ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

பருமன்

Go down

பருமன்  Empty பருமன்

Post by சிவா on Wed Oct 23, 2013 2:13 am



இளைஞர்களில் 17 சதவிகிதத்தினரும், பெரியவர்களில் 35 சதவிகிதத்தினரும் சராசரியை விட அதிக எடையுடன் இருக்கிறார்கள். 15 சதவிகித இளைஞர்களும், 25 சதவிகித பெரியவர்களும் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளி விவரம். ‘‘எடை கூடுவதால் மூட்டு வலி, இளவயது மாரடைப்பு, குழந்தையின்மை, புற்றுநோய் அபாயம், நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம்.

கொழுப்பு, இனிப்பு, கார்போஹைட்ரேட் தவிர்த்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம், கட்டாய உடற்பயிற்சி போன்றவைதான் எடைக்கட்டுப்பாட்டுக்கான அடிப்படையான, அவசியமான ஆலோசனைகள். ஆனாலும் சிலருக்கு இந்த எதுவும் பலனளிக்காமல், எடை குறையாமல் இருக்கும். அவர்களுக்கெனவே சில பிரத்யேக அறுவை சிகிச்சைகள் வந்திருக்கின்றன’’ என்கிறார் இரைப்பை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹா. அப்படி சிலவற்றைப் பற்றி விளக்கமாகவும் பேசுகிறார்.

‘‘கேஸ்ட்ரிக் பேன்டிங் - வயிற்றின் மேல் பகுதியில் பிவிசி பேன்ட் கட்டி, வயிற்றின் அளவைக் குறைக்கும் சிகிச்சை இது. இந்த சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவு உள்ளே செல்லாது. ஒரு கவளம் அதிகமானாலும், வாந்தி எடுக்கும் உணர்வு உண்டாகும். இந்த சிகிச்சையை மேற்கொண்டால், அவ்வப்போது, மருத்துவரை சந்தித்து, உள்ளே கட்டியிருக்கும் பேன்டை, அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஒரு முறை பொருத்திக் கொண்டு, அப்படியே மறந்து போகலாம் என நினைப்பவர்களுக்கு இது சரிவராது.

அடுத்தது ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி. இதில் பிரத்யேக ஸ்டேப்ளர்ஸ் போட்டு, வயிற்றின் அளவு சிறிதாக்கப்படும். முந்தைய அறுவையில் அடிக்கடி மருத்துவரிடம் சென்று அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னது, இந்த சிகிச்சையில் கிடையாது. கிட்டத்தட்ட நிரந்தர சிகிச்சை மாதிரியானது. இதைச் செய்வதற்கான நேரமும் குறைவு. இந்த அறுவைக்குப் பிறகு 30 முதல் 80 கிலோ வரை எடை குறைந்தவர்கள் உண்டு. இந்தியாவில் சமீப காலமாக இந்த அறுவை சிகிச்சைக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்கிற பயம் பலருக்கும் உண்டு. அறுவைக்குப் பிறகான முதல் சில நாள்களில், ஸ்டேப்ளர்ஸ் போடப்பட்ட இடங்களில் லேசான கசிவு இருந்ததாக சொல்லப்பட்டதை அடுத்து, அடுத்தடுத்த நாள்களில் அந்தக் கசிவைத் தடுக்க சிறப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்பதால் பயம் தேவையில்லை. மூன்றாவது கேஸ்ட்ரிக் பை பாஸ். முந்தைய இரண்டையும் விட சற்றே சிக்கலான சிகிச்சை இது.

நீரிழிவு, ஹைபர் டென்ஷன், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுடன், உடல் பருமனும் உள்ளவர்களுக்கு இது சிறந்த சிகிச்சை. சம்பந்தப்பட்ட நபரின் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை முறைப்படுத்தவும் உதவும். இந்த சிகிச்சைக்குப் பிறகு, கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் கிரகிக்கப்படும் தன்மை குறையும் என்பதால் அவற்றுக்கான சப்ளிமென்ட்டுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நீரிழிவு பாதித்தோரின் எண்ணிக்கை கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்து வருவது நமக்குத் தெரிந்ததே. உடல் பருமன்தான் அதற்கும் ஆரம்பப் புள்ளி. நீரிழிவிலிருந்தும், இதர நோய்களிலிருந்தும் விலகியிருக்க, உடல் பருமனை உடனே கவனிக்க வேண்டியது அவசியம்...’’ என்கிறார் இரைப்பை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹா.

ஆர்.வைதேகி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பருமன்  Empty Re: பருமன்

Post by krishnaamma on Tue Nov 05, 2013 2:34 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

பருமன்  Empty Re: பருமன்

Post by ஜாஹீதாபானு on Tue Nov 05, 2013 3:40 pm

பகிர்வுக்கு நன்றிபுன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பருமன்  Empty Re: பருமன்

Post by ayyasamy ram on Tue Nov 05, 2013 7:37 pm

பருமன்  103459460 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63405
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பருமன்  Empty Re: பருமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum