ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

Go down

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்! Empty நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

Post by சிவா on Sun Nov 17, 2013 11:08 am

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்! MgTCrj05QE3Ou6IQCurM+P32 

 முழுமையாக எதையும் புரிந்துகொள்ளாமல், காலம் காலமாக நம்பப்படும் மூடநம்பிக்கைகள் நம்மிடையே பரவலாக உள்ளன. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் இந்த மூடநம்பிக்கைகளின் தாக்கம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் வலிப்பு நோய் பற்றிய நம்பிக்கையும். ஒருகாலத்தில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சிறையில் அடைத்த கொடுமையும் நடந்திருக்கிறது.  இதுபோன்ற செய்திகளே, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான தவறான நம்பிக்கைகளை முழுமையாக உணர்த்தும். தேசிய வலிப்பு நோய் விழிப்பு உணர்வு தினம் அனுசரிக்கப்படும் இந்தத் தருணத்தில் வலிப்பு நோய் பற்றி இன்றளவும் இருக்கும் தவறான எண்ணங்களையும், உண்மைகளையும் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மூளை நரம்பியல், வலிப்பு நோய் சிறப்பு நிபுணரான தினேஷ் நாயக்.

'பெரும்பாலானோர் வலிப்பு நோயை, ஒரு மனநோயாகச் சித்திரிக்கின்றனர். மேலும், வலிப்பு நோயை, 'காக்காய் வலிப்பு’ என்று மட்டும் கருதி, அவர்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சிலர் பின்பற்றுகின்றனர். இது முற்றிலும் தவறு. வலிப்பு, நரம்பியல் சார்ந்த பிரச்னை. குழந்தை பிறக்கும்போது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு, அதன் அளவு குறையும்போது, மூளையில் சில தழும்புகள் ஏற்படும். இதுவே வலிப்பு நோய்க்கான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று, பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த நோயைப் பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்'' என்கிற டாக்டர் தினேஷ், சிகிச்சைமுறைகளையும் சொன்னார்.

''ஒரு சிலருக்கு கடுமையான காய்ச்சலின்போது எப்போதாவது இதுபோன்ற வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கும் வலிப்பு நோய்க்கும் சம்பந்தம் இல்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறாரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். 80 சதவிகிதம் வலிப்பு நோய்களை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், உண்மையிலேயே அவருக்கு வலிப்பு நோய் உள்ளதா, அவர் எந்த வகை வலிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார், மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்பதைக் கண்டறிய, மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈ.ஈ.ஜி. (Electroencephalogram) மற்றும் சி.டி. (CT), எம்.ஆர்.ஐ. (MRI), பெட் (PET) பரிசோதனைகள் செய்யப்படும். அந்தப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்திவிட முடியும். அதன் பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் அவசியம் பெரும்பாலும் இருக்காது.

உரிய நேரத்தில், சரியான சிகிச்சை மேற்கொள்ளும், எந்த ஒரு வலிப்பு நோயாளியும், சராசரி மனிதர்களைப் போல, தன் வாழ்நாளை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்' என்றார்.

தெளிவும், விழிப்பு உணர்வும், கொஞ்சம் கவனமும் இருந்தால் எந்த நோயையும் நெருங்கவிடாமல் செய்துவிடலாம்! 

 வலிப்பு வராமல் தடுக்கலாம்:

குழந்தைகள், கர்ப்பிணிகள், மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால், உடனடியாகப் பரிசோதனைசெய்ய வேண்டும். 

தலையில் லேசாக மோதிக்கொண்டு ஏற்படும் சிறிய காயங்கள்கூட மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கவனம் அவசியம்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

 வலிப்பு வந்தவுடன் செய்யவேண்டியவை::

வலிப்பு ஒருவருக்கு வந்தால், அருகில் இருப்பவர்கள் பதற்றமடையவோ பயப்படவோ வேண்டாம்.

வலிப்பு வந்தவரை, தரையில் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடித்து ஒருபக்கமாகப் படுக்கவையுங்கள். அவரைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம்.

சாவியையோ வேறு இரும்புப் பொருட்களையோ கையில் திணிக்க வேண்டாம். இதனால் பாதிக்கப்பட்டவர் தன்னைக் காயப்படுத்திக்கொள்ள நேரும்.

நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ வேறு திரவமோ தரக் கூடாது. அப்படிக் கொடுத்தால், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத் திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.

சில நிமிடங்களில் வலிப்பு தானாக நின்றுவிடும், பிறகு நோயாளி ஆழ்ந்து உறங்கிவிடுவார். அவரை ஆசுவாசப்படுத்துங்கள்.

- க.பாலாஜி @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்! Empty Re: நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

Post by M.M.SENTHIL on Sun Nov 17, 2013 10:14 pm

எத்தனை அறிவுரை சொன்னாலும், வலிப்பு வந்த ஆளை கண்டவுடன் கையில் சாவி கொத்தையோ, வேறு ஏதாவது இரும்பு பொருளையோதான் தேடுகிறோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்! Empty Re: நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

Post by ayyasamy ram on Mon Nov 18, 2013 10:11 am

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63255
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்! Empty Re: நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum