புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_m10ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 12:16 am

இந்தியாவின் 'இரும்பு மனிதராக' போற்றப்படும் வல்லபாய் படேலை போல, துணிச்சலாக பல முடிவுகளை எடுக்கக் கூடியவர் மோடி. குஜராத் வளர்ச்சியில் இதை நிரூபித்துள்ள இவர், இரண்டாவது 'இரும்பு மனிதராக' ஜொலிக்கிறார்.

இந்தியாவின் 14வது பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை, பட்டு விரிப்பிலும், பண செழிப்பிலும் திளைத்தது அல்ல! தன் பாதையல் கண்ட கரடு, முரடான கற்களை கூட, சிலைகளாய் மாற்றிதன் பின்னால் வருவோரின் பயணத்தை ரசனையாக்கியவர். ஒவ்வொரு முறை உயரத்திற்கு வரும் போதும், தான் கீழிருந்த போது இருந்த அதே மனநிலையும், அணுகுமுறையும் தான் மோடியை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவை சுமக்கவிருக்கும் அந்த இரண்டெழுத்து நாயகனின் வாழ்க்கை வரலாற்றை, திரும்பி பார்ப்போம்.இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தலைமை வகிக்க போகும் விருட்சத்திற்கான விதை, 1950 செப்டம்பர் 17ல் விதைக்கப்பட்டது. இன்று இந்தியாவின் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் வேரூரின்றிய அந்த விதையின் பெயர் நரேந்திர மோடி.

பிறப்பில் வறுமை

குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தின் வட்நகரில், தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி--ஹீராபேன் தம்பதிகளின் மூன்றாவது குழந்தை தான், இன்றுஇந்தியாவின் "முதல்வன்'.காரும், தேரும் கண்ட குடும்பம் அல்ல அது; ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவை உறுதிசெய்ய உழைப்பால்வியர்வையில் நீந்திய குடும்பம். உடன்பிறப்புகள் ஆறுபேரில் அப்போதே கெட்டிக்காரர் மோடி.வட்நகர் பள்ளியில் தன் கல்வியை தொடங்கிய காலத்திலிருந்தே புத்தகத்தோடு, தன் குடும்ப வறுமையையும் சுமக்கத் தொடங்கியவர். அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் டீ கடைநடத்திய தந்தைக்கு உதவியாக, மோடியும் 'டீ கிளாஸ்' பிடித்தார்.

சிறுவன் மோடியின் பெரிய மனம்!

சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்திலும், ஆற்றலிலும் தேர்ந்திருந்த மோடி, தனது எட்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்தார். தான் எதைத் தொட்டாலும் அதில் ஈடுபாடுகாட்டும் மோடி, "அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' எனும் மாணவர் குழுவின் தலைவரானார்.1967ல் குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மக்கள் தவித்த போது, 17வயது சிறுவர்கள் எல்லாம் வீட்டில் பெற்றோர் அரவணைப்பில் பதுங்கிய போது, துணிச்சலோடு நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அந்த அரைகால் டவுசர் சிறுவனை குஜராத் வரலாறு மறக்கவில்லை. அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு, அப்போதே தான் மக்களுக்காக பிறந்தவன் என்பதை நிரூபித்தார் சிறுவன் மோடி.

அரசியல் அறிவு

அரசியலில் மோடிக்கு இருந்த ஆர்வம், குஜராத் பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் அவரை பட்டம் பெற வைத்தது. அரசியலை அனுபவத்திலும், அறிவியல் வழியிலும் பெற்றதால், மோடியின் எண்ணங்கள் பிற அரசியல் வாதிகளிடமிருந்து வேறுபட்டது. இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், போராட்ட களத்தில் தன்கால்தடத்தை வலுவாய் பதித்த மோடிக்கு, பிற தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.எத்தனையோ ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்த அந்த களத்தில், மோடியை மட்டும் தனித்து காட்டியது அவரது ஆர்வம். தன்னலமற்ற அந்த ஈடுபாட்டை, அப்போதைய அனைத்து கட்சியினரும் பாராட்டினர். அதுவே பா.ஜ.,யின் உறுப்பினராக மோடியை உயர்த்தியது.

பா.ஜ.,வின் பாயும் புலி

பா.ஜ.,வின் சாதாரண உறுப்பினராக கட்சிப்பணியில் கலக்கிய மோடி, ஒரே ஆண்டில் குஜராத் மாநிலத்தின் பா.ஜ., பொதுச்செயலாளராக உயர்ந்தார். அடுத்தடுத்து பா.ஜ.,வில் மோடி ஆற்றிய கட்சிப்பணியின் பலன், 1998ல் குஜராத் மற்றம் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார். அதிலும் தன்னை நிரூபித்த மோடி, இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் பா.ஜ., பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஒருவருக்கு ஐந்து மாநிலப் பொறுப்புகள் வழங்கி அழகுபடுத்தியிருக்கிறார்கள் என்றால், அவரது அன்றைய உழைப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்!

திரும்பி பார்த்த இந்தியா!

1998ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப் பேற்றதும், பா.ஜ.,வின் தேசிய செயலாளராக மோடி அறிவிக்கப்பட்டார். 2001 அக்.,6ல் குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் ராஜினாமா செய்ய, பா.ஜ.,வில் தனிப்பெரும்பான்மையுடன் அக்.,7ல் குஜராத் முதல்வராக மோடிபதவியேற்றார். அதுவரை இந்தியாவின் பிற மாநிலங்களை போலவே வரைபடத்தில் சுட்டிக்காட்டும் பகுதியாக தான் குஜராத் இருந்தது. அந்தபாலைவனப்பகுதி, அதன் பிறகு தான் சோலைவனமாக மாறத்தொடங்கியது.

விமர்சனங்கள் விரட்டியடிப்பு!

2002 பிப்.,27ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மோடி, அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தரப்பினர் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி, தன் மீதான விமர்சனங்களை விரட்டினார்.தன் நல்லாட்சியால் பிற மாநிலங்களை மிரட்டினார்.அதன் பின் குஜராத்தில் நடந்த 2007, 2012 சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.,வே ஆட்சியை தக்கவைத்து, தொடர்ந்து நான்காவது முறையாக மோடியே முதல்வராக மகுடம் சூட்டினார். தொடர்ந்து 2,063 நாட்கள் ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றவர் என்ற பெருமை, மோடியை மட்டுமே சேரும். குஜராத்தில் அவருக்கு இருந்த அமோக ஆதரவை அறியாமல், அவர் மீது ஒவ்வொரு முறை விமர்சனங்களை பாய்ச்சி, அதில் படுதோல்வி அடைந்தவர்கள் ஏராளம்.தன் மீதான விமர்சனங்களையோ, விமர்ச்சித்தவர்களையோ சிந்தித்து நேரத்தை வீணடிக்காமல், மாநிலத்தின் வளர்ச்சியிலும், தன்னை ஆட்சி பீடத்தில் அமரவைத்து அழகுபார்த்த மக்களின் நலனிலும் தான் மோடி அக்கறை காட்டினார். அதனால் தான் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை குஜராத் அடைய முடிந்தது.

தனக்கென தனி பாணி

''சிறந்த ஆட்சி என்பது காகிதங்களை தாண்டி, வாழ்க்கையை பார்க்க கூடியது என்பதால், மக்கள் பிரச்னைகளை அரசு அலுவலக கோப்புகளில் தேடாமல் வாழ்க்கையில் தேடினேன். உயர்ந்த கட்டடங்களிலும், குளிரூட்டப்பட்ட அரங்குகளிலும் இருந்து பார்த்தால் கிராமங்களின் பிரச்னைகள் கண்ணுக்கு தெரியாது,'' என, 2010ல் ஆற்றிய உரையில் மோடி கூறியிருந்தார். இது தான் மோடியின் வெற்றி ரகசியம்.

சுத்தமான 'அரசு' வாழ்க்கை:

அரசியல் வாழ்க்கையில் மட்டுமின்றி, தன் 'அரசு' வாழ்க்கையிலும் மோடி ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறார்.--- தன் ஆசாபாசங்களிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் விலகிதனக்கு வாய்ப்பளித்த மக்களை மட்டுமே சதாகாலமும் மனதில் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மோடியின் வீட்டில், பிற அரசியல் தலைவர்களின் வீட்டில் இருப்பதைப் போன்று படை, பட்டாளங்களை காண முடியாது.தன் வீட்டில் குறிப்பிட்ட சிலரை தவிர பிறரை அவர் அனுமதிக்க வில்லை. தன் அரசு பங்களாவில், ஒரு சமையல்காரர், இரு உதவியாளர்கள் தான் மோடியுடன் வசிப்பவர்கள். சமையல்காரர் விடுமுறை என்றால், உதவியாளரில் ஒருவர் தான் அன்றைய சமையல்காரர். இப்படியும் ஒரு முதல்வரின் வீட்டை எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
துளியும் இல்லை

துஷ்பிரயோகம்

ஒரு துறையில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து, தன் குடும்பத்தினர், உறவினர்களை உள்ளே இழுக்கும் 'வாரிசு' கலாசாரத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரான மோடி எவ்வளவு வித்தியாசப்படுகிறார்? தன் 95 வயது தாயை கூட தன் 'அரசு' வாழ்க்கையின் அருகே வைத்துக்கொள்ளாமல், தன் மூத்த சகோதரரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். 'என் தம்பி தான் முதல்வர்' என, அவரது சகோதரர்கள் அரசு வாகனங்களில் வலம் வருவதில்லை. 'நான் சொல்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங் கள்...' என, மோடியின் உறவினர்கள் யாரும் சிபாரிசுக்கு வந்து நிற்பதில்லை.அதை விட ஆச்சரியம், மோடியின் மூத்த சகோதரரர் சுகாதாரத் துறையிலும், இரண்டாவது சகோதரர் நகரின் எங்கோ ஓர் மூலையில் கடை வைத்திருக்கிறார். மூன்றாவது சகோதரர் அரசுப்பணியில் குமாஸ்தாவாக உள்ளார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு இவர் தான் மோடியின் சகோதரர் என்பதே பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரிந்ததாம். இப்படி தன்னாலும், தன் குடும்பத்தினராலும் அரசு அதிகாரத்தில் துஷ்பிரயோகம் நடைபெறாத படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் மோடி. அவரது தாய் இன்னும் ஆட்டோவில் தான் ஆமதாபாத்தில் வலம் வருகிறார்.

ஓய்வில்லா உழைப்பு

அறுபத்து நான்கு வயதான மோடியின் உழைப்பை, அவரது பிரசாரத்திலேயே அறிய முடிந்தது. காலை 4.30 மணிக்கு எழுந்து, அடுத்த ஒரு மணி நேரம் யோகா, அதன் பின் இமெயில்கள் கவனிக்க சில மணி நேரம், குறிப்பாக கூகுள் அலர்ட்டுகளை கவனிப்பது மோடியின் வழக்கம்.அடுத்தது நாளிதழ்களை வரிவிடாமல் படித்துவிட்டு, காலை 7.30 மணிக்கெல்லாம் தன் முதல்வர் அலுவலக பணிகளை தொடங்கிவிடுவார். முதல்வர் இவ்வளவு வேகமாக இருக்கும் போது, அலுவலர்கள் எப்படி சோம்பேறியாக இருக்க முடியும்? சுற்றிச் சுழன்ற குஜராத் அரசின் வளர்ச்சி இயந்திரத்தில், மோடி தான் சக்கரமாய் இருந்தார்.

சுயநலமற்ற உழைப்பு

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் கி.மீ., துாரங்களை கடந்து, 430 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.தான் பிரதமர் வேட்பாளர் என்பதற்காக மட்டும் மோடி தன் உழைப்பை தரவில்லை. ஒருவேளை வேறு நபரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, தேர்தலுக்கான பொறுப்பாளராக அவரை நியமித்திருந்தாலும் இதே உழைப்பை தான் மோடி அளித்திருப்பார் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் கருத்து.

'சக்சஸ்' தொடரும்

அபார நினைவாற்றல், யாரிடம் எந்த வேலையை தர வேண்டும் என்பதில் உறுதி, ஒரு பிரச்னையின் முழு பரிமாணத்தை தெரிந்து கொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார், ஒரு பிரச்னையை நன்கு புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும் என்பதில் உறுதியாக இருப்பவர், தற்காலிக தீர்வை விரும்பாதவர், ஒரு முறை எடுக்கும் முடிவை நிறைவேற்றும் வரை பின் வாங்கமாட்டார், பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்ததும் ஒதுங்கிவிடாமல், அதை பின்தொடர்வார், பிறர் யோசனைகளை செவி கொடுத்து கேட்கும் குணம் கொண்டவர், தான் இட்ட பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றவில்லை என்றால் பொறுமை இழந்துவிடாதவர் என்பது எல்லாம் மோடியின் தனிப்பட்ட குணங்கள்.

'டீ மாஸ்டர் டூ பிரைம் மினிஸ்டர்'

சாதாரண டீகடை நடத்தி வந்த மோடி, குஜராத்தின் முதல்வராகி இந்தியாவின் அடுத்த பிரதமராகிறார். அவரது வாழ்க்கைவரலாற்றை, அமெரிக்காவில் வாழும் குஜராத்தைசேர்ந்த ஒரு தொழிலதிபர் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியாக விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படத்திற்கு 'டீ மாஸ்டர் டூ பிரைம் மினிஸ்டர்' என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப காதலர்

இளைஞர்களை இணையத்தில் கவர்வதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் மோடி. பேஸ்புக், டுவிட்டர், கூகுள் இவற்றில் தனக்கென ஒரு பக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். பணிகளின் நெருக்கடியிலும் அடிக்கடி புதிய செய்திகளை பதியவிடுகிறார். ஊடகத்தை சந்திப்பதையும் தவிர்ப்பது இல்லை. இதனால் அரசின் ஒவ்வொரு நற்செயலும் மக்களுக்கு சென்றடைகிறது. விமர்சனங்களுக்கான பதில்களும் அளித்து வருகிறார். தேர்தலில் கூட ஐரோப்பாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 ஜி தொழில் நுட்பத்தால், ஒரே நேரத்தில் பல நகரங்களின் மேடைகளில் பேசி புதுமையான பிரசாரத்தை தொடர்ந்தார். புதுமையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதிலும், வரவேற்பதிலும் ஒரு இளைஞரை போல் செயல்படுகிறார், இந்த தொழில் நுட்ப காதலர்.

நரேந்திர மோடி டாட் இன்

தகவல் தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் மோடி, மக்களுக்காக 'நரேந்திர மோடி டாட் இன்' என்ற, இணையதளத்தை நடத்துகிறார். இதில் 'மக்கள்இதழியல்' என்ற பிரிவில் பொதுமக்கள் சமூக நிகழ்வுகளை எழுதலாம். அவை, புதிய சிந்தனை, பொது பிரச்னை, நாட்டு நலன் குறித்துஇருக்கலாம். விபரமாக எழுத விரும்பினால் போட்டோவுடன்
கட்டுரையாகவும் பதியலாம்.

மின்ஒளி கொடுத்த ஜோதிக்ராம்

மோடியின் 'ஜோதிக்ராம்' திட்டத்தில் குஜராத் மின் ஒளியில் மின்னுகிறது. 18742 கிராமங்களில், 9680 நகர் பகுதிகளில் அனைத்து வீடுகளும் 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மோடி எடுத்து கொண்ட கால அளவு ஒரு மாதம் மட்டுமே. 2012ல் குஜராத்தின் மின் உற்பத்தி 21000 மெகா வாட் இருந்தது. அதில் 600 மெகா வாட் உபரி மின்சாரம் 220 தமிழகத்திற்கும், 200கர்நாடகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

குறை ஒன்றும் இல்லை

குஜராத்தில் பொதுமக்களுக்கும், முதல்வருக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்துகிறது 'ஸ்வாகத்' திட்டம். காந்திநகரில் ஒவ்வொரு மாதத்திலும் 4வது வியாழக்கிழமையும் ஸ்வாகத் நாள். மக்களிடம் ஆன்லைனில் பெறப்பட்ட புகார் மனுக்கள்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதிகாரிகள் 4 மணி நேரத்திற்குள் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை முதல்வர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கண்கானிப்பார். நியாயமான மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு வழங்ப்படும். இதுவரை எந்த ஒரு மனுதாரரும் உறுதியான பதில் இல்லாமல் திரும்பி சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun May 18, 2014 8:54 am

தினமலர் அம்மாவை விட்டுவிட்டு பிரதமர் மோடியை பிடித்துக்
கொண்டதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 18, 2014 10:51 am

ஒரு துறையில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து, தன் குடும்பத்தினர், உறவினர்களை உள்ளே இழுக்கும் 'வாரிசு' கலாசாரத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரான மோடி எவ்வளவு வித்தியாசப்படுகிறார்? தன் 95 வயது தாயை கூட தன் 'அரசு' வாழ்க்கையின் அருகே வைத்துக்கொள்ளாமல், தன் மூத்த சகோதரரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். 'என் தம்பி தான் முதல்வர்' என, அவரது சகோதரர்கள் அரசு வாகனங்களில் வலம் வருவதில்லை. 'நான் சொல்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங் கள்...' என, மோடியின் உறவினர்கள் யாரும் சிபாரிசுக்கு வந்து நிற்பதில்லை.அதை விட ஆச்சரியம், மோடியின் மூத்த சகோதரரர் சுகாதாரத் துறையிலும், இரண்டாவது சகோதரர் நகரின் எங்கோ ஓர் மூலையில் கடை வைத்திருக்கிறார். மூன்றாவது சகோதரர் அரசுப்பணியில் குமாஸ்தாவாக உள்ளார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு இவர் தான் மோடியின் சகோதரர் என்பதே பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரிந்ததாம். இப்படி தன்னாலும், தன் குடும்பத்தினராலும் அரசு அதிகாரத்தில் துஷ்பிரயோகம் நடைபெறாத படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் மோடி. அவரது தாய் இன்னும் ஆட்டோவில் தான் ஆமதாபாத்தில் வலம் வருகிறார்.

அட .... இந்த ஒரு பாரா போதுமே ....  ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் 3838410834 ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் 3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun May 18, 2014 11:54 am

இரும்பு மனிதர் என்று சொல்வதில் தவறில்லை. இந்தியாவையும் அயல் நாட்டினர் புருவம் உயர்த்தும் அளவு கொண்டுவாருங்கள் தலைவா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக