ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:46 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

Admins Online

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!

Go down

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Empty இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!

Post by சாமி on Sun Jan 12, 2014 1:05 pm

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! / கோ. சரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணி மேரி கல்லூரி, சென்னை / தினமணி

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவரும், தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவரும், முழுமைக்கும் உரை எழுதியவரும் இளம்பூரணரே! "உரையாசிரியர்' என்ற பொதுப்பெயரை சிறப்புப் பெயராகப் பெற்றவர். இத்தகு சிறப்பு வாய்ந்த இளம்பூரணரை ஒரு திறனாய்வாளர் என்று கூறுவது மிகவும் பொருந்தும்.

திறனாய்வாளருக்குரிய பண்புகள்
திறனாய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ""பொதுவாக அழகியல் உணர்வு, கலை இலக்கியத்தை இரசிக்கக்கூடிய, அனுபவிக்கக்கூடிய திறன் இவை திறனாய்வாளனுக்குரிய அடிப்படையான பண்புகள். இலக்கியத்தைப் பற்றியும் பரந்த உலகியல் வாழ்வு பற்றியும் பொதுவான அறிவும், அந்த - அல்லது இதனை ஒத்த பொருள்கள் பற்றிய ஆழமான அறிவும், சரியான புலனுட்பமும், எதிர்கொள்பவற்றில் குறிப்பிடத்தக்கவை கண்டால் அவற்றை பளிச்செனப் பற்றிக்கொள்ளும் துடிப்பான ஆற்றலும், எதிர்வினை நிகழ்வதில் வேகமும், உள்ளார்ந்த அறிவின் கூர்மையும், எதனையும் வகுத்தும் தொகுத்தும் பொதுமைப்படுத்தியும் வேறுபடுத்தியும் பார்க்கின்ற பக்குவமும் திறனாய்வாளனுக்கு வேண்டப்படுகிற பண்புகள்'' எனத் "திறனாய்வுக்கலை' என்ற தம் நூலில் தி.சு. நடராசன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பண்புகள் இளம்பூரணர் உரையில் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

சொற்பொருளறிவு
தொல்காப்பிய நூற்பாக்களில் உள்ள புரியாத, கடுமையான சொற்களுக்கு இளம்பூரணர் தமது உரையில், "குயின் என்பது மேகம்', "அழனென்பது பிணம்', "காரகமென்பது கரடி', உரன் என்பது அறிவு', "எழில் என்பது அழகு', "வியப்பென்பது தம்மைப் பெரியராக நினைத்தல்', "அலராவது சொல்லுதல்' "மூங்கா என்பது கீரி', "நவ்வி என்பது புள்ளிமான்' எனப் பல அருஞ்சொற்களுக்குத் தேவையான இடங்களில் பொருள் கூறி விளக்கிச் செல்வதிலிருந்து அவருடைய சொற்பொருளறிவு வெளிப்படுகிறது.

கணக்கியலறிவு
கணித அறிவில் சிறந்த கணக்காயனார், கணிமேதாவியார் முதலிய புலவர் பலர் வாழ்ந்த இலக்கிய உலகில் இளம்பூரணரும் தமது உரையில் கணக்கியல் அறிவினைப் பதிவு செய்யுள்ளார். இதனை, மாத்திரைக்கு இலக்கணம் கூறும்போது (எழுத்து-7) நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைப் பற்றிக் கூறுவதிலிருந்தும் (எழுத்து-437), எண்ணுப் பெயரொடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணரும் புணர்ச்சி பற்றிக் கூறும்போது கழஞ்சு, தொடி, பலம் போன்ற நிறைப்பெயரையும் கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு போன்ற அளவுப் பெயர் களையும் குறிப்பிடுவதிலிருந்து அவரது கணக்கியலறிவு புலப்படுகிறது.

வானியலறிவு
மழை, வெப்பம், காற்றழுத்தத்தாழ்வு, புயல் போன்றவற்றைப் பற்றி இன்று வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து கணித்துக் கூறுகின்றனர். ஆனால், இளம்பூரணர் அன்றே தம் உரையில் கோள்நிலை, மழைநிலை பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார். இதனை, புறத்திணையியலில் வாகைத்திணை பற்றிய நூற்பாவில் "மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்' (பொருள்-74) என்பதற்கு, அறிவன் என்றால் "கணியன்' என்றும், மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதல்' என்பதற்குப் பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன் வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்' என்று இளம்பூரணர் கூறும் உரை விளக்கத்திலிருந்து அவரது வானியல் அறிவையும் அறிந்துகொள்ள முடிகிறது.

அறிவியலறிவு
"பரத்தையின் பால் பிரிந்த தலைவன், தலைவிக்குப் பூப்பு நேரும் காலத்தை அறிந்தவுடனே தன் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்(பொருள்-185). பூத்தோன்றி மூன்று நாள் கழித்துப் பின்பு பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியைவிட்டுப் பிரியாமல் உறைதல் வேண்டும். ஏனெனில், அது கருத்தோன்றும் காலம்' என்கிறார்.

கலையுணர்வு
கலைகளிலும் இளம்பூரணருக்கு ஈடுபாடு உண்டு என்பதை, அகத்திணையியலில் பிரிவின்கண் தலைமகனுக்குக் கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில் (பொருள்-44) "வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு' என்பதற்கு, "வாயான் வகுத்தப் பக்கமாவது ஓதுதல், கையான் வகுத்தப் பக்கமாவது படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும்' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது கலையுணர்வை அறிய முடிகிறது.

மேற்கண்டவற்றிலிருந்து இளம்பூரணரின் பல்துறை சார்ந்த அறிவும், உலகியல் அறிவும் தெளிவாகப் புலப்படுகிறது. இதன் வழி "இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே' என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum