புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_m106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_m106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_m106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_m106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_m106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_m106 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 6:05 pm

6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் WdY5iKoSXyKK29WH7rXb+p12

அந்தச் சிறுவன், பெற்றோரைப் பரிதவிக்கவிட்டு காணாமல் போன தன் பிறந்த நாளில் ஊதி அணைத்தது, '6 மெழுகு வத்திகள்!’

தன் மகனின் ஆறாவது பிறந்த நாளன்று அவனை மெரினா பீச்சில் தொலைத்து விடுகிறார் ஷாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார். அவர் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டிய போலீஸோ, மெள்ள ஓர் இருட்டு உலகத்துக்கு அவரை அறிமுகப் படுத்திவிட்டு தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. சென்னையில் தொடங்கி ஆந்திரா நகரி, வாராங்கால், மகாராஷ்டிரத்தின் போபால், கோவா, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா... என இந்தியா முழுக்க குழந்தை களைக் கடத்திப் பல்வேறு இடங்களில் விற்கும் மாஃபியா வலைப்பின்னல் கும்பலை ஷாம் சந்திப்பதும், அதனூடான துயர அனுபவங்களுமே படம்!

இந்தியாவின் 'மலிவு விலைத் தொழிலாளர்’ ரகசியத்தையும், குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் எத்தனை வீரியமாகப் பரவியிருக்கிறது என்பதையும் சினிமாவில் ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் வி.இஸட். துரையின் முனைப்பு, கிரேட்!

மகன் தொலைந்தபோது ஒரு தந்தையின் பரிதவிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் திணறும் ஷாம், வெவ்வேறு பயண அனுபவங்களுக்குப் பிறகு சிக்குப் பிடித்து அடர்ந்த முடி, தாடியும் வீங்கிய கண்களுமாகப் பரிதவிக்கும் காட்சிகளில் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். கடத்தப்பட்ட சிறுமி தப்பி வரும்போது அவளைக் காப்பாற்றுவதா, வேண்டாமா எனப் பதைப்பும் பதட்டமுமாகத் தவிக்கும் இடத்திலும், கொல்கத்தாவில், 'என்னைக் கூட்டிட்டுப் போங்க’ எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்போது உடைந்து நொறுங்கும் இடத்திலும்... பார்வை யாளர்களை நெகிழ வைக்கிறார்!

ஷாமின் மனைவியாக பூனம் கவுர். ஊனமுற்ற பிச்சைக்காரரின் காலில் 'அண்ணா...’ எனக் கதறி அழும் காட்சியில் மட்டும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஊனமுற்ற பிச்சைக்காரராக வரும் ஸ்ரீதர், கடத்தல் டான் திவாகராக வரும் அனில் முரளி இருவரும் அசத்தி இருக்கிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நிழல் உலகத்துக்கே உளவு சொல்வது, காவல் துறையினரைக் கெத்தாக டீல் செய்வது எனப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். 'ராம் சார்’, 'ராம் சார்’ என குரலில் கனிவும் செயலில் குரோதமுமாக வில்லத் தனம் செய்யும் அனில் முரளி, சூப்பர். ஆனால், நிழலுலக வில்லன் என்றாலே, அவர் பெண்மை கலந்த ஆணாக இருக்க வேண்டும் என்ற 'சித்தாந்தம்’ எரிச்சல்!

'மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனுக்குப் பிச்சை போடற மாதிரி, கீழே இருக்கிற நான் மேலே இருக்கிற உனக்குப் போடற பிச்சை இது. பொறுக் கிட்டுப் போ!’, 'இங்கே இருக்கிற எல்லாருமே கௌதம்தானே’, 'உனக்கு எத்தனை பிள்ளை வேணும்னாலும் நான் பெத்துத் தர்றேன்... நீ இங்கே வந்துரு’ என சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ற பொளேர் வசனங்கள் ஈர்க்கின்றன. ஆனால், படத்தில் அனைத்து பாத்திரங்களும் தன் தன்மை மீறி தத்துவம் பேசுவது, இறப்பதற்கு முன் முழுதாக இரண்டு நிமிடங்கள் பேசுவதெல்லாம்... அலுப்பு!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, பின்னணியில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. மாட்டு இறைச்சிக் கூடமோ, மின்விளக்கு தயாரிப்பு ஆலையோ, ரகசியக் கிடங்குகளோ... அந்தந்த இருப்பிட இயல்பில் நம்மை நிலைநிறுத்துகிறது கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு.

வீட்டை விற்று குழந்தையை மீட்க முனைவது, மனைவியை விட்டு மாதக்கணக்கில் பிரிந்து குழந்தையைத் தேடித் திரிவது... என்று மகன் பாசத்தில் ஷாம் உழல்வதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கான பாசப்பிணைப்பு கொண்ட மகனின் முகம் நம் நினைவிலேயே இல்லை. அவ்வளவுக்குத்தான் ஆரம்பக் காட்சிகளில் மகனின் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இதனாலேயே, 'அச்சோ... அத்தனை சூட்டிகையான பையன் காணோமா...’ என்ற துடிப்பும், 'அந்தப் பிச்சைக்காரர்கள் கும்பலில் அந்தப் பையன் இருக்க வேண்டுமே’ என்ற பரிதவிப்பும் நமக்குத் தோன்றவே இல்லை!

குழந்தையைக் கடத்திய விவகாரத்தில் போலீஸ் தலையிடவில்லை... சரி. அட, ஏரியாவாரியாக தாதாக்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார் ஷாம். அவரையுமா கண்டுகொள்ளாமல் விடுவார்கள்!? அதுவும் வில்லன்களே ஊர் ஊராக வழிகாட்டி அனுப்பி வைப்பதெல்லாம் என்னங்கப்பா? தேவைப்படும் சமயம் 'ஆக்ஷன் அவதாரம்’ எடுக்கும் ஷாமின் ஹீரோயிஸம் போன்ற லாஜிக் குறைபாடுகளின் தாக்கத்தால், '6 மெழுகுவத்தி’களின் சுடர் தட்டுத்தடுமாறி எரிகிறது!

ஆனால், படம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறும் கும்பலில் தங்கள் குழந்தைகளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். அந்தப் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காக, இந்த மெழுகுவத்தியை உயர்த்திப் பிடிக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 6:07 pm

நல்ல படம்தான் ... ஆனா ஓடவில்லையே சோகம் சோகம் சோகம் சோகம் 
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 6:10 pm

பாலாஜி wrote:நல்ல படம்தான் ... ஆனா ஓடவில்லையே சோகம் சோகம் சோகம் சோகம் 
சிறந்த படங்களாகக் கருதப்பட்ட சாட்டை, ஹரிதாஸ், தங்க மீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் தோல்விப் படங்கள் தானே!

நம்மவர்களின் ரசனை அவ்வளவுதான்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 6:15 pm

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
இந்த வருடத்தின் மிக சிறந்த படம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக