ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

Go down

 ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி? Empty ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

Post by சிவா on Sun May 11, 2014 2:20 am

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!

கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழாய் வடிவத்தில் இருக்கின்ற ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் மாடலில் ஒரு நவீன ஸ்டெதாஸ்கோப்பை இங்கிலாந்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெதாஸ்கோப்பின் ஹிஸ்டரியைப் பார்த்து விடலாம்.

1816ல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள டாக்டர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத்துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப்பினான். இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனையைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி. இதை அடிப்படையாக வைத்து 1819ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன்பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது. ஸ்டெதாஸ்கோப்பின் முனையில் வட்டமாகவுள்ள 'டயாஃப்ரம்' இதய ஒலிகளைக் கிரகித்து அதோடு இணைந்த ரப்பர் குழாய்க்குள் அனுப்புகிறது.

அங்கு இருக்கும் காற்று, இதயஒலி அலைகளைப் பெருக்கி, ஒருங்கிணைத்து அனுப்புவதால் அந்த ஒலிகளைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. இதுதான் ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்படைத் தத்துவம். கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் ராஜமரியாதையுடன் வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்டெதாஸ்கோப்புக்கு மாற்றாக இங்கிலாந்தில் 'ஜெனரல் எலக்ட்ரிக் ஹெல்த் கேர் சிஸ்டம்' எனும் நிறுவனம் 'விஸ்கேன்'  என்கிற நவீன ஸ்டெதாஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. இது மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

“வௌவால்கள் பறப்பதற்குப் பயன்படுத்தும் டெக்னாலஜிதான் இதிலும் பயன்படுகிறது” என்கிறார் நிணி நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் இம்மெல்ட். “வௌவால்கள் இருட்டில் பறக்கும்போது எதிரில் ஏதேனும் தடை உள்ளதா என்று தெரிந்து கொள்ள, அல்ட்ரா சவுண்டை உண்டாக்கிக் காற்றில் அனுப்பும். வழியில் தடை இருந்தால் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்பும். அதை உணர்ந்து, வௌவால்கள் திசை மாறிப் பறக்கும். ஒலிக்குண்டான இந்த தனித்தன்மையை அடிப்படையாக வைத்து விஸ்கேனை உருவாக்கியுள்ளோம்.

'விஸ்கேன்' சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சிறியது. இது பேட்டரியில் இயங்குகிறது. ஸ்மார்ட் போன் மாடலில் இருக்கும் இந்தக் கருவியில் ஒரு சிறிய திரை மற்றும் கீ பேடு உள்ளது. ஹேண்ட் மைக் அளவில் 'டிரான்ஸ்டூசர்' (ஜிக்ஷீணீஸீsபீuநீமீக்ஷீ) எனும் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையை மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது இது கேளாஒலி அலைகளை உற்பத்தி செய்து, இதயத்துக்கு அனுப்புகிறது. அவை இதயத்தில் மோதி, எதிரொலித்து வருவதை உள் வாங்கி, 3டி படங்களாக திரையில் பதிவு செய்கிறது. இதன் மூலம் இதயம் இயங்குவதை திரையில் பார்க்க முடியும். இதயத்துடிப்பு எண்ணிக்கை, லயம், இதய வால்வுக் கோளாறுகள், இதயத்தில் ரத்த ஓட்டம் போன்றவற்றை அடுத்த நிமிடத்தில் அறியலாம்.

டாக்டர்கள் இதய ஒலிகளைக் காதால் கேட்பதில்கூட சந்தேகம் வரலாம். இதில் சந்தேகம் என்பதே வராது. நோய்க்கணிப்பு மிகச் சரியாக இருக்கும். இக்கருவியைப் பயன்படுத்தி நுரையீரல் நோய்களையும் வயிறு நோய்களையும்கூட அறியலாம். தற்போதைய ஸ்டெதாஸ்கோப் முனை போல் டிரான்ஸ்டூசரின் முனையை மாற்றி அமைத்துவிட்டால், இது ஒரு கையடக்க ஸ்டெதாஸ்கோப் போல் காட்சி தரும்” என்கிறார் அவர்.

#தினகரன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி? Empty Re: ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

Post by T.N.Balasubramanian on Sun May 11, 2014 2:31 am

நல்லதோர் கண்டுபிடிப்பு .
உலகமே கை அடக்கத்தில் வந்துள்ளது .
ச்டேத்தும், வெள்ளை அங்கியும் தான் டாக்டர்களை இனம் காண வைத்தது இது நாள் வரை .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

 ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி? Empty Re: ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

Post by கிருஷ்ணா on Sun May 11, 2014 2:30 pm

இனிமேல் விஸ்கேன் விளையாட்டு பொம்மைகள் வைத்து குழந்தைகள் விளையாடுவர்.
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

Back to top Go down

 ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி? Empty Re: ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum