ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

Admins Online

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

Go down

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Empty பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

Post by சிவா on Wed Oct 23, 2013 2:16 am‘பொறாமை என்பது கோழைகளின் கோபம்’ என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் - தம்பிக்கி டையே... அக்கா - தங்கைக்கிடையே... நண்பர்களுக்கிடையே... மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே... இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற இருவருக்கிடையே அது இருக்காதா என்ன?

‘பொறாமை’ என்று சொன்னால் கொஞ்சம் கடுமையாகத் தெரியலாம். ‘பொசசிவ்னஸ்’ என்கிற போது, அதன் கடுமை மாறிப் போ கும். காதலிக்கிற போதும், கல்யாணத்துக்குப் பிறகும் ஆணும் பெண்ணும் பல வழிகளில் பொசசிவ்னஸை வெளிப்படுத்துகிறார்கள். அது பொறாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அதாவது, தன் துணையின் மீது அதீத ஆர்வம் காட்டுகிற துணைக்கு நிச்ச யம் அங்கே பொறாமை இருக்கும்.

நம்முடைய சமுதாயத்தில் பொறாமை கொள்ளக் காரணங்களுக்கா பஞ்சம்?

மனைவி தன்னைவிட நல்ல வேலையில் இருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, அழகாக இருந்தாலோ கணவருக்குத் தன்னையும் அறியாமல் பொறாமை தலைதூக்கும். அதன் வெளிப்பாடாக, மனைவி வேலைக்குப் போவதைத் தடுப்பார்கள். மனைவியுடன் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படி இல்லாமல், சில நேரங்களில் பொறாமை தெளிவாகத் தெரியாமல், வெறும் கோபமாகவும் வெளிப்படலாம். தம்பதிக்கிடையே காரணங்களே இல்லாமல் பிரச்னைகள் வெடிக்கும். பொறாமைப்படுவோருக்கு மட் டுமே அது புரியும்.

அதை எதிர்கொள்வோருக்குக் காரணம் தெரியாது. இருவருக்கும் இடையில் அன்பு குறைந்து, வெறுப்பு அதிகரித்து, ஒருகட்டத்தில் உறவே ஆட்டம் காணவும் அந்தப் பொறாமை காரணமாகும். அரிதாக சில சந்தர்ப் பங்களில் அந்தப் பொறாமையின் விளைவாக, ஆத்திரம் உச்சத்துக்குப் போய், அடி, உதை என வன்முறையில் இறங்கவும்,அதையும் தாண்டி கொலை, தற்கொலை என அத்துமீறவும் கூடும்.

பொறாமை என்பது பல நேரங்களில் உண்மையாக இல்லாமல், அப்படி நினைப்பவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம். நம்மு டைய துணை, நம்மைத் தவிர வேறு யாராலும் ஈர்க்கப்படக் கூடாது என்கிற ஆழ்மன பயம் பதிந்து போயிருக்கும். யதார்த்தமோ அப்படி இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஆண்-பெண் இருவரின் நட்புகளும் உறவுகளும் தொடரத்தான் செய்யும். அதன் விளை வாக, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் துணையின் மீது திணிக்கப்படும்.

அதாவது, துணையை அப்படிக் கட்டுப்படுத்தி, கைக்குள் வைத்திருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வு ஏற்படும். ஆணோ, பெண்ணோ - யாருக்கும் நட்பென ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயல்பு. திருமணத்துக்குப் பிறகும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அதைத் தவிர்த்து, ‘எனக்குப் பிடிக்கலை... நீ உன் நட்பை விட்டு விலகி னாதான் என் மனசு நிம்மதியாகும்’ எனக் கட்டுப்படுத்த நினைப்பது முழுக்க முழுக்க பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே.

பொறாமை யின் காரணமாக துணையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வதுதான் இதிலி ருந்து மீள முதல் வழி. பொறாமை என்கிற உணர்வு உண்டாக, நமது எண்ணமும் நம்பிக்கையும்தான் அடிப்படை. அதை மாற்றிக் கொண்டாலே பொறாமை காணாமல் போய் விடும். உதாரணத்துக்கு, ‘என் மனைவி வேலைக்குப் போறா... நிறைய சம்பாதிக்கிறா... அதனால அவளுக்குத் திமிரு’ என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களது மனைவிகளுக்கு உண்மையிலேயே அப்படி எந்தத் திமிரும் இருக்காது. கணவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்! சில பெண்களுக்கு தனது அழகிலும் ஆளுமையிலும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அது காலம் காலமாக சிந்தனையில் உறைந்து போனதன் விளைவாக, திருமணத்துக்குப் பிறகு, தனது கணவர், இன்னொரு பெண்ணிடம் லேசாக சிரித்துப் பேசினாலே, பொறாமை எட்டிப் பார்க்கும்.

‘நான் அவளை மாதிரி அழகில்லை. எனக்கு அவளைப் போல பர்சனாலிட்டி இல்லை...’ என வார்த்தைகளில் விஷம் கக்கி, பைசா பெறாத விஷயத்தைப் பெரிதாக்கி, பிரச்னையை உண்டு பண்ணுவார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சந்தேகமாக உருவெ டுத்து, ஒரு கட்டத்தில் பிரிவுக்குப் பாதை காட்டலாம். அதற்காக எல்லா பொறாமைகளையும் சந்தேகங்களையும் அர்த்தமற்றவை என ஒதுக்கவும் முடியாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Empty Re: பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

Post by சிவா on Wed Oct 23, 2013 2:17 am


உங்கள் துணை, உங்கள் மீது பொறாமை கொள்கிறாரா?

அதன் பின்னணி என்ன என ஆராயுங்கள். துணையின் பொறாமையில் நியாயம் இருப்பது தெரிந்தால், உங்களை சரி செய்து கொள்ளப் பாருங்கள். அர்த்தமற்ற காரணங்களால் உண்டாகும் பொறாமையை எப்படிக் கையாளலாம்?

ஒரு உதாரணத்துடன் பார்ப்போமா?

உலக அழகி ஐஸ்வர்யா ராயை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? திருமணத்துக்கு முன், ஐஸ்வர்யாவை அவரது அழகுக் காகவும் ஆளுமைக்காகவும் ரசித்த மக்கள், திருமணத்துக்குப் பிறகும் அப்படியேதான் ரசிக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங் கள்... திருமணத்துக்குப் பிறகு என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என ஐஸ்வர்யாவை, அபிஷேக் வெளியே விடாமல் வீட்டுக்குள் சிறை வைத்திருந்தால், அந்த இருவருக்கும் இடையிலான காதல் காணாமல் போயிருக்காதா? அவர்களது உறவு அர்த்தமற் றதாகி இருக்காதா? அபிஷேக் அப்படிச் செய்யாமல், ஐஸ்வர்யா தனது மனைவியாக அமைந்ததைப் பாராட்டுதலோடும் பெருமையோ டும் ஏற்றுக்கொண்டதுதான் அவர்களது அன்யோன்யத்தின் அடிப்படை.

உலகமே கொண்டாடும் ஒரு உன்னத மனுஷி, தனது மனைவி என்பதில் அவருக்கு அளவுகடந்த கர்வம் கூட இருக்கக்கூடும். அதே அணுகுமுறைதான் நமக்கெல்லாமும் அவசியப்படுகிறது. காதலிக்கிற போது எந்த அழகுக்காக ஒரு பெண்ணிடம் நீங்கள் மயங்கினீர் களோ, எதற்காக போராடி அவரைக் கல்யாணம் செய்தீர்களோ, அந்த அழகை, கல்யாணத்துக்குப் பிறகும் கொண்டாடப் பழகுங்கள். கல்யாணத்துக்கு முன் உங்கள் மனைவியை நீங்கள் ரசித்தது போல, கல்யாணத்துக்குப் பிறகு மற்றவர்களின் பார்வையும் அவரை அப் படித்தான் ரசிக்கும்.

அதற்காக உங்கள் மனைவியை சந்தேகப்படுவதோ, அவர் மீது பொறாமை கொள்வதோ எந்த வகையில் நியாயம்? பெண்களுக்கும் இதே அட்வைஸ்தான். காதலிக்கிற போதோ, திருமணத்துக்கு முன்போ உங்கள் துணையின் நகைச்சுவை உணர்வையும் எல்லோரிட மும் கலகலப்பாகப் பேசிப் பழகும் குணத்தையும் ரசித்திருப்பீர்கள். திருமணத்துக்குப் பிறகு அவர் அப்படி இருப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது ஏன்? தன் துணை தன்னைவிட்டு விலகி விட்டால்? இந்தப் பயம்தான் இருவரின் பொறாமை உணர்விலும் மறைந்திருக்கிற காரணம்.

பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.பொறாமையை பாராட்டாக மாற்றப் பழகுங்கள்.பொறாமையைத் தவிர்த்து விருப்பமாக பார்க்கப் பழகுங்கள். உங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையை நன்றியுடன் நோக்க முயற்சி செய்யுங்கள்!

நம் ஒவ்வொருவருக்கும் நமது பெற்றோர், சுற்றம், உறவுகள் என நாம் வளர்கிற சூழல் சில பயிற்றுவிப்புகளைத் தருகிறது. உதாரணத் துக்கு அமெரிக்காவில் பிறந்து வளர்கிற குழந்தைக்கு விவாகரத்து என்பது சர்வசாதாரணமான நிகழ்வாகத் தோன்றலாம். நம்முடைய சூழலில் அதைப் பற்றிய பார்வையே வேறு. இந்தப் பயிற்றுவிப்புகள் நமக்கு சில நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. சிறியதாகவோ, பெரியதாகவே பல நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம்.

அவற்றில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படாதவையாகவும் இருக்கலாம். அந்த நம்பிக்கைகள் நமக்கொரு மனப்போக்கை ஏற்படுத்தும். பெண்கள் என்றால் அடக்க, ஒடுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என சில ஆண்கள் நினைப்பதுகூட அத்தகைய மனப்போக்கின் அடிப்படை யில்தான். அந்த மனப்போக்கானது உணர்வுகளை உருவாக்கும். உணர்வுகள் நமது நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். நட வடிக்கைகள்தான் நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் விளைவுகளுக்குக் காரணம்.

பயிற்றுவிப்பில் தொடங்கி, நடவடிக்கைகள் வரை எல்லாமே பாசிட்டிவாக இருந்துவிட்டால், உறவுகளுக்கிடையில் பிரச்னைகள் முளைக்கவே வாய்ப்பில்லை. பயிற்றுவிப்பை மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆனாலும், அதன் மூலம் உருவாகக்கூடிய நம் பிக்கைகளை நாம் மனது வைத்தால் மாற்றிக் கொள்ளலாம்.

பாசிட்டிவான நம்பிக்கை, பாசிட்டிவான மனப்போக்கைத் தரும். பாசிட்டிவான மனப்போக்கு, நல்ல உணர்வுகளை உண்டாக்கும். உணர்வுகள் அழகானால், நடவடிக்கைகளில் நாகரீகம் வரும். அது நல்ல விளைவுகளுக்கும் வழி காட்டும். பொறாமைக்குக் காரண மாக கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பேசிய அத்தனையிலிருந்தும் விடுபடவும் இதுவே தீர்வு!

மனஸ்வினி @ குங்குமம்தோழி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Empty Re: பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

Post by ரேவதி on Wed Oct 23, 2013 10:37 am

நல்ல உதாரணங்களுடன் கூடிய தகவல் 
நன்றி புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Empty Re: பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

Post by அசுரன் on Wed Oct 23, 2013 4:12 pm

காதலிக்கிற போது எந்த அழகுக்காக ஒரு பெண்ணிடம் நீங்கள் மயங்கினீர் களோ, எதற்காக போராடி அவரைக் கல்யாணம் செய்தீர்களோ, அந்த அழகை, கல்யாணத்துக்குப் பிறகும் கொண்டாடப் பழகுங்கள். கல்யாணத்துக்கு முன் உங்கள் மனைவியை நீங்கள் ரசித்தது போல, கல்யாணத்துக்குப் பிறகு மற்றவர்களின் பார்வையும் அவரை அப் படித்தான் ரசிக்கும். அதற்காக உங்கள் மனைவியை சந்தேகப்படுவதோ, அவர் மீது பொறாமை கொள்வதோ எந்த வகையில் நியாயம்? wrote:
அதானே!

மிக மிக அற்புதமான வரிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Empty Re: பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum