புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_m10சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:18 am

குடுகுடு பாட்டியும்..துறுதுறு சின்னியும் !

அந்த ஊர்ல, ஒரு பாட்டி இருந்தாங்க. அந்தப் பாட்டியை எல்லோரும் 'குடுகுடு’ பாட்டினு, சொல்வாங்க. ஊர்ல இருக்கிற பாட்டிகளில் ரொம்ப ரொம்ப வயசான பாட்டி அவங்கதான். அவங்க வயது என்னன்னு யாருக்குமே தெரியாது. ஏன், அந்தப் பாட்டிக்கே தெரியாது.

பாட்டிக்கு ரொம்ப வயதானாலும் கண்ணு நல்லாத் தெரியும். முறுக்கு, சீடையைக் கொடுத்தால், 'கடக் முடக்’னு கடிச்சுத் தின்பாங்க. பாட்டியின் பற்கள் அவ்வளவு உறுதியா இருக்கும். ஆனால், அவங்க தலை மட்டும் எப்பவுமே ஆடிக்கிட்டே இருக்கும். அதனாலதான், அவங்க பேர் 'குடுகுடு’ பாட்டி!

கை வைத்தியம் செய்றதில் பாட்டியை அடிச்சுக்க ஆளே கிடையாது. ஊர்ல யாருக்கு உடம்பு முடியலைன்னாலும் பாட்டிகிட்டேதான் ஆலோசனை கேட்பாங்க. பாட்டியும் அன்போடு சொல்வாங்க. அப்படி ஆலோசனை சொல்லும் நேரம் போக, மத்த சமயங்களில் ஆடு, மாடு, கோழிகளோடு பேசிட்டிருப்பாங்க 'குடுகுடு’ பாட்டி.

இது தவிர, அழகான சின்னக் குருவியும் பாட்டிக்கு ஃப்ரெண்டு. அதுக்கு பாட்டி வெச்ச பேரு சின்னி. அந்த சின்னி, தினமும் பாட்டி வீட்டு ஜன்னலில் வந்து உட்காரும். பாட்டி தினமும் அதுக்கு தானியம், சாதம் வைப்பாங்க. சின்னக் கிண்ணத்தில், குடிக்கத் தண்ணியும் வைப்பாங்க. மதியம் சரியா 12 மணிக்கு சின்னி வந்து சாப்பிடும். அதைப் பார்க்கிற பாட்டிக்கு சந்தோஷமா இருக்கும்.
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Ch30a
அப்போ, சின்னியோடு பாட்டி பேசுவாங்க. ''என்ன சின்னி... இன்னைக்கு ரொம்ப வெயிலா? துவண்டுபோய் வந்திருக்கியே''னு அதன் மேல் தண்ணீரைப் பன்னீர் தெளிக்கிற மாதிரி தெளிப்பாங்க.

சின்னியும் நன்றியோடு பாட்டியை ஒரு பார்வை பார்க்கும். சின்னிக்குப் பேச வாய் இல்லையே தவிர, பாட்டி பேசுறதை எல்லாம் கேட்டு, தலையைத் தலையை ஆட்டி, 'ஆமாம்...’ 'இல்லை’னு சொல்லும்.

ஆனால், பாட்டி எவ்வளவு தீனி கொடுத்தாலும் சாப்பிட்டுட்டு அரை மனசோடவே சின்னி பறந்துபோகும்.

''போதும் என்கிற மனசு வேணும் சின்னி. அதுதான் நல்லது. எதிலும் அவசரமும் பதட்டமும் வேணாம்'' எனக் குழந்தைக்குச் சொல்றமாதிரி, பாட்டி அடிக்கடி சின்னிக்குச் சொல்லுவாங்க. சின்னியோ, தலையைத் திருப்பிட்டுப் போய்டும்.

கொஞ்ச நாளில் 'குடுகுடு’ பாட்டியின் பேத்திக்குக் கல்யாணம் வந்துச்சு. ஊர் பூரா ஒரே கொண்டாட்டம். எல்லோருக்கும் பத்திரிகை வைத்த பாட்டி, மறக்காமல் சின்னிக்கும் கொடுத்தாங்க. ''காலையிலேயே வந்துடு சின்னி. கல்யாணத்திலே வடை, பாயசம், விதவிதமா கூட்டு, பொரியல்னு நிறைய இருக்கும்'' என்றார் பாட்டி.

கல்யாண நாளும் வந்துச்சு. சின்னியும் சரியான நேரத்துக்குப் பறந்துவந்து மண்டபத்தில் இருந்த ஜன்னல் மேலே உட்கார்ந்துச்சு. இதைக் கவனிச்ச 'குடுகுடு’ பாட்டி, ஒரு சின்னக் கிண்ணத்திலே சர்க்கரைப் பொங்கலைப் போட்டு எடுத்துவந்தாங்க.

''சின்னி, சர்க்கரைப் பொங்கல் ரொம்ப சூடா இருக்கு. ஆறினபிறகு நிதானமா சாப்பிடு. எனக்குக் கல்யாண வேலை நிறைய இருக்கு'' என்று அன்பாகச் சொல்லிட்டு உறவினர்களைக் கவனிக்கப் போய்ட்டாங்க.

சர்க்கரைப் பொங்கலின் வாசனை சின்னியை மயக்கிச்சு. நெய், முந்திரி, திராட்சை எல்லாம் போட்டுச் செய்த பொங்கல். உள்ளே வடை, பாயசம் எல்லாம் ரெடி ஆகிட்டு இருந்துச்சு. 'இதை இப்பவே சாப்பிடணும். அப்போதான் வடை, பாயசம் கிடைக்கும். இல்லைன்னா மத்தவங்க காலி பண்ணிடுவாங்க’ என்று நினைச்சது சின்னி.
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Ch30b
'யாராவது தன்னோட கிண்ணத்தைப் பிடுங்கிப்பாங்களோ...’ என்ற பயமும் அதுக்கு இருந்துச்சு. அதனால், 'இந்த இடத்தைவிட்டு தூரமாகப் போய்ட்டா நல்லது’னு நினைச்சது சின்னி.

பொங்கல் கிண்ணத்தைத் தன் அலகால் பிடிச்சுக்கிட்டு, வேகமா பறக்க நினைச்சது. பொங்கல் கிண்ணம் சூடாக இருந்தது சின்னிக்குத் தெரியலை. அதோட சின்ன அலகில் கிண்ணம் பட்டதும் சூடு தாங்கலை. பதறி வாயைத் திறக்க, கிண்ணம் நழுவி 'தொப்’ என விழுந்துருச்சு. எங்கே தெரியுமா? தண்ணீர் நிறைஞ்ச ஒரு அண்டாவில்.

'கடல்ல கரைச்ச பெருங்காயம்’ மாதிரி, சர்க்கரைப் பொங்கல் தண்ணீரில் மூழ்கி வேகவேகமாகக் கரைஞ்சுபோச்சு. சின்னிக்கு என்ன செய்றதுனே தெரியலை.

'அவசரப்பட்டு, அருமையான உணவை வீணாக்கிட்டோமே... இப்போ என்ன செய்றது?’னு சோகத்தோடு அண்டா நுனியில் உட்கார்ந்துச்சு. அதன் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு, அந்த அண்டாத் தண்ணீரில் விழுந்துச்சு.

மண்டபத்தில் உறவினரோடு பேசிட்டு இருந்தாலும், 'குடுகுடு’ பாட்டி இதைக் கவனிச்சுட்டாங்க. உடனே, அவங்க சமையல்கட்டுக்குப் போனாங்க. திரும்பிவந்த அவங்க கையில், இன்னொரு கிண்ணத்தில் சர்க்கரைப் பொங்கல்.

''அவசரப்படாதேனு சொன்னா கேட்கிறியா? இந்தா, இதையாவது கொட்டிடாம சாப்பிடு. வடை, பாயசமும் எடுத்துட்டு வர்றேன்'' என்று அன்போடு தடவிக்கொடுத்தாங்க.

சின்னியின் சோகம் பறந்துபோச்சு. 'அவசரம் இல்லே, மெதுவாகவே கொண்டுவாங்க’ என்று சொல்றமாதிரி பாட்டியைப் பார்த்துட்டு, சர்க்கரைப் பொங்கலை நிதானமாக ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுச்சு சின்னி.

அப்புறம் என்ன... கல்யாணத்தில் தாம்பூலம் தவிர, எல்லாத்தையுமே சின்னி ஒரு வாய் பார்த்துச்சு.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:22 am

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.

''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Ch72b
''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:27 am

http://cdnw.vikatan.com/chutti/2014/03/mjcyod/images/ch72a.jpg
ஒரு சீடன் தன் குருவிடம் வந்தான். ''குருவே, நான் தவம் செய்யப்போகிறேன். என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்'' என்றான்.

''என்ன நோக்கத்துக்காக தவம் செய்யப்போகிறாய்?'' என்று கேட்டார் குரு.

''அதை இப்போதே சொல்ல விருப்பம் இல்லை. ஆனால், இந்தப் பகுதிக்கு ஒரு நன்மை செய்யவே தவம் செய்கிறேன்'' என்றான் சீடன்.

''இறைவன் விரைவிலேயே உன்னைச் சந்திக்க வாழ்த்துகிறேன்'' என்று ஆசீர்வதித்தார் குரு.

சீடன், ஆள் அரவமற்ற இடத்துக்குச் சென்று தனது தவத்தை ஆரம்பித்தான். 20 வருடங்கள் கடுமையாகத் தவம் செய்து, கடவுளிடம் வரம் பெற்றான். மகிழ்ச்சியுடன் குருவைத் தேடிவந்தான்.

''குருவே, எனக்கு நினைத்ததை நடத்தும் ஆற்றலை கடவுள் கொடுத்துவிட்டார். நம் ஊர் எல்லையில் ஓடும் ஆற்றினால், மக்கள் அடுத்த ஊருக்கு நீண்டதூரம் சுற்றிக்கொண்டு செல்கிறார்கள். என் வரத்தின் மூலம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்போகிறேன்'' என்றான்.

''அப்படியா... இதற்காகவா 20 வருடங்களை வீணடித்தாய்?'' என்று அமைதியாகக் கேட்டார் குரு.

சீடனுக்குக் கோபம் வந்துவிட்டது. ''நான் கடவுளிடம் வரம் பெற்றுவந்ததில் உங்களுக்குப் பொறாமை. மனம் இருந்தால், நான் செய்யப்போகும் நல்ல காரியத்தை வந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஆற்றங்கரையை அடைந்த சீடன் திகைத்துவிட்டான். அங்கே ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. அதில் மனிதர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, அவன் தோள் மீது ஒரு கை அன்புடன் தொட்டது.

சீடன் திரும்பிப் பார்த்தான். அவனது குருதான். ''இதை நான்தான் கட்டினேன். நீ தவம் செய்யச் சென்ற பிறகு, தினமும் ஓய்வு நேரத்தில் இங்கே வருவேன். கற்களை எடுத்து ஆற்றில் போட ஆரம்பித்தேன். என்னுடன் ஒரு சிலர் உதவிக்கு வந்தார்கள். இரண்டே ஆண்டுகளில் இந்தப் பாலத்தைக் கட்டிவிட்டோம்'' என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் தலைகுனிந்து நின்றான்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 10:24 am

கனம் நீதிபதி அவர்களே....

அந்தக் காட்டின் ராஜாவாகப் பதவியேற்ற சிங்கம், அதிகாரிகளை நியமிக்க கூட்டம் நடத்தியது.

''நல்வாழ்வுத் துறை அதிகாரியாக சிறுத்தையை நியமிக்கிறேன்!'' என்றதும் கூடியிருந்த விலங்குகள், கைதட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தன.

''யானையைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறேன்!'' என்றதும் மீண்டும் கைதட்டல். இப்படியே புலி, மான், குதிரை என ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறைக்கு அதிகாரியாக நியமித்தது.

கூட்டத்தில் இருந்த குரங்கு, 'தனக்கு எப்படியும் ஒரு பதவி கிடைக்கும்’ என்று நினைத்தது. சிங்கம், ''இறுதியாக, நீதிபதியாக ஆமையை நியமிக்கிறேன்'' என்று முடித்தது.

'போயும் போயும் ஆமைக்கு நீதிபதி பதவியா?’ என்று குரங்கின் மனம் குமுறியது. 'பிள்ளைக்குப் பேர் வைக்க வரச் சொன்னா, அந்தப் பிள்ளையின் கல்யாணத்துக்குதான் வந்து சேருவே!’ என்று ஆமையைக் குரங்கு அடிக்கடி கிண்டலடிக்கும்.

''அதிகாரிகள் நியமனத்தில் எல்லோருக்கும் திருப்திதானே?'' என்று சிங்கம் கேட்டதும், மற்ற விலங்குகள் தலையசைத்தன.

அப்போது குரங்கு, 'ராஜா, மற்ற அதிகாரிகளைப் பற்றி குறை சொல்வதற்கு இல்லை. ஆனால், ஆமைக்கு நீதிபதி பதவியா?'' என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Ch60b
புன்னகைத்த சிங்கம், ''சில மாதங்களுக்கு ஆமையின் செயல்பாட்டைப் பார்ப்போம். பிறகு, மாற்றம் குறித்து யோசிப்போம்!'' என்றது.

குரங்கு ஆமையிடம் வந்து, ''ஆமையாரே! உமக்கெல்லாம் நீதிபதி பதவி கிடைத்ததை 'கலிகாலம்’ என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல!'' என்று வயிற்றெரிச்சலைக் காட்டியது. ஆமையோ, பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பியது.

சில நாட்கள் சென்றன. திடீரென்று கரடி ஒரு வழக்கைக் கொண்டுவந்தது. ''கனம் நீதிபதியாரே! நான் மலைப் பகுதிக்குச் சென்று, சிரமப்பட்டு தேன் கொண்டுவந்து, என் குகையில் வைத்திருந்தேன். நேற்று, நான் இல்லாத நேரத்தில் யாரோ தேனைத் திருடி இருக்கிறார்கள்'' என்றது.

''உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?'' என்று ஆமை கேட்டது.

''நீதிபதியாரே! எனக்கு குரங்கு மீது சந்தேகம். நான், தேன் வைத்திருந்த மண்பானை, குரங்கு குடியிருக்கும் மரத்தின் அடியில் கிடந்தது!'' என்றது கரடி.

குரங்கு திடுக்கிட்டது. 'இது என்ன வம்பு. நான் எந்தத் தேனையும் திருடவில்லையே!’ என்று மனதில் கலங்கியது.

''சரி கரடியாரே! ஒரு வாரம் கழித்து தீர்ப்பைச் சொல்கிறேன்'' என்றது ஆமை நீதிபதி.

ஏற்கெனவே ஆமையைக் கிண்டலடித்து வந்த குரங்கு, 'ஆமை தன்னைப் பழிவாங்க என்ன தண்டனை தருமோ?’ என்று நினைத்தது. கவலையோடு கிளம்பியது.
சுட்டிக்குழந்தைளுக்கு சுட்டிக்கதைகள் Ch60a
அடுத்த வாரம் நீதிமன்றம் கூடியது. ''கரடியாரே! உன் தேனைத் திருடியவரைக் கண்டுபிடித்தாகிவிட்டது!'' என்றது ஆமை.

''குரங்குதானே தேனைத் திருடியவன்?'' என்று கேட்டது கரடி.

''இல்லை! உன் தேனைத் திருடியது நரி. தேனைத் திருடிக் குடித்துவிட்டு, பானையை உடைத்து, குரங்கு குடியிருக்கும் மரத்தின் அடியில் போட்டிருக்கிறது. நான் அங்கே போய் பார்த்தபோது, அந்த மரத்தின் அடியில் இருந்து எறும்புகள் சற்றுத் தொலைவில் உள்ள பொந்துக்குள் செல்வதைப் பார்த்தேன். அது நரியின் இடம். நரியைக் கண்காணித்துக் கண்டுபிடித்தேன். திருட்டுக் குற்றம் புரிந்த நரி, ஒரு வாரத்துக்குள் ஒரு பானைத் தேனை, கரடிக்குச் செலுத்த வேண்டும்'' என்றது ஆமை.

ஆமையின் தீர்ப்பைக் கேட்ட குரங்கின் மனம் நிம்மதி அடைந்தது. அப்போது சிங்கம், ''என்ன குரங்காரே! ஆமையை எதற்காக நீதிபதியாக நியமித்தேன் என்று இப்போது புரிகிறதா? விலங்குகளின் துன்பத்தை விரைவாகத் தீர்க்க, சிறுத்தையை நல்வாழ்வுத் துறை அதிகாரியாக நியமித்தேன். பலம் மிகுந்த யானையைப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக நியமித்தேன். நீதித் துறைக்கு பொறுமை அவசியம். அவசரத் தீர்ப்பளித்து, ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக் கூடாது. ஆராய்ந்துதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். நீதிபதிக்கான தகுதி, ஆமைக்கு இருக்கிறதல்லவா?'' என்று கேட்டது.

''நிச்சயமாக! நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேன். என்னை மன்னியுங்கள்!'' என்ற குரங்கு, ஆமைக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக