ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Today at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Today at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Today at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 7:08 am

» இன்று சா்வதேச முதியோா் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Today at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Today at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Today at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 6:57 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 10:34 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Tue Sep 29, 2020 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Tue Sep 29, 2020 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:35 am

Admins Online

"மேதகு' எனும் சங்கச் சொல்!

Go down

"மேதகு' எனும் சங்கச் சொல்! Empty "மேதகு' எனும் சங்கச் சொல்!

Post by சாமி on Sun Jan 26, 2014 9:19 pm

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வீடுபேற்றை உணர்வதற்காக மாங்குடி மருதனாரால் இயற்றப்பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இதில் பாண்டிய மன்னனின் படைச்சிறப்புகளோடு மதுரை மாநகரின் சிறப்புகள் வெகுவாகப் பேசப்படுகின்றன. அம் மதுரையில் "கொண்டி' மகளிரும் (பரத்தையர்) இருந்துள்ளனர் என்ற குறிப்பையும் அறியமுடிகிறது.

"பழந்தேர் வாழ்க்கைப் பறவை போன்றவர்', "நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்' எனக் கொண்டி மகளிரை அவர்களின் இயல்புகளோடு சுட்டுகிறார். அவ்வகைக் கொண்டி மகளிர் தமது ஒப்பனைகளால் இளைஞர்களை எவ்வாறு கவர்கிறாள் என்பது பற்றிய வரிகளில் "மேதகு' எனும் சொல் பயின்று வந்துள்ளது. அப்பாடலடிகள்

வருமாறு:

"நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
"மேதகு' தகைய மிகுநல மெய்தி''
(ம.கா. 562-565)

இப்பாடலில் வரும் "மேதகு தகைய மிகுநல மெய்தி' என்னும் பாடலடிக்கு "முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமைதருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக வொப்பித்து' என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். அதாவது, இங்கு "மேதகு' என்பது "பெருமை தருகின்ற' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதே பொருளில் இன்றைய தமிழில் அடையாக இச்சொல் வழங்கிவருகிறது.

பொதுவாக "மேதகு' என்னும் சொல்லை மேன்மை தங்கிய (ஏண்ள் உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீஹ்) என்ற பொருளில் கையாளுகின்றனர். "மேன்மையான' என்று தமிழ்மொழி அகராதி விளக்கம் தருகிறது. இன்றைய வழக்கில் பயின்றுவருதைக் கொண்டு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி "மேதகு' எனும் சொல்லை இலக்கண வகையில் பெயரடையாக வகைப்படுத்தியுள்ளது. இன்றைய தமிழில் அடையாகச் சுட்டப்படும் இச்சொல் மிக நெடுங்காலமாக வழக்கில் இருந்து வருகிறது.

பழந்தமிழில் இச்சொல் பெயர்ச் சொல்லாக மட்டுமே வழங்கிவந்துள்ளது. தமிழில் பெயர்ச்சொல் பெயரடையாக வழங்குவது இயல்பான நிகழ்வாகும். சங்கப் பாடல்களுள் மேற்கண்ட ஓர் இடத்தில் மட்டுமே இச்சொல் இடம்பெற்றுள்ளது. "மேதகு' என்னும் சொல் சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளன.

"பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன்,
மேதகு காலின் ஊக்கம் கண்டோன்''
(திருவாசகம், 3,25)

"விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியை'' (திருமந்திரம், 289)

"மேதகு பல்கலன் அணிந்து'' (நா.தி.பி. 2578: 7)

"மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே'' (நா.தி.பி.2672: 30)

தமிழில் "மேதகு' என்னும் சொல் சங்க காலம் முதற்கொண்டு வழக்கில் இருந்து வந்துள்ளதைத் தரவுகள் வழி அறியமுடிகிறது. அவ் வகையில் இன்றைக்கு "மேதகு ஆளுநர்', "மேதகு குடியரசுத் தலைவர்' என்று அடையாகச் சுட்டுவதைக் காண்கிறோம். இலக்கண நிலையில் சிறிதளவு மாற்றம் பெற்றிருப்பினும், சங்க காலம் முதல் சமகாலம் வரை உயர்ச்சிப் பொருளில் மட்டுமே "மேதகு' என்ற சொல் கையாளப்பட்டுள்ளது நினைவு கொள்ளத்தக்கதாகும். - தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

"மேதகு' எனும் சங்கச் சொல்! Empty Re: "மேதகு' எனும் சங்கச் சொல்!

Post by ayyasamy ram on Mon Jan 27, 2014 9:10 am

"மேதகு' எனும் சங்கச் சொல்! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61262
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum