புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:49

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
71 Posts - 53%
heezulia
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:48





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:49

மேஷம்

நுண்ணறிவும், நுணுக்கமான செயல்பாடுகளும் உடையவர்களே! ஜய வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறக்கிறது. உங்களில் சிலருக்கு வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். புது வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாகி நிற்பதால் அலர்ஜி, சோர்வு, சிறு சிறு விபத்துகள் நிகழலாம். சகோதர வகையில் மனத்தாங்கல் உண்டாகும். வீடு- மனை வாங்குவதிலும் விற்பதிலும் யோசித்து செயல்படவும்.

ஜூன் 12 வரை உங்கள் யோகாதிபதியான குரு 3-ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால், காரியத் தடைகள், உறவினர் மற்றும் நண்பர்கள் பகை வந்துபோகும். இளைய சகோதரர் வகையில் செலவு, பிரிவுகள்

உண்டு. ஜூன் - 13 முதல் குரு 4-ல் சென்று அமர்கிறார். எனவே, பண வரவு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னை எழும்; நீதிமன்றம் செல்வதில்

அவசரம் வேண்டாம். பங்குச் சந்தையில் பணம் போட்டு சிக்கிக்கொள்ளாதீர்கள். பயணத்தின்போது கவனம் தேவை. அரசு வரிகளை உடனுக்குடன் செலுத்தவும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவிவழி உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழ் அடைவீர்கள். உத்தியோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். ஜூன் 20-ம் தேதி வரை கேது உங்கள் ராசியிலேயே நீடிக்கிறார். பெரிய நோய் இருப்பது போன்ற வீண் பயம், முன்கோபம் வந்துபோகும். பேச்சில் கவனம் தேவை. ஜூன் 21 முதல் உங்கள் ராசியை விட்டு கேது விலகுவதால் டென்ஷன் குறையும்; அழகு-ஆரோக்கியம் கூடும். கௌரவ பதவிகள் தேடி வரும். 

டிசம்பர் 15 வரை கண்டகச் சனி நடைபெறுவதாலும், ஜூன் 20 வரை ராகு சனியுடன் சம்பந்தப் பட்டிருப்பதாலும் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.  வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகளும் எழும். விட்டுக்கொடுத்து போகவும். டிசம்பர் 15 வரை, உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மன இறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 14.7.14 முதல் 3.9.14 வரை உங்கள் ராசி நாதனான செவ்வாய், சனியுடன் சேர்ந்து பலவீனம் ஆகிறார். இந்த காலகட்டத்தில் பண இழப்பு, ஏமாற்றம் வந்து போகும்.

டிசம்பர் 16 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

ஐப்பசி மாதம் முதல் செவ்வாய் வலுவடைவதால், மனதில் நிம்மதி பிறக்கும். சகோதர வகையில் பகை நீங்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வீடு கட்டத் துவங்குவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். 25.9.14 முதல் 18.10.14 வரை சுக்கிரன் வலுவிழப்பதால் பல் வலி, பார்வை கோளாறு, ஆபரண இழப்பு,

வாகன விபத்து மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். ஆவணி, தை, மாசி மாதங்களில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். திருமணம் கூடி வரும்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாளுவது நல்லது. பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்னை தருவர். நன்கு ஆராய்ந்து பின்னர் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பது நல்லது. ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், டிராவல்ஸ், மற்றும் உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அனுபவம் இல்லாத புதிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை சக ஊழியர்களிடம் தெரிவிக்கவேண்டாம். ஜூன் 13 முதல் உத்தியோக ஸ்தானத்தை குரு பார்க்க இருப்பதால், சாஃப்ட்வேர் துறையினர், தங்களது உத்தியோகத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடவேண்டியிருக்கும். ஜய வருடம் பிறக்கும்போது, உங்கள் யோகாதிபதி குருவின் நட்சத்திரத்தில் சனி  நிற்பதால், வெளிமாநிலம் மற்றும் அயல்நாட்டில் நல்ல வேலை வாய்ப்பு கூடி வரும். 

கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் சிபாரிசு மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளியாகி, புகழை அள்ளித் தரும். கடனில்

ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.  கன்னிப் பெண்களுக்கு, உங்களின் சுகாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால், தள்ளிப்போன திருமணம் கூடி வரும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மாணவ-மாணவிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசல் மற்றும் வீண் வதந்திகளால் உங்கள் புகழ் குறையும். தலைமையைப் பகைக்கவேண்டாம்.

மொத்தத்தில் இந்த ஜய வருடம் நிம்மதியையும், பண வரவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமை அல்லது அமாவாசை திதியில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:50

ரிஷபம்

பேச்சிலே கண்டிப்பும் மனத்தில் இரக்கமும் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது ஜய வருடம் பிறக்கிறது. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உங்களின் 5-ம் வீட்டில் ஜய வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் உயரும். மகளுக்கு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர் கல்வி மற்றும் உத்தியோக முயற்சிகள் சாதகமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

ஜூன்- 12 வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். ஜூன்- 13 முதல் வருடம் முடியும் வரையிலும் குரு 3-ல் அமர்வதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். சோர்வு, திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்கவேண்டாம்.

ஜூன்- 20 வரையிலும் ராகு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் தொடர்வதால், கனவு நனவாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டு பிளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும். ஆனால், கேது 12-ல் மறைந்திருப்பதால் திட்டமிடாத பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். ஜூன்- 21 முதல் உங்கள் ராசிக்கு 5-ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகமாகும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க்கவும். கேது ஜூன் 21 முதல் லாப வீட்டில் நுழைவதால், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அந்நிய மொழி பேசுபவரால் முன்னேற்றம் கிட்டும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும்.

ஆவணி, தை, மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பண வரவு, வீடு, வாகனம் வாங்கும் யோகம், புதியவரின் நட்பு உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஐப்பசி மாதத்தில் உங்கள் ராசி நாதன் சுக்கிரனும், சுகாதிபதி சூரியனும் வலுவிழந்து காணப்படுவதால் இருமல், உஷ்ணத்தால் வயிற்று வலி, முன்கோபம், குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். பணப் பற்றாக்குறையும் உண்டு. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆரோக்கியம் பாதிக்கும். அவர்களுடன் மனக்கசப்பு வந்து விலகும்.

டிசம்பர் 15 வரையிலும் சனி பகவான் 6-ல் நிற்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். வழக்கு சாதகமாகும். புது பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். சிலர், சொந்தத் தொழில் தொடங்குவர். டிசம்பர் 16 முதல், சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், எதிலும் ஆர்வமின்மை, தாழ்வு மனப்பான்மை, சோர்வு வந்து நீங்கும்.

ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் போட்டி, வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிக்கு சிறு சிறு விபத்துகள், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். எவருக்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். 

வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் பற்று- வரவு உயரும். கடையை முக்கிய சாலைக்கு மாற்றி விரிவுபடுத்துவீர்கள். முழுமையாக ஒத்துழைக்கும் பங்குதாரர் அமைவார். துரித உணவகம், மர வகைகள், வாகன உதிரி பாகங்கள், அழகு சாதனப் பொருட்களால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவர். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை

முடிப்பீர்கள். ஜூன்-13-ம் தேதி முதல், குரு 3-ல் மறைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களிடம் ஒப்படைப்பார். சனி பகவான் டிசம்பர் 16 முதல் 7-ல் அமர்வதால், இட மாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் அவ்வப்போது எழும். உங்கள் மீது சிலர் வழக்கு தொடர்வார்கள். பதவி - ஊதிய உயர்வை போராடி பெற வேண்டி வரும். கலைத் துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவர்.

மாணவ-மாணவியர் சமயோசித புத்தியால் சாதிப்பார்கள்.  கன்னிப்பெண்களுக்குப் புது வேலை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு, தலைமைக்கு நெருக்கமானவர்கள் அறிமுகமாவர். கோஷ்டிப் பூசலில் சிக்க வேண்டாம். செல்வாக்கு கூடும். 

மொத்தத்தில் இந்த ஜய வருடம் உங்கள் திறமையைச் சோதிப்பதாக இருந்தாலும், கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் தும்பைப் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:51

மிதுனம்

மற்றவர்க்கு வழிகாட்டியாக வாழ்பவர் நீங்கள். உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்கும்போது, ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். புதிய வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் ஜய வருடம் பிறப்பதால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள்.

ஜூன் - 12 வரை ஜென்ம குரு தொடர்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். காசோலை தரும்போது, வங்கி இருப்பை சரிபார்க்கவும். ஜூன் - 13 முதல், குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால், எதிர்பார்த்த தொகை வந்துசேரும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வழக்கு நெருக்கடிகள் வந்து நீங்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். வீண் பழி நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. விலகிய சொந்தபந்தங்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உதவுவர். ஆனி, ஆடி மாதங்களில் இருமல், சளித் தொந்தரவு, செலவுகள் ஏற்படும்.

ஜூன்- 20 வரை, கேது லாப வீட்டில் நிற்கிறார். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி துவங்கும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். ஷேர் மூலம் பணம் வரும். ஜூன் - 21 முதல், கேது உங்கள் ராசிக்கு 10-ல் நுழைவதால், வேலை அதிகரிக்கும். எவருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத் தகாக இடமாற்றம் வரும். கௌரவக் குறைச்சலான சம்பவங்கள் நிகழக்கூடும். ஜூன்- 20 வரை, ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். கர்ப்பிணிகள் சாலைகளைக் கடக்கும்போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் மூக்கை நுழைக் காதீர்கள். ஜூன் 21 முதல், ராகு 4-ல் நுழைவதால் தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களை  சரிபார்க்கவும். வீடு மாறும் சூழல் உருவாகும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். 

டிசம்பர்- 15 வரை சனிபகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால், உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். சொத்து வழக்கில் வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுங்கள். டிசம்பர்- 16 முதல் சனி 6-ல் நுழைவதால் எதிரிகளும் நண்பர்களாவர். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கும். விசா கிடைக்கும். அண்டை மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் நண்பர்களாவர்.   

வியாபாரத்தில், தள்ளுபடி விற்பனை மூலம் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் ஆவணி, புரட்டாசி மாதங்களில் கையெழுத்தாகும். புது முதலீடுகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். ஹார்டுவேர்ஸ், ஜுவல்லரி, செங்கல் சூளை, சிமென்ட் போன்ற வகைகளால் லாபம் அடைவீர்கள்.

ஜூன்- 12 வரை ஜென்ம குரு தொடர்வதால், வேலைச் சுமை உண்டு. ஜூன்- 13 முதல் உங்கள் ராசியை விட்டு குருபகவான் விலகுவதால் அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உயரதிகாரிகள், உங்களின் கடின உழைப்பைப் புரிந்து கொள்வர். தொந்தரவு தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். எனினும், கேது ஜூன்- 21 முதல் 10-ல் அமர்வதால் சக ஊழியர்கள் மத்தியில் உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கலைத் துறையினருக்கு, உதாசீனப்படுத்திய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். 

மாணவ-மாணவியர், அதிக மதிப்பெண் பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவீர்கள்.  கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். சிலர், உயர் கல்விக்காக அயல்நாடு செல்வார்கள். அரசியல்வாதிகளுக்கு, தலைமையுடனான மோதல் நீங்கும். மாநில அளவில் புது பொறுப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், வருடத்தின் மையப்பகுதியில் இருந்து திடீர் யோகங்களும், அதிரடி முன்னேற்றங்களும் உங்களைத் தேடி வரும்.

பரிகாரம்:

ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:52

கடகம்

நல்ல கருத்துகளை நிலைநிறுத்துவதில் வல்லவர் நீங்கள். உங்கள் பாதகாதிபதி சுக்கிரன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில், ஜய வருடம் பிறக்கிறது. கடினமான காரியங்களும் எளிதில் நிறைவேறும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கு அழைப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில்  ஜய வருடம் பிறப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைப்பட்ட விஷயங்கள் நிறைவேறும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய சொத்தை விற்றுவிட்டு, புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். 

ஜூன்- 12 வரை, உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் குரு மறைந்து காணப்படுவதால், பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். அலைச்சல் அதிகரிக்கும். ஜூன் - 13 முதல், குருபகவான் ஜென்ம குருவாக அமர்வதால், உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மஞ்சள் காமாலை, காய்ச்சலால் சோர்வடைவீர்கள். தம்பதிக்கு இடையிலான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். ஜூன்- 20 வரையிலும் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். எடுத்த காரியத்தை முடிக்கத் திணறுவீர்கள். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

ஜூன்- 21 முதல் ராகு 3-ல் நுழைவதால் தைரியம் கூடும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். ஆனால் கேது ஜூன்- 21 முதல் 9-ம் வீட்டில் நுழைவதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்து மோதல்களும் வந்துசெல்லும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும்.       

டிசம்பர்- 15 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. ஓட்டுநர் உரிமத்தைப் புதிப்பிக்கத் தவறவேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். டிசம்பர் 16 முதல், சனி 5-ம் வீட்டில் நுழைவதால் வீண் பழி, தோல்வி மனப்பான்மை நீங்கும். என்றாலும், பிள்ளைகளால் பிரச்னை, அவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். 

வியாபாரத்தில், அதிகம் உழைக்கவேண்டி வரும். வேலை ஆட்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். எவருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவம் இல்லாத தொழிலில் இறங்க வேண்டாம். மார்கழி பிற்பகுதி, பங்குனி மாதங்களில் புது தொடர்புகள் கிடைக்கும். லாபம் உயரும். பங்குதாரர்களுடன் சச்சரவு வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஏஜென்சி, மூலிகை வகைகளால் லாபம் உண்டு. அரசு வரிகளை தாமதமின்றி செலுத்திவிடுங்கள்.

உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வது நல்லது. அடிக்கடி இடமாற்றங்களும் வரும். எதிர்பார்த்த சலுகை களும், சம்பள உயர்வும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.. சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உங்கள் திறமையை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர். சிலர், உங்களைத் தவறான புகாரில் சிக்கவைத்து, கோர்ட்-கேஸ் என்று அலைக்கழிப்பார்கள்.

கலைத்துறையினர் குறித்து வதந்திகள் எழலாம். சுய விளம்பரத்தைக் கைவிட்டு, யதார்த்தமான படைப்புகளைத் தருவதற்கு முயற்சியுங்கள். மாணவ-மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துங்கள். கன்னிப்பெண்கள், நட்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும். கல்யாணம் தள்ளிப்போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு வீண் வதந்திகளால் புகழ் குறையும். தலைமையைப் பகைக்க வேண்டாம். உங்களை கோஷ்டி பூசலில் சிக்கவைக்க எதிரணியினர் முயற்சிப்பார்கள்.

மொத்தத்தில் இந்த ஜய வருடம், ஆரோக்கியக் குறைவை யும், வீண் செலவுகளையும் தந்தாலும், இடையிடையே எதிர்பாராத வெற்றிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்:

உத்திரமேரூர் அருகில், திருப்புலிவனம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை நோயாளியின் மருத்துவத்துக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:52

சிம்மம்

வெளிப்படையானவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் ஜய வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. உங்கள் ரசனைக்கு ஏற்ப சொத்து அமையும். உங்கள் ராசியை சுக்கிரன் பார்க்கும் நேரத்தில் ஜய வருடம் பிறப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமை கூடும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். சகோதர வகையில் இருந்த மன வருத்தம் நீங்கும். வைகாசி, ஆனி மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருப்பதால், புது முயற்சிகள் பலிதமாகும். அரசாங்க விஷயம் சாதகமாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். 

ஜூன் - 12 வரை, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு தொடர்வதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன்; மகனுக்கு நல்ல  வேலை அமையும். சிலருக்கு மழலை பாக்கியம் கிட்டும். ஜூன் -13 முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால், வீண் விரயம், ஏமாற்றம், செலவுகள் வந்து செல்லும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம்.திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்க நேரிடும். ஜூன் - 20 வரை கேது 9-ம் வீட்டில் நிற்பதால், சேமிப்பு கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். பிதுர் வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். எனினும் ஜூன்- 20 வரை ராகு 3-ல் இருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

ஜூன் - 21 முதல் ராகு 2-லும்; கேது 8-லும் அமர்வதால், குடும்பத்தில் சலசலப்புகள், பார்வைக் கோளாறு வரக்கூடும். பேச்சில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகன விபத்து, அதீத செலவுகள் இருக்கும். வீண் சந்தேகம், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

டிசம்பர்- 15 வரை சனி 3-ம் வீட்டில் தொடர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வேலை கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் திரும்பக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். புறநகர் பகுதியில் வீடு வாங்குவீர்கள். சிலர், புதிய தொழில் தொடங்குவீர்கள். டிசம்பர்- 16 முதல் அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதால் வேலைச்சுமை, வாகனப் பழுது, தாயாருடன் மோதல், அவருக்கு மூட்டு வலி, தைராய்டு பிரச்னை வந்து செல்லும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மற்றும் மார்கழியின் பிற்பகுதி மற்றும் மாசி மாதங்களில் வீண் செலவுகள், குடும்பத்தில் சச்சரவு, முன்கோபம், சிறு சிறு உடல்நலக் குறைபாடுகள் வந்து செல்லும்.

வியாபாரத்தில், தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சந்தையில் மதிப்பு கூடும். புதிய பதவிகள் தேடி வரும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகள் வசூலாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி பிற்பகுதியில் புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். என்டர்பிரைசஸ், பெட்ரோ-கெமிக்கல், மருந்து, கடல் உணவு வகைகளால் லாபம் அடைவீர்கள்.

ஜூன்- 12 வரை உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். ஜூன் 13-ந் தேதி முதல் கூடுதல் கவனம் தேவை. சிலர், தங்களை அறிவாளிகளாகக் காட்டிக்கொள்ள, மேலிடத்தில் உங்களைக் குறை சொல்வார்கள். வைகாசி, ஆனி, பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புது பொறுப்புகள் தேடி வரும். சிலர் உத்தியோ கத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள்.  கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் அடைவார்கள். மாணவ-மாணவியர், படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கன்னிப்பெண்கள், உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்த ஜய வருடம், தடைப்பட்ட வேலை களை முடிக்க வைப்பதுடன், உங்களுடைய நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:53

கன்னி

நகைச்சுவை உணர்வு மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில், ஜய வருடம் பிறக்கிறது. இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறும் ஆற்றல் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். உங்கள் ராசியிலேயே ஜய வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். வருடம் பிறக்கும்போது செவ்வாய் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதுடன், சுக்கிரனும் 6-ம் வீட்டில் பலவீனமாகி நிற்பதால், மன இறுக்கம் அதிகமாகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்துப் பிரச்னையை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குகள் தள்ளிப்போகும். ஆனி, ஆடி, மார்கழி மற்றும் மாசி மாதங்களில் திடீர் யோகங்களும் உண்டாகும். 

ஜூன் - 12 வரை குரு 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். ஜூன் 13 முதல் குருபகவான் லாப வீட்டில் சென்று அமர்வதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஷேர் மூலம் பணம் வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாகும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

ஜூன்- 20 வரை கேது உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டிலும், ராகு 2-லும் நிற்பதால்  உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்ப அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஜூன்-21 முதல் ராகு உங்கள் ராசிக்கு உள்ளேயும், கேது 7-ம் வீட்டிலும் நுழைவதால் விபத்துகளில் இருந்து மீள்வீர்கள். அலைச்சல் குறையும். என்றாலும் வீண் டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு, வந்துசெல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனைவிக்கு அடிவயிற்றில் வலி, ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து மனம் கலங்குவீர்கள்.

டிசம்பர்- 15 வரை சனி உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால், சாதாரண பேச்சும் சண்டையில் முடியலாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பழைய பிரச்னைகள் மீண்டும் தலையெடுக்குமோ என்ற அச்சம் வரும். கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவது நல்லது. வழக்குகளில் நேரடி கவனம் தேவை. டிசம்பர்- 16 முதல் ஏழரைச் சனி விலகி 3-ம் வீட்டில் சனி நுழைவதால், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வங்கிக்கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை அறிந்து லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். எனினும் பெரிய முதலீடுகள் வேண்டாம்.

உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. வேலையாட்களால் பிரச்னைகள் வரும். பங்குதாரர் களை அனுசரித்துப் போகவும். அரசாங்கக் கெடுபிடிகள் தளரும். புதியவர்கள் வாடிக்கையாளர் ஆவர்.

உத்தியோகத்தில்... ஜூன் 12 வரை குரு 10-ல் தொடர்வ தால் மறைமுக எதிர்ப்புகளும், வேலைச்சுமையும் இருக்கும். ஜூன் - 13 முதல், தேங்கிக்கிடக்கும் பணிகளை விரைந்து  முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பை உயரதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். உங்கள் தகுதியை மேம்படுத்திக்கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு, புது வாய்ப்புகள் கிட்டும். அவர்களது படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

மாணவ-மாணவியருக்கு, மேற்படிப்பைத் தொடர, எதிர் பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கன்னிப் பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வார்கள். நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். அரசியல் வாதிகளுக்கு, அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடிப்பார்கள்.

மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி, உங்களை புலம்ப வைத்தாலும், பிற்பகுதி திடீர் யோகங்களை அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதிப் பெருமாளை சனிக்கிழமை அல்லது புதன் கிழமையில் வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மாணவனின் கல்விக்கு உதவுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:54

துலாம்

அன்புக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 5-ம் வீட்டில் வலுவாக நிற்கும்போது, ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். பேச்சால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் ஜய வருடம் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள்

உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனத்தை வாட்டும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

ஜூன் 12 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், பிரச்னைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவாள். மகளின் உயர்கல்வி சிறப்பாக அமையும். எதிரிகளும் நண்பர்களாவர். ஜூன் 13-ம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். வங்கிக் காசோலைகளை முன்னரே கையொப்பமிட்டு வைக்கவேண்டாம். வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது; கவனம் தேவை. சட்டத்துக்குப் புறம்பானவர்களுடன் நட்பு வேண்டாம்.

ஜூன்- 20 வரை கேது உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும், ராகு ராசியிலும் நீடிப்பதால், அவ்வப்போது முன்கோபம் வரும். ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு முதலான உபாதைகள் வந்துபோகும். பழைய கசப்பான சம்பவங்கள் குறித்து எவரிடமும் விவாதிக்க வேண்டாம். மனைவியிடம் வீண் சந்தேகம் வேண்டாம். அவருக்கு முதுகுத்தண்டு, அடிவயிறு மற்றும் கணுக்கால் வலி வந்து போகும். மனைவி வழி உறவினருடன் விரிசல் வரலாம். ஜூன்- 21 முதல் ராகு 12-ல் மறைவதாலும், கேது ராசிக்கு 6-ல் அமர்வதாலும் தடைகள் நீங்கும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். சிக்கனம் அவசியம். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

டிசம்பர்- 15 வரை சனி உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் ஜென்மச் சனியாக இருப்பதால், உடல் நலம் பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள

வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரிடம் ஆலோசிக்கவும். சொத்து வரி, வருமான வரிகளை கால தாமதமின்றி செலுத்திவிடுங்கள். டிசம்பர்- 16 முதல் பாதச் சனி தொடங்குவதால் பார்வைக் கோளாறு, பேச்சால் பிரச்னை, குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். பற்றாக்குறை நீடிக்கும். சித்திரை, ஐப்பசி, மாசி மாதங்களில் அலைச்சல், வீண் டென்ஷன், குழப்பம் வந்து செல்லும். செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். அயல் நாட்டில் இருப்பவர்கள், திடீரென்று அறிமுகம் ஆனவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்கவேண்டாம். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ரியல் எஸ்டேட், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். மார்கழி மாதத்திலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று- வரவு உயரும்.

ஜூன் - 12 வரை குரு 9-ல் நிற்பதால், உத்தியோகத்தில் மதிப்பு கூடும். ஜூன்- 13 முதல், குரு 10-ல் நுழைவதால் வேலை அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள், மனக்கலக்கம் வந்துபோகும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். மாணவ-மாணவியர், தங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே, பெற்றோரிடம் எதையும் மறைக்கவேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக்கூடும்; கவனம் தேவை. அரசியல்வாதிகள், வீண் விமர்சனங்களைத் தவிர்த்து, எல்லோரிடமும் இயல்புடன் பழக முயற்சிப்பது நல்லது.

மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி ஒரளவு பணவரவையும், பிற்பகுதி ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை பிரதோஷம் அல்லது பௌர்ணமி திதி நாளில் வணங்குங்கள். மூட்டை சுமக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:54

விருச்சிகம்

நீதி தவறாத நன்னெறியாளர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் இருக்கும் போது ஜய வருடம் பிறப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாக்கி பணத்தைக் கொடுத்து, புதிய சொத்துக்கு பத்திரப் பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள், உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.  உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் நிற்கும்போது, ஜய வருடம் பிறப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ஜூன்- 12 வரை குரு 8-ல் மறைந்து நிற்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடையும் வாய்ப்பு உண்டு. அதீத வேலை, அலைச்சல், செலவுகள் இருக்கும். வீண் சந்தேகத்தால் நல்ல நட்பை இழக்க நேரிடலாம்; கவனம் தேவை. ஜூன் - 13 முதல், உங்கள் ராசிக்கு 9-ல் குரு நுழைவதால் திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும். மதிப்பு உயரும். குடும்பத்தில் சச்சரவுகள் குறையும். வீடு கட்டவும் வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். மகளின் திருமணம், மகனின் உயர்கல்வி மற்றும் உத்தியோக விஷயங்கள் சிறப்பாகக் கைகூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.       

ஜூன்- 20 வரை கேது உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஜூன்- 21 முதல் கேது ராசிக்கு 5-ல் நுழைவதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் காரணமாக பிள்ளைகளைப் பிரிய நேரிடும். உறவினர்கள் குறித்து ஆதங்கம் எழும்.

அதிகம் செலவு செய்து பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். ஜூன்- 20 வரை, ராசிக்கு 12-ல் ராகு மறைந்திருக்கிறார்.  பழைய பகை மற்றும் கடனை நினைத்துக் கலங்குவீர்கள். அடுத்தவர் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். தாயாருக்கு கை, முழங்கால் வலி, சிறு சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஜூன்- 21 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால், எதிர்ப்புகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். புதிய வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரைக்கப்படும். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.               

டிசம்பர் 15 வரை ஏழரைச் சனியில் விரயச் சனி இருப்பதால் தூக்கம் குறையும். திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், விரயம் வந்துசெல்லும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். டிசம்பர்-16 முதல், சனி உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக அமர்கிறார். அது முதல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அக்கம்பக்கத்தாரிடம் அனுசரணை தேவை. சட்டத்துக் குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம்.

வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஆகும். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொடுக்கல்- வாங்கல் வேண்டாம். சிலர் சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், செங்கல் சூளை, ஸ்டேஷனரி, பதிப்பகம் வகைகளால் லாபம் உண்டு. வேற்று நாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் ஜூன் - 12 வரையிலும், பணிகளை போராடி முடிக்கவேண்டி இருக்கும். ஜூன் - 13 முதல் வேலைப்பளு குறையும். உங்கள் மீதான பொய் வழக்கு தள்ளுபடி ஆகும்.

பதவி உயர்வு கிட்டும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங் களில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறைனரின் படைப்புகள் வெளியாவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கும்.

மாணவ- மாணவியருக்கு, கல்வியில் மதிப்பெண் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. உயர்கல்வி எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் வெற்றி கிட்டும். திருமணத் தடைகள் நீங்கும்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். 

மொத்தத்தில் இந்த ஜய வருடம், உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானை மகம் நட்சத்திரம் நாளில் கந்த சஷ்டி கவசம் படித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Mar 2014 - 2:55

தனுசு

நல்லதையே நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ல் இந்த ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் செல்லும்போது, ஜய வருடம் பிறப்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கௌரவம் உயரும். சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும்.

ஜூன்- 12 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் அந்நியோன்யம் கூடும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஜூன் - 13 முதல் குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். சில வேலைகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது.

ஜூன் - 20 வரையிலும் கேது உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி, சரியாகப் பராமரியுங்கள். ராகு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால், அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஜூன் - 21 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-லும், கேது 4-லும் அமர்வதால் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் எழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எவருக்காகவும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பேச்சிலும் கவனம் தேவை.

டிசம்பர் - 15 வரை சனி லாப வீட்டில் நிற்பதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை மூலம் ஆதாயம் அடைவீர்கள். வசதியுள்ள வீட்டுக்கு குடிபுகுவீர்கள். சொந்த ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

அரசியலில் செல்வாக்கு கூடும். டிசம்பர் - 16 முதல் சனி பகவான் 12-ல் மறைந்து, ஏழரைச் சனியின் முதல் கட்டமான விரயச் சனி தொடங்கயிருப்பதால், ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். முக்கிய காரியங்களை நீங்களே முடிப்பது நல்லது.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். வியாபார சங்கத்தில் முக்கியப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.  சிலர், கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவார்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். பெட்ரோ-கெமிக்கல், மருந்து, உணவு, ஃபைனான்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

ஜூன்- 12 வரை குரு சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். ஜூன்-13 முதல் குரு 8-ல் மறைவதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கவே செய்யும். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு சக ஊழியரோ அல்லது மூத்த அதிகாரியோ உரிமை கொண்டாடுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். உரிமைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்கு, திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிட்டும். கற்பனைத் திறன் வளரும். மாணவ- மாணவியருக்கு அரசு தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக் கும். தீய நட்புகள் விலகும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர்வார்கள். கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு கிட்டும். சிரத்தையாக முயற்சித்து, நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். அரசியல்வாதிகள், தலைமையின் அன்புக்குப் பாத்திரமாவார்கள். தொகுதிக்கு நீங்கள் செய்யும் தொண்டால் புதிய பதவிகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ஜய வருடம் சுபச் செலவுகளையும், தொலைதூர பயணங்களையும் தருவதுடன், உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேறுவதற்கு உறுதுணை புரிவதாக அமையும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அய்யாவாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கராதேவியை அமாவாசை திதி நாளில் வணங்குங்கள். இதய நோயாளிக்கு உதவுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக