புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
87 Posts - 56%
heezulia
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:49 pm

சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: அரிசி - 2 கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடித்த வெல்லம் - 4 கப், நெய் - ஒரு கரண்டி, முந்திரி, திராட்சை - சிறிதளவு, ஏலக்காய் - 2.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 1
செய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். இதை அரிசியுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு களைந்து எடுத்து... பிறகு 7 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி, பிறகு பாகு காய்ச்சவும். தக்காளி பதம் வருவதற்கு சற்று முன் வேக வைத்த அரிசி - பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியானதும் சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும் (மீதமுள்ள நெய்யையும் சேர்க்கவும்). பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:49 pm

எள்  சுக்கு சாதம்
தேவையானவை: அரிசி - 2 கப், எள் - 2 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறிய துண்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப் பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 2
செய்முறை: அரிசியை உதிர் உதி ரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். எள்ளை கடாயில் வறுத்து தனியாக வைக்கவும். சுக்கை தட்டி பொடி செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, சுக்குப் பொடி, சாதம் சேர்த்துக் கிளறி... எள் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:50 pm

வெண் பொங்கல்
தேவையானவை: அரிசி - 2 கப், பாசிப்பருப்பு - கால் கப், மிளகு, சீரகம் - தலா  2 டீஸ்பூன்,  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 3
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு களைந்து எடுத்து, 7 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த அரிசி - பருப்பு கலவையை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:50 pm

திருவாதிரை கூட்டு
தேவையானவை: நறுக்கிய பூசணிக்காய், பரங்கிக்காய், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, சௌசௌ, உருளைக்கிழங்கு (சேர்த்து) - 2 கப்,  வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, வேக வைத்த கொண்டைக் கடலை - அரை கப், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 4
செய்முறை: காய்களை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, அரைத்த விழுது துவரம்பருப்பு, கொண்டைக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு சேர்த்து, காய்களை சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:50 pm

உளுந்தோரை
தேவையானவை:  உளுந்து - அரை கப், அரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய்  - 3, மிளகு - 4, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, வேர்க்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 5
செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, உளுந்து பொடியையும், சாதத்தையும் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:51 pm

மிளகோரை
தேவையானவை: அரிசி - ஒரு கப், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 6
செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு இரண்டையும் வறுத்து, பொடி செய்து வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு கடுகு, மீதியுள்ள உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளித்து... செய்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சாதத்தை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இதை வேர்க்கடலை சேர்க்காமலும் செய்யலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:51 pm

கதம்ப சாதம்
தேவையானவை: அரிசி - 2 கப், துவரம் பருப்பு - ஒரு கப், கேரட் - ஒன்று (நறுக் கவும்), பூசணிக்காய், பரங்கிக்காய் - தலா ஒரு கீற்று (நறுக்கவும்), நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, பீன்ஸ், கத்திரிக்காய், சௌசௌ, பச்சைப் பட்டாணி (சேர்த்து) - 2 கப், தனியா - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத் தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந் தயம் -  ஒரு டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, புளிக்கரைசல் - ஒரு கப்,  தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 8, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 7
செய்முறை: அரிசி, துவரம்பருப்பை குக் கரில் தனித் தனியாக வேக வைக்கவும். நறுக்கிய காய்களை தனியாக வேக வைக்க வும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக  அரைத்து வைக்கவும். அடிகனமான கடாயில் பருப்பு, காய்கள், புளிக்கரைசல், அரைத்து வைத்த விழுது, உப்பு... எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பிறகு சாதம் சேர்க்கவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வேர்க்கடலை ஆகியவற்றை எண்ணெயில் தாளித்து சேர்த்து... நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:51 pm

கசகசா  வெள்ளரி விதை சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கசகசா, வெள்ளரி விதை - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 8
செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். கச கசாவை சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலி யில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... வெள்ளரி விதையை சேர்த்து, சாதத்தையும் சேர்க்கவும். பிறகு உப்பு, கசகசா பொடி சேர்த்துக் கலக்கி, இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:51 pm

காஞ்சிபுரம் இட்லி
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - ஒன்றரை கப், மிளகு, சீரகம், சுக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள், கறிவேப்பிலை - சிறி தளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 9
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து... உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு, கொரகொரப் பாக (ரவை போல்) அரைத்து, இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.  மாவு நன்றாக பொங்கியதும், கடாயில் எண்ணெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம், சுக்குப் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, மாவில் சேர்க்கவும். பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். (சுமார் 15 நிமிடம்). பிறகு, தட்டில் கவிழ்த்துப் போட்டு 'கட்’ செய்து பரிமாறவும். மாவை எண்ணெய் தடவிய சிறிய கப்களில் ஊற்றியும் ஆவியில் வேக வைக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:52 pm

புளி அவல்
தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் 10
செய்முறை: அவலைக் கழுவி புளிக்கரைசலில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து அவலுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்து ஒரு மணி நேரம் அப்ப டியே வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க் கடலை, கறிவேப்பிலை தாளித்து, அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக