிரிவு இன்ஸ்பெக்டர் வீரகுமார் ஆகிய இருவரும், சூளை சந்திப்பில், கண்காணித்த போது, அப்பகுதியில், 'போலீஸ்' பக்ருதீன் இருப்பதை கண்டுபிடித்து, சுற்றி வளைத்தனர். அப்போது, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மீது, 'போலீஸ்' பக்ருதீன் தாக்குதல் நடத்தியதுடன், 'நான் தான் போலீஸ் பக்ருதீன்' என, பல முறை கத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 'போலீஸ்' பக்ருதீனை, போலீசார் சுற்றி வளைத்து, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.பக்ருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில், இந்த ஊர்வலத்தைத் தவிர, மேலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது.மேலும், பக்ருதீனின் கூட்டாளிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் இருக்குமிடம் குறித்த தகவலும், போலீசிற்கு கிடைத்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் இறங்கினர்.

திருப்பதி கோவிலை தகர்க்க சதி?

''திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை தகர்க்க செய்த சதியை, தமிழக மற்றும் ஆந்திர மாநில போலீசார் முறியடித்துள்ளனர்,'' என, ஆந்திர போலீஸ் டி.ஜி.பி., பிரசாத் ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறியதாவது:அல் - உம்மா அமைப்பின் பயங்கரவாதிகளான, பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில், சித்தூர் மாவட்டம், புத்தூர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள், திருமலை, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை தகர்க்க, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.திருமலையில் நடைபெறும், வருடாந்திர பிரமோற்சவ விழாவின் போது, 'குடை குண்டு'கள் மூலம், இந்த சதித் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். பிரமோற்சவ விழாவின் போது, தமிழகத்திலிருந்து, பாரம்பரியமாக, திருக்குடைகள் ஊர்வலமாக, திருமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கருட சேவையன்று வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும். இதேபோன்ற குடைகளில், வெடிகுண்டுகளை பொருத்தி, அதன் மூலம் கோவிலில் குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு பிரசாத் ராவ் கூறினார்.

துணிச்சலான இன்ஸ்பெக்டர்:

பயங்கரவாதிகளை பிடிக்கச் சென்ற, இன்ஸ்பெக்டர் லட்சுமணனை, அவர்கள் வீட்டினுள் இழுத்து வெட்டியதில், தலையில் ஐந்து இடங்களில் காயமும், முதுகுப் பகுதியில் ஒரு வெட்டுக் காயமும் ஏற்பட்டது. அவரை, போலீசார் உடனடியாக, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு, நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 1996ல் பணியில் சேர்ந்த, லட்சுமணனுக்கு, 44 வயதாகிறது.வடசென்னை பகுதியில், இணை கமிஷனரின் தனிப்படையில் பணியாற்றிய போது, திருட்டு வீடியோ, செப்புக் காசு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்களை வேட்டையாடியவர். தற்போது, சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில், போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவருக்கு, மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

தினமலர்



பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:03 am

'இமாம் அலியை கொன்ற போலீஸ் அதிகாரிகளை கொல்வோம்': போலீசாரை மிரட்டிய பயங்கரவாதிகள்

மதுரை:'இமாம் அலியை சுட்டுக் கொன்ற, போலீஸ் அதிகாரிகளை இங்கே வரச்சொல்லுங்க; அவங்களை கொன்னுட்டு, நாங்களும் தற்கொலை செஞ்சிக்கிறோம்' என, புத்தூர் 'ஆபரேஷனின்' போது, பயங்கரவாதிகள் பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும், போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தூரில் வாடகை வீடு:


இதுதொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:இந்து நிர்வாகிகள் கொலை வழக்கில் தேடப்பட்ட இவர்கள், ஆந்திர மாநிலம், புத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.நேற்று முன்தினம் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். சென்னை இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பால் வியாபாரி போல் நோட்டமிட, யாரும் எதிர்பாராத நேரத்தில், அவரை உள்ளே இழுத்து, பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும் அரிவாளால் வெட்டினர்.அதிர்ச்சி அடைந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பன்னா இஸ்மாயில் வயிற்றில் குண்டு பாய்ந்தது. உடனே, இன்ஸ்பெக்டரை வெளியே அனுப்பினர். அவர்களை பிடிக்க, பல்வேறு வியூகங்களை வகுத்த போலீசார், இறுதியில், பேச்சுவார்த்தை மூலம் சரணடைய வைக்க, முடிவு செய்தனர்.அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான, எஸ்.ஐ.டி., போலீசாரை வரவழைத்து, பேச்சுவார்த்தையை துவக்கினர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அவர்களை வெளியேற்றும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

தற்கொலைக்கு தயார்:

அப்போது, 'இமாம் அலியை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகளை, இங்கே வரச்சொல்லுங்க; அவங்களை கொன்னுட்டு, நாங்களும் தற்கொலை செஞ்சிக்கிறோம்' என, போலீசாரிடம், பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும் கூறியுள்ளனர். இறுதியில், பேச்சுவார்த்தைக்கு பணிந்து, இருவரும் சரணடைந்துள்ளனர்.இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சுட்டது மதுரை டி.எஸ்.பி., :

இன்ஸ்பெக்டர் லட்சுமணனை,பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயிலும் வெட்டியபோது, மதுரை எஸ்.ஐ.டி., - டி.எஸ்.பி., கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டார். இதில், பன்னா இஸ்மாயிலின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதுகுறித்து, புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.சமீபத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலை சமாளிப்பது குறித்து, அமெரிக்காவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த. 22 போலீஸ் அதிகாரிகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து கார்த்திகேயன் மட்டும் பங்கேற்று, மதுரைக்கு பெருமை சேர்த்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தூர் 'ஆபரேஷன்' பின்னணியில் மதுரை கொலை: கடந்த, ஜூன் மாதம், 26ம் தேதி, இந்து அமைப்பின் நிர்வாகியான, மதுரை நேதாஜி ரோட்டில் கற்கண்டு பால்கடை வைத்திருந்த, சுரேஷ், 40, வெட்டிக் கொல்லப்பட்டார்.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:03 am


போலீசார் அதிர்ச்சி:


இக்கொலை நடந்த நேரத்தில், 'போலீஸ்' பக்ருதீன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இஸ்மத் என்பவர், மதுரை எஸ்.ஐ.டி., போலீசில் புகார் செய்தார். இவர், அத்வானி பாதையில் குண்டு வைத்த வழக்கில் கைதானவர். இஸ்மத் புகாரை தொடர்ந்து, போலீசார் சோதனை நடத்தியபோது, பக்ருதீன் சிக்கவில்லை.தங்கள் கண்காணிப்பை மீறி, பக்ருதீன் மதுரை வந்து சென்றது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதைஅடுத்து, பக்ருதீனுடன் தொடர்புஉடையவர்களை கண்காணித்தனர். அப்போது, புதூர் ஐ.டி.ஐ., அருகே, பிரியாணி கடையில் வேலை செய்த அப்துல்லா, 28, சிக்கினார். அவர் கொடுத்த தகவல்படி, நெல்பேட்டை தவுபிக், 25, சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

போலீசில் சிக்கிய போது, அப்துல்லா அளித்த வாக்குமூலம்:பக்ருதீன், பிலால் மாலிக், 'பன்னா' இஸ்மாயில் மற்றும் தவுபிக் ஆகியோர் தான், இரு சக்கர வாகனத்தில் வந்து, பால்கடைக்காரர் சுரேஷை, ஓட ஓட விரட்டிக் கொன்றனர். சுரேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியாது.காட்டிக்கொடுத்தது கையில் வெட்டு சுரேஷ் கொலையான நேரத்தில், பக்ருதீன் கையில் காயம் இருந்தது. அது பற்றி நான் கேட்டபோது, வேலூரில், 'பெருசை' (இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன்) போட்டுத் தள்ளும்போது, என் கையில் வெட்டு விழுந்து விட்டது என, தெரிவித்தார்.இவ்வாறு அப்துல்லா கூறியுள்ளார்.

இதன் பிறகே, வெள்ளையப்பன் மற்றும் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைகளில், பக்ருதீன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில், விசாரணை நடந்து, நேற்று முன்தினம் புத்தூரில் முடிவுக்கு வந்துள்ளது.

தலைமறைவு அபு சித்திக்கிற்கு போலீசார் வலை: போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட மூவர் சிக்கியதைத் தொடர்ந்து, இந்து முன்னணி பிரமுகர் மனைவியை தபால் வெடிகுண்டு மூலம் கொலை செய்த வழக்கில், 18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள, பயங்கரவாதி, அபுபக்கர் சித்திக்கை தேடும் பணியை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் துவக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம், சித்திக் தொடர்பான, விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாகை மாவட்டம், நாகூர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அகமத் முகம்மது உசேன் மகன் அபுபக்கர் சித்திக்; (தற்போது 45 வயது). நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ., படித்து, வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். வேதாரண்யம் அருகே தோப்புத் துறையில் திருமணம் செய்தவர், ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார்.இந்து முன்னணி பிரமுகர் முத்துக்கிருஷ்ணன் மனைவி தங்கம் என்பவரை, 1995ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி தபால் வெடிகுண்டு மூலம் கொலை செய்த வழக்கில், தேடப்படும் முக்கிய குற்றவாளியானார். கடந்த, 18 ஆண்டுகளாக எந்த விவரமும் தெரியாமல் தலைமறைவாக உள்ளார்.அவருடைய உருவப் படம் மற்றும் எந்த விவரமும் தெரியாத நிலையில், தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த போது கிடைத்த புகைப்படத்தை கொண்டு போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு, 1997ம் ஆண்டு நாகூர் காவல் நிலையத்தில் இருந்து, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.அதன் பின், ஏழு பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதில் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலர் ஜாமினில் வந்தனர். ஆனால், முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட, அபுபக்கர் சித்திக் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.அவரது மாமனார் வீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. தற்போது, அவர் குடும்பத்தினர் யாரும் நாகூரில் இல்லை. பெற்றோரும் இறந்து விட்டனர்.

இந்நிலையில், இந்து பிரமுகர்கள் கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் அறிவிக்கப்படும் போது, அதில், அபுபக்கர் சித்திக்கின் விவரமும் இடம்பெற்றிருந்தது. இந்த வழக்குகளிலும், சித்திக்கிற்கு தொடர்பிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தற்போது, போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சித்திக்கின் இருப்பிடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சித்திக்கை தேடும் நடவடிக்கையில், சிறப்பு புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.



பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:05 am

இந்து பிரமுகர்கள் கொலை தொடர்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, "போலீஸ்'பக்ருதீனுக்கு, ஏழு நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கிலும், "போலீஸ்' பக்ருதீனுக்கு தொடர்பிருப்பதால், பெங்களூரு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

வேலூரில், ஜூலை, 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., மாநிலச் செயலர், ஆடிட்டர் ரமேஷ், அவரது அலுவலகம் அருகே, மூன்று பேர் கும்பலால், வெட்டிக் கொல்லப்பட்டார். முன்னதாக, நாகர்கோவிலில், இந்து முன்னணி பிரமுகர், காந்தி, ஆயுதங்களால் வெட்டி தாக்கப்பட்டார். இந்த சம்பவங்கள், தமிழகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, வேலூர், சேலத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி.,யின் கீழ் செயல்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்குகள் மற்றும் வேறு சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் பெயரை, தமிழக போலீஸ் வெளியிட்டது. அத்துடன், அவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு, சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேலப்பாளையத்தில் வெடிமருந்துகளுடன் சிக்கியவர்கள் மற்றும் மதுரை, இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொலையில் சிக்கியவர்கள் அளித்த தகவல்கள், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தின. இவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பூரில், இந்து தலைவர் ஒருவரையும், சென்னையில் ஒருவரையும் குறிவைத்து, "போலீஸ்' பக்ருதீன் கும்பல், களமிறங்கியிருப்பது, சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்தது.

பிடித்தது எப்படி? இதையடுத்து, அவர்களின் ரகசிய சங்கேத பாஷைகளை கண்காணித்த, சிறப்பு புலனாய்வு பிரிவினர், உஷாராகினர். சென்னையில், சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் களமிறங்கி, திருவல்லிக்கேணியில், போலீஸ் பக்ருதீனை கண்டுபிடித்தனர். பக்ருதீனை பின்தொடர்ந்த போலீசார், பெரியமேடு பகுதியில், அவனை பிடிக்க முயன்றனர். இன்ஸ்பெக்டர் லட்சுமணனை தாக்கிவிட்டு, தப்பியோட முயன்ற போது, பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார், பக்ருதீனை பிடித்தார். தொடர்ந்து, பக்ருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூட்டாளிகளான, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர், ஆந்திர மாநிலம், புத்தூரில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அன்றிரவே அங்கு சென்ற போலீசார், ஆந்திர போலீசார் மற்றும் அம்மாநில," ஆக்டோபஸ்' சிறப்பு பிரிவு போலீஸ் உதவியுடன், பிலால் மாலிக்,
பன்னா இஸ்மாயில், இருவரையும், நேற்று முன்தினம் மாலை, பிடித்தனர். அவர்களுடன் தங்கியிருந்த, பிலாலின் மனைவி, குழந்தைகள் மூவரையும் மீட்டனர். இதில், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில், பயங்கரவாதிகள் தரப்பில், பன்னா இஸ்மாயிலுக்கு, வயிற்றில் குண்டு பாய்ந்தது. கைது செய்யப்பட்டு வேலூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிகள் இருவரில், பன்னா இஸ்மாயிலை மட்டும் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பெருங்குடல் மற்றும் கல்லீரல் இடையே, குண்டு பாய்ந்த நிலையில், பன்னா இஸ்மாயிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 07, 2013 4:06 am


போலீசில் சிக்கிய, "போலீஸ்' பக்ருதீன், நேற்று முன்தினம் இரவு, வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு புலனாய்வு பிரிவினர் சார்பில், 13 நாட்கள்விசாரணைக்கு அனுமதி கோரப்பட்டது. பக்ருதீன், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியதால், மனுவை விசாரித்த, மாஜிஸ்திரேட் சிவகுமார், ஏழு நாட்கள் விசாரணைக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து, அவர் வேலூரில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டார்; விசாரணையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, புத்தூரில் கைது செய்யப்பட்ட பிலால் மாலிக், நேற்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்; அங்கு அவரை, வரும், 18ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், அவரிடமும் விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். தற்போது சிக்கியுள்ள மூவரும், வேலூரில், ஜூலை 1ம் தேதி நடந்த வெள்ளையப்பன் கொலையில் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மற்ற சம்பவங்களில் கைது செய்யப்படுவர் என, தெரிகிறது.

விசாரணை : கடந்த ஏப்., 17ம் தேதி, பெங்களூரு, மல்லேஸ்வரத்தில், பா.ஜ., அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்னர். இந்த வழக்கில், "போலீஸ்' பக்ருதீனுக்கும் தொடர்பிருப்பதாக, பெங்களூரு போலீசார் கருதினர். இதன் அடிப்படையில், பெங்களூரு இணை கமிஷனர் ஹேமந்த் தலைமையில் போலீசார், வேலூர் வந்துள்ளனர். அவர்களும், பக்ருதீனிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், "போலீஸ்' பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஐந்து பேரை கொன்றதாகவும், அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு வைத்ததையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பரமக்குடியைச் சேர்ந்த முருகன், வேலூரில், பா.ஜ., மருத்துவ அணி செயலர் டாக்டர் அரவிந்த ரெட்டி, மதுரை இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார், வேலூர் வெள்ளையப்பன் மற்றும் சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை, நாங்கள் தான் தீர்த்துக் கட்டினோம் எனவும், ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை, சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும், சிறப்பு புலனாய்வு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், இந்து தலைவர்கள் கொலை சம்பவங்களில் இருந்த மர்மங்கள் விலகி, வழக்கில் தெளிவு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

அபாய கட்டத்தில் பன்னா!வயிற்றில் குண்டு காயத்துடன், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பன்னா இஸ்மாயில் அபாய கட்டத்தில்இருப்பதாகக் கூறப்படுகிறது. போலீசார் முதலில் தற்காப்புக்காக, துப்பாக்கியால் சுட்டதில், பன்னா இஸ்மாயில், வயிற்றில் குண்டு பாய்ந்து, அது, கல்லீரல் மற்றும் பெருங்குடல் இடையில் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட இஸ்மாயிலுக்கு, டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், ஆபரேஷன் செய்து ஒரு வேளை குண்டு எடுக்கப்பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என, டாக்டர்கள் கருதியதால், நிறுத்தி வைத்தனர், அதன் பின், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை நடத்திய பின், ஆபரேஷன் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. பன்னா இஸ்மாயில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசு பொது மருத்துவமனையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிலால் மாலிக் சிறையில் அடைப்பு:புத்தூரில், சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிலால் மாலிக், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் புத்தூரில், பன்னா இஸ்மாயிலுடன் கைதான பயங்கரவாதி, பிலால் மாலிக், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் வீட்டில், நேற்று மாலை, 3:30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். பிலால் மாலிக்கை வரும், 18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பிலால் மாலிக், வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.பிலால் மாலிக் முகத்தை துணியால் மூடி, போலீசார் அழைத்துச் சென்றபோது, "பாகிஸ்தான் வாழ்க; ஜின்னா வாழ்க' என, கோஷமிட்டபடி அவர் வேனில் ஏறினார்.



பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 7:19 am

தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க
39 சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்திருக்கிறதாம்...
-
விரைவு நடவடிக்கை மேலும் தீவிரவாதம் வளர்வதை
தடுக்க உதவும்...



raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Oct 07, 2013 10:38 am

இதுபோன்ற தீவிரவத்தை வேறுடன் அழிக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக