புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_m10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10 
42 Posts - 63%
heezulia
திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_m10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_m10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_m10திருவாதிரை நட்சத்திர நாயகன் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை நட்சத்திர நாயகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 3:19 am

இருபத்து ஏழு நட்சத்திரங்களுள் அதி உன்னதமானதாகவும் சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம்.

சிவனுக்கு உரிய நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும் ஈசன் அபயகரத்துடன் பெருங்கருணை கொண்டு ஆருத்ரா நட்சத்திர மண்டலத்தை உலா வருவார். எனவே அசுரர்கள் இம்மண்டலத்தில் நுழைய அஞ்சுவர்.

தேவர்கள், அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது அரக்கர்களால் அண்ட முடியாத இப்புனிதமான திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுவர்.

ரத்தினம்போல் ஜொலிக்கும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ருத்ரன் (சிவன்), வெள்ளை நிறத்தில், சூலம் - கத்தி மற்றும் அபய-வரத ஹஸ்தத்துடன், ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த நட்சத்திரத்திற்கு உரிய மரமாக "செங்காலி மரம்' திகழ்கின்றது.

திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய விசேஷமான தலம் அதிராமபட்டினம். எத்தகைய பாவங்களை புரிந்தாலும், பக்திப்பூர்வமாக, திருந்திட விழைவோர்க்கு அபய-வரதராக சுவாமி இங்கு அருள்மழை பொழிகின்றார்.

ஆதியில் "திருவாதிரைப் பட்டினம்' என்று அழைக்கப்பெற்ற இவ்வூர், சோழவள நாட்டின் காவிரித் தென்கரையில், சுந்தரரால் வைப்புத் தலமாகப் பாடப்பட்ட பெருமையுடையது. சுந்தரர் தனது திரு இடையாற்று தல பதிகத்தில் இப்பகுதியை "திருவாதிரையான்பட்டினமூர்' என்று போற்றுகின்றார்.

அதிவீரராமன் என்னும் பாண்டிய மன்னனால் இவ்வூர் அமைக்கப்பெற்றதால் "அதிராமபட்டினம்' என்று பின்னர் அழைக்கலாயிற்று. இம்மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்ததோடு, இச்சிறப்பு மிகுந்த சிவாலயத்திலும் திருப்பணிகள் பல செய்துள்ளான். இச்செய்தியை கல்வெட்டின் வாயிலாக நாம் அறியப்பெறலாம்.

பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இத்தல பெருமானை பூஜித்து, வரங்கள் பல பெற்றுள்ளனர். இன்றும் இவ்விரு மகரிஷிகளும் ஸ்தூல-சூஷ்ம வடிவில் இப்பதி ஈசரை வணங்குவதாக நம்பப்படுகின்றது.

முகப்பில் மூன்றுநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே... கிழக்கே முகம் கொண்ட மகாமண்டபம், அர்த்த மண்டபத்துடன் கூடிய சுவாமி சன்னதி கருவறையுள் கருணையே வடிவாக அருள்பாலிக்கின்றார் அபயவரதேஸ்வரர். நாடி வருவோர்க்கு அபயமளிப்பதோடு அல்லாமல் வரங்களையும் வாரி வழங்குபவர் இந்த ஈசர்.

மகாமண்டபத்தில் தெற்கே சன்னதி கொண்டு எழுந்தருள்கின்றாள் அம்பிகை சுந்தரநாயகி. எளிய நகை சிந்தி சுந்தரமாய் எழுந்து, எளியார்க்கு எளியவனாய் அருட்பிரவாகிக்கின்றாள். ஏனைய கோஷ்ட மூர்த்தங்கள் முறையே ஆலயத்தினை அழகு செய்கின்றன.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது. இங்குள்ள துர்க்கை மற்றும் பைரவரை வழிபட வாழ்வில் மேன்மைகள் கூடி, மகிழ்ச்சி உண்டாகும். இத்தல வழிபாடு ராகு-கேது தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றைப் போக்க வல்லது. இங்கு வழிபட்டு, முன்ஜன்ம சாப-பாபங்களைக் களைந்திடலாம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யஞ்ஜய ஹோமம் ஆகியன செய்து பலனடைகின்றனர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை தினம் மற்றும் திங்கட்கிழமைகளில் பாதாம்பருப்பு, பரங்கி, பூசணி, விளாம்பழம், சீரகம், சோளம், சீதாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சுவாமிக்கு நிவேதனம் செய்து, தானம் செய்தால் சிறந்த பலனையும், ஈடுபடும் காரியத்தில் வெற்றியும் பெற்றிடலாம்!

எங்கே இருக்கு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது அதிராமபட்டினம்.
எப்படிச் செல்வது: முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராமபட்டினம் செல்ல ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

-எம்.கணேஷ், ஆரணி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 12:52 pm

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக